{"title":"சந்தியா பதிப்பகம்","description":"","products":[{"product_id":"ரணங்களின்-மலர்ச்செண்டு","title":"ரணங்களின் மலர்ச்செண்டு","description":"\u003cp\u003e\u003cspan\u003eகதைகள் எழுதும்போது இவர் வண்ணதாசன்.கவிதையுலகில் கல்யாண்ஜி. வீட்டிலும் வேலை செய்த இடத்திலும் கல்யாணசுந்தரம். விழைவு மனமும் விழா மணமும் கொண்டவர் என்றாலும் மௌனமும் மௌனம் குலைந்த பொழுதில் வெம்மையும் இயல்பில் கொண்டவர். கங்கைக்கரையில் தியானித்திருக்கும் தவசியைப் போலவும் புத்தகயாவில் காலமறியாது தொடர்ந்து பெருநிலைக்கு முனையும் புத்தத் துறவியைப் போலவும் நள்ளிருள் நிலாவின் மௌன நகர்ச்சியைப் போலவும் சதா காலமும் எண்ணமும் எழுத்துமாக வாழும் பவித்ரன் வண்ணதாசன். இவரது உலகில் அன்பு உண்டு. ஆரவாரமில்லை; சமயமும் இல்லை. சமயோசிதமும் இருக்காது. மரமாய் நிழலாய் கனிந்த மனிதர்களின் வாழ்வும் காட்சியும் காட்சிப்பிழைகளும் கொண்டவை இவரது கவிதைக் கணங்கள். ‘யாருடனும் போட்டி இல்லை எனக்கு’ என்று இவர் பிரகடனப்படுத்தினாலும் போட்டிப் போட்டுக் கொண்டு இவரிடம் வந்து சேர்கிறார்கள் அடுத்தடுத்த தலைமுறையினர். சமீபகாலமாக கதாசிரியர் வண்ணதாசனுடன் கவிஞர் கல்யாண்ஜிக்கும் சரி நிகர் போட்டி ஒன்று நிலவி வருவதும் வெளிப்படையான உண்மை. தற்போது ஒரே நேரத்தில் வண்ணதாசனின் கமழ்ச்சி சிறுகதைத் தொகுப்பும் கல்யாண்ஜியின் ரணங்களின் மலர்ச்செண்டு கவிதைத் தொகுப்பும் வெளிவருகின்றன. கமழ்ச்சி நெடுங்கதைகளின் தொகுப்பாகவும் ரணங்களின் மலர்ச்செண்டு கல்யாண்ஜியின் மொத்த வாழ்வனுபவத்தின் திரட்சியாகவும் மனம் கடந்த நிலையில் வந்திறங்கிய வார்த்தைகளாகவும் நம்மைச் சலனப்படுத்துகின்றன. ‘சுந்தரன் நான் எனும் மந்திரம் புரிந்தது’ என்று எழுதுகிற கல்யாண்ஜியை இந்தத் தொகுப்பில்தான் எல்லா கல்யாண குணங்களும் கொண்ட சுந்தரனாய் கண்டு கொள்ளமுடிகிறது. மௌனம் கலைகிறபோது எழுகிற ஆற்றலை அரிய இயலாது. அது பாற்கடலை கடைவது போல்தான். நஞ்சு நீக்கி அமுதம் திரளும் தருணம். சொல் உக்கிரம் பெறும்காலம். ‘குளிராவது ஒன்றாவது? என்று என்றைக்காவது மௌனம் பேசியிருக்குமா? உரத்தக் குரலில் பேசியிருக்கிறது. இத்தொகுப்பில் வாழ்வின் ரகசியத்தை வாழ்வு தரும் வலியோடு வரைந்திருக்கிறார் கல்யாண்ஜி. இல்லை கல்யாண சுந்தரன்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47947045306604,"sku":null,"price":103.4,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/656fe5688e3a0b02439a762659e6d3bb.jpg?v=1784106645"},{"product_id":"கமழ்ச்சி","title":"கமழ்ச்சி","description":"\u003cp\u003eஎன் எழுத்தில் உணர்ச்சிகளுக்குத்தான் இடமுண்டு; புத்திசாலித் தனங்களுக்கு இடமே இல்லை. உணர்வுகள் நெகிழ்ந்து நெக்குருக்குவனவாகவும் அசட்டுத்தனமாகவும், கள்ளம் கபடமற்ற சிறுபிள்ளைத்தனமாகவும் இருப்பது இயல்புதான். உணர்வுகள் பகடை உருட்டா. தொழுத கையுள்ளும் படை ஒடுங்காது. தரையில் விழுகிற மழைத்தாரை மாதிரி கொப்புளம் வெடிக்கும். ஆனால், உடனடியாய் உடைந்து தண்ணீரோடு தண்ணீராகித் தரை நனைக்கும். எழுத்தும் தரை நனைக்கத்தான்.\u003c\/p\u003e\n\u003cp\u003e- வண்ணதாசன்\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47947066540268,"sku":null,"price":230.