{"title":"சோம.வள்ளியப்பன்","description":"","products":[{"product_id":"அதிர்ந்த-இந்தியா","title":"அதிர்ந்த இந்தியா","description":"\u003cp\u003e\u003cspan\u003eதேசத்தை உலுக்கிய பண மதிப்பு நீக்கம்...\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eஇந்தியாவால் என்றென்றும் மறக்கவே முடியாத ஒரு தினமாக 8 நவம்பர் 2016 மாறிவிட்டது. 500 மற்றும் 1000 ரூபாய்த் தாள்கள் இனி செல்லாது என்னும் பிரதமரின் அறிவிப்பு ஒரு புயலைப் போல் தேசம் முழுவதும் பரவி அனைவரையும் கலங்கடித்தது. அன்று தொடங்கி இன்றைய தேதி வரை அதிர்வுகள் மறைந்தபாடில்லை.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eஆதரவு, எதிர்ப்பு இரண்டுக்கும் குறைவில்லை. பண மதிப்பு நீக்கம் காலத்தின் கட்டாயம்; தவிர்க்கமுடியாதது என்கிறார்கள் ஒரு தரப்பினர். ஆனால் சில ஆதாரமான கேள்விகளுக்கு அவர்களால் விடையளிக்க முடியவில்லை. அரசு எதிர்பார்த்ததைப் போல் கறுப்புப் பணம் ஒழிந்திருக்கிறதா? பயங்கரவாதச் செயல்கள் குறைந்திருக்கின்றனவா? வரி ஏய்ப்பு இப்போது நடைபெறுவதில்லையா? ரொக்கத்தைக் கைவிட்டுவிட்டு, டிஜிட்டல் பொருளாதாரத்துக்கு அனைவரும் மாறுவதுதான் தீர்வா?\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47635916456172,"sku":null,"price":169.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/2d48f564a2886f123d6cf8d293613939.jpg?v=1778909153"},{"product_id":"பங்குச்சந்தை-டெக்னிக்கல்-அனாலிசிஸ்","title":"பங்குச்சந்தை டெக்னிக்கல் அனாலிசிஸ்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஎந்தப் பங்கை வாங்க வேண்டும், எதை வாங்கக் கூடாது (Fundamental Analysis), எப்போது வாங்க வேண்டும், எப்போது விற்க வேண்டும் (Technical Analysis), பொருளாதாரம், Macroeconomics உள்ளிட்ட பல அதிநுட்பமான விஷயங்களை எளிய உதாரணத்துடன் தெள்ளத் தெளிவாக எடுத்துச் சொல்கிறார் பங்குச்சந்தை நிபுணர் சோம. வள்ளியப்பன்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47729224909036,"sku":null,"price":206.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/1061cf5e04cf0914b40a8ce075ca1bbc.jpg?v=1781161283"},{"product_id":"பங்குச்சந்தை-டிரேடிங்-அள்ள-அள்ளப்-பணம்-5","title":"பங்குச்சந்தை டிரேடிங் (அள்ள அள்ளப் பணம் - 5)","description":"\u003cp\u003e\u003cspan\u003eஇண்ட்ரா டே டிரேடிங்கின் அனைத்து சூட்சமங்களையும் புரிந்துகொள்ள பங்குச்சந்தையில் ஒரு டே டிரேடராக வெற்றிகரமாக வலம் வர.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47729305288940,"sku":null,"price":169.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/5_d820170e-7e32-404c-ad9b-31da6168f180.jpg?v=1781165906"},{"product_id":"மியூச்சுவல்-ஃபண்ட்","title":"மியூச்சுவல் ஃபண்ட்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஎதிர்காலத் தேவைகளைக் கணக்கில் கொண்டே ஒவ்வொருவரும் முதலீடு செய்கிறார்கள். அந்த முதலீடு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பது முதல் எதிர்பார்ப்பு. நல்ல முறையில் பெருகி செழிக்க வேண்டும் என்பது இரண்டாவது எதிர்பார்ப்பு. இரண்டும் நிறைவேறுவதற்கு ஒரு நல்ல முதலீட்டுத் திட்டம், மியூச்சுவல் ஃபண்ட். மியூச்சுவல் ஃபண்ட் என்பது என்ன? எத்தனை வகைகள் உள்ளன? எது நமக்கானவை? எந்த எந்த திட்டங்களில் எவ்வளவு முதலீடு செய்வது? எங்கிருந்து தொடங்குவது? முன் அனுபவம் அவசியமா? ஒன்றுக்கும் மேற்பட்ட முதலீடுகள் செய்வது சரியான அணுகுமுறையா? பண வீக்கம், பொருளாதார மந்த நிலை போன்றவற்றை எப்படிக் கவனத்தில் கொள்அது? முதலீட்டுக்கு எதைத் தேர்வு செய்ய வேண்டும், எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும், அதை எவ்வளவு காலத்துக்கு விட்டு வைக்க வேண்டும்? இப்படி அடிப்படைகள் தொடங்கி அனைத்தையும் விரிவாகவும் எளிமையாகவும் விளக்குகிறது இந்நூல். வேறெதையும் விட மியூச்சுவல் ஃபண்டில் கூடுதல் வருமானம் ஈட்டுவது சாத்தியம். குறிப்பாக நடுத்தர வர்க்கத்தினருக்கு மியூச்சுவல் ஃபண்ட் மிகவும் உகந்தது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47729696309484,"sku":null,"price":131.6,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/MUTUVALFUND.jpg?v=1781171448"},{"product_id":"தள்ளு","title":"தள்ளு","description":"\u003cp\u003e\u003cspan\u003eஒருவரது செயல்திறனை மதிப்பீடு செய்வது எப்படி?\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cbr\u003e\u003cspan\u003eசுமாராக பணியாற்றுபவர்கள் மேம்படுத்துவது எப்படி?\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cbr\u003e\u003cspan\u003e‘ஊழியர்களின் ஒட்டுமொத்த ஒத்துழைப்பைப் பெறுவது எப்படி?\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cbr\u003e\u003cspan\u003eவேறுப்ட்ட மனநிலையில் இருக்கும் ஊ‘ழியர்களை ஒரு புள்ளியில் ஒருங்கிணைப்பது எப்படி?\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cbr\u003e\u003cspan\u003eவேலைக்கு ஏற்ற தகுதிகளை வளர்த்துக்கொள்வது எப்படி? தகுதிக்கு ஏற்ற பணிகளைத் தேர்வு செய்வது எப்படி?\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cbr\u003e\u003cspan\u003eஊழியர்கள் தாங்கள் செய்யும் பணியில் எந்த அளவுக்கு மனநிறைவு பெற்றிருக்கிறார்கள் என்பதை எப்படிக் கண்டறிவது.?\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cbr\u003e\u003cspan\u003eஒவ்வொரு ஊழியரும் அதிகபட்ச செயல்திறனை வெளிப்படுத்தி ஊக்கத்துடன் பணியாற்றினால்தான் நிறுவனத்தோடு சேர்ந்து நாமும் அடுத்த்தடுத்த கட்டங்களுக்கு முன்னேற முடியும்.