{"product_id":"வன்முறையில்லா-வகுப்பறை","title":"வன்முறையில்லா வகுப்பறை","description":"\u003cp\u003eஒரு ஆசிரியரின் அடிப்படைத் தகுதி என்ன? அன்பு.\u003c\/p\u003e\n\u003cp\u003eஅன்பு, ஆசிரியருக்கு மட்டுமல்ல அனைவருக்கும் அடிப்படையானது. ஏற்றுக்கொள்ளப்படாத, அங்கீகரிக்கப்படாத அன்பிலிருந்து வருவதுதான் வெறுப்பு. ஒரு ஆசிரியருக்கு இந்த வெறுப்பு எப்போது வருகிறது?. இதை கீழ்கண்ட இரண்டு சம்பவத்தின் அடிப்படையில் விளக்கலாம்.\u003c\/p\u003e\n\u003cp\u003e1. அவர் கணித ஆசிரியர். எப்பேர்பட்ட மக்கையும்,மட்டியையும் பாஸ் மார்க் எடுக்க வைத்துவிடுவார், கண்டிப்பானவர், அடி பின்னி எடுத்துவிடுவார் என பெயரெடுத்தவர். அன்று வகுப்பில் அவர் சற்று நிலைகுலைந்து ஒரு மாணவியை அடிக்க , அம்மாணவியின் தாடை கிழிய, வழக்கு பாய, இப்போது நடையாய் நடக்கிறார் நீதிமன்றத்துக்கு. இப்போது கண்டிப்பான கணித ஆசிரியர் போய், ரத்த ஆசிரியர் என்று பெயர் பெற்றிருக்கிறார்.\u003c\/p\u003e\n\u003cp\u003e2. அவர் ஒரு திறமையான தாவரவியல் ஆசிரியை. மாணவ, மாணவிகள் அழகாக படம் வரைய வேண்டும் என்பதற்காய் மிகுந்த மெனக்கெடுபவர். அன்று ஒரு மாணவியை சரியாக படம் வரையவில்லை என்பதற்காய் , “இது படமா? உன் மூஞ்சியை மாதிரியே வரைந்துவிட்டாயே.. உனக்கெல்லாம் இந்தப் பாடம் சரிவராது. புள்ளை பெத்துக்கத்தான் லாயக்கு..” என்று வார்த்தையால் சுட, அம்மாணவியோ தன்னை நெருப்பால் சுட்டு இறந்து போகிறாள்.\u003c\/p\u003e\n\u003cp\u003eஒரு திறமையான ஆசிரியையை இப்போது கல்வித்துறையாலும், காவல்துறையாலும் காப்பாற்ற முடியவில்லை. வெளிநாடு தப்பிச் செல்ல துடிக்கிறார் ஆசிரியை. இது ராஜபாளையத்தில் நடைபெற்ற சம்பவம்.\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47684991615212,"sku":null,"price":112.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/e5d312ed049e4f84c7e99918fd64feb9.jpg?v=1780037003","url":"https:\/\/centaram.com\/products\/%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be-%e0%ae%b5%e0%ae%95%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b1%e0%af%88","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}