{"title":"வம்சி பதிப்பகம்","description":"","products":[{"product_id":"முத்தியம்மா","title":"முத்தியம்மா","description":"\u003cp\u003e\u003cspan\u003eபொதுவாக என்னை பெண்ணெழுத்துக்களை நெருங்க விடாமற் செய்து விடுகிற இரண்டு பிரதான விஷயங்கள் மிகையான உணர்ச்சிகள், சூழலில் தேய்ந்து கிழிந்து போன செயற்கையான சொற்பிரயோகங்கள். இரண்டும் இந்த பதினான்கு கட்டுரைகளில் இல்லை. ஓரிடத்தில் மனசில் ஏறின பாரத்திற்கு அளவீடில்லை என்கிறார். அளவில்லை எனும் பொதுப்பதத்தை அளவீடில்லை என மாற்றிய கணத்தில் ஷைலஜா எனக்கு முக்கியமான எழுத்தாளராகப்படுகிறார். மொழிபெயர்ப்பாளராக மட்டுமே நானறிந்த ஷைலஜாவின் மொழி வல்லமை துலங்கி வந்திருக்கும் இக்கட்டுரைகள் அடுத்து அவர் எழுத வேண்டியது புனைவுகளே என்பதை பறைசாற்றுகின்றன. வாசகி, அண்ணி, அக்கா, அன்னை, ஆசிரியை, விவசாயி, பதிப்பாளர் என அவரெடுத்த பெண்ணின் பெருந்தக்க வடிவங்களில் எழுத்தாளர் என்பதும் முக்கியமானதாக அமையவேண்டுமென்பது என் ஆவல். \u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47628291506412,"sku":null,"price":84.75,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/86eaa2980e09d534c71ca0d46bff2222.jpg?v=1778663030"},{"product_id":"உஷ்ணராசி","title":"உஷ்ணராசி","description":"\u003cp\u003e\u003cspan\u003eஇரக்கமற்ற எதேச்சதிகாரத்தால் நசுக்கப்பட்ட, அதீத துணிச்சல்மிக்க எழுச்சியின் இதிகாசம், நிகழ்காலத்திலும் எதிரொலிக்கிறது. நுட்பமான புரிதலுடன் உணர்வுபூர்வமாக எழுதப்பட்டிருக்கிறது. நிச்சயம் வாசித்தேயாக வேண்டிய நூல். - அடூர் கோபாலகிருஷ்ணன். ஒடுக்கப்பட்ட பெண்களின் பிரதிநிதித்துவத்தோடு கேரளத்தில் மூண்டெழுந்த் போராட்ட நாட்களை விவருக்கும் நாவல். ஒரு தேசத்தின் உயிர்ப்பின் கதை. இரத்தம் கொதிக்கும் தாள்களின் இதிகாசம்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47628301238508,"sku":null,"price":705.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/f72fae3703b271222c81ff4140776248.jpg?v=1778663628"},{"product_id":"யானை-டாக்டர்","title":"யானை டாக்டர்","description":"\u003cdiv id=\"Description\" class=\"w3-container w3-border city\"\u003e\n\u003cdiv align=\"justify\"\u003eசூழலியல் குறித்து உள்ளார்ந்த விருப்பமுள்ள இருதயங்கள் வாசிக்க வேண்டிய புத்தகம்… யானை டாக்டர் – தமிழில் மிக அதிகமாக மக்கள் பிரதியாக அச்சுப் பதிக்கப்பட்டு, ஒருத்தருக்கு ஒருத்தர் வாஞ்சையோடு பகிர்ந்துகொண்ட புத்தகங்களுள் ஒன்று இது. ஒரு எளிய கதை, காட்டின்மீதான நேசிப்பை அகத்துள் ஏற்படுத்துமா? என்ற கேள்வியை அறிவுச்சமூகம் எழுப்புமாயின், ஜெயமோகனின் யானை டாக்டர் கதையை நாம் துணிந்து முன்வைக்கலாம். கால்நடை டாக்டர் கிருஷ்ணமூர்த்தி, யானைகளின் உடல்நிலையைப் பேணுவதற்காக உருவாக்கிய விதிமுறைகள்தான் இந்திய வனவியல் துறையின் கையேடாக இன்றுள்ளது. முதுமலை யானைகள் புத்துணர்வு முகாமை முன்மொழிந்து, கோவில் யானைகளை வருடத்துக்குச் சில நாட்களாவது வனத்துள் உலவ வைத்தவர். உலக வனமருத்துவர்கள் பலருக்கும் மானசீக ஆசானாக இன்றளவும் நினைவில் இருப்பவர் யானை டாக்டர் கிருஷ்ணமூர்த்தி. எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய இப்புத்தகம், தன்னறம் நூல்வெளியின் வாயிலாக மறுஅச்சுப்பதிப்பு அடைந்த புத்தகமாக வெளிவந்திருக்கிறது. புத்தகத்தின் உற்பத்தி விலைக்கே நண்பர்களுக்கு அனுப்பிவைக்க உள்ளோம். சூழலியல் நிகழ்வுகளில், திருமணங்களில், இன்னும் பல சுபநிகழ்வுகளில் அன்பளிப்பாக இப்புத்தகம் மனிதர் தொட்டு மனிதருக்கு பரிமாற்றப்பட்டு வருகிறது. இன்னும் சேரவேண்டிய கரங்களும் நிறைய இருக்கிறது\u003c\/div\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e\n\u003c\/div\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47628331909356,"sku":null,"price":37.6,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/6999e9777869bd3444310c1f0bd1d18e.jpg?v=1778664517"},{"product_id":"சஹிதா","title":"சஹிதா","description":"\u003cdiv id=\"Description\" class=\"w3-container w3-border city\"\u003e\n\u003cdiv\u003eஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\u003c\/div\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e\n\u003c\/div\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47628348588268,"sku":null,"price":282.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/f21e7f5eb5f2b9c373f4c54941a12a80.jpg?v=1778664916"},{"product_id":"இரண்டாம்-குடியேற்றம்","title":"இரண்டாம் குடியேற்றம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eசக்காரியாவின் எழுத்துக்கள் நமக்கு விசுவரூப தரிசனங்களை எப்போதும் வழங்குவதில்லை. மாறாக ஒரு துளியில் சமுத்திரத்தை காட்டுகிறார். சக்காரியாவை, அவர் எழுதிய எழுத்தின் பலத்துக்கு கொஞ்சமும் பழுதுவராமல், பலம் கூடுதலாகவே தமிழுக்கு தந்திருக்கிறார் கே.வி.ஜெயஸ்ரீ.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47628370116844,"sku":null,"price":132.