{"title":"விகடன் பிரசுரம்","description":"","products":[{"product_id":"இது-தெரியாமப்-போச்சே","title":"இது தெரியாமப் போச்சே!","description":"\u003cp\u003e\u003cspan\u003eமாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின் ஊறுபாடு இல்லை உயிர்க்கு. (945) உடலுக்கு மாறுபாட்டைச் செய்யாத உணவை உண்ண வேண்டும். அதிலும் தன் மனம் விரும்பியபடி அல்லாமல் நோய் வராத அளவுக்கு அளவு வைத்து உண்ண வேண்டும். இப்படி உண்பதால் உயிருக்கு எந்த ஊறும் இல்லை என்கிறார் வள்ளுவர். ஆனால், மாறுபாடு ஏற்படுத்தாத இல்லாத உணவை தற்போது தேடித்தான் உண்ண வேண்டி யுள்ளது. எனினும் இப்போக்கை மாற்ற முடியும் என்கிற நம்பிக்கையைக் கொடுக்கிறது இந்த நூல். காய்கறிகளின் குணம், கீரைகளின் பலன், சத்துள்ள உணவு எது? என்னென்ன உணவுகளை உண்ண வேண்டும், எவற்றைத் தவிர்க்க வேண்டும் என்று தெளிவாக ஆசிரியர் குறிப்பிட்டிருப்பது இந்த நூலின் சிறப்பாகும். வரலாற்றுப் புகழ் வாய்ந்த நம் பாரம்பர்ய தாளிப்புப் பொருள்கள், மசாலாப் பொருள்கள், அவற்றுள் புதைந்திருக்கும் நன்மைகளை விட்டுவிட்டு மக்கள் துரித உணவுகளை நாடியதால் ஆரோக்கியத்தை இழந்துபோயினர். அவற்றை மீட்டெடுக்கும் வழிமுறைகள் ஏராளம் உள்ளது இந்த நூலில். நல்ல உணவு எது என்று தேடி, கண்டு, அதை உண்டு, உடலுக்கு ஆரோக்கியம் தந்து, உயிருக்கு வாழ்வளிப்போம்! வாருங்கள்... உணவின் ரகசியம் அறிய!\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47645616898284,"sku":null,"price":197.4,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/54f6ca33a2930b22893fe321b6e7453a.jpg?v=1779188542"},{"product_id":"லாபம்-தரும்-வேளாண்-வழிகாட்டி","title":"லாபம் தரும் வேளாண் வழிகாட்டி","description":"\u003cp\u003e\u003cspan\u003eநஞ்சையும் புஞ்சையும் செழித்து விளைந்த மண்ணில் இன்றைக்கு கான்கிரீட் விளைச்சலும், ரியல் எஸ்டேட் வியாபாரமும்! விவசாயப் பரப்புகள் வெகு வேகமாகக் குறைந்துவரும் இன்றையக் காலகட்டத்தில் விவசாய ஜீவன்களுக்குக் கைகொடுக்கும் விதமாக அரசு நிறைய திட்டங்களை அறிவித்து வருகிறது. செஞ்சோற்றுக் கடன் தீர்க்கும் கடமையாக இதுகுறித்து விவசாயிகளுக்கு விளக்க வேண்டிய பொறுப்பு எல்லோருக்கும் இருக்கிறது. அரசு சார்பாக, பயிர்க் கடன், அறுவடைக் கடன், கிணறு வெட்டக் கடன், கால்நடை வளர்க்கக் கடன், மானியங்கள் இப்படி ஏராளமான வசதிகள் இப்போது வந்திருந்தாலும், பெரும்பாலான விவசாயிகள், இந்தக் கடனை எப்படிப் பெறலாம், யாரிடம் பெறலாம் எனத் தெரியாமல் அல்லாடிக்கொண்டு இருக்கிறார்கள். இதற்கு வழிகாட்டும் விதமாக, பசுமை விகடன் இதழ்களில் தொடர்ந்து வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்புதான் இந்த ‘லாபம் தரும் வேளாண் வழிகாட்டி!’ எந்தெந்தப் பயிர்களுக்குக் கடன் தரப்படுகிறது, எவ்வளவு மானியம் தரப்படுகிறது, எந்த வங்கியை அணுக வேண்டும், யாரிடம் தொடர்புகொள்ள வேண்டும்... என்பன போன்ற அனைத்துத் தகவல்களையும் ஒன்றுவிடாமல் சேகரித்து எழுதி இருக்கிறார் பொன்.செந்தில்குமார். ஊருக்கெல்லாம் சோறுபோடும் விவசாயிகளுக்கு, அவர்களின் ஏக்கத்தைப் போக்கி, அலைச்சலை மிச்சப்படுத்தி, மேன்மேலும் விவசாயத் தொழிலில் மேன்மை அடைய இந்த நூல் நிச்சயம் துணைபுரியும்!\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47645681647852,"sku":null,"price":103.4,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/81a9e4982d0ea589cd53ed1109703b3d.jpg?v=1779189350"},{"product_id":"மருந்தென-வேண்டாவாம்","title":"மருந்தென வேண்டாவாம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eதற்போதைய தலைமுறையினரின் ஓர் அங்கமாக குதித்துவிட்டு ஆட்சி செய்கிறது நவீன உணவுமுறை. சுவைக்காகவும் மணத்துக்காகவும் விரும்பு உண்ணக்கூடிய - அவசர அடியில் சமைத்த உணவுகள், 2 மினிட்ஸ் உணவுகள் என சிறுவர்களையும் கவர்ந்திழுத்துக் கொண்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில் உணவு குறித்த விழிப்பு உணர்வு மக்களிடையே இப்போது பெருகிவருவது வரவேற்கத்தக்கது. ஃபாஸ்ட் புட், சாக்ரீம், கலர் மற்றும் பதப்படுத்தப்பட்ட மற்றும் இறுக்கமான உணவுகளை உண்டுவந்த மக்கள், அவைகளால் ஏற்பட்ட பின்விளைவுகளை உணர்ந்து இப்போது பாரம்பர்ய உணவுகளைத் தேடியும், ஃபிரஷ்ஆன பழங்கள் மற்றும் காய்கறி, கீரை உணவுகளை நாடியும் வருகின்றனர்.