{"title":"வண்ணநிலவன்","description":"","products":[{"product_id":"கடல்புரத்தில்","title":"கடல்புரத்தில்","description":"\u003cp\u003e\u003cspan\u003eதுளியை நுணுக்கமாகச் சித்திரிப்பதன் வழியாக, வெளியை அதன் விரிவோடு எழுப்பிக்காட்ட முயல்வது எழுத்தின் ஆதாரமான நோக்கங்களில் ஒன்று. இச் சிறுநாவலில் அந்த ரசவாதம் குறைந்த பக்கங்களுக்குள்ளாகவே நிகழ்ந்தேறியிருப்பதைக் காணலாம். ஒரு எளிய மீனவக் குடும்பத்தைப் பற்றியதாகத் தொடங்கும் கதையானது, முடியும் தருவாயில் அக்குடும்பம் வசிக்கும் கிராமத்தை, அது அமைந்திருக்கும் அகண்ட கரையை, அதற்கப்பால் விழிக்கெட்டாத தூரத்திற்கு விரிந்துகிடக்கும் கடலைப் பற்றின கதையாகவும் பெருகிவிடுகிற மாயம் எவ்விதப் பிரயாசையுமின்றி இயல்பாகவே நிகழ்கிறது. இது கடல்புரத்தைக் குறித்த கதை மாத்திரமல்ல; கடலைப் பின்புலமாகக் கொண்டு இயற்கைக்கும் மனிதனுக்கும், பழமைக்கும் புதுமைக்கும், தந்தைக்கும் மகனுக்கும், ஆணுக்கும் பெண்ணுக்கும், அன்பிற்கும் பகைக்கும், உடலுக்கும் உள்ளத்திற்கும் இடையிலான சிக்கலான பிணைப்புகளை, அவற்றில் விழுந்துவிடுகிற முடிச்சுக்களை, அவற்றை அவிழ்க்க முயன்று தோற்ற அலைகழிகிற மனத்தின் பாடுகளை எனப் பலதையும் குறித்து ஆதூரத்துடன் பேசுகிறது. முதல்பதிப்பு வெளியாகி முப்பதுக்கும் அதிகமான வருடங்கள் கடந்துவிட்டபோதிலும், இன்றும் வாசகர் கவனத்தைத் தக்கவைத்துக் கொண்டிருப்பது இந்நாவலின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47603238502636,"sku":null,"price":157.25,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/2d7c466e084a7413517e5fe39dcd4d49.jpg?v=1778058177"},{"product_id":"காலம்","title":"காலம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஅறுபதுகளின் இறுதியிலிருந்து ஒரு மூன்றாண்டுகள் ஒரு அட்வகேட்டிடம் வக்கீல் குமாஸ்தாவாகப் பணிபுரிந்தபோது நீதித் துறையுடன் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. பல்வேறுவிதமான மனிதர்கள், வழக்குக் கட்டுகள், நீதிமன்ற வளாகங்கள், கட்சிக்-காரர்கள் என அந்த மூன்று ஆண்டுகள் கழிந்தன. ஒவ்வொரு கட்சிக்காரரிடமும் ஒரு கதை இருந்தது. அவற்றையெல்லாம் எழுத இந்த ஆயுள் போதாது. இந்த நாவலுக்கு கருப்புக் கோட்டு என்ற தலைப்பை வைக்கத்தான் முதலில் உத்தேசித்திருந்தேன். ஆனால், வேறு சில காரணங்களுக்காக காலம் என்ற தலைப்பைத் தேர்ந்தெடுக்கும்படி ஆயிற்று. - வண்ணநிலவன்\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47632105603308,"sku":null,"price":112.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/270d9235588be83361e1c8df8f6bcf86.jpg?v=1778755244"},{"product_id":"அறக்கயிறு-அனுபவ-பகிர்வுகள்","title":"அறக்கயிறு-அனுபவ பகிர்வுகள்","description":"\u003cp\u003e\u003cspan\u003e'அறக்கயிறு’ ஒரு தனிமனிதன் தன் கடந்த காலத்தைத் திரும்பிப் பார்க்கும் நினைவோடையாகத்தான் தொடங்குகிறது. மெல்ல மெல்ல அது தமிழகத்திலும் அண்டை மாநிலங்களிலும் புதிய வரலாற்றைப் படைத்த, படைக்கும் சாதனையாளர்களின் வரலாற்றை இணைத்துக் கொண்டு ஓர் ஆற்றின் மிடுக்கோடு பயணிக்கிறது இப்புத்தகம். – பேரா. சாலமன் பாப்பையா\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47634188992748,"sku":null,"price":141.