{"product_id":"தபால்காரர்-பெண்டாட்டி-1","title":"தபால்காரர் பெண்டாட்டி","description":"\u003cp\u003eதபால்காரர்கள் மேல் என்ன காரணத்தாலோ ஒரு வகையான ஈர்ப்பு சின்ன வயசிலிருந்தே எனக்கு ஏற்பட்டுவிட்டது. தபால்காரர்களை நான் தினமும் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. எங்கள் வீட்டுக்கு தினமும் தபால் வரும்.\u003c\/p\u003e\n\u003cp\u003eஅப்படித்தான் பரிச்சயமானவர் அந்தத் தபால்காரர். சைக்கிளில் வருவார். நான் பத்திரிகைகளுக்கு பதின்மூன்று வயது தொடங்கி சின்னச் சின்னக் கவிதைகள் அனுப்பிவைப்பேன். அவை திரும்பி வரும். அல்லது பிரசுரிக்க இயலாமைக்கு வருந்துவதாக ஆசிரியர் எழுதி இருப்பார்.\u003c\/p\u003e\n\u003cp\u003eஆனால் விரைவில், என் கதை, கவிதை, கட்டுரைகள் பிரசுர மாயின. அவர், என் பக்கத்திலிருந்து, நான் பத்திரிகையைப் பிரித்து, பிரசுரமாகி இருக்கும் என் படைப்பை நானும் படித்து, அவரிடமும் காட்டும் வரை, அவர் என் எதிரிலேயே நின்றிருப்- பார். வாய் திறந்து பாராட்டமாட்டார். ஆனால், அவர் மகிழ்ச்சி யாக உணர்கிறார் என்பதை நான் அறியும்படி இருக்கும்.\u003c\/p\u003e\n\u003cp\u003e- பிரபஞ்சன்\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47926954033388,"sku":null,"price":235.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/2ebf74d0041a0e9e5419cd607d9cdcdd.jpg?v=1783765507","url":"https:\/\/centaram.com\/products\/%e0%ae%a4%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf-1","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}