\u003c\/span\u003e\u003cspan\u003eஇந்த நூலை வாசிக்கும் இன்றைய தலைமுறையினரின் உணவுமுறைகள் இனி சிறப்பானதாக மாறும் என்பதில் சந்தேகமேயில்லை.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47648319996140,"sku":null,"price":136.3,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/91065e8bca965923f83f21b774ad95f9.jpg?v=1779255158"},{"product_id":"ஷீர்டி-சாயி-சந்நிதானம்","title":"ஷீர்டி சாயி சந்நிதானம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஉலகில் எல்லோருக்கும் எல்லாமும் கிடைப்பதில்லை. எதை எதையோ தேடி அலையும் மனம் துன்பத்தில் உழல்கிறது. அந்த மனம், 'மனித சக்தியைத் தாண்டி வேறொரு சக்தி நம் துன்பத்தைப் போக்குமா' என்று ஏங்குகிறது. அது எந்த சக்தி? 'கடவுள்' என்பது பொதுவான பதிலாக இருக்கிறது. வெவ்வேறு கடவுள்களோடு பல்வேறு மதங்கள் தோன்றின. பிற தேசங்களில் பொருள், இன்பம் என்கிற இரண்டு அம்சங்களோடே வாழ்க்கை முடிந்துவிடுகிறது. இந்தியாவில்தான் அறம், பொருள், இன்பம், இவை தவிர வீடுபேறு என்பதும் இருக்கிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47648438485228,"sku":null,"price":136.3,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/697d4d7f78217b495fd26a719e9a7024.jpg?v=1779260216"},{"product_id":"செய்-செய்யாதே","title":"செய்... செய்யாதே!","description":"\u003cp\u003e\u003cspan\u003eசெய்... செய்யாதே!\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cbr\u003e\u003cspan\u003eஎல்லோருக்கும் ஒரு கேள்வி இருக்கிறது.  ஆனால், எல்லோரது கேள்விகளுக்கும் பதில் இருக்கிறதா...?!\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cbr\u003e\u003cspan\u003e'நிச்சயம் இருக்கிறது' என்பதுதான் சத்குருவின் நம்பிக்கை தரும் பதில்.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cbr\u003e\u003cspan\u003eசிலருக்கு வாழ்க்கை பெரும் குழப்பம்தான்.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cbr\u003e\u003cspan\u003eஎதைச்செய்வது.... எதைச் செய்யாமல் இருப்பது.. என்று தெரியாமல் பலர் தவிக்கிறார்கள்.  எதைச் செய்தால் வாழ்க்கையின் சிகரத்தை எட்ட முடியும்?  எதைச் செய்யாமல் இருந்தால் வாழ்க்கையின் சிக்கல்களில் இருந்து தப்ப முடியும்?  நாம் சென்றுகொண்டிருக்கும் பாதை சரியான பாதைதானா?  நம்முடைய சிந்தனைகளும் சரியானதா?\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cbr\u003e\u003cspan\u003eவாழ்க்கை நமக்கு வசப்பட வேண்டுமானால், இப்படிப்பட்ட கேள்விகளைக் கடந்துதான் வரவேண்டியிருக்கிறது.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cbr\u003e\u003cspan\u003eவாழ்க்கை, பெரும் விசித்திரங்களையும் மாய வித்தைகளையும் தன்னுள் நிரப்பி வைத்திருக்கிறது.  அவற்றைப் புரிந்து கொண்டால்தான் தெளிவு கிடைக்கிறது.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cbr\u003e\u003cspan\u003eவாழ்க்கையை வளமாக அமைத்துக்கொள்ள எண்ணற்ற கேள்விகளுகு சத்குரு ஜக்கி வாசுதேவ் இந்த நூலில் தெளிவான பதில் தருகிறார்.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cbr\u003e\u003cspan\u003eஆனந்த விகடன் இதழ்களில் 'செய்... செய்யாதா!' என்ற தலைப்பில் தொடராக வெளிவந்து, வாசகர்களின் அமோக வரவேற்பைப் பெற்ற இந்த கேள்வி-பதில் பகுதி, இப்போது நூல் வடிவில் உங்கள் கைகளில்!\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cbr\u003e\u003cspan\u003eஅனைவரது வாழ்க்கையும் வாசமிகு பூந்தோட்டமாக இந்த நூலில் வழி காட்டுகிறார் சத்குரு.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cbr\u003e\u003cspan\u003eவாழ்த்துக்கள்!