{"title":"எஸ். ராமகிருஷ்ணன்","description":"","products":[{"product_id":"சிவப்பு-மச்சம்","title":"சிவப்பு மச்சம்","description":"\u003cp\u003e\u003cstrong\u003eசிவப்பு மச்சம்:\u003cspan\u003e \u003c\/span\u003e\u003c\/strong\u003eதனது கதைகளில் கற்பனைக்கும், யதார்த்தத்திற்கும் இடையில் அழகான சமநிலையை உருவாக்குகிறார்\u003cspan\u003e \u003c\/span\u003e\u003cstrong\u003e\u003ca title=\"எஸ்.ராமகிருஷ்ணன்\" href=\"https:\/\/en.wikipedia.org\/wiki\/S._Ramakrishnan\" rel=\"noopener\" target=\"_blank\"\u003eஎஸ்.ராமகிருஷ்ணன்.\u003c\/a\u003e\u003c\/strong\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eஇன்றைய சிறுகதையின் முன் உள்ள சவால் உண்மையின் பலவேறுபட்ட ஆழங்களைச் சொல்லும் கவித்துவம் கொண்ட வடிவையும் பலக்குரல் கொண்ட தன்மையையும் உருவாக்கி காட்டுவதே. தனது சிறுகதைகளின் மூலம் கதை சொல்லும் முறையில் புதிய சாத்தியங்களை உருவாக்கி காட்டியுள்ளார் எஸ்.ராமகிருஷ்ணன். தனித்தன்மைகள் கொண்ட கதாபாத்திரங்களையும் வியப்பூட்டும் நிகழ்வுகளையும் கொண்டவை இச்சிறுகதைகள்.\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47634411716844,"sku":null,"price":235.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/8b8b9eb2780212eb2e0cff741d2ca3b4.jpg?v=1778841401"},{"product_id":"கதாபாத்திரங்களின்-பொம்மலாட்டம்","title":"கதாபாத்திரங்களின் பொம்மலாட்டம்","description":"\u003cp\u003e\u003cstrong\u003eகதாபாத்திரங்களின் பொம்மலாட்டம்: \u003c\/strong\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eஹெர்மன் மெல்வில், கோ யுன், மோ யான், ஸ்டீன்பெக்,லேர்மன்தேவ், கொரலன்கோ,.பால்சாக், பாஷோ, ஓனோ நோ கோமாச்சி, ஜேவியர் மரியாஸ் என உலகப்புகழ் பெற்ற எழுத்தாளர்களைப் பற்றியும் அவர்களின் முக்கியப் படைப்பு குறித்தும் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு. உலக இலக்கியமெனும் நெடும் பாதையில் பயணித்துத் தனித்துவமிக்கப் படைப்பாளிகளை அடையாளம் காட்டுகிறார் எஸ்.ராமகிருஷ்ணன்.\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47634412077292,"sku":null,"price":132.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/dad38ed157a048d6b4f44dfb507bf367.jpg?v=1778841430"},{"product_id":"பிகாசோவின்-கோடுகள்","title":"பிகாசோவின் கோடுகள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eநவீன ஓவியங்களைப் புரிந்துகொள்வதற்காக எழுதப்பட்ட கட்டுகரைகளின் தொகுப்பு இது. வான்கோ, பிகாசோ, எஷர், லாட்ரெக், காகின், கிளிம்ட், புருகேல் போன்ற உலகப் புகழ்பெற்ற ஓவியர்களின் ஓவியங்கள் குறித்து எஸ்.ராமகிருஷ்ணன் விரிவான தனது ரசனையைப் பதிவு செய்திருக்கிறார். உலகின் மிக முக்கியமான கலைக்கூடங்களுக்கு நேரில் சென்று ஓவியங்களைக் கண்டுவந்த எஸ்.ராமகிருஷ்ணனின் தேடுதலின் வெளிப்பாடே இக்கட்டுரைகள். நவீன ஓவியங்களைப் புரிந்துகொள்வதற்குப் பயிற்சியும் ரசனையும் தொடர்ந்த ஈடுபாடும் தேவை என்பதை எஸ்.ராமகிருஷ்ணனின் இக்கட்டுரைகள் வலியுறுத்துகின்றன.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47634414600428,"sku":null,"price":141.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/374166cb0325d68154b14e062e549970.jpg?v=1778841783"},{"product_id":"அபாய-வீரன்","title":"அபாய வீரன்","description":"\u003cp\u003e\u003cstrong\u003eஅபாய வீரன்:\u003cspan\u003e \u003c\/span\u003e\u003c\/strong\u003e\u003cspan\u003eகதைகளைக் கூடி வாசிப்பதுடன் அதை விளையாட்டாக உருமாற்றிச் சிறார்களை விளையாட வைப்பதை புதிய பாணியாக உலகெங்கும் செயல்படுத்தி வருகிறார்கள். அது போன்ற ஒரு முயற்சி இந்தக் கதை விளையாட்டு. கதையை வாசிப்பவர் ஒரு பகடையைக் குலுக்கிப் போட்டு அதில் எந்த எண் விழுகிறதோ அந்தப் பத்தியை வாசிக்க வேண்டும். இப்படிக் கதையினுள் முன்னும் பின்னுமாகப் பயணித்து யார் சவாலை வென்று சாதிக்கிறார்களோ அவர்களே அபாய வீரனாகத் தேர்வு செய்யப்படுவார். தமிழில் கதா விளையாட்டு ஒரு புது முயற்சியாகும்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47634417451244,"sku":null,"price":56.4,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/074c14244ff24c8d12af1c458937c5c2.jpg?v=1778841880"},{"product_id":"பதின்","title":"பதின்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஒவ்வொரு சிறுவனும் தனக்கான கொண்டாட்டத்திற்கான வழியைத் தானே தேடிக் கொள்கிறான். தனது எழுத்தின் வழியே பால்யத்தின் வெண்ணிற நினைவுகளை பகிர்ந்து தருகிறார் எஸ்.