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/25e033547d1c98b66e2fbea42f017700.jpg?v=1778665571"},{"product_id":"அந்திராகம்","title":"அந்திராகம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஇத்தொகுப்பில் முக்கியமான இரண்டு கட்டுரைகளும் ஒரு திரைச்சித்திரமும் இடம்பெற்றுள்ளன. மூன்றுமே இலக்கியத்துக்காக நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர்களுடையவை. கஸூவோ இஷிகுரோ வின் The Gourmet, BBC யில் ஒளிபரப்பான தொலைக்காட்சித் திரைப்படம். இஷிகுரோ பிறப்பால் ஜப்பானியர். சிறு வயதிலேயே பெற்றோர்களுடன் இங்கிலாந்தில் குடியேறிவிட்டவர். மரபான கீழைத்தேய மனதுக்கு மேலை நாட்டு கலாச்சாரம், அவர்களின் ரசனை, தேர்வு, வாழ்க்கைமுறை இவற்றோடு ஒருபோதும் இயைந்துவிட முடியாது என்பதற்கு இஷிகுரோவின் எழுத்துக்கள் உதாரணமாக இருக்கின்றன. அவருடைய பிரசித்தி பெற்ற, புக்கர் பரிசு பெற்ற The Remains of The Day வின் நீட்சியாகவே இந்த 'ருசிகர்' அமைந்துள்ளது. குந்தர் கிராஸ் ஜெர்மனியின் மனசாட்சி என்று அறியப்பட்டவர். ஹிட்லர் இழைத்த கொடுமைகளுக்காக உலகத்தின் முன்பு கூசிக் குறுகி நின்றிருந்த ஜெர்மானியர்களுக்கு குந்தர் கிராஸின் The Tin Drum பெரும் ஆறுதல் அளித்தது. ஜெர்மனியின் பாவக்கறைகளை கிராஸ் தனது படைப்புகளின் மூலம் அழித்து வந்தார். அரசியலிலும் ஈடுபட்டார். இவருடைய தேர்தல் பிரச்சாரம் ஜெர்மனியின் முதல் சோஷலிஸ்ட் தலைவரான வில்லி பிராண்ட் அதிபராவதற்கு பெரும் உதவியாக இருந்தது. ஆனால் குந்தர் கிராஸ் தனது அந்திமக் காலத்தில் ஒரு மிகப்பெரிய ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார். அறியாத வயதில் ஹிட்லர் எழுப்பியிருந்த தேசியவெறியில் மயங்கி நாஜி படையில் சேர்ந்து போரில் ஈடுபட்டதாக அவர் தன்னிச்சையாக முன்வந்து ஒப்புக்கொண்டது இந்த மகா கலைஞனின் நேர்மைக்குச் சான்றாக இருந்தது. இத் தொகுப்பில் உள்ள அவரது கட்டுரை குந்தர் கிராஸின் Peeling the Onion நூலிலிருந்து எடுக்கப்பட்ட ஒரு பகுதி. 'அந்தி ராகம்' காப்ரியேல் கார்சியா மார்க்கேஸின் சுயசரிதை நூலான 'Living to Tell the Tale நூலில் அவருடைய பெற்றோர்களின் காதல் எவ்வளவு போராட்டங்களைத் தாண்டி வெற்றி பெற்றது என்ற சுவாரஸ்யமான கதையைச் சொல்லும் பகுதி. இவை கிட்டத்தட்ட பதினைந்து வருடங்களுக்கு முன் மொழிபெயர்த்தவை. இன்று இவற்றை வாசித்துப் பார்க்கையில் மொழிபெயர்ப்பு செயல்பாடுகளில் நான் அடைந்திருக்கும் மெலிதான மாற்றங்களை உணர முடிகிறது. சில விஷயங்களில் பிடிவாதம் அதிகரித்திருக்கிறது. சில அம்சங்களில் இளகியிருக்கிறேன். இப்போது புத்தகமாக வரும்போது சில வாக்கிய அமைப்புகளை மாற்றுவதற்கு எழுந்த இச்சையை அடக்கிக்கொண்டு அப்படியே அனுமதித்திருக்கிறேன். மொழிபெயர்ப்பு குறித்த பார்வைகள் காலந்தோறும் மாறிவருகின்றன. மொழிபெயர்ப்பாளனும் மாறிவருகிறான். மாறக்கூடாதவொன்று மூலப்படைப்புக்கும் படைப்பாளிக்கும் நேர்மையாக இருப்பது. அதில் வழுவாமல் இருக்கிறேன் என்பதே மனநிறைவு அளிப்பதாக உள்ளது. நூலாக்கம் பெறாமல் குவிந்திருக்கும் என்னுடைய பல கட்டுரைகள், மொழிபெயர்ப்புகளை சேகரித்துத் தருவதற்கு அவர்கள் தொடர்ந்து நச்சரித்து வந்ததால்தான் என் சோம்பலை மீறி இந்நூல் வெளிவருகிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47628391317740,"sku":null,"price":141.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/80833c395db6955edef5a73397fecbf5.jpg?v=1778666132"},{"product_id":"19-டி-எம்-சாரோனிலிருந்து","title":"19 .டி. எம். சாரோனிலிருந்து","description":"\u003cp\u003e\u003cspan\u003eமூன்று நிகழ்வுகளின் மூலம் தன் தந்தையின் ஆளுமையை அற்புதமாய் பதிவு செய்திருக்கிறார். அன்பும் கடமையுணர்வும் பொறுப்பும் நிரம்பிய முதல் தலைமுறை, அடுத்த தலைமுறையின் போக்கினைக் கண்டு கோபமும் ஆற்றாமையுமாய்ச் சுருங்கலும், தான் பெற்ற விருதினை அரசிடமே திரும்பத் தந்த தருணத்தையும் இயற்கையோடு இயைந்த வாழ்வின் இளமைக் குதூகலத்தையும் கண்விழி விரியும் காட்சியாய்ப் படிமப்படுத்தித் தன் அப்பாவை இயக்கப் படுத்துதலில் நம்முன் பூக்கின்றன சில மலர்கள். பவாவின் அப்பாவில் நம் ஒவ்வொருவரின் அப்பாக்களும் ஆடியில் விரியும் தன்மையுடன் எதிரில் நிற்பது காணக் கிடைக்காத அனுபவம்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47628427264236,"sku":null,"price":96.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/19_._..jpg?v=1778750889"},{"product_id":"கதை-கேட்கும்-சுவர்கள்","title":"கதை கேட்கும் சுவர்கள்","description":"\u003cp\u003eவாழ்வு தெளிந்த நீரோடையாய்ப் போய்க் கொண்டிருப்பதில் என்ன சுவாரசியம் இருக்கிறது?அது தன் கோர நாக்குகளை நீட்டி நம்மை, சில நேரங்களில் நம் மொத்த வாழ்வையும் பலி கேட்கிறது. தலைகீழாய்ப் புரட்டிப்போட்டு ஒன்றுமே தெரியாதது மாதிரி நின்று வேடிக்கையும் பார்க்கிறது.\u003c\/p\u003e\n\u003cp\u003eஉமா ப்ரேமன் என்கிற இம்மனுஷியை இது தன் சகல அகங்காரத்தோடும் ஆக்ரோஷத்தோடும் அழைக்கழித்தது.\u003c\/p\u003e\n\u003cp\u003eஇதன் காயங்கள் எதுவுமே தனதில்லையென, நேற்றிரவு பெய்த மழையில் புத்தம்புதியதாய்ப் பூத்து நிற்கிறாள். அதனால் மட்டுமே அவள் வாழ்வு புத்தகமாகிறது.\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47628474810604,"sku":null,"price":376.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/0330d848c8bc3a4c5e53cf1bb88f79d0.jpg?v=1778668112"},{"product_id":"பச்சை-இருளனின்-சகா-பொந்தன்மாடன்","title":"பச்சை இருளனின் சகா பொந்தன்மாடன்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஇக்கதைகளை படிக்க நேர்ந்த வாசகர்கள், தங்கள் மொழியிலும் சிறந்த படைப்புகளைத் தேடிப் படிப்பர். இக்கதை மாந்தர்களின் உணவு எந்தச் சமையல் அறை வாணலிகளிலும் வலுபட்டதாய் இல்லை. அலைந்து திரியும் வேர்களைக் கொண்டவர்கள். துரதிருஷ்டவசமாக இவர்கள் மனிதர்கள்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47631813181676,"sku":null,"price":132.