ஈ.வெ.ரா. பெரியார் -ஒடுக்கப்பட்டவர்களின் உளியோசை
ஈ.வெ.ரா. பெரியார் -ஒடுக்கப்பட்டவர்களின் உளியோசை
Standard Delivery ₹60 | Free Shipping on orders above ₹1,000 across South India!
Author : திருமலை விசாகன்
Publisher : அருணா பப்ளிகேஷன்ஸ்
Couldn't load pickup availability
பெரியாரையும் அம்பேத்கரையும் சமூக சீர்திருத்த நாணயத்தின் இரு பக்கங்களாகக் கருதலாம். இந்து மதம் என்பது சாதிகளின் தொகுப்பு மட்டுமே என்று இந்துக் கடவுள்களை விமர்சிக்கவும் அவர்களைக் கண்டிக்கவும் அவர்கள் தயங்கவில்லை. பெரியாரும் அம்பேத்கரும் பிராமணீயம் மற்றும் சதுர்வர்ணம் (நான்கு சாதிகள்) என்ற பிராமண வரிசையை கடுமையாக விமர்சித்தார்கள். தமிழகத்தின் மிக முக்கியமான இயக்கமாகக் கருதப்படும் திராவிடர் கழகத்தினைத் தோற்றுவித்தவர் பெரியார். இவருடைய சுயமரியாதை இயக்கமும், பகுத்தறிவு வாதமும் மிகவும் புகழ்பெற்றவை. இவருடைய பகுத்தறிவு, சுயமரியாதைக் கொள்கைகள் தமிழ்நாட்டின் சமூகப்பரப்பிலும், தமிழக அரசியலிலும் பல தாக்கங்களை ஏற்படுத்தியவை. சுயமரியாதைத் திருமணம் புரிவது தெய்வக் குற்றம் என்று கூச்சலிட்ட சனாதனவாதிகளிடம் ‘நான் என்ன மனிதருக்கும் மாட்டுக்குமா திருமணம் செய்து வைக்கிறேன்? ஆறறிவு மனிதர்களாகப் பிறந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் தானே திருமணம் செய்து வைக்கிறேன்? அது எவ்வாறு தவறாகும்? என்றார் பெரியார். சமூக சீர்திருத்தப் பணிகளாலும், பகுத்தறிவுச் சிந்தனைகளாலும் இருபதாம் நூற்றாண்டின் தமிழ் அறிவுலகை வழிநடத்தியவர் தந்தை பெரியார். இந்திய வரலாற்றின் போக்கை மாற்றியமைத்த முக்கியத் தலைவர்களுள் பெரியாரும் ஒருவர்.
| Brand: Centaram Shopping |
Customer Reviews
Share your experience with this product
✉️ Your review will be sent to us and published after verification. We reply within 24 hours.
Share
