{"title":"தி. ஜானகிராமன்","description":"","products":[{"product_id":"மரப்பசு","title":"மரப்பசு","description":"\u003cp\u003e\u003cspan\u003eமரப்பசு எழுபதுகளின் தொடக்கத்தில் கணையாழி இதழில் வெளிவந்து 1975இல் நூல் வடிவம் பெற்றது. அன்று முதல் இன்று வரை நாற்பது ஆண்டுகளாக இலக்கிய உலகில் தொடர்ந்து விவாதிக்கப்பட்டும் வருகிறது - ஆதரவாகவும் எதிராகவும். தி. ஜானகராமன் நாவல்களில் மிக நவீனமான படைப்பு ‘மரப்பசு’. அவரது பிற நாவல்கள் கடந்தகாலத்தின் மறு உருவாக்கங்கள். ஆனால் நிகழ்காலத்தை நேர்முகமாக எதிரொளித்த படைப்பு ‘மரப்பசு’. பிற நாவல்கள் வாழ்வனுபவத்தின் மீதான படைப்புகள். அவற்றில் கருத்துக்கள் பின்புலமாகவே அமைந்தவை. மரப்பசு கருத்தை முன்னிறுத்தி வாழ்வை பாதித்த படைப்பு. இதில் அனுபவங்கள் கருத்துக்களை வலுப்படுத்துவதற்கான காரணிகளாகவே உருப்பெற்றிருப்பவை. உலகம் முழுவதும் பெண்ணியக் கருத்துகள் அலையடித்துக்கொண்டிருந்த தருணத்தில் அவற்றை தமிழில் விவாதித்த முதல் ஆக்கம் ‘மரப்பசு’. பூமியிலிருக்கும் சகல உயிர்களையும் அன்பின் கரங்களால் தழுவ விரும்பும் அம்மணி நவீன தமிழ் இலக்கியத்தில் மறக்க முடியாத பாத்திரங்களில் ஒன்று. அம்மணி மழைத் துளிபோல புதிதானவள். அதே சமயம் நதியைப் போல பழமையானவள். காற்றைப் போல் சுதந்திரமானவள். அதே சமயம் சிறகுகளின் பாதுகாப்பில் ஒடுங்க விரும்பியவள். உறவுகளைத் தேடி அலைந்தவள். அதே சமயம் தனிமையானவள். நாவலில் தன்னைப் பற்றி அம்மணி கூறும் சொற்களை மாற்றிச் சொன்னால் “மரப்பசுவாக இருந்தாலும் உயிருள்ள பசுவாக” இருக்கும் தனித்துவம் கொண்டவள்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47603506905324,"sku":null,"price":305.25,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/d0ce70365444f768a527d64990cf17e7.jpg?v=1778062382"},{"product_id":"அம்மா-வந்தாள்","title":"அம்மா வந்தாள்","description":"\u003cp\u003e\u003cspan\u003e‘அம்மா வந்தாளை’ மீறலின் புனிதப் பிரதியாகக் கொண்டாடலாம். சமூகம் நிறுவிக் காபந்து செய்து வரும் ஒழுக்க மரபைக் கேள்விக்குட்படுத்துகிறது நாவலின் கதை மையம். மனித உறவுகள் நியதி களுக்குக் கட்டுப்பட்டவை அல்ல. அவை உணர்ச்சிகளுக்கு வசப்படுபவை. இந்த இரண்டு கருத்தோட்டங்களின் ஈவாகவே மனித வாழ்க்கை இருக்கிறது; இருக்கும் என்பதை வலியுறுத்துகிறது கதை. இவ்விரு நிலைகளில் ஊசலாடுபவர் களாகவே முதன்மைப் பாத்திரங்கள் அமைகின்றன. இந்த ஊசலாட்டத்தை கலையாக்குகிறார் தி. ஜானகிராமன். ஆசாரங்களையும் விதிகளையும் மீறி மனிதர்களை நிர்ணயிப்பது அவர்களது உணர்வுகள்தாம் என்பதை இயல்பாகச் சொல்வதுதான் அவருடைய கலைநோக்கு. அந்த நோக்கம் உச்சமாக மிளிரும் படைப்புகளில் முதலிடம் வகிப்பது ‘அம்மா வந்தாள்’.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47605646688492,"sku":null,"price":212.75,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/5309ca1121f8706fea6f9c0e02d4da8a.jpg?v=1778137202"},{"product_id":"மோக-முள்","title":"மோக முள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eபல இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்ட ‘தேவதாஸ்’ திரைப்படமாகவும் பல மொழிகளில் வந்திருக்கிறது. தமிழில் இப்போது புவனா நடராஜனின் புதிய மொழிபெயர்ப்பில்.