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/58b031f092b15f541109515dffc95e54_db5b1b7b-bc43-4777-8301-3963f14a3aed.jpg?v=1778750161"},{"product_id":"ஒற்றைக்-கதவு","title":"ஒற்றைக் கதவு","description":"\u003cp align=\"JUSTIFY\"\u003e\u003cspan\u003eமனித வாழ்வின் விடுபட்ட பகுதிகளை ஒவ்வொரு எழுத்தாளனும் தன் பதில்களால் நிரப்பிக் கொண்டிருக்கிறான் யார் எழுதுகிறார்கள் என்பதல்ல\u003c\/span\u003e\u003cspan\u003e, \u003c\/span\u003e\u003cspan\u003eஎன்ன எழுதுகிறார்கள் என்பதுதான் எழுத்து\u003c\/span\u003e\u003cspan\u003e. \u003c\/span\u003e\u003cspan\u003eநம் முன்னால் வைக்கும் மிகப்பெரிய சவால் என்று எழுதத் தொடங்கிய சந்தோஷ் ஏச்சிக்கானத்தின் முதல் தொகுப்பு\u003c\/span\u003e\u003cspan\u003e.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp align=\"JUSTIFY\"\u003e\u003cspan\u003eமொழி அறிவு தவிர செருக்கற்ற உள்ளார்ந்த பணிவும்\u003c\/span\u003e\u003cspan\u003e, \u003c\/span\u003e\u003cspan\u003eநேர்மையும்\u003c\/span\u003e\u003cspan\u003e, \u003c\/span\u003e\u003cspan\u003eஅர்ப்பணிப்பும் கொண்டு மொழிபெயர்த்த கே\u003c\/span\u003e\u003cspan\u003e.\u003c\/span\u003e\u003cspan\u003eவி\u003c\/span\u003e\u003cspan\u003e.\u003c\/span\u003e\u003cspan\u003eஜெயஸ்ரீயின் இந்த நூல் நல்லி திசையெட்டும் விருது பெற்றுள்ளது\u003c\/span\u003e\u003cspan\u003e.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47631846179052,"sku":null,"price":132.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/2a3aeedd53e00ca04210afe49960e059.jpg?v=1778751929"},{"product_id":"சித்திர-சுவடுகள்","title":"சித்திர சுவடுகள்","description":"","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47632192831724,"sku":null,"price":282.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/a0ee11931c56dc7d87938e4cb5f2181e.jpg?v=1778756011"},{"product_id":"எஸ்தரும்-எஸ்தர்-டீச்சரும்","title":"எஸ்தரும் எஸ்தர் டீச்சரும்","description":"","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47634185617644,"sku":null,"price":56.4,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/c8e67d7db4a6983a4f88cb53cb1e9375.jpg?v=1778833324"},{"product_id":"அறக்கயிறு-அனுபவ-பகிர்வுகள்","title":"அறக்கயிறு-அனுபவ பகிர்வுகள்","description":"\u003cp\u003e\u003cspan\u003e'அறக்கயிறு’ ஒரு தனிமனிதன் தன் கடந்த காலத்தைத் திரும்பிப் பார்க்கும் நினைவோடையாகத்தான் தொடங்குகிறது. மெல்ல மெல்ல அது தமிழகத்திலும் அண்டை மாநிலங்களிலும் புதிய வரலாற்றைப் படைத்த, படைக்கும் சாதனையாளர்களின் வரலாற்றை இணைத்துக் கொண்டு ஓர் ஆற்றின் மிடுக்கோடு பயணிக்கிறது இப்புத்தகம். – பேரா. சாலமன் பாப்பையா\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47634188992748,"sku":null,"price":141.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/4ce77718fbac8c92ba4b2de3de8ee6e9.jpg?v=1778833749"},{"product_id":"உருவமற்ற-என்-முதல்-ஆண்","title":"உருவமற்ற என் முதல் ஆண்","description":"\u003cp\u003e\u003cspan\u003eசொல்லில் விவரிக்க முடியாத சோகமும் வாழ்வின் குரூரங்களும் இந்தத் தொகுப்பெங்கும் விரவி இருந்தாலும் வாழ்வின் மீதும் மனிதர்கள் மீதும் நம்பிக்கை இழந்துவிட வேண்டிய தில்லை, இந்த வாழ்க்கை வாழத்தக்கதுதான் என்றும் அத்தனை அவலங்களையும் தாண்டி வாழ்வதற்குத் தேவையான, இனிமையும் மனிதநேயமும் நிரம்பியது என்ற நம்பிக்கையை விதைக்கும் ஏராளமான பெருந்தருணங்களையும் கொண்டிருக்கும் தொகுப்பாக அமைந்திருந்திருக்கிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47698982568172,"sku":null,"price":141.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/eecae73da0c96a0ea9296d99098a5b7f.jpg?v=1780464948"},{"product_id":"மூன்றாம்-பிறை","title":"மூன்றாம் பிறை","description":"\u003cp\u003e\u003cspan\u003eதான் பார்த்த காட்சிகள் சந்தித்த மனிதர்கள்  நிகழ்வுகள் என எல்லாவற்றையும் சம்பவங்கள் என்று ஒதுக்கி தள்ளாமல்  அவற்றின் மீதான சமூகப்பார்வையை மம்முட்டி இந்த புத்தகத்தில் பதிவு செய்கிறார் அதில் தத்துவார்ததமான  பரிமாணங்களை நாம் தரிசிக்க முடிகிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47719981842668,"sku":null,"price":122.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/MOONTRAM.jpg?v=1780982979"},{"product_id":"யாருக்கும்-வேண்டாத-கண்","title":"யாருக்கும் வேண்டாத கண்","description":"\u003cp\u003e\u003cspan\u003eமனித வாழ்வில் சோர்ந்துபோன நிமிடங்களை புத்துணர்ச்சியுடன் எழச் செய்பவை சிஹாபுதின் கதைகளின் சாரமாய் உள்ளது. இதற்குள் இடையூறாக எந்த ஒரு தத்துவமோ, வாகப்பாட்டிலலோ எக்கதைகளிலும் இல்லை. நம் வாழ்வின் நுட்பமான தருணங்களை நேர்த்தியாக சொல்கிறது. மலையாள மூலமான இந்நூலை அதன் அடர்த்தியும், சாரமும் குறையாமல் கே. வி. ஷைலஜா மொழிபெயர்த்துள்ளார்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47729540595948,"sku":null,"price":112.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/YARUKKUM.jpg?v=1781169811"},{"product_id":"ஓயாசிஸ்-கனவுகள்","title":"ஓயாசிஸ் கனவுகள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஇவை எளிமையோடும், இலக்கிய தரத்தோடும் சிருஷ்டிக்கப்பட்டவை. இதை படிக்கிறவர் மனதிற்குள் ஆழ்ந்த பரவசமும், கலையின் தரத்தை செழுமைப்படுத்தும் தனமையும், ஒரே நேரத்தில் பரவசமும், கலையின் தரத்தை செழுமைப்படுத்தும் தரத்தையும், ஒரே நேரத்தில் ரசவாதம் புரியும் என்பதில் துளியும் சந்தேகமில்லை.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47840995016940,"sku":null,"price":376.