ராமகிருஷ்ணன்\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47634417582316,"sku":null,"price":220.9,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/affbe048b711e1fbb1aae07e316cce59.jpg?v=1778842009"},{"product_id":"துயில்","title":"துயில்","description":"\u003cp\u003e\u003cspan\u003eதெக்கோடு மாத கோவில் என்ற தேவாலயத்தின் திருவிழாவை மையப்படுத்தி நோய் தீர்க்க வரும் பல்வேறு விதமான ரோகிகளின் வாழ்க்கையை விவரிக்கிறது நாவல். நோய்மை குறித்து இந் நாவல் முழுவதும் பல தளங்களில் உரையாடல்கள் நடக்கின்றன\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47634418893036,"sku":null,"price":493.5,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/d8930c76b522e3e401fcb74546b8e2b1.jpg?v=1778842304"},{"product_id":"சிறிது-வெளிச்சம்","title":"சிறிது வெளிச்சம்","description":"\u003cp\u003e\u003cstrong\u003eசிறிது வெளிச்சம்\u003c\/strong\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e:\u003c\/p\u003e\n\u003cp\u003eஒரே இடத்தில் வேரூன்றிவிட்ட வருத்தத்தைப் போக்கத் தான் மரங்கள் பறவைகளுக்கு இடம் தருகின்றன என்கிறது ஆப்பிரிக்கப் பழமொழி. யோசித்தால் நாமும் அப்படித்தான். வாழ்நாளில் நாம் பெற முடியாத நிலப்பரப்பை புத்தகங்கள் வழியாகப் பெற்றுக் கொள்கிறோம். இந்தியா முழுவதும் சுற்றியலைந்து தான் கண்டறிந்த, அனுபவித்த விஷயங்களைத் தனது கட்டுரைகளின் வழியே பகிர்ந்து தருகிறார்\u003cspan\u003e \u003c\/span\u003e\u003ca title=\"எஸ்.ராமகிருஷ்ணன்.\" href=\"https:\/\/www.sramakrishnan.com\/\" rel=\"noopener\" target=\"_blank\"\u003eஎஸ்.ராமகிருஷ்ணன்.\u003c\/a\u003e\u003cspan\u003e \u003c\/span\u003eஉலகச் சினிமா, இலக்கியம் பயணம் என்று மூன்று தளங்களில் இக்கட்டுரைகள் இயங்குகின்றன என்பதே இதன் தனிச்சிறப்பு.\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47634420039916,"sku":null,"price":423.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/3e18f5880bec657ef027bc1550a7b5ac.jpg?v=1778842366"},{"product_id":"சஞ்சாரம்","title":"சஞ்சாரம்","description":"\u003cp\u003eசஞ்சாரம் நாவலின் பெயரிலேயே ஒரு சிறப்பு உள்ளது. சஞ்சாரம் என்றால் இசையை ஏற்றித் தாழ்த்தி வாசிப்பது (Modulation) என்பது மட்டுமல்ல, சஞ்சரித்தல் என்ற பொருளும் உண்டு. இந்த நாவல் நாதஸ்வக் கலைஞர்களுடைய கதையைச் சொல்லுவதால் சஞ்சாரம் என்ற பெயர் பொருந்துகிறது. அதேபோல் இந்த நாவலை எழுத அந்தக் கலைஞர்களை நேரில் சந்தித்துப் பேசவும், இசை சம்பந்தமாக, அவர்களின் வாழ்க்கை சம்பந்தமாகவும் பல விவரங்களை சேகரிக்கவும், ஆய்வுகள் நடத்தவும் நூலாசிரியர் நிறையவே சுற்றி அலைந்து இந்த நாவலைப் படைத்திருக்கிறார் என்பதால் சஞ்சாரம் என்ற தலைப்பும் இதற்குப் பொருந்துகிறது.\u003c\/p\u003e\n\u003cp\u003eபதினைந்து ஆண்டுகாலமாக இவருடைய சிந்தனையில் இழை ஓடிக் கொண்டிருந்த நாதஸ்வரக் கலைஞர்களுடைய கசப்பான வாழ்நிலை பற்றிய எண்ணம் நாவலாக உருவெடுத்தது. அவற்றை மிக அக்கறையோடு அசலாக வடித்துள்ளார். அந்த முயற்சியில் மூச்சுப் பிடித்து மூழ்கி எழுந்துள்ளார். நாதஸ்வரக் கலைஞராகவே (Metamorhosic) உருமாறியுள்ளார்.\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47634431803628,"sku":null,"price":319.6,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/d0887e58216f748d85bae98a6d786aa1.jpg?v=1778842716"},{"product_id":"நீலச்சக்கரம்-கொண்ட-மஞ்சள்-பேருந்து","title":"நீலச்சக்கரம் கொண்ட மஞ்சள் பேருந்து","description":"\u003cp\u003e\u003cstrong\u003eநீலச்சக்கரம் கொண்ட மஞ்சள் பேருந்து :\u003cspan\u003e \u003c\/span\u003e\u003c\/strong\u003e\u003cspan\u003eஅரசுப் பள்ளி ஒன்று கிராமப்புற மாணவர்களை அழைத்து வருவதற்காகப் பேருந்து ஒன்றை வாங்க விரும்புகிறது. இதற்கான முயற்சியில் பழைய மாணவர்கள் இணைந்துகொள்கிறார்கள். நீண்ட முயற்சியின் விளைவாக பள்ளிக்குப் புதிய பேருந்து வாங்கப்படுகிறது. இதனால் தனியார் பள்ளி பேருந்திற்கும் அரசுப் பள்ளி பேருந்திற்கும் இடையில் போட்டி ஏற்படுகிறது. இது இரண்டு பள்ளிகளின் போட்டியாக உருமாறுகிறது. இதில் ஏற்படும் வேடிக்கையான அனுபவங்களைச் சுவாரஸ்யமாக விவரிக்கிறார் ..\u003c\/span\u003e\u003cstrong\u003e\u003c\/strong\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47634449039596,"sku":null,"price":65.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/b1ab3fe06657eea7edb6e3336c487f00.jpg?v=1778843159"},{"product_id":"அரூபத்தின்-நடனம்","title":"அரூபத்தின் நடனம்","description":"\u003cp\u003eகாஸபிளங்கா படத்தை எப்போதும் பார்த்தாலும். பழைய போட்டோ ஆல்பத்தைத் திரும்பப் பார்க்கும்போது ஏற்படும் கிளர்ச்சியும் சந்தோஷமும் உருவாகிறது.சினிமா நமக்குள் ஏற்படுத்தும் காட்சிப்படிமங்களும் உணர்வுகளும் மறக்கமுடியாதவை.\u003c\/p\u003e\n\u003cp\u003e1930களின் கறுப்பு வெள்ளை படங்களில் துவங்கி மும்பை திரைப்படவிழாவில் திரையிட்ட ஈப் அலே ஒ வரை பல்வேறு அயல்மொழித்  திரைப்படங்கள் இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.\u003c\/p\u003e\n\u003cp\u003eநிஜமான மனிதர்களையும் அவர்களின் வாழ்க்கையையும் மனித உறவுகளையும் திரையில் பதிவு செய்த உண்மையின் கவிஞன் எனத் தன்னை அழைக்க வேண்டும் என்று சொல்கிறார் புகழ்பெற்ற இயக்குநர் விட்டோரியோ டி சிகா. அது சிறந்த இயக்குநர்கள் அனைவருக்கும் பொதுவான வாசகமே.\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47634460803308,"sku":null,"price":329.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/688231b5a181d503827d496e2f6cfa0b.jpg?v=1778843747"},{"product_id":"வெயிலைக்-கொண்டு-வாருங்கள்","title":"வெயிலைக் கொண்டு வாருங்கள்","description":"\u003cp\u003eவாழ்வின் பேருண்மைகளை கண்டு கொள்ளும் மனிதனுக்கு அதன் ஒவ்வொரு, நிகழ்வும் ஆன்மாவின் புதியதொரு பக்கத்தை\u003c\/p\u003e\n\u003cp\u003eதிறந்து வைத்துக் கொண்டேயிருக்கிறது. தன்னுடைய சிறுகதைகளின் வழியே எஸ்ரா புனைவின் புதிய சாத்தியங்களை நிகழ்த்திக்காட்டுகிறார்.