{"title":"வெ. இறையன்பு","description":"","products":[{"product_id":"காற்றில்-கரையாத-நினைவுகள்","title":"காற்றில் கரையாத நினைவுகள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஇறையன்பு அவர்களின் எழுத்துக்கென்று பெரும் வாசகப் பெருவெளி இருப்பதை நாங்கள் அறிவோம். அந்தப் பெருவெளியின் தனிப் பாதையில் அவரது நினைவுகள் வாச்கர்களை நோக்கி இதோ - பறந்து வருகின்றன.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47638882746604,"sku":null,"price":150.4,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/9f286a0fd509f0a5fe4e2c8858b585d3.jpg?v=1779094034"},{"product_id":"என்ன-பேசுவது-எப்படிப்-பேசுவது","title":"என்ன பேசுவது! எப்படிப் பேசுவது","description":"\u003cp\u003e\u003cspan\u003eஎன்ன பேசுவது ! எப்படிப் பேசுவது !! எதிர்காலத்தில் பல்கலைக்கழகம், கல்லூரி அளவில் தமிழ் இலக்கியம், ஆங்கில இலக்கியம், தகவல்தொடர்பியல், இதழியல், காட்சி ஊடகம், மேலாண்மையியல் போன்ற பாடப் பிரிவுகளில் சேர்ந்து பயில்கிற மாணவர்களுக்குப் பாட நூலாக என்ன பேசுவது! எப்படிப் பேசுவது? என்ற நூல் விளங்கிடும். குறிப்பாக இந்த நூல், பேராசிரியர்களுக்கு வகுப்பறையில் சுவாரசியமாகப் பாடத்தை நடத்திடுவதற்குக் கையேடாக உதவும். தகவல்தொடர்பை முன்வைத்துக் காட்சி ஊடகங்களில் சேர்ந்து பணியாற்றிட முயலுகிறவர்கள். மேடைப்பேச்சில் வெற்றிகரமான பேச்சாளராக விரும்புகிறவர்கள். தகவல் பரிமாற்றத்தை மேலாண்மை செய்கிறவர்கள் போன்றவர்களுக்கும் இந்த நூல் பயன்படும். தகவல்தொடர்பை முன்வைத்து இறையன்பு விவரித்திடும் பன்முகத் தகவல்கள். கிராமப்புற மாணவர்கள் எதிர்காலப் போட்டிமிகு வாழ்க்கையில் தங்களுக்கான இடத்தை அடைந்திட அடிப்படையாக விளங்கும்\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47785175875820,"sku":null,"price":1222.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/ERAIANBU.jpg?v=1782383184"},{"product_id":"புத்தகத்-திருவிழாப்-பேருரைகள்","title":"புத்தகத் திருவிழாப் பேருரைகள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eபணியிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு ஓராண்டில் ஆற்றிய உரைகளில் 101 மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு 'இறையன்பு ஓராண்டு உரைகள் என்கிற தலைப்பில் நான்கு தொகுதிகளாகப் பதிப்பிக்கப்பட்டன. அதற்குப் பிறகு 16 புத்தகத் திருவிழாக்களில் ஆற்றிய உரைகளை மட்டும் தொகுத்து இந்நூல் உருவாக்கப்பட்டிருக்கிறது. புதிய தலைப்புகளைத் தேர்ந்தெடுப்பதற்கும். அவற்றை விரிவாகவும் ஆழமாகவும் அலசுவதற்கும் மேற்கொள்ள வேண்டிய அணுகுமுறையைச் சுட்டிக்காட்டும் வகையில் அமைந்திருக்கும் இந்நூல் வாசிப்பு அனுபவத்தைத் தித்திக்கச் செய்யும்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47785217720556,"sku":null,"price":517.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/PUTHAGATHIRUVILA.jpg?v=1782386480"},{"product_id":"ஏழாவது-அறிவு","title":"ஏழாவது அறிவு","description":"\u003cp\u003e\u003cspan\u003eமனிதன் தன் வாழ்வில் தவறாது பயின்றொழுகவேண்டிய வாழ்வியல் அறங்களைப் பேசும் கருத்துக்கோவைகளின் பெட்டகமாக அமைந்துள்ளது இந்நூல். ஈடற்றதும் தேர்ந்தவையுமான அனுபவங்களின் வழி தாம் கண்டுணர்ந்த வாழ்வின் லட்சணங்களையும் அற்புதங்களையும் மாட்சிமைகளையும் மாண்புகளையும் எளிமையாகவும் சிறப்பாகவும் இந்நூலில் பதிவு செய்துள்ளார் நூலாசிரியர். வளமான வாழ்வுக்கு உன்னதமானதும் அடித்தளமானதுமான மனநிலையை உருவேற்றிக்கொள்வதற்கான அனைத்து வாயில்களையும் திறந்து காட்டுகிறது இவ்வரிய நூல்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47785241837804,"sku":null,"price":658.