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/4ce77718fbac8c92ba4b2de3de8ee6e9.jpg?v=1778833749"},{"product_id":"சில-இயக்குநர்கள்-சில-திரைப்படங்கள்","title":"சில இயக்குநர்கள் சில திரைப்படங்கள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஇலக்கியத்தையும், சினிமாவையும் இக்கட்டுரைகள் முழுமையாகப் பிரதிபலித்து விட்டன என்றெல்லாம் நான் மார்தட்டிக்கொள்ள விரும்பவில்லை. இரு துறைகளுமே கடல் போன்றது. என்னால் இயன்றவரை, என் அறிவுக்கு எட்டிய வரை தொட்டுக் காட்டியிருக்கிறேன் என்று வேண்டுமானால் சொல்லலாம். இத்துறைகள் குறித்து எழுதுவதற்கு நிறைய இருக்கின்றன. சந்தர்ப்பம் வாய்த்தால் எழுதவும் ஆசை. -வண்ணநிலவன்\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47634200625388,"sku":null,"price":84.6,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/c4cb3469f3089ea4bcce5f16c4282871.jpg?v=1778834667"},{"product_id":"எண்ணமும்-எழுத்தும்","title":"எண்ணமும் எழுத்தும்","description":"\u003cp\u003e\u003cspan\u003eவண்ணநிலவனின் நேர்காணல்கள். பல்வேறு பத்திரிகைகளில் வெளியான பத்திகள், கட்டுரைகள், தமிழின் மூத்த எழுத்தாளர்களைய் பற்றிய எண்ணப் பதிவுகள் உள்ளடங்கிய தொகுப்பு நூல், மென்மையும் பூடகமும் நிறைந்த புனைவெழுத்திற்கு நேரெதிராக, உரத்த குரல் இவரின் அபுனைவுகளில் வெளிப்படுகிறது. ஒளிவுமறைவின்றி. தன் கருத்துகளைப் போட்டுடைக்கிறார். லயம் கூடிவரும் நல்ல எழுத்துகளை அனுபவிக்கும் ஒரு தேர்ந்த வாசகராகவும் இருப்பதால், நிர்தாட்சண்யமான இலக்கியப் பார்வைகளை அவரால் முன்வைக்க முடிகிறது.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eதமிழின் அபூர்வ எழுத்துக் கலைஞரான வண்ணநிலவனின் ஆளுமையைப் புரிந்துகொள்ள. பின்தொடர வழிகொடுக்கும் கட்டுரைகள் இத்தொகுப்பில் உள்ளன.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47634268061932,"sku":null,"price":188.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/4c0cb0cf318125850cedc0d3ed58a781.jpg?v=1778838058"},{"product_id":"பின்நகர்ந்த-காலம்","title":"பின்நகர்ந்த காலம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஇன்று ஒரு மகத்தான படைப்பாளியாக நம்மிடையே வாழ்ந்துவரும் வண்ணநிலவனின் இளமைக்காலப் பதிவு இந்நூல்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47638766387436,"sku":null,"price":263.2,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/b3b0716689f98a323e0b943e799fcb12.jpg?v=1779088431"},{"product_id":"வாக்குமூலம்","title":"வாக்குமூலம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eவண்ணநிலவனின் இந்த நாவல் தன்வரலாற்றுத் தன்மை கொண்டது. கடந்துபோன காலத்தின் நினைவுகூரலாகவும் கற்பனைக்கு எட்டாத வகையில் மாறிவிட்ட நிகழ்காலம் குறித்த