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/KAMALCHI.webp?v=1784107414"},{"product_id":"அகிலம்","title":"அகிலம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஎன்னைப் பிறர் அறிவதற்கும், நான் பிறருக்கு அறிவித்துக் கொள்வதற்கும் என் எழுத்துக்களே போதுமானது. ஆனாலும் ‘விருப்பமில்லாத திருப்பங்கள்’ எத்தனையோ, தவிர்க்க முடியாதவை. “காதலினால் அல்ல கருணையினால்” என்றும், “கருணையினால் அல்ல காதலினால்” என்றும்தான் ஒவ்வொன்றும் வெவ்வேறு அறியாத சதவிகிதங்களுடன் நிகழ்கின்றன. - வண்ணதாசன்\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47947293130988,"sku":null,"price":170.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/626a452d4d9d58eb8e36d849659b0ab1.jpg?v=1784107853"},{"product_id":"முதலில்-அமரும்-பறவை","title":"முதலில் அமரும் பறவை","description":"\u003cp\u003e\u003cspan\u003e79 வயது முடியப் போகிறது. எத்தனையோ முறை அருவியில் குளித்தாயிற்று. இதுவரை ஒரு தடவை கூட மங்குஸ்தான் பழம் சாப்பிட்டதில்லை. வாழ்க்கை என்பது சாப்பிடாத ஒரு மங்குஸ்தான் பழம்\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47947339825388,"sku":null,"price":162.75,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/0d96d2467a71ca61503a8ffa6b8f3840.jpg?v=1784108244"},{"product_id":"மனுஷா-மனுஷா","title":"மனுஷா மனுஷா","description":"\u003cp\u003e\u003cspan\u003eவாழ்க்கை என்பது எனக்கு மனிதர்கள்தான். எனக்கு இடது, வலது, முன், பின் என்றிருந்து, தங்கள் தங்கள் தோழமையாலும், ஒரு பின்னமான நேரத்தாலும்...\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47947342643436,"sku":null,"price":103.4,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/18b19db23ea51edb1257e536613acf92.png?v=1784108586"},{"product_id":"கலைக்க-முடியாத-ஒப்பனைகள்","title":"கலைக்க முடியாத ஒப்பனைகள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eயாருடைய முகத்தையோ யாரோ அணிந்துகொண்ட மாதிரி, யார் முகத்தின் மேலோ யார் முகத்தையோ ஒப்பனை செய்துகொண்டது மாதிரி, ...\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47947348771052,"sku":null,"price":151.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/8eca006fd425c6b5d6dbbbf35da12b4c.png?v=1784108926"},{"product_id":"தோட்டத்திற்கு-வெளியிலும்-சில-பூக்கள்","title":"தோட்டத்திற்கு வெளியிலும் சில பூக்கள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஇந்த வாழ்வின் இயக்கம், அதன் இடையறாத முன்னகர்வு தொடர்ந்து வசீகரித்துக்கொண்டே இருக்கிறது. கானகம்போல தவிர்ப்பதற்கு இயலாத ஒரு அழைப்பை வாழ்க்கையின் குரலில் உணரமுடிகிறது. இம்சை, காயம், வலி, முனகல், நம்பிக்கை, உற்சாகம், பிரகடனம், இசை, அமைதி என்று வெவ்வேறு அடர்த்தியுடன் அந்தக் குரல் இந்த வாழ்வின் பரப்பில் படர்ந்து கொண்டேயிருக்கிறது. நான் வாங்கிக் கொண்ட விதத்தில், என் காதில் விழுவதைச் சொல்கிறேன். சொல்வதைப் பாசாங்கின்றிச் சொல்வதே என் தொடர்ந்த முயற்சியாக