{"product_id":"ஆர்யபட்டா","title":"ஆர்யபட்டா","description":"\u003cp\u003e\u003cspan\u003eதுப்பாக்கி வெடிக்கும் சப்தம் கேட்டது. ஆனந்த் கண்களில் ஆச்சரியத்துடன் தன் மார்பைப் பிடித்துக்கொண்டு விழுந்தான். மூச்சு\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eமுட்டியது. கையை, நம்பிக்கை இல்லாமல், அதன் ரத்தத்தை பார்த்தான். எதிரே பார்த்தான் அவன் கண்களில் வேதனையும் ஆச்சரியமும் தெரிந்தன. இந்தக்கதை எனது நண்பரும் திரைப்பட நடிகருமான ரமேஷ் அரவிந்த் அவர்கள் கொடுத்த  யோசனையின் பேரில் ஒரு கன்னடத் திரைப்படத்துக்காக எழுதியது. தமிழில் நாவல் வடிவத்தில் எழுதியதை அவர்கள் திரைக்கதையாக மாற்றிக்கொண்டார்கள். தமிழில் எழுதியதை கல்கி இதழுக்கு திரு ராஜேந்திரன் தொடர்கதை கேட்ட போது இதன் பூர்வீகத்தைச் சொல்லி விட்டுக் கொடுத்தேன். அது கல்கி இதழில் 1998-ல் பிரசுரமாகியது.  ஆர்யபட்டா' கன்னடத் திரைப்படம் ரமேஷ் அரவிந்த். சௌந்தர்யா நடித்து கர்நாடக மாநிலத்தில்  வெளிவந்தது. அந்தப்படத்தை நான் இன்னும் பார்க்கவில்லை. என் புத்தங்களை விரும்பி வாங்கிப் படிக்கும் வாசக அன்பர்களுக்கு என் நன்றி.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cbr\u003e\u003cspan\u003e                                                                                                                                                             \u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47729977065708,"sku":null,"price":164.5,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/AARYAPATTA.jpg?v=1781173604","url":"https:\/\/centaram.com\/products\/%e0%ae%86%e0%ae%b0%e0%af%8d%e0%ae%af%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}