\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cbr\u003e\u003cspan\u003e-ஆசிரியர்\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47648517914860,"sku":null,"price":136.3,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/jpg.jpg?v=1779263908"},{"product_id":"ஜீன்-ஆச்சர்யம்","title":"ஜீன் ஆச்சர்யம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஏன் மாமரத்தில் மாங்காய்தான் காய்க்க வேண்டுமா? ஆப்பிள் காய்க்கக் கூடாதா? கோழி ஏன் குட்டி போடுவது இல்லை, ஒட்டகம் ஏன் முட்டை போடுவதில்லை? இவை யெல்லாம் முட்டாள்தனமான கேள்வியாக இருக்கலாம். ஆனால் இவையெல்லாம் மரபியலின் மகத்தான மர்மங்கள். மரபியலைப் பற்றிய ஞானம் வெகு காலத்துக்கு முன்பிருந்தே முன்னோர்களால் கையாண்டிருப்பதும் உண்மையே. இதுதான் ‘மரபியல்’ என்று தெரியாமல். ஆதிகால மனிதன், தன் குழந்தை தன்போலவே இருப் பதைக் கண்டறியும்போது, நாகரிகம், கலாசாரம், பண்பாடு என வளர்ச்சியடையும்போது இதன் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டதன் பிறகே மரபியல் கண்டுபிடிப்பு உருவானது. முதன்முதலில் மரபியல் குறித்த கேள்வியை எழுப்பிய அறிஞர்கள் பலரது ஆராய்ச்சியில் மனிதன் உருவாவதில் ஆண் பெண் இருவரின் சமபங்கு இருக்கிறது. எப்படி ஆண் பெண் இனங்கள் உருவாகிறது? - எனத் தொடங்கிய கண்டுபிடிப்பு, விலங்கினங்கள், தாவர இனங்களிலும் மரபியல் சோதனை மேற்கொள்ளப்பட்டு ஆராய்ச்சியாக மாறி, பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டு ஜீன்களுக்குள் ஒளிந்திருக்கும் ஆச்சர்யமான தகவல்களை புலனாய்வு செய்து, நமக்குப் பொக்கிஷமாகக் கொடுத்திருக்கிறார் ஆசிரியர். சிக்கலான அறிவியல் அடிப்படைகளை எளிய மனிதர்களும் புரிந்துகொள்ளும்படி அமைத்திருப்பது இந்நூலின் சிறப்பம்சமாகும். நான் யார்? எப்படி உருவானேன்? எங்கு உருவாக்கப் பட்டேன்? என்கிற ஒரு மனிதன் யூகிக்க முடியாத ரகசியங்கள் ஜீன்களால்தான். \u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47729144856812,"sku":null,"price":150.4,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/JUNE2.jpg?v=1781156781"},{"product_id":"விந்தைமிகு-மருத்துவம்","title":"விந்தைமிகு மருத்துவம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஉண்ணும் உணவு முறையாலும் உணவுப் பொருள்களாலும் பசியை மட்டுமின்றி, வந்த பிணியை விரட்டியும், நோய் வராமல் காத்தும் கொண்ட பக்குவத்தை அறிந்திருந்தது நம் தமிழ்ப் பாரம்பர்யம். காய்கறிகளிலும் கீரைகளிலும் விதைகளிலும் மருத்துவக் குணங்கள் இருப்பதை நன்கு அறிந்துவைத்து, உணவாக உண்டு ஆரோக்கியமாக வாழ்ந்தனர் நம் முன்னோர். உணவே மருந்து என்ற நிலை மாறி, உணவே விஷமாகும் விபரீத சூழ்நிலையில்தான் இன்றைய தலைமுறை உள்ளது. இதனால், தமிழர்களின் ஆதி மருத்துவ முறையான சித்த மருத்துவத்திற்கு, இளம் தலைமுறையைத் திருப்பவேண்டியது அவசியம். அசுத்தமான தண்ணீரைச் சுத்தப்படுத்தி அதைப் பருகும் நிலைக்குப் பக்குவப்படுத்தும் தேற்றான் கொட்டை முதல் காய்கள், அதன் விதைகள், கொட்டைகளில் உள்ள மருத்துவக் குணங்கள் பற்றியும் அவற்றை எவ்வாறு மருந்தாகப் பயன்படுத்துவது பற்றியும் விளக்குகிறது இந்த நூல். மூளையையும் இதயத்தையும் பலப்படுத்தி நினைவாற்றலைப் பெருக்கும் கடுக்காய், மண்ணீரல், கல்லீரல் தொடர்பான நோய்களுக்கு மருந்தாகும் சுண்டைக்காய்.. இப்படி இயல்பாய்க் கிடைக்கும் காய்கள், விதைகள், கொட்டைகளிலிருந்து நம் வீடுகளிலேயே எளிய முறையில் மருந்துகள் தயாரித்து பயன்பெற வழிசொல்லும் நூலிது. காய், விதை, கொட்டைகளின் மருத்துவக் குணங்களை அறிந்துகொண்டு ஆரோக்கியம் பெறுங்கள்!\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47736331763948,"sku":null,"price":183.3,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/743dd02ca28afeab6844c87c89d88ad9.jpg?v=1781246128"},{"product_id":"ஆறாம்-திணை-பாகம்-2","title":"ஆறாம் திணை - பாகம் 2","description":"\u003cp\u003e\u003cspan\u003eஆறாம் திணை முதல் பாகம் ஏற்கெனவே புத்தகமாக வெளியிடப்பட்டு, அதன் தொடர்ச்சியான இரண்டாம் பாகம் இது. தற்காலத்தில் நாம் உண்ணும் உணவே நோய்களை உண்டாக்குகிறது. அதைத் தவிர்த்து நம் பாரம்பரிய உணவுகளைக் கொஞ்சம் அக்கறையுடன் உண்டாலே ஏராளமான நோய்கள் வராமல் காக்கலாம் என்பதை நூல் ஆசிரியர் மருத்துவர் கு.