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cbr\u003e\u003cspan\u003eசெயல்திறன் அதிகரிக்க ஊக்கம் தேவை. வெளியில் இருந்து மட்டுமல்ல. உள்ளுக்குள் இருந்தும். உலகமெங்கும் நடைமுறையில் இருக்கும் மோட்டிவேஷன் தியரிகளை ஆராய்ந்து கண்டுபிடிக்கப்பட்ட நுணுக்கமான தகவல்கள், அவற்றின் மூலம் செயல்திறனை மேம்படுத்த உருவாக்கபட்ட முறைகள் ஆகியவற்றை எளிமையாக விளக்குகிறது இந்தப் புத்தகம்.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cbr\u003e\u003cspan\u003eஉங்கள் மேன்மைக்கும், உங்களுடன் பணிபுரிபைவர்களின் மேன்மைக்குமான புத்தகம் இது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47736236474604,"sku":null,"price":164.5,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/93929a7f54808e88caa1b790d30e4605.jpg?v=1781242795"},{"product_id":"எமோஷனல்-இன்டெலிஜென்ஸ்","title":"எமோஷனல் இன்டெலிஜென்ஸ்","description":"\u003cp\u003e\u003cspan\u003eநீங்கள் புத்திசாலி. அறிவாளி. திறமைசாலி. உங்களால் எத்தனையோ சாதனைகளை வெகு அலட்சியமாகச் செய்ய முடியும்! நீங்கள் நினைத்தால் இந்த உலகையே கட்டி ஆள முடியும்! ஒரு சந்தர்ப்பம் மட்டும் சரியாக அமைந்து விட்டால்.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cbr\u003e\u003cspan\u003eஅது ஏன் இதுவரை அமையவில்லை? நீங்கள் திறமைசாலி என்று தெரிந்தும்கூட உங்களைப் பயன்படுத்த ஏன் உலகம் தயங்குகிறது?\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cbr\u003e\u003cspan\u003eஇன்டர்வியூக்களில் அமர்க்களமாகத்தான் பதில் சொல்கிறீர்கள். ஆனாலும் ஏன் வேலை கிடைக்கமாட்டேன் என்கிறது?\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cbr\u003e\u003cspan\u003eஅலுவலகத்தில் உங்கள் அளவுக்குப் பொறுப்பாகச் செயல்படக் கூடியவர் வேறு யாருமே இல்லை. இது நிர்வாகத்துக்கும் தெரியும்! ஆனாலும் உங்களுக்கு உரிய பதவி உயர்வுகள் ஏன் தாமதமாகின்றன?\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cbr\u003e\u003cspan\u003eஇதெல்லாம் குரு பார்வை, சனி பார்வை, நாலில் செவ்வாய், இரண்டில் ராகு என்று யாராவது கப்ஸா விட்டால் நம்பாதீர்கள்!\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47736257806572,"sku":null,"price":112.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/EMOTIONAL.jpg?v=1781243189"},{"product_id":"உடல்-மனம்-புத்தி","title":"உடல் மனம் புத்தி","description":"\u003cp\u003e\u003cspan\u003eஅளவு கடந்த உற்சாகத்தோடும் முழு அர்ப்பணிப்பு உணர்வோடும் ஒரு பணியை எடுத்து வெற்றிகரமாகச் செய்துமுடிப்பது எப்படி? · நம் ஒவ்வொருவரிடமும் உள்ள மூன்று வலுவான ஆயுதங்களான உடல், மனம், புத்தி மூன்றையும் சரியான கலவையில், சரியான சந்தர்ப்பங்களில் பயன்படுத்துவது எப்படி? · பணியிடம், குடும்பம், சமூகம் என்று திரும்பும் திசை எல்லாம் எதிர்படும் பலவிதமான மாற்றங்களை எப்படி எதிர்கொள்வது? · தெளிவாக இலக்கு நிர்ணயித்துக்கொண்டு அதை நோக்கி அடி மேல் அடி எடுத்துவைத்து நகர்வது எப்படி? · வாட்ஸ் அப், சமூக வலைத்தளம் போன்றவற்றால் ஏற்படும் கவனச் சிதறல்களை எப்படி கையாள்வது? · மன உளைச்சலின்றி வாழ்வது எப்படி? · ஆற்றலையும் அறிவையும் பெருக்கிக்கொள்வது எப்படி? · ஒரே சமயத்தில் பலவற்றைக் கற்பது, பல பணிகளைச் செய்வது, பலவற்றில் கவனம் செலுத்துவது நல்லதா அல்லது ஒரு நேரத்தில் ஒன்றில் மட்டும் ஒட்டுமொத்த கவனத்தையும் குவிப்பது நல்லதா?\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47736267112684,"sku":null,"price":117.5,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/83cd8375c328f9be7b1be0a6e6973ae9.jpg?v=1781243629"},{"product_id":"பணமே-ஓடி-வா","title":"பணமே ஓடி வா","description":"\u003cp\u003e\u003cspan\u003eசம்பாதிக்கத் தெரிந்த அளவுக்குச்சம்பாதித்த பணத்தை நிர்வகிக்கத் தெரியவில்லை பலருக்கும். இனியாவது தெரிந்துகொள்ளவேண்டும் என்றுகூட நினைப்பதில்லை. இதில் படித்தவர் படிக்காதவர், உயர் பதவியில் இருப்பவர் சாதாரண ஊழியர் போன்ற வேறுபாடுகள் ஏதுமில்லை. நிஜத்தில் பணம் சம்பாதிப்பது அத்தனை கஷ்டமான விஷயமேகிடையாது. நம்மிடம் இருக்கும் சிறு அளவு பணமே பெரும் பணத்தைச் சம்பாதித்துவிடும். அதற்கான வழிகளை எளிமையாகச் சொல்லும் புத்தம்தான் ‘பணமே ஓடி வா’. ‘அள்ள அள்ளப் பணம்’ என்கிற பங்குச்சந்தை குறித்த புத்தக வரிசை எழுதி விற்பனையில் சாதனை படைத்த நூலாசிரியர் சோம.வள்ளியப்பன் குமுதத்தில் தொடராக எழுதிய நூல் இது. வாசகர்களால் பெரிதும் புகழப்பட்ட இப்புத்தகம் கால மாற்றத்துக்கு ஏற்ப சில புள்ளிவிவரங்கள், தகவல்கள், பின் இணைப்புகள் சேர்த்து, மேலும் சிறப்பாக உருவாகியிருக்கிறது. எக்ஸ்பிரஸ் வேகத்தில் பணம் உங்களைத் தேடி ஓடிவர இப்புத்தகம் உங்கள் பையில் இருந்தால் போதும்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47736278843628,"sku":null,"price":117.5,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/783cdc99e494e13205bea7894596ed60.jpg?v=1781243819"},{"product_id":"தடையேதுமில்லை","title":"தடையேதுமில்லை","description":"\u003cp\u003eபுத்தகங்களை மட்டுமே படித்துவிட்டு எவரும் வெற்றியாளர் ஆகிவிடமுடியாது. \u003c\/p\u003e\n\u003cp\u003eவாழ்க்கையைவிடச் சிறந்த வாத்தியார் இந்த உலகில் இல்லை. எனவே \u003c\/p\u003e\n\u003cp\u003eஅனுபவங்களிலிருந்தும் ஒருவர் கற்கவேண்டியிருக்கிறது. \u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47736346345708,"sku":null,"price":188.