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/ELAVATHUARIVU.jpg?v=1782386761"},{"product_id":"மூளைக்குள்-சுற்றுலா","title":"மூளைக்குள் சுற்றுலா","description":"\u003cp\u003e\u003cspan\u003eஇளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழும் முதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப. அவர்களின் 100ஆவது நூல். சுற்றுலாத்துறையின் ஆணையாளராகவும், செயலராகவும் இருந்து சுற்றுலாத்துறையின் பொற்காலம் என்று சொல்லும் அளவிற்கு பல நற்செயல்கள் புரிந்தவர்\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47829562130668,"sku":null,"price":1410.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/MOOLAIKULSUTULA.jpg?v=1782456875"},{"product_id":"திருக்குறள்-100","title":"திருக்குறள் 100","description":"\u003cp\u003e\u003cspan\u003eதிருக்குறளை அறிவியல், உளவியல், சட்டம், மேலாண்மை, புனைவியல், தகவல் பரிமாற்றம் போன்ற பல கோணங்களில் தொடர்புபடுத்தி அதன் பன்முகத்தன்மையை வெளிப்படுத்தும்விதமாக கேள்வி-பதில் வடிவத்தில் அமைக்கப்பட்ட சுவையான நூல்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47830358720748,"sku":null,"price":141.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/THIRUKURAL100.jpg?v=1782472049"},{"product_id":"ஓடும்-நதியின்-ஓசை","title":"ஓடும் நதியின் ஓசை","description":"\u003ch2\u003eஓடும் நதியின் ஓசை(2 பாகங்கள் )\u003c\/h2\u003e\n\u003cp class=\"marginB15\"\u003e \u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cbr\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47830361309420,"sku":null,"price":235.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/OODUMNATHIUYINOOSAI.jpg?v=1782472672"},{"product_id":"இலக்கியத்தில்-மேலாண்மை","title":"இலக்கியத்தில் மேலாண்மை","description":"\u003cp\u003e\u003cspan\u003eஏராளமான அறிஞர்களின் சிந்தனைகள், நெகிழ வைக்கும் வரலாற்று உண்மைகள், சின்னச் சின்னதாய் இனிப்பு ஊசியேற்றும் கதைகள், நுட்பமான தர்க்க வாதங்கள் என்று 600 பக்கங்களில் தடபுடல் பந்தி வைக்கும் புத்தகம்! இலக்கியத்தை பயன்படுத்திக்கொள்ளாத மேலாண்மைக்கு எந்த மதிப்பும் இல்லை. மனிதர்கள் மத்தியில் ஒற்றுமையை, நம்பிக்கையை கட்டமைக்க மேலாண்மைக்கு இலக்கியம்தான் பயன்படும் என்று பல அறிவுசார் எடுத்துக்காட்டுகள் மூலம் தெளிவுபடுத்துகிறார் வெ.இறையன்பு. திருவள்ளுவரையும் ஷேக்ஸ்பியரையும் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில், இந்தப் புத்தகத்தில் மேற்கோள் காட்டியுள்ளார். இந்த இருபெரும் கவிஞர்களின் ஆளுமை இந்த நூலில் நிரம்பி உள்ளது. பல மருந்துகளை உள்ளடக்கிய ஒற்றை குப்பி போல, எட்டுத் திக்கும் சென்று அறிவுச் செல்வங்களை சேர்த்து உருவாக்கிய வாழ்வியல் பாடநூல் இது!\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47830381265132,"sku":null,"price":1410.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/ELAKEYATHILMELANMAI.jpg?v=1782476078"},{"product_id":"உள்ளொளிப்-பயணம்","title":"உள்ளொளிப் பயணம்","description":"\u003cp\u003eகுட்டிக்கதைகள் மற்றும் சிறுசிறு நிகழ்வுகளுடன் அறிவார்ந்த விஷயங்கலையும் நல்ல கலையம்சத்துடன் வெளிப்படுத்தும் இந்நூல் படிப்பதற்கும் படிப்பினைக்கும் உரிய நூல்.\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eஉள்ளொளி என்பது அறிவாகவும், அன்பாகவும் கருணையாகவும் மனசாட்சியாகவும் மன உறுதியாகவும் விழிப்புணர்வாகவும் உள்ளுணர்வாகவும், இயற்கை மீதான காதலாகவும் ஜீவன்கள் மீதான நேசமாகவும் இப்படி எண்ணற்ற உயர்பண்புகளாக மனிதனிடம் செயல்பட முடியும் என்பதை தெளிந்த நடையில் நூலாசிரியர் எடுத்துரைக்கிறார்.