{"product_id":"பஞ்சத்துக்கு-புலி","title":"பஞ்சத்துக்கு புலி","description":"\u003cp\u003eஊர்கூடி பார்த்திருக்க நடுத்தெருவில் வீழ்த்தி\u003cbr\u003eஎம் பெண்களை வல்லாண்ட உம்மைக் கண்டு\u003cbr\u003eமறைவிடம் ஓடியொளிந்த நாய்கள்\u003cbr\u003eபிறிதொருபோதும் உம்முன்னே வருவதற்கஞ்சிய குற்றத்திற்காக\u003cbr\u003eகைகால்கள் கட்டப்பட்டு\u003cbr\u003eபனிப்பாளத்தின் மீது கிடத்தப்பட்டிருக்கிறேன்\u003cbr\u003eபிணமென விரைக்கும் உடலுக்குள் கடுத்தேறுகிறது சில்லிப்பு\u003cbr\u003eநடுங்கிச் சரிகிறது உயிர்\u003c\/p\u003e\n\u003cp\u003eதண்ணீர் கேட்டால் மூத்திரம் பெய்வதும்\u003cbr\u003eவாயைத் திறந்தால் மலம் திணிப்பதுமே\u003cbr\u003eநாகரீகக் கனவான்களாகிய உமது வாடிக்கையென்பதால்\u003cbr\u003eபசிதாகம் குறித்து புகாரிடாமல் மயக்கத்தில் வீழ்கிறேன்\u003c\/p\u003e\n\u003cp\u003eசித்திரவதைகளை உணராமலே செத்துவிடக்கூடாதென்ற பயத்தில்\u003cbr\u003eபந்தம் கொளுத்தி என்தலையைத் தீய்த்து\u003cbr\u003eபிரக்ஞையின் எல்லைக்குள் இழுத்துப் போடுகிறீர்கள் என்னை\u003c\/p\u003e\n\u003cp\u003eவிசேஷமாய் பயிற்சி எடுத்தக் காவலரைப் போன்ற ஒருவன்\u003cbr\u003eஎன் கால்களில் லாடமடித்துக் கொண்டிருக்கிறான்\u003cbr\u003eநகங்களைப் பிடுங்கி எடுத்துவிட்டு\u003cbr\u003eஎன் பற்களையும் பிடுங்கும் அவசரத்தில்\u003cbr\u003eகுறடு ஒன்று இயங்கிக்கொண்டிருக்கிறது இன்னொருவன் கையில்\u003cbr\u003eவன்மங்களை நவீனமாய் தணிக்கத் தெரிந்த மற்றையவன்\u003cbr\u003eவயர்களை என்குறியில் சுற்றி மின்னதிர்ச்சிக் கொடுக்கிறான்\u003c\/p\u003e\n\u003cp\u003eஅடுக்களையிலிருந்து டப்பர்வேருடன் வந்த\u003cbr\u003eஉங்கள் மனைவி\/மகள்\/ சகோதரி\/ யாரோ ஒருத்தி\u003cbr\u003eஇந்தக் கண்களா எம்மை ஏறெடுத்துப் பார்த்தவையென\u003cbr\u003eபலவந்தமாய் இமைபிரித்துத் தூவுகிறாள் மிளகாய்ப்பொடியை\u003c\/p\u003e\n\u003cp\u003eகொத்தியெறிந்தது போக நினைவில் எஞ்சியிருக்கும் என்னைத்தாளாது\u003cbr\u003eபுதிய கொலையாயுதங்களை தேடிக்களைத்த உமது வாரீசுகள்\u003cbr\u003eகணினியின் விசைப்பலகை அதிர்ந்திடாத வண்ணம்\u003cbr\u003eமென்மையாக பதிவேற்றத் தொடங்குகின்றனர்\u003cbr\u003eஎன்மீதான அவதூறுகளை.\u003c\/p\u003e\n\u003cp\u003e- ஆதவன் தீட்சண்யா\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47917853016300,"sku":null,"price":150.4,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/fbe63dc1ae331b264eef156bbeb1e802.jpg?v=1783676364","url":"https:\/\/centaram.com\/products\/%e0%ae%aa%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%aa%e0%af%81%e0%ae%b2%e0%ae%bf","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}