{"title":"ஷோபா சக்தி","description":"","products":[{"product_id":"இச்சா","title":"இச்சா","description":"\u003cp\u003e\u003cspan\u003eதற்கொலை செய்துகொள்வதில், உலகிலேயே இலங்கைக்குத்தான் நீண்டகாலமாக முதல் இடமிருக்கிறது. போருக்கு முன்பும் போரிலும் போருக்குப் பின்பும் இந்த முதலிடத்திலிருந்து இலங்கை கீழிறங்கவேயில்லை. கூட்டுத் தற்கொலை செய்துகொள்ளும் ஓர் சமூகத்தின் சுயசாட்சியமே இந்நாவல் என்று சுருக்கமாகச் சொல்லலாம்”\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47917392265452,"sku":null,"price":323.75,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/bf5f4ae9c192dfab052aa647d86f2944.jpg?v=1783674198"},{"product_id":"box-கதைப்-புத்தகம்","title":"BOX கதைப் புத்தகம்","description":"\u003cp\u003e\u003cspan\u003e'கொரில்லா', ம்' நாவல்களைத் தொடர்ந்து வெளியாகும் ஷோபசக்தியின் மூன்றாவது நாவல். முள்ளிவாய்க்காலிற்குப் பின்னான வன்னிக் கிராமமொன்றின் கதைப் பிரதி. யுத்தத்தின் ஊடும் பாவுமான கதைகளைச் சித்திரிக்கும் உபவரலாறு.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47917435158764,"sku":null,"price":272.6,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/BOX.jpg?v=1783674682"},{"product_id":"முப்பது-நிறச்-சொல்","title":"முப்பது நிறச் சொல்","description":"\u003cp\u003eபுலம்பெயர்ந்தோர் தமிழ் எழுத்துக்களில் இரண்டாவது கட்டுரை தொகுப்பு இது.\u003c\/p\u003e\n\u003cp\u003eகட்டுரைகளை கதைகளாக்கவும் கதைகளை கட்டுரைகளாக்கவும் தெரிந்த இலக்கிய வித்தைக்காரன் ஷோபாசக்தியின் இந்நூலில், தமிழ்ச் சமூக மனங்களில் உறைந்திருக்கும் சாதியம், தேசியம், இலக்கியப் போர்வைக்குள் இந்துத்துவம் பேணும் \"காலச்சுவடு\" வகைகளின் இதழியல் பார்ப்பனியம் போன்ற பாசிசக் கூறுகளை விரிவாக்கவும் கூர்மையாகவும் விமர்சிக்கும் 30 கட்டுரைகளின் தொகுப்பு இது.\u003c\/p\u003e\n\u003cp\u003eஈழத்தின் வடத் தீவுகளில் ஒன்றான லைடன் தீவின் அல்லைப்பிட்டி கிராமத்தில் பிறந்து தற்போது பிரான்சில் அகதியாக வசித்துவரும் அந்தோனிதாசன் என்கிற ஷோபாசக்தி ‘கொரில்லா (2001)’, ‘ம்’ (2004), BOX (2015) என்கிற மூன்று நாவல்களையும், தேசத்துரோகி (2003)’, எம்.ஜி.ஆர். கொலைவழக்கு (2009), ‘கண்டிவீரன்(2014)’ என்கிற மூன்று சிறுகதைத் தொகுதிகளையும், ‘வேலைக்காரிகளின் புத்தகம (2007)’, ‘முப்பது நிறச் சொல்(2014)’, ‘பஞ்சத்துக்கு புலி(2011)’ ஆகிய மூன்று கட்டுரை தொகுப்புகளையும் வெளியிட்டுள்ளார்.\u003c\/p\u003e\n\u003cp\u003e‘சுவிஸ்’ தேவாவின் மொழிபெயர்ப்பில் வெளியான சைனா கெய்றெற்சியின் ‘குழந்தைப் போராளி (2008)’ நூலுக்கும், தன்வரலாற்று நினைவுக் குறிப்புகளான புஷ்பராணியின் ‘அகாலம் (2012)’ நூலுக்கும், பதிப்பாசிரியராக பணியாற்றியுள்ளார்.\u003cbr\u003eநண்பர் சுகனுடன் இணைந்து இவர் வெளியிட்ட‘சனதரும போதினி (2001)’, ‘கறுப்பு (2002), ஆகிய இரு தொகுப்புகள் பெரும் அதிர்வுகளையும் ஈர்ப்பையும் புலம்பெயர்ச் சூழலில் ஏற்படுத்தியது.\u003c\/p\u003e\n\u003cp\u003e2013-ல் இலங்கையில் நடைப்பெற்ற 41வது இலக்கிய சந்திப்பு நிகழ்விற்கு ஈழம்- புலம்பெயர்ந்த நாடுகள்- தமிழகம் என்கிற விரிந்த புலங்களில் இயங்கும் படைப்பாக்கங்களை ஒருங்கிணைத்து ‘குவர்னிகா’என்கிற தொகுப்பிற்கு பதிப்பாசிரியராக அவர் இருந்தது மிகுந்த தனித்துவமானது.