{"title":"சுந்தர ராமசாமி","description":"","products":[{"product_id":"வாசனை","title":"வாசனை","description":"\u003cp\u003e\u003cspan\u003eதமிழின் முக்கியமான படைப்பாளிகளில் ஒருவரான சுந்தர ராமசாமி 1955முதல் 2004வரை ஐம்பது ஆண்டுகளில் எழுதியவற்றிலிருந்து தேர்ந்தெடுத்த கதைகளைக் கொண்ட தொகுப்பு இது. அவருடைய கதையுலகம், எழுத்து முறை, மொழி, கதைக்களம், கதைகளில் வெளிப்படும் பார்வை, கலைத்திறன் ஆகியவை காலப்போக்கில் எவ்வாறு மாறிவந்திருக்கின்றன என்பதைக் காட்டும் மாதிரிகள் இவை.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eதொடர்ந்து தன்னைப் புதுப்பித்துக்கொண்டே இருந்த ஒரு படைப்பாளியின் இலக்கியப் பயணத்தின் தடங்களை இக்கதைகளில் காணலாம். காலம் கடந்து நிற்கும் தன்மையும் மறு வாசிப்புகளில் புதிதாக வெளிப்படுத்திக்கொள்ளும் தன்மையும் கொண்ட இந்தக் கதைகள் கிளாசிக் தொகுப்பாக வெளியாகின்றன. இக்கதைகளின் அழகியல் கூறுகள், மொழி நேர்த்தி, நுட்பமான அவதானிப்புகள், பாத்திர வார்ப்புகள் ஆகியவற்றின் மூலம் வாசகர் பெறும் கலையனுபவம் அபூர்வமானது.\u003c\/span\u003e\u003cspan\u003e.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47603154321644,"sku":null,"price":416.25,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/d8dbfa9f19c0492819c40b8ea8c1c8ce.jpg?v=1778056181"},{"product_id":"ஒரு-புளியமரத்தின்-கதை","title":"ஒரு புளியமரத்தின் கதை","description":"\u003cp\u003e\u003cspan\u003e1966இல் முதல் பதிப்பு வெளிவந்த காலத்திலிருந்து தீவிர வாசகர்களின் கவனத்தில் இருந்துவரும் ‘ஒரு புளிய மரத்தின் கதை’ ஒரு நவீன செவ்வியல் புனைவாக நிலைபெற்றுவிட்டது. மலையாளத்திலும் இந்தியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ள இந் நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பை பெங்குயின் வெளியிட்டது. 2000த்தில் தமிழிலிருந்து நேரடியாக ஹீப்ருவில் மொழிபெயர்க்கப்பட்ட ‘ஒரு புளியமரத்தின் கதை’ குறுகிய காலத்தில் இரண்டு பதிப்புகள் கண்டதுடன் அம்மொழிக்குச் சென்றுள்ள முதல் இந்திய மொழி நூல் என்ற பெருமையையும் பெறுகிறது. ஒப்பீட்டிலக்கிய விமர்சகர் கே. எம். ஜார்ஜ் இந்நாவலை நோபல் பரிசுபெறத் தகுதியான தமிழ் நாவலாகக் குறிப்பிடுகிறார்.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003e\u003cspan\u003eசுந்தர ராமசாமி\u003c\/span\u003e\u003c\/strong\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eசுந்தர ராமசாமி (1931 - 2005) தமிழின் முன்னோடி எழுத்தாளர்களில் ஒருவரான சுந்தர ராமசாமி நாகர்கோவிலில் பிறந்தார். பள்ளியில் மலையாளமும் ஆங்கிலமும் சமஸ்கிருதமும் கற்றார். 1951இல் ‘தோட்டி யின் மக’னைத் தமிழில் மொழிபெயர்த்ததே முதல் இலக்கியப் பணி. 1951இல் புதுமைப்பித்தன் நினைவு மலரை வெளியிட்டார். இவரது முதல் கதையான ‘முதலும் முடிவும்’ அதில் இடம் பெற்றது. மூன்று நாவல்களும் பல கட்டுரைகளும் சுமார் 60 சிறுகதைகளும், பசுவய்யா என்ற பெயரில் கவிதைகளும் எழுதினார். 