\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47729177034988,"sku":null,"price":131.6,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/02314ee20f0d5ab0e2f8d11078819056.jpg?v=1781158913"},{"product_id":"நகுலன்-வீட்டில்-யாருமில்லை","title":"நகுலன் வீட்டில் யாருமில்லை","description":"\u003cp\u003e\u003cspan\u003eFables and Parables எனும் குறுங்கதை வடிவம் உலகெங்கும் ஒரு தனித்த இலக்கிய வகைமையாக எழுதப்பட்ட போதும் தமிழில் அத்தகைய முயற்சிகள் போதுமான அளவு நடைபெறாத சூழலில் எஸ்.ராமகிருஷ்ணனின் இந்தக் குறுங்கதைகளின் தொகுப்பு வெளிவருகிறது. இக்கதைகள் குறுங்கதைகளுக்கே உரிய கச்சிதத்துடனும் படிமத்தன்மையுடனும் எழுதப்பட்டடுள்ளன. மிகக் கூர்மையான அங்கதத்தினையும் தத்துவ நோக்கையும் வெளிப்படுத்தும் இக்கதைகள் மரபான நம்பிக்கைகள், தொன்மங்கள், கவித்துவமான உருவகங்கள் வழியே நவீன வாழ்வு குறித்து தீவிரமான பிரக்ஞையைக் கொண்டிருக்கின்றன.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47729208525036,"sku":null,"price":141.94,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/ff0d65605bd3fff4db9d427fb101223f.jpg?v=1781159702"},{"product_id":"போயர்பாக்-கண்டறிந்த-மழைக்கோவில்","title":"போயர்பாக் கண்டறிந்த மழைக்கோவில்","description":"\u003cp\u003e\u003cspan\u003eபோயர்பாக் கண்டறிந்த மழைக்கோவில் மரம் ஒரே நேரத்தில் எல்லாத் திசையையும் பார்த்துக் கொண்டிருக்கிறது. அது அதிசயமில்லையா என்று போயர்பாக்கிற்குத் தோன்றியது. அவன் ஒரு விந்தையான மழைக்கோவிலைத் தேடி பயணித்துக் கொண்டிருந்தான். முடிவில் அவன் கண்டுகொண்டது கோவிலை மட்டுமில்லை. வாழ்வின் நிதர்சனமான உண்மையை. இப்படி விந்தையும் யதார்த்தமும் ஒன்று கலந்த சிறுகதைகளை இத்தொகுப்பில் எழுதியிருக்கிறார் எஸ்.ராமகிருஷ்ணன். புனைவின் புதிய சாத்தியங்களை உருவாக்கிக் காட்டுவதே அவரது தனித்துவம்\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47729213014252,"sku":null,"price":112.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/POYARPAK.jpg?v=1781160134"},{"product_id":"அக்கடா","title":"அக்கடா","description":"\u003cp\u003e\u003cspan\u003eகுண்டூசி ஒன்றின் பயணத்தை விவரிக்கும் இந்த சிறார் நாவல் சுவாரஸ்யமான நிகழ்வுகளையும் விசித்திரங்களையும் கொண்டிருக்கிறது. வெவ்வேறு வகையான குண்டூசிகள், அவற்றின் வாழ்க்கை, அவர்களுக்குள் ஏற்படும் மோதல் எனப் புதிய கதைவெளியினை அறிமுகம் செய்கிறது இந்த நூல். குண்டுசிக்குத் தலை ஏன் பெரியதாக இருக்கிறது? அதுக்குத் தலை வலிக்காதா? என்று தனது நண்பரின் இரண்டாவது படிக்கும் மகள் தன்னிடம் கேட்டபோதுதான் இந்த நாவலுக்கான முதற்பொறி தனக்குள் விழுந்ததாக கூறுகிறார் எஸ்.ராமகிருஷ்ணன். சிறுவர்கள் உலகைப் பார்க்கும் விதம் முற்றிலும் வேறுபட்டது. குழந்தைகள் எந்தப் பொருளையும் அதன் பயன்பாடு சார்ந்து மட்டும் யோசிப்பதில்லை. உயிரற்ற பொருட்களை என நம் ஒதுக்கி வைத்தவற்றிற்கு உயிர் கொடுக்கிறார்கள் சிறுவர்கள். பொருட்களின் விநோத உலகிற்குள் பயணம் செய்ய ஆசைப்படுகிறார்கள்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47729216717036,"sku":null,"price":122.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/AKADA.jpg?v=1781160368"},{"product_id":"வெண்ணிற-நினைவுகள்","title":"வெண்ணிற நினைவுகள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஇந்து தமிழ் நாளிதழில் வெளியான தமிழ் சினிமா குறித்த கட்டுரைகளின் தொகுப்பு. இந்த நூல் அலிபாபாவும் நாற்பது திருடர்களும், கப்பல் ஒட்டிய தமிழன், உதிரிப்பூக்கள், பதினாறு வயதினிலே, முள்ளும் மலரும், அவள் அப்படித்தான், வீடு போன்ற படங்கள் குறித்த கட்டுரைகள் குறிப்பிடத்தக்கவை\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47729225957612,"sku":null,"price":141.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/c8461af2e516497271517a8f98f65adc.jpg?v=1781161618"},{"product_id":"தாவரங்களின்-உரையாடல்","title":"தாவரங்களின் உரையாடல்","description":"\u003cp\u003e\u003cspan\u003eசிறுகதைகளில் எஸ்.ராமகிருஷ்ணனின் அடையாளக் கருதப்படுவது தாவரங்களின் உரையாடல். கதை சொல்லும் முறையிலும்,வசீகர மொழியிலும் புனைவின் விசித்திரத்திலும் இக்கதை மிகுந்த பாராட்டினைப் பெற்றது\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47729228644588,"sku":null,"price":141.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/c7c0c9c6100eb9bd6ce8f48b46ddb394.jpg?v=1781161864"},{"product_id":"பேசத்-தெரிந்த-நிழல்கள்","title":"பேசத் தெரிந்த நிழல்கள்","description":"","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47736302928108,"sku":null,"price":169.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/PESATHERINTHA.jpg?v=1781244363"},{"product_id":"சித்திரங்களின்-விசித்திரங்கள்","title":"சித்திரங்களின் விசித்திரங்கள்","description":"","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47736328028396,"sku":null,"price":103.4,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/CHITHIRANGALIN.jpg?v=1781245057"},{"product_id":"பறவைக்-கோணம்","title":"பறவைக் கோணம்","description":"\u003cp\u003eதமிழ் திரையிசைப் பாடல்களில் மறக்க முடியாத பாடல்கள் குறித்த கட்டுரைகளின் தொகுப்பு.