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/THADAI.jpg?v=1781247250"},{"product_id":"முன்னேற்றம்","title":"முன்னேற்றம்","description":"","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47736348410092,"sku":null,"price":117.5,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/MUNNETRAM.jpg?v=1781247527"},{"product_id":"நல்லதாக-நாலு-வார்த்தை","title":"நல்லதாக நாலு வார்த்தை","description":"\u003cp\u003e\u003cspan\u003eபணம் முக்கியம். ஆனால் அது ஒன்று மட்டுமே வாழ்வின் குறிக்கோளாக இருக்க-முடியாது அல்லவா? மனம் நிறைவாக இல்லாதபோது எவ்வளவு பணம் இருந்து என்ன பயன்? எத்தனைப் பெரிய பதவியில் இருந்து என்ன பலன்?\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cbr\u003e\u003cspan\u003eஎன் வீடு, என் மனம், என் நிம்மதி என்று இருப்பதும்கூடச் சாத்தியமில்லை. வீட்டைக் கடந்து சமூகத்தோடு நாம் உறவாட வேண்டியிருக்கிறது. பலவிதமான மனிதர்களோடு நல்லுறவு கொள்ளவேண்டியிருக்கிறது. அதை எப்படிச் செய்வது? மனிதர்களை எப்படிப் புரிந்துகொள்வது? மகிழ்ச்சியை எப்படிக் கண்டடைவது? குடும்பம், அலுவலகம், சமூகம் என்று எங்கும் அன்போடும் பண்போடும் திகழ்வது எப்படி? வாழ்வில் எல்லாமும் பெற்று வளமோடும் மனநிறைவோடும் வாழ்வது எப்படி?\u003c\/span\u003e\u003cbr\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47736553767148,"sku":null,"price":141.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/NALLATHAGA.jpg?v=1784194970"},{"product_id":"பங்குகளில்-பணம்","title":"பங்குகளில் பணம்","description":"\u003cp\u003e\u003cspan\u003e‘உண்பது நாழி, உடுப்பது நாலு முழம்’ என எளிமையான வாழ்க்கை அவ்வை காலத்தில் இருந்திருக்கிறது. இப்போது, கம்ப்யூட்டர், இன்டர்நெட் ஆகிவற்றைத் தொடர்ந்து செயற்கை நுண்ணறிவு AI-யும் வந்துவிட்டது. கரு உருவா(க்கு)வதிலிருந்து கல்லறை போகும் வரை எல்லாவற்றிலும் புதிய தொழில்நுட்பங்கள் நுழைந்துவிட்டன. அதனால், அடிப்படையான உணவு, தொலைத்தொடர்பு, பிரயாணம், வாழுமிடம், கல்வி, மருத்துவம் போன்றவற்றுக்கே பெரும் செலவு செய்தாகவேண்டிய கட்டாயம். இவற்றை எல்லாம் சமாளித்து, கெளவரவமாக வாழ வருமானம் தொடர்ந்து அதிகரிக்கவேண்டும். ஊதியம் தவிர வேறு ஏதாவது வருமானம் வேண்டும். தங்கம், வங்கி வைப்புக்கு கிடைக்கும் வட்டி போன்றவை மிகக் குறைவாக இருக்கின்றன. எல்லோரும் இல்லை என்றாலும் கணிசமானவர்கள் பங்குகளில் முதலீடு செய்து லாபம் செய்கிறார்கள். வேறு சிலர் பரஸ்பர நிதிகள் மூலம் கூடுதல் வருமானம் பார்கிறார்கள். அவர்கள் பணம் பார்க்கும் பங்குச் சந்தை என்றால் என்ன? அதில் எவர் முதலீடு செய்யலாம்? அதில் பணம் இழக்காமல் இருக்க என்ன வழிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்? இப்படிப்பட்ட சில முக்கியமான கேள்விகளுக்குத் தமக்கே உரிய முறையில் எவருக்கும் புரியும் விதமாக விவரிக்கிறார், பங்குச் சந்தையில் 30 ஆண்டுகளுக்கும் அதிகமான அனுபவம் உள்ள, பங்குகள், முதலீடு, இன்சூரன்ஸ், தங்கம், பொருளாதாரம் குறித்து கட்டுரைகள், தொடர்கள், மற்றும் பல புத்தகங்கள் எழுதியிருக்கும் சோம. வள்ளியப்பன். ஆங்கிலப் புத்தகங்கள், யுடியூப் வீடியோக்கள் போன்ற எதிலும் கிடைக்காத எளிமையான விளக்கங்களை சுவாரசியமாக, ஒரு குறுக்குவெட்டுத் தோற்றமாகப் போகிற போக்கில் காட்டுகிறார் அபுனைவுகளில் சுவாரஸ்யமான நடையைக் கடைப்பிடிக்கும் டாக்டர் சோம. வள்ளியப்பன்\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47944760656108,"sku":null,"price":357.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/8a970349656fa7fd5e73a61df9f572c0.png?v=1784029765"},{"product_id":"உலகம்-நாடு-வீடு-பணம்-கேள்வி-பதில்கள்-பகுதி-2","title":"உலகம் நாடு வீடு பணம்  ( கேள்வி - பதில்கள் பகுதி -2 )","description":"\u003cp\u003e\u003cspan\u003eஅறிவியல் கண்டுபிடிப்புகள், அவற்றால் விளைந்த தொழில்புரட்சி, அதன் மூலம் பெரு பொருளாதார வளர்ச்சி, அதன்பின் அந்த வீச்சை அதிகரித்த தகவல் தொழில்நுட்பம், இன்டர்நெட். அதெல்லாம் போதாது என்று இப்போது, ‘இது உதவியா ஆபத்தா?' என்று யோசிக்க வைக்கிற அளவுக்கு வளர்ந்து நிற்கிற, செயற்கை நுண்ணறிவு என்கிற ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ். AI. சாதாரண சம்பளங்கள் போதாது. அடிக்கடி மேம்பாடு காணும் சில பத்தாயிரம் ரூபாய்களுக்கான விலையில் ஆண்ட்ராய்டு போன்கள்: லூனா மொப்பெட் எல்லாம் போய் சில  லட்சங்களில் மோட்டார் சைக்கிள் விலைகள்.  வாஷிங் மெஷின், ஏசி போன்றவை தாண்டி, சில கோடி ரூபாய்களுக்கு கார்கள்.  முழு இடமும் கிடையாது. வீடு அல்ல. வெறும் பிளாட் என்பதே பல கோடி ரூபாய்கள். ஆக, பணம் இல்லாமல் முடியாது. செலவு செய்ய மட்டுமல்ல. சம்பாதிக்கவும் 100 வழிகள். கடின உழைப்பு அல்ல. திறமையான அணுகுமுறை இருந்தால் போதும்.  பணம் கொட்டும். ‘மண்ணுல போடு அல்லது. பொன்னுல போடு’ என்கிற காலம் இல்லை. முதலீட்டிலும் பாண்டுகள், பரசுர நதிகள், கோல்ட் பீஸ், கிரிப்டோ என பல புது வகைகள். இப்படிப்பட்ட தினம் தினம் மாறிக்கொண்டிருக்கிற பணம் இல்லாதவர்களுக்கு இல்லாமல் ஆகிக் கொண்டிருக்கிற உலகத்தில் வாழ, பணத்தை உண்டாக்க பாதுகாக்க முதல் முக்கிய தேவை பணம் குறித்த புரிதல். அந்த முக்கியமான தேவையைக் கடந்த மூன்று தசமங்களாக தமிழ் மக்களுக்கு எளிமையான வழிகளில் பல்வேறு ஊடகங்கள் வழியாகவும் புத்தகங்கள் வழியாகவும் தொடர்ந்து விளக்கிக்கொண்டிருப்பவர் எழுத்தாளர் சோம வள்ளியப்பன். தமிழிலும் ஆங்கிலத்திலும் எண்பதுக்கும் மேற்பட்ட  புத்தகங்கள் எழுதிய சோம வள்ளியப்பன் எழுதிய,  புதிய புத்தகம், ‘உலகம்-நாடு-வீடு-பணம்’.