இருக்கிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47947358175468,"sku":null,"price":131.6,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/16e62e83fd025d2c200fce8fe254843c.png?v=1784109227"},{"product_id":"பெயர்-தெரியாமல்-ஒரு-பறவை","title":"பெயர் தெரியாமல் ஒரு பறவை","description":"\u003cdiv class=\"product_description detailblocks\"\u003e\n\u003cdiv itemprop=\"description\"\u003e\n\u003cp\u003eவாழ்க்கையின் எந்தப் பல் சக்கரங்களுக்குள்ளும் என் வேட்டி நுனி கூட சிக்கி இதுவரை நைந்து போகவில்லை. இருந்தாலும் என் அக்கரை சார்ந்திருக்கிற உலகம் எது என்பதை என் படைப்புகள் சொல்லும்.\u003c\/p\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv class=\"keywordtags\"\u003e\u003c\/div\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47947411718380,"sku":null,"price":127.4,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/22c54875f2afda9a479eb695e22b5cf7.png?v=1784109527"},{"product_id":"மீனைப்-போல-இருக்கிற-மீன்","title":"மீனைப் போல இருக்கிற மீன்","description":"\u003cp\u003e\u003cspan\u003e\"நான் ஏற்கனவே ஏற்றப்பட்டிருக்கிறேன். இனியும் தீ வேண்டாம். இன்னும் சில இருக்காஞ்சட்டி விளக்குகளை ஏற்றுகிறபொழுது வரைக்கும் எண்ணெய் இருக்கும் என் திரியில்.என்னுடைய மாடங்கள், என்னிடமிருந்து கசிந்த எண்ணெய்க் கங்குகளாலும், புகைப்படிவுகளாலும்நான் நின்று எரிந்ததற்கு அடையாளம் சொல்லும்.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cbr\u003e\u003cspan\u003eஇனிவரும் நாட்களிலும் வாசலில் வந்து வியாபாரம் செய்யும் மரபு மிச்சப்படும் எனில், அபிஷேகப்பட்டி அல்லது மாறாந்தையிலிருந்து பனங்கிழங்கு விற்க வந்த கிழவி என் எண்ணெயைத் தொட்டு உச்சி வகிட்டில் வைத்துக் கொள்வாள்.\"\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47947414601964,"sku":null,"price":103.4,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/3e2477bec42fc18fae1e810cfa01455d.jpg?v=1784109862"},{"product_id":"காற்றைக்-கேட்கிறவன்","title":"காற்றைக் கேட்கிறவன்","description":"\u003cp\u003eஏற்கனவே சேகரித்து வந்து கொண்டிருந்த இந்தத் தொகுப்பின் இறுதி வடிவக் கவிதைகளை நான் ஒழுங்கு செய்தேன். இன்னும் சொன்னால், கருப்புப் பூனைக்குட்டிக்குப் புல்லாங்குழல் வாசிக்கும் ஒரு சிறுவனுடைய, முன்னால் சென்ற ஒரு சாவிக்கொத்தில், எதை எதையோ இன்னும் திறந்து பார்த்துவிடலாம்.\u003c\/p\u003e\n\u003cp\u003e- கல்யாண்ஜி\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47947423547628,"sku":null,"price":184.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/5559c1eb45561283e4d297dabdb0299c.png?v=1784110118"},{"product_id":"உருப்பளிங்கு","title":"உருப்பளிங்கு","description":"\u003cp\u003e\u003cspan\u003eநீ தூக்கியதில்லை நானும் தூக்கியதில்லை பின் ஏன் இந்த பூமி இவ்வளவு கனக்கிறது? பனியைக் கும்பிடுவதா? மலையைக் கும்பிடுவதா? பனி உருகட்டும். 