{"title":"யாவரும் பப்ளிஷர்ஸ்","description":"","products":[{"product_id":"நின்றெரியும்-சுடர்-பிற-கதைகள்","title":"நின்றெரியும் சுடர் \u0026 பிற கதைகள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eபடைப்பு போதாமையிலிருந்து எழுகிறது, வெற்றிடத்தை நிரப்புகிறது, அனக்கமற்றதில் அனக்கத்தை உண்டாக்குகிறது, பின் நிறைகிறது, தளும்புகிறது, செயலற்றிருக்கிறது.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003e-நூலிலிருந்து\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47736643715308,"sku":null,"price":173.9,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/8ee8a5ff744ed692630ceac52ae33986.jpg?v=1781254027"},{"product_id":"குரவை","title":"குரவை","description":"\u003cp\u003e\u003cspan\u003eபல நூற்றாண்டுகளாகத் தமிழ் நிலத்தின் நடனக்கலையாகவும் மரபின் அடையாளங்களின் ஒன்றாகவும் இருக்கும் கரகாட்டம், காலமாற்றத்தின் சுழலில் நசிந்து போன கலைஞர்களை பாலியல் பண்டமாகப் பார்க்க வைக்கும் சமூகத்தை வளர்த்தெடுத்த அரசியல், கலாச்சார, பொருளாதாரப் பின்னணியை இரு தரப்பிலும் இருந்து பதிவு செய்திருக்கிறார் சிவகுமார் முத்தய்யா. முத்தய்யாவின் எழுத்து உள்ளிருந்து எழும் குரலுக்கு நிகரானது என்பதை வாசித்தால் உணர முடியும்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47736765087980,"sku":null,"price":272.6,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/KURAVAI.jpg?v=1781254521"},{"product_id":"கெளிமதம்","title":"கெளிமதம்","description":"\u003cp\u003eநிலத்தின் மாந்தர்கள் அரசியல்படுத்தப்பட்டாலும் அரசியல்படாதவர்களாக இருக்கிறார்கள்.\u003c\/p\u003e\n\u003cp\u003eஅவர்தம் நம்பிக்கைகள் அவர்களை வழிநடத்துகின்றன.\u003c\/p\u003e\n\u003cp\u003eவழிநடத்தப்பட்டதாலேயே பாதிக்கப்படுபவர்களாகவும், அவற்றையே கட்டிக்காப்பவர்களாகவும் இருக்கிறார்கள்.\u003c\/p\u003e\n\u003cp\u003eஇறுதியில் எல்லாவற்றிலும் பலியாவது....?\u003c\/p\u003e\n\u003cp\u003eதனது முதல் நாவலிலேயே மிக அழுத்தமான கதையை நிலத்தின் வழக்கு மொழியில் சாட்சியமாகக் கூறியிருக்கிறார்.\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47736785141996,"sku":null,"price":263.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/KELIMADHAM.jpg?v=1781254762"},{"product_id":"அவளும்-நானும்-2","title":"அவளும் நானும் 2","description":"","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47736792350956,"sku":null,"price":300.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/AVALUMNAANUM.jpg?v=1781255335"},{"product_id":"வியனுலகு-வதியும்-பெருமலர்","title":"வியனுலகு வதியும் பெருமலர்","description":"\u003cp\u003e\u003cspan\u003eபொதுவாகவே இளங்கோ கிருஷ்ணனின் கவிதைகள் வினாக்களால் உருவாகின்றன. படிமங்களுக்காகவும் உத்திகளுக்காகவும் முண்டியடித்து கவிதைக்கான தருணங்களை இழந்து நிற்குமிந்த சொல்விளையாட்டு அழிவுவெளியில் இளங்கோ கிருஷ்ணன் கவியுலகு மொழியின் புகலிடமாய் உதிக்கிறது. ஆகவேதான் இந்தத் தொகுப்பிலுள்ள கவிதைகள் அவலங்களால் தத்தளிக்கின்றன. அவஸ்தைகளால் கொந்தளிக்கின்றன. இவற்றையெல்லாம் தருணங்களாய் உணர்கின்றன. அன்றாடங்கள் அனைத்திலும் சுதந்திரம் கேட்கும் ஒரு குரல் இத்தொகுப்பின் பிரதான படிமமாகியிருக்கிறது. காலந்தோறும் அறத்தினால் செலுத்தப்படுமோர் இன மரபின் ஆவேசத்தையும் பெருங்கருணையையும் கையாலாகத் தனத்தையும் நம் முன் அளிக்கிறது. அதேவேளை நமது இருப்பின் மன எழுச்சியையும் அமைதியையும் அபூர்வமாய் குறியீட்டுத் தன்மையாக்கும் வல்லபமும் இத்தொகுப்பில் அசாதாரணமாய் நிகழ்ந்திருக்கிறது. இதுவோர் அரூப தரிசனம், இவரின் கவிதைகளை தரிசிக்க விழையும் ஒரு வாசகனுக்குத் திறவுகோலாய் இக்கவிதை அமையக்கூடும்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47736792875244,"sku":null,"price":169.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/e062218df6cd0d9af9b413a215cb2fcd.jpg?v=1781255231"},{"product_id":"இஸ்லாமியப்-பொற்காலம்","title":"இஸ்லாமியப் பொற்காலம்","description":"","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47736797888748,"sku":null,"price":329.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/ISLAMEYA.jpg?v=1781256089"},{"product_id":"கூத்தொன்று-கூடிற்று-பிற-கதைகள்","title":"கூத்தொன்று கூடிற்று \u0026 பிற கதைகள்","description":"\u003cp\u003eபலதரப்பட்ட களங்களில் பயணித்தல், கதை வடிவத்தில் பெரிதும் மாற்றங்கள் இன்றி கதை கூறல் எனப் பல எல்லைகளை தன்வசப்படுத்தியிருக்கிறார் லட்சுமிஹர். அப்படியான கதை கூறலில் உள்ளும், புறமும் இயல்பாய் அக்கதைகளை நகர்த்துதல் மட்டுமின்றி இடைப்பட்ட கதைகளை லட்சுமிஹர் தானாக மறைப்பதையும் நம்மால் உணர முடிகிறது. அப்படியாக, ‘இடை நிறுத்தல் வாசிப்பு’ என்ற ஒன்றை லட்சுமிஹர் தன்னுடைய கதைகளில் பெரும்பாலும் பயன்படுத்துகிறார் என்றே தோன்றுகிறது. அவரது முதல் தொகுப்பிலிருந்து இப்போது வரை அதைக் காணமுடிகிறது. அவைதான் இக்கதைகளுக்குப் பன்முகத் தன்மையையும் வாசிக்கும் சுவாரசியத்தையும் கொடுக்கின்றன.\u003c\/p\u003e\n\u003cp\u003e- பிரகாஷ் ராம் லஷ்மி\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47736801362156,"sku":null,"price":159.