{"title":"எஸ்.எல்.வி.மூர்த்தி","description":"","products":[{"product_id":"விழுவது-எழுவதற்கே","title":"விழுவது எழுவதற்கே!","description":"\u003cp\u003e\u003cspan\u003eபெரிய நிறுவனத்தில் இத்தகைய பிரச்சினைகள் தோன்றியதா என்ற ஆச்சர்யம் மேலோங்கியதோடு, அத்தகைய சூழலை அந்நிறுவன அதிபர்கள் கையாண்டு மீண்ட விதம் நிச்சயம் பிரமிப்பாகத்தான் இருந்தது. 7 இந்திய நிறுவனங்கள், 6 அமெரிக்க நிறுவனங்கள் மட்டுமின்றி தனி நபர்களின் வீழ்ச்சியையும் அதிலிருந்து அவர்கள் மீண்ட விதத்தையும் சற்றும் சுவாரஸ்யம் குறையாமல் அதேசமயம் மிகைப்படுத்தாமல் நூலாசிரியர் எஸ்.எல்.வி.மூர்த்தி எழுதியுள்ளார்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47638678569196,"sku":null,"price":164.5,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/8b73d9449ea12fc3a557bbd68674a2be.jpg?v=1779081108"},{"product_id":"பேரரசர்-அசோகர்","title":"பேரரசர் அசோகர்","description":"\u003cp\u003eஇந்திய வரலாற்றில் அழியாத முத்திரை பதித்த மௌரியப் பேரரசின் மாமன்னர் அசோகரின் வாழ்க்கை, ஆட்சி, சிந்தனை மற்றும் தர்மக் கொள்கைகளை விரிவாக அறிமுகப்படுத்தும் சிறந்த வரலாற்று நூல் இது. கலிங்கப் போரின் கொடூரத்தை நேரில் கண்டு மனமாற்றம் அடைந்த அசோகர், வன்முறையைத் துறந்து அன்பு, அமைதி, சமத்துவம் மற்றும் மனிதநேயத்தை உலகிற்கு எடுத்துரைத்த விதத்தை இந்நூல் சுவாரஸ்யமாக விவரிக்கிறது. அவரது கல்வெட்டுகள், நிர்வாகத் திறன், புத்த மதப் பரப்பல் மற்றும் இந்திய வரலாற்றில் அவர் ஏற்படுத்திய ஆழமான தாக்கம் ஆகியவற்றை ஆதாரபூர்வமாக அறிந்துகொள்ள விரும்பும் வாசகர்களுக்கு இது ஒரு அரிய வழிகாட்டியாக அமையும். வரலாற்று ஆர்வலர்கள், மாணவர்கள் மற்றும் தலைமைத்துவத்தைப் புரிந்துகொள்ள விரும்பும் அனைவரும் கட்டாயம் வாசிக்க வேண்டிய நூல்.\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47697233051884,"sku":null,"price":480.34,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/PERARASAR.jpg?v=1780383320"},{"product_id":"மேனேஜ்மென்ட்-உங்கள்-உள்ளங்கையில்","title":"மேனேஜ்மென்ட் உங்கள் உள்ளங்கையில்!","description":"\u003cp\u003e\u003cstrong\u003e\u003cspan\u003eமேனேஜ்மென்ட் உங்கள் உள்ளங்கையில்!\u003c\/span\u003e\u003c\/strong\u003e\u003cspan\u003e என்பது மேலாண்மை என்றால் என்ன, அதை அன்றாட வாழ்க்கையிலும் தொழிலிலும் எவ்வாறு திறம்படப் பயன்படுத்தலாம் என்பதை எளிய நடையில் விளக்கும் பயனுள்ள நூல். திட்டமிடல், தலைமைத்துவம், நேர மேலாண்மை, முடிவெடுக்கும் திறன், குழு ஒருங்கிணைப்பு மற்றும் பிரச்சினைகளைச் சமாளிக்கும் நுணுக்கங்கள் போன்ற மேலாண்மையின் முக்கியக் கருத்துகளை நடைமுறை எடுத்துக்காட்டுகளுடன் ஆசிரியர் சுவாரஸ்யமாக எடுத்துரைக்கிறார்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47697338663148,"sku":null,"price":521.17,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/MANAGEMENT.jpg?v=1780386740"},{"product_id":"செங்கிஸ்கான்","title":"செங்கிஸ்கான்","description":"\u003cp\u003e\u003cspan\u003eசெங்கிஸ்கான் பிறந்தபோது மங்கோலியா என்ற தேசமே கிடையாது.