{"title":"சுஜாதா","description":"","products":[{"product_id":"என்-இனிய-இயந்திரா","title":"என் இனிய இயந்திரா","description":"\u003cdiv\u003eஎன் இனிய இயந்திரா' ஆனந்த விகடன் பத்திரிகையில் தொடர்கதையாக வெளி வந்தபோது அவ்வப்போது என்னை ஊக்குவிக்கும் கடிதங்கள் வாசகர்களிடமிருந்து வந்து கொண்டிருக்கும்.  பலர் இந்தக் கதையில் உள்ள 'விஞ்ஞானத்தை' வியந்து இப்படியெல்லாம் நடக்குமா என்று கேட்டிருந்தார்கள்.  ஒரு ஐ.ஐ.டி மாணவர் இதில் குறிப்பிட்டிருக்கும்,\"ஹோலோ கிராஃபி\" எவ்வாறு சாத்தியமில்லை என்று பூச்சி பூச்சியாக கணக்கெல்லாம் போட்டு விளக்கியிருந்தார்.\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003c\/div\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47729147478252,"sku":null,"price":131.6,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/ENINEYAEANTHIRA.jpg?v=1781157292"},{"product_id":"விருப்பமில்லா-திருப்பங்கள்","title":"விருப்பமில்லா திருப்பங்கள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஒரு ஆசாமி சொந்தமாக்க் கெட்டுப் போறானா, இல்லை சூழ்நிலையாலயான்னு என்னைக் கேட்டா சூழ்நிலைக்குத் ஆன் மார்க்கு போடுவேன்.  என் கேஸையே எடுத்துக்குங்க! நான் ஏன் படிப்பை பாதில நிறுத்தினேன்?  நல்லாத்தானே படிச்சுகிட்டு இருந்தேன்.  சொல்றேன். அதும் பின்னால கிராமத்தில, ஒருவிதமான ஸெமி கிராமத்தில் ராஜாவீட்டு கன்னுக்குட்டி மாதிரி இருந்தவன் இங்க வந்து என் வயசுக்கு பார்க்கக்கூடாத காட்சிகள் எல்லாம் பார்த்தாச்சு.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cbr\u003e\u003cspan\u003eஇவ்வாறு தொடங்கி விறுவிறுப்பாகச் செல்கிறது நாவல்.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47729150820588,"sku":null,"price":84.6,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/VIRUPAMILLA.jpg?v=1781157787"},{"product_id":"மறுபடியும்-கணேஷ்","title":"மறுபடியும் கணேஷ்","description":"","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47729153442028,"sku":null,"price":94.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/MARU2.jpg?v=1781158000"},{"product_id":"அனுமதி","title":"அனுமதி","description":"","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47729159176428,"sku":null,"price":108.1,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/ANUMATHI.jpg?v=1781158528"},{"product_id":"இளமையில்-கொல்","title":"இளமையில் கொல்","description":"\u003cp\u003e\u003cspan\u003eவாழ்வின் அசந்தர்ப்பமான சூழலில், பொய் சாட்சியாக ஒருமுறை நண்பனுக்கெதிராக சாட்சிக் கூண்டிலும், மற்றொருமுறை கொலை-யாளியாக குற்றவாளிக் கூண்டிலும் நிற்க நேர்ந்து அல்லல்படும் ஓர் இளைஞனின் கதை. உறவுகள், நட்புகள் என அவன் பந்தாடப்-படும் இந்தக் கதை 1987ல் எழுதப்பட்டது. சுஜாதாவின் சுவாரஸ்ய எழுத்தில் சுறுசுறு கதை.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47729244963052,"sku":null,"price":75.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/6002204bb6c91084b03b0de83374fe11.jpg?v=1781162358"},{"product_id":"ஓலைப்பட்டாசு","title":"ஓலைப்பட்டாசு","description":"\u003cp\u003e\u003cspan\u003e'ஓலைப்பட்டாசு' முதலிய கதைகள் சுஜாதா , குமுதம் வாரப் பத்திரிகையின் ஆசிரியராக இருந்த ஒரு வருட காலகட்டத்தில் பெரும்பாலும் அந்தப் பத்திரிகையில் எழுதிய சிறுகதைகள் மொழிபெயர்ப்புகளின் தொகுப்பு இது.ஒரு பரபரப்பான வாரப் பத்திரிகையின் அவசரத் தேவைக்கு உட்பட்டும் சிறப்பாக எழுத முடியும் என்பதற்கான சான்றுகள் இத்தொகுப்பில் உள்ள கதைகள்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47729280811244,"sku":null,"price":164.5,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/716b227e3e93c7efe8aa068c92e3f4b6.jpg?v=1781164298"},{"product_id":"சின்ன-சின்ன-கட்டுரைகள்","title":"சின்ன சின்ன கட்டுரைகள்","description":"\u003cp\u003eஅறிவியல், தொழில்நுட்பம், இலக்கியம், சினிமா, பயணம், தமிழ், சமூக நிகழ்வுகள் என பல்வேறு துறைகளை எளிமையாகவும் சுவாரஸ்யமாகவும் அறிமுகப்படுத்தும் சுஜாதாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பே \u003cstrong data-start=\"244\" data-end=\"272\"\u003e\"சின்ன சின்ன கட்டுரைகள்\"\u003c\/strong\u003e. பல்வேறு இதழ்களில் வெளிவந்த அவரது சிந்தனையூட்டும் கட்டுரைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47729289068780,"sku":null,"price":159.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/80e8104b7c6efbc0fd1a5a9a62112f9d.jpg?v=1781164846"},{"product_id":"நிர்வாண-நகரம்","title":"நிர்வாண நகரம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eவேலை கிடைக்காத, ஆதரிக்க யாருமில்லாத, எல்லோராலும் புறக்கணிக்கப்படும் இளைஞன் ஒருவன் மனிதாபிமானமற்ற சென்னை நகரத்தின்மீது கோபம் கொண்டு அதைப் பழி வாங்கப் புறப்படுகிறான். தொடர் கொலைகள் செய்யப்போவதாக காவல் துறைக்குக் கடிதம் எழுதுகிறான். ஒரு ஜட்ஜீம் டாக்டரும் கொலை செய்யப்படுகிறார்கள். அடுத்த குறி ஓர் அரசியல்வாதி என்று நாள் குறிப்பிடுகிறான். அரசியல்வாதியின் மகள் தனது தந்தையைக் காப்பாற்றுவதற்காக கணேஷ், வஸ்ந்தை அழைக்கிறாள். ஆட்டம் ஆரம்பமாகிறது. இந்த 'நிர்வாண நகரம்' குங்குமத்தில் வந்த தொடர்.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47729325342956,"sku":null,"price":94.