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/6b7635de0c9ca287fb8914dc59ca51ad.jpg?v=1781256481"},{"product_id":"ஜான்போஸ்கோவின்-இன்னொரு-அத்தியாயம்","title":"ஜான்போஸ்கோவின் இன்னொரு அத்தியாயம்","description":"","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47736839209196,"sku":null,"price":357.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/JHONBOSCO.jpg?v=1781256830"},{"product_id":"பற்றி-எரியும்-நரம்புகள்-பிற-கதைகள்","title":"பற்றி எரியும் நரம்புகள் \u0026 பிற கதைகள்","description":"\u003cp\u003eநரிகள் மனிதர்களோடு சமமாகத் திரியும் காலம் ஒன்று வந்தது. நரியைத் தனக்கு இணையாக அல்லது தனக்கு ஒரு படி கீழாக எண்ணத் தொடங்கினான். ஆயிரம் வருடங்களுக்கு முன்பு விதைத்த விதை முளைவிடத் தொடங்கியது. ஒரு பெருவெள்ளத்தில் கோவிலும் சிலையும் அடித்துச் செல்லப்பட்டன. இரத்தக் கறைகள் மறைந்தன. குளத்தில் மீன்களுக்கு கால்கள் முளைத்து, கரையேறி நடைப்பயிற்சிக்காக சாலைக்கு வந்தன. சாலையின் வலது பக்கத்தில் இருந்த சுவரில் கஞ்சா புகைத்தபடி ஓர் ஓவியன் கிறுக்கிக் கொண்டிருந்தான்.\u003c\/p\u003e\n\u003cp\u003e- நூலிலிருந்து\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47736847401196,"sku":null,"price":136.3,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/8d8b139133f849d90021012878c6b78b.jpg?v=1781256791"},{"product_id":"பனங்காய்-மயிலை","title":"பனங்காய் மயிலை","description":"\u003cp\u003eபனங்காய் மயிலை மற்றும் இரண்டு குறுநாவல்கள் அடங்கிய தொகுப்பு இது.\u003c\/p\u003e\n\u003cp\u003eஇந்த தொகுப்பில் பேசப்படும் கதையில் மண், மனிதன், மாடு ஆகியவற்றுக்கிடையிலான உறவு ஒரு கலாச்சார வரலாறு. தென்னகக் கிராமங்களின் உடல் உழைப்பு, திருவிழா, வன்மம், பெருமை, இழப்பு, காத்திருக்கும் மரணம் அனைத்தும் அவருக்கே உண்டான படிம மொழியில் புதிய அனுபவத்தைத் தரும்.\u003c\/p\u003e\n\u003cp\u003eஜல்லிக்கட்டு, கிடை, வாடி, களம்பு, உடுக்கையோசை, இருள் - விடியல் என பின்னணியாக, மனிதனின் அகம்பாவமும் பயமும் ஒரே நேரத்தில் மோதுகின்றன. அரிதாகச் சொல்லப்படும் கிராம வாழ்க்கையின் அடுக்குகளை, சு.வேணுகோபால் உணர்ச்சி அலங்காரம் இன்றி, துல்லியமான மொழியால் முன்வைக்கிறார்.\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47736876073196,"sku":null,"price":206.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/PANANGAI.jpg?v=1781257555"},{"product_id":"கையறு","title":"கையறு","description":"","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47736902516972,"sku":null,"price":376.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/KAYARU.jpg?v=1781257968"},{"product_id":"டுடூம்-லைப்ரரி","title":"டுடூம் லைப்ரரி","description":"\u003cp\u003e\u003cspan\u003eமனோபாரதி விக்னேஷ்வர், பொறியியலில் இளங்கலை பட்டம் பெற்று ஆட்டோமேஷன் இன்ஜினியராக பணியாற்றியவர். தற்போது தமிழின் பல துறைகளை சார்ந்த நூல்களை, ஒலி வடிவில் மாற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறார். நாட்டுடைமையாக்கப்பட்ட புத்தகங்களையும் மற்ற எழுத்தாளர்களின் புத்தகங்களையும் அவர்களின் அனுமதியோடு பெருட்செவி (www.perutchevi.com) எனும் இணையதளத்தில் பதிவிட்டு வருகிறார். கணவர் விக்னேஷ்வர் அரசு பொதுத்துறை வங்கி ஒன்றின் மேலாளராகப் பணியாற்றி வருகிறார். வாசித்த புத்தகங்கள், சென்ற பயணங்கள் மற்றும் அன்றாட வாழ்க்கையில் தான் உணரும் தருணங்களைப் பற்றி 'சிறுபொழுது' எனும் வலைத்தளத்தில் எழுதி வருகிறார். இது இவரது முதல் நூலாகும்.மனோபாரதி விக்னேஷ்வர், பொறியியலில் இளங்கலை பட்டம் பெற்று ஆட்டோமேஷன் இன்ஜினியராக பணியாற்றியவர். தற்போது தமிழின் பல துறைகளை சார்ந்த நூல்களை, ஒலி வடிவில் மாற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறார். நாட்டுடைமையாக்கப்பட்ட புத்தகங்களையும் மற்ற எழுத்தாளர்களின் புத்தகங்களையும் அவர்களின் அனுமதியோடு பெருட்செவி (www.perutchevi.com) எனும் இணையதளத்தில் பதிவிட்டு வருகிறார். கணவர் விக்னேஷ்வர் அரசு பொதுத்துறை வங்கி ஒன்றின் மேலாளராகப் பணியாற்றி வருகிறார். வாசித்த புத்தகங்கள், சென்ற பயணங்கள் மற்றும் அன்றாட வாழ்க்கையில் தான் உணரும் தருணங்களைப் பற்றி 'சிறுபொழுது' எனும் வலைத்தளத்தில் எழுதி வருகிறார். இது இவரது முதல் நூலாகும்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47736904581356,"sku":null,"price":281.06,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/73f148431d385a23ac3a24635b5f6f0d.jpg?v=1781258040"},{"product_id":"டார்லிங்-என-பெயர்சூட்டப்பட்ட-சித்தாந்தம்","title":"டார்லிங்’ என பெயர்சூட்டப்பட்ட சித்தாந்தம்","description":"","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47736953340140,"sku":null,"price":173.9,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/DARLING.jpg?v=1781258393"},{"product_id":"தெவம்","title":"தெவம்","description":"\u003cp\u003eகொங்குச்சீமையின் கிரிப்பட்டி, மக்கம்பட்டி கிராமங்களின் கூட்டு ஆன்மாவாகத் திகழும் கருப்பசாமிக்கு 'தெவம்! சாட்டப்படுகிறது.\u003c\/p\u003e\n\u003cp\u003eபிழைப்புக்காகவும், வறுமைக்காகவும் திசைக்கொன்றாய் சிதறிப்போன பங்காளிகளைத் தன் வேர்களை நோக்கி இழுக்கிறது அந்த அழைப்பு சொந்த ஊரில் நிலம் இருந்தும், தெவத்திற்காக ஆடு வாங்கப் பணம் தேடி அந்நிய வயல்களில் கூலி வேலைக்குச் செல்லும் பழனியின் கண்ணீர்... மலை உச்சிகளில் விறகு சுமக்கும் பச்சியம்மாவின் தவிப்பு..