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003e\u003cspan\u003eதி. ஜானகிராமன்\u003c\/span\u003e\u003c\/strong\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eதி. ஜானகிராமன் (1921 - 1982) தி. ஜானகிராமன் தஞ்சை மாவட்டம் மன்னார்குடியை அடுத்த தேவங்குடியில் பிறந்தவர். பத்து வருடங்கள் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றியவர். பின்பு அகில இந்திய வானொலியில் பணியாற்றி ஓய்வுபெற்றார். கர்நாடக இசை அறிவும் வடமொழிப் புலமையும் பெற்றிருந்தவர். 1943இல் எழுதத் தொடங்கிய தி. ஜானகிராமன் ‘மோகமுள்’, ‘அம்மா வந்தாள்’, ‘மரப்பசு’ உள்ளிட்ட ஒன்பது நாவல்கள், நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், மூன்று நாடகங்கள், பயண நூல்கள் ஆகியவற்றை எழுதியிருக்கிறார். சிட்டியுடன் இணைந்து இவர் எழுதிய ‘நடந்தாய் வாழி காவேரி’ பயண இலக்கிய வகையில் முக்கியமான நூலாகக் கருதப்படுகிறது. ‘மோகமுள்’, ‘நாலு வேலி நிலம்’ ஆகிய படைப்புகள் திரைப்படமாக்கப்பட்டுள்ளன. ‘மோகமுள்’, ‘மரப்பசு’, ‘அம்மா வந்தாள்’ ஆகிய நாவல்களும் பல சிறுகதைகளும் இந்திய, ஐரோப்பிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. 1979இல் ‘சக்தி வைத்தியம்’ சிறுகதைத் தொகுப்பிற்கு சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது. பதிப்பாசிரியர்: சுகுமாரன் (பி.1957) கோவையில் பிறந்தவர். அச்சிதழ், தொலைக்காட்சி, நூல் வெளியீட்டுத் துறைகளில் பணியாற்றியவர். கவிஞர், கட்டுரையாளர், மொழிபெயர்ப்பாளர். இலக்கிய இதழ்களிலும் இணையத்திலும் தொடர்ந்து எழுதிவருகிறார். திருவனந்தபுரத்தில் வசிக்கிறார்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47606003597548,"sku":null,"price":730.75,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/6acf6adadf28f0e63f7a5f40f27e5457.jpg?v=1778145235"},{"product_id":"குறுநாவல்கள்","title":"தி. ஜானகிராமன் குறுநாவல்கள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eநுட்பமான சிறுகதைகள், தீர்க்கமான நாவல்கள் இவற்றுக்காக இலக்கிய வாசகர்களால் என்றும் நினைக்கப் படுபவர் தி. ஜானகிராமன். இந்த இரு புனைவு வடிவங்களைப் போலவே அவரது மேதமையை வெளிப்படுத்து பவை அவரது குறுநாவல்கள். சிறுகதையின் செரிவுடனும் நாவலின் களப்பரப்புடனும் அவர் எழுதிய ஏழு குறுநாவல்களின் தொகுப்பு இந்நூல். ஆண், பெண் உறவின் சிக்கலை, மனக் கோணலை, பரிதவிப்பை, ஆன்மீகப் பதற்றத்தை, நிறைவை, கச்சிதமான வடிவத்தில் மனதை ஈர்க்கும் நடையில் இந்த நீள் கதைகள் முன்வைக்கின்றன.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47606096658668,"sku":null,"price":389.