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/NIRVAANANAGARAM.jpg?v=1781166802"},{"product_id":"ஸ்ரீரங்கத்து-தேவதைகள்","title":"ஸ்ரீரங்கத்து தேவதைகள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eதேவதைகள்’ என்று சுஜாதா இந்நூலில் குறிப்பிடும் ஒவ்வொருவரும் மனிதர்கள். அவர் வளர்ந்த, வாழ்ந்த ஸ்ரீரங்கத்தில் அழியாச் சித்திரமாக மனத்தில் பதிந்து-போனவர்கள். குண்டுரமணி, ‘ஏறக்குறைய ஜீனியஸ்’ - துரைசாமி, கடவுளுக்குக் கடிதம் எழுதும் கோவிந்து, ‘ராவிரா’ எனப்படும் ஆர். விஜயராகவன்... என எல்லோருமே பிரமிக்க வைக்கும் கதாபாத்திரங்கள். கதை மாந்தர்கள், வெறும் பாத்திரங்களாக நமக்குத் தோன்றாமல், அவர்களோடு வாழ்ந்த ஓர் அனுபவத்தை ஏற்படுத்துவதுதான் சுஜாதவின் எழுத்துக்கேயான தனிச்சிறபு. அந்த நிறைவைத் தருகிறது ‘ஸ்ரீரங்கத்து தேவதைகள்’.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47729327571180,"sku":null,"price":94.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/e9138255d0c38b0833e091171a3f813d.jpg?v=1781167172"},{"product_id":"சில-வித்தியாசங்கள்","title":"சில வித்தியாசங்கள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஇந்தப் புத்தகத்தில் உள்ள கதைகளை திரும்பப் படித்தபோது என் எழுத்து முறையில் இருக்கும் ஒரு பொதுவான அம்சம் உடனே புலப்பட்டது. அது பெரும்பாலும் எல்லாக் கதைகளையும் தன்மை ஒருமையில் எழுதி இருப்பது. அது கதை சொல்லும் எவ்வளவோ முறைகளில் ஒன்று. இந்த முறையில் இருக்கும் கட்டுப்பாடு எனக்குப் பிடிக்கிறது. கதை சொல்பவனை விட்டு விலக முடியாத நிர்பந்தத்தில் இருக்கும் சவால் என்னைக் கவர்கிறது. மேலும் எழுத்தில் உள்ள துல்யமான சந்தோஷங்களில் ஒன்று என்னால் பலவித வடிவங்களை ஏற்க முடிகிறது. என் சொந்த மன விகற்பங்களிலிருந்து விலகி என்னால் என்னை ஏழை குமாஸ்தாவாக ஆக்கிக்கொள்ள முடிகிறது. வீணை வித்வானாக பிரபலத்துக்கு அலைய முடிகிறது. \u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47729337925868,"sku":null,"price":169.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/2_94ab6a4e-a746-4dbf-99db-5fca6e995922.jpg?v=1781167691"},{"product_id":"முதல்-நாடகம்","title":"முதல் நாடகம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eமூன்று, நாடகம் உரையாடலின் அதிகபட்ச சாத்தியங்களை பயன்படுத்த வாய்ப்புள்ள ஒரு கலை, இலக்கியத்தில் உரையாடல்கள் மிகச்சிறந்த பங்களை வகிக்கின்றன. ஆனால் உரையாடலின் நுட்பங்கள் அங்கே ஊகிக்கத்தான் படுகின்றன. குரலும், பாவனையும் இணையும்போது உருவாகும் உரையாடலின் நுண்டிய அழகுகள் நாடகத்தில் வெளிப்படும் அளவு எந்தக் கலையிலும் வெளிப்பட முடியாது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47729352311020,"sku":null,"price":159.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/MUTHALNADAGAM.jpg?v=1781168032"},{"product_id":"ஜன்னல்-மலர்","title":"ஜன்னல் மலர்","description":"\u003cp\u003e\u003cspan\u003eகுற்றவாளியாக சிறைக்குச் சென்றுவிட்டுத் திரும்பும் ஒருவன், தண்டனை முடிந்து வெளிவந்ததும் தனது குடும்பத்தைத் தேடிக் கண்டுபிடிக்கிறான். அலட்சியம் காட்டும் மனைவி, பயந்து அலறும் குழந்தை, மீண்டும் பழைய குற்றத் தொழிலுக்கு அழைப்பு விடும் தோழர்கள். இவர்கள் மத்தியில் குற்ற உணர்வும், திருந்தி வாழும் ஆசையுமாக புறக்கணிக்கும் உலகத்துடன் அவன் நடத்தும் போராட்டமே கதை. விறுவிறுப்பாகச் செல்லும் இக்கதை ‘சிறைச்சாலை உண்மையிலேயே ஒரு குற்றவாளியைத் திருத்துகிறதா?’ என்கிற கேள்வியையும் அழுத்தமாக முன் வைக்கிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47729359192300,"sku":null,"price":103.4,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/JANNAL.jpg?v=1781168390"},{"product_id":"வைரங்கள்","title":"வைரங்கள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eகல்கியில் தொடராக வந்த ‘வைரங்கள்’ சுஜாதாவின் முக்கியமான நாவல்களில் ஒன்று. ராலிமுக்கு என்னும் கிராமத்தில் ஒரு ஊமை குழந்தையின் கையில் அழுக்குப் படிந்த ஒரு சிறிய கல். விலையுயர்ந்த வைரக்கல். அது கைமாறி நகரத்தின் பேராசை மனிதர்களின் கையில் சிக்கும்போது ராலிமுக்கு கிõரதமம் சட்டென்று சூழல் மாறிப்போகிறது. அங்கே எளிமையாக டீக்கடை நடத்தி வரும் ஓர் அப்பாவிக் குடும்பத்தின் அமைதி சிதறடிக்கப்படுகிறது. சம்பந்தமே இல்லதமல் ஓர் அநாதைச் சிறுவனின் உயிர் கேள்விக்குறியாகிறது\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47729362272492,"sku":null,"price":150.4,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/VAIRANGAL.jpg?v=1781168630"},{"product_id":"விவாதங்கள்-விமர்சனங்கள்","title":"விவாதங்கள் விமர்சனங்கள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஎன்னை பேட்டி காண வந்தவர்கள் மூன்று ரகம். நீ சாதித்தது ஒன்றுமில்லை, நீ எழுதுவதெல்லாம் குப்பை; துப்பறியும் செக்ஸ் கதைகள்தாம் என்று என்னைச் சீண்டிவிட்டு நான் ஏதாவது கெட்ட வார்த்தை உபயோகிக்கிறேனா என்று காத்திருக்கும் ரகம் ஒன்று. இரண்டாவது ரகம், தகவல் ரகம். நான் பிறந்த தேதி, வயது, என்ன நிறம் பிடிக்கும், என்ன தைலம், இந்த ரகம்! மூன்றாவது, அறிவுஜீவிகள். மார்க்ஸீஸம், எக்ஸிஸ்டென்ஷியலிஸம், சமுதாயப் பார்வை போன்ற வார்த்தைகள் அடிக்கடி புழங்கும் (இங்கிலீஷ் வார்த்தை அடைப்புக்குள் நிறையவே வரும்). மூன்று ரகங்களுக்கும் உதாரணங்கள் இந்தப் புத்தகத்தில் உள்ளன).நான், சினிமா நடிகர்களைச் சந்தித்த பேட்டிகள் சிலவும் இதில் உண்டு...தவிரவும், இந்தப் புத்தகத்தில் நானே எழுதிய கட்டுரைகள் சிலவும் உள்ளன. விளையாட்டு, நகைச்சுவை, புத்தக விமர்சனம், சினிமா விமர்சனம் போன்றவை பல்வேறு தருணங்களில் எழுதியவை. ஒரு கட்டுரை ஆங்கிலத்திலிருந்து மொழி பெயர்ப்பு.