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e\n\u003cp\u003eமுடிவின்றித் தொடரும் உள்ளொளிப் பயணம் மனிதனின் வாழ்வனுபவத்திலிருந்தும் கூட்டுச்சூழலிருந்தும்தான் செழுமைப் படுகிறது என்பதை இந்நூல் விரித்துரைக்கிறது.\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47830383067372,"sku":null,"price":145.7,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/ULLOLEYAPAYANAM.jpg?v=1782476238"},{"product_id":"அவ்வுலகம்","title":"அவ்வுலகம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eபூமியில் மனித இருப்பு, மரணம், மரணபயம் குறித்து கருத்தியல் ரீதியாக எழுதப்பட்டுள்ள இறையன்புவின் அவ்வுலகம் நாவல், வாசிப்பின் வழியாக ஒவ்வொருவருக்குள்ளும் இடைவிடாத கேள்விகளை எழுப்புகிறது; நுட்பமாகச் செயலாற்றுகிறது; முடிவற்ற விவாதங்களுக்கு இட்டுச் செல்கிறது. சம கால வாழ்க்கையில் மரணத்தை எப்படி நேர்மறையாக அணுக வேண்டும் என்ற புரிதலை வாசிப்பில் ஏற்படுத்துவதுகூட அவ்வுலகம் நாவல் எழுதப்பட்டதன் நோக்கம் என்று சொல்ல முடியும்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47830385492204,"sku":null,"price":244.4,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/AVULAGAM.jpg?v=1782476403"},{"product_id":"சத்சங்கம்","title":"சத்சங்கம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஇந்தப் புத்தகத்தை ஓர் ஆன்மிகப் பயணமாகவும், ஒரு தத்துவ தரிசனமாகவும்தான் நான் பார்க்கிறேன். ஆன்மிகப் பரிணாமத்தின் பல படிகளின் ஊடக நம்மைப் பரிவுடன் கைப்பற்றி நடைபழக்குகிறார் ஆசிரியர். சுய தரிசன, சுய விமர்சன, சுய முன்னேற்றக் களன்களை நாம் இயல்பாகத் தொட்டும் கடந்தும் செல்ல இந்த நூல் திசை காட்டுகிறது. நம்மை அடிக்கடி எதிர்நோக்கும், நம் ஆழ்மனதில் ஒளிந்துகொண்டு கண்சிமிட்டும், நமது பிரக்ஞைக்கே பிடிபடாமல் புகைமூட்டமாக நம்முள் சலனமாடும் எண்ணற்ற கேள்விகளை இனங்கண்டு, அவற்றுக்கு ஓர் உருவம் கொடுத்து விடைதேடலுக்கு வழிவகுக்கிறது. குறிப்பாகக் கட்டமைக்கப்பட்ட குறிக்கோள்கள் எதுவுமின்றி நம்மை மேம்படுத்தும் முயற்சியில் இந்நூல் வெற்றி காண்கிறது. கே.எஸ்.சுப்பிரமணியன்\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47830387032300,"sku":null,"price":188.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/SATHSANGAM.jpg?v=1782476513"},{"product_id":"படிப்பது-சுகமே","title":"படிப்பது சுகமே","description":"\u003cp\u003e\u003cb\u003eபடிப்பது சுகமே!\u003c\/b\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e\n\u003cp\u003eபடிப்பது பாரம் என்பதை மாணவர்கள் நினைத்து அச்சமடையாமல் படிப்பது ‘சுகம்’ தரும் ஒன்றாகும் என்பதை விளக்கமாகவும் சுவையாகவும் கூறியுள்ளார். பரீட்சை எழுதவுள்ள மாணவர்கள் தங்களை எப்படித் தயார் செய்துகொள்ள வேண்டும், பாடங்கள் எப்படி உள்வாங்கிக் கொள்ள வேண்டும் எனப் பல விஷயங்களைப் பற்றியும் மாணவர்களுக்கு இந்நூல் விளக்கித் தருகிறது.\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eமாணவர்களின் படிப்புக்கும் தேர்வுக்கும் இந்நூல் ஒரு சிறந்த திறவுகோலாக இருக்கும். இந்நூல் ஊன்றிப் படிப்பவர்கள் தேர்வில் வெற்றிபெற்று சாதனைகளை நிகழ்த்துவார்கள் என்பது உறுதி.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47830389227756,"sku":null,"price":94.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/PADIPATHU.jpg?v=1782476668"},{"product_id":"வாழ்க்கையே-ஒரு-வழிபாடு","title":"வாழ்க்கையே ஒரு வழிபாடு","description":"\u003cp\u003e\u003cspan\u003eவறுமை மட்டுமே மெய்ஞ்ஞானத்திற்கு வழி என்றால் உலகமே இருட்டின் எதேச்சதிகாரத்திற்கு உட்பட்டிருக்கும், வறுமை அதிக சுயநலத்தையும் குறுகிய பார்வையையும் ஏற்படுத்தும் இழிவு.