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/OYASIS.jpg?v=1782711744"},{"product_id":"அது-நானாயிருந்தேன்","title":"அது நானாயிருந்தேன்","description":"\u003cp\u003eஒரு கிராமத்தின் ஏதோவொரு கோவிலின் முன்னால் ஒளிர்ந்து கொண்டிருக்கும் தீபம் போன்றவர் அஷிதா. சிறு காற்றில் அணைத்து விடுமென்று தோன்றலாம். ஆனால் ஓர் ஊருக்கே வெளிச்சமாகி, காற்றில் உலையாமல் அமைதியாக ஒளிர்ந்து கொண்டிருக்கும் அந்தத் தீபம்.\u003c\/p\u003e\n\u003cp\u003eஅஷிதா எழுதாமல் போன அனுபவ தீட்சண்யமான சுயசரிதையின் சில ஏடுகள்தான் இந்தப் புத்தகத்தில் சிதறிக் கிடக்கின்றன.\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47841002619116,"sku":null,"price":188.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/ATHUNANAIRUNTHEN.jpg?v=1782713487"},{"product_id":"சுருக்கப்பட்ட-நெடுங்கதைகள்","title":"சுருக்கப்பட்ட நெடுங்கதைகள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஎம்.ரிஷான் ஷெரீபின் மொழிபெயர்ப்பில் வெளியாகியுள்ள ‘கிகோர்’ (சோவியத் ரஷ்ய இலக்கியம்), ‘தரணி’ ஆகிய புதிய நாவல்களையும், ‘திருமதி.பெரேரா’, ‘அந்திமக் காலத்தின் இறுதி நேசம்’ ‘சுருக்கப்பட்ட நெடுங்கதைகள்’ ஆகிய புதிய சிறுகதைத் தொகுப்புகளையும் இந்தக் கண்காட்சியில் பெற்றுக் கொள்ளலாம். அத்தோடு, இதுவரை வெளியாகியுள்ள எழுத்தாளர் எம்.ரிஷான் ஷெரீபின் இருபதுக்கும் மேற்பட்ட நூல்கள் இந்த சர்வதேச புத்தகக் கண்காட்சியில் வம்சி, காலச்சுவடு, டிஸ்கவரி புக்பேலஸ், பாரதி புத்தகாலயம், பரிசல் புத்தக நிலையம் ஆகிய அரங்குகளில் கிடைக்கும். எழுத்தாளர் எம்.ரிஷான் ஷெரீப் இலங்கையில் மாவனல்லை பிரதேசத்தைச் சேர்ந்தவர். இவர் தனது நூல்களுக்காக இதுவரை இலங்கை அரச சாகித்திய விருது, கனடா இயல் விருது, இந்தியா வம்சி மற்றும் வாசகசாலை விருதுகளை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இலங்கை எழுத்தாளர் ஒருவரது அதிகளவு எண்ணிக்கையான புதிய நூல்கள் சர்வதேச புத்தகக் கண்காட்சியில் வெளியிடப்படுவது இதுவே முதல் தடவையாகும்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47841009598700,"sku":null,"price":235.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/SURUKAPATANEDUNKATHAIGAL.jpg?v=1782714327"},{"product_id":"மல்லம்மா","title":"மல்லம்மா","description":"\u003cp\u003e\u003cspan\u003eநான் மிகவும் மதிக்கும் தெலுங்குப் படைப்பாளி ராஜா ராமமோஹன ராவ் அவர்களின் தெலுங்கு கதைகளை, என்னுடைய முன்னத்தி ஏரும் மிக சிறப்பான மொழிபெயர்ப்பாளரும் தென்னிந்திய மொழிகளில் நேரடியாக மொழியாக்கம் செய்யும் திறமையான படைப்பாளியுமான ருத்ர துளசிதாஸ் அவர்களின் வழியாக தமிழ் வாசகர்களிடம் கொண்டு சேர்ப்பதில் மகிழ்கிறது வம்சி புக்ஸ்\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47841036566764,"sku":null,"price":188.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/MALLAMMMA.jpg?v=1782714617"},{"product_id":"சிதம்பர-நினைவுகள்","title":"சிதம்பர நினைவுகள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eமொழிபெயர்ப்பு நூல்களின் தமிழுக்கு கிடைத்த அரிய பொக்கிஷம் சிதம்பர நினைவுகள். உலகின் எந்த மொழியில் மொழிபெயர்த்தாலும் அதனதன் மக்கள் தங்கள் அன்பை, காதலை, காமத்தை, துரோகத்தை இந்நூலின் மூலம் தங்கள் பிம்பங்களை காண்பர் என்பது உறுதி. தாஸ்தாவஸ்ங்கியைப் போல் கொண்டாடப்பட வேண்டியவர் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47841068843244,"sku":null,"price":188.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/SITHAMBARA.jpg?v=1782715252"},{"product_id":"அமெரிக்கன்","title":"அமெரிக்கன்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஜேம்ஸின் எழுத்தில் சுய சரிதம் சார்ந்த அம்சங்கள் காணக் கிடைத்தாலும் அவை அப்படியே நேரிடையாகப் பதிவாவது கிடையாது. அவரின் கற்பனையில் அவை பயணம் செய்கின்றன. பயணம் வெறுமனே சுற்றி வருவதாக இல்லை. தேடுதலாக உள்ளது. இத்தேடுதல் அபாயகரமானதாக இருக்கிறது. ஒரு கட்டத்தில் வெறுமையாய் முடிகிறது. ஒரு திருப்பத்தில் பரவசத்தில் திளைக்க வைக்கிறது. வாழ்க்கையில் தேடுதல் ஓர் அம்சம் என்றில்லாமல் தேடுதலே வாழ்க்கை என்றாகிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47841084899564,"sku":null,"price":329.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/AMERICAN.jpg?v=1782715786"},{"product_id":"தாமிரபரணியில்-கொல்லப்படாதவர்கள்","title":"தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஎந்த பாசங்குமற்ற தன் வாழ்வை திறந்து காட்டும் எழுத்து மாரிசெல்வராஜூடையது. காட்டுப் பேச்சியும் வேம்படியாவும், உச்சினியும், சுன்னாண்டனும், பொத்தையனும், பூலானும், வடமலையானும், விஜியலட்சுமியும், சுதாவும், ஜோவும் இதுவரை வெளிப்படாமல் மாரியின் எழுத்தின் மூலமே இப்போது வெளிப்படுகிறார்களென வண்ணதாசன் சொல்கிறார்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47841092272364,"sku":null,"price":235.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/THAMIRABARANIYIL.jpg?v=1782716075"},{"product_id":"கருப்பு-நிலாக்-கதைகள்","title":"கருப்பு நிலாக் கதைகள்","description":"\u003cdiv id=\"Description\" class=\"w3-container w3-border city\"\u003e\n\u003cdiv align=\"justify\"\u003e\n\u003cdiv align=\"justify\"\u003eஇலக்கியக் கோட்பாடுகளுக்கு வெளியில் நின்று கரிசல் கிராமிய, குறு நகரிய விளிம்பு நிலை மக்களின் வாழ்வை, தலித்களுக்கு திணிக்கப்பட்ட  வாழ்வை  நுட்பமாக தெளிவான எழுத்தாக்குகிறார். வஞ்சிக்கப்பட்ட பெண்கள் மூர்க்கமாக எழும்போது வாசகனும் அந்நிலை எட்டுகிறான். சிறுகதைக் கட்டமைப்பு செய்பாடு குறித்த முனைப்பற்ற இக்கதைகள் காட்டு மரங்களின் வீர்யத்துடன் தண்மையும் திண்மையுமாய் தனித்த படைப்பாக நிற்கின்றன.