இந்தப் புத்தகத்தை ஒட்டு மொத்தமாகப் படித்தால் கிடைக்கிற வடிவம் என் நிஜவாழ்வின் வடிவத்தை விட கொஞ்சம் பெரிசானது; இது நானல்ல, அவ்வப்போது நான்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47729415127276,"sku":null,"price":282.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/85ede62ba9e935302d0a7c5907b8d429.jpg?v=1781169331"},{"product_id":"நிஜத்தைத்-தேடி","title":"நிஜத்தைத் தேடி","description":"\u003cp\u003eசுஜாதாவின் ஆரம்பகால படைப்புகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள் மற்றும் ஒரு குறுநாவலை உள்ளடக்கிய சுவாரஸ்யமான தொகுப்பே \u003cstrong data-start=\"167\" data-end=\"187\"\u003e\"நிஜத்தைத் தேடி\"\u003c\/strong\u003e. மனித மனத்தின் ஆழங்கள், அன்றாட வாழ்க்கையின் எதிர்பாராத திருப்பங்கள், உறவுகளின் சிக்கல்கள் மற்றும் சமூகத்தின் பல்வேறு முகங்களை விறுவிறுப்பாகப் பதிவு செய்யும் படைப்புகள் இதில் இடம்பெற்றுள்ளன.\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47729576673516,"sku":null,"price":159.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/29d5ef564ab0b19d74d985efa3ed54db.jpg?v=1781170559"},{"product_id":"பாதி-ராஜ்யம்","title":"பாதி ராஜ்யம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஇப்படித்தான் நகரப்போகிறது என்று எந்த நொடியில் நீங்கள் யூகிக்க ஆரம்பிக்கிறீர்களோ அந்த நொடியில்தான் கதை புது வேகம் எடுத்து புது திசையில் பயணம் செய்யும். இப்படித்தான் முடியப்போகிறது. என்று சர்வநிச்சயமாக எப்போதெல்லாம் முடிவெடுக்கிறீர்க்ளோ அப்போதெல்லாம் ஏமாந்துபோவீர்கள்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47729587847404,"sku":null,"price":169.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/PAAATHIRAJYAM.jpg?v=1781170627"},{"product_id":"அப்ஸரா","title":"அப்ஸரா","description":"\u003cp\u003e\u003cspan\u003eகொன்றவன் எதையும் மறைக்க விரும்பியதாகத் தெரியவில்லை. அவனிடம் ஒரு ஒழுங்கு இருக்கிறது. அவள் கைப்பை பக்கத்தில் ஒழுங்காக நிறுத்திவைக்கப்பட்டு இருந்தது. அந்தப் புத்தகமும் அப்படியே உடல் நன்றாக மூடப்பட்டிருந்தது. கைரேகைகள் பதிவதைப்பற்றி அவன் கவலைப்படுகிறவனாகத் தெரியவில்லை. அந்தப்பையில் மிகத் தெளிவாக அவனுடைய விரல் அடையாளம் பதிந்திருக்கிறது. அவன் சட்டையின் நூல் ஒன்று அகப்பட்டிருக்கிறது. அதை லாபரட்டரிக்கார்ர்கள் என்ன செய்யப்போகிறார்கள். தெரியாது அப்புறம் இந்த அப்ஸரா.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47729653776620,"sku":null,"price":122.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/APSARA.jpg?v=1781171054"},{"product_id":"விக்ரம்","title":"விக்ரம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஅக்னி புத்திரன் என்கிற இந்திய ராக்கெட் எதிரிகளால் கடத்தப்-படுகிறது. கடத்தப்பட்ட அந்த அக்னி புத்திரனை மீட்பதற்காக உளவுத்துறை இளைஞன் விக்ரம் களமிறங்குகிறான். கம்ப்யூட்டர் பெண் இஞ்சினியர் ப்ரீத்தி என்பவளுடன் சலாமியா என்கிற வினோத ராஜ்ஜியத்துக்கு பயணமாகிறான். ஏராளமாக ஒரு ராஜா, தாராளமாக ஒரு ராஜகுமாரி, வில்லன் ராஜகுரு என்று சலாமி-யாவில் பயணிக்கும் ஆக்ஷன் நிரம்பிய சாகச ஜிலு ஜிலு கதை. ‘விக்ரம்’ என்ற பெயரில் கமல்ஹாசன் நடிப்பில் உருவான சினிமாவுக்காகவென்றே எழுதப்பட்ட இந்தக் கதை திரைப்படமாக உருவாகும்போதே ஷூட்டிங் புகைப்படங்களுடன் குமுதத்தில் தொடர்கதையாகவும் வந்து ஹிட் ஆனது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47729692442860,"sku":null,"price":126.9,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/60666f2a7100c1df93e9ec2c85693115.jpg?v=1781171438"},{"product_id":"மெரினா","title":"மெரினா","description":"\u003cp\u003e\u003cspan\u003eஅந்தப்பெண் கடல் அலையை நோக்கி ஓட அரம்பித்தாள். ஓடியாங்க ஓடியாங்க என்று அவள் அலறியதை காற்று கடத்திப்\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eபோயிற்று. திலீப் சிரமத்துடன் எழுந்திருந்து கீழே கிடந்த முரளியைப்பார்த்தான். அவனிடம் சலனம் இல்லை. மூச்சுக்காற்று இருக்கிறதா என்று முகத்தருகே விரல் வைத்துப் பார்த்தான் . சொல்லத் தெரியவில்லை. மெரினா கடற்கரையில் நிகழும் ஒர் இரவு நேரச் சம்பவத்தைப் பின்னணியாகக் கொண்டு பின்னப்பட்ட கதை. கணேஷ் -வஸந்த் திருவிளையாடலுடன் சுஜாதாவுக்கே உரித்தான வியப்பூட்டும் க்ளைமாக்ஸ்.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47729725866220,"sku":null,"price":122.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/MERINA.jpg?v=1781171688"},{"product_id":"உள்ளம்-துறந்தவன்","title":"உள்ளம் துறந்தவன்","description":"\u003cp\u003e\u003cspan\u003eகல்கி இதழில் தொடராக வந்து வாசகர்களின் உள்ளம் கவர்ந்தது இந்த 'உள்ளம் துறந்தவன்.' இன்சாஃப் என்கிற மகா பெரிய தொழில் சாம்ராஜ்ஜியத்தின் சக்ரவர்த்தி ராகவேந்தர். அவரது வளர்ப்பு மகள் மஞ்சரி, ஏழையான அழகேசனைக் காதலிக்கிறாள். இன்சாஃபின் பெரும்பாலான ஷேர்கள் அவள் பெயரில் உள்ளன. ராகவேந்தர் திடீரென உடல்நிலை சரியில்லாமல் பாதிக்கப்படுகிறார். அவருக்கு உடனடியாக இதயமாற்று அறுவை சிகிச்சை செய்தாக வேண்டிய நிர்பந்தம். இந்தச் சூழலில் ராகவேந்தரின் உறவுகள் அவரது கம்பெனியைக் கைப்பற்ற சூழ்ச்சி செய்கிறார்கள். அதில் மஞ்சரி நிறையவே இழப்புகளைச் சந்திக்கிறாள். போராடுகிறாள். வீழ்த்துகிறாள்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47729808769260,"sku":null,"price":202.1,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/1dd7a940da39e8aa0af600f5b758ff05.jpg?v=1781172169"},{"product_id":"தூண்டில்-கதைகள்","title":"தூண்டில் கதைகள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஅனுபாமாவின் தியானம், ஒருநாள் மட்டும், மற்றொரு பாலு, குத்தவையின் காதல், க்ளாக் ஹவுசில் புதையல், தண்டனையும் குற்றமும் என்று இந்தத் தொகுப்பில் மொத்தம் பன்னிரண்டு சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. த்ரில், காதல், க்ரைம், விஞ்ஞானம் என்று ஒவ்வொரு கதையையும் ஒவ்வொரு விதத்தில் எழுதியிருக்கிறார். விறுவிறு வென்று கதைகளைப் படிக்க வைத்து, இறுதியில் ஓர் ஆச்சரியம், அதிர்ச்சியைக் கொடுத்து அசத்திவிடுகிறார் சுஜாதா. குமுதம் இதழில் ‘தூண்டில் கதைகள்’ வெளிவந்தபோது வாசகர்களால் பெரி்ம் பராட்டப்பட்டது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47729830527212,"sku":null,"price":235.