\u003c\/p\u003e\n\u003cp\u003eபனி படர்ந்த சிக்கிம் எல்லையில் நின்றுகொண்டு தன் நிலத்துச் செம்பூவைத் தேடும் தேவாவின் ஏக்கம்... என நாவல் எளிய மனிதர்களின் இரத்தமும் சதையுமான வாழ்வியலைப் பதிவு செய்கிறது.\u003c\/p\u003e\n\u003cp\u003eஅதிகாரத்திற்கும் உழைப்பிற்கும் இடையிலான போராட்டம், ஜாதிய அடுக்குகள், கைவிடப்பட்ட நிலங்களின் மௌளனம் என விரியும் இந்தக் கதையில், தன் மக்களின் துயர் துடைக்கக் கருப்பசாமி சவுக்கோடு இறங்கி வரும் தருணம் அதிரவைக்கும் அனுபவம்.\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47736954781932,"sku":null,"price":225.6,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/b7469b78f2854ffeca365e89ad2a9da1.jpg?v=1781258593"},{"product_id":"துரதிர்ஷ்டம்-பிடித்த-கப்பலின்-கதை","title":"துரதிர்ஷ்டம் பிடித்த கப்பலின் கதை","description":"\u003cp\u003e\u003cspan\u003eஇறுதியாக ஒரு துப்பாக்கிச்சூடு நிகழும் வரை நாம் அனுமதிக்கப்பட்டிருக்கிறோம்.குறையாத இடைவெளியில் புல்லட்டுகள் ஒவ்வொன்றும் மற்றொன்றை முடிவில்லாமல் துரத்துகின்றன.நான்காவது புல்லட் என் நெற்றியின் வலது ஓரத்திலிருந்தி கிளம்பி,வெற்று வெளியில் மற்ற புல்லட்டுகளைத் துரத்துகிறது.அது நெற்றியின் இடது வெளிபுறத்திலிருந்து ஓட்டைப் பிளக்கும் கோழிக்குஞ்சாய் தலை நீட்டியது வரை ஒரு நெடிங்காலப் பயணத்தை மின்னல் வேகத்தில் முடித்ததை மட்டுமே என்னால் நினைவு கூர முடிகிறது. - பாலசுப்ரமணியன் பொன்ராஜ்\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47736960450796,"sku":null,"price":225.6,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/81d880cd0711ce9542630e8ec9f6115d.jpg?v=1781258892"},{"product_id":"இஸ்லாமியப்-பொற்காலம்-2","title":"இஸ்லாமியப் பொற்காலம் 2","description":"\u003cp\u003eஇஸ்லாமிய தமிழ் இலக்கிய உலகில் முஸ்லிம் பெண் எழுத்தாளர்கள் கதை, கவிதை, கட்டுரை என்று ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு துறை சார்ந்து எழுதிவரும் வேளையில் சகோதரி நஸ்ரத் ரோஸி அவர்கள் கட்டுரையாளராக, கதைசொல்லியாக, மொழிபெயர்ப்பாளராக, பத்தி எழுத்தாளராக, தேடல் மிக்க வரலாற்று ஆய்வாளராகப் பல பரிமாணங்களில் வலம்வருபவர்.\u003c\/p\u003e\n\u003cp\u003eஅவரது சிந்தனையில் உருவாகி இதற்குமுன் வெளிவந்த புத்தகங்கள் அனைத்தையும் விட இஸ்லாமியப் பொற்காலம் பாகம் 2 மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. உலகம் முழுவதும் முஸ்லிம்களின் வரலாறும் அதனுடன் தொடர்புடைய அடையாளங்களும் கொஞ்சம் கொஞ்சமாகச் சிதைந்துவரும் வேளையில், இன்றைய நவீன உலகில் மக்கள் பயன்பாட்டிலுள்ள பல்வேறு அறிவியல் கண்டுபிடிப்புகளின் முன்னோடி முஸ்லிம்கள் குறித்த தகவல்களை மிகுந்த சிரமப்பட்டுத் தேடி ஆதாரத் தரவுகளுடன் இந்தப் புத்தகத்தின் ஆவணப்படுத்தியுள்ளார்.\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47736961040620,"sku":null,"price":376.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/ISLAMEYAPORKALAM.jpg?v=1781258947"},{"product_id":"ஜிலேபி","title":"ஜிலேபி","description":"","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47737043779820,"sku":null,"price":263.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/JELEBI.jpg?v=1781259251"},{"product_id":"அம்புப்-படுக்கை","title":"அம்புப் படுக்கை","description":"\u003cp\u003e\u003cspan\u003eபீஷ்மர் காலத்தின்முன் தன் துயர் நீங்க அமைதியுடன் வேண்டிக் கிடக்கிறார். போதும் போதுமெனக் கதறவில்லை. துயரத்திலிருந்தும் கொண்டாட்டத்திலிருந்தும் சம அளவில் பற்றற்று இருப்பவராக பீஷ்மர் எனக்குத் தோன்றவில்லை. வாழ்வின் மீது பெரு விழைவும் வாஞ்சையும் ஒருபக்கம் நம்மை இருத்தி வைக்கின்றன. நம் பிடிப்பை ஒவ்வொரு விரலாக நெகிழ்த்தி வாழ்வைக் கைவிடச்செய்ய வதைக்கும் ஆற்றல்கள் மறுஎல்லையில் நம்மை வற்புறுத்துகின்றன. இவற்றில் ஒன்றைத் தேர்வு செய்யத் தயங்கி, இயன்றவரை ஒத்திப் போடுபவராக, வலியில் வதங்கி வாழ்வின் நினைவுகளை மீட்டியபடி, தனது கேள்விகளுக்கு விடை தேட முனைபவராகப் பீஷ்மர் இருக்கிறார் எனத் தோன்றுகிறது. இக்கதை மாந்தர்களைப் போல்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47737113805036,"sku":null,"price":169.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/7fd69351fb3b7d681f47033aa5a53c5a.webp?v=1781259507"},{"product_id":"மை-டியர்-ஹெலன்","title":"மை டியர் ஹெலன்","description":"","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47737116459244,"sku":null,"price":216.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/MYDEAR.jpg?v=1781259709"},{"product_id":"தமிழ்-சிறுவர்-இலக்கியம்-அறிந்து-கொள்ளவேண்டிய-ஆளுமைகள்-பாகம்-1","title":"தமிழ் சிறுவர் இலக்கியம் - அறிந்து கொள்ளவேண்டிய ஆளுமைகள் (பாகம் 1)","description":"\u003cp\u003e\u003cspan\u003eநான் எட்டாவது வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோதுதான் அந்தச் சம்பவம் நடந்தது.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eஎன்னுடைய வகுப்பாசிரியர் லண்டன் தேம்ஸ் நதியைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தபோது நான் குறுக்கிட்டு அந்த நதி எப்படி இருக்கும், அதன் அழகு, அதன் மேலே கட்டப்பட்டிருக்கும் பாலம், பின்னால் இருக்கும் பிக்-பென் கடிகாரம் என்று விவரமாகச் சொல்ல, ஆசிரியருக்கு ஆச்சரியம். “நீ லண்டன் சென்றிருக்கிறாயா?