\u003cbr\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e\n\u003c\/div\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47841102135532,"sku":null,"price":141.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/KARUPUNILAKATHAIGAL_f13b77a8-c4c9-4886-9a1a-ddb9d0ed4ad2.jpg?v=1782792620"},{"product_id":"நிலம்-பூத்து-மலர்ந்த-நாள்","title":"நிலம் பூத்து மலர்ந்த நாள்","description":"\u003cp\u003eமுன் ஜென்மத்தின் பழக்கமான பாதையினூடே இயல்பாக நடந்து செல்லும் ஒருவனைப் போல, சங்கப் பழமையின் பல பாவனைகளின் வழியே மனோஜ் குரூர் சஞ்சரிப்பது கண்டு நான் அதிசயப்பட்டேன்.\u003c\/p\u003e\n\u003cp\u003eஇந்நாவலில் ஈராயிரம் ஆண்டின் காலத்தைப் புலபடுத்தும் மொழி கையாளப்பட்டிருக்கிறது. சங்க இலக்கியத் தமிழுடன் தோய்வும் பரிச்சயமும் உடைய எந்த வாசகனாலும் இந்த நாவலை சிரமமின்றிப் படித்துச் செல்ல இயலும்.\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47841151189228,"sku":null,"price":329.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/NILAMPOOOTHU.jpg?v=1782792553"},{"product_id":"ஒரு-நாத்திகனின்-பிரார்த்தனை","title":"ஒரு நாத்திகனின் பிரார்த்தனை","description":"\u003cp\u003e\u003cspan\u003eஇந்தப் பிரதியை கையில் வைத்திருக்கும் ஒரு நபரிடம் நூற்றைம்பது வருடம் தொலைவில் நின்று ஒரு மூதாதையரைப் போல உரையாடல் ஒன்றை நிகழ்த்துகிறார் பல்சாக். அது இன்றைய வாழ்க்கைக்கும் பொருந்திப் போகிறது. பல்வேறு பிரிவினைகளால் நாம் சிதறுண்டு கிடந்தாலும், உண்மையில் இம்மனித இனம் ஒருவரை ஒருவர் ஆதரித்தும் சார்ந்தும் உதவியும்தான் தன்னை முன்னெடுத்துச் செல்ல விதிக்கப்பட்டது என்பது நிரூபணம். அப்படித்தான் இந்த மனித விலங்கினம் பரிணாமம் பெற்று வந்திருக்கிறது. மனித எழுச்சியையும் வீழ்ச்சியையும் பற்றியே இக்கதைகள் பேசுகின்றன.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47841167343852,"sku":null,"price":94.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/ORUNAATHIGANIN.jpg?v=1782792523"},{"product_id":"நூறு-சதவீத-பொருத்தமான-யுவதியை-ஓர்-அழகிய-ஏப்ரல்-காலையில்-பார்த்தபோது","title":"நூறு சதவீத பொருத்தமான யுவதியை ஓர் அழகிய ஏப்ரல் காலையில் பார்த்தபோது","description":"\u003cp\u003e\u003cspan\u003eநான் என்னுடைய ஆன்மாவுக்குள் இறங்கி என்னுடைய கதையைத் தேடிக்கொண்டிருக்கிறேன்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47841196015852,"sku":null,"price":235.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/NOORUSATHA.jpg?v=1782717474"},{"product_id":"பொலி-எருமை","title":"பொலி எருமை","description":"\u003cp\u003eஇவர் கதைகளில் தன்னை வஞ்சித்தவனைக் காற்றுக்குக் கூடத் தெரியாமல் பழி வாங்கத் தெரிந்தவளின் மன உரம் தெரிந்தது. நட்புக்காக உயிரின் கடைசி சொட்டு வரை வாழும் பெண்ணின் வைராக்கியம் தெரிந்தது. சமூக அக்கறையைக் கண்ணுற முடிந்தது. மனிதத்தைத் தாண்டிச் சக உயிர் மேலாள பரிவைப் பார்க்க முடிந்தது. ஆக, பெண் மன வலிமையும் தலித் மக்களின் வாழ்வின் பெருமிதத்தையும் பெரிய மேளம் அடித்து உலகிற்குச் சொல்லும் எழுத்தாய் நான் பாரத் தமிழின் கதைகளைப் பார்க்கிறேன் ஒவ்வொரு சமூக மக்களுக்கும் அவர்களின் வரலாற்று அடிப்படையில் குணங்கள் வேறுபடுமென்று சில குரல்கள் சொல்வது உண்மையானால்... ஆமாம். வேறுபடுகிறது... அவர்களின் குணம் ஈகை... அவர்களின் குணம் கூட்டமாய் இருப்பது... அவர்களின் குணம் பெருந்தன்மை... அவர்களின் குணம் விட்டுக் கொடுப்பது... அவர்களின் குணம் சக ஜீவனை அரவணைத்துக் கொள்வது..-அவர்களின் குணம் கட்டற்ற அன்புடன் இருப்பது... அவர்களின் குணம் தன் மக்களை யாருக்காகவும் விட்டுக் கொடுக்காமலிருப்பது... அவர்களின் குணம் தங்கள் வாழ்வு குறித்து பெருமிதம் கொள்வது...\u003c\/p\u003e\n\u003cp\u003eதன் கலையின் மூலம் தங்கள் வாழ்வில் சிறு ஒளியேனும் பாய்ச்ச முடியுமென்ற அவருடைய நம்பிக்கையை வம்சி புக்ஸ் அணையாமல் கை மாற்ற விரும்புகிறது.\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47841206173932,"sku":null,"price":235.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/POLIERUMAI.jpg?v=1782717841"},{"product_id":"சஹிதா-நிபந்தனையற்ற-அன்பின்-குரல்","title":"சஹிதா: நிபந்தனையற்ற அன்பின் குரல்","description":"\u003cp\u003e\u003cspan\u003e“படைப்பு வேறு வாழ்வு வேறு என்று பிரித்துணர தெரியாத நான்தான் அல்லலுறும் மனநிலையிலிருக்கிறேன்.” – கே .வி .ஷைலஜா\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47841218265324,"sku":null,"price":282.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/SAHITHA.jpg?v=1782792469"},{"product_id":"நான்-பிழை","title":"நான் பிழை","description":"","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47841243398380,"sku":null,"price":235.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/NAANPIZAI.jpg?v=1782718725"},{"product_id":"திருக்கார்த்தியல்","title":"திருக்கார்த்தியல்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஒருசேர இப்பதினோரு கதைகளையும் வாசிக்க நேர்ந்தபோது,பல கதைகளிலும் பள்ளிப் பருவத்துச் சிறுவன் ஒருவனின் அனுபவப் பகிவுகளாகத் தோன்றின. எவரது அனுதாபத்தையும் கோர முயலாக, நேர்மையான, உரத்த ஆவேசக் குரல்கள் கலக்காக எளிமையான பதிவுகள். அவலச் சுவை நிறைந்த சிறுவனின் அன்றாட வாழ்க்கைப் பாடுகள். அனுபவித்து அறிவதன்றி, கற்பனை நெசவு வரிகள் அல்ல அவை. \"கடந்து போகும்' கதை பசிக்கு வேலைக்குப் போகும் படிக்க வாய்ப்பற்ற சிறுவனின் கதை, தமிழில் இதுவரை எழுதப்பட்டிராதது. இது லத்தீன் அமெரிக்கக் கதைகளின் தழுவலோ, தாக்கமோ, 'போலச் செய்தலோ அல்ல உணர்ந்த வலி.