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/cd7043d395c8647ec803a69879acf5ae.jpg?v=1781172365"},{"product_id":"ஆட்டக்காரன்-சிறுகதைகள்","title":"ஆட்டக்காரன்  சிறுகதைகள்","description":"\u003cp\u003eசுஜாதாவின் தனித்துவமான கதை சொல்லும் பாணியை முழுமையாக வெளிப்படுத்தும் சிறுகதைத் தொகுப்பே \u003cstrong data-start=\"141\" data-end=\"158\"\u003e\"ஆட்டக்காரன்\"\u003c\/strong\u003e. மனித மனத்தின் நுட்பங்கள், எதிர்பாராத திருப்பங்கள், நகைச்சுவை, மர்மம் மற்றும் சமூக வாழ்க்கையின் பல்வேறு முகங்களை சுவாரஸ்யமாகச் சித்தரிக்கும் கதைகள் இதில் இடம்பெற்றுள்ளன. இத்தொகுப்பில் 12 தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன.\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47729861820652,"sku":null,"price":164.5,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/b6c108dc14a570bb07e07b3c1511a8b9.jpg?v=1781172591"},{"product_id":"ஆர்யபட்டா","title":"ஆர்யபட்டா","description":"\u003cp\u003e\u003cspan\u003eதுப்பாக்கி வெடிக்கும் சப்தம் கேட்டது. ஆனந்த் கண்களில் ஆச்சரியத்துடன் தன் மார்பைப் பிடித்துக்கொண்டு விழுந்தான். மூச்சு\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eமுட்டியது. கையை, நம்பிக்கை இல்லாமல், அதன் ரத்தத்தை பார்த்தான். எதிரே பார்த்தான் அவன் கண்களில் வேதனையும் ஆச்சரியமும் தெரிந்தன. இந்தக்கதை எனது நண்பரும் திரைப்பட நடிகருமான ரமேஷ் அரவிந்த் அவர்கள் கொடுத்த  யோசனையின் பேரில் ஒரு கன்னடத் திரைப்படத்துக்காக எழுதியது. தமிழில் நாவல் வடிவத்தில் எழுதியதை அவர்கள் திரைக்கதையாக மாற்றிக்கொண்டார்கள். தமிழில் எழுதியதை கல்கி இதழுக்கு திரு ராஜேந்திரன் தொடர்கதை கேட்ட போது இதன் பூர்வீகத்தைச் சொல்லி விட்டுக் கொடுத்தேன். அது கல்கி இதழில் 1998-ல் பிரசுரமாகியது.  ஆர்யபட்டா' கன்னடத் திரைப்படம் ரமேஷ் அரவிந்த். சௌந்தர்யா நடித்து கர்நாடக மாநிலத்தில்  வெளிவந்தது. அந்தப்படத்தை நான் இன்னும் பார்க்கவில்லை. என் புத்தங்களை விரும்பி வாங்கிப் படிக்கும் வாசக அன்பர்களுக்கு என் நன்றி.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cbr\u003e\u003cspan\u003e                                                                                                                                                             \u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47729977065708,"sku":null,"price":164.5,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/AARYAPATTA.jpg?v=1781173604"},{"product_id":"அனிதா-இளம்-மனைவி","title":"அனிதா - இளம் மனைவி","description":"\u003cp\u003e\u003cspan\u003eஅனிதா - இளம் மனைவி’ குமுதம் இதழில் சுஜாதா எழுதிய இரண்டாவது தொடர்கதை. முதல் கதையான நைலான் கயிறு போலவே மிகுந்த பாராட்டுகளை பெற்று வாசகர்களால் மிக விரும்பிப் படிக்கப்பட்ட வசீகரக் கதை. ஒரு பெரும் பணக்காரரின் இளம் வயது மனைவியைச் சுற்றி நடக்கும் இனம் புரியாத திகிலூட்டும் சம்பவங்களின் தொடர்ச்சி, லாயர் கணேஷை களத்தில் இறக்குகிறது. வஸந்த் உருவாகாத, இணைந்திராத காலகட்டத்தில் ஒரு தனி ஹீரோவாக கணேஷைச் சந்திப்பது திரில்லான அனுபவம்தான். ‘இது எப்படி இருக்கு’ என்கிற பெயரில் இந்த இளம் மனைவி திரைப்படமாகவும் வடிவெடுத்தாள்\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47730004885740,"sku":null,"price":84.6,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/ANITHA.jpg?v=1781173866"},{"product_id":"ஐந்தாவது-அத்தியாயம்","title":"ஐந்தாவது அத்தியாயம்","description":"\u003cp\u003e\u003cspan\u003e‘ஐந்தாவது அத்தியாயம்’, கணேஷ் - வஸந்த் தோன்றும் கதை. குமுதத்தில் 2000-ல் வெளியானது. தொடர் நிறைவடைந்தபோது இதன் முடிவு பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தி, மீண்டும் மீண்டும் படிக்கவைத்தது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47736245747948,"sku":null,"price":108.1,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/65f641a703b74ce1ff3ac313b515e3e9.jpg?v=1781242998"},{"product_id":"கடவுள்-வந்திருந்தார்","title":"கடவுள் வந்திருந்தார்","description":"\u003cp\u003e\u003cspan\u003eவேலையில் இருந்து ஓய்வுபெற்ற ஒருவரின் நடவடிக்கை மறுநாளில் இருந்து மாறுகிறது. மனைவி, மகள், நண்பர்கள் எல்லோரும் அவருக்கு மன நிலை பாதிக்கப்பட்டதாக நினைக்கிறார்கள். நடத்தையின் மாற்றத்துக்கு அவர் சொல்லும் காரணத்தை யாரும் ஏற்க மறுக்கிறார்கள். பிரச்னை தீவிரமாகிறது. மந்திரவாதியில் இருந்து மருத்துவர் வரை வந்து செல்கிறார்கள். அவருக்கு என்ன பிரச்னை? அவர் எப்படிச் சமாளிக்கிறார்? இறுதியில் என்ன ஆகிறது என்பதை நாடக வடிவில் சொல்லி இருக்கிறார் சுஜாதா.