{"title":"வைக்கம் முகம்மது பஷீர்","description":"","products":[{"product_id":"பால்யகால-சகி","title":"பால்யகால சகி","description":"\u003cp\u003e\u003cspan\u003eபஷீர் ஐம்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு எழுதி வெளியிட்ட நாவல் ‘பால்யகால சகி’. இன்றுவரை வெவ்வேறு தலைமுறை வாசகர்களால் தொடர்ந்து வாசிக்கப்பட்டுவரும் மலையாளப் படைப்பும் இதுதான். தோல்வியடைந்த காதலின் கதை என்னும் எளிய தோற்றத்துக்குப் பின்னால் பஷீரின் சொந்த அனுபவங்களின் சாயலும் இஸ்லாமியப் பின்புலமும் உணர்ச்சிப் பெருக்கும் கொண்ட புனைகதை ‘பால்யகால சகி’. எழுத்தின் கூறுகளாக மட்டுமல்லாமல் வாழ்க்கையின் அம்சங்களாகத் திரண்டிருப்பது தான் நாவலை இலக்கிய முக்கியத்துவம் கொண்டதாகவும் தொடர்ந்து வாசிக்கக் கூடியதாகவும் ஆக்குகிறது. அதன் பின்னுள்ள படைப்பு மனம்தான் பஷீரை மலையாளப் படைப்பாளிகளில் ‘உம்மிணி வலிய ஓர் ஆளாக’ - இன்னும் பெரிய ஒருவராக - ஆக்குகிறது. ‘பால்யகால சகி’க்கு இன்று உருவாகியிருக்கும் செவ்வியல் தகுதியும் அதனால்தான். Basheer’s much acclaimed love story. Well translated.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47599418376428,"sku":null,"price":120.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/dff9daa17ca1f0e23cd3102a25fbcea2.jpg?v=1777977238"},{"product_id":"பாத்துமாவின்-ஆடு","title":"பாத்துமாவின் ஆடு","description":"\u003cp\u003e\u003cspan\u003eவேடிக்கை கதையாகச் சொல்லப்பட்ட குடும்பப் புராணம் ‘பாத்துமாவின் ஆடு’. ஆனால் வைக்கம் முகம்மது பஷீர் எழுதியவற்றில் பல அடுக்குகளில் புரிந்துகொள்ளப்பட வேண்டிய நாவலும் இதுதான். அன்பின் பெயரால் மையப்பாத்திரத்தைச் சுரண்டும் உறவுகளின் வலை, பெண்களின் உலகத்துக்குள் நிலவும் பூசல்களின் சிக்கல், மனிதர்களுக்கும் விலங்குகளுக்குமான சார்புநிலை உறவு, வாழ்க்கைக்கும் இலக்கியத்துக்குமான பிணைப்பின் வலு, நகைச்சுவையின் மிளிரல் என எந்த அடுக்கிலிருந்தும் இதை அணுகலாம். பஷீரின் இலக்கியத்தில் மனிதர்களுக்கு மட்டுமல்ல பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் தாவரங்களுக்கும் இடமுண்டு. மனிதர்களுக்கு இயற்கையின் உயிர்தரிப்புக் குணத்தையும் ஜீவராசிகளுக்கு மனித சுபாவத்தையும் வழங்குகிறது பஷீரின் படைப்பாளுமை. தன்னை மையமாக வைத்து வீட்டுக்குள் ஓர் உலகை உருவாக்குகிறார். அது உம்மிணி வலிய வீடு அல்லது மிகவும் சின்னப் பிரபஞ்சம். இது பஷீர் மட்டுமே உருவாக்கக்கூடிய கதா பிரபஞ்சம்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47603138658540,"sku":null,"price":138.75,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/1a57140b241a82f97eb17349491d680e.jpg?v=1778055904"},{"product_id":"எங்க-உப்பப்பாவுக்கொரு-ஆனையிருந்தது","title":"எங்க உப்பப்பாவுக்கொரு ஆனையிருந்தது","description":"\u003cp\u003e\u003cspan\u003eஎங்க