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47841257980140,"sku":null,"price":159.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/THIRUKARTHIYAL.jpg?v=1782719104"},{"product_id":"தென்னிந்தியச்-சிறுகதைகள்","title":"தென்னிந்தியச் சிறுகதைகள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஇதுவரையிலான மொழிபெயர்ப்பு சிறுகதைகள் அந்தந்த மொழியிலுள்ள சிறந்த சிறுகதைகளே மொழியாக்கப் பெற்று வந்துள்ளன. ஆனால் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உட்பட நான்கு மொழிச் சிறுகதைகள் ஒரே தொகுப்பில் வருவது இதுவே முதன்முறை.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47841378828524,"sku":null,"price":470.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/THENINDIA.jpg?v=1782722917"},{"product_id":"பா-செயப்பிரகாசம்-கதைகள்-3","title":"பா. செயப்பிரகாசம் கதைகள் 3","description":"\u003cp\u003eஎன்னுடைய மணம் என்கிற ராஜசபையில் செயப்பிரகாசத்துக்கு ஒரு தனி இடம் உண்டு.\u003c\/p\u003e\n\u003cp\u003eபொதுவாக, ககிசல் காட்டு கழுத்தான அன்பர்கள் எழுதிய எழுத்தைப் படித்தாலும் மணம் உருகிப் போவேன். அவை இந்த மண்ணின் மனிதர்களைப் பற்றி எழுதப்பட்டவை. இவர்களுடைய எழுத்துக்களை என்னைவிட யாரும் அதிகம் அனுபவிக்க முடியாது. அம்புட்டும் எனது மக்கயைப் பற்றிய சேதிகள் அடங்கியவை.\u003c\/p\u003e\n\u003cp\u003eசெயப்பிரகாசத்தின் எழுத்தில் என்னை ரொம்பவும் களர்ந்தது அவருடைய கவித்துவ நடை அதைப் பல இடங்களில் படிக்கும் போது ஐயோ நலக்கு இப்படி எழு வரமாட்டேங்குதே என்று நினைப்பேன். \u003c\/p\u003e\n\u003cp\u003eஇந்தக் கதைகளையெல்லாம் ஒருங்கே சேர்த்து மீண்டும் ஒருமுறை படித்துப் பார்த்ததில் பெருமிதம் கொள்ள முடிகிறது.\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47841498300652,"sku":null,"price":658.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/KATHAI3.jpg?v=1782723345"},{"product_id":"இறுதி-யாத்திரை","title":"இறுதி யாத்திரை","description":"\u003cp\u003eவாழ்வின் அலைக்கழிப்பில் பல திசைகளில் பிரிந்துபோன நான்கு பிள்ளைகளும் அப்பாவின் மரணத்தின்போது தங்கள் பூர்வீக வீட்டிற்கு வருகிறார்கள். அப்பாவின் உடல் மாற்றிமாற்றிக் கிடத்தப்படும் அவ்வீட்டிற்குள்ளிருந்தே இக்கதை விரிந்து செல்கிறது.\u003c\/p\u003e\n\u003cp\u003eபுறக்கணிப்பின் அதீத வலியை வார்த்தைகளற்ற மௌனத்தால் இதைவிட எப்படி நிரப்ப முடியுமெனத் தெரியவில்லை. மரணம்தான் இதுவரையிலான வாழ்வின் மேடுபள்ளங்களை இட்டு நிரப்பி நம்மை தூர நின்று கைகட்டிப் பார்க்க வைக்கிறது.\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47841729609964,"sku":null,"price":188.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/ERUTHIYATH.jpg?v=1782723786"},{"product_id":"யாதுமாகி","title":"யாதுமாகி","description":"\u003cp\u003eஒரு நூற்றாண்டுக்கு முன்பு வாழ்ந்த தேவி என்னும் பெண்மணியைப் பற்றிய கதை. ஒன்பது வயதில் அவரின் பால்ய விவாகம், ஒரு வருடத்திற்குள்ளே அந்த கணவரின் மரணம். அதன் பின் அவளின் தகப்பனார், பெண்ணுக்கு, தன் தாயின் பேச்சைக் கேட்டு தான் செய்துவைத்த பால்யவிவாகத்தால் மனம் வருந்தி, அவளைப் படிக்க வைக்கிறார்.\u003c\/p\u003e\n\u003cp\u003eபள்ளிப்படிப்பு முடியும் தருவாயில் தகப்பனாரும் இறந்து போய்விட, வீட்டில் முடக்கப்படுகிறாள். மீண்டும் தன் தமையனின் துணையுடன் கல்லூரி படிப்பை முடித்து, ஆசிரியராய் பணியாற்றத் தொடங்குகிறார். மறுமணமும் செய்துக் கொள்கிறார் ஒரு ராணுவ அதிகாரியை. அவருக்கும் இது இரண்டாவது திருமணமே.\u003c\/p\u003e\n\u003cp\u003eஅவர்களுக்கு ஒரு மகள் பிறக்கிறாள். அதன் பிறகு கணவரின் மரணம், அம்மாவின் மரணம் என்று அடுத்தடுத்து. மகள் படித்து உயர்ந்து கல்லூரியில் பேராசிரியை ஆகிறார். அவளின் திருமணம் இவரைத் தாயாய் மதிக்கும் ஒருவருடன் அமைகிறது. ஆனால் அது வெளிவேஷம் எனப் புரிந்துப் போகிறது. அவன் இன்னொரு பெண்ணுடன் தொடர்பில் இருந்தாதால், மகளின் வாழ்க்கை கேள்விக்குறி ஆகிறது.\u003c\/p\u003e\n\u003cp\u003eஇப்போது மகள், பேத்தி என இருவரையும் சேர்த்தே சுமக்கும் ஒரு பொறுப்பினை தாங்கி, முன்னோக்கி நகர்கிறார். இதுதான் இந்த நாவலின் அம்சம்.\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47841730822380,"sku":null,"price":169.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/YATHUMAAHI.jpg?v=1782724127"},{"product_id":"அடைக்கலப்-பாம்புகள்","title":"அடைக்கலப் பாம்புகள்","description":"","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47841748549868,"sku":null,"price":188.