\u003c\/p\u003e\n\u003cp\u003eஇன்றும் இந்தப் பாடல்களைக் கேட்கும் போது காலத்தின் பின்னே பயணிப்பது போன்ற அனுபவம் ஏற்படுகிறது\u003c\/p\u003e\n\u003cp\u003eசினிமா பாடல்கள் நம் வாழ்வில் இரண்டறக்கலந்துவிட்டவை. அவற்றின் தாக்கமும் சந்தோஷமும் அலாதியானது.\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47736331927788,"sku":null,"price":169.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/PARAVAI.jpg?v=1781246016"},{"product_id":"காந்தியோடு-பேசுவேன்","title":"காந்தியோடு பேசுவேன்","description":"","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47736576901356,"sku":null,"price":164.5,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/GANDHIYODU.jpg?v=1781250943"},{"product_id":"கர்னலின்-நாற்காலி","title":"கர்னலின் நாற்காலி","description":"\u003cp\u003e\u003cspan\u003e125 குறுங்கதைகளின் தொகுப்பு. இந்தக் கதைகள் யாவும் ஊரடங்கு காலத்தில் எழுதப்பட்டவை.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47780956569836,"sku":null,"price":329.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/KARNALINNARKALI_333d546a-05f7-424a-83fe-e104c4b6b42c.jpg?v=1782277061"},{"product_id":"சிரிக்கும்-வகுப்பறை","title":"சிரிக்கும் வகுப்பறை","description":"\u003cp\u003e\u003cspan\u003eபள்ளிக்கூடம் மாணவர்களின் ஆளுமையை வளர்ப்பதற்குப் பதிலாக அவர்களின் கற்பனையை எப்படிச் சிதறடிக்கிறது என்பதை இந்நாவலின் வழியாக சுட்டிக் காட்டியிருக்கிறார். பிழைப்பு என்பது வேறு வாழ்க்கை என்பது வேறு. நம் கல்விக் கூடங்கள் பிழைப்பதற்கான வழியை மட்டுமே கற்றுத் தருகின்றன. வாழ்வதற்கான வழியை குழந்தைகள் மொழியிலேயே சொல்லிச் செய்கிறது இந்நாவல்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47780959944940,"sku":null,"price":103.4,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/SIRIKUMVAGUPARAI.jpg?v=1782277516"},{"product_id":"தேவமலர்-மற்றும்-கதைகள்","title":"தேவமலர் மற்றும் கதைகள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eநோபல் பரிசு பெற்ற எழுத்தாளரின் மகத்தான படைப்பு. தேவமலருக்கு இணையான குறுநாவல் இது வரை எழுதப்படவில்லை. இந்த தொகுப்பில் ஜாக் லண்டன் ஆல்பெர்ட் காம்யூ.கோகல் ஆகியோரின் சிறந்த கதைகளும் இடம் பெற்றுள்ளன.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47780976197868,"sku":null,"price":141.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/DEVAMALAR.jpg?v=1782277799"},{"product_id":"பதினெட்டாம்-நூற்றாண்டின்-மழை","title":"பதினெட்டாம் நூற்றாண்டின் மழை","description":"\u003cp\u003e\u003cspan\u003eஎல்லோரது கதைகளின் அடியிலும் சுயசரிதையின் மெல்லிய நீரோட்டம் ஓடிக்கொண்டிருக்கிறது. அது எழுத்தாளன் மட்டுமே அறிந்த நதி. இது எஸ்.ராமகிருஷ்ணனின் எட்டாவது சிறுகதைத் தொகுதி.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47780988551404,"sku":null,"price":216.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/PATHINRTTAM.jpg?v=1782278125"},{"product_id":"நிலம்-கேட்டது-கடல்-சொன்னது","title":"நிலம் கேட்டது கடல் சொன்னது","description":"\u003cp\u003e\u003cspan\u003eஇயற்கையில் பெருமலையும், சிறுபுல்லும் ஒன்றே. இரண்டிற்கும் பேதமில்லை. காணும் மனிதன் தான் பேதத்தை உருவாக்குகிறான். பயன்பாடு என்ற ஒற்றைச்சொல்லுக்குள் உலகை இழுத்து அடைத்து விடப்பார்க்கிறான். அதிலிருந்து விடுபட்டு இவ்வுலகம் பெரியது. அழகானது, இயற்கையின் ஒரு அங்கமாகவே மனிதனுமிருக்கிறான், என்பதைப் பயணமே கற்றுத்தருகிறது. வாழ்க்கையை அர்த்தப்படுத்திக் கொள்வது நம் கையில் தானிருக்கிறது. அதற்குப் பயணமே முதற்படி. ஜப்பான் மற்றும் அமெரிக்கப் பயணத்தின் வழியே எஸ்ரா அடைந்த அனுபவங்களை தனது வசீகர எழுத்தின் வழியே நம்மையும் அனுபவிக்கச் செய்கிறார் என்பதே இந்நூலின் தனித்துவம் இந்நூல் ஹிரோஷிமாவில் மணி ஒலிக்கிறது. புல்லினும் சிறியது ஆகிய இரண்டு சிறுநூல்களின் ஒருங்கிணைந்த தொகுப்பு.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47780990746860,"sku":null,"price":117.5,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/NILAMKETATHU.jpg?v=1782278391"},{"product_id":"பதின்-1","title":"பதின்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஒன்றின்மீது ஒன்றாக நிகழ்வுகளை அடுக்கிக் கட்டும் நாவல்கள் வகையைச் சார்ந்தது பதின். நீரூற்றைப் போல நிகழ்வுகளும் நினைவுகளும் தனக்குள்ளாகப் பொங்கி வழியும் இவ்வகை நாவல் வடிவம் தமிழுக்குப் புதிது. கம்பளம் நெய்வது போல பல்வேறு இழைகளைக் கொண்டு நெய்து, வாசக மனதை சிறுவர்களின் அக உலகங்களுக்குள் வாசகனை உளவ விடுவதே பதின் செய்யும் வேலையாகும்!\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47781003493612,"sku":null,"price":235.