சிவராமன் முதல் பாகத்திலிருந்து தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். தற்காலத்தில் பொருத்தம் இல்லாத தயாரிப்பில் உருவான ‘பஃப்’ செய்யப்பட்ட பாக்கெட் நொறுக்குச் சிற்றுண்டிகளான, சிப்ஸ், கார வகைகள், ஏரியேட்டட் டிரிங்க்ஸ் ஆகியவற்றை உண்ணவே இளைஞர்கள், யுவதிகள், சிறுவர்கள் எல்லோரும் விரும்புகின்றனர். இவற்றால் உடலுக்கும் பலம் ஏற்படுவதில்லை. இவை நோயையும் வரவழைக்கின்றன. நாம் எதை உண்ண வேண்டுமோ அதை உண்ணாமல் உண்ணத் தகாததை உண்கிறோம்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47866089701612,"sku":null,"price":211.5,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/ANNAMAKKARAI.jpg?v=1782809720"},{"product_id":"ஆறாம்-திணை","title":"ஆறாம் திணை","description":"\u003cp\u003e\u003cspan\u003eநம் பாரம்பரிய முறைப்படி உணவைத் தயாரிக்கும்போது தாளிப்பதில் மருத்துவக் காரணங்கள் அடங்கியிருக்கின்றன. இப்போது சேர்ப்பதுபோல் தாளிப்புக்கு கடுகு, உளுத்தம்பருப்பு மட்டும் அந்தக் காலத்தில் போட்டதில்லை. திரிதோஷ சமப் பொருட்கள் என்ற பெயருடன் ஏலம், சுக்கு, வெந்தயம், பூண்டு, மஞ்சள், மிளகு, சீரகம், பெருங்காயம் எனும் எட்டுப் பொருட்கள்--தான் அந்தக் காலத்தில் சமையலுக்குத் தாளிக்கப் பயன்பட்டன. உணவுப் பொருட்களுக்கு இருக்கும் பிரத்யேகச் சுவையால் அவற்றுக்கு மருத்துவக் குணம் வருகிறது என்று சித்த, ஆயுர்வேத மருத்துவத் துறைகள் சொல்கின்றன. \u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47866094485740,"sku":null,"price":282.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/ARAMTHINAI.jpg?v=1782810069"},{"product_id":"பாஸ்வேர்டு","title":"பாஸ்வேர்டு","description":"\u003cp\u003e\u003cspan\u003eவந்தோம், உணவு உண்டு, உறங்கி ஒரு நாள் இந்த உலகத்தை விட்டுப் போனோம் என்பது வாழ்க்கை அல்ல. அப்படி வாழ்ந்தவர்களுக்கே அந்த வாழ்கை சலிப்பைத்தான் தரும். காட்டில் நிலவாக, கடலில் மழையாக மனித வாழ்க்கையும் இருந்தால் யாருக்கு என்ன லாபம்? நம்மைச் சுற்றி நடப்பதைக் கவனித்து, வாழ்க்கை என்பது உயர்ந்த குணங்களுடன் வாழ்வதுதான் என்பதை உணர்ந்து, உயர்வாக நடப்பவர்களைப் போற்றி, அவர்களிடமிருந்து கற்று, அதன்படி ஒழுகி வாழ்வதும், கயவுச் சிந்தனைகளைத் தவிர்த்து வாழ்வதும்தான் வாழ்க்கை. அப்படி உயர்வாக வாழ்வது ஒன்றும் அவ்வளவு சுலபமானதல்ல. மனத் திண்மை ஒன்றால் மட்டுமே அது சாத்தியம்! அதுவே வீரம்! ஒரு நாள் என்பது எல்லோருக்கும் ஒன்றுதான். \u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47866099040492,"sku":null,"price":211.5,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/PASSWORD.jpg?v=1782810418"},{"product_id":"ஏன்-எதற்கு-எப்படி-ii","title":"ஏன்? எதற்கு? எப்படி? II\"","description":"\u003cp\u003e\u003cspan\u003e'சுஜாதா' என்ற வார்த்தைக்கு அறிவியல் தமிழ் அன்பர்களின் மத்தியில் அறிமுகம் எதுவும் தேவையில்லை. அதிலும், ஜூ.வி. வாசகர்களுக்கு சுஜாதா என்றதுமே 'ஏன்? எதற்கு? எப்படி?' தான் நினைவுக்கு வரும். ஆச்சரியமூட்டும் அறிவியல் உண்மைகளை மிக எளிதாக அவர் விளக்கும்போது 'ஜாடிக்கேற்ற மூடி' போல, குபீரெனக் கிளப்பிவிடுகிற நகைச்சுவை உவமானங்களும் உச்சக்கட்ட ரசனைக்கு உள்ளானவை. 'ஏன்? எதற்கு? எப்படி?' - முதல் தொகுதி இன்றைக்கும் பல இளைஞர்களின் விருப்பத்துக்குரிய ரெஃபரன்ஸ் புத்தகமாக விளங்குகிறது. தொடர்ந்து புதிய வாசகர்களும் அதை வாங்கிப் படித்துக்கொண்டே இருக்கிறார்கள். நீண்ட இடைவெளிக்குப் பிறகு, 'கேள்வி-பதில் பகுதியை மீண்டும் ஜூ.