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47736253939948,"sku":null,"price":126.9,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/de4c59d93ff8141c5ae3be532431a066.jpg?v=1781243212"},{"product_id":"வானத்தில்-ஒரு-மெளனத்தாரகை","title":"வானத்தில் ஒரு மெளனத்தாரகை","description":"","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47736268390636,"sku":null,"price":126.9,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/VAANATHIL.jpg?v=1781243549"},{"product_id":"மீண்டும்-தூண்டில்-கதைகள்","title":"மீண்டும் தூண்டில் கதைகள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஇறுதி வரி சொடுக்குத் திருப்பம் என்பது சுஜாதாவுக்கே உரித்தான அநாயாச உத்தி. அம்மாதிரிக் கதைகளாகவே குமுதத்தில் 1986-ல் ‘தூண்டில் கதைகள்’ எழுதி, வாசகர்களின் மனத்தைக் கொக்கி போட்டு ஈர்த்த சுஜாதா, 1995- ல் ஆனந்த விகடனில் ‘புதிய தூண்டில் கதைகள்’ கதைக்கொத்து எழுதிக் கொள்ளையடித்தார். பிறகு 2006-ல் மறுபடியும் குமுதத்தில், ‘மீண்டும் தூண்டில் கதைகள்’ என அவர் வாசகர்களை வசீகரித்து வாய் பிளக்க வைத்த பத்து கதைகள் இந்நூலில்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47736307056876,"sku":null,"price":126.9,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/c20482c668c5b3b94c1c1aebf503a7af.jpg?v=1781244561"},{"product_id":"கம்ப்யூட்டரே-ஒரு-கதை-சொல்லு","title":"கம்ப்யூட்டரே ஒரு கதை சொல்லு","description":"\u003cp\u003e\u003cspan\u003eமேற்கத்திய நாடுகளில் பிரபலமான சயின்ஸ் ஃபிக் ஷனைத் தமிழுக்கு புது அறிமுகம் செய்து வைத்தவர் சுஜாதா. அறிவியலும் கற்பனையும் சுஜாதாவும் ஒன்று கலக்கும் போது சுவாரஸ்யங்களுக்கும் ஆச்சரியங்களுக்கும் பரவசங்களுக்கும் பஞ்சம் இருக்குமா? ஒவ்வொரு கதையைத் தொடங்கும் போதும், விமானம் பறக்கத் தொடங்கும் பரவச உணர்வு! முற்றிலும் எதிர்பாராத இடத்தில் கதை முடிவடையும் போது, சட்டென்று விமானம் தரையிறங்கும் பய உணர்வு படர்கிறது. சுஜாதாவின் அக்மார்க் அறிவியல் சிறுகதை தொகுப்பு. கதை சொல்லும் பாணி மட்டுமல்ல இதிலுள்ள ஒவ்வொரு கதைக் களமும் சூழலும்கூட புதிதுதான். இந்தத் தொகுப்பிலுள்ள சிறுகதைகள், சுஜாதா எழுதத் தொடங்கிய ஆரம்ப காலத்திலிருந்து 1963லிருந்து 1972 வரை அவர் எழுதிய கதைகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவை. இவை வருஷ ரீதியில் வரிசை அமைந்திருப்பதால் அவர் எழுதிய பாணியிலும் விஷயத்திலும் மாறுதல் ஏற்பட்டிருக்கிறதா என்பதை இதைப் படிப்பவர்கள் தெரிந்து கொள்ளலாம். இந்தத் தொகுதியில் உள்ள, 'சசி காத்திருக்கிறாள்' என்கிற 1966ல் வெளிவந்த கதையை பலர் 2000 ஆண்டுகளிலும் ஞாபகம் வைத்துக்கொண்டு சுஜாதாவிடம் குறிப்பிட்டு சிலாகித்திருக்கிறார்கள்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47736313184492,"sku":null,"price":169.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/14ee90a7171b761a72f85947a4456098.jpg?v=1781244967"},{"product_id":"திசை-கண்டேன்-வான்-கண்டேன்","title":"திசை கண்டேன் வான் கண்டேன்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஆண்ட்ரமீடா காலக்ஸியில் உள்ள மிகவும் முன்னேறிய கிரகம் நோரா. அக்கிரகத்தினர் இன்டர் காலக்ஸி ரூட்டில் ஒரு மேம்பாலம் கட்டத் திட்டமிடுகிறார்கள். அதற்கு இடைஞ்சலாகக் குறுக்கிடும் பூமி கிரகத்தை அழிப்பதென்று முடிவெடுக்கிறார்கள். ஐக்கிய காலக்ஸி விதிகளின்படி எந்தக் கிரகத்தையும் அழிக்கும் முன் அந்தக் கிரகத்தின் தலைமைக்குச் செய்தி சொல்லவேண்டியது அவசியம். எனவே பூமியின் தலைமையகம் ஐ.நாவுக்கு தகவல் சொல்லி எச்சரிக்கை விடுக்க, நோரா கிரகத்தின் பிரஜை பாரி என்பவன் பூமிக்குப் புறப்படுகிறான். பேசும், பாடும், கவிதை சொல்லும் இயந்திர வாகனம் 121, மார்ஃப் என்கிற எந்த வடிவத்தையும் எடுக்கக்கூடிய சக்தி, பணத்தை உருவாக்கும் ரெப்ளிக்கேட்டர், ஆக்ஸிஜன் போல் ரிப்ரெஷ் அளிக்கும் ஆர்க்கான் குச்சிகள், நோராவில் அரசு மான்யத்தில் ஜீவிக்கும் உப தெய்வங்கள் என்று சுஜாதாவுக்கே உரிதான கற்பனை உச்சத்தில் அட்டகாசமான, ஆர்ப்பாட்டமான நகைச்சுவை விஞ்ஞானக் கதை.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47736324129004,"sku":null,"price":164.5,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/3ca3dc2f6f2a44d66d078ca8d95feaad.jpg?v=1781245221"},{"product_id":"குருபிரசாதின்-கடைசி-தினம்","title":"குருபிரசாதின் கடைசி தினம்","description":"\u003cp\u003eஒரு சாதாரண தொழிற்சாலை ஊழியரின் வாழ்க்கையில் நிகழும் ஒரு நாள் எவ்வாறு அலட்சியம், நிர்வாகக் குறைபாடுகள் மற்றும் மனிதாபிமானமற்ற அணுகுமுறையால் சோகமாக முடிவடைகிறது என்பதை உருக்கமாகச் சொல்லும் குறுநாவல்தான் \u003cstrong data-start=\"255\" data-end=\"286\"\u003e\"குருபிரசாதின் கடைசி தினம்\"\u003c\/strong\u003e.\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47736514576620,"sku":null,"price":75.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/GURUPRASATH.jpg?v=1781248801"},{"product_id":"ஏன்-எதற்கு-எப்படி-ii","title":"ஏன்? எதற்கு? எப்படி? II\"","description":"\u003cp\u003e\u003cspan\u003e'சுஜாதா' என்ற வார்த்தைக்கு அறிவியல் தமிழ் அன்பர்களின் மத்தியில் அறிமுகம் எதுவும் தேவையில்லை. அதிலும், ஜூ.வி. வாசகர்களுக்கு சுஜாதா என்றதுமே 'ஏன்? எதற்கு? எப்படி?' தான் நினைவுக்கு வரும். ஆச்சரியமூட்டும் அறிவியல் உண்மைகளை மிக எளிதாக அவர் விளக்கும்போது 'ஜாடிக்கேற்ற மூடி' போல, குபீரெனக் கிளப்பிவிடுகிற நகைச்சுவை உவமானங்களும் உச்சக்கட்ட ரசனைக்கு உள்ளானவை. 