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/b35691a2e240684bafd067652938873c.jpg?v=1778147018"},{"product_id":"நளபாகம்","title":"நளபாகம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eதி. ஜானகிராமன் ‘கணையாழி’ இதழில் தொடராக எழுதி, அவரது மறைவுக்குப் பின்னர் நூல் வடிவம் பெற்ற நாவல் ‘நளபாகம்.’ அவரது நாவல்களில் மையப்பொருளை அவ்வளவு வெளிப்படையாக உணர்த்தாத நாவலும் இதுவே. இந்தப் பூடகமே நாவலை இன்றும் சுவாரசியமான வாசிப்புக்கு உரியதாக நிலைநிறுத்துகிறது. சுவீகாரப் பிள்ளைகள் வாயிலாகவே தொடரும் தனது குடும்ப பாரம்பரியத்தை ரத்த உறவு மூலம் வலுப்படுத்த ரங்கமணி மேற்கொள்ளும் அபாயகரமான செயலே நாவலின் மையம். மகன் துரை மூலம் மகப்பேறு வாய்க்காத மருமகள் பங்கஜத்துக்குத் துணையாக காமேச்வரனை அழைத்துவந்து வீட்டில் தங்கவைக்கிறாள். அம்பாள் உபாசகனான அவனது வருகைக்குப் பின் மருமகள் கருத்தரிக்கிறாள். அந்த அற்புதம் நிகழ்ந்தது காமேச்வரனின் பூஜையாலா? அவனது இருப்பு தம்பதியரிடையே கூட்டிய அன்னியோன்னியத்தாலா? இந்த மர்மத்தைத் தனக்கு ஆகிவந்த பின்புலத்தில், அறியவந்த மனிதர்களின் சாயலில் வசீகர மொழியில் சொல்கிறார் தி.ஜா. பச்சாதாபம், காமம், ஆன்மீகம் ஆகிய மூன்றின் கலவையான வண்ணத்தில் மிளிர்கிறது இந்தப் படைப்பு. Thi.Janakiraman wrote this novel as a series on the magazine ‘Kanaiyazhi’. It was published as a book posthumously. Poet Sukumaran the editor Thi.Janakiraman’s collected short stories says Thi.ja was never tired of celebrating humanity in his works. Humans are the central themes of his works, bound in their situations and filled with emotions. It’s an unique novel among his other novels. The theme is abstract and the abstractness makes it more intriguing for the reader. The novel is about an dangerous attempt by Rangamani, who is determined to continue her family heritage by a blood related scion instead of adopted children. Tricks, Prayers, Intimacy all are entwined in a story told in the enchanting writing style of Thi.Ja. The novel speaks of pity, lust and spirituality all in an intimate language.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003e\u003cspan\u003eதி. ஜானகிராமன்\u003c\/span\u003e\u003c\/strong\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47606253945068,"sku":null,"price":360.75,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/3da41d07f223b39eb5d31daebb8a48b2.jpg?v=1778147945"},{"product_id":"சிலிர்ப்பு","title":"சிலிர்ப்பு","description":"\u003cp\u003e\u003cspan\u003eசிறுகதை எழுத்தாளர்களில் அதிக வசீகரம் கொண்டவர் தி. ஜானகிரானம். அபூர்வமான அழகுணர்ச்சிகொண்ட இவர் நினைவில் நீங்காது நிற்கும் அற்புதமான பல சிறுகதைகளைப் படைத்திருக்கிறார். சிரஷ்டியின் விசித்திரங்களை மேடையேற்றி, கடைசி நாற்காலியில் அமர்ந்து, புன்னகையுடன் பார்த்துக்கொண்டிருந்தவர். மனிதனின் வீழ்ச்சியையும் பிறழ்வையும் த்த்தளிப்பையும் அனுதாபத்துடன் பார்த்தவர். ஒழுக்கம், தர்மத்தின் விதிகள் இவற்றைத் தாண்டி