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47946106667244,"sku":null,"price":206.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/8d0dab8ca94dd8913a339f643ac5abd7.webp?v=1784089997"},{"product_id":"பங்குச்-சந்தை-சில-குறிப்புகள்","title":"பங்குச் சந்தை: சில குறிப்புகள்","description":"\u003cp dir=\"ltr\"\u003e\u003cspan\u003eபங்குச்சந்தை என்பது, பணத்தைப் போட்டு பணத்தை எடுக்கும் இடம்.  ஆனால், எல்லோரும் போடுகிற பணத்தை எடுப்பதில்லை.  சிலர் தொடர்ந்து அங்கே  பணத்தை தொலைக்கிறார்கள். \u003c\/span\u003e\u003cspan\u003eஆனால்,  வேறு சிலர் அதன் நுட்பத்தை சரியாக புரிந்து கொண்டு, நிதானமாக, சரியான முடிவுகள் எடுத்து, தொடர்ந்து பணம் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47946198089964,"sku":null,"price":188.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/PANGUSANTHAI.webp?v=1784093800"},{"product_id":"நிதி-சேமிப்பு-முதலீடு-வரி","title":"நிதி சேமிப்பு முதலீடு வரி","description":"\u003cp\u003e\u003cspan\u003eஏழை பணக்காரன், ஆண் பெண், சிறியவர் பெரியவர் வேறுபாடு இன்றி, அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று, பணம். சம்பாதிக்கும் வழி மட்டுமல்ல. எப்படி செலவு செய்யலாம், எப்படி செய்யக்கூடாது, மீதம் செய்யும் வழிகள் என்ன, சேமித்ததை எதில் முதலீடு செய்யலாம் ? என்று பணத்தைப் பற்றி தெரிந்து கொள்ள எவ்வளவோ இருக்கிறது. தவிர, வருமான வரி, தேச பொருளாதாரம், சர்வதேச காரணங்களால் நாட்டில் ஏற்படும் பொருளாதார பாதிப்புகள், தங்கம், கச்சா எண்ணெய் என பணம் குறித்து அறிந்து கொள்ள வேண்டியவை ஏராளம். பணம் குறித்து தொடர்ந்து பல ஆண்டுகளாக பயிற்சி வகுப்புகள் நடத்துபவரும், அள்ள அள்ள பணம் பணம் சில ரகசியங்கள் போன்ற 15 புத்தகங்கள் எழுதியிருப்பவருமான , சோம வள்ளியப்பன் மக்களின் பணம் குறித்த சந்தேகங்களுக்கு சொல்லி இருக்கும் பதில்களின் தொகுப்பே இந்தப் புத்தகம். \u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47946272997612,"sku":null,"price":206.8,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/9f56ea4b04fc2644c40cd48cbd501b0e.jpg?v=1784096444"},{"product_id":"உன்னை-அறிந்தால்-இட்லியாக-இருங்கள்-3","title":"உன்னை அறிந்தால் - இட்லியாக இருங்கள் 3","description":"\u003cp\u003e\u003cspan\u003eஎல்லோருக்கும் வெற்றிபெற விருப்பம் இருக்கும். புகழோடு திகழ ஆசை இருக்கும். மகிழ்ச்சியாக வாழ ஏக்கம் இருக்கும். ஆனால் இவையெல்லாம் கனவாகவே பலருக்கும் முடிந்து விடுகிறது. திறமை இருந்தும் பெரும்பாலானோரால் வெற்றி பெற முடியவில்லை. சிந்தனைகள் கூர்மையாக இருந்தாலும் நடைமுறைப்படுத்த முடியவில்லை. அசாத்தியமான கனவுகள் இருந்தும் சராசரி வாழ்க்கைதான் கிடைக்கிறது. என்ன செய்தும் வாழ்வின் பாதையை, சிந்தனையின் போக்கை மாற்ற முடியவில்லை. என்ன செய்யலாம்? அத்தனை கேள்வி களுக்கும் பதில் அளிக்கிறது இந்தப் புத்தகம் சொந்த அனுபவங்கள், சிந்திக்கத் தூண்டும் குட்டிக் கதைகள், நடைமுறை உதாரணங்கள் எனப் பல்வேறு வாதங்களுடன் வெற்றிக்கான சூத்திரங்களை எளிய மொழியில் விளக்கிச் செல்கிறார் ஆசிரியர் சோம.வள்ளியப்பன். வெற்றியைத் தேடி பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில் கொஞ்சம் நின்று, கவனித்து, உயர்வதற்கான வழிகாட்டுதல்களை வழங்கும் நூல் இது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47951537045740,"sku":null,"price":131.6,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/4a9c426ea7851a60c87ef8224a34a090_a4d01ec7-45e2-4fe9-b055-b66a4ea564f7.jpg?v=1784182394"},{"product_id":"சொல்லி-அடி","title":"சொல்லி அடி","description":"\u003cp\u003e\u003cspan\u003eதேவகோட்டையைச் சேர்ந்த டாக்டர் சோம வள்ளியப்பன் அள்ள அள்ளப் பணம் (10 பாகங்கள்), இட்லியாக இருங்கள் (5 புத்தகங்கள்), ஆளப்பிறந்தவர் நீங்கள், நாட்டுக்கணக்கு (2) உள்பட தமிழில் 82 புத்தகங்களும், ஆங்கிலத்தில் மூன்று புத்தகங்களும் எழுதியிருக்கிறார். You Vs You புத்தகத்துக்காகப் புகழ்பெற்ற ISTD பரிசு பெற்றவர். தமிழ்நாடு அரசின் சிறந்த எழுத்தாளர் பரிசு, கவிதை உறவு பரிசு, நெய்வேலி புத்தகக் காட்சி சிறந்த எழுத்தாளர் பரிசு, பாரதி தமிழ் இலக்கிய பேரவை பரிசு, சிறுகதைக்கான இலக்கிய பீடம் பரிசு ஆகியவை இவரது எழுத்துகளுக்கான அங்கீகாரங்களில் சில. எமோஷனல் இன்டெல்ஜென்சில் ஆறு ஆண்டுகள் ஆய்வு செய்து, சென்னைப் பல்கலைக் கழகத்தில் பி.எச்டி. பட்டம் பெற்றதுடன், NF NLP, USA யின் 'நியுரோ லிங்விஸ்டிக் புரோகிராம்'-ன் சர்டிஃபைடு மாஸ்டர் பிராக்டிஷனராகவும் இருக்கிறார். மனித வளத்துறையில் BHEL, பெப்சிகோ, வேர்ல்பூல் உள்ளிட்ட நிறுவனங்களில் 25 ஆண்டுகாலம் பணியாற்றிய இவர் இப்போது பல்வேறு நிறுவனங்களுக்கு நிர்வாக ஆலோசகராகப் பணியாற்றுகிறார்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47951543009516,"sku":null,"price":162.75,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/4f8e9ac1b05a1af7f253b6834847a09e.jpg?v=1784183383"},{"product_id":"மேனேஜ்மெண்ட்-குரு-கம்பன்","title":"மேனேஜ்மெண்ட் குரு கம்பன்","description":"\u003cp\u003e\u003cspan\u003eதிருக்குறளில் காணப்படும் மேலாண்மை சிந்தனைகள் குறித்து பல நூல்கள் வெளிவந்துள்ளன. சங்க இலக்கியங்களின் மேலாண்மை சிந்தனைகள் குறித்து பல நூல்கள் வெளிவந்துள்ளன. சங்க இலக்கியங்களின் மேலாண்மைக் கருத்துகள் குறித்தும் சில சிறு புத்தகங்கள் மற்றும் உரைகளும் வந்திருக்கின்றன. ஆனால், கம்ப ராமாயணத்தைப் பொறுத்தவரை பலரும் அதை பக்தி இலக்கியமாகவோ அல்லது தமிழ் காவியமாகவோ மட்டுமே பார்த்திருக்க, சிலர் மட்டும் அதில் காணப்படும் அறிவியல், அரசியல், சமூகவியல், பெண்ணியம், வானியல் ஆகிய துறைகளைப் பற்றிக் கண்டறிந்து எழுதியிருக்கிறார்கள். மிக விரிவாக எழுதியிருக்கும் மேனேஜ்மெண்ட் குரு கம்பன் தமிழுக்கு புது வரவாக வருகிறது. எடுத்த காரியத்தில் வெற்றியடைவதற்கு மேலாண்மை கூறும் வழிகளான இலக்கு நிர்ணயித்தல், திட்டமிடுதல், ஏற்பாடுகள் செய்தல், தகுந்தோரைத் தேர்வு செய்தல், அவர்களுக்குப் பயிற்சி அளித்தல், ஒருங்கிணைத்தல், தலைமையேற்று வழிநடத்தல் ஊக்கப் படுத்தல், கண்காணித்தல், கட்டுப் படுத்தல், மற்றும் செயல்முடிவில் வெற்றிக் கனிகளைப் பகிர்ந்தளித்தல், என்ற அத்தனை மேலாண்மை கோட்பாடுகளும் இராமாயணத்தில் இருப்பதை அழகாக எடுத்துக்காட்டும் இந்த நூல், ஒரு அறிய ஆராய்ச்சி நூல் மட்டுமல்ல, மேலாண்மையை இலக்கிய நயத்துடன் விளக்கும் அற்புத ஆசானும்கூட. ஒரு ஆய்வுநூலின் நேர்த்தியுடனும், சுவை குன்றாத இலக்கிய நூலின் சுவாரஸ்யத்துடனும் படிப்பவர்க்கும் மகிழ்வு தரும் மாறுபட்ட ஒரு படைப்பாக, ஒரு புதிய வாசிப்புக்கு அழைத்துச் செல்லும் அற்புதமான படைப்பு. ஒவ்வொரு தமிழரும் படித்து பெருமைகொள்ளவேண்டிய நூல்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47951583445228,"sku":null,"price":186.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/b0f8b8facd58749aaf365f3e238d8ff6.jpg?v=1784186951"},{"product_id":"பணமே-ஓடி-வா-1","title":"பணமே ஓடி வா","description":"\u003cp\u003e\u003cspan\u003eசம்கபாதிக்கத் தெரிந்த அளவுக்குச்சம்பாதித்த பணத்தை நிர்வகிக்கத் தெரியவில்லை பலருக்கும். இனியாவது தெரிந்துகொள்ளவேண்டும் என்றுகூட நினைப்பதில்லை. இதில் படித்தவர் படிக்காதவர், உயர் பதவியில் இருப்பவர் சாதாரண ஊழியர் போன்ற வேறுபாடுகள் ஏதுமில்லை. நிஜத்தில் பணம் சம்பாதிப்பது அத்தனை கஷ்டமான விஷயமேகிடையாது. நம்மிடம் இருக்கும் சிறு அளவு பணமே பெரும் பணத்தைச் சம்பாதித்துவிடும். அதற்கான வழிகளை எளிமையாகச் சொல்லும் புத்தம்தான் ‘பணமே ஓடி வா’. ‘அள்ள அள்ளப் பணம்’ என்கிற பங்குச்சந்தை குறித்த புத்தக வரிசை எழுதி விற்பனையில் சாதனை படைத்த நூலாசிரியர் சோம.வள்ளியப்பன் குமுதத்தில் தொடராக எழுதிய நூல் இது. வாசகர்களால் பெரிதும் புகழப்பட்ட இப்புத்தகம் கால மாற்றத்துக்கு ஏற்ப சில புள்ளிவிவரங்கள், தகவல்கள், பின் இணைப்புகள் சேர்த்து, மேலும் சிறப்பாக உருவாகியிருக்கிறது. எக்ஸ்பிரஸ் வேகத்தில் பணம் உங்களைத் தேடி ஓடிவர இப்புத்தகம் உங்கள் பையில் இருந்தால் போதும்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47951587148012,"sku":null,"price":154.7,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/ef5acd5b951f66d69b36be798cbbe142.jpg?v=1784187408"},{"product_id":"சிக்சர்-நிர்வாக-உத்திகள்","title":"சிக்சர் நிர்வாக உத்திகள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஉலகமே முடங்கிப்போய், நம் வேலை என்னாகும் என்று பலரும் கலக்கத்தில் இருந்த காலத்தில், வேலை கிடக்கட்டும், உயிர் பிழைத்திருந்தாலே பெரிது என எண்ணற்றோர் அஞ்சி நடுங்கிக் கொண்டிருந்த நேரத்தில், மருத்துவம் போன்ற வேறு சில துறைகளும் தேவைகளின் காரணமாக பெரும் வளர்ச்சி வாய்ப்பைப் பெற்றன. அவற்றில் ஒன்று மருத்துவக் காப்பீட்டுத் துறை. அப்படிப்பட்ட வாய்ப்பைப் பெற்றவர்களிடையே உரை நிகழ்த்தும் போது சோம. வள்ளியப்பன் சொன்ன அறிவுரை, 'இப்போதுதான் நீங்கள் உங்கள் முயற்சியைப் பன்மடங்காக்கவேண்டும்'. சிறப்பான வாய்ப்பிருக்கும் காலத்தில் அதுவாக வியாபாரமாகும் நேரத்தில் சின்ன முயற்சியே போதுமே என்றுதான் பலருக்கும் தோன்றும். நூலாசிரியர் 'சொன்ன காரணம் மறுக்கவே முடியாதது; பலருக்கும் தோன்றாதது. BHEL போன்ற பெரிய பொதுத்துறை நிறுவனம், பெப்சிகோ, வேர்ல்பூல் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் சில தனியார் நிறுவனங்களில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றியது தவிர, டெய்ம்லர் பென்ஸ், செயிண்ட் கோபேன், ஏசியன் பெயிண்ட்ஸ், BMW, JCB, நியுவெல் ரெனால்ட்ஸ், AMM International போன்ற பல நிறுவனங்களில் பயிற்சி கொடுத்தவர் டாக்டர் சோம. வள்ளியப்பன். டோயன்சிஸ், கிறிஸ்டல் டெல்டா உள்ளிட்ட பல நிறுவனங்களுக்கு நிர்வாக ஆலோசகராகவும் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். நிறுவனங்களில் பொறுப்புகளில் இருப்பவர்களும், சிறு பெரு நிறுவனங்களை நிர்வகிப்பவர்களும் புரிந்துகொள்ள வேண்டிய பல்வேறு பயன்தரும் உத்திகளை எளிமையாக எழுதியிருக்கும் புத்தகம், 'சிக்ஸர்: நிர்வாக உத்திகள்'.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47951633055980,"sku":null,"price":147.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/f48a54ad2da2e6b7851e853ae67cc927.jpg?v=1784189520"},{"product_id":"ஆளப்பிறந்தவர்-நீங்கள்","title":"ஆளப்பிறந்தவர் நீங்கள்!","description":"\u003cp\u003e\u003cspan\u003e\"தலைமைப் பண்பு என்பது, தானே வருவதல்ல. வளர்த்துக் கொள்வது. எப்படி எல்லாம் நம்மை தலைமைப் பதவிக்குத் தயார்படுத்திக் கொள்வது என்பது ஒரு கலை. சிந்தனையில் வித்தியாசம். செயலில் வித்தியாசம். முடிவெடுப்பதில் வித்தியாசம். அணுகுமுறையில் வித்தியாசம். இதுதான் ஆதாரம். பிறகு, ஆளுமை மேம்பாடு. மனத்தளவில் நம்மை நாமே உயரே தூக்கி உட்காரவைத்து அழகு பார்ப்பது அவசியம். கனவில்லாமல் காரியமில்லை. உங்களுக்குள் உறங்கிக்கொண்டிருக்கும் தலைமைக் குணத்தைத் தட்டியெழுப்பி. எந்தத் துறையில் இருப்பவரானாலும் உங்களை அந்தத் துறையின் ‘நம்பர் 1ஆக’ மாற்றும் பணியைச் செய்கிறது இந்தப் புத்தகம். \u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47951677522156,"sku":null,"price":282.