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/PATHIN.jpg?v=1782279186"},{"product_id":"உலகை-வாசிப்போம்","title":"உலகை வாசிப்போம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஉலகப்புகழ்பெற்ற எழுத்தாளர்களின் சொந்த வாழ்க்கை எப்படியிருந்தது. அவர்கள் தங்கள் படைப்புகளுக்கு எவ்விதமான எதிர்வினைகளைப் பெற்றார்கள். உலக இலக்கியத்தின் சாதனையாளர்கள் ஏன் தொடர்ந்து வாசிக்கப்பட்டு வருகிறார்கள் எனத் தனது பரந்த வாசிப்பு அனுபவத்தின் மூலம் உலக இலக்கியம் குறித்துக் காத்திரமான 31 கட்டுரைகளை எழுதியிருக்கிறார் எஸ்.ராமகிருஷ்ணன்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47781004280044,"sku":null,"price":188.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/ULAGAIVASIPOM.jpg?v=1782279511"},{"product_id":"மண்டியிடுங்கள்-தந்தையே","title":"மண்டியிடுங்கள் தந்தையே","description":"\u003cp\u003e\u003cspan\u003eஇந்நாவல் டால்ஸ்டாயின் வாழ்க்கை வரலாற்றில் நடந்த சில நிகழ்வுகளை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட ஒன்று. எழுத்தாளர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு சர்வதேச அளவில் நிறைய நாவல்கள் எழுதப்பட்டுள்ளன. ஆனால் தமிழில் இந்தவகையான நாவல்இதுவரை வெளியானதில்லை. அதுவும் ஒரு ரஷ்ய எழுத்தாளரின் வாழ்க்கையை விவரிக்கும் நாவல் இந்நாள் வரை தமிழில் எழுதப்பட்டதில்லை. இதுவே முதன்முறை . அந்த வகையில் இதைத் தமிழில் எழுதப்பட்ட ரஷ்ய நாவல் என்பேன். இந்த நாவலை எழுதுவதற்காக மூன்று ஆண்டுகள் டால்ஸ்டாயின் வாழ்க்கை வரலாறு, ரஷ்ய வரலாறு, டால்ஸ்டாயின் டயரிக்குறிப்புகள். சோபியாவின் டயரிக்குறிப்புகள். டால்ஸ்டாய் குடும்பத்தினரின் நினைவலைகள், டால்ஸ்டாய் பற்றி எழுதப்பட்ட கட்டுரைத் தொகுப்புகள், அவரது சமகால எழுத்தாளரின் படைப்புகள். பண்ணை அடிமைகள் பற்றிய அறிக்கைகள். எனத்தேடித்தேடி படித்தேன்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47781049925868,"sku":null,"price":329.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/MANDIAYEDUNGAL.jpg?v=1782281485"},{"product_id":"ரயில்-நிலையங்களின்-தோழமை","title":"ரயில் நிலையங்களின் தோழமை","description":"\u003cp\u003e\u003cspan\u003eகாமதேனுவில் தொடராக வந்த இந்தப் பயணக்கட்டுரைகள் வட இந்தியா மற்றும் வெளிநாடுகளில் எஸ்.ரா மேற்கொண்ட பயண அனுபவத்திலிருந்து எழுதப்பட்டிருக்கின்றன. பயணியின் கண்கள் உலகின் உன்னதங்களை மட்டுமில்லை இருட்டுக்குள் வாழும் மனிதர்களையும் அடையாளம் காட்டவே செய்கின்றன. உலகத்தை அறிந்து கொள்வதற்கான தேடுதலே இந்தப் பயணத்திற்கான தூண்டுதல். ஒவ்வொரு பயணமும் ஒரு பாடமே.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47781054775532,"sku":null,"price":117.5,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/RAYILTHOLAMAI.jpg?v=1782281977"},{"product_id":"பெயரற்ற-நட்சத்திரங்கள்","title":"பெயரற்ற நட்சத்திரங்கள்","description":"\u003cp\u003eஒவ்வொரு படைப்பாளியும் தனக்கான பிரத்யேகப் பார்வையும் அனுபவத்தையும் திரைமொழிக்கு முழுமையாக மாற்ற முடிந்தால் மட்டுமே புதிய சினிமா சாத்தியப்படும் என்கிறார் இயக்குனர் பெர்க்மென்.\u003c\/p\u003e\n\u003cp\u003eசர்வதேச சினிமாவின் புதிய தளங்களை, புதிய அழகியலை முன்னிருத்தி எழுதப்பட்ட திரைப்படக் கட்டுரைகளின் தொகுப்பே பெயரற்ற நட்சத்திரங்கள்.\u003c\/p\u003e\n\u003cp\u003eஎழுத்தாளர்கள், கவிஞர்கள், ஓவியர்கள், திரையுலக ஆளுமைகள் குறித்து வெளியாகியுள்ள பல்வேறு உலகத் திரைப்படங்களை இந்நூல் நமக்கு அடையாளம் காட்டுகிறது.\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47781057822956,"sku":null,"price":188.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/PEYARACHA.jpg?v=1782282242"},{"product_id":"எஸ்-ராமகிருஷ்ணன்-நேர்காணல்கள்","title":"எஸ்.ராமகிருஷ்ணன் நேர்காணல்கள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eகடந்த இருபதாண்டுகளுக்கும் மேலாக வெவ்வேறு இதழ்களில் வெளியான எஸ்.ராமகிருஷ்ணனின் நேர்காணல்களின் தொகுப்பு இது. தொடரும் உரையாடலின் வழியே தனது படைப்பிலக்கியம் குறித்தும் நவீனத் தமிழ் இலக்கியத்தின் மீதான தனது அவதானிப்புகள் மற்றும் விமர்சனங்களைப் பகிர்ந்துகொள்கிறார். இந்த நேர்காணல்கள் படைப்பாளியின் தனிப்பட்ட பார்வைகள் என்பதைத் தாண்டி புனைகதை குறித்த ஆழ்ந்த விசாரணையை முன்வைக்கின்றன. புதியதொரு கதையியலை நோக்கி வாசகனை அழைத்துச் செல்லும் முனைப்பும் உலக இலக்கியத்தின் பரந்த வாசிப்பு அனுபவமும் முழுமையாக வெளிப்படுகின்றன என்பதே இந்த நேர்காணல்களின் சிறப்பம்சம்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47781068112108,"sku":null,"price":235.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/RAMANERKANAL.jpg?v=1782282890"},{"product_id":"நாவலெனும்-சிம்பொனி","title":"நாவலெனும் சிம்பொனி","description":"\u003cp\u003e\u003cspan\u003eகதாபாத்திரங்களை முழுமையாக உருவாக்குவதே நாவலாசிரியனின் பிரதான சவால். சிறிய கதாபாத்திரங்கள் கூட முழுமையாக இடம்பெற்றிருப்பதே செவ்வியல் நாவல்களில் தனித்துவம். அதற்காகத் தான் டால்ஸ்டாயும், தஸ்தாயெவ்ஸ்கியும் இன்றும் பேசப்படுகிறார்கள். தமிழ் நாவல்களின் குறுக்குவெட்டுத் தோற்றத்தை ஆராயும் இந்த கட்டுரைகள் நாவல் எனும் வடிவம் குறித்த ஆழமான கேள்விகளை எழுப்புகின்றன.