\" என்று கேட்க, நான் மஞ்சள் பூ மர்மம் என்ற முத்து காமிக்ஸ் கதையைச் சொல்லி அதில் இருக்கும் ஓவியங்களின் வாயிலாகத்தான் இவ்வளவும் தெரிய வந்தது என்று விளக்கினேன். அதன் பிறகு இன்னொரு முத்து காமிக்ஸ் கதையான \"சதிகாரர் சங்கம்\" வாயிலாக, இன்று ஒரு நாட்டில் இருந்து பயணத்தைத் தொடங்கி நேற்றைய தினத்தில் இன்னொரு நாட்டிற்கு சென்றடைவதைச் சொன்ன உடனே ஆசிரியருக்கே ஆச்சரியம்.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eஇப்படியாக காமிக்ஸ் வாசிப்பு என் வாழ்க்கையில் மிக முக்கியமான இடத்தைப் பிடித்தது. இந்தக் காமிக்ஸ் இதழ்களின் பதிப்பாசிரியரான முல்லை தங்கராசன் எனது முதல் ஆதர்ஸமாக மாறினார். ஓவியச் சக்ரவர்த்தி செல்லம் (எ) செல்லப்பன், சிறுவர் இலக்கிய சிந்தனைச் சிற்பி வாண்டுமாமா, அணில் அண்ணா என்று என்னுடைய இளம் பிராயம் மிகச்சிறந்த நினைவுகளுடன் கடக்க பலரும் உதவினர்.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eஅம்புலிமாமா, பாலமித்ரா, ரத்னபாலா என்று ஆரம்பித்து பின்னர் 1930களில் வந்த இதழ்கள் முதல் 1940களில் ஆரம்பித்த சிறுவர் இதழ்கள், 1950, 60, 70 என்று தொடர்ச்சியாக இதழ்களைச் சேகரித்துப் படிக்க ஆரம்பித்தேன். நம்மிடையே இருந்த மகத்தான ஆளுமைகளை இத்தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்தவும் இவர்களின் சாதனைகளை ஆவணப்படுத்தவும் இப்புத்தகம் உதவும் என்றே நம்புகிறேன்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47737118818540,"sku":null,"price":197.4,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/1.webp?v=1781259897"},{"product_id":"சிறுவர்களுக்கான-உலக-புத்தக-அலமாரி","title":"சிறுவர்களுக்கான உலக புத்தக அலமாரி","description":"\u003cp\u003e\u003cspan\u003eஇருபத்தி ஆறு ஆண்டுகளாக சென்னைப் புத்தகக் கண்காட்சிக்கு ரெகுலராக விஜயம் செய்து வந்ததில் சில விஷயங்களை கவனித்தேன். இளம் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு புத்தக வாசிப்புப் பழக்கத்தை உருவாக்க நினைக்கிறார்கள். ஆனால், அவர்களுக்கு எந்தப் புத்தகத்தை வாங்கிக் கொடுப்பது என்பதில் ஏற்படும் தெளிவின்மையால் இரண்டு பொதுவான தவறுகளைச் செய்கிறார்கள்.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003e1. ஆன்லைனில் \/ புத்தகக் கடைக்காரர்களிடம் விசாரித்து அவர்கள் பரிந்துரைக்கும் புத்தகங்களை வாங்கிக் கொடுப்பது.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003e2. இளம் பெற்றோர்களின் சிறுவயதில் அவர்கள் படித்து ரசித்த புத்தகங்களையே இப்போது அவர்களின் குழந்தைகளுக்கும் வாங்கிக் கொடுப்பது.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eஇவையிரண்டுமே சரியான அணுகுமுறை இல்லையென்பதால், இளம் பெற்றோர்களுக்கான ஒரு கையேட்டை உருவாக்குவதின் அவசியம் புரிந்தது. கடந்த பத்தாண்டுகளில் விற்பனையிலும் விமர்சனத்திலும் ட்ரென்ட் செட்டர் ஆக இருக்கும் 20 புத்தகங்களைத் தேர்ந்தெடுத்து என்னுடைய வழக்கமான பாணியில் ஸ்பாய்லர் இல்லாமல் ஒவ்வொரு கட்டுரையையும் கதை உருவான பின்னணி, உருவாக்கத்தில் இருந்த சுவையான தகவல்கள், இது எதைப்பற்றிய கதை, என்ன ஜான்ர என்று பல விஷயங்களையும், மிகவும் முக்கியமாக இளையோர்கள் ஏன் இந்தக் கதையைப் படிக்க வேண்டும் என்றும் எழுதி இருக்கிறேன். ஓவியங்களில், வண்ணங்களில், புத்தக அமைப்பில் இருக்கும் அழகியலையும் நான் ரசித்த விஷயங்களையும் தனியாகக் குறிப்பிட்டிருக்கிறேன்.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eவாசிப்பில் ஆர்வமுள்ள அனைத்து பெற்றோர்களும் தங்கள் வாரிசுகளுக்கு இப்புத்தகத்தைப் பரிசளித்து உலகப் புத்தக அலமாரியின் கதவைத் திறந்து வைப்பார்கள் என்று நம்புகிறேன்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47737121702124,"sku":null,"price":244.4,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/9cec961d9cc60a7aa084288c4750d9d0.webp?v=1781260307"},{"product_id":"தலைசிறந்த-இந்திய-கிராஃபிக்-நாவல்கள்-பாகம்-1","title":"தலைசிறந்த இந்திய கிராஃபிக் நாவல்கள் (பாகம் 1)","description":"","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47737123176684,"sku":null,"price":300.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/THALAISIRANTHA1.jpg?v=1781260302"},{"product_id":"லவ்டேல்","title":"லவ்டேல்","description":"\u003cp\u003e\u003cspan\u003eகிரைம் நாவல்களின் வகைமைகள் தற்போது அருகிவிட்ட நிலையில் தொண்ணூறுகளின் பல்ப் ஃபிக்ஷன்களின் கனத்தைக் கொண்டு வந்திருக்கின்றது இந்நாவல்.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eஓர் அழகான அமைதியான மலைவாழிடம். அங்கே தொடர் கொலைகள் நடக்கின்றன. யாரும் எதிர்பாராத அடுத்தடுத்த திருப்பங்கள்... அந்தக் கொலைகளின் பின்னணி என்ன? மர்மங்களின் திரை விலகியதா?\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47737124618476,"sku":null,"price":122.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/1935044ce65d92f65146b77949452074.webp?v=1781260565"},{"product_id":"லாஞ்சனை","title":"லாஞ்சனை","description":"\u003cp\u003eசாத்தூர் மற்றும் சிவகாசியைச் சுற்றியுள்ள கரிசல் மண்ணின் நிலப்பரப்பில், வெடிமருந்து வாசனையோடு கலந்திருக்கும் எளிய மனிதர்களின் வாழ்வியலை இந்தப் புத்தகம் பேசுகிறது.\u003c\/p\u003e\n\u003cp\u003eவாழ்நாள் முழுவதும் உழைத்தும் தீராத வறுமை, எதிர்பாராத தருணத்தில் கனவுகளைக் கரிக்கச் செய்யும் பட்டாசு ஆலை விபத்துகள், கல்வி மறுக்கப்பட்ட சிறுவனின் கவசகுண்டலமாய் இருக்கும் ஒரு பேனா என ஒவ்வொரு கதையும் இதயத்தின் ஆழத்தைத் தொடுபவை.