சிந்தனைச் சரமாகவும் இரட்டைப் பாதைகளில் பயணிக்கிறது நாவல். கதைசொல்லி தன்னுடைய சிந்தனைகளை முன்வைத்தபடி செல்ல, கதைசொல்லியின் மனைவி கடந்தகாலம் குறித்த தன் நினைவுகளை அசைபோடுகிறார். நேற்றைய நினைவுகள், இன்றைய மாற்றங்கள் குறித்த நினைவேக்கங்களும் சிந்தனைகளும் என ஆண், பெண் ஆகியோரது பார்வைகளில் விரியும் நாவல் இது. காலமெனும் நெடுஞ்சாலையில் முன்னும் பின்னுமாக நிகழும் மன யாத்திரையின் பதிவுகள் நாவலின் கதையாடலாக உருமாறுகின்றன.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47651473457388,"sku":null,"price":122.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/97bf6e67536607c16c88c071b0642c77.jpg?v=1779345107"},{"product_id":"ரெயினீஸ்-ஐயர்-தெரு","title":"ரெயினீஸ் ஐயர் தெரு","description":"\u003cp class=\"MsoNormal\"\u003e\u003cspan\u003e-தெரு வெறும் சடமாய் நீண்டுகிடந்தாலும், அது மானுட இருப்பால் மகத்துவம் பெறுவதாக இருக்கிறது. தெருவும் தெருவாசிகளும் வேறுவேறாய் இயங்க முடிவதில்லை. ஒவ்வொருவரின் இரத்த நாளங்களிலும் தெருவின் பெயரும் கலந்தே ஓடுகிறது. அதற்கெனத் தனி ஒளியும் வரலாறும் உருவாகிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp class=\"MsoNormal\"\u003e\u003cspan\u003eஒரு தெரு எப்போது உயர்நிலைபெறுகிறது, அது ஏன் இலக்கியமாகிறது என்றால் இந்நாவலில் நடமாடும் ஒவ்வொரு கதாபாத்திரத்தாலும்தான் என்று உணர்ந்து கொள்ளலாம். இறகுகளால் வருடிவிடப்படுவது போன்ற எழுத்து நடையால் ரெயினீஸ் ஐயர் தெரு நம் உள்ளங்களில் நிறைகிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47654599164140,"sku":null,"price":131.6,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/93eac8971a04b3100a19ee8541071466.jpg?v=1779432574"},{"product_id":"எண்ணமும்-எழுத்தும்-1","title":"எண்ணமும் எழுத்தும்","description":"\u003cp\u003e\u003cspan\u003eவண்ணநிலவனின் நேர்காணல்கள். பல்வேறு பத்திரிகைகளில் வெளியான பத்திகள், கட்டுரைகள், தமிழின் மூத்த எழுத்தாளர்களைய் பற்றிய எண்ணப் பதிவுகள் உள்ளடங்கிய தொகுப்பு நூல், மென்மையும் பூடகமும் நிறைந்த புனைவெழுத்திற்கு நேரெதிராக, உரத்த குரல் இவரின் அபுனைவுகளில் வெளிப்படுகிறது. ஒளிவுமறைவின்றி. தன் கருத்துகளைப் போட்டுடைக்கிறார். லயம் கூடிவரும் நல்ல எழுத்துகளை அனுபவிக்கும் ஒரு தேர்ந்த வாசகராகவும் இருப்பதால், நிர்தாட்சண்யமான இலக்கியப் பார்வைகளை அவரால் முன்வைக்க முடிகிறது.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eதமிழின் அபூர்வ எழுத்துக் கலைஞரான வண்ணநிலவனின் ஆளுமையைப் புரிந்துகொள்ள. பின்தொடர வழிகொடுக்கும் கட்டுரைகள் இத்தொகுப்பில் உள்ளன.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47889891852524,"sku":null,"price":235.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/vannanilavan.jpg?v=1783054053"}],"url":"https:\/\/centaram.com\/collections\/vanna-nilavan.oembed","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}