\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47917552107756,"sku":null,"price":253.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/bd6f6bd22346a3f01e1daf871f62ef4c.jpg?v=1783675295"},{"product_id":"கண்டி-வீரன்","title":"கண்டி வீரன்","description":"\u003cp\u003e\u003cspan\u003e2011-14 காலத்திற்குள் எழுதப்பட்ட இச்சிறுகதைகள் இனவிடுதலை என்கிற முழக்கத்தின் பெயரால் நிகழ்த்திய அரசியற்போரையும் புலம்பெயர்தலின் பின்னணியில் எதிர் கொள்கிற உளவியல் அவதியையும் ஒருங்கே பிரதிபலிக்கக் கூடியவை.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47917611450604,"sku":null,"price":185.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/e513ace7c931fc5835e62b6e664dbe34.jpg?v=1783675514"},{"product_id":"பஞ்சத்துக்கு-புலி","title":"பஞ்சத்துக்கு புலி","description":"\u003cp\u003eஊர்கூடி பார்த்திருக்க நடுத்தெருவில் வீழ்த்தி\u003cbr\u003eஎம் பெண்களை வல்லாண்ட உம்மைக் கண்டு\u003cbr\u003eமறைவிடம் ஓடியொளிந்த நாய்கள்\u003cbr\u003eபிறிதொருபோதும் உம்முன்னே வருவதற்கஞ்சிய குற்றத்திற்காக\u003cbr\u003eகைகால்கள் கட்டப்பட்டு\u003cbr\u003eபனிப்பாளத்தின் மீது கிடத்தப்பட்டிருக்கிறேன்\u003cbr\u003eபிணமென விரைக்கும் உடலுக்குள் கடுத்தேறுகிறது சில்லிப்பு\u003cbr\u003eநடுங்கிச் சரிகிறது உயிர்\u003c\/p\u003e\n\u003cp\u003eதண்ணீர் கேட்டால் மூத்திரம் பெய்வதும்\u003cbr\u003eவாயைத் திறந்தால் மலம் திணிப்பதுமே\u003cbr\u003eநாகரீகக் கனவான்களாகிய உமது வாடிக்கையென்பதால்\u003cbr\u003eபசிதாகம் குறித்து புகாரிடாமல் மயக்கத்தில் வீழ்கிறேன்\u003c\/p\u003e\n\u003cp\u003eசித்திரவதைகளை உணராமலே செத்துவிடக்கூடாதென்ற பயத்தில்\u003cbr\u003eபந்தம் கொளுத்தி என்தலையைத் தீய்த்து\u003cbr\u003eபிரக்ஞையின் எல்லைக்குள் இழுத்துப் போடுகிறீர்கள் என்னை\u003c\/p\u003e\n\u003cp\u003eவிசேஷமாய் பயிற்சி எடுத்தக் காவலரைப் போன்ற ஒருவன்\u003cbr\u003eஎன் கால்களில் லாடமடித்துக் கொண்டிருக்கிறான்\u003cbr\u003eநகங்களைப் பிடுங்கி எடுத்துவிட்டு\u003cbr\u003eஎன் பற்களையும் பிடுங்கும் அவசரத்தில்\u003cbr\u003eகுறடு ஒன்று இயங்கிக்கொண்டிருக்கிறது இன்னொருவன் கையில்\u003cbr\u003eவன்மங்களை நவீனமாய் தணிக்கத் தெரிந்த மற்றையவன்\u003cbr\u003eவயர்களை என்குறியில் சுற்றி மின்னதிர்ச்சிக் கொடுக்கிறான்\u003c\/p\u003e\n\u003cp\u003eஅடுக்களையிலிருந்து டப்பர்வேருடன் வந்த\u003cbr\u003eஉங்கள் மனைவி\/மகள்\/ சகோதரி\/ யாரோ ஒருத்தி\u003cbr\u003eஇந்தக் கண்களா எம்மை ஏறெடுத்துப் பார்த்தவையென\u003cbr\u003eபலவந்தமாய் இமைபிரித்துத் தூவுகிறாள் மிளகாய்ப்பொடியை\u003c\/p\u003e\n\u003cp\u003eகொத்தியெறிந்தது போக நினைவில் எஞ்சியிருக்கும் என்னைத்தாளாது\u003cbr\u003eபுதிய கொலையாயுதங்களை தேடிக்களைத்த உமது வாரீசுகள்\u003cbr\u003eகணினியின் விசைப்பலகை அதிர்ந்திடாத வண்ணம்\u003cbr\u003eமென்மையாக பதிவேற்றத் தொடங்குகின்றனர்\u003cbr\u003eஎன்மீதான அவதூறுகளை.\u003c\/p\u003e\n\u003cp\u003e- ஆதவன் தீட்சண்யா\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47917853016300,"sku":null,"price":150.4,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/fbe63dc1ae331b264eef156bbeb1e802.jpg?v=1783676364"},{"product_id":"யுத்த-தூஷணம்","title":"யுத்த தூஷணம்","description":"\u003cp\u003eபோரின் கொடுமை, மனித வாழ்வின் மதிப்பு மற்றும் அமைதியின் அவசியத்தை சிந்திக்க வைக்கும் ஆழமான நூல். மனிதநேயம் வெல்ல வேண்டும் என்ற வலுவான செய்தியை எளிமையாக எடுத்துரைக்கிறது.