{"product_id":"நெருப்பில்-வளர்பவை","title":"நெருப்பில் வளர்பவை","description":"\u003cp\u003e\u003cspan\u003eகளிப்பும் ஆவேசமுமாகப் பாய்ந்து கொண்டிருந்தாள் வைகை. அவளது இரு கரையிலும் எண்ணாயிரம் பாதங்கள் திருவிழாவில் பரபரத்துக்கொண்டிருந்தன. அவள் நோயாளிதான். தான் ஒரு நதி என்னும் பிரக்ஞையே இழந்தவளும்கூட. ஆனாலும், அவள் அந்த மண்ணின் ரத்தமல்லவா. நீர் சிதறச் சிதறச் சிரிக்கும் சிரிப்பு இல்லாத திருவிழாவில் கடவுள்கள் எவ்வளவு வந்தாலும் நிறையுமா என்ன! நிறை பௌர்ணமி நிலவைத் தன் உடலில் முலையாகச் சூடிக்கொண்டு அதன் வெளிச்சத்தைப் பாலாக மாற்றியபடி அவள் நகரும்போதுதான் கடவுள்கள் பிறக்கின்றனர். ஒவ்வொரு கோடைக்கும் தன் பிள்ளைகளுக்கென வைகை திரட்டி வருகின்ற அந்த கிடைதண்ணீர் நூலிழை அளவாக இருந்தாலும் அது பிரக்ஞை இழந்தவளொருத்தி பிரக்ஞை கொண்டு எடுத்துவரும் பால்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47745824293100,"sku":null,"price":211.5,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/13110ac1d29d2e232490df941687c846.jpg?v=1781519213","url":"https:\/\/centaram.com\/products\/%e0%ae%a8%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b5%e0%af%88","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}