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47781079843052,"sku":null,"price":131.6,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/NAVALENUMSIMPONI.jpg?v=1782283216"},{"product_id":"காஃப்கா-எழுதாத-கடிதம்","title":"காஃப்கா எழுதாத கடிதம்","description":"\u003cp\u003eபுத்தகங்களும் பயணங்களுமே எனது இரண்டு சிறகுகள். இதன் வழியே நான் அடைந்த அனுபவங்கள் மகத்தானவை.\u003c\/p\u003e\n\u003cp\u003eஉலக இலக்கிய ஆளுமைகளையும் அவர்களின் முக்கிய நூல்களையும் குறித்து தொடர்ந்து எழுதிவந்திருக்கிறேன். அந்த வரிசையில் காஃப்கா, வில்லியம் கார்லோஸ் வில்லியம்ஸ், ழான் காக்து, கேப்ரியல் கார்சியா மார்வெஸ், ஹெர்மென் மெல்வில், தோரோ, ஹெர்மன் ஹெஸ்ஸே, ஸ்டீபன் ஜ்ஸ்வேய்க், மிரோஜெக், ரெமண்ட் கார்வர், விளாதிமிர் மெக்ரே, லியோலெட் லெடுக், செல்மா லாக்ர்லெவ் போன்ற இலக்கிய ஆளுமைகள் கட்டுரைகளின் தொகுப்பு நூலிது.\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47781081710828,"sku":null,"price":235.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/KAAPTHKA.jpg?v=1782283516"},{"product_id":"சஞ்சாரம்-1","title":"சஞ்சாரம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eசஞ்சாரம் - எஸ்.ராமகிருஷ்ணன் :\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cdiv\u003eதமிழ்ச் சமூகத்தின் அடையாளமாக கருதப்படுவது நாதஸ்வரம் கரிசல் நிலத்தில் பீறிடும் நாதஸ்வர இசையையும் இசைக்கலைஞர்களின் வாழ்வையும் இந்த நாவல் அற்புதமாக படம் பிடித்துக் காட்டுகிறது. கரிசல் நிலத்தின் ஆன்மாவை இசையாக உருவாக்கியுள்ளார் எஸ்.ராமகிருஷ்ணன்.\u003c\/div\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47781360500972,"sku":null,"price":338.4,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/SANJARAM.jpg?v=1782285565"},{"product_id":"உணவு-யுத்தம்","title":"உணவு யுத்தம்","description":"\u003cp\u003e\u003cspan\u003e‘உயிர் வாழ்வதற்கு மட்டுமே உணவு’ என்று எண்ணுவது சிந்தனை விரிவடையாத ஆரம்ப நிலை. அதுவே, ‘உணவு என்பது மருந்து’ என்று எண்ணுவது ஆழ்ந்த சிந்தனையின் விளைவு. முதல் நிலையில் உடலுக்கு எது நன்மை என்று ஆராயாமல் ஃபாஸ்ட், ஜங்க் ஃபுட்களையும், காற்றடைத்து உப்பிய உரையில் -‘படம் எடுத்து ஆடும்’, காரசாரமான நாகரீக பொட்டேடோ சிப்ஸ்களையும் வரட்டு கௌரவத்துக்காக உண்பது. தற்கால நிலையில் கிட்டத்தட்ட முக்கால்வாசிப் பேர் வாய் ருசிக்காக மட்டுமே வசீகரமான உணவுகளை உட்கொள்கின்றனர் என்ற ஆதங்கத்தையும், எதிர்கால சந்ததியைப் பற்றிய கவலையையும் தவறான உணவை உண்பதை எப்படித் தவிர்த்து ஆரோக்கியத்துக்காக நம் பாரம்பரிய உணவை உண்பது என்பதைப் பற்றியும் விரிவாக எழுதி, ஒரு விழிப்பு உணர்வை ஏற்படுத்தியிருக்கிறார் நூல் ஆசிரியர்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47781414830316,"sku":null,"price":258.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/UNAVUUTHAM.jpg?v=1782285834"},{"product_id":"வாசக-பர்வம்","title":"வாசக பர்வம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஒரு வாசகனுக்கும் எழுத்தாளனுக்கும் இடையிலான உறவு மௌனங்களும் பதற்றங்களும் நிரம்பியவை. அந்த வாசகனே ஒரு படைப்பாளியாகவும் இருக்கும்போது அந்த உறவு மனோரீதியாகவும் மொழிரீதியாகவும் எண்ணற்ற அலைகளை உருவாக்குகிறது. எஸ் . ராமகிருஷ்ணன் இந்த நூலில் தான் எதிர்கொண்ட படைப்பாளுமைகள் குறித்த அற்புதமான சித்திரங்களை உருவாக்குகிறார். அவை தகவல்களாலோ வாழ்க்கை விபரக்குறிப்புகலாலோ ஆனவையல்ல. மாறாக அந்த எழுத்தாளர்கள் தனது ஆளுமையைக் கடந்து சென்றவிதம் குறித்த கவித்துவம் மிகுந்த பதிவுகள் இவை. அந்தப் பதிவுகளினூடே அவர் அந்தப் படைப்பாளிகளின் முதன்மையான சாராம்சமான படைப்புகள் குறித்த மிக நுண்மையான அவதானங்களையும் வெளிப்படுத்துகிறார். தமிழில் ஒரு எழுத்துக்கலைஞன் தனது முன்னோடிகள் குறித்து எழுதிய ததும்பச் செய்யும் வரிகள் இவை.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47781415911660,"sku":null,"price":197.4,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/VAASAGAPARVAM.jpg?v=1782286066"},{"product_id":"கடவுளின்-நாக்கு","title":"கடவுளின் நாக்கு","description":"\u003cp\u003e\u003cspan\u003e தி இந்து நாளிதழில் ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடராக வந்து மிகுந்த பாரட்டினைப் பெற்ற கட்டுரைகளின் தொகுப்பு ஆகும்\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47781417681132,"sku":null,"price":376.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/KADAVULINNAAKU.jpg?v=1782286277"},{"product_id":"தேசாந்திரி","title":"தேசாந்திரி","description":"\u003cp\u003e\u003cspan\u003eகிணற்றுத் தவளையாக வாழும் மனிதர்கள் தானுண்டு தன் வேலையுண்டு என்று இருந்துவிடுகின்றனர். ஆனால், சுதந்திரத்தோடு தேடல் மனம்கொண்ட மனிதர்கள் உலகத்தை அறியத் துடிக்கிறார்கள். அதற்கு, பயணப்படுதல் அவசியமானது. பயணம் எல்லோருக்கும் வாய்த்தாலும், ரசிப்புத்தன்மையும் கூர்ந்த பார்வையும் இருந்தால் மட்டுமே இயற்கையைக் கற்கமுடியும். அப்படிப் பயணத்தை விரும்பி _ ஊர்சுற்றி பலவற்றைப் பார்த்துப் பிரமித்த எஸ்.