'ஏன்? எதற்கு? எப்படி?' - முதல் தொகுதி இன்றைக்கும் பல இளைஞர்களின் விருப்பத்துக்குரிய ரெஃபரன்ஸ் புத்தகமாக விளங்குகிறது. தொடர்ந்து புதிய வாசகர்களும் அதை வாங்கிப் படித்துக்கொண்டே இருக்கிறார்கள். நீண்ட இடைவெளிக்குப் பிறகு, 'கேள்வி-பதில் பகுதியை மீண்டும் ஜூ.வி-யில் தொடங்கலாம்' என்று சுஜாதாவிடம் கேட்டபோது, 'நான் தயார்... ஆனால், கேள்விகளை எழுதி அனுப்புவதில் வாசகர்களுக்குப் பழைய ஆர்வம் இருக்குமா?' என்று நியாயமான சந்தேகத்தையும் எழுப்பினார். ஜூ.வி. வாசகர்கள் மீது நான் கொண்டிருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கை இம்முறையும் பொய்க்கவில்லை.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47866105397484,"sku":null,"price":329.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/ENETHARKU2.jpg?v=1782810908"},{"product_id":"ஏன்-எதற்கு-எப்படி","title":"ஏன்? எதற்கு? எப்படி?","description":"\u003cp\u003e\u003cspan\u003eஒரு நாள் சுஜாதாவுடன் பேசிக்கொண்டிருந்தபோது, ஜூ.வி-யில் அவர் எழுத்து இன்னமும் இடம்பெறாதது பற்றிப் பேச்சு திரும்பியது. ''ஜூ.வி-யில் தொடர்கதைகள் வெளியிடுவதில்லை என்பதால், வேறு மாதிரி சிந்தித்துச் செயல்படலாம். எனக்கும் புது அனுபவமாக இருக்கும்\" என்றார். பிறகு பல ஐடியாக்கள் பற்றிப் பேசியதில் விஞ்ஞானம் பற்றி ஒரு தொடர் ஆரம்பிக்கலாம் என்று முடிவானது. அதுவே கேள்வி-பதிலாக உருவெடுத்தது! வாசகர்களின் விஞ்ஞானக் கேள்விகளுக்கு இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து பதில் அளித்தார் சுஜாதா. ஜூ.வி_க்கு ஒரு பிரத்தியேக அணிகலனாக விளங்கியது இப்பகுதி. ''ஒவ்வொரு வாரமும் இப்பகுதிக்காக குறித்த நேரத்தை ஒதுக்கி எத்தனையோ புத்தகங்கங்களைப் படிக்க நேர்ந்தது! லைப்ரரிக்குப் பல முறை செல்ல வேண்டி வந்தது. சம்பந்தப்பட்ட அறிஞர்களைச் சந்திக்க வேண்டியிருந்தது\" என்று சுஜாதா மனநிறைவோடு ஒருமுறை குறிப்பிட்டிருக்கிறார்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47866117325036,"sku":null,"price":357.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/MANASERELAX.jpg?v=1782811195"},{"product_id":"வேணியின்-காதலன்","title":"வேணியின் காதலன்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஇதில் வரும் வேணியை எந்த நகரத்திலும் நீங்கள் சந்திக்க முடியும்.ஒருவிதமான சாஸ்வதமான இந்திய கீழ் நடு வர்க்கப் பெண் இவள். இவள் தன் உயிர்வாழ்தலுக்காக ஒவ்வொரு கட்டத்திலும் போராட வேண்டும்.காதல் என்பதெல்லாம், இவளுக்கு சந்தடி சாக்கில் வரும் உணர்ச்சிகளே! கூட்டத்தில் தள்ளிக்கொண்டு செல்வது போல விதி அல்லது ஓர் அபத்தமான நியதி இவளைத் தள்ளிக்கொண்டு செல்கிறது.ஏதோ தனக்கு நல்லது என்று பட்டதைச் செய்கிறாள்.வேணியின் உண்மையான காதலன் யார் என்று நீங்கள் புத்தகத்தை படித்தபின் யோசித்துப் பார்க்கலாம்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47914620813548,"sku":null,"price":169.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/2df7cb71eaded3ff5d26c23c3d6aa884.jpg?v=1783665542"},{"product_id":"வசந்த்-வசந்த்","title":"வசந்த்! வசந்த்!","description":"\u003cp\u003e\u003cspan\u003eசுஜாதாவின் கணேஷ்-வஸந்த் தொடர்களில் வாசகர்களைப் பெரிதும் ஈர்த்த நாவல் வஸந்த்! வஸந்த்! ஒரு பழங்காலக் கிணறு குறித்த ஆராய்ச்சிக் குறிப்பும் அதன் பின்னணியில் நிகழும் குற்றங்களும் மிகவும் விறுவிறுப்பாகச் சித்தரிக்கப்படும் இந்நாவல் வாசகர்களின் யூகங்களை ஒவ்வொரு அத்தியாயத்திலும் வேறு திசைக்குத் திருப்பிவிட்டு எதிர்பாராத திருப்பங்களை உருவாக்குகிறது. சுஜாதாவின் அங்கதம் அதன் உச்சத்தைத் தொட்ட படைப்புகளில் இதுவும் ஒன்று\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47915003871468,"sku":null,"price":188.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/VASANTH.jpg?v=1783667025"},{"product_id":"பிரிவோம்-சந்திப்போம்-பாகம்-2","title":"பிரிவோம் சந்திப்போம் பாகம் 2","description":"\u003cp\u003e\u003cspan\u003eபிரிவோம்... சந்திப்போம்’ ஆனந்த விகடனில் தொடராக வெளியானது. முதல் பாகம் முடிந்ததும் உடனடியாக அடுத்த பாகத்தைத் தொடங்காமல் சில மாதங்கள் இடைவெளி விட்டு இதை சுஜாதா எழுதி முடித்தார். வாழ்க்கையில் எதையுமே அதிதீவிரமாக எதிர்கொள்ளும் இளைஞன் ரகுபதி, அலட்சியமான நடத்தைகொண்ட அமெரிக்க இந்திய இளைஞன் ராதா கிஷன், மனத்தில் குழந்தைத்தனம் மாறாத தேவதைப் பெண் மதுமிதா, தீர்க்கமான அமெரிக்க தமிழ்ப்பெண் ரத்னா என்கிற நான்கு கதாபாத்திரங்களுடன் இயங்கும் இந்தக் காதல் கதை திருநெல்வேலி பாபநாசத்தில் தொடங்கி அமெரிக்காவில் நிறைவடைகிறது. ‘ஆனந்த தாண்டவம்’ என்று சினிமாவாகவும் எடுக்கப்பட்ட கதை. இரு பாகங்களும் சேர்ந்து ஒரு புத்தகமாக முதல் முறையாக வெளியாகிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47918667497708,"sku":null,"price":222.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/2_61301467-90a7-45fc-85c0-1e09d6998ee7.jpg?v=1783680366"},{"product_id":"ஸ்ரீரங்கத்துக்-கதைகள்","title":"ஸ்ரீரங்கத்துக் கதைகள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஸ்ரீரங்கத்தை மையமாகக் கொண்டு சுஜாதா பல்வேறு காலகட்டங்களில் எழுதிய கதைகளின் தொகுப்பு. இளமைக்காலத்தின் அழிக்க முடியாத நினைவுகளை மீட்டெடுக்கும் நெகிழ்ச்சியூட்டும் சித்திரங்கள், ஒரு காலம் கடந்துபோனதன் இழப்புகள், மாறுதல்களை எதிர்கொள்ள இயலாதவர்களின் சீரழிவுகள் என்பன இக்கதைகளின் பின்புலமாக இருக்கின்றன. இரண்டு உலகங்களுக்கிடையே அலைக்கழியும் ஒரு வாழ்க்கை முறையினை விவரிக்கும் ஸ்ரீரங்கத்துக் கதைகள் சுஜாதாவின் துல்லியமான சித்தரிப்பு முறையினால் நிகழ்காலத்தையும் கடந்த காலத்தையும் உயிர்பெற்று எழச் செய்கின்றன.