\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47917946110188,"sku":null,"price":188.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/74a2571aaa6849db797b9fe57ffa4d6e.jpg?v=1783676657"},{"product_id":"போர்-இன்னும்-ஓயவில்லை","title":"போர் இன்னும் ஓயவில்லை","description":"\u003cp\u003e\u003cspan\u003eஷோபா சக்தியிடம், நாவல், சிறுகதைகள், கட்டுரைகள் என்பதையும் தாண்டி உரையாடுவதற்கு நிறையக் கதையாடல்கள் உண்டு.அப்படியான உரையாடல்களின் தொகுப்புதான் போர் இன்னும் ஓயவில்லை.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47918001029356,"sku":null,"price":150.4,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/b01edf7b1ddcf638d8faefb11dcdb944.jpg?v=1783676876"},{"product_id":"எவராலும்-கற்பனை-செய்ய-முடியாத-நான்","title":"எவராலும் கற்பனை செய்ய முடியாத நான்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஈழம்... பேசிப்பேசி மாளாத நிலம். அதன் கடந்தகாலச் சோகங்களையும் தவறுகளையும் வெளிப் படையாகப் பேசுவதன் மூலமாக எதிர்கால அரசியல் தெளிவுக்கு இட்டு நிரப்புபவையாக சிலரது படைப்புகள் மட்டுமே இருக்கும். அப்படிப்பட்ட நான்கு ஆளுமைகளைப் பேட்டி கண்டு எழுதியிருக்கிறார் ஷோபாசக்தி. கவிஞர் கருணாகரனும் தமிழ்க்கவியும் தமிழ் தேசியம் சார்ந்த ஆதரவு தளத்தில் இயங்கியவர்கள். புலிகள் இயக்கத்துடன் கடந்த காலத்தில் அடையாளம் காணப்பட்டவர்கள். பழ.ரிச்சர்ட், இடதுசாரியாக அறியப்பட்டவர். ஜனதா விமுக்தி பெரமுனாவிலும் இருந்தவர். பெண்ணுரிமை மற்றும் இஸ்லாமியர் நலன் சார்ந்து பேசக்கூடியவர் ஸர்மிளா ஸெய்யித். 'உம்மத்’ நாவலை எழுதியவர் இவர். இவர்கள் அளித்த பேட்டிகள் பற்றிய தனது விமர்சனத்தைப் பதிவு செய்துள்ளார் கவிஞர் நிலாந்தன். இந்த அடிப்படையில் ஈழப் பிரச்னையை ஆறு பேர் பார்வையில் பார்க்க அடித்தளமாக அமைந்துள்ளது இந்தத் தொகுப்பு.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47918073446636,"sku":null,"price":188.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/0f12a767867c4207fd5b0d7045915ec6.jpg?v=1783677128"},{"product_id":"கருங்குயில்","title":"கருங்குயில்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஷோபாசக்தியின் அய்ந்தாவது சிறுகதைத் தொகுப்பு. 2022 நவம்பர் – டிசம்பர் காலப்பகுதியில் எழுதப்பட்ட இந்தக் கதைகள் இனம், நிறம், சாதியொடுக்குமுறை, புலம் பெயர் வாழ்வு ஆகிய புள்ளிகளில் முகிழ்த்து; 12. மனித மனங்களினதும் இலங்கை ஆ சி நிலத்தினதும் சிக்கலான தருணங்களை ஆ எளிமையும் கூர்மையுமான மொழியில் விரித்துச் சொல்கின்றன. வரலாற்றில் முற்றாகவே மறைக்கப்பட்ட அல்லது திரிபுபட்ட உண்மைகளைப் புனைவுமொழியின் சாத்தியங்களால் கண்டடைகின்றன.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47918137704684,"sku":null,"price":188.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/4eb26036556f7cbf6cf7230b13d98191.jpg?v=1783677322"}],"url":"https:\/\/centaram.com\/collections\/shoba-sakthi.oembed","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}