{"product_id":"கதவு","title":"கதவு","description":"\u003cp class=\"MsoNormal\"\u003e\u003cspan\u003e-\u003c\/span\u003e\u003cspan\u003e‘\u003cspan lang=\"EN-IN\"\u003eகதவு\u003c\/span\u003e\u003c\/span\u003e\u003cspan\u003e’ \u003c\/span\u003e\u003cspan lang=\"EN-IN\"\u003eகி.ரா.வின் முதல் சிறுகதைத் தொகுப்பு. அவரது படைப்பாற்றலை அழுத்தமாகப் பறைசாற்றிய தொகுப்பும்கூட.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp class=\"MsoNormal\"\u003e\u003cspan lang=\"EN-IN\"\u003eஇந்தத் தொகுப்பிலுள்ள கதைகள் அவருடைய கதை சொல்லும் முறையின் நவீனமுகத்தை வெளிப்படுத்தும் விதமாக அமைந்திருக்கின்றன. கூர்மையான அவதானிப்பும் யதார்த்தமான சித்திரிப்பும் நம்பகத்தன்மையும் இவற்றில் கூடியிருக்கின்றன.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp class=\"MsoNormal\"\u003e\u003cspan lang=\"EN-IN\"\u003eகரிசல் வட்டார வழக்கை நவீன தமிழ் இலக்கியத்தில் முக்கிய இடம்பெறச் செய்த முதல் தொகுப்பு இது.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp class=\"MsoNormal\"\u003e\u003cspan lang=\"EN-IN\"\u003eகுழந்தைகள், முதியவர்கள், பெண்கள், ஆண்கள், மரங்கள், மாடுகள், ஆடுகள், கோழிகள், பறவைகள், பூக்கள், பூச்சிகளின் வழியாகப் புதுவகையான கதைகளைச் சொல்கிறார் கி.ரா.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp class=\"MsoNormal\"\u003e\u003cspan lang=\"EN-IN\"\u003eஇக்கதைகளில் வரும் பாத்திரங்களின் ஆசைகளும் ஏமாற்றங்களும் தோல்விகளும் தியாகங்களும் அரசியலும் அன்றாடமும் யதார்த்தத்தைச் சித்திரிக்கின்றன.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp class=\"MsoNormal\"\u003e\u003cspan lang=\"EN-IN\"\u003eஇளம் படைப்பாளிகள் பலருக்கும் இன்றளவும் வழிகாட்டியாகவும் முன்மாதிரியாகவும் அமைந்திருக்கும் தொகுப்பு இது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47605983019244,"sku":null,"price":167.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/d33d763b4148fc9f48ff53873d5cc5f5.jpg?v=1778144435","url":"https:\/\/centaram.com\/products\/%e0%ae%95%e0%ae%a4%e0%ae%b5%e0%af%81","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}