\u003c\/p\u003e\n\u003cp\u003e\"ஏமாளி\" என்றுஉலகம் எள்ளிநகையாடும் மனிதர்களிடம் பொதிந்துள்ள பேராற்றல்கொண்ட அன்பையும், நகர நெருக்கடியில் தொலைந்துபோகும் கிராமத்து வேர்களையும், சாதிய வன்மத்தைத் தன் ஈரமான மனிதாபிமானத்தால் வெல்லும் அர்ச்சுனன்களையும் இக்கதைகளில் நீங்கள் சந்திக்கலாம்.\u003c\/p\u003e\n\u003cp\u003eவெறும் எழுத்துக்களாக அல்லாமல், வலியும் நம்பிக்கையும் கலந்த ஒரு காலத்தின் ஆவணமாக விரிகிறது எஸ். காமராஜின் இக்கதை உலகம்.\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47737130778860,"sku":null,"price":150.4,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/532fd01df814385a0750ac01458ae156.webp?v=1781260886"},{"product_id":"அவளும்-நானும்","title":"அவளும் நானும்","description":"\u003cdiv class=\"xdj266r x14z9mp xat24cr x1lziwak x1vvkbs x126k92a\"\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003eஇந்நூல் திருவில்லிபுத்தூர் வடபத்ரசாயியையும், அவனையே கண்ணனாகக் கொண்ட சூடிக் கொடுத்த சுடர்க்கொடியின் தன்னேற்றத்தையும் அவர்கள்மீது நூலாசிரியர் கொண்ட ஈடுபாட்டையும் குறித்து தீட்டியுள்ள அழகிய சொல்லோவியம் ஆகும்.\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv class=\"x14z9mp xat24cr x1lziwak x1vvkbs xtlvy1s x126k92a\"\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003eஇந்நூலின் முற்பகுதியில் பெரியாழ்வாரின் பாசுரங்களும் பிற்பகுதியில் ஆண்டாளின் திருப்பாவை முதல் இருபது பாசுரங்களும் விளக்கப்படுகின்றன. \u003c\/div\u003e\n\u003c\/div\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47737133334764,"sku":null,"price":441.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/AVAL.jpg?v=1781260768"},{"product_id":"சோளம்-என்கிற-பேத்தி","title":"சோளம் என்கிற பேத்தி","description":"","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47737135300844,"sku":null,"price":235.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/002063e04d7c43d7dbc75f0a4843d11c.jpg?v=1781261266"},{"product_id":"தமிழ்நாட்டுப்-பழங்குடிகள்-மானிடவியல்-நோக்கில்","title":"தமிழ்நாட்டுப் பழங்குடிகள் (மானிடவியல் நோக்கில்","description":"","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47737136972012,"sku":null,"price":225.6,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/TAMILNATU.jpg?v=1781261554"},{"product_id":"ருசிபேதம்","title":"ருசிபேதம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eருசிபேதம் - உணவை சமையலறையிலிருந்து வெளியே எடுத்து வந்து, வரலாறு, அரசியல், இடம்பெயர்வு, மொழி, மதம், சந்தை, மற்றும் மனித உறவுகளின் மையத்தில் நிறுத்தும் ஒரு தனித்துவமான கட்டுரைத் தொகுப்பு.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eசிங்கப்பூர் போன்ற பன்முகப் பண்பாட்டுச் சூழலில், பரோட்டா கடைகள், காபி ஷாப்புகள், வீதி உணவுகள், மற்றும் உலகம் முழுவதும் பயணம் செய்த சுவை வழியாக உணவு எப்படி இனங்களை இணைக்கிறது. எப்படி அடையாளங்களை உருவாக்குகிறது, எப்படி அரசியலாகவும் மாறுகிறது என்பதை இந்த நூல் மிக நுணுக்கமாகப் பதிவு செய்கிறது.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eஉணவின் மணம் நினைவுகளைத் திறக்கும்:\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eஒரு சுவை, ஒரு வரலாற்றைச் சொல்லும்:\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eஒரு தட்டு உணவு, ஒரு சமூகத்தின் முகமாக மாறும்.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eஇந்த உண்மையை உணர்த்தும், தமிழில் அரிதாகக் காணப்படும் உணவு - பண்பாட்டு இலக்கியம் இது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47737137987820,"sku":null,"price":498.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/93122ac9695dfcd934bccebff939e23a.webp?v=1781261666"},{"product_id":"ஜோனதன்-லிவிங்ஸ்டன்-என்கிற-கடற்பறவை","title":"ஜோனதன் லிவிங்ஸ்டன் என்கிற கடற்பறவை","description":"","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47737141100780,"sku":null,"price":112.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/97b6f663ae75dfb6f1eee801972c7839.webp?v=1781262107"},{"product_id":"பார்பர்-நாமா","title":"பார்பர் நாமா","description":"","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47737141231852,"sku":null,"price":141.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/PAARBARNAAMA.jpg?v=1781261894"},{"product_id":"முப்போகம்","title":"முப்போகம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eநம் நிலம் -  எல்லா மாற்றங்களையும் தாண்டி எந்த காலத்திலுமே சாதியத்தை வேரோடு பற்றியிருக்கிறது என்பதைப் பேசும் இக்கதை, கூர்மையான பெண் கதாப்பாத்திரங்கள் வழி ஒரு தட்டையான சமூகத்தை உட்புறம் நின்று அவலத்தை உணரும்படியான வாசிப்பைக் கோரும் நாவல் இது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47737142903020,"sku":null,"price":122.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/a27347428d0fc5aa3306f997ed694395.webp?v=1781262482"},{"product_id":"கிளாஸிக்-டச்","title":"கிளாஸிக் டச்","description":"","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47737144541420,"sku":null,"price":122.