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/ADAIKA.jpg?v=1782724586"},{"product_id":"பாலுமகேந்திராவின்-வீடு","title":"பாலுமகேந்திராவின் வீடு","description":"\u003cp\u003e\u003cspan\u003eநடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த 22 வயதேயான சுதா (அர்ச்சனா) என்னும் இளம்பெண். அவள் வேலை பார்த்துத்தான் வீட்டின் பாடு கழிகிறது. அவளுடன் அவளுடைய தங்கையும் தாத்தாவும் (சொக்கலிங்க பாகவதர்) இருக்கிறார்கள். சுதாவுக்கு ஒரு காதலன் (பானுசந்தர்). அவன் ஒரு நடுத்தர வர்கத்தைச் சேர்ந்தவன், அவனுக்கு திருமண வயதில் இரண்டு தங்கைகள். இந்த நிலையில் அவள் வசிக்கும் வாடகை வீட்டைக் காலி செய்ய வேண்டிய சூழல் வருகிறது. வீடு தேடி அலைகிறாள். சுதா வீடு தேடி அலைந்து சோர்ந்திருக்கும் வேளையில் சொந்த வீடு கட்டினால் என்ன என்று நண்பர் ஒருவர் யோசனை தருகிறார். அவளுக்கும் சரியென்று படுகிறது. வீடு கட்டத் தேவையான நிலம் (2 கிரவுண்ட்) ஏற்கெனவே அவளிடம் இருக்கிறது. தான் வேலை பார்க்கும் நிறுவனத்தில் வீடு கட்டக் கடன் பெறுகிறாள். எஞ்சிய பணத்துக்கு ஒரு கிரவுண்ட் நிலத்தை விற்கிறார்கள். பல சிக்கல்களுக்கு இடையில் செயலில் இறங்கி, வீடு கட்டத் தொடங்கிய அன்றே மழை வெளுத்து வாங்குகிறது. தொடர்ந்து ஒப்பந்தக்காரரின் திருட்டுத் தனம் தெரியவருகிறது. சிமெண்டையும் ஜல்லியையும் திருடி விற்கிறார்கள். அதைத் தட்டிக்கேட்கும்போது வேலையை அப்படியே விட்டுவிட்டுப் போய்விடுகிறார் அவர். அந்த நேரத்தில் நிலைமையைச் சமாளிக்க உதவுகிறார்கள் சித்தாள் வேலை பார்க்கும் மங்காவும் (பசி சத்யா) மேஸ்திரியும். இடையில் பணப் பிரச்சினை, மனப் பிரச்சினை என்று பலதும் வருகின்றன. அத்தனையையும் சமாளித்து வீட்டை கட்டி முடித்த சமயத்தில் அந்த வீடு கட்டிய நிலம் மாநகர நீர் திட்டத்துக்கானது என்று அரசு சொல்கிறது. தனது வீட்டைக் காப்பாற்ற நீதிமன்றத்தின் படியேறிப் போராடுகிறாள் அவள்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47841784398060,"sku":null,"price":188.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/VEEDU.jpg?v=1782724898"},{"product_id":"கதை-நேரம்-கதைகள்-திரைக்கதைகள்-பாகம்-2","title":"கதை நேரம்: கதைகள் திரைக்கதைகள் – பாகம் 2","description":"","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47841794097388,"sku":null,"price":235.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/THIRAI2.jpg?v=1782725455"},{"product_id":"கதை-நேரம்-கதைகள்-திரைக்கதைகள்-பாகம்-1","title":"கதை நேரம்: கதைகள் திரைக்கதைகள் - பாகம் 1","description":"","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47841849114860,"sku":null,"price":235.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/THIRAI1.jpg?v=1782727238"},{"product_id":"கதை-நேரம்-திரைக்கதைகள்-பாகம்-3","title":"கதை நேரம் திரைக்கதைகள் - பாகம் 3","description":"","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47841860026604,"sku":null,"price":188.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/THIRA3.jpg?v=1782728110"},{"product_id":"இரவில்-நாய்க்கு-நடந்த-விநோத-சம்பவம்","title":"இரவில் நாய்க்கு நடந்த விநோத சம்பவம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eசிறப்புக் கவனத்திற்குரிய சிறுவனான கிறிஸ்டோஃபர்தான் இந்நாவலின் நாயக நாவலை எழுதுவதும் நகர்த்திச் செல்வதும் அவளே சிறிஸ்டோஃபர் நம்மிடம் எவ்விதச் சலுகையையும் எதிர்நோக்குவதில்லை; மாறாக தன் வாழ்வை, தன் நகர்வை தர்க்கத்தின் வழியே இட்டுச் செல்கிறான். தர்க்கத்திற்கு வெளியேயுள்ள எதையும் இந்நாவல் (க்றிஸ்டோஃபர்) கண்டுகொள்வதில்லை; மாறாக அவற்றைக் கடுமையாக விமர்சிக்கிறது. கோட்பாட்டிற்கும், தத்துவத்திற்கும் தர்க்கம் ஓர் அடிப்படைக் காரணி என்னும்போது நாவல் கூடுதல் சிறப்படைகிறது. இதைச் சிறார் நாவலாகக் குறுக்காமல் ஒரு பரந்துபட்ட நாவலாக நம் முன் கொணர்ந்தளித்துள்ளார் மார்க் ஹெடன் (Mark Haddan). மேலும் சிறுவனின் தனிச்சிறப்பான சரகச் பயணம், நவீன மனத்தின் அகச்சிக்கல்கள் மற்றும் அதன் உறவுச் சிதைவுகள் ஆகியவற்றையும் இந்நாவல் பேசுகிறது. ஓர் இடத்தில் அல்லது காலத்தில் நிகழும் பல்வேறு விடயங்களின் சாத்தியங்கள் முடிவற்றவை என்னும்போது இந்நாவல் அந்நீட்சியைப் பின்தொடர்கிறது. இந்நாவலின் சிறப்பும் அதுவே. இப்பொருளமைதியை விழுப்பத்துடன் மொழிபெயர்த்திருக்கும் ஸ்ரீதர் ரங்கராஜுக்கு வாழ்த்துகள்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47841878966508,"sku":null,"price":282.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/ERAVILNAAIKU.jpg?v=1782728391"},{"product_id":"மூன்றாம்-பிறை-1","title":"மூன்றாம் பிறை","description":"\u003cp\u003e\u003cspan\u003eதான் பார்த்த காட்சிகள், சந்தித்த மனிதர்கள்,  நிகழ்வுகள் என எல்லாவற்றையும் சம்பவங்கள் என்று ஒதுக்கித் தள்ளாமல்  அவற்றின் மீதான சமூகப்பார்வையை மம்முட்டி இந்தப் புத்தகத்தில் பதிவு செய்கிறார் அதில் தத்துவார்ததமான  பரிமாணங்களை நாம் தரிசிக்க முடிகிறது. தமிழில் நேரடியாக எழுதப்பட்டதற்கான அனைத்து சாத்தியங்களையும் உள்ளடக்கிய இப்பிரதியை ஷைலஜா தன் மொழிபெயர்ப்பின் மூலம் உருவாக்கியிருக்கிறார். \u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47841979924716,"sku":null,"price":141.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/MOORAMPIRA.jpg?v=1782729046"},{"product_id":"பசி-காதல்-பித்து","title":"பசி காதல் பித்து","description":"\u003cp\u003eஓர் இலக்கியப் பிரதியின் அனைத்து அழகுகளையும் தன்வயப்படுத்திய 'பசி காதல் பித்து' என்னும் முதல் படைப்பில் விளிம்புநிலை வாழ்வில எதிர்கொண்ட பேரனுபவங்களை, சந்தித்த மனிதர்களின் நற்குணங்களை, குணக்கேடுகளைப் புளைவின் வண்ண இழைகளைக் கோர்க்காமல் உயரிய கலைப் படைப்பாக நெய்து காட்டுகிறார்.\u003c\/p\u003e\n\u003cp\u003eபாலசந்திரன் சுள்ளிக்காடின் \"சிதம்பர நினைவுகள்' எழுத்து பாணியை விட்டு விலகி, புனைவை மிஞ்சும் நிஜங்களைப் படைத்திருக்கிறார் அப்பாஸ்.