{"title":"செல்வேந்திரன்","description":"","products":[{"product_id":"பெரும்வெற்றுக்-காலம்","title":"பெரும்வெற்றுக் காலம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eகாட்டுக்குதிரைக் கன்றின் துள்ளல்; பற்ற வைத்த பட்டாசுப் பாய்ச்சல்; எதிர்ப்படும் எதையும் எத்தும் எள்ளல்; அனைத்தின் ருசியையும் அறியும் மேய்ச்சல்; துக்கத்துக்குச் சிரிப்பின் துணியை மாட்டல்; கோபம் என்றாலும் குறைவாய் கூறல்; பரந்ததைச் சிற்சில பதங்களில் காட்டல்; உள்ள இலக்கணத்தை உணர்வுக்காக மீறல்...\u003cbr\u003e\u003cbr\u003eஇப்படி ஒரு நடை எப்படி இருக்கும்? இந்த நூலின் நடை அதை விளக்கும்.\u003cbr\u003e\u003cbr\u003eதனிமை, வெறுமை, தைரியமின்மை, பொறுமை இல்லா போக்கிரித்தன்மை - எல்லாம் எதிர்மறை. \u003c\/span\u003e\u003cspan class=\"a-text-bold\"\u003eசெல்வேந்திரன்\u003cspan\u003e \u003c\/span\u003e\u003c\/span\u003e\u003cspan\u003eஎழுத்தினால் அவை அத்தனையும் அறிமுறை.\u003cbr\u003e\u003cbr\u003eதனது கதை போல்\u003c\/span\u003e\u003cspan class=\"a-text-bold\"\u003e\u003cspan\u003e \u003c\/span\u003eசெல்வேந்திரன்\u003c\/span\u003e\u003cspan\u003e சொல்வது உங்கள் கதைதான். படியுங்கள், ஆமென்பீர். நகைச்சுவையாளன் போல் ஒரு தோற்றம். உள்ளே கிடப்பது அணையா நெருப்பு. ரசித்து ரசித்துப் படித்துவந்தாலும் முடித்து வைக்கையில் மூளைக்கு வேலை. பொழுதுபோக்குக்கு நான் உத்தரவாதம். \u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47944717435116,"sku":null,"price":122.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/dd458ec2099095a8d65bc564018a11b7.jpg?v=1784025568"},{"product_id":"மேடைப்-பேச்சின்-பொன்விதிகள்","title":"மேடைப் பேச்சின் பொன்விதிகள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஇந்நூலின் நோக்கம் தரமான, செறிவான மேடை உரையை வழங்க விரும்புகிறவர்களுக்கும், கேட்க விரும்புகிறவர்களுக்குமானது. சிற்சில விஷயங்களைக் கவனத்தில் கொண்டால், எவராலும் கருத்தாழம் மிக்க சொற்பொழிவை ஆற்றமுடியும்.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cbr\u003e\u003cspan\u003eநவீன வாழ்க்கையில் நீங்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் பேசியே ஆகவேண்டிய தருணங்கள் அமைந்துகொண்டே இருக்கும். இந்நூலில் பரிந்துரைக்கப்படும் ஆலோசனைகள் எல்லா வகையான மேடை உரைகளுக்கும் பொருந்தக்கூடியவை. ஆகவே, இது அனைவருக்குமான புத்தகம்.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cbr\u003e\u003cspan\u003eதோன்றிற் புகழோடு தோன்றுக என்றால் பிறக்கும்போதே பெருமையோடு பிறக்கவேண்டும் என்று பொருளல்ல. அது மன்னர் வகையராக்களுக்குத்தான் சாத்தியம். ஓர் அவையில் தோன்றுவதாக இருந்தால், ஒரு மேடையில் தோன்றுவதாக இருந்தால், அதற்குரிய தகுதியோடும் புகழோடும் தோன்றுக என்பதே இதன் மெய்ப்பொருள். இந்நூலை வாசித்த பிறகு நீங்கள் தோன்றும் சபைகளில், மேடைகளில் புகழோங்கித் திகழ்வீர்கள்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47944739979500,"sku":null,"price":159.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/2a7250c7bc977d1167b0ad45848ced9c.webp?v=1784027886"},{"product_id":"நகுமோ-லேய்-பயலே","title":"நகுமோ லேய் பயலே","description":"\u003cp\u003e\u003cspan\u003eஇந்நூல் அதிகமும் இலக்கிய பாவனைகளை கிண்டல் செய்கிறது. அவ்வப்போது எனக்கு நேரிட்ட அனுபவங்களைச் சொல்கிறது. கிராமமும் அல்லாத நகரமும் அல்லாத சிற்றூரின் குணச்சித்தர்கள் சிலர் அவ்வப்போது மின்னி மறைகிறார்கள். என் பிரியத்திற்குரிய எழுத்தாளர் பி. மாசானமுத்து கும்பமுனிக்கும் பேயோனுக்கும் சீனியர். அவரது எழுத்துக்களும் இந்நூலை அலங்கரிக்கின்றன. எவ்வளவு யோசித்தாலும் இந்நூலுக்கு ஏன் ‘நகுமோ… லேய் பயலே’ என தலைப்பு வைத்திருக்கிறேன் என்பதை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47946098671852,"sku":null,"price":126.9,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/84f3cfe1530e7374fedb3cd56a6a6d4b.jpg?v=1784089117"}],"url":"https:\/\/centaram.com\/collections\/selventhiran.oembed","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}