{"product_id":"ஆறாவது-பெண்","title":"ஆறாவது பெண்","description":"\u003cdiv class=\"o9v6fnle cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q\"\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003eஇங்கும் ஒரு மாமனும் மாமியும் இருக்கிறார்கள் . தாழ்வாரத்திலுள் பெண்பிள்ளைகளுக்கு அவர்களும் ஒவ்வொரு வகை பூக்களின் பெயர்களைச் சூட்டியுள்ளார்கள் . கண்ணும் காதும் விளங்காதவர்கள் ; கை கால்கள் துவண்டு போனவர்கள் , தேவையான அளவுக்கு புத்தி உறைக்காதவர்கள் . ஏதோவொரு அநாதை விடுதியிலிருந்து குதிரை வண்டியில் விடியற்காலையில் வந்து சேர்பவர்கள் . அவர்களுக்கிடையில் அமர்ந்திருக்கும்போது எல்லா உறுப்புகளும் தேவைக்கு அதிகமாகவே இருக்கிறதே என்னும் இறுமாப்பு எண்ணம் எனக்கு ஒருபோதும் தோன்றுவதில்லை அக்கூட்டத்தில் அவர்களைவிடவும் நாள் குறையுள்ளவளாகத்தான் இருக்கிறேன் .\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv class=\"o9v6fnle cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q\"\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003eஇன்னொரு விஷயத்தை மட்டும் சொல்லி நிறுத்திவிடுகிறேன் . உங்கள் காதம்பரி தோற்றதில்லை ஒருபோதும் தோற்கவும் மாட்டேன் . இங்கிருந்து கிடைக்கும் அறிமுகங்களையும் அங்கிருந்து கிடைத்த சில நல்ல பழக்கங்களையும் வைத்து நான் ஒரு பூக்கடையை எப்போதாவது தொடங்குவேன் வேறொரு ஊரில் வேறொரு தோதில் . அது அனந்தராமன் வம்சத்து பூக்கடையாக இருக்காது . காதம்பரியின் பூக்கடை காதம்பரியினுடையதாக மட்டுமே அது இருக்கும் . வம்சங்களின் கட்டுப்பாடுகள் இல்லாமல் காதம்பரி இழக்க வேண்டியது ஒன்றுமில்லையே ‘\u003c\/div\u003e\n\u003c\/div\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47634257150188,"sku":null,"price":188.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/6a2411bee02413338ec06595bf65c475.jpg?v=1778837681","url":"https:\/\/centaram.com\/products\/%e0%ae%86%e0%ae%b1%e0%ae%be%e0%ae%b5%e0%ae%a4%e0%af%81-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}