உணர்வு நிலைகளே மனித வாழ்வைத் தீர்மானிக்கின்றன என்பதில் நம்பிக்கை கொண்டிருந்தவர். - சுந்தர ராமசாமி\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003e\u003cspan\u003eதி. ஜானகிராமன்\u003c\/span\u003e\u003c\/strong\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eதி. ஜானகிராமன் (1921-1982) தி. ஜானகிராமன் தஞ்சை மாவட்டம் மன்னார்குடியை அடுத்த தேவங்குடியில் பிறந்தவர். பத்து வருடங்கள் பள்ளியாசிரியராகப் பணியாற்றியவர். பின்பு அகில இந்திய வானொலியில் பணியாற்றி ஓய்வுபெற்றார். கர்நாடக இசை அறிவும் வடமொழிப் புலமையும் பெற்றிருந்தவர். 1943இல் எழுதத் தொடங்கிய தி. ஜானகிராமன், ‘மோக முள்’, ‘அம்மா வந்தாள்’, ‘மரப்பசு’ உள்ளிட்ட ஒன்பது நாவல்கள், நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், மூன்று நாடகங்கள், பயண நூல்கள் ஆகியவற்றை எழுதினார். சிட்டியுடன் இணைந்து எழுதிய ‘நடந்தாய் வாழி காவேரி’ பயண இலக்கிய வகையில் முக்கியமான நூலாகக் கருதப்படுகிறது. ‘மோக முள்’, ‘நாலு வேலி நிலம்’ ஆகியன திரைப்படமாக்கப்பட்டுள்ளன. ‘மோக முள்’, ‘மரப்பசு’, ‘அம்மா வந்தாள்’ ஆகிய நாவல்களும் பல சிறுகதைகளும் இந்திய, ஐரோப்பிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. 1979இல் ‘சக்தி வைத்தியம்’ சிறுகதைத் தொகுப்பிற்கு சாகித்திய அக்காதெமி விருது வழங்கப்பட்டது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47606335963372,"sku":null,"price":444.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/e9b5f1eb0c8560e4701a0dad5c9ee12e.jpg?v=1778151562"},{"product_id":"சிவப்பு-ரிக்‌ஷா","title":"சிவப்பு ரிக்‌ஷா","description":"\u003cp\u003e\u003cspan\u003eஒரு சொல் குறைபடாமலும் ஒரு சொல்லை மிகையாகக் கொள்ளாமலும் தேர்ச்சியுடன் கச்சிதமாக உருவாக்கப்பட்டவை தி.ஜா.வின் கதைகள். தனது அனுபவ உலகத்தை முன்வைக்க எந்தெந்த வடிவங்கள் துணையாக அமையுமோ என்று அந்தரங்கமாகப் பரிசீலித்தே தனது கதைகளை உருவாக்கியிருக்கிறார். அவற்றை வெகுஅநாயாசமாகவே மேற்கொண்டிருக்கிறார் என்பதன் சான்று அந்தக் கதைகளில் மிளிரும் மேதைமை. தன்னைச் சுற்றிலுமுள்ள உலகம் சிறிதும் பெரிதுமாக, சாதாரண அசைவுகளில்கூட வியப்புகள் நிறைந்து இயங்குவதை ரசனையுடன் வெளிப்படுத்துபவை தி.ஜா.வின் கதைகள். அந்த இயக்கத்தின் ஆதாரப் புள்ளியான மனித இயல்பைக் கரிசனத்துடன் வெளிப்படுத்துகிறார். எளிய மனிதர்களின் அசாதாரணத் தருணங்களாக அவை உருமாற்றம் கொள்கின்றன. தமிழில் இதுவரை வெளிவந்துள்ள கலைத்தன்மை மிகுந்த கதைகளின் வரிசையில் சந்தேகமின்றி இடம் பெறும் கதைகள் இவை.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47652410130668,"sku":null,"price":216.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/7f29b4a7bcf20836e2b6f0434dc13486.jpg?v=1779361611"},{"product_id":"உயிர்த்-தேன்","title":"உயிர்த் தேன்","description":"\u003cp\u003e\u003cspan\u003eதி.