{"product_id":"சில-வித்தியாசங்கள்-1","title":"சில வித்தியாசங்கள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஇந்தப் புத்தகத்தில் உள்ள கதைகளை திரும்பப் படித்தபோது என்\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eஎழுத்து முறையில் இருக்கும் ஒரு பொதுவான அம்சம் உடனே புலப்பட்டது. அது\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eபெரும்பாலும் எல்லாக் கதைகளையும் தன்மை ஒருமையில் எழுதி இருப்பது. அது கதை\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eசொல்லும் எவ்வளவோ முறைகளில் ஒன்று. இந்த முறையில் இருக்கும் கட்டுப்பாடு\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eஎனக்குப் பிடிக்கிறது. கதை சொல்பவனை விட்டு விலக முடியாத நிர்பந்தத்தில்\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eஇருக்கும் சவால் என்னைக் கவர்கிறது. மேலும் எழுத்தில் உள்ள துல்யமான\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eசந்தோஷங்களில் ஒன்று என்னால் பலவித வடிவங்களை ஏற்க முடிகிறது. என் சொந்த மன\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eவிகற்பங்களிலிருந்து விலகி என்னால் என்னை ஏழை குமாஸ்தாவாக ஆக்கிக்கொள்ள\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eமுடிகிறது. வீணை வித்வானாக பிரபலத்துக்கு அலைய முடிகிறது. இளம் கணவனை\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eநீந்தத் தெரியாமல் ஆற்றில் மிதக்க வைக்க முடிகிறது. மாந்திரிகத்திற்கும்\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eஎன்னால் கட்டுப்பட முடிகிறது. கனவுகள் எனக்கு நிறமாகின்றன. நிஜங்கள்\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eகனவுகளாகின்றன. அழகான பெண்களை ஆச்சரியம் நிறைந்த முனைகளில் சந்திக்க\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eமுடிகிறது. போலீஸ் பயமில்லாமல் துப்பாக்கிகள் சுட்டு பேப்பரில் ரத்தம்\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eசிந்த வைக்க முடிகிறது. நிஜத்தையும் பொய்யையும் எனக்கே உரித்தான\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eரசாயனத்தில் கலந்து, நான் மெளனமாகக் கவனிக்கும் சம்பவங்களையும் நபர்களையும்\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eஎன் விருப்பத்திற்கு அழைத்து வாசிப்பவர்களையும் உடன் அழைத்துச் செல்லும்\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eஇந்த அரை மயக்க உலகில் 'நான் எனும் பொய்யை நடத்துவோன் நானே'.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47952085188844,"sku":null,"price":202.4,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/199015fcb88c48585c8c2fcc80a88774.webp?v=1784202583","url":"https:\/\/centaram.com\/products\/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b2-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%9a%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-1","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}