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/AALAPIRANTHA.jpg?v=1784192493"},{"product_id":"அள்ள-அள்ளப்-பணம்-7","title":"அள்ள அள்ளப் பணம் - 7","description":"\u003cp\u003e\u003cspan\u003e“ஆசைக்கு – முதலீட்டுக்கு – வர்த்தகத்துக்கு · தங்கத்தில் முதலீடு செய்வது எப்படி? அது எந்த அளவுக்குப் பயனுள்ளதாக இருக்கும்? · நகைகள், தங்க காசுகள், இ-கோல்ட், கோல்ட் பாண்டுகள், கோல்ட் இ.டி.எஃப்கள், கமாடிட்டி கோல்ட், கோல்ட் மானிட்டைசேஷன் ஸ்கீம் – எதில் எவ்வளவு முதலீடு செய்வது? · தங்கத்தின் விலை எவ்வாறு நிர்ணயிக்கப்படுகிறது? அது ஏன் தொடர்ச்சியாக மாறிக்கொண்டே இருக்கிறது? · தங்கம் போலவே வெள்ளியிலும் பிட்காயினிலும் முதலீடு செய்வது உசிதமா? · கிரிப்டோகரன்சி என்பது என்ன? பிட்காயின் வேறு கிரிப்டோகரன்சிகள் வேறா? வர்த்தகத்தில் ஈடுபடும் அனைவரும் கிரிப்டோகரன்சி குறித்து தெரிந்து கொள்ளவேண்டுமா? தங்கம், வெள்ளி, கிரிப்டோகரன்சி மூன்றையும் குறித்த மிகத் தெளிவான, மிக விரிவான அறிமுகத்தையும் எதில் எவ்வளவு முதலீடு செய்வது என்பதையும் மிகத் தெளிவாக விளக்கி இருக்கிறார் சோம. வள்ளியப்பன். ‘அள்ள அள்ளப் பணம்’ புத்தக வரிசை மூலம் பங்குச்சந்தை உலகின் அத்தனை நுணுக்கங்களையும் எளிமையாக நமக்குக் கற்பித்தவரின் முக்கியமான நூல் இது. \u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47951685189868,"sku":null,"price":211.5,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/THANGAM.jpg?v=1784192967"},{"product_id":"மேன்மை-கொள்","title":"மேன்மை கொள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eதேவகோட்டையைச் சேர்ந்த டாக்டர் சோம வள்ளியப்பன் அள்ள அள்ளப் பணம் (10 பாகங்கள்), இட்லியாக இருங்கள் (5 புத்தகங்கள்), ஆளப்பிறந்தவர் நீங்கள், நாட்டுக்கணக்கு (2) உள்பட தமிழில் 82 புத்தகங்களும், ஆங்கிலத்தில் மூன்று புத்தகங்களும் எழுதியிருக்கிறார். You Vs You புத்தகத்துக்காகப் புகழ்பெற்ற ISTD பரிசு பெற்றவர். தமிழ்நாடு அரசின் சிறந்த எழுத்தாளர் பரிசு, கவிதை உறவு பரிசு, நெய்வேலி புத்தகக் காட்சி சிறந்த எழுத்தாளர் பரிசு, பாரதி தமிழ் இலக்கிய பேரவை பரிசு, சிறுகதைக்கான இலக்கிய பீடம் பரிசு ஆகியவை இவரது எழுத்துகளுக்கான அங்கீகாரங்களில் சில. எமோஷனல் இன்டெல்ஜென்சில் ஆறு ஆண்டுகள் ஆய்வு செய்து, சென்னைப் பல்கலைக் கழகத்தில் பி.எச்டி. பட்டம் பெற்றதுடன், NF NLP, USA யின் 'நியுரோ லிங்விஸ்டிக் புரோகிராம்'-ன் சர்டிஃபைடு மாஸ்டர் பிராக்டிஷனராகவும் இருக்கிறார். மனித வளத்துறையில் BHEL, பெப்சிகோ, வேர்ல்பூல் உள்ளிட்ட நிறுவனங்களில் 25 ஆண்டுகாலம் பணியாற்றிய இவர் இப்போது பல்வேறு நிறுவனங்களுக்கு நிர்வாக ஆலோசகராகப் பணியாற்றுகிறார்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47951710322924,"sku":null,"price":176.7,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/2564325a78c6f40252a21be8556a9ebd.jpg?v=1784193231"},{"product_id":"உணர்வால்-முடியும்-இட்லியாக-இருங்கள்-4","title":"உணர்வால் முடியும் - இட்லியாக இருங்கள் 4","description":"\u003cp\u003e\u003cspan\u003eவாழ்வில் வெற்றிபெற எது அவசியம்? உங்களுக்குப் பல திறமைகள் இருக்கலாம். நீங்கள் பல விஷயங்களை அறிந்திருக்கலாம். ஆனால் வெற்றி, நிம்மதி, மகிழ்ச்சி ஆகிய வற்றை அடைவதற்குத் திறமையும் அறிவும் மட்டும் போதாது என்கின்றனர் அறிஞர்கள். தொழிலில் வெற்றிகளைக் குவித்த பலர், சொந்த வாழ்க்கையில் சோதனைகளை அனுபவிப்பதை அறிந்திருப்பீர்கள். செல்வங்களைக் குவித்த பணக்காரர்கள் நிம்மதியில்லாமல் சுற்றித் திரிவதைப் பார்த்திருப்பீர்கள்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47951722971372,"sku":null,"price":253.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/EDLIYAGA.jpg?v=1784193707"},{"product_id":"ஆல்-தி-பெஸ்ட்-நீங்கள்-விரும்பும்-வேலையை-வென்றெடுப்பது-எப்படி","title":"ஆல் தி பெஸ்ட் - நீங்கள் விரும்பும் வேலையை வென்றெடுப்பது எப்படி?","description":"\u003cp\u003eநேர்முகத்துக்குத் தயாராவது, கடலில் நீச்சல் பழகுவதற்குச் சமமானது. பயம் என்றொரு அலை. பதட்டம் என்றொரு அலை. குழப்பம் என்றொரு அலை. ஒவ்வொன்றையும் எதிர்த்துப் போராடி ஜெயிக்கவேண்டும்.\u003cbr\u003eதிறமை முக்கியம். என்றாலும், திறமை மட்டும் போதாது. உங்கள் பயோடேட்டாவின் வடிவமைப்பு, நீங்கள் பேசும் முறை, உடுத்தும் உடை, கேள்விகளை எதிர்கொள்ளும் லாகவம், பிரச்னைகளை சமாளிக்கும் விதம் என்று பல்வேறு அம்சங்களில் உங்கள் திறமையை முழுமையாக வெளிக்காட்டவேண்டும்.\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eசரியான முன்தயாரிப்பு இல்லாமல் நேர்முகத்தை எதிர்கொள்வது தவறு. நேர்முகத்தை நடத்தும் நிறுவனத்தின் தேவைகள், அதிகாரிகளின் எதிர்பார்ப்புகள் போன்றவற்றை துல்லியமாகப் புரிந்துகொண்டு, அந்தத் தேவைகளைப் பூர்த்திசெய்தால்தான் வெற்றி சாத்தியமாகும்.\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eநேர்முகத்தை எதிர்கொள்வது குறித்து உங்களுக்குள்ள குழப்பங்கள், அச்சங்கள், சந்தேகங்கள் அனைத்தையும் நீக்கி, அத்தியாவசியமான பல முன்யோசனைகளை இந்நூலில் வழங்குகிறார் சோம. வள்ளியப்பன்.