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47919948234988,"sku":null,"price":376.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/srirangathudevathaigal_ac39f2e5-fa6d-4513-81c4-d8e964f23510.jpg?v=1783686853"},{"product_id":"அனுமதி-1","title":"அனுமதி","description":"\u003cp\u003e\u003cspan\u003eஇந்தத்தொகுதியில் அனுமதி என்னும் சிறுகதை இரண்டு முறை தொலைக்காட்சியில் சிறு சித்தரமாக்க் காட்டப்பட்டது. இந்த நாட்களிலும் இதில் உள்ளது போன்று சபலத்துக்கு உள்ளாகும் தந்தையரும் உள்ளாகாத மகன்களும் இருக்கிறார்கள். பின்னவர்களிடம்தான் இந்த தேசத்தின் எதிர்கால நம்பிக்கைகள் உள்ளன. -சுஜாதா ஒன்பது சிறுகதைகள்,இரண்டு நாடகங்கள்+ஒரு குறுநாவல் இது தான் அனுமதி. சிறுகதைகளில் பாதிக்கப்பட்ட பெண்கள்,Cyborgs,துரோகம் செய்யும் கணவன்\/மனைவி\/Cyborg....என சுஜாதாவின் 'வழமையான' கதைமாந்தர்கள் வந்து போகின்றனர்.சிறுகதைகளில் அனுமதி,தாகம்,மஹாபலி ஆகியவை எனக்குப் பிடித்திருந்தன.குறுநாவலில் கணேஷ்-வசந்த் பெயரைக் கண்டவுடன் ஒரு உற்சாகம்.குற்றவாளியை இலகுவாய் ஊகிக்க முடிந்தாலும் சுவாரசியத்துக்கு பஞ்சமிருக்கவில்லை\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47951532916972,"sku":null,"price":216.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/6aa0981730dcbfc6debaa7c266250caf.jpg?v=1784181128"},{"product_id":"தீண்டும்-இன்பம்","title":"தீண்டும் இன்பம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eகல்லூரிக்குப் போகிற பெண் கர்ப்பமானால் என்ன ஆகும்? இந்த ஒற்றை வரியை வைத்துக் கொண்டு, ஒரு பெண்ணின் மனப் போராட்டங்களை, இயல்பு மாறாமல், வெகு யதார்த்தமாக, சுவாரஸ்யமான நாவலாகத் தந்திருக்கிறார் சுஜாதா.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47951540322540,"sku":null,"price":262.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/ebb49fa5e9132ed29ae46101c7391844.jpg?v=1784182749"},{"product_id":"ஆஸ்டின்-இல்லம்","title":"ஆஸ்டின் இல்லம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eகூட்டுக் குடும்பம். தலைவர் போல \"ஆஸ்டின் பெரியப்பா\". பொறுப்பாகக் குடும்பத்தையும் வியாபாரத்தையும் கவனித்துக்கொள்ளும் முகுந்தன், ஒரு புதிரான நோய்க்கு ஆளாகும் அவன் மகன் சிறுவன் நந்து, பொறுப்பில்லாமல் குடிகாரனாகத் திரியும் சிவா, அமெரிக்கா போகத்துடிக்கிற நிகில், அவனைக் காதலிக்கும் முறைப்பெண் நித்யா... சிறிய குறுநாவலில் ஏராளமான பாத்திரங்கள். ஆனால் கொஞ்சம்கூட அலுப்புத் தட்டாத கதை ஓட்டம். அதுதான் சுஜாதா.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47951541108972,"sku":null,"price":112.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/2214666aae83ffb85a310f7e5db3f712.jpg?v=1784183066"},{"product_id":"தங்க-முடிச்சு","title":"தங்க முடிச்சு","description":"\u003cp\u003e\u003cspan\u003eஓர் அறிமுகக் கதாநாயகி, அவளுக்குக் தமிழ் கற்றுத் தரும் ஓர் ஆரம்பநிலை சினிமா கதாசிரியன். இந்த இரு முக்கிய கதாபாத்திரங்-களுடன் சினிமா உலகின் பாசாங்குகள், பாவனைகளை நையாண்டி-யுடன் சொல்லி வரும் கதை ஒரு கட்டத்தில் கொலை, போலீஸ் என்று கிரைம் கதையாக மாறி வேகமெடுக்கிறது. சுஜாதாவுக்கே உரித்தான எழுத்து லாகவத்தில் தங்க முடிச்சு கச்சிதமாக அவிழும் விதம் வெகு சுவாரஸ்யம்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47951543599340,"sku":null,"price":156.4,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/884d072ab1f1f45a24cecd9a6e096b5a.jpg?v=1784183747"},{"product_id":"சிவந்த-கைகள்","title":"சிவந்த கைகள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eசிவந்த கைகள் சுஜாதாவின் மாத நாவல் விளையாட்டுகளில் \"சிவந்த கைகள்\" ஒன்று. மணியன் மாத இதழில் பிரசுரமானது. ஒரு மிகப் பெரிய கார்ப்பரேட் நிறுவனத்தின் மேனேஜ்மெண்ட் காடர் போஸ்டில் வேலைக்கு நுழையும் இளைஞனொருவன் எளிதில் அடைய முடியாத அதன் உச்சபட்ச உயர் பதவி நோக்கி அதிர்ஷ்டவசமாக முன்னேறுகிறான். துரதிருஷ்டவசமாக அவன் மறைத்து வைத்திருக்கும் ஒரு சின்னக் களங்கம் அவனது லட்சியத்துக்கு முட்டுக்கட்டையாக வர நேரும்போது திடுக்கென அவன் தேர்ந்தெடுக்கும் வழிமுறை, செயல்பாடு, பிராயச்சித்தம் என சுனாமி வேக சுழல் கதை.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47951566700780,"sku":null,"price":150.4,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/sivanthakaikal.jpg?v=1784185776"},{"product_id":"ஒரே-ஒரு-துரோகம்","title":"ஒரே ஒரு துரோகம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஒரே ஒரு துரோகம் 1983ல் ‘சாவி’ பத்திரிகையில் தொடர்-கதையாக வந்தது. உண்மைக்குப் பிரயத்தனப்படும் ஒரு பெண் பேராசிரியருக்கு, சுவாசமே பொய்யாக வாழ்க்கை நடத்தும் டகல்பாஜி ஒருவன் கணவனாகிறான் என்பதில் தொடங்கும் முரண்பாடான சுவாரஸ்யமான கதை, 25 வருடங்களுக்குப் பிறகு இன்றும் இளமையாக சுஜாதாவின் எழுத்து வன்மையில் வசீகரிக்கிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47951573319916,"sku":null,"price":232.05,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/0d1bc8d5ff3e64548b7c4447da6e1210.jpg?v=1784186160"},{"product_id":"மிஸ்-தமிழ்தாயே-நமஸ்காரம்","title":"மிஸ் தமிழ்தாயே நமஸ்காரம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eசினிமா உலகுக்குள் நுழைந்தபோது கோடம்பாக்கம் குறித்து சுஜாதாவுக்கு இருந்த மாறுபட்ட பார்வை; முதல் கதை எழுதிய அவரது பால்ய கால