'நான் மலையைக் கும்பிட்டுக் கொள்கிறேன் நான்கு பக்கங்களையும் அடைத்திருந்தார்கள் எங்கும் போகவில்லை. நான்கு பக்கங்களும் திறந்திருக்கின்றன எங்கும் போகவில்லை இதோ நீங்கள் வந்திருப்பது மூடிய பக்கத்தின் வழியே தான்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47947425710316,"sku":null,"price":111.6,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/8a6943f59b1d375b2a50515c9150dbd6.jpg?v=1784110445"},{"product_id":"தரைக்கும்-வானத்துக்கும்","title":"தரைக்கும் வானத்துக்கும்","description":"\u003cp\u003e\u003cspan class=\"T286Pc\" data-sfc-cp=\"\" data-sfc-root=\"ep\" data-sfc-cb=\"\" data-copy-service-computed-style='font-family: \"Google Sans\", Arial, sans-serif; font-size: 16px; font-weight: 400; margin: 0px; text-decoration: none; border-bottom: 0px rgb(10, 10, 10);'\u003e\u003cspan data-subtree=\"aimfl,mfl\" data-copy-service-computed-style='font-family: \"Google Sans\", Arial, sans-serif; font-size: 16px; font-weight: 400; margin: 0px; text-decoration: none; border-bottom: 0px rgb(10, 10, 10);'\u003e'\u003c\/span\u003e\u003cspan data-sfc-cp=\"\" data-sfc-root=\"ep\" data-sfc-cb=\"\" data-copy-service-computed-style='font-family: \"Google Sans\", Arial, sans-serif; font-size: 16px; font-weight: 400; margin: 0px; text-decoration: none; border-bottom: 0px rgb(10, 10, 10);'\u003e\u003cspan data-sfc-cp=\"\" data-sfc-root=\"c\" data-sfc-cb=\"\" data-copy-service-computed-style='font-family: \"Google Sans\", Arial, sans-serif; font-size: 16px; font-weight: 400; margin: 0px; text-decoration: none; border-bottom: 0px rgb(10, 10, 10);'\u003e\u003cspan class=\"\" data-sfc-cp=\"\" data-sfc-root=\"c\" data-sfc-cb=\"\" data-ved=\"2ahUKEwiT4YqPutSVAxU_sFYBHftRMXEQ0fERegoIAggACAAIBBAB\" data-copy-service-computed-style='font-family: \"Google Sans\", Arial, sans-serif; font-size: 16px; font-weight: 400; margin: 0px; text-decoration: none; border-bottom: 0px rgb(10, 10, 10);'\u003eதரைக்கும் வானத்துக்கும்\u003c!--TgQPHd||[]--\u003e\u003c!--TgQPHd||[false,\u0026quot;\u0026quot;,false]--\u003e\u003c\/span\u003e\u003c!--TgQPHd||[]--\u003e\u003c\/span\u003e\u003c!--TgQPHd||[]--\u003e\u003c\/span\u003e' என்பது புகழ்பெற்ற கவிஞர் \u003c!--TgQPHd||[]--\u003e\u003c\/span\u003e\u003cstrong class=\"Yjhzub\" data-sfc-root=\"ep\" data-sfc-cb=\"\" data-copy-service-computed-style='font-family: \"Google Sans\", Arial, sans-serif; font-size: 16px; font-weight: 700; margin: 0px; text-decoration: none; border-bottom: 0px rgb(10, 10, 10);'\u003eகல்யாண்ஜி\u003c!