{"title":"சுகுமாரன்","description":"","products":[{"product_id":"100-சிறந்த-சிறார்-கதைகள்","title":"100 சிறந்த சிறார் கதைகள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஇந்த நூலில், மகாகவி பாரதி தொடங்கி, மாணவி சிந்துஜா (8-ஆம் வகுப்பு) அண்மையில் எழுதிய கதைகள் வரை தொகுக்கப்பட்டுள்ளன. சிறார்களுக்கு எழுதுவதும் பதிப்பிக்கப்படுவதும் இப்போது கவனம் பெற்று வருகிறது. இந்தத் தொகுப்பிலுள்ள எல்லாக் கதைகளும் 7 முதல் 12 வயதுச் சிறார்களுக்குரியவை. குழந்தைகளைப் பற்றிய படைப்புகள், குழந்தைகளே எழுதிய படைப்புகள், குழந்தைகளுக்கான படைப்புகள் என சிறார் இலக்கியம் மூன்று வகைப்பாட்டில் அமைகின்றது. இந்தத் தொகுப்பிலுள்ள 100 கதைகளில் 60 கதைகள் சிறார்களுக்கானவை. 40 கதைகள் சிறார்களைப் பற்றியவை. எல்லாக் கதைகளுமே சிறுவர்கள் வாசித்து மகிழக் கூடியவை. கதைப்போக்கில் மானுடப் பண்புகளை நிலை நிறுத்துபவை. தமிழ் சிறார் இலக்கியத்தின் தரத்தை எடுத்துக் காட்டுபவை. சிறுவர்கள் வாசிப்பதற்கான கதைக் களஞ்சியமாகவும் ஆய்வுக்கான ஆவணமாகவும் இந்தத் தொகுப்பு விளங்கும் என்று சொன்னால் மிகையல்ல.  \u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47676292530412,"sku":null,"price":376.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/100.jpg?v=1779872383"},{"product_id":"காகம்-ஏன்-கறுப்பானது-உலக-சிறார்-நாடோடிக்-கதைகள்","title":"காகம் ஏன் கறுப்பானது? (உலக சிறார் நாடோடிக் கதைகள்)","description":"\u003cp\u003e\u003cspan\u003eசிறார்கள் நாடோடிக் கதைகளை வாசிப்பதன் மூலம் மனித குலம் சேமித்து வந்துள்ள ஞானத்தைப் பெறுகிறார்கள். இத்தொகுப்பிலுள்ள 21 கதைகளும் அத்தகைய ஞானத்தைத் தருகிறது. “காகம் ஏன் கறுப்பானது?” என்ற கதை சுயநலத்தை எதிர்க்கிறது. பொது நலத்துக்காகப் போராடுகிறது. இப்படி ஒவ்வொரு கதையும் ஓர் உண்மையைச் சொல்லுவதை படித்துப் பார்த்துச் சொல்லுங்கள்! சிறார்களுக்கு நாடோடிக் கதைகள் தான் பிடித்தமானவை என்பதையும் உணர்வீர்கள்!\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47679361515756,"sku":null,"price":113.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/dc59d7c287e3a434e0f470c9c32161eb.jpg?v=1779892026"},{"product_id":"கதைகளில்-ஒளிரும்-வாழ்க்கை","title":"கதைகளில் ஒளிரும் வாழ்க்கை","description":"\u003cp\u003eசுகுமாரன் தனக்குத்தானே ஒரு விதியை வகுத்துக்கொண்டு இந்தக் கட்டுரைகளை எழுதியிருக்கிறார். தன் ரசனையின் அடிப்படையில் சாகித்திய அகாடமி விருதுபெற்ற இருபது படைப்புகளை மட்டும் தேர்ந்தெடுத்து, அவற்றில் வெளிப்படும் வாழ்க்கையின் தரிசனங்களைத் தொகுத்துள்ளார்.\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eமு.வரதராசன், நா.பார்த்தசாரதி, ஜெயகாந்தன், ராஜம் கிருஷ்ணன், தி.ஜானகிராமன், கி.ராஜநாராயணன்\u003c\/strong\u003e\u003cspan\u003e \u003c\/span\u003eபோன்ற மூத்த தலைமுறையினரிடமிருந்து தொடங்கி, எஸ்.ராமகிருஷ்ணன், இமையம், தேவிபாரதி போன்ற இப்போதைய தலைமுறையினர் வரை இப்பட்டியலில் இடம்பெற்றிருக்கின்றனர். தமிழ்ப்படைப்புகளின் வலிமையை உணர்ந்து, படைப்புகளைத் தேடியெடுத்து ஊன்றிப் படிக்கும் ஆர்வத்தை பொது வாசகர்களிடையில் இத்தொகுதி உருவாக்கும்.\u003c\/p\u003e\n\u003cp\u003eபல ஆண்டுகால தொடர்ச்சியான தன் வாசிப்பு அனுபவத்தின் அடிப்படையில் படைப்புகளில் பிரதிபலிக்கும் வாழ்க்கை அம்சங்களைத் தொட்டுக்காட்டி, வாழ்க்கைக்கும் இலக்கியத்துக்கும் இடையில் நிலவும் உறவை உணர்த்தும் வகையில் கட்டுரைகளை அமைத்திருக்கிறார்.\u003c\/p\u003e\n\u003cp\u003eவாசகர்களுக்கு இதுபோன்ற குறிப்புகள் மிக முக்கியம். ஒரு வழிகாட்டியாக இவை அமைந்து வாசிப்பை மேம்படுத்திக்கொள்ள உதவும். நேரடி வாசிப்பில் தென்படாத அம்சங்களை, கண்டுணர முடியாத மானுட நெருக்கடிகளை அறிவதற்கும் உணர்வதற்கும் இந்த வாசிப்பு உதவியாக இருக்கும்.\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003e- பாவண்ணன்\u003c\/strong\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47684785537260,"sku":null,"price":169.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/9848b9aae4dac8fcfe0246296adccab3.png?v=1780029144"},{"product_id":"பாப்லோ-நெரூதா-கவிதைகள்","title":"பாப்லோ நெரூதா கவிதைகள்","description":"","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47723805180140,"sku":null,"price":272.6,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/PAAPLO.jpg?v=1781084112"},{"product_id":"உஸ்தாத்","title":"உஸ்தாத்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஇத்தொகுப்பிலுள்ள கதைகள் ஒவ்வொன்றும் வெவ்வேறு நிலங்களில் நிகழ்பவை. தகுந்த மொழி அமைப்பையும் வார்ப்பையும் நேர்த்தியையும் கொண்டவை. வாழ்வின் வெவ்வேறு தருணங்களில் மனிதர்களின் போக்குகளில் ஏற்படும் மாற்றங்களை அடிப்படையாகக் கொண்டிருப்பவை. பால்ய காலச் சித்திரங்களாக அமைந்த சில கதைகளுடன் காலந்தோறும் உருமாறும் பெண்களின் இருப்பை பகுத்துக்காட்டும் கதைகளே மிகுதியும் உள்ளன. அரை நூற்றாண்டு காலமாய் கவிதை, கட்டுரை, நாவல் என எழுதித் தோய்ந்த சுகுமாரனின் அனுபவமும் ஆளுமையும் இச்சிறுகதைகளில் துலக்கமாகத் தடம் பதித்திருக்கின்றன.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47745724317932,"sku":null,"price":235.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/96a0e87b3d7772f77988b0ef5644b065.jpg?v=1781513218"}],"url":"https:\/\/centaram.com\/collections\/sugumaran.oembed","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}