\u003c\/p\u003e\n\u003cp\u003eயதார்த்த வாழ்வு,எளிமை, குடும்ப வாழ்க்கையின் சிடுக்குகள் ஆகியவற்றைக் கச்சிதமும் நேர்த்தியும் வனப்பும் கவித்துவமும் கொண்ட மொழியால் கண்ணீர்த் துளிகளுக்குள் வானவில்லின் மாயாஜாலங்களை நிகழ்த்திக் காட்டியுள்ளார் முகம்மது அப்பாஸ், அவரது ஏமாற்றம், துயரம், அவமானம், வடுக்கள் ஆகியவற்றை அச்சுஅசயாக உள்வாங்கி வாசகனுக்கு தமிழில் வழங்குகிறார்.\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47842054635756,"sku":null,"price":329.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/PASIKADHAL.jpg?v=1782729443"},{"product_id":"பூனைகள்-நகரம்","title":"பூனைகள் நகரம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eவாழ்வின் தனிமையை, அதன் பன்முக நெருக்கடிகளை – ஆழ் மனம் சார்ந்தும், புறச்சூழல் சார்ந்தும் – தீவிரத்துடன் அலசுபவை ஹாருகி முரகாமியின் படைப்புகள். அதேபோல, கிழக்காசிய மனித வாழ்வில் மேற்கத்திய கலாச்சாரத்தின் நிழல் படிவதை மேற்பூச்சின்றி முன்வைப்பவை இவரது ஆக்கங்கள். முரகாமி கதைகளின் முதல் தொகுப்பைத் தமிழ்ச்சூழலுக்கு வம்சி பதிப்பகம் கையளித்தது. அதன் தொடர்ச்சியாக, ஜி. குப்புசாமியின் மொழியாக்கத்தில் வெளிவரும் தொகுப்பு இது. யதார்த்தத்துடன் மாய யதார்த்தங்கள் இணையும் இக்கதைகள் தமிழ்ச் சூழலுக்கு நெருக்கமானவை.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47842250522860,"sku":null,"price":329.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/POONAI.jpg?v=1782730074"},{"product_id":"பா-செயப்பிரகாசம்-கதைகள்-முதல்-தொகுதி","title":"பா. செயப்பிரகாசம் கதைகள் (முதல் தொகுதி)","description":"\u003cp\u003e\u003cspan\u003eகரிசல் காட்டு எழுத்தில் கி.ரா.வுக்கு அடுத்த இடத்தில் எப்போதும் பா.செயப்பிரகாசத்திற்கென ஒரு தனி இடமுண்டு. இயல்பாகவே கவித்துவ மொழி கைவரப்பெற்ற பா.செயப்பிரகாசத்தின் எழுத்தின் வசீகரம் எக்காலத்திலும் மங்காத வலிமை பெற்றவை.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47842294464748,"sku":null,"price":517.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/KATHAI1.jpg?v=1782730831"},{"product_id":"பா-செயப்பிரகாசம்-கதைகள்-இரண்டாம்-தொகுதி","title":"பா. செயப்பிரகாசம் கதைகள் - இரண்டாம் தொகுதி","description":"\u003cp\u003e\u003cspan\u003eகரிசல் காட்டு எழுத்தில் கி.ரா.வுக்கு அடுத்த இடத்தில் எப்போதும் பா.செயப்பிரகாசத்திற்கென ஒரு தனி இடமுண்டு. இயல்பாகவே கவித்துவ மொழி கைவரப்பெற்ற பா.செயப்பிரகாசத்தின் எழுத்தின் வசீகரம் எக்காலத்திலும் மங்காத வலிமை பெற்றவை.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47842299248876,"sku":null,"price":705.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/KATHAI2.jpg?v=1782792250"},{"product_id":"மறக்கவே-நினைக்கிறேன்-1","title":"மறக்கவே நினைக்கிறேன்","description":"\u003cp\u003eதன் பால்ய, பதின்பருவ ஞாபகங்களை எல்லோருக்கும் மாறாக மறக்க நினைக்கிறார். ஏன் எனில் அவை வலி மிகுந்த ரணங்கள். இப்போது தழும்புகள். தன் உடலில் உள்ள ரணத்தை தடவிப் பார்க்கவும், தழும்புகளை மறைத்து கொள்ளவுமான இளமைகால நினைவுகள் இதோடு விட்டொழியட்டும் என்று எழுதி தீர்த்தவைகளின் தொகுப்பு.\u003c\/p\u003e\n\u003cp\u003eஆனந்த விகடனில் தொடராக வெளி வந்து பல்லாயிரக்கணக்கான வாசகர்களை தன்வசப்படுத்திய புத்தகம் இப்போது புதிய வடிவமைப்பில் வம்சி புக்ஸிலிருந்து வெளிவந்திருக்கிறது.\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47842304164076,"sku":null,"price":282.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/MARAKAVENINAIKEREN.jpg?v=1782731760"},{"product_id":"சிச்சுப்புறா","title":"சிச்சுப்புறா","description":"\u003cp\u003e\u003cspan\u003eஇளம் மற்றும் பெரியவர்களுக்கான சிறு நாவல். புறா சமாதானத்தின் ஒரு சின்னமாக உள்ளது. 12 வயதான எழுத்தாளர் கூறுகிறார் \"உலகில் சமாதானத்தை வெல்வதற்குஇ பல அரேபியர்களின் வாழ்க்கை செலவிடப்படுகிறது\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47865637503212,"sku":null,"price":47.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/SICHUPURA.jpg?v=1782795225"},{"product_id":"ஒரே-நிழல்","title":"ஒரே நிழல்","description":"\u003cp\u003eஅலக்ஸாண்டிரா போபாஃப் எழுதிய நூலை நண்பர் சிறில் அலெக்ஸ் கவனமாகவும், நுணுக்கமான குறிப்புகளுடனும் மொழியாக்கம் செய்துள்ளார். அந்த இலக்கிய ஆளுமைகள் பற்றிய குறிப்புகளும், மொழிபெயர்ப்பு பற்றிய குறிப்புகளும் இந்நூலில் உள்ளன.\u003c\/p\u003e\n\u003cp\u003eஇந்த மனைவிகளின் உலகம் வழியாகச் செல்லும் இந்நூல் ஒரு மிகப்பெரிய நாவலை வாசிக்கும் உளஎழுச்சியையும், மனநிறைவையும் அளிக்கிறது. இந்தப் பெண்கள் ஒவ்வொருவரும் மகத்தான கதைநாயகியராக திரண்டு வருகிறார்கள். சில இடங்கள் பெரும்புனைகதை போன்றவை.\u003c\/p\u003e\n\u003cp\u003eஇந்த ஒவ்வொரு வாழ்க்கையையும் தனித்தனி நாவல்களாக விரிவாக்கிவிடலாம். ஒரு புனைவெழுத்தாளனாகிய எனக்கு பலநூறு மானுடத்தருணங்களின் பெருந்தொகுப்பாகவே இந்நூல் தோற்றம் அளிக்கிறது. தமிழுக்கு ஒரு முக்கியமான நல்வரவு இது.\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47865649922284,"sku":null,"price":517.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/ORENILAL.jpg?v=1782797054"},{"product_id":"இறை","title":"இறை","description":"","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47865655820524,"sku":null,"price":329.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/IRAI.jpg?v=1782798631"}],"url":"https:\/\/centaram.com\/collections\/vamsi-pathippagam.oembed","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}