வி-யில் தொடங்கலாம்' என்று சுஜாதாவிடம் கேட்டபோது, 'நான் தயார்... ஆனால், கேள்விகளை எழுதி அனுப்புவதில் வாசகர்களுக்குப் பழைய ஆர்வம் இருக்குமா?' என்று நியாயமான சந்தேகத்தையும் எழுப்பினார். ஜூ.வி. வாசகர்கள் மீது நான் கொண்டிருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கை இம்முறையும் பொய்க்கவில்லை.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47866105397484,"sku":null,"price":329.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/ENETHARKU2.jpg?v=1782810908"},{"product_id":"ஏன்-எதற்கு-எப்படி","title":"ஏன்? எதற்கு? எப்படி?","description":"\u003cp\u003e\u003cspan\u003eஒரு நாள் சுஜாதாவுடன் பேசிக்கொண்டிருந்தபோது, ஜூ.வி-யில் அவர் எழுத்து இன்னமும் இடம்பெறாதது பற்றிப் பேச்சு திரும்பியது. ''ஜூ.வி-யில் தொடர்கதைகள் வெளியிடுவதில்லை என்பதால், வேறு மாதிரி சிந்தித்துச் செயல்படலாம். எனக்கும் புது அனுபவமாக இருக்கும்\" என்றார். பிறகு பல ஐடியாக்கள் பற்றிப் பேசியதில் விஞ்ஞானம் பற்றி ஒரு தொடர் ஆரம்பிக்கலாம் என்று முடிவானது. அதுவே கேள்வி-பதிலாக உருவெடுத்தது! வாசகர்களின் விஞ்ஞானக் கேள்விகளுக்கு இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து பதில் அளித்தார் சுஜாதா. ஜூ.வி_க்கு ஒரு பிரத்தியேக அணிகலனாக விளங்கியது இப்பகுதி. ''ஒவ்வொரு வாரமும் இப்பகுதிக்காக குறித்த நேரத்தை ஒதுக்கி எத்தனையோ புத்தகங்கங்களைப் படிக்க நேர்ந்தது! லைப்ரரிக்குப் பல முறை செல்ல வேண்டி வந்தது. சம்பந்தப்பட்ட அறிஞர்களைச் சந்திக்க வேண்டியிருந்தது\" என்று சுஜாதா மனநிறைவோடு ஒருமுறை குறிப்பிட்டிருக்கிறார்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47866117325036,"sku":null,"price":357.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/MANASERELAX.jpg?v=1782811195"},{"product_id":"வீரயுக-நாயகன்-வேள்பாரி","title":"வீரயுக நாயகன் வேள்பாரி","description":"\u003cp\u003eதன்னலமற்ற கொடை உள்ளத்தாலும், அன்புவழிப்பட்ட வாழ்வியல் மரபாலும் பாரியின் புகழ் தமிழ் நிலம் எங்கும் பரவியது. மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டியர்கள் அவன் புகழ் கண்டு வெதும்பினர். பறம்பு நாட்டின் நிலவளம் அவர்களின் கண்களை உறுத்தியது. பாரிக்கு எதிராகத் தனித்தனியே அவர்கள் மேற்கொண்ட போர் முயற்சிகள் கைகூடவில்லை. இறுதியில் மூவேந்தர்களும் ஒன்றிணைந்தனர். அவர்களின் கூட்டுப்படை பாரியின் பறம்பு நாட்டை அனைத்துத் திசைகளில் இருந்தும் ஒருசேரத் தாக்கியது. சின்னஞ்சிறு `டிராய்’ நகரின் மீது மொத்த கிரேக்கப் படையும் போர் தொடுத்ததைப் போலத்தான் இதுவும் நிகழ்ந்தது.\u003c\/p\u003e\n\u003cp\u003eபெரும் நிலப்பரப்பை ஆண்ட மூவேந்தர்களின் கூட்டுப்படை, ஒரு குறுநில மன்னனால் சிதறடிக்கப்பட்டது. அதன் பின் மூவேந்தர்களும் ஒன்றாய் சதிசெய்து, வஞ்சினம் நிகழ்த்தி, பாரியின் உயிர் பறித்தனர். வீரத்தால் சாதிக்க முடியாததை துரோகம் செய்து முடித்தது. இயற்கைக்கும் மனிதனின் பேராசைக்கும் இடையில் இன்று நடக்கும் போராட்டத்தின் ஆதிவடிவம்தான் வேள்பாரியின் கதை. திரும்பும் திசையெல்லாம் அருவி கொட்டும் குறிஞ்சி நிலத்தில், அந்த அருவி நீரினும் குழுமையுடை பாரியின் கரம்பற்றி நடக்க வாருங்கள்...\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47866124697836,"sku":null,"price":1880.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/VEL3.jpg?v=1782886577"},{"product_id":"இறையுதிர்-காடு-part-1-2","title":"இறையுதிர் காடு ( PART 1\u00262 )","description":"\u003cp\u003e\u003cspan\u003eசித்தர்கள் வாழ்வும் அவர்களின் செயல்பாடுகளும் அமானுஷ்யம் நிறைந்தவையாக இருக்கும். இன்றும் பொதிகை, பழநிமலை போன்ற இடங்களில் அவர்கள் அரூபமாக உலா வருவதாக தகவல்கள் உண்டு. அப்படிப்பட்ட சித்தர்களில் போகர் தனித்துவமாகக் கருதப்படுகிறார். ஏனெனில் பழநி முருகனின் சிலையை நவபாஷாணங்களால் உருவாக்கியவர் அவர் என்பதால். நவபாஷாண முருகன் சிலையை உருவாக்க போகர் என்னென்ன பாஷாணங்களைப் பயன்படுத்தினார், அதன் உறுதித் தன்மைக்கு