ரோமாபுரிப் பாண்டியன்
ரோமாபுரிப் பாண்டியன்
Standard Delivery ₹60 | Free Shipping on orders above ₹1,000 across South India!
Author : கலைஞர் மு.கருணாநிதி
Publisher : அருணா பப்ளிகேஷன்ஸ்
Couldn't load pickup availability
மாவீரன் பாம்பே - மாவீரர்களை மண்டியிட வைத்த சீசர் - சீசர் வளர்த்த சிங்கம் அந்தோணி - அந்தோணியை அடக்கிய அகஸ்டஸ் - இப்படி வீரத் திருவிளக்குகளின் ஒளி மழையால் எழில் கொண்டு விளங்கிய பூமி ரோமாபுரி. அது வாழ்ந்த விதமும் தாழ்ந்த கதையும் யாரும் அறியாத ரகசியமல்ல. ரசவல்லிகளின் மைவிழிகள் - மதுக்கிண்ணங்கள் இவைகளே அந்தத் திருநாட்டின் பெரு வீழ்ச்சிக்குக் காரணம் என்ற விளக்கத்தை வரலாறு புலம்பிக் காட்டுகிறது. ஏற்றமும் பொலிவும் குலுங்க என்றைக்கோ ஒரு நாள் மலையில் ஏற்றிவைத்த தீபம்போல் அந்தச் சின்னஞ்சிறு சிங்காரப் பொன்னாடு எட்டுத்திக்கும் புகழ் பரப்பிக் கொண்டிருந்தது. அதன் மெருகு குலைந்து அடித்தளமும் ஆட்டங்கொடுத்துப் புழுதியில் வீசப்பட்ட வீணையென ஆகிவிட்ட காலத்தை, கி.பி.1453 என்று கணக்கிட்டுக் கூறுவார்கள், சரித்திர ஆசிரியர்கள். தமிழகமும், ரோமும் எல்லா வகையிலும் உறவாடியிருக்கக் கூடும் என்பதற்கான சான்றுகள் புதைபொருள் ஆராய்ச்சி மூலமும், இலக்கியங்கள் வாயிலாகவும் வரலாற்றிலிருந்தும் வெகுவாகக் கிடைத்திருக்கின்றன. இந்தப் பழைய தொடர்பினை மையமாக வைத்து உருவானதுதான் “ரோமாபுரிப் பாண்டியன்”
| Brand: Centaram Shopping |
|
Tags:
romapuri pandiyan
|
Customer Reviews
Share your experience with this product
✉️ Your review will be sent to us and published after verification. We reply within 24 hours.
Share