ராமகிருஷ்ணன், அந்த அற்புத அனுபவத்தை சுவாரஸ்யமாக ஆனந்த விகடனில் 'தேசாந்திரி'யாக வாசகர்களுடன் பகிர்ந்துகொண்டார். \u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47781425119468,"sku":null,"price":258.5,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/DESANTHRI.jpg?v=1782286534"},{"product_id":"குற்றமுகங்கள்","title":"குற்றமுகங்கள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eகுற்றம் என்பது ஒரு ரகசிய முகமூடி, அதை யார் எப்போது அணிந்து கொள்வார்கள் என்று தெரியாது. இந்தத் தொகுப்பிலுள்ள கதைகளைக் காலனிய குற்றப்புனைவுகள் என்று வரையறுக்கலாம். காலனிய ஆட்சியின்போது நடைபெற்ற பல்வேறு குற்றங்களைத் தனது புனைவின் வழியே எஸ்.ராமகிருஷ்ணன் விசித்திரமான கதைகளாக்கியிருக்கிறார்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47781438619884,"sku":null,"price":131.6,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/KURCHA.jpg?v=1782286863"},{"product_id":"சாய்ந்தாடும்-குதிரை","title":"சாய்ந்தாடும் குதிரை","description":"\u003cp\u003e\u003cspan\u003eஒரு நதி அமைதியாக எங்கோ ஒரு வனத்திற்குள் காலம் காலமாக ஒடிக்கொண்டேயிருப்பது போல எஸ்.ரா வின் சிறுகதை உலகம் தனக்கே உரிய பாதையில் தொடர்ந்து அதே ஆர்ப்பரிப்புடன் ஓடிக் கொண்டேயிருப்பது ஒரு வாசகனாக எனக்குப் பெரும் ஆச்சரியத்தைக் கொடுக்கிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47781456281836,"sku":null,"price":225.6,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/SAITHADUM.jpg?v=1782287128"},{"product_id":"அயல்-சினிமா","title":"அயல் சினிமா","description":"\u003cp\u003eஉலக சினிமாவின் புதிய திசையை அடையாளம் காட்டும் இந்நூல் கொரியா, பிரான்ஸ், ருஷ்யா, ஹாங்காங்க், மெக்சிகோ, சீனா, இத்தாலி, ஸ்பெயின், நியூசிலாந்து, அமெரிக்கா என பத்து முக்கிய தேசங்களின் இளம் இயக்குனர்களையும் அவர்களது முக்கிய திரைப் படங்களையும் ஆராய்கிறது.\u003c\/p\u003e\n\u003cp\u003eசினிமா வெறும் நுகர் பொருள் என்பதைத் தாண்டி கலாச்சாரம் மற்றும் சமூக அரசியல் மாற்றங்களை நுட்பமாகப் பதிவு செய்யும் வடிவமாகத் தன்னை எப்படி உருவாக்கிக் கொள்கிறது என்பதையே இந்தக் கட்டுரைகள் விவரிக்கின்றன.சமகால உலக சினிமாவைப் புரிந்து கொள்ளவும் தமிழ் சினிமாவில் புதிய மாற்றங்களை உருவாக்கவும் விரும்பும் அனைவருக்கும் மிக நெருக்கமானது இந்நூல்.\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47781649416428,"sku":null,"price":141.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/AYALSINIMA.jpg?v=1782289978"},{"product_id":"எழுத்தே-வாழ்க்கை","title":"எழுத்தே வாழ்க்கை","description":"\u003cp\u003e\u003cspan\u003eஎஸ்.ராமகிருஷ்ணன் என்ற இலக்கிய ஆளுமையின் வாழ்வினையும் எழுத்துல அனுபவங்களையும் விவரிக்கும் இக்கட்டுரைகள் அவரது இலக்கிய வாழ்க்கையின் ஆவணப்படம் போலுள்ளது. மல்லாங்கிணரிலிருந்து சென்னைக்கு வந்து சேர்ந்த அவரது அனுபவங்கள் ஒரு எழுத்தாளன் உருவாக எவ்விதமான சாவல்களை போராட்டங்களைக் கடந்து வர வேண்டியுள்ளது என்பதன் சாட்சியாக விளங்குகிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47781793923308,"sku":null,"price":188.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/ELUTHEVAALKAI.jpg?v=1782290945"},{"product_id":"கால்-முளைத்த-கதைகள்","title":"கால் முளைத்த கதைகள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eபூமியில் மனிதர்கள் தோன்றிய கதை முதல் காகம் ஏன் கறுப்பாக உள்ளது என்பது வரை பல்வகைப்பட்ட இயற்கை சார்ந்த நாட்டுப்புறக்கதைகளின் தொகுப்பு. இக்கதைகள் உலகெங்குமுள்ள பழங்குடி மக்களிடம் சொல்லப்பட்டு வருகின்றன. அவற்றைத் தேடித்தொகுத்து சிறப்பான அறிமுகம் தந்திருக்கிறார் எஸ்.ராமகிருஷ்ணன்\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47781827379436,"sku":null,"price":94.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/KAALMULAITHA.jpg?v=1782291296"},{"product_id":"எலியின்-பாஸ்வேர்டு","title":"எலியின் பாஸ்வேர்டு","description":"\u003cp\u003eநவீனத் தொழில்நுட்ப வளர்ச்சி என்பது மனிதர்களுக்கு மாத்திரமானதில்லை. விலங்குகளும் அதைக் கையில் எடுத்துக் கொண்டால் எப்படியிருக்கும் என்ற கற்பனையே இக்கதை.\u003c\/p\u003e\n\u003cp\u003eபாஸ்வேர்ட் கொடுத்து திறக்கும் டிஜிட்டில் கதவை உருவாக்குவதன் வழியே எலியொன்று பாம்புகளுக்கும் எலிகளுக்குமான தலைமுறை பகையை அழிக்க முற்படுகிறது.\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47781878431980,"sku":null,"price":32.9,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/ELIYINPASSWORD.jpg?v=1782291692"},{"product_id":"விலங்குகள்-பொய்-சொல்வதில்லை","title":"விலங்குகள் பொய் சொல்வதில்லை","description":"\u003cp\u003e\u003cspan\u003eசென்னையில் ஒரு ஏரியை தனியார் நிறுவனம் ஒன்று ஆக்ரமித்து, மூடப்போகிறது என அறிந்து பெரும்போராட்டம் உருவானது. சுற்றுச்சூழல் ஆர்வலர்களுடன் அந்த ஏரிக்குப் போயிருந்தேன். அப்போது ஒரு தவளை என்னையே பார்த்துக் கொண்டிருந்தது. ஒரு வேளை அந்தத் தவளை ஏரியை காக்கப் போராடியிருந்தால் எப்படியிருக்கும் என்ற கற்பனை மனதில் தோன்றியது. அதன் தொடர்ச்சியாகவே இந்த நூலை எழுதினேன்.