நினைவுகள்; ‘கனவுத் தொழிற்சாலை’ நாவல் குறித்து இயக்குநர் மகேந்திரன், நடிகை லட்சுமியுடனான சுஜாதாவின் கலந்துரையாடல்; விமான நிலையத்தில் வேலை பார்த்த அதிர்ச்சி அனுபவங்கள்; அவர் விமானமும் சைக்கிளும் ஓட்டக் கற்றுக்கொண்ட ஹாஸ்ய சம்பவங்கள்; இரண்டாயிரம் மைல்கள் தமிழ்நாட்டைச் சுற்றிவந்து எழுதிய பயணக் குறிப்புகள்; ஜெயகாந்தன், வண்ண நிலவன், சிவசங்கரி போன்றோருடைய சிறுகதைகள் மீதான விமரிசனம்; அவர் மனம் கவர்ந்த கவிதைகள்; இன்னும் இன்னும்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47951577252076,"sku":null,"price":176.7,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/c90a51b68aed305efe60b7ee97f3ccf6.jpg?v=1784186575"},{"product_id":"மேகத்தைத்-துரத்தியவன்","title":"மேகத்தைத் துரத்தியவன்","description":"\u003cp\u003e\u003cspan\u003e‘மாலைமதி’ இதழில் 1979ல் வெளியான நாவல். ஒன்று விட்ட சித்தப்பாவின் வீட்டில் கொத்தடிமை வாழ்க்கையை எதிர்கொள்கிற வேலை கிடைக்காத பரிதாப இளைஞன் ஒருவன், வங்கி ஒன்றைக் கொள்ளை-யடிக்கும் செயலுக்குத் தூண்டப்படுவதுதான் கதை. திட்டம், செயல், வடிவம் என்று ஒவ்வொரு கட்டமாக பயணிக்கும் வங்கிக் கொள்ளையின் இறுதிக் கட்டத்தில் வஸந்தும் தலை நுழைக்கும் சுவாரசிய-மான நாவல் இது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47951590719724,"sku":null,"price":150.4,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/3aba6f99a2762275b3d59b7485e15f99.jpg?v=1784187668"},{"product_id":"ப்ரியா","title":"ப்ரியா","description":"\u003cp\u003e\u003cstrong data-start=\"209\" data-end=\"219\"\u003eப்ரியா\u003c\/strong\u003e என்பது எழுத்தாளர் \u003cstrong data-start=\"238\" data-end=\"248\"\u003eசுஜாதா\u003c\/strong\u003e அவர்களின் மிகவும் பிரபலமான திரில்லர் நாவல்களில் ஒன்றாகும். ஒரு முன்னணி திரைப்பட நடிகை லண்டனில் நடைபெறும் படப்பிடிப்பிற்காகச் செல்லும் சூழலில் தொடங்கும் கதை, எதிர்பாராத சம்பவங்கள், மர்மங்கள், சதிகள் மற்றும் விறுவிறுப்பான திருப்பங்களுடன் நகர்கிறது.\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47951594553580,"sku":null,"price":319.6,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/PRIYA.jpg?v=1784187760"},{"product_id":"இளமையில்-கொல்-1","title":"இளமையில் கொல்","description":"\u003cp\u003e\u003cspan\u003eவாழ்வின் அசந்தர்ப்பமான சூழலில், பொய் சாட்சியாக ஒருமுறை நண்பனுக்கெதிராக சாட்சிக் கூண்டிலும், மற்றொருமுறை கொலை-யாளியாக குற்றவாளிக் கூண்டிலும் நிற்க நேர்ந்து அல்லல்படும் ஓர் இளைஞனின் கதை. உறவுகள், நட்புகள் என அவன் பந்தாடப்-படும் இந்தக் கதை 1987ல் எழுதப்பட்டது. சுஜாதாவின் சுவாரஸ்ய எழுத்தில் சுறுசுறு கதை.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47951597273324,"sku":null,"price":122.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/3457bce9b3d4a71900000d4f098970c9.jpg?v=1784188007"},{"product_id":"ஆ-சுஜாதா","title":"ஆ (சுஜாதா)","description":"\u003cp\u003e\u003cspan\u003e‘ஆ..!’ 1992ல் ஆனந்த விகடனில் தொடர்கதையாக வெளியானது. கதையின் நாயகன் கம்ப்யூட்டர் மென்பொருள் எழுதுவதில் விற்பன்னன். பெரிய நிறுவனத்தில் வேலை பார்ப்பவன். அன்பான அம்மா, அழகான மனைவி, கை நிறைய சம்பாத்தியம் என்கிற அவனது சந்தோஷ வாழ்க்கையில் திடீரென்று அவன் மண்டைக்குள் ஏதோ ஒரு குரல் கேட்கத் தொடங்குகிறது. அது அவனுக்குக் கட்டளையிடுகிறது. வசப்படுத்த முயற்சிக்கிறது. தற்கொலைக்குத் தூண்டுகிறது. இதைத் தொடர்ந்து ஸ்பிலிட் பர்சனாலிடி, முற்பிறவி, ஆவி என அலைக்கழிக்கப்பட்டு, கொலை, கைது, கோர்ட் விசாரணை என்கிற சமயத்தில் கதைக்குள் கணேஷ், வஸந்த் நுழைகிறார்கள்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47951602024684,"sku":null,"price":285.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/9202c4e6a5b75c05906a47d601bb72f9.jpg?v=1784188386"},{"product_id":"கொலை-அரங்கம்","title":"கொலை அரங்கம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eகுங்குமம் வார இதழில் வெளியான கதை ‘கொலை அரங்கம்’. ஈழ விடுதலைப் போராட்டம் தமிழகத்திலும் எதிரொலிகளை எழுப்பிய பரபரப்பான 1984 கால கட்டத்தில் அதன் தாக்கத்-தில் உருவான திரில்லர் வடிவக் கதை. கணேஷ்-வஸந்த், முதல் அத்தியாயத்தி-லிருந்தே தோன்றி கதையை நடத்தும் நாவல்களில் இதுவும் ஒன்று.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47951611560172,"sku":null,"price":159.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/KOLAIARANGAM_6ee5522b-b80f-4124-ab41-494fdd67f41f.jpg?v=1784188858"},{"product_id":"ஆட்டக்காரன்-சிறுகதைகள்-1","title":"ஆட்டக்காரன் : சிறுகதைகள்","description":"\u003cp\u003eசுஜாதாவின் தனித்துவமான கற்பனை, நகைச்சுவை, மர்மம் மற்றும் மனித மனத்தின் நுட்பமான உளவியலை ஒருங்கே கொண்ட சிறுகதைத் தொகுப்பே \u003cstrong data-start=\"174\" data-end=\"191\"\u003e\"ஆட்டக்காரன்\"\u003c\/strong\u003e. அன்றாட வாழ்க்கையில் நிகழும் சாதாரண சம்பவங்களை அசாதாரணமான திருப்பங்களுடன் சித்தரிக்கும் இக்கதைகள், வாசகர்களை தொடக்கம் முதல் முடிவு வரை விறுவிறுப்பாகக் கட்டிப்போடுகின்றன.\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47951618900204,"sku":null,"price":176.7,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/cca508ae017c2d34a9b3e7fbbd007162.jpg?v=1784188891"}],"url":"https:\/\/centaram.com\/collections\/sujatha.oembed","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}