{"product_id":"கதைகளில்-ஒளிரும்-வாழ்க்கை","title":"கதைகளில் ஒளிரும் வாழ்க்கை","description":"\u003cp\u003eசுகுமாரன் தனக்குத்தானே ஒரு விதியை வகுத்துக்கொண்டு இந்தக் கட்டுரைகளை எழுதியிருக்கிறார். தன் ரசனையின் அடிப்படையில் சாகித்திய அகாடமி விருதுபெற்ற இருபது படைப்புகளை மட்டும் தேர்ந்தெடுத்து, அவற்றில் வெளிப்படும் வாழ்க்கையின் தரிசனங்களைத் தொகுத்துள்ளார்.\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eமு.வரதராசன், நா.பார்த்தசாரதி, ஜெயகாந்தன், ராஜம் கிருஷ்ணன், தி.ஜானகிராமன், கி.ராஜநாராயணன்\u003c\/strong\u003e\u003cspan\u003e \u003c\/span\u003eபோன்ற மூத்த தலைமுறையினரிடமிருந்து தொடங்கி, எஸ்.ராமகிருஷ்ணன், இமையம், தேவிபாரதி போன்ற இப்போதைய தலைமுறையினர் வரை இப்பட்டியலில் இடம்பெற்றிருக்கின்றனர். தமிழ்ப்படைப்புகளின் வலிமையை உணர்ந்து, படைப்புகளைத் தேடியெடுத்து ஊன்றிப் படிக்கும் ஆர்வத்தை பொது வாசகர்களிடையில் இத்தொகுதி உருவாக்கும்.\u003c\/p\u003e\n\u003cp\u003eபல ஆண்டுகால தொடர்ச்சியான தன் வாசிப்பு அனுபவத்தின் அடிப்படையில் படைப்புகளில் பிரதிபலிக்கும் வாழ்க்கை அம்சங்களைத் தொட்டுக்காட்டி, வாழ்க்கைக்கும் இலக்கியத்துக்கும் இடையில் நிலவும் உறவை உணர்த்தும் வகையில் கட்டுரைகளை அமைத்திருக்கிறார்.\u003c\/p\u003e\n\u003cp\u003eவாசகர்களுக்கு இதுபோன்ற குறிப்புகள் மிக முக்கியம். ஒரு வழிகாட்டியாக இவை அமைந்து வாசிப்பை மேம்படுத்திக்கொள்ள உதவும். நேரடி வாசிப்பில் தென்படாத அம்சங்களை, கண்டுணர முடியாத மானுட நெருக்கடிகளை அறிவதற்கும் உணர்வதற்கும் இந்த வாசிப்பு உதவியாக இருக்கும்.\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003e- பாவண்ணன்\u003c\/strong\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47684785537260,"sku":null,"price":169.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/9848b9aae4dac8fcfe0246296adccab3.png?v=1780029144","url":"https:\/\/centaram.com\/products\/%e0%ae%95%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}