அருந்ததியர்: வாழும் வரலாறு
Original price was: ₹560.00.₹526.40Current price is: ₹526.40.
1 in stock
தமிழ்ச் சமூகத்தில் அருந்தியர் குறித்து அனைத்து தரப்பட்ட மக்களும் சிந்திக்கவும், விவாதிக்கவும் தொடர்ந்து பலர் எழுதவும் அடிப்படைக் காரணமாக அமைந்தது மாற்கு எழுதிய அருந்ததியர் வாழும் வரலாறு’ என்கிற நூல்தான், அவரது எழுத்தும், ஆழ்ந்த ஆராய்ச்சி அணுகுமுறையுமே தமிழக அறிஞர்கள் பலரை அருந்ததியர்கள் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தது.
அருந்ததியர்கள் என்றாலே செருப்பும், துடைப்பமுமே நினைவுக்கு வந்த சாதிய மூளையை அடித்து நொறுக்கி ஒண்டிவீரன், பொட்டிப் பகடை, முத்தன் பகடை, ஓடிக்குத்துவான் பகடை ஆகியோர்களின் வரலாறுகளின் மூலம் அருந்ததியர்கள் என்றால் ‘மாவீர்கள்’ என்ற வரலாற்றை நிறுவியவர். இந்நூலை உருவாக்கும் பணியில் மாற்கு அவர்கள் ஈடுபடும்போது அவர்பட்ட பாடுகளை, வேதனைகளை உடனிருந்து பார்த்தவன் நான். பல கிராமங்களில் உள்ளே நுழைய முடியாத நிலை எங்கெங்கு அலைந்தாலும் எந்த ஆவணமும் கிடைக்காத கையறு நிலை என்பதைத் தாண்டி அவர் பெற்றெடுத்த அருந்தமிழ் பொக்கிசம் இந்நூல் அவர் உருவாக்கியது இந்நூலை மட்டுமல்ல, என்னைப் போன்ற பல போராளிகளையும்தான்.
ARUNTHATHEYAR, ARUNTHATHEYAR VAALUM VARALARU, vaalum, VARALARU
Customer Reviews
Share your experience with this product
Your review will be sent to us and published after verification. We reply within 24 hours.
