ஆனந்த தீர்த்தர் தலித் உரிமையின் தனிக்குரல்
Original price was: ₹250.00.₹235.00Current price is: ₹235.00.
1 in stock
மதுரையை ஒட்டிய மேலூர் பகுதியிலும் ஆனந்த தீர்த்தர் பல ஆண்டுகள் தீண்டாமை ஒழிப்பு தொடர்பான சேவைகளில் ஈடுபட்டு வாழ்ந்தவர் என்றபோதும், தமிழில் அவரைப்பற்றி ஒருசில கட்டுரைகளுக்கப்பால் தனித்ததொரு நூலாக எதுவும் ஆவணமாக்கப்படவில்லை. அது தமிழகத்தின் பெருந்துயரம்.
நல்லூழாக, ஆனந்த தீர்த்தரைப் பற்றிய நூலை ஆய்வாளர் ஏ.எம்.அயிருக்குழியில் எழுதியிருக்கிறார். அவர் பாடுபட்டுத் திரட்டியிருக்கும் பல்வேறு குறிப்புகள் ஆனந்த தீர்த்தர் தம் வாழ்நாளில் சந்தித்த பல்வேறு சவால்களையும் அவற்றை எதிர்கொண்டு நின்ற அவருடைய மன உறுதியையும் உணர்த்துகின்றன.
ஆனந்த தீர்த்தரின் வாழ்க்கை முழுக்க முழுக்க ஒரு சாகசப்பயணத்துக்கு நிகரானதாக உள்ளது. ஆனந்த தீர்த்தர் சட்டத்தின் துணையோடு மேற்கொண்ட பல்வேறு போராட்டங்களையும் அவற்றுக்காக அவர் அலைந்த அலைச்சல்களையும் அவமானங்களையும் இந்தப் புத்தகத்தின் வழியாக நம்மால் அறிந்துகொள்ள முடிகிறது.
காந்தியடிகள், நாராயண குரு ஆகிய இருவருடைய கொள்கைகளின் கூட்டு ஆளுமையாக ஆனந்த தீர்த்தர் திகழ்கிறார்.
AANANTHA, AANANTHA THEERTHAR, THALITH, THALITH URIMAIYIN THANIKURAL, THANIKURAL, THEERTHAR, URIMAIYIN
Customer Reviews
Share your experience with this product
Your review will be sent to us and published after verification. We reply within 24 hours.