1988இல் காலச்சுவடு இதழை நிறுவினார். சுந்தர ராமசாமிக்கு டொரொன்டோ (கனடா) பல்கலைக்கழகம் வாழ்நாள் இலக்கியச் சாதனைக்கான ‘இயல்’ விருதை (2001) வழங்கியது. வாழ்நாள் இலக்கியப் பணிக்காகக் ‘கதா சூடாமணி’ விருதையும் (2003) பெற்றார். சுந்தர ராமசாமி 14.10.2005 அன்று அமெரிக்காவில் காலமானார்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47605719662828,"sku":null,"price":231.25,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/d95d80264730f50c637c085be34dbd46.jpg?v=1778140352"},{"product_id":"சுந்தர-ராமசாமி-சிறுகதைகள்-முழுத்தொகுப்பு","title":"சுந்தர ராமசாமி சிறுகதைகள் முழுத்தொகுப்பு","description":"\u003cp\u003e\u003cspan\u003eசுந்தர ராமசாமியின் படைப்பு ஆளுமையின் முக்கியமான பல கூறுகளை அவரது சிறுகதைகளிலேயே தெளிவாக அடையாளம் காணமுடிகிறது. சு.ரா.வின் சிறுகதைகள் வாசிப்பை ஓர் இனிய அனுபவமாக்கும் அதே நேரத்தில் தீவிரமான அனுபவத்தின் தொந்தரவுக்கும் நம்மை உள்ளாக்குகின்றன. செறிவும் நேர்த்தியும் கொண்ட மொழியோடு உறவுகொள்ளும் சுகத்தை அளிக்கும்போதே உக்கிரமான தேடலின் கனத்தையும் நம் மீது சரியச் செய்துவிடுகின்றன. மனிததுக்கத்தையும் அவலங்களையும் மட்டுமன்றி நெகிழ்வையும் விகாசத்தையும் பதிவுசெய்கின்றன. வாழ்வுக்கும் நமக்கும், காலத்திற்கும் நமக்கும், மொழிக்கும் நமக்கும் இடையேயான உறவுகளைச் செழுமைப்படுத்துவது ஒரு கலைஞனின் முக்கியமான பங்களிப்பாக இருக்க முடியும். சுந்தர ராமசாமியின் சிறுகதைகள் இதைப் பெருமளவில் நிறைவாகச் செய்திருக்கின்றன. பின்னுரையில் அரவிந்தன்\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47606013853932,"sku":null,"price":902.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/ef5fb0e91333b09202413f52e7aa058b.jpg?v=1778145651"},{"product_id":"ஜி-நாகராஜன்-படைப்பாக்கங்கள்","title":"ஜி.நாகராஜன் படைப்பாக்கங்கள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eவீன தமிழிலக்கியத்தின் தனித்துவமான படைப்பாளிகளில் ஒருவர் ஜி. நாகராஜன். \u003c\/span\u003e\u003cspan\u003eபுதிதாக ஒன்றை எட்டிப் பிடிப்பதற்கான ஆவேசம் இவருடைய படைப்புகளின் \u003c\/span\u003e\u003cspan\u003eஅடிப்படையான கூறு. \u003c\/span\u003e\u003cspan\u003eதமிழ்க் கதையுலகின் மையத்தில் இடம்பெறும் பாத்திரங்களை விளிம்புக்குத் தள்ளும் \u003c\/span\u003e\u003cspan\u003eஇவர் விளிம்புநிலையிலுள்ள மனிதர்களை இயல்பாக மையத்திற்குக் கொண்டுவருகிறார். \u003c\/span\u003e\u003cspan\u003eபாலியல் தொழிலாளர்கள் முதலான விளிம்புநிலை மனிதர்களை அசலாகவும் \u003c\/span\u003e\u003cspan\u003eஉயிரோட்டத்துடனும் பிரதிபலிப்பதில் முன்னோடியாக விளங்குபவர் ஜி. நாகராஜன். \u003c\/span\u003e\u003cspan\u003eஆகிவந்த மதிப்பீடுகளையும் பார்வைகளையும் இயல்பாக மீறும் இவருடைய எழுத்து \u003c\/span\u003e\u003cspan\u003eகெட்டிதட்டிப்போன நம்பிக்கைகளை இரக்கமில்லாமல் நொறுக்குகிறது. வாசித்து முடித்த \u003c\/span\u003e\u003cspan\u003eபிறகும் மனதுக்குள் கேட்கும் வீணையின் ரீங்காரம்போலப் படித்து முடித்த பிறகும் \u003c\/span\u003e\u003cspan\u003eமனதில் நீண்ட நேரம் அதிர்வுகளை ஏற்படுத்தும் எழுத்து இவருடையது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47606176547052,"sku":null,"price":592.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/NAGARAJANPADAIPUGAL.jpg?v=1778147542"}],"url":"https:\/\/centaram.com\/collections\/sundararamaswamy.oembed","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}