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/634a60e85e2d4998450ef4e4adf6bef6.jpg?v=1781262850"},{"product_id":"வீரத்-திருநங்கை","title":"வீரத் திருநங்கை","description":"\u003cp\u003e\u003cspan\u003eபதினெட்டு நாட்கள் நடந்த குருஷேத்திரப் போரில், ஆணுமல்லாத, பெண்ணுமல்லாத சிகண்டியின் அம்பினால் வீழ்த்தப்பட்டுப் படுக்கையில் கிடந்த பிதாமகன் பீஷ்மரின் எண்ணவோட்டங்களாக இக்கதை விரிகிறது. மேலோட்டமாகப் பங்காளிகள் ஈண்டைக் கதை என்பது பரவலாகத் தெரிந்ததுதான் என்றாலும், இக்கதையினூடாக அக்காலத்திய நாட்டு நிலவரம், அரசர்களின் போக்கு, அங்கு பெண்கள் எந்த நிலையில் வைக்கப்பட்டிருந்தார்கள், சமுதாய அமைப்பு, ஆட்சி செய்தவர்களின் முதன்மை நோக்கம் போன்ற அனைத்தும் அலசப்படுகின்றன. பிதாமகனிலிருந்து, பாண்டவர், கௌரவர், கர்ணன், கண்ணன், பரசுராமன், சால்வன், எனப் பலப்பல ஆண்கள் கதையினூடாக இருந்தாலும், கதையின் முதன்மையிடம் 'அம்பை' என்ற காசி அரசனின் மகளுக்கே உரித்தாகும். அவளே இப்புதினத்தின் தலைவி.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47737147425004,"sku":null,"price":329.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/VEERATHIRUNANGAI.jpg?v=1781263082"},{"product_id":"ஙப்-போல-வளை-ஒரு-யோக-புத்தகம்","title":"ஙப் போல வளை - ஒரு யோக புத்தகம்","description":"","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47737147490540,"sku":null,"price":281.06,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/b24d72e214aef2e2e80cf478cecc1f5d.png?v=1781263062"},{"product_id":"லைசிறந்த-கிராஃபிக்-நாவல்கள்-பாகம்-1","title":"தலைசிறந்த கிராஃபிக் நாவல்கள் பாகம் - 1","description":"","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47737148932332,"sku":null,"price":282.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/THALAIGRA.jpg?v=1781263546"},{"product_id":"கிராஃபிக்-நாவல்-அறிந்துகொள்ள-வேண்டிய-ஆளுமைகள்-பாகம்-1","title":"கிராஃபிக் நாவல் – அறிந்துகொள்ள வேண்டிய ஆளுமைகள் (பாகம் - 1)","description":"","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47745272873196,"sku":null,"price":329.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/GRAPHICSARINTHU.jpg?v=1781497180"},{"product_id":"மைலோ-பிற-கதைகள்","title":"மைலோ \u0026 பிற கதைகள்","description":"","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47745284833516,"sku":null,"price":206.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/MYLO.jpg?v=1781497535"},{"product_id":"குப்பிலி-பத்மா","title":"குப்பிலி பத்மா","description":"\u003cp\u003e\u003cspan\u003eஇந்தியா போன்ற நாட்டில் இருந்து எழுதும் பத்மாவின் கதைகளில் வரும் பெண்கள் நாகரிகமாகவும் அறிவுரீதியாகவும் ஆண்களைத் தோற்கடிக்கிறார்கள். ஆண், பொருளாதார வளர்ச்சியை நோக்கி குடும்பத்தில் வளரும் குழந்தைகளுக்காக - போகும் கட்டத்தில் அதனை எதிர்த்து ஆணைத் தன்னுடைய சொல்படி கேட்க வைக்கிறாள் பெண். அவளுக்குப் பொருளாதாரத்தோல்விகூட ஒரு வகை பெண்ணிய நியாயமாகப்படுகிறது. அவள் தனக்குள்ளே சிரிப்பது கேட்கிறது. அப்படி ஆணைத் தோற்கடிப்பதைப் புதிய சமூக மதிப்பீடாக Social Value வாக ஒரு பெண் மாற்றுகிறாள்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47745296826604,"sku":null,"price":206.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/THIPILIPADMA.jpg?v=1781497906"},{"product_id":"ஸெல்மா-சாண்டாவின்-அலமாரிப்-பூச்சிகள்","title":"ஸெல்மா சாண்டாவின் அலமாரிப் பூச்சிகள்","description":"\u003cp\u003eசொந்த ஊர் மதுரை மாவட்டம், உசிலம்பட்டி.திண்டுக்களில் வசித்து வருகிறார். பொறியியல் பட்டதாரி. தற்போது திரைப்படத் துறையில் Visual Editor ஆக பணியாற்றி வருகிறார்.\u003c\/p\u003e\n\u003cp\u003eமுன் நம் காலத்தில் பல்வேறு நீதி கதைகளின் காரணமாக அஞ்சி தவறவிட்டதை கண்டுபிடித்தவன் இப்பிரதிகளின் படைப்பாளியான லட்சுமிஹர். காலமற்ற இடத்தில் ஒரு மையமற்ற விளையாட்டாகவே நம்மை கடந்து செல்லும் இப்படைப்புகளை ஒருங்கிணைக்கும் இடமாக இயற்கை இயல்பாக கலந்திருக்கிறது. இதற்கு தானே அத்தனை தத்துவங்களும், கோட்பாடுகளும், வரலாறுகளும், அறிவியல் இயக்கங்களும் இவ்வுலகில் பாடுபட்டுக் கொண்டிருக்கின்றன. எங்கும் முதல் குருத்துகள் முளைவிட்டு கொண்டிருக்கின்றன. ஆசிரியர்க்கு இது முதல் தொகுப்பெனினும் அப்பாலும் இப்பாலும் நகரும் இக்கதைகள் தமிழுக்குப் புதியது.\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47745301545196,"sku":null,"price":159.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/HELMASANDAVIN.jpg?v=1781498500"},{"product_id":"கொத்தாளி","title":"கொத்தாளி","description":"\u003cp\u003e\u003cspan\u003eஇது யூசுப்பின் ஆறாவது நாவல். டாக்கு ஃபிக்சன் என்று தமிழில் ஒரு வகைமை எழுத்தை முன்வைத்து புவிசார் அரசியலை இத்தனை வீரியத்துடனும் சுவாரஸ்யம் குன்றாமலும் எழுதிச் சென்றிருக்கிறார்.