\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47951865741548,"sku":null,"price":191.1,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/velai_16303728-02a8-4f69-9e22-005f2b283a20.jpg?v=1784194718"},{"product_id":"உஷார்-உள்ளே-பார்","title":"உஷார் உள்ளே பார்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஉங்கள் மனத்தின் சக்தி என்னவென்பது உங்களுக்குத் தெரியுமா? இந்தப் புத்தகம் உங்கள் வாழ்க்கையை ஒட்டுமொத்தமாகப் புரட்டிப்போடப் போகிறது என்பதை அறிவீர்களா? மனித மனம், விசித்திரங்களின் மூட்டை. நீங்கள் நம்பமுடியாத பல திறமைகள் அதற்கு உண்டு. நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ, அதை நடத்திக் காட்டும் அற்புத ஆற்றல் உங்கள் மனத்துக்கு உண்டு. தேசத்தை ஆள விரும்புகிறீர்களா? ஆளலாம். கோடி கோடியாகச் சம்பாதித்துக் குவிக்க விரும்புகிறீர்களா? செய்யலாம். போட்டிகளில், தேர்வுகளில் மாபெரும் வெற்றி பெற விரும்புகிறீர்களா? மிகவும் சுலபம். எல்லாம் உங்கள் மனத்தை நீங்கள் எப்படி அடக்கி ஆள்கிறீர்கள் என்பதில் இருக்கிறது! மனத்தை அடக்கி ஆள்வது முனிவர்களுக்கு மட்டுமே கைவந்த விஷயமல்ல. உங்களாலும் முடியும். நீங்கள் தவம் இருக்க வேண்டும். தாடி வளர்த்துக்கொண்டு தனிமை தேடிப் போக வேண்டாம். இருந்த இடத்தில் இருந்தபடி சாதிக்கலாம்! உள்ளுக்குள் இருக்கும் உங்கள் மனத்தைத் தூக்கி எடுத்து உங்கள் சட்டை பாக்கெட்டில் வைத்துக்கொண்டு நினைத்த நேரத்தில் நினைத்தபடி அதை ஆட்டிப் படைக்க முடியும்! எப்படி? அதைத்தான் சொல்லித் தருகிறது இந்தப் புத்தகம். உங்கள் வெற்றி ஒன்றுதான் இதன் நோக்கம். அதுவும் சாதாரண வெற்றியல்ல. பிரும்மாண்டமான வெற்றி. இமாலய வெற்றி. இப்படியொரு எளிமையான, விறுவிறுப்பான புத்தகத்தை இதுவரை நீங்கள் வாசித்திருக்க மாட்டீர்கள்!\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47951867478252,"sku":null,"price":207.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/9f28779c0339cf84c8e65c5df58ff622.jpg?v=1784195006"},{"product_id":"நல்லதாக-நாலு-வார்த்தை-1","title":"நல்லதாக நாலு வார்த்தை","description":"\u003cp\u003e\u003cspan\u003eபணம் முக்கியம். ஆனால் அது ஒன்று மட்டுமே வாழ்வின் குறிக்கோளாக இருக்க-முடியாது அல்லவா? மனம் நிறைவாக இல்லாதபோது எவ்வளவு பணம் இருந்து என்ன பயன்? எத்தனைப் பெரிய பதவியில் இருந்து என்ன பலன்? என் வீடு, என் மனம், என் நிம்மதி என்று இருப்பதும்கூடச் சாத்தியமில்லை. வீட்டைக் கடந்து சமூகத்தோடு நாம் உறவாட வேண்டியிருக்கிறது. பலவிதமான மனிதர்களோடு நல்லுறவு கொள்ளவேண்டியிருக்கிறது. அதை எப்படிச் செய்வது? மனிதர்களை எப்படிப் புரிந்துகொள்வது? மகிழ்ச்சியை எப்படிக் கண்டடைவது? குடும்பம், அலுவலகம், சமூகம் என்று எங்கும் அன்போடும் பண்போடும் திகழ்வது எப்படி? வாழ்வில் எல்லாமும் பெற்று வளமோடும் மனநிறைவோடும் வாழ்வது எப்படி? பங்குச்சந்தை, சுய-முன்னேற்றம், நிர்வாகவியல் என்று பல துறைகளில் இயங்கிவரும் பிரபல எழுத்தாளர் சோம. வள்ளியப்பனின் இந்நூல் மனநிறைவளிக்கும் கச்சிதமான செயல் திட்டமொன்றை நம் அனைவருக்கும் வகுத்துக் கொடுக்கிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47951871639788,"sku":null,"price":159.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/NALLA3.jpg?v=1784195102"},{"product_id":"இன்சூரன்ஸ்-அள்ள-அள்ளப்-பணம்-8","title":"இன்சூரன்ஸ் (அள்ள அள்ளப் பணம் -8)","description":"\u003cp\u003e\u003cspan\u003eபுகழ்பெற்ற அள்ள அள்ளப் பணம் நூல் வரிசையில் மற்றொரு முக்கிய வரவு. நிதி மேலாண்மையில் பணம் சம்பாதிப்பது என்பது ஒரு தொடக்கப் புள்ளி மட்டும்தான். சம்பாதித்த பணத்தை எப்படிப் பாதுகாப்பது? சேமிக்கும் பணத்துக்கு ஆபத்து நேர்ந்தால் அதை எவ்வாறு எதிர்கொள்வது? இழப்பைச் சந்திக்கவேண்டியிருந்தால் அதை எப்படி ஈடுகட்டுவது? இவற்றையெல்லாம் முன்கூட்டியே யூகித்து, முன்னெச்சரிக்கையோடு திட்டங்கள் வகுப்பது சாத்தியமா? இந்தக் கேள்விகளை எழுப்புவதும் அவற்றுக்கான விடைகளைத் தயாராக வைத்துக்கொள்வதும் இன்றைய சூழலில் தவிர்க்கமுடியாதவை மட்டுமல்ல, தவிர்க்கக்கூடாதவையும்கூட. பங்குச் சந்தை, பரஸ்பர நிதிகள் ஆகியவை பெறும் கவனத்தை காப்பீடு பொதுவாகப் பெறுவதில்லை. நடுத்தர வர்க்கத்தினரேகூட காப்பீடு பற்றி மிகவும் மேலோட்டமாகவே தெரிந்து வைத்திருக்கின்றனர். இந்நிலையை மாற்றுவதே இந்நூலின் நோக்கம். ஆயுள் காப்பீடு, மருத்துவக் காப்பீடு என்று தொடங்கி அதிகம் அறியப்படாத பயணக் காப்பீடு, விபத்துக் காப்பீடு என்று பலவகையான காப்பீடுகளை விரிவாகவும் எளிமையாகவும் அறிமுகப்படுத்துகிறார் நூலாசிரியர் சோம. வள்ளியப்பன்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47951876391148,"sku":null,"price":227.5,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/26cb7501208ccb700d42ace834f289d4.jpg?v=1784195800"},{"product_id":"மியூச்சுவல்-ஃபண்ட்-அள்ள-அள்ளப்-பணம்-6","title":"மியூச்சுவல் ஃபண்ட் (அள்ள அள்ளப் பணம் - 6)","description":"\u003cp\u003e\u003cspan\u003eமியூச்சுவல் ஃபண்ட் என்பது என்ன? எத்தனை வகைகள் உள்ளன? எது நமக்கானது? எந்த எந்த திட்டங்களில் எவ்வளவு முதலீடு செய்வது? எங்கிருந்து தொடங்குவது? முன் அனுபவம் அவசியமா? ஒன்றுக்கும் மேற்பட்ட முதலீடுகள் செய்வது சரியான அணுகுமுறையா? பண வீக்கம், பொருளாதார மந்தநிலை போன்றவற்றை எப்படிக் கவனத்தில் கொள்வது? முதலீட்டுக்கு எதைத் தேர்வு செய்யவேண்டும், எவ்வளவு முதலீடு செய்யவேண்டும், அதை எவ்வளவு காலத்துக்கு விட்டுவைக்கவேண்டும்? இப்படி அடிப்படைகள் தொடங்கி அனைத்தையும் விரிவாகவும் எளிமையாகவும் விளக்குகிறது இந்நூல்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47951896412396,"sku":null,"price":154.7,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/f7e1abe6e59936d72351319287aedd3c.jpg?v=1784196633"},{"product_id":"வியாபாரத்தில்-வெற்றி","title":"வியாபாரத்தில் வெற்றி","description":"\u003cp\u003e\u003cspan\u003eவர்த்தக