{"product_id":"மூன்றாம்-உலகப்-போர்","title":"மூன்றாம் உலகப் போர்","description":"\u003cp\u003eஇப்போதும் ஒரு போர் தொடங்கி நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது. இது முகத்துக்கு முகம் பார்த்து மோதாத போர் ஆயுதங்களை ஒளித்துக் கொண்டு நிகழ்த்தும் போர்; மண்ணுக்கும் விண்ணுக்குமான போர்; மனிதனுக்கும் இயற்கைக்குமான போர். இது மனிதகுலம் சந்தித்திராத மோசமான முகமூடிப் போர்: புவி வெப்பமாதல் உலகமயமாதல் என்ற இரண்டு சக்திகளும் வேளாண்மைக்கு எதிராகத் தொடுத்திருக்கும் விஞ்ஞானப் போர்.\u003c\/p\u003e\n\u003cp\u003e“இந்தப் படைப்பை விவசாயி மகனாக இல்லாத ஒருவன் ஜீவனுள்ளதாக எப்படிச் செய்ய முடியும்? மூன்றாண்டுகள் ஆராய்ந்தேன்; பத்துமாதங்கள் எழுதினேன். எங்கள் மண்ணின் மக்கள் ஊடாக உலகத் துயரத்தை பதிவு செய்தேன்.”\u003c\/p\u003e\n\u003cp\u003e“இந்தப் படைப்பு உள்ளூர் மனிதர்களின் நாவினால் பேசப்படும் உலகக் குரல்; விழ வேண்டிய செவிகளில் விழுந்தாக வேண்டும். வாசிப்பு – ரசிப்பு என்ற எல்லைகளைத் தாண்டி , தீர்வுகளையே பரிசாகக் கேட்கிறது இந்தப் படைப்பு.\"\u003c\/p\u003e\n\u003cp\u003e“வேளாண்மையைக் காப்பது உலகக் கடமை. அந்த உலகக் கடமையின் தமிழ்ப் பங்குதான் இந்த  மூன்றாம் உலகப் போர்.\"\u003c\/p\u003e\n\u003cp\u003e- வைரமுத்து\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47699178946796,"sku":null,"price":329.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/866ae6b65b1cc73fbd840d4a77d7e309.jpg?v=1780474608","url":"https:\/\/centaram.com\/products\/%e0%ae%ae%e0%af%82%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}