ஜானகிராமன் நாவல்களில் மிகுந்த இலட்சியவாதத்தன்மை கொண்டது உயிர்த்தேன். பெண் நிலையை அழுத்தமாகச் சொல்லும் நாவலும் இதுவே. பெண் மனதின் இருநிலைகள் அனுசுயாவும் செங்கம்மாவும். அனுசுயா வெளிப்படையானவள். தனது இருப்பை கருத்துகளால் விளங்கிக்கொண்டவள். பெண்ணியல்பின் புறம் அவள். செங்கம்மா அந்தரங்கமானவள். வாழ்வை உணர்வின் தீவிரத்தால் அடையாளம் காண்பவள். பெண்ணியல்பின் அகம் அவள். இவ்விரு நிலைகளிலிருந்தும் மனிதர்களை நேசிப்பது தங்களது பிறவிப் பொருளாகக் கருதும் புள்ளியில் இருவரும் இணைகிறார்கள். \u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47654628360428,"sku":null,"price":329.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/da4a5f98afaf0aedff42ee2e5fabad3b.jpg?v=1779434307"},{"product_id":"மலர்-மஞ்சம்","title":"மலர் மஞ்சம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eதி. ஜானகிராமனின் இரண்டாவது நாவல் ‘மலர் மஞ்சம்’. ‘கிராம ஊழிய’னில் 1940களின் தொடக்கத்தில் தொடராக வெளிவந்த ‘அமிர்தம்’ போலவே இந்த நாவலும் ‘சுதேச மித்திரன்’ வாரப்பதிப்பில் 1960ஆம் ஆண்டில் தொடராக வெளிவந்தது. நாவலாசிரியராக தி. ஜானகிராமனுக்குக் கவனம்பெற்றுத் தந்த படைப்பும் இதுவே. பாத்திரச் சித்திரிப்பு, பின்புலவலு, மொழிச் சரளம், வாசிப்பின் உயிரோட்டம் ஆகிய கூறுகளால் தனித்துநின்ற, நிற்கும் படைப்பு. மானுட சேஷ்டைகளைக் கூர்ந்துநோக்கும் தி. ஜானகிராமனின் தீரா வியப்பும் ஆண் - பெண் உறவுச் சிக்கல்கள் பற்றிய அவரது ஓயாத விசாரணையும் துலங்கும் நாவல் இது. பலதார மணம், மரபை மீறிய காதல் என்று எழுதப்பட்ட கால அளவில் பேசப்பட்ட நாவல் இன்றைய வாசிப்பில் புதிய காலத்தின் கேள்விகளையும் முன்வைக்கிறது. \u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47655040188652,"sku":null,"price":681.5,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/6b49c3a0031782cfadc046b10c989522.jpg?v=1779437746"},{"product_id":"தி-ஜானகிராமன்-சிறுகதைகள்","title":"தி.ஜானகிராமன் சிறுகதைகள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eமுன்னோடித் தமிழ்ச் சிறுகதையாளர்களில் எல்லாத் தரப்பினராலும் ஏற்கப்பட்டவர் தி. ஜானகிராமன். அவரது கதைகள் இலக்கியத்தை வாழ்க்கை அனுபவமாகக் கருதும் தீவிரர்கள், வாசிப்பை இன்பமாக எடுத்துக்கொள்பவர்கள், பொழுது போக்குச் சுவாரசியத்தை மட்டும் நாடுபவர்கள் ஆகிய அனைவருக்கும் ஈடுகொடுப்பவை, இலக்கியத்தரமும் அனைத்துத் தரப்பின் ஏற்பும் கொண்ட கதைகளை எழுதியவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவு. வாசகர்கள் எல்லாராலும் போற்றப்படும் எழுத்தாளராக ஒருவர் கவனம் பெறுவது அரிது. அந்த அரிய வாய்ப்பைப் பெற்ற சில எழுத்தாளர்களில் தி. ஜானகிராமன் முதன்மையானவர்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47666096439532,"sku":null,"price":1682.6,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/jpg_d06d8a5c-9ec6-4ee9-aecf-c1ba21e38244.jpg?v=1779771156"}],"url":"https:\/\/centaram.com\/collections\/t-janakiraman.oembed","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}