{"title":"தீபச்செல்வன்","description":"","products":[{"product_id":"சயனைட்","title":"சயனைட்","description":"\u003cp\u003eமுள்ளிவாய்க்கால்இனப்படுகொலைக்கு முன்னதாக வன்னிப்பெருநிலப்பரப்பில் நிறுவப்பட்டிருந்த நிழலரசு. அந்த நிழலரசின் கீழ்மக்கள் பாதுகாப்போடும் விடுதலையுணர்வோடும் வாழமுடிந்ததொரு பொற்காலம், போராளிகளது தன்னலங் கருதாத அர்ப்பணிப்பு, அவர்தம் ஒப்பிடற்கரிய வீரம் இன்ன பிறவற்றைப் பற்றி, வளவன் என்ற முதல்நிலைப் போராளியைமுன்வைத்து தீபச்செல்வனின் 'சயனைட்' நாவல் பேசுகிறது. தமது இனிய இளமைப்பருவத்தைமண்ணின், மக்களின் விடுதலைக்காக அர்ப்பணித்த அவர்கள். சுயகௌரவத்துடன் வாழத் தகந்த சூழலும் வாய்ப்புகளும் இல்லாமற் போனதேன்? என்ற கேள்வியுடன் சமூகத்தால்மட்டுமன்றி. குடும்பத்தாலும் கைவிடப்படும் ஒரு போராளியின் மனநிலையைநுணுக்கமாகச் சித்தரிக்கிறது நாவல். ஈழப் போருக்குப் பிறகானசூழலைப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்ட படைப்புகளுள் மிக முக்கியமானதொரு வரவு 'சயனைட்'\u003c\/p\u003e\n\u003cp\u003eதமிழ்நதி\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47676205433068,"sku":null,"price":338.4,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/3253cb0b451435168d0947a5758044a8.jpg?v=1779871144"},{"product_id":"பயங்கரவாதி","title":"பயங்கரவாதி","description":"\u003cp\u003e\u003cspan\u003eமௌனிகளாய் இருப்போருக்காக மாத்திரமின்றி எங்கள் கதைகளை திரிப்போருக்கு எதிராயும் என் புனைவின் குரலைத் தருகிற இப் பயணம் துப்பாக்கியின் குழல்மீதுதான் நிகழ்கிறது எதிரில் துப்பாக்கி ஏந்திய இராணுவம் கண்காணிக்கும் தருணங்களில்தான் கிளிநொச்சி நகரப் பூங்காவிலிருந்து ‘பயங்கரவாதி’ கதையின் முதல் பக்கங்களை எழுதத் துவங்கினேன். அதே நகரத்தில் அமர்ந்தபடியே இறுதிப் பக்கங்கள்வரை தினமும் எழுதி முடித்தேன். வாழ்வையும் எழுத்தையும் போராட்டமாக்க வேண்டும் என்பதை காலம் கற்றுத் தந்திருக்கிறது. கவிதைகளுக்காகவும் எழுத்துக்களுக்காகவும் தேடப்படும் காலத்தில் எழுத்தை ஒரு சுவாசமாக மாத்திரமின்றி ஆயுதமாகவும் பற்றிக் கொள்ள வேண்டிய நிர்பந்தம் கைகளில் தரப்பட்டிருக்கிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47676415377644,"sku":null,"price":338.4,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/ba44f8b024ae1a292cbfce8ec06ed957.jpg?v=1779874822"},{"product_id":"நடுகல்","title":"நடுகல்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஆயுதப் போராட்டத்திற்கு செல்லும் சிறுவனை பிரதான பாத்திரமாகக் கொண்டு ஈழப்போரைப் பேசும் நாவல் நடுகல். , துப்பாக்கிகளும் பீரங்கிகளும் ஆக்கிரமிப்பாளர்களின் குரல்களும் மாத்திரம் எங்களை இனப்படுகொலை செய்யவில்லை. எங்களுக்கு எதிரான புனைவுகளும் எங்களை கொலை செய்தன. வன்புணர்ந்தன. எங்கள் குரல்களை நசுக்கின. நாம் எப்படி வாழ்ந்தோம்? எதை விரும்பினோம்? எவை எம் கனவுகள்? குழந்தைகளின் பார்வையில் போரையும் வழ்வையும் பேசும் இரு சிறுவர்களின் கதையே ‘நடுகல்’.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47684947378412,"sku":null,"price":225.6,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/e6f78666a2e680ac1c88093408443de5.jpg?v=1780035466"}],"url":"https:\/\/centaram.com\/collections\/theepachelvan.oembed","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}