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eஒரு தாய்வழிச் சமூகத்தின் கதை வழியாக சூழலியல், வரலாறு, மானுடவியல், மொழியியல் என வெவ்வேறு துறைகளின் ஆவணங்களைக் கொண்டு சாதியத்தின் கொடூரமான உள்ளடுக்குகளையும், சாதிய வன்முறைக்குப் பின் இருக்கும் அரசியலையும் களமாகக் கொண்டிருக்கும் நாவல். ஒரே மூச்சில் வாசிக்கக் கூடிய க்ரைம் திரில்லர் என்றாலும் தற்காலத்தில் பெரிதும் கவனம் பெறாத ஒரு கார்ப்பரேட் ஊழலையும், நாள்தோறும் பெட்டிச்செய்திகளில், ஒரு குறிப்பிட்ட பகுதியில் இடம்பெறும் சாதியச் சண்டைகள், வன்முறைகளுக்கான அடிப்படைக் காரணத்தையும் துப்பறியும் நாவலாக அமைந்துள்ளது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47745306231020,"sku":null,"price":272.6,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/KOTHALI.jpg?v=1781498830"},{"product_id":"மருள்","title":"மருள்","description":"","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47745337393388,"sku":null,"price":112.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/d04a0a005819a6990951e9f1f83462ae.jpg?v=1781501067"},{"product_id":"ஜப்பானிய-மங்கா-காமிக்ஸ்-அறிமுகமும்-ஆளுமைகளும்","title":"ஜப்பானிய மங்கா காமிக்ஸ் – அறிமுகமும் ஆளுமைகளும்","description":"\u003cp\u003e\u003cspan\u003eகடந்த இரு தசம ஆண்டுகளாக உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து வெளிவரும் காமிக்ஸ் மற்றும் கிராஃபிக் நாவல்களைத் தொடர்ச்சியாக படித்து வருபவன் என்ற வகையில் ஜப்பானிய காமிக்ஸ் புத்தகங்களான Manga-வின் மீது தீராக்காதல் ஏற்பட்டு விட்டது என்றே சொல்லலாம். பிரான்சின் பொந்-தெஸினி, இத்தாலியின் லிப்ரோ அ ஃபொமிட்டி, அமெரிக்காவின் கிராஃபிக் நாவல்கள் \u0026amp; OEM, கொரியாவின் மன்வா, இங்கிலாந்தின் காமிக்ஸ் என்று பல தரப்பட்ட புத்தகங்களுடனான அறிமுகம் ஆங்கில மொழியாக்கத்துடன் நடந்திருந்தாலும் உலக காமிக்ஸ் மற்றும் கிராஃபிக் நாவல்கள் சந்தையையே தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஜப்பானிய மங்காவின் மீதான ஆர்வம் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக்கொண்டே வருகிறது.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eபதின்ம வயதினர் முதல் 25 வயதுள்ள இளையோர் அனைவருமே மங்காக்களைத்தான் முதலில் படிக்க ஆரம்பிக்கின்றனர். அதன்பிறகுதான் காமிக்ஸ் \u0026amp; கிராஃபிக் நாவல்கள் என்று வாசிப்பின் பரப்பு அதிகரிக்கிறது. ஒரு திரைப்பட ஆந்தாலஜியில் மங்கா என்றால், அழகான பெண், கார்ட்டூன் என்று அறிமுகம் செய்தபோது, தமிழில் உறுதியாக இதைப்பற்றிய ஓர் அறிமுகக் கட்டுரையை எழுத வேண்டும் என்று முடிவெடுத்தேன். இப்புத்தகத்தில் மங்கா பற்றிய அறிமுகம், டாப் 10 மங்கா காமிக்ஸ்கள், ஆளுமைகள் என்று மங்காவைப் படிக்க நினைப்பவர்களுக்கான வழிகாட்டியாக இருக்கும் என்று நம்புகிறேன்.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eஎன்னுடைய வழக்கமான பாணியில் ஸ்பாய்லர் இல்லாமல் ஒவ்வொரு கட்டுரையையும் கதை உருவான பின்னணி, உருவாக்கத்தில் இருந்த சுவையான தகவல்கள், இது எதைப் பற்றிய கதை, என்ன ஜான்ர என்று பல விஷயங்களையும், மிகவும் முக்கியமாக ஏன் இந்தக் கதையைப் படிக்க வேண்டும் என்றும் எழுதி இருக்கிறேன். ஓவியங்களில், வண்ணங்களில், புத்தக அமைப்பில் இருக்கும் அழகியலையும் நான் ரசித்த விஷயங்களையும் தனியாகக் குறிப்பிட்டிருக்கிறேன்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47745341784300,"sku":null,"price":150.4,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/294b2a889875c389903fafb91cbef520.webp?v=1781501494"},{"product_id":"இருமுனை-1","title":"இருமுனை","description":"\u003cp\u003e\u003cspan\u003eகதையின் பிற்பகுதியில் தோன்றும் கதாப்பாத்திரங்களும் புனைவுகளும் தன் வாலை தானே விழுங்கும் பாம்புகளாக முன் கதையினை விழுங்கி உருமாற்றிவிடுவதாக எண்ணினான், பிரதியின் கதாப்பாத்திரங்களுடன் எதிர்வாதம் செய்து, தலை கனத்து பாதியிலே மூடிவிடுவதுண்டு, ஓவ்வொரு பிரதிக்குள்ளும் எழுதப்படாத பல லட்சம் கதைகள் வௌவால்களால தொங்கிக் கொண்டிருக்கின்றன. எக்கதைக்கும் முடிவென்பதே இல்லையென்றும் அவ்வாறு முடிக்கப்படும் கதையானது ஆசிரியனுக்கு அக்கணத்தில் தோன்றும் முடிவுதானென்றும் அல்லது முடிக்க முடியாதவொன்றின் தொடக்கம் தானென்றும் அறிந்துகொண்டான்.இன்னும் வாசித்து முடிக்கப்படாத பல கதைகள் அவ்வறையில் சிதறிக்கிடந்தன.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47745348239596,"sku":null,"price":206.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/9a37a1b4834e8bd633069958c29f9f6a.jpg?v=1781501897"},{"product_id":"காயசண்டிகை","title":"காயசண்டிகை","description":"\u003cp\u003e\u003cspan\u003eஇளங்கோ கிருஷ்ணனின் முதல் கவிதைத் தொகுப்பு இது. பொதுவாக இவரது கவிதைகளின் மையச் சரடு, ஆட்டத்தின் விதிகளை அறியாத ‘சூதாட்டத்தின் காய்க’ளைப் போல நகர்த்தப்பட்டுக்கொண்டிருக்கும் இன்றைய சாமானிய மனிதனின் இயலாமை நிறைந்த பதற்றக் குரல். எனினும், தப்பித்தலறியாத இயலாமையின் தருணங்களிலும் துக்கத்தை உதற முனையும் மென்மையான கிண்டல் கலந்த குரல். காலம், சூழல் சார்ந்த குறுகிய எல்லைகளை உடைத்துக்கொண்டு திமிறியெழும் நவீன மனிதனின் சுதந்திரக் குரல். உரைநடையில் கவிதையை எழுப்பமுனையும் இன்றைய இளம் கவிஞர்களிடையே தனித்து ஒலிக்கிறது இளங்கோ கிருஷ்ணனின் கவிதைக் குரல்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47745352302828,"sku":null,"price":150.4,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/57d7c992d4e17fee0eb860abd376d50d.jpg?v=1781502119"},{"product_id":"சித்திரமும்-சரித்திரமும்-காமிக்ஸ்-உலகின்-திருப்பு-முனைகள்","title":"சித்திரமும் சரித்திரமும் காமிக்ஸ் உலகின் திருப்பு முனைகள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eகடந்த 18 ஆண்டுகளாக இந்தியா முழுவதும் பயணம் செய்து காமிக்ஸ் பற்றிய ஆவணப்படத்தைத் தயாரித்து வருகிறார், கிங் விஸ்வா. குறிப்பாக தமிழ் சிறுவர் இலக்கியம் மற்றும் காமிக்ஸ் குறித்தான அனைத்து விவரங்களையும் சம்பந்தப்பட்ட பதிப்பாளர், எடிட்டர், கதாசிரியர், மொழிபெயர்ப்பாளர் மற்றும் ஓவியர்கள் மற்றும் அவர்களது உறவினர்களை நேரில் சந்தித்து முழுமையான தகவல்களைத் தொகுத்து நூற்றுக்கணக்கான கட்டுரைகளை எழுதியுள்ளார்.