என்னவிதமான கலவைகளைக் கலந்தார், அதற்காக போகரின் சீடர்கள் எங்கெல்லாம் சென்று மூலிகைகளைச் சேகரம் செய்து வந்தனர் என அத்தனை விவரங்களையும் இந்த இறையுதிர் காட்டில், அன்று எனும் பகுதியில் அழகு தமிழ்நடையில் தந்துள்ளார் நூலாசிரியர். அத்துடன் அன்று போகர் செய்த ஒரு நவபாஷாண லிங்கத்தையும் இன்று நடக்கும் சம்பவங்களையும் தொடர்புப்படுத்தி, அன்று இன்று என்ற இரு நிகழ்வுகளையும்; விறுவிறுப்போடும் திடீர் திருப்பங்களோடும் படிக்கப் படிக்க பரபரப்புத் தொற்றிக்கொள்ளும் எழுத்து நடையில் இணைத்திருக்கிறார் இந்திரா செளந்தர்ராஜன. ஆனந்த விகடனில் தொடர்ந்து 87 வாரங்கள் வெளிவந்து வாசர்களின் அமோக வரவேற்பைப் பெற்ற இறையுதிர் காடு, இரண்டு அழகிய நூல்களாக உருப்பெற்றுள்ளது. போகர் செய்த நவபாஷாண முருகன் சிலை வரலாற்றை அறிய இறையுதிர் காட்டில் இனி உலவுங்கள்!\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47866136232172,"sku":null,"price":1316.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/ELAI3.jpg?v=1782813625"},{"product_id":"அணிலாடும்-முன்றில்","title":"அணிலாடும் முன்றில்!","description":"\u003cp\u003e\u003cspan\u003eநேசமான எழுத்தாளராகவும், நயமான கவிஞராகவும், தமிழ் இலக்கிய உலகிலும் திரைத் துறையிலும் தனக்கெனத் தனி முத்திரை பதித்தவர் கவிஞர் நா.முத்துக்குமார். கூட்டுக் குடும்பங்கள் முற்றிலுமாக சிதைந்துவரும் இன்றைய காலகட்டத்தில், குடும்ப உறவுகளின் உன்னதமான பண்புகளை இந்த நூலில் வடித்திருக்கிறார் கவிஞர். கூட்டுக் குடும்பத்தில் இருக்கும் ஆனந்தம் எல்லை இல்லாதது. பொருளாதாரப் புயலில் சிக்கிச் சிதைந்த குடும்பங்கள், தனித்தனிக் குடும்பங்கள் ஆன பிறகு, மீண்டும் தங்கள் பழைய உறவுகளை நினைத்து ஏங்கித் தவிப்பதைப் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். இப்படி, அம்மா, அப்பா, அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, தாய்மாமன், அத்தை, சித்தி, சித்தப்பா... என உறவு விழுதுகளைத் தாங்கி நிற்கும் ஒரே ஆணிவேர் - அன்பு! இதன் அடிப்படையில், குடும்ப உறவுகளிடையே நிகழ்ந்த வாழ்வியல் உணர்வுகளை, நவீனத் தமிழ் நடையில் அனுபவக் கட்டுரைகளாகச் செதுக்கி இருக்கிறார். ஆனந்த விகடன் இதழ்களில் ‘அணிலாடும் முன்றில்!’ தொடராக வந்தபோது, மனம் நெகிழப் படித்த வாசகர்கள் பலர், தங்கள் உறவுகளைத் தேடிச் சென்ற அனுபவங்களை கடிதங்கள் மூலமாகவும், தொலைபேசி மூலமாகவும் ஆனந்தக் கண்ணீர்விட்டுப் பதிவுசெய்திருக்கிறார்கள். தமிழ் இலக்கிய உலகில் குடும்ப உறவுகளைப்பற்றிய முழுமையான ஆவணமாக வெளிவந்திருக்கும் இந்த நூல், தமிழ் மக்களிடையே அமோக ஆதரவைப் பெறுவது உறுதி!\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47866138001644,"sku":null,"price":188.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/ANILADUMMUCHIL.jpg?v=1782812607"},{"product_id":"மனசே-ரிலாக்ஸ்-ப்ளீஸ்","title":"மனசே, ரிலாக்ஸ் ப்ளீஸ்! PART 1","description":"\u003cp\u003e\u003cspan\u003e'அதெப்படி... எங்கள் மனங்களை அரித்துக் கொண்டிருக்கிற கேள்விகளுக்கெல்லாம் சொல்லி வைத்தாற்போல் இவர் பதில் தருகிறார்?'\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cbr\u003e\u003cspan\u003eவிகடனில் 'மனசே, ரிலாக்ஸ் ப்ளீஸ்!' தொடரை சுவாமி சுகபோதானந்தா துவங்கியதிலிருந்தே வாரந்தோறும் வாசகர்களிடமிருந்து வியப்புடன் எங்களுக்குக் கடிதங்கள் வந்துகொண்டே இருக்கும்.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cbr\u003e\u003cspan\u003e'ஆமாம் சுவாமிஜி... எங்களுக்கும்தான் இது புரியவில்லை! அதெப்படி... இருக்கிற இடத்திலிருந்தே வாசகர்களின் மனங்களைப் படித்துவிட்டு, உங்களால் அத்தியாயங்களை எழுத முடிகிறது?' என்று சுவாமி சுகபோதானந்தாவிடமே நாங்கள் ஒரு முறை கேட்டோம்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47866147504364,"sku":null,"price":258.5,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/MANASE1.jpg?v=1782813067"},{"product_id":"மனசே-ரிலாக்ஸ்-ப்ளீஸ்-பாகம்-ii","title":"மனசே, ரிலாக்ஸ் ப்ளீஸ்! - பாகம் II","description":"\u003cp\u003e\u003cspan\u003e'அதெப்படி... எங்கள் மனங்களை அரித்துக் கொண்டிருக்கிற கேள்விகளுக்கெல்லாம் சொல்லி வைத்தாற்போல் இவர் பதில் தருகிறார்?' விகடனில் 'மனசே, ரிலாக்ஸ் ப்ளீஸ்!' தொடரை சுவாமி சுகபோதானந்தா துவங்கியதிலிருந்தே வாரந்தோறும் வாசகர்களிடமிருந்து வியப்புடன் எங்களுக்குக் கடிதங்கள் வந்துகொண்டே இருக்கும். 