{"product_id":"ஆனந்த-தீர்த்தர்-தலித்-உரிமையின்-தனிக்குரல்","title":"ஆனந்த தீர்த்தர் தலித் உரிமையின் தனிக்குரல்","description":"\u003cp\u003eமதுரையை ஒட்டிய மேலூர் பகுதியிலும் ஆனந்த தீர்த்தர் பல ஆண்டுகள் தீண்டாமை ஒழிப்பு தொடர்பான சேவைகளில் ஈடுபட்டு வாழ்ந்தவர் என்றபோதும், தமிழில் அவரைப்பற்றி ஒருசில கட்டுரைகளுக்கப்பால் தனித்ததொரு நூலாக எதுவும் ஆவணமாக்கப்படவில்லை. அது தமிழகத்தின் பெருந்துயரம்.\u003c\/p\u003e\n\u003cp\u003eநல்லூழாக, ஆனந்த தீர்த்தரைப் பற்றிய நூலை ஆய்வாளர் ஏ.எம்.அயிருக்குழியில் எழுதியிருக்கிறார். அவர் பாடுபட்டுத் திரட்டியிருக்கும் பல்வேறு குறிப்புகள் ஆனந்த தீர்த்தர் தம் வாழ்நாளில் சந்தித்த பல்வேறு சவால்களையும் அவற்றை எதிர்கொண்டு நின்ற அவருடைய மன உறுதியையும் உணர்த்துகின்றன.\u003c\/p\u003e\n\u003cp\u003eஆனந்த தீர்த்தரின் வாழ்க்கை முழுக்க முழுக்க ஒரு சாகசப்பயணத்துக்கு நிகரானதாக உள்ளது. ஆனந்த தீர்த்தர் சட்டத்தின் துணையோடு மேற்கொண்ட பல்வேறு போராட்டங்களையும் அவற்றுக்காக அவர் அலைந்த அலைச்சல்களையும் அவமானங்களையும் இந்தப் புத்தகத்தின் வழியாக நம்மால் அறிந்துகொள்ள முடிகிறது.\u003c\/p\u003e\n\u003cp\u003eகாந்தியடிகள், நாராயண குரு ஆகிய இருவருடைய கொள்கைகளின் கூட்டு ஆளுமையாக ஆனந்த தீர்த்தர் திகழ்கிறார்.\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47723846205676,"sku":null,"price":235.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/ffd3f936823155274f6dd079d922c667.jpg?v=1781085051","url":"https:\/\/centaram.com\/products\/%e0%ae%86%e0%ae%a9%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%a4%e0%af%80%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b0%e0%ae%b2%e0%af%8d","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}