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eதமிழில் வெளியான அனைத்து சிறுவர் இலக்கியம், சிறுவர் நூல்கள், காமிக்ஸ் மற்றும் அச்சில் வராத காமிக்ஸ்கள் என்று 10,000 புத்தகங்களுக்கு மேலாக சேகரித்த இவர்தான் தமிழ் காமிக்ஸ் உலகின் மிகப்பெரிய கலெக்டர் என்றும் அறியப்படுகிறார்.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eஒரு நிகழ்ச்சியில் இந்தியாவில் காமிக்ஸ் என்ற கலை ஏன் வளரவில்லை?\" என்று கேட்கப்பட்ட கேள்விக்கு கிங் விஸ்வா அளித்த பதில் \"டிம்பிள் கபாடியா\".\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eஇன்றைய 2K Kidsகளுக்கு இது Cliok Bait தலைப்பாகத் தோன்றினாலும் உண்மை அதுதான். \"ராமரின் தாயாரின் பெயர் என்ன?” என்ற வினாடி-வினா கேள்விக்கு மாணவர்கள் பதில் அளிக்கத் தடுமாறியதில் இருந்துதான் இந்தியாவின் காமிக்ஸ் என்று அறியப்பட்ட அமர் சித்ர கதா துவங்கியது. இதுபோன்ற பல முக்கியமான திருப்புமுனைகளையும், இப்புத்தகத்தின் நோக்கம். நிகழாத தருணங்களையும் ஆவணப்படுத்துவதே\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47745356267756,"sku":null,"price":244.4,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/06d4df19d9a754679cd6f1b05798e81d.webp?v=1781502303"},{"product_id":"கண்ணிநுண்-உயிர்த்தாம்பு","title":"கண்ணிநுண் உயிர்த்தாம்பு","description":"","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47745359085804,"sku":null,"price":169.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/kanninul.webp?v=1781502528"},{"product_id":"இன்னிசை","title":"இன்னிசை","description":"\u003cp\u003eஇசைக் கலைஞர்களின் வாழ்க்கைப் பாதை, அவர்களைக் கலைஞர்களாக்கிய தீர்மான கணங்கள், இசை உருவாகும் தருணத்தின் மாயை, மேலும் எந்தத் துறையிலும் ஈடுபாடும் அர்ப்பணிப்பும் இருந்தால் வெற்றியை அடைய முடியும் என்பதை உணர்த்தும், இசைத்துறையை அறிமுகப்படுத்தும் நூல் இது.\u003c\/p\u003e\n\u003cp\u003eமிக எளிய மொழியில் ஒவ்வொரு கலைஞனுக்கும் தன்னையறிதல் எனும் கணம் எவ்வாறு நிகழ்கிறது என்பதை ஆவணப்படுத்தும் அரிய கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. நூலாசிரியர் தனது சொந்த கருத்துகளை மிகக் கவனமாகத் தவிர்த்தும் அதே நேரத்தில் கட்டுரைகளை நிறைவு செய்ய உதவும் சிறிய தகவல்களை விட்டுவிடாமலும், இந்த நூலை வடிவமைத்துள்ளார்.\u003c\/p\u003e\n\u003cp\u003eமாணவர்களுக்கும் இசை ஆர்வலர்களுக்கும்; இசை என்றால் என்ன?' என்ற அடிப்படை கேள்வியுடன் பயணிக்க விரும்பும் அனைவருக்கும் இந்நூல் ஒரு சிறந்த தேர்வு. குறிப்பாக, பெற்றோர்கள் கட்டாயம் வாசிக்க வேண்டிய நூலாகவும் இன்னிசை திகழ்கிறது.\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47745359249644,"sku":null,"price":206.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/e8ad44d02c2b2f3a9227082d50afa5b3.webp?v=1781502696"},{"product_id":"கடவுள்-எனும்-ஸ்பைடர்மேன்","title":"கடவுள் எனும் ஸ்பைடர்மேன்","description":"\u003cp\u003eசாமி இல்லை, பூதம் இல்லை. சொர்க்கம் இல்லை, நரகம் இல்லை; அவை குறித்த கதைகள் இருக்கின்றன. ஸ்பைடர்மேன். சூப்பர்மேன், பிள்ளையார், அல்லாஹ். இயேசு போன்ற சூப்பர் ஹீரோக்கள் குறித்த கதைகள் மட்டுமே இருக்கின்றன. அந்தக் கற்பனைக் கதைகள் மனிதர்களைப் பயமுறுத்துகின்றன; அவர்களை ஒடுக்குகின்றன; பூஜை. புனஸ்காரங்கள், நோன்புகள் என்று நேர விரயம் செய்கின்றன. வன்முறைகளுக்கு இறை அங்கீகாரம் தருகின்றன.\u003c\/p\u003e\n\u003cp\u003eஅவற்றுக்கு மாற்றாக, நாம் வேறு கதைகளை உருவாக்குவோம். அவை மானுடம் சார்ந்து இருக்கட்டும். மன்னிக்கவும். அனைத்து உயிரினங்கள் சார்ந்தும் இருக்கட்டும். அந்தக் கதைகள் சடங்குகளை, விதிமுறைகளை, பூஜை புனஸ்காரங்களை முன்னெடுக்காது. உரிமைகளை, சுதந்திரத்தை, மகிழ்ச்சியை, நிம்மதியை, கொண்டாட்டங்களை முன்னெடுக்கும். அவற்றுக்கான கற்பனைக் கதைகளைப் பகிரும்.\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47745362755820,"sku":null,"price":300.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/0ec9daffa24c3702d0a5965da1027dd8.webp?v=1781502977"},{"product_id":"ஆர்ட்டிகிள்-29","title":"ஆர்ட்டிகிள் 29","description":"","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47745365442796,"sku":null,"price":300.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/29.webp?v=1781503380"},{"product_id":"தனிப்பெருங்கருணை","title":"தனிப்பெருங்கருணை","description":"","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47745369080044,"sku":null,"price":423.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/THANIPERUMKARUNAI.jpg?v=1781503636"}],"url":"https:\/\/centaram.com\/collections\/yaavarum-publishers.oembed?page=3","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}