--TgQPHd||[]--\u003e\u003c\/strong\u003e எழுதிய ஒரு கவிதைத் தொகுப்பு ஆகும். இந்த நூலை \u003cstrong class=\"Yjhzub\" data-sfc-root=\"ep\" data-sfc-cb=\"\" data-copy-service-computed-style='font-family: \"Google Sans\", Arial, sans-serif; font-size: 16px; font-weight: 700; margin: 0px; text-decoration: none; border-bottom: 0px rgb(10, 10, 10);'\u003e\u003cspan class=\"T286Pc\" data-sfc-cp=\"\" data-sfc-root=\"ep\" data-sfc-cb=\"\" data-copy-service-computed-style='font-family: \"Google Sans\", Arial, sans-serif; font-size: 16px; font-weight: 700; margin: 0px; text-decoration: none; border-bottom: 0px rgb(10, 10, 10);'\u003e\u003cspan data-sfc-cp=\"\" data-sfc-root=\"ep\" data-sfc-cb=\"\" data-copy-service-computed-style='font-family: \"Google Sans\", Arial, sans-serif; font-size: 16px; font-weight: 700; margin: 0px; text-decoration: none; border-bottom: 0px rgb(10, 10, 10);'\u003e\u003cspan data-sfc-cp=\"\" data-sfc-root=\"c\" data-sfc-cb=\"\" data-copy-service-computed-style='font-family: \"Google Sans\", Arial, sans-serif; font-size: 16px; font-weight: 700; margin: 0px; text-decoration: none; border-bottom: 0px rgb(10, 10, 10);'\u003e\u003cspan class=\"\" data-sfc-cp=\"\" data-sfc-root=\"c\" data-sfc-cb=\"\" data-ved=\"2ahUKEwiT4YqPutSVAxU_sFYBHftRMXEQ0fERegoIAggACAAIBBAC\" data-copy-service-computed-style='font-family: \"Google Sans\", Arial, sans-serif; font-size: 16px; font-weight: 700; margin: 0px; text-decoration: none; border-bottom: 0px rgb(10, 10, 10);'\u003eசந்தியா பதிப்பகம்\u003c!--TgQPHd||[]--\u003e\u003c!--TgQPHd||[false,\u0026quot;\u0026quot;,false]--\u003e\u003c\/span\u003e\u003c!--TgQPHd||[]--\u003e\u003c\/span\u003e\u003c!--TgQPHd||[]--\u003e\u003c\/span\u003e\u003c!--TgQPHd||[]--\u003e\u003c\/span\u003e\u003c!--TgQPHd||[]--\u003e\u003c\/strong\u003e (Sandhya Pathippagam) வெளியிட்டுள்ளது.\u003cspan\u003e \u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47947430396140,"sku":null,"price":102.3,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/a77fa8af32271f2d73d4aa1288e93a3f.jpg?v=1784110798"},{"product_id":"நாபிக்-கமலம்","title":"நாபிக் கமலம்","description":"\u003cdiv\u003e\n\u003cp\u003eதாயக்கட்டை உருள்வதுபோல, சோழிகள் மல்லாந்து கவிழ்வது போல, வாழ்க்கையும் மனிதர்களும் யாராலோ விசிறப்பட்டதுபோல் எழுதுகிறவன் கண்முன்னே சதா விழுந்தும் எழுந்தும் சென்று கொண்டிருக்கிறது. சென்று கொண்டிருக்கிறார்கள். முற்றிலும் கம்பீரமான ஒரு மனிதனை, முற்றிலும் கருணைமயமான ஒரு மனுஷியை அடையாளம் கண்டுகொள்வது எழுதுகிறவன் கையில் இருக்கிறது.\u003c\/p\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e\n\u003c\/div\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47947442127084,"sku":null,"price":172.9,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/7732e4c38d828dc8ba66fc98e2a6cd45.png?v=1784111086"}],"url":"https:\/\/centaram.com\/collections\/santhiya-pathipagam.oembed","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}