'ஆமாம் சுவாமிஜி... எங்களுக்கும்தான் இது புரியவில்லை! அதெப்படி... இருக்கிற இடத்திலிருந்தே வாசகர்களின் மனங்களைப் படித்துவிட்டு, உங்களால் அத்தியாயங்களை எழுத முடிகிறது?' என்று சுவாமி சுகபோதானந்தாவிடமே நாங்கள் ஒரு முறை கேட்டோம். 'இது மிகச் சுலபம்! அன்றாடம் நேரிலும் தொலைபேசியிலும் தபால் மூலமும் இ_மெயில் மூலமும் எத்தனையோ பேர் என்னிடம் தொடர்பு கொள்கிறார்கள். அவர்கள் தங்கள் குடும்பத்தில், பணியிடத்தில், நண்பர்களிடத்தில் எதிர்கொள்ளும் சங்கடங்களை என்னிடத்தில் சொல்லி, தீர்வு கேட்கிறார்கள். நானும் சொல்கிறேன்! என்னிடத்திலே பத்துப் பேர் வைக்கின்ற சொந்த வாழ்க்கைச் சிக்கல்கள்தான், பல்லாயிரக்கணக்கானவர்களின் பிரச்னையாக இருக்கிறது. அதைத்தான் நான் தொடர்ந்து எழுதுகிறேன்' என்றார்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47866246299884,"sku":null,"price":300.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/MANASE2.jpg?v=1782814402"},{"product_id":"நீயும்-நானும்","title":"நீயும் நானும்!","description":"\u003cp\u003e\u003cspan\u003eவிஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் \"நீயா நானா'வில் சூடான விவாதங்களை எதார்த்தமாக ஒவ்வொரு வாரமும் நிகழ்த்திக் கொண்டிருப்பவர் கோபிநாத். ஆனந்த விகடனில் \"நீயும் நானும்' என்ற தலைப்பில் எழுதிய \"இளைஞர் 45' தன்னம்பிக்கைக் கட்டுரைகளின் தொகுப்பு. உலகைக் கட்டியாளும் அறிவையும், அதிகாரமும் கொண்ட இந்திய இளைஞர்களுக்குத் தன்னம்பிக்கை ஊட்டத் தன்னாலான முயற்சிகளைத் தரும் மற்றொரு இளைஞரின் படைப்பு. இதிலுள்ள கட்டுரைகள் ஒவ்வொன்றும் ஒரு ரகம். தன்னம்பிக்கை, சீரிய பண்புகள், போராட்ட குணம், வெற்றி, சமூக அக்கறை, ஈகோ எனப் பல்வேறு தலைப்புகளில் எளிய, யதார்த்தமான உதாரணங்களுடன் கூடிய இந்நூல், வாழ்க்கையில் முன்னேற விரும்பும் பல கோடி இளைஞர்களுக்கு ஒரு கலங்கரை விளக்கம். கோபத்தைக் குறை என்று சொல்பவர்கள் மத்தியில் கோபப்படுங்கள் - அது அடுத்தவர் காயத்துக்கான மருந்தாக இருக்கும் வரை என்று சொல்வதுபோல பல உதாரணங்களைத் தனக்கே உரிய பாணியில் பதிவு செய்திருக்கிறார் கோபிநாத். படிப்போரின் எண்ண வாயில்களை விசாலமாகத் திறந்து இதயம் வரை சென்று தாக்கும் அம்பு - நீயும் நானும்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47866251509996,"sku":null,"price":244.4,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/NEEUMNAANUM.jpg?v=1782814742"},{"product_id":"மனசே-ரிலாக்ஸ்-ப்ளீஸ்-1","title":"மனசே, ரிலாக்ஸ் ப்ளீஸ்!","description":"\u003cp\u003e\u003cspan\u003eபல லட்சக்கணக்கான விகடன் வாசகர்களால் வாரந்தோறும் விரும்பிப் படிக்கப்பட்டு மிகுந்த வரவேற்பையும் பாராட்டையும் பெற்ற ஒரு சிந்தனைத் தொடர் _ சுவாமி சுகபோதானந்தாவின் ‘மனசே, ரிலாக்ஸ் ப்ளீஸ்!’ சுவாமி சுகபோதானந்தா பற்றி ஒரு சில வார்த்தைகள்... பூர்வாசிரமப் பெயர் துவாரகாநாத். இப்போது சுகபோதானந்தா. இருபது ஆண்டுகால சந்நியாச வாழ்க்கை. சுவாமி சின்மயானந்தா, தயானந்த சரஸ்வதி என்று ஆரம்பித்து பலரிடம் சீடராக இருந்தார். ஆரம்ப காலத்தில் ஞானப் பசியோடு இமயமலைச் சாரலில் வருடக்கணக்கில் திரிந்தது உண்டு. எம்.