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eஇன்று பள்ளி மாணவர்கள் பலருக்கும் செய்தித்தாள் படிக்கிற பழக்கமில்லை. செய்திகளை இணையத்திலோ, தொலைக் காட்சியிலோகூட அறிந்துகொள்ள விரும்புவதில்லை. ஆனால் செய்திகளை அறிந்துகொள்ளாமல் உலகைப் புரிந்துகொள்ள முடியாது. ஆகவே செய்தித்தாள் படிக்கிற விஷயத்தை முதன்மைப்படுத்தி இக்கதையை உருவாக்கியுள்ளேன்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47781899862252,"sku":null,"price":211.5,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/VILANGUGALPOI.jpg?v=1782292002"},{"product_id":"தனிமையின்-வீட்டிற்கு-நூறு-ஜன்னல்கள்","title":"தனிமையின் வீட்டிற்கு நூறு ஜன்னல்கள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eசதா நினைவுகளில் திளைத்துக் கொண்டிருக்கும் மனதிலிருந்தே இக்கதைகள் பிறந்திருக்கின்றன. ஆசை, ஆசையின்மை வெற்றி, தோல்வி இருப்பு, இன்மை என மாறி, மாறி புனைவின் விசித்திர விளையாட்டினை நிகழ்த்துகிறார் எஸ்.ராமகிருஷ்ணன். நிகழ் வாழ்க்கையின் விசித்திரங்களை விசாரணை செய்யும் இக்கதைகள் வாழ்வின் அறியாப்புதிரை அவிழ்க்க முயற்சிக்கின்றன.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47781928239340,"sku":null,"price":141.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/THANIMAYINVEE.jpg?v=1782292682"},{"product_id":"அப்போதும்-கடல்-பார்த்துக்-கொண்டிருந்தது","title":"அப்போதும் கடல் பார்த்துக் கொண்டிருந்தது","description":"\u003cp\u003e\u003cspan\u003eதிரிசடை தீவில் வசிப்பவர்கள் கடலுக்குள் நாள்கணக்கில் மூச்சடக்கி வாழ முடியும் என்றும் அவர்கள் முத்துகளை ஒருபோதும் விலைக்கு விற்பதில்லை என்றும் மாறாக, தங்களது குலதெய்வமான சூதனியின் உதிர்ந்து விழுந்த பற்கள்தான் கடலில் முத்தாக விளைவதாகவும் ஆகவே அதை அறுவடை செய்து சூதனிக்குப் படைப்பது தங்களது பிறவிக் கடமை என்றும் நம்பினார்கள். திரிசடை தீவில் வாழ்வது மிகப் போராட்டமான ஒரு கலை. அங்கே கடல் உறங்குவதேயில்லை.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47781939249388,"sku":null,"price":141.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/APOTHUMKADAL.jpg?v=1782292942"},{"product_id":"நான்காவது-சினிமா","title":"நான்காவது சினிமா","description":"\u003cp\u003eஉலக சினிமா குறித்து நிறைய புத்தகங்கள் வெளியாகிகொண்டிருக்கின்றன. இணையத்தில் பலரும் உலக சினிமா குறித்த தனது எண்ணங்களை எழுதிக்கொண்டிருக்கிறார்கள். கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக உலக திரைப்படங்களைப் பார்த்து வருபவன் என்ற முறையில் நான் விரும்பிப் பார்த்த திரைப்படங்களைப் பற்றி தொடர்ந்து எழுதி வருகிறேன்.\u003c\/p\u003e\n\u003cp\u003eநான்காவது சினிமா என்ற இந்தப் பத்தியை உயிர்மையில் துவங்கியதும் இதன் தொடர்ச்சியே. ஒரு ஆண்டிற்கும் மேலாக இந்தப் பத்தியை எழுதியிருக்கிறேன். இவற்றை திரைப்படங்கள் குறித்த ஆய்வுகள் என்று கூற மாட்டேன். அறிமுகங்கள் என்றே கூறுவேன். உயிர்மையில் எழுதிய பத்தியோடு இணையத்திலும் இதழ்களிலும் உலக சினிமா குறித்து எழுதிய சில கட்டுரைகளும் இதில் சேர்க்கபட்டிருக்கின்றன.\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47781945442540,"sku":null,"price":131.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/NAANGAVATHUCINIMA.jpg?v=1782293119"},{"product_id":"எனதருமை-டால்ஸ்டாய்","title":"எனதருமை டால்ஸ்டாய்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஇலக்கியம் என்ற மகத்தான நதிதான் மனித மனங்கள் வெறுப்பாலும் வன்முறையாலும் உருவாக்கும் தடையரண்களை உடைத்து வாழ்வின் மகத்தான பிரவாகத்தை எங்கெங்கும் கொண்டு செல்கிறது. மாபெரும் இலக்கியப் படைப்புகள் உலகம் முழுவதும் தமது வெளிச்சத்தை, காலத்தையும் இடத்தையும் தாண்டி எங்கும் பரவச் செய்துகொண்டிருக்கிறது. அந்த நதியின் தண்ணீரைக் கையளவு எடுத்து, அந்த வெளிச்சத்தின் பிரகாசத்தை ஒரு சுடரளவு ஏற்றிப் பகிர்ந்துக் கொள்ளும் முயற்சிதான் இந்தக் கட்டரைகள். எஸ்.ராமகிருஷ்ணன் டால்ஸ்டாய் துவங்கி தாகூர் வரை தனக்கு விருப்பமான ஆளுமைகளை அவர்களது படைப்பு மற்றும் செயல்பாடுகளின் வழியே அறிமுகம் செய்து வைக்கிறார்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47781945999596,"sku":null,"price":122.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/ENATHARUMAI.jpg?v=1782293347"},{"product_id":"நெடுங்குருதி","title":"நெடுங்குருதி","description":"\u003cp\u003e\u003cspan\u003eவேம்பலையின் மீது படர்ந்திருப்பது யாராலும் தீர்க்க முடியாத சாபத்தின் துர்கனவு. தலைமுறைகளாக இக்கனவைக் கடந்து கொண்டிருக்கும் மனிதர்களின் வாதைகளும் ஏக்கங்களும் நிலைகொள்ள முடியாத தத்தளிப்புகளும் ஆசாபாசங்களின் இருளும் வெளிச்சமும் இந்நாவலில் முடிவற்ற குருதிப் பெருக்காகின்றன. பொருளற்ற வாழ்வும் மரணமும் தங்கள் வசியக் குரலால் வேம்பலையை நோக்கி மனிதர்களை அழைத்துக் கொண்டே இருக்கின்றன. ஒரு பிரமாண்டமான கனவின் திரைமீது அறியப்படாத யதார்த்தம் ஒன்றை எழுதுகிறது எஸ்.ராமகிருஷ்ணனின் இந்நாவல். \u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47782001213676,"sku":null,"price":498.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/NEDUNKURUTHI.jpg?v=1782293661"}],"url":"https:\/\/centaram.com\/collections\/s-ramakrishnan.oembed","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}