மானுடம் செழிக்க வேண்டும். வறுமையை விநியோகிக்க முடியாது. செல்வத்தைத்தாம் பகிர்ந்துகொள்ள முடியும்.பணத்தைச் சேர்ப்பது வேறு; சேமிப்பது வேறு. 'சேர்ப்பது என்பது அடுத்தவர்களுக்குச் சொந்தமானவற்றையும் அபகரித்துக்கொள்வது. சேமிப்பது என்பது தன்னுடைய வருமானத்தில் மிச்சம் பிடிப்பது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47946530554092,"sku":null,"price":188.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/d6ea03ce5b32867bdf9708232f1c4853.jpg?v=1784100656"},{"product_id":"அன்புள்ள-மாணவனே","title":"அன்புள்ள மாணவனே","description":"\u003cp\u003e\u003cspan\u003eநமக்காக நாம் சிருஷ்டிக்கும் உலகம் முக்கியம். நீங்கள் கண்ணால் பார்க்கும் உலகத்தைவிட அழகான ஒன்றை உங்களால் செதுக்கி கொள்ள முடியும். அந்த உலகத்தில் உங்கள் நோக்கங்கள் பூக்களாகட்டும். உங்கள் இலக்கு வேர்களாகட்டும். உங்கள் முயற்சி பாதையாகட்டும். நாம் சமைக்கும் உலகத்தில் நம்மைப் பரிகசிக்கும் யாரையும் அனுமதிக்கப் போவதில்லை. அந்த அழகிய உலகிற்கு உங்களையும் அழைத்துச் செல்லப்போகிறேன். அங்கு நாமெல்லாம் நிறைய பேசப் போகிறோம். \u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47946865803500,"sku":null,"price":164.5,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/5af4fade72f040321ca1056d605787b9.jpg?v=1784102294"},{"product_id":"வியர்வைக்கு-வெகுமதி","title":"வியர்வைக்கு வெகுமதி","description":"\u003cp\u003e\u003cspan\u003eவியர்வை சிந்தி உழைத்தவனுக்கு கூலி கொடுக்கலாம். வெகுமதி கொடுக்கலாமா? கொடுக்க முடியுமா? நீ கூலி கொடு, கொடுக்காமல் போ. ஆனால் வியர்வைக்கு நிறைய வெகுமதி உண்டு என 'வியர்வைக்கு வெகுமதி' என்று வித்தியாசமான தலைப்பிட்ட இந்த நூலின் முதல் அத்தியாயத்திலேயே பட்டியலிடுகிறார் பாருங்கள் நூலாசிரியர். 'வியர்வை சிந்தி உழைத்தவனுக்கு வியாதிகள் வருவதில்லை, உறங்குவதற்கு மாத்திரைகள் தேவையில்லை, அவன் கைகளே தலைக்கு தலையணையாகிறது. \u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47946873438444,"sku":null,"price":188.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/VEYARVAI.jpg?v=1784104566"},{"product_id":"சந்தித்ததும்-சிந்தித்ததும்","title":"சந்தித்ததும் சிந்தித்ததும்","description":"\u003cp\u003e\u003cspan\u003eசந்திக்கிற ஒவ்வொரு மனிதரிடமும் நுட்பமான கதைகள் இருப்பது அவர்களிடம் மனம்விட்டுப் பேசினால் தெரியும். அவர்கள் பண்பிலிருந்தும், வாழ்க்கை யிலிருந்தும் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய ஏதோ ஒன்று அவசியம் மறைந்திருக்கிறது ஆரோக்கியமான பார்வையோடு உலகத்தைப் பார்த்தால் அத்தனை மனிதர்களுமே சுவாராஸ்யத்திற்குப் பஞ்சமில்லாத வர்கள் என்கிற உண்மை புரியும். வெகுநாட்களாக அப்படிப்பட்ட சந்திப்புகளைக் குறித்து எழுத வேண்டும் என்கிற ஆர்வம் எனக்கு ஏற்பட்டது மங்கையர் மலரில் தொடர் எழுத வேண்டுமென்று கேட்ட போது நான் சந்தித்த சில பெண் பாத்திரங்களை வைத்து எழுதலாம் என முடிவு செய்தேன். \u003c\/span\u003e\u003cspan\u003eவிவரம் தெரிந்த நாளிலிருந்து சந்தித்த அதிசய மனிதர் களைப் பற்றி இன்னும் விரிவாக எழுதுகிற அவகாசம் ஒன்று வரும் என்று நினைக்கிறேன்\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47946947428588,"sku":null,"price":263.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/SINTHITHATHUM.jpg?v=1784105826"}],"url":"https:\/\/centaram.com\/collections\/v-iraiyanbu.oembed","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}