உலகைப் புரிந்துகொள்ளவும் அதில் பங்கேற்று உங்களுக்கான இடத்தை உறுதி செய்யவும் வழிகாட்டும் மிக முக்கியமான நூல் இது. வியாபார உலகம் எவ்வாறு இயங்குகிறது? அதில் வெற்றி பெற்றவர்கள் யார்? அவர்கள் எந்த வகையில் தனித்துவமானவர்கள்? அவர்கள் கடைப்பிடித்த வழிமுறைகள் என்னென்ன? லாபம் எப்போது வரத் தொடங்கும்? அதை எப்படிக் கணக்கிடுவது? போட்டியாளர்கள் இல்லாத வணிக உலகம் கிடைக்காது; அவர்களை எப்படிச் சமாளிப்பது? பணியாளர்களை எவ்வாறு நிர்வாகம் செய்வது? அவர்களை எவ்வாறு ஊக்கப்படுத்துவது? இப்படி வியாபாரத்தின் ஒவ்வொரு முக்கியப் பகுதியையும் எடுத்துக்கொண்டு எளிமையாகவும் காத்திரமாகவும் விளக்குகிறார் நம்பர் 1 மேலாண்மை குரு சோம. வள்ளியப்பன். வணிக உலகில் ஏற்கெனவே இருப்பவர்களுக்கும் அடியெடுத்து வைப்பது குறித்து யோசித்துக்கொண்டிருப்பவர்களுக்கும் இது சரியான தேர்வு.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47951898673388,"sku":null,"price":230.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/a330cde1e5292c55fdb5941e8cc7f1aa.jpg?v=1784197018"},{"product_id":"எல்லோரும்-வல்லவரே","title":"எல்லோரும் வல்லவரே","description":"\u003cp\u003e\u003cspan\u003eஏன் ஒரே ஒரு ஐன்ஸ்டீன், ஒரே ஒரு ஆபிரகாம் லிங்கன், ஒரே ஒரு பில் கேட்ஸ் மட்டும் இந்த உலகில் தோன்றியிருக்கிறார்கள் என்று எப்போதாவது நீங்கள் சிந்தித்துப் பார்த்ததுண்டா? ஏன் அலெக்சாண்டரைப் போல் இன்னொரு மாவீரன் பிறக்கவில்லை? ஏன் இன்னொரு காந்தியைக் காண-முடிவதில்லை? ஏன் இன்னொரு ஸ்டீவ் ஜாப்ஸ் உருவாகவேயில்லை? நம்மைப் போன்ற சாமானியர்களால் எப்படி அவர்களைப் போல் மாற-முடியும்? நோ சான்ஸ்! இப்படி நீங்களும் நம்பிக்-கொண்டிருந்தால் உங்களுக்கு இந்தப் புத்தகம் அவசியம் தேவை. சாமானியர்கள், அசாதாரணமானவர்கள் என்று இந்த உலகில் எந்தப் பிரிவினையும் இல்லை. நீங்கள் சந்திக்கும் அனைத்துப் பிரச்னைகளையும் அவர்கள் சந்தித்திருக்கிறார்கள். உங்களைப் போலவே அவர்களும் தொடர்ந்து சறுக்கியிருக்கிறார்கள். நீங்கள் நினைப்பதைக் காட்டிலும் மிக அதிகத் தோல்விகளை அவர்கள் சுவைத்திருக்-கிறார்கள். இருந்தும் அவர்கள் தங்கள் துறைகளில் வல்லவர்களாக மின்னியதற்குக் காரணம் அவர்கள் அசாதாரணமானவர்கள் அல்லர். மிக எளிமையான முறையில் அவர்கள் தங்களுக்கு ஏற்பட்ட தடைகள் அனைத்தையும் தாண்டி வந்தார்கள். அவர்களுக்குச் சாத்தியமானவை அனைத்தும் உங்களுக்கும் சாத்தியப்படும். அவர்களைப் போலவே நீங்களும் ஒரு வல்லவர்தான். இதை நீங்கள் உறுதியாக நம்பத் தொடங்கும்போது உங்கள் ஆளுமை பல மடங்கு பிரகாசிப்பதை நீங்களே உணரலாம். சுயமுன்னேற்றம், நிர்வாகம், மனித வள மேம்பாடு ஆகிய துறைகளில் தனியிடம் பிடித்த சோம. வள்ளியப்பனின் இந்தப் புத்தகம் உங்களுக்கு ஒரு மந்திரச் சாவி.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47951910928620,"sku":null,"price":130.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/4616228b48e84677342b48ff211da941.jpg?v=1784197321"},{"product_id":"முன்னேற்றம்-இந்தப்-பக்கம்","title":"முன்னேற்றம் இந்தப் பக்கம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eவாழ்வில் முன்னேற வழி தெரியாமல் தவிப்பவர்களை கை பிடித்து அழைத்துச் செல்லும் நூல். வாழ்க்கையில் பலரும் தேடும் வெற்றி என்பது உடனே கிடைத்துவிடுவதில்லை. அது தேடத் தேடக் கண்ணாமூச்சி ஆடும். விரக்தியடைந்து சோர்ந்துவிடும் நேரம் அவர்களின் கைகளுக்கு மிக அருகிலேயேகூட இருக்கும். இதனால்தான் ‘விடாமல் முயற்சி செய்’ என்கிறார்கள். விடாமல் முயற்சித்தால் வாழ்வில் முன்னேற்றம் நிச்சயம். முன்னேற்றம் வேண்டும் என்பதை உணராதவர்கள் குறைவு. பலரிடமும் அதற்கான ஊக்கம் நிறையவே இருக்கிறது. ஆனால், வழி தெரியவில்லை. எப்படி முன்னேறுவது? அதற்கு ஏதும் நிச்சயமான வழிகள் இருக்கின்றனவா? அந்த வழியைப் பற்றி விளக்கமாகச் சொல்ல முடியுமா? என்கிற கேள்விகளுக்கான பதில்தான் இந்தப் புத்தகம். ‘நமது நம்பிக்கை’ மாத இதழில் தொடராக வந்து வாசகர்களின் அமோக பாராட்டுக்களைப் பெற்ற கட்டுரைகள் முழு புத்தகமாக இப்போது உங்கள் கையில். ஒரு Work Book போல, படிப்படியாக என்ன, எப்படிச் செய்ய வேண்டும் என்பதைச் சொல்லித் தரும் முயற்சி. Key Drivers, Mile Stones மற்றும் Calendarising போன்ற நிர்வாக வழிமுறைகளை, வாழ்க்கை முன்னேற்றத்துக்குப் பயன்படுத்துவது எப்படி என்பதை மிக எளிமையாக, தெளிவாகச்சொல்லி வழிகாட்டுகிறார் நூலாசிரியர் சோம. வள்ளியப்பன். இப்புத்தகம் உங்கள் கையில் இருந்தால் வாழ்வின் முன்னேற்றப் பாதையில் முதல் அடி எடுத்துவைத்து விட்டீர்கள் என்பது நிச்சயம்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47951953953004,"sku":null,"price":147.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/2d0a07f44412864691e8f606470785b1.jpg?v=1784198792"},{"product_id":"போர்ட்ஃபோலியோ-முதலீடுகள்-அள்ள-அள்ளப்-பணம்-4","title":"போர்ட்ஃபோலியோ முதலீடுகள் (அள்ள அள்ளப் பணம் - 4)","description":"\u003cp\u003e\u003cspan\u003eநீண்டகால முதலீடுகளைச் சரியாகச் செய்து நிறைவான செல்வத்தை எப்படிப் பார்ப்பது என்பதற்கு வழிகாட்டுகிறது இந்தப் புத்தகம்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47951963357420,"sku":null,"price":173.9,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/4_727e46fc-fa21-4a6c-b381-600cf2253c60.jpg?v=1784200062"}],"url":"https:\/\/centaram.com\/collections\/soma-valliappan.oembed?page=2","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}