வெள்ளி நிலம்
Original price was: ₹320.00.₹300.80Current price is: ₹300.80.
3 in stock
இமயமலை இந்தியாவின் மணிமுடி. கன்யாகுமரி முதல் விரிந்திருக்கும் இப்பெருநிலத்திலிருந்து ஒவ்வொரு தலைமுறையிலும் லட்சக்கணக்கானவர்கள் இமயமலைக்கு சென்று கொண்டிருக்கிறார்கள். சுற்றுலாப்பயணிகளாக செல்பவர்கள் உண்டு, துறவிகளாகி ஞானம் தேடி செல்பவர்களும் உண்டு.
இமயமலை இன்று வரைக்கும் மனிதனால் பார்க்கப்படாத ஒரு நிலம் என்றால் அது மிகையல்ல. அதிலுள்ள மலைச்சிகரங்களில் ஐந்து சதவீதத்திற்கும் குறைவான இடங்களிலேயே மனிதர்கள் இதுவரைக்கும் சென்றிருக்கிறார்கள். தொண்ணூறு சதவீத சிகரங்களுக்கும் பெயர்கள் கிடையாது. மிக அண்மைக்காலத்தில் தான் எண்கள் போடப்பட்டிருக்கின்றன. நம் நாட்டிலேயே இருக்கும் ஒரு மாபெரும் நிலப்பரப்பு நமக்கு முற்றிலும் தெரியாத ஒன்றாக உள்ளது.Customer Reviews
Share your experience with this product
Your review will be sent to us and published after verification. We reply within 24 hours.
