தாராசுரம் ஐராவதீசுவரர் திருக்கோயில்
தாராசுரம் ஐராவதீசுவரர் திருக்கோயில்
Standard delivery ₹60 | ₹40 for orders above ₹500 | Free shipping on orders above ₹1000!
Author : குடவாயில் பாலசுப்ரமணியன்
Publisher : அகரம் பதிப்பகம்
Couldn't load pickup availability
இரண்டாம் குலோத்துங்கனாகிய அநபாய சக்ரவர்த்தியின் முதல் மந்திரியாக விளங்கிய தெய்வச் சேக்கிழார் அம்மாமன்னன் வேண்டுகோளுக்கிணங்கி திருத்தொண்டர் புராணத்தை சொக்கழகாகச் சொல்லில் வடித்தார். அம்மா மன்னன் மகனாகிய இரண்டாம் இராஜராஜன் சேக்கிழார் அடிகள் வாழ்ந்தருளிய காலத்திலேயே அவருடைய ஆசியோடும் வழிகாட்டுதலோடும் மேற்சொன்ன திருத்தொண்டர் புராணத்தைக் கவின்கலை நுட்பத்துடன் கல்லில் வடித்தார். தாராசுரத் திருக்கோயில் சிற்பங்களை ஆய்வு செய்தவர்கள் அவையிற்றை நம்பியாரூரர் அருளிய திருத்தொண்டத் தொகையின் அடிப்படையிலேயே ஆய்வு செய்துள்ளனர். திருத்தொண்டத் தொகையின் அருஞ்செய்திகளை சற்றே விரித்து திருத்தொண்டர் திருவந்தாதி பாடியருளியவர் நம்பியாண்டார் நம்பி. தொகை, அந்தாதி ஆகிய இவையிற்றின் மீது அற்புதமாக எழுப்பப்பட்ட மாபெரும் மந்திரமே பெரியபுராணமாகும். இத்திப்பிய பனுவல் தந்த பார்வையின் அடிப்படையில் முதன்முதலில் தம் ஆய்வை மேற்கொண்டு, அதியற்புதமாக முடிவையும் சாதித்துள்ள பெருமை குடவாயில் பாலசுப்பிரமணியன் அவர்களையே சாரும்.
| Weight: 1264 g |
| Brand: centaram |
Customer Reviews
Share your experience with this product
✉️ Your review will be sent to us and published after verification. We reply within 24 hours.
Share
