Skip to product information
1 of 1

ஜப்பானிய மங்கா காமிக்ஸ் – அறிமுகமும் ஆளுமைகளும்

ஜப்பானிய மங்கா காமிக்ஸ் – அறிமுகமும் ஆளுமைகளும்

Standard delivery ₹60 | ₹40 for orders above ₹500 | Free shipping on orders above ₹1000!

Regular price Rs. 150.40
Regular price Rs. 160.00 Sale price Rs. 150.40
Sale Sold out
-6% OFF
Shipping calculated at checkout.

Author : கிங் விஸ்வா

Publisher : யாவரும் பப்ளிஷர்ஸ்

Quantity

கடந்த இரு தசம ஆண்டுகளாக உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து வெளிவரும் காமிக்ஸ் மற்றும் கிராஃபிக் நாவல்களைத் தொடர்ச்சியாக படித்து வருபவன் என்ற வகையில் ஜப்பானிய காமிக்ஸ் புத்தகங்களான Manga-வின் மீது தீராக்காதல் ஏற்பட்டு விட்டது என்றே சொல்லலாம். பிரான்சின் பொந்-தெஸினி, இத்தாலியின் லிப்ரோ அ ஃபொமிட்டி, அமெரிக்காவின் கிராஃபிக் நாவல்கள் & OEM, கொரியாவின் மன்வா, இங்கிலாந்தின் காமிக்ஸ் என்று பல தரப்பட்ட புத்தகங்களுடனான அறிமுகம் ஆங்கில மொழியாக்கத்துடன் நடந்திருந்தாலும் உலக காமிக்ஸ் மற்றும் கிராஃபிக் நாவல்கள் சந்தையையே தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஜப்பானிய மங்காவின் மீதான ஆர்வம் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக்கொண்டே வருகிறது.
பதின்ம வயதினர் முதல் 25 வயதுள்ள இளையோர் அனைவருமே மங்காக்களைத்தான் முதலில் படிக்க ஆரம்பிக்கின்றனர். அதன்பிறகுதான் காமிக்ஸ் & கிராஃபிக் நாவல்கள் என்று வாசிப்பின் பரப்பு அதிகரிக்கிறது. ஒரு திரைப்பட ஆந்தாலஜியில் மங்கா என்றால், அழகான பெண், கார்ட்டூன் என்று அறிமுகம் செய்தபோது, தமிழில் உறுதியாக இதைப்பற்றிய ஓர் அறிமுகக் கட்டுரையை எழுத வேண்டும் என்று முடிவெடுத்தேன். இப்புத்தகத்தில் மங்கா பற்றிய அறிமுகம், டாப் 10 மங்கா காமிக்ஸ்கள், ஆளுமைகள் என்று மங்காவைப் படிக்க நினைப்பவர்களுக்கான வழிகாட்டியாக இருக்கும் என்று நம்புகிறேன்.
என்னுடைய வழக்கமான பாணியில் ஸ்பாய்லர் இல்லாமல் ஒவ்வொரு கட்டுரையையும் கதை உருவான பின்னணி, உருவாக்கத்தில் இருந்த சுவையான தகவல்கள், இது எதைப் பற்றிய கதை, என்ன ஜான்ர என்று பல விஷயங்களையும், மிகவும் முக்கியமாக ஏன் இந்தக் கதையைப் படிக்க வேண்டும் என்றும் எழுதி இருக்கிறேன். ஓவியங்களில், வண்ணங்களில், புத்தக அமைப்பில் இருக்கும் அழகியலையும் நான் ரசித்த விஷயங்களையும் தனியாகக் குறிப்பிட்டிருக்கிறேன்.

Weight: 150 g
Brand: centaram
Tags:
arimugamum aalimaigalum japaniya manga comics

Customer Reviews

Share your experience with this product

✉️ Your review will be sent to us and published after verification. We reply within 24 hours.

View full details