உப்பப்பாவுக்கொரு ஆனையிருந்தது’ நாவலில் ஒரு முஸ்லிம் குடும்பத்தின் அகக் காட்சிகளை முன்வைத்து அந்தச் சமூகத்தைப் பற்றிய ஓர் உருவகத்தை வைக்கம் முகம்மது பஷீர் உருவாக்குகிறார். இறந்த காலத்தின் நினைவுகளுடன் நிகழ்காலத்தை வாழப்பார்க்கிறது அந்தக் குடும்பம். வட்டனடிமைக் காக்காவுக்கு ஊர்ப் பிரமுகராக இருப்பதன் பெருமை. மனைவி குஞ்ஞுத்தாச்சும்மாவுக்கு அவள் அப்பா யானை வளர்த்த காலம் பற்றிய பெருமை. மகள் குஞ்ஞுபாத்தும்மாவுக்கு மணமகன் யானைமேல் வரும் கனவு. இந்தப் பழம் பெருமைகளெல்லாம் கால மாற்றத்தில் கலைந்துபோகின்றன. தாத்தாவின் யானை கொம்பானையல்ல, வெறும் குழியானைதான் என்று புதிய தலைமுறை கற்பிக்கிறது. மூவரும் புதிய உலகத்தின் விதிகளுக்கும் நடைமுறைகளுக்கும் இணங்க நேர்கிறது. அரைநூற்றாண்டு கடந்தும் வாசகர்கள் போற்றிப் பாராட்டி வாசிக்கும் புனைகதையின் புதிய தமிழாக்கம்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47603503694060,"sku":null,"price":138.75,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/dba95d58fa9f70f0cfde4d65328572ed.jpg?v=1778061973"},{"product_id":"பஷீர்-கதைகள்","title":"பஷீர் கதைகள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eமுற்போக்கு இலக்கியம் முதன்மையான நடைமுறையாக இருந்த காலப் பகுதியில் எழுத்தில் ஈடுபட்டவர் பஷீர். ‘ஜீவன் சாஹித்ய பிரஸ்தானம்’ (வாழ்விலக்கிய இயக்கம்) என்று அழைக்கப்பட்ட போக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தியவர்கள் பஷீர், தகழி சிவசங்கர பிள்ளை, பி. கேசவதேவ், பொன்குன்னம் வர்க்கி ஆகியோர். இவர்களின் எழுத்தில் புதுவகையை உருவாக்கியவர் பஷீர். நடைமுறை உலகை மாற்றிப் புதிய உலகைச் சமைப்பதற்கான அறைகூவலைப் பிற எழுத்தாளர்கள் முன்னிருத்தினர். இந்த முழுமையற்ற உலகத்தை மாற்றி முழுமையான உலகைப் படைப்பது பற்றிய கனவை முன்வைத்தார்கள். ஆனால் பஷீர் இந்த முழுமையற்ற உலகை நேசித்தவராக இருந்தார். தீமையும் கீழ்மையும்இந்த உலகின் உயிரோட்டமான அம்சங்கள் என்று உணர்ந்திருந்தார். நடைமுறை உலகத்தால் புறக்கணிக்கப்பட்டவர்களேஅவரது கதை மாந்தர்களாக இருந்தனர். அவர்களது வாழ்க்கையே அவருக்குக் கதை நிகழ்வுகளாக இருந்தன. பொறுக்கிகள், வேசிகள், திருடர்கள், முட்டாள்கள், பைத்தியங்கள், ஏமாற்றுப்பேர்வழிகள் எல்லாரும் அவருடைய அன்புக்குரிய பாத்திரங்களாக இருந்தார்கள்.அந்தப் பாத்திரங்கள்மீது வாசகரும் அன்பு பாராட்டக் கட்டாயப்படுத்தியதுதான் பஷீர் கலையின் வெற்றி.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47605657764076,"sku":null,"price":582.75,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/021d86a9acefc4e1a8002c658a54da83.jpg?v=1778138008"}],"url":"https:\/\/centaram.com\/collections\/vaikom-muhammad-basheer.oembed","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}