ஏ. (தத்துவ இயல்) முடித்துவிட்டுத் துறவறம் பூண்டபோது இருபத்தைந்து வயது. இப்போது நாற்பது! ஓய்வு கிடைக்கும்போது அரை நிஜாருடன் பாட்மிட்டன் விளையாடுகிறார். மாருதி எஸ்டீம் காரை தானே ஓட்டுகிறார். \u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47866260127980,"sku":null,"price":305.5,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/MANASE.jpg?v=1782815058"},{"product_id":"காவல்-கோட்டம்","title":"காவல் கோட்டம்","description":"\u003cdiv\u003e\n\u003cp\u003eஇந்திய அரசு இலக்கியத்துக்கு வழங்கும் உயரிய விருதான\u003cb\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003cu\u003e''சாகித்ய அகடாமி விருது''\u003c\/u\u003e\u003c\/b\u003e\u003cspan\u003e \u003c\/span\u003eபெற்ற நாவல்.  ஒடுக்கப்பட்ட சமூகத்தின் உணர்வுகள் தாங்கிய வாழ்வியல் பெட்டகம்.\u003c\/p\u003e\n\u003c\/div\u003e\n\u003cp\u003eஆதிகாலத்தில் கூடி வாழ்ந்துகொண்டிருந்த மனித இனம் மாபெரும் சமூகமாக உருவெடுத்த பிறகு பிரிவுகள் ஏற்பட்டன. தொழிலின் அடிப்படையில் சாதிகள் பிரிக்கப்பட்டன என்று சொல்லப்பட்டு வந்த காலத்தில் களவும் ஒரு தொழிலாகிப் போனதுதான் பரிதாபம். ஒடுக்கப்பட்ட சமுதாயமொன்று களவு செய்வதை தனது தொழிலாக்கிக்கொண்டது. அந்த சமுதாயத்தின் முன்னோர்கள் காட்டிய வழியில் அந்த இனத்தின் வகையறாக்கள் பிரிந்தன. அந்த வகையறாக்களைத்தான் சமூகம், குற்றப் பரம்பரைகள் என அடையாளம் காட்டியது. வடஇந்தியாவில் சுமார் 300 ஆண்டு காலமாக ‘டக்கி’கள் எனப்படும் குற்றப் பரம்பரை மிகப் பெரிய வழிப்பறிக் கொள்ளைக் கூட்டமாக நடமாடி வந்தது. அவர்களது வாழ்வியல் என்பது பிறரை ஏமாற்றி அவர்களது சொத்துக்களை கொள்ளையிடுவது, அந்தப் பணத்தைக் கொண்டு சுகபோகங்களை அனுபவிப்பது என்பதே!\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47866261078252,"sku":null,"price":846.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/KAAVALKOTTAM.jpg?v=1782815318"},{"product_id":"சம்படி-ஆட்டம்","title":"சம்படி ஆட்டம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஎன் சம்படியாட்டம் முடியவில்லை! இந்த மண்ணில் பிறந்த நாள் முதலாய் உடல் முழுக்க சலங்கை கட்டிக்கொண்டவனின் ஆட்டம் அதற்குள் முடிந்துவிடுமா என்ன?\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47866296795372,"sku":null,"price":253.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/SAMPADIAATAM.jpg?v=1782815585"},{"product_id":"விரல்கள்-செய்யும்-விந்தை","title":"விரல்கள் செய்யும் விந்தை","description":"\u003cp\u003e\u003cspan\u003eமனிதனுக்கு வரும் நோய்களைக் குணமாக்கும் மருந்து நம் விரல்களிலேயே இருக்கிறது என்றால் விந்தையாக இருக்கிறதல்லவா? ஆம், விரல்களைக் கொண்டு செய்யும் முத்திரைகளால் நோய் விலகிவிடும் என்பதை கடவுளர்களின் விக்கிரகங்களைப் பார்த்தாலே புரியும். இயற்கையிலேயே சில முத்திரைகள் நம் வாழ்வோடு இணைந்திருக்கிறது. தாயின் வயிற்றில் இருக்கும் சிசு தன் இரண்டு கைகளையும் அழுத்தமாக மூடிப் பிடித்திருக்கும் முத்திரை, ஆதி முத்திரை. வெளிப்புற ஈர்ப்புகள் மற்றும் கவனச் சிதறல்களிலிருந்து விடுபட இந்த முத்திரை உதவுகிறது. இதுபோன்று ஒவ்வொரு முத்திரைக்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு. உடல், மனம் சார்ந்த அனைத்து நோய்களையும் நமது விரல்களால் செய்யும் முத்திரைகளால் சரிசெய்யலாம். முத்திரைகள் நமது விரல்கள் வழியே, ஐம்பெரும் சக்திகள் மற்றும் உயிர் ஆதாரங்களையும் தூண்டி நோய் நிலைகளைச் சரிசெய்கிறது. முத்திரை என்பது ஓர் உயர் யோகக்கலை, யோகாசனப் பயிற்சிகளின் உச்சம். முத்திரைக்கான பயிற்சியை முறையாகச் செய்து அதன்படி முத்திரைகளைச் செய்து வந்தால் நோய்களில் இருந்து விடுபடலாம் என்பதை விளக்கும் நூல் இது! டாக்டர் விகடன் மற்றும் சக்தி விகடனில் வெளிவந்தவை இப்போது நூல் வடிவம் பெற்றுள்ளது. விரல் செய்யும் விந்தைகளைப் பாருங்கள், பலன் பெறுங்கள்!\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47866559004908,"sku":null,"price":235.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/VIRALGAL.jpg?v=1782815903"}],"url":"https:\/\/centaram.com\/collections\/vikatan-prasuram.oembed","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}