{"product_id":"சிறையில்-ஒளிரும்-நட்சத்திரங்கள்-பாகம்-2","title":"சிறையில் ஒளிரும் நட்சத்திரங்கள் - பாகம் 2","description":"\u003cp\u003eஎழுத்தாளர் மதுரை நம்பி எழுதிய 'சிறையில் ஒளிரும் நட்சத்திரங்கள்' முதல் பாகம் தமிழ் வாசகப்பரப்பில் பெருத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அந்த அலை தணிவதற்குள் அந்நூலின் இரண்டாம் பாகத்தை வெளியிடுகிறார் மதுரை நம்பி. முதல் நூலைப்போலவே இந்நூலும், வாசக மனதில் நெகிழ்ச்சியையும், மனிதாபிமான உணர்வையும், நியாயத்துக்காக நிற்க வேண்டும் என்கிற உந்துதலையும் நிச்சயமாகத் தூண்டுகிறது. சிறுகதைகள் மற்றும் நாவல்களுக்கான கச்சாப்பொருள் நிரம்பிய சுரங்கமாக இந்நூல் அமைந்துள்ளது.\u003c\/p\u003e\n\u003cp\u003e-ச.தமிழ்ச்செல்வன்\u003c\/p\u003e\n\u003cp\u003eசிறைவாசிகள், அவர்கள் செய்த அல்லது செய்யாத குற்றங்கள். அக்குற்றங்களை அவர்கள் செய்வதற்கான காரணங்கள், சந்தர்ப்பச் சூழ்நிலைகள், சிறைவாசக் காலத்தில் மனநிலைகள், அவர்களின் நடத்தைகள், சர்வசாதாரணமாகக் அவர்களைச் கண்காணிக்கும் காவலர்கள், உயர் அதிகாரிகள், உறவினர்களின் எதிர்வினைகள் என எல்லா அம்சங்களையும் ஊன்றிக் கவனித்து, தன் தேர்ந்த எழுத்தோவியங்களில் அவை அனைத்தையும் பதிவுசெய்து இருக்கிறார் மதுரை நம்பி. சிறை என்ற ஒடுக்குமுறை நிறுவமைப்பினை, ஆதி முதல் அந்தம் வரையிலான நடைமுறைகளை, விதிகளை, அதன் நுணுக்கமான இயக்கங்களை எளிய ஆற்றொழுக்கான நடையில் அற்புத ஓவியங்களாகத் தீட்டிக் காட்டியிருக்கிறார்.\u003c\/p\u003e\n\u003cp\u003e- கமலாலயன்\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47676023341292,"sku":null,"price":235.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/2_ac9cbe1a-8db7-46b8-b8ff-2ed859b42c06.jpg?v=1779864924","url":"https:\/\/centaram.com\/products\/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-2","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}