நாடோடிகளாக - ஐம்பதுக்கும் அதிகமான இனங்களாகச் சிதறிக்கிடந்த மங்கோலிய மக்களை ஒன்று சேர்த்து , பூஜ்யத்திலிருந்து மாபெரும் சாம்ராஜ்யத்தை அவர் உருவாக்கினார். தலைமுறை தலைமுறைகளாக வீடே இல்லாமல், வயிற்றுப் பிழைப்புக்காக ஊர் ஊராக அலைந்த நாடோடி. சாப்பாட்டுக்கே வழியில்லாமல் எலிகளையும், அணில்களையும், நாய்களையும் வேட்டையாடித் தின்றவர். கீழ்ஜாதி என்று முத்திரை குத்தப்பட்டவர் பரந்து விரிந்த ஒரு மாபெரும் சாம்ராஜ்யத்தின் அதிபரானார்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47697460527340,"sku":null,"price":344.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/SENGIS.jpg?v=1780392605"},{"product_id":"மாவீரன்-அலெக்சாண்டர்","title":"மாவீரன் அலெக்சாண்டர்","description":"\u003cp\u003e\u003cb\u003eமாவீரன் அலெக்சாண்டர்\u003c\/b\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e\n\u003cp\u003eஆயிரம் தன்னம்பிக்கை நூல்களை வாசிப்பதும் அலெக்சாண்டரின் வாழ்க்கையை வாசிப்பதும் ஒன்றே !\u003c\/p\u003e\n\u003cp\u003eஆறு, ஏழு, எட்டாம் வகுப்புகளிலேயே, நம் எல்லோருக்கும் மாவீரன் அலெக்சாண்டர் பரிச்சயமானவர், பாலபருவத்தில், நம் மதைக் கவர்ந்த பத்து மாமனிதர்களைப் பட்டியல் போடச் சொன்னால், அவர்களுள் ஒருவராக அலெக்சாண்டர் நிச்சயம் இருப்பார்.\u003c\/p\u003e\n\u003cp\u003eஅலெக்சாண்டரின் யுத்த, நிர்வாக, கலாச்சாரப் பரிவர்த்தனைச் சாதனைகள் அற்புதமானவை, பிரமிக்க வைப்பவை. உண்மையில், இவையெல்லாம் அலெக்சாண்டர் என்ற மாபெரும் ஆளுமையின் அடையாளங்கள் மட்டுமே. இவை அனைத்தையும் தாண்டி, இன்னொரு மெய்யான அலெக்சாண்டர் இருக்கிறார். அத்தனைய அலெக்சாண்டரின் விஸ்வரூபத்தை எழுத்துவடிவில் காட்சிப்படுத்துகிறார் நூலாசிரியர் எஸ்.எல்.வி.மூர்த்தி.\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47697518559468,"sku":null,"price":458.72,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/MAAVERAN.jpg?v=1780396909"},{"product_id":"பொசிஷனிங்","title":"பொசிஷனிங்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஉங்களை... உங்கள் தொழிலை... உங்கள் திறமையை... உங்கள் தயாரிப்பை... அடுத்தவர்கள் ரசிக்க... விரும்ப... வரவேற்க... அங்கீகரிக்க... நீங்கள் செய்ய வேண்டியது என்ன? உங்களை நீங்களே முன்னிறுத்துவதுதான். நிர்வாகவியலில் இந்த உத்திக்கு 'பொசிஷனிங்' என்று பெயர். இதன்மூலம் உங்களைப் பற்றி உயர்வான, சாதகமான பிம்பத்தை அடுத்தவர் மனங்களில் உருவாக்க முடியும். ரஸ்னா நடத்திய நாடகம், உஜாலா பயன்படுத்திய உத்தி, காட்பரீஸ் காட்டிய வழி என்று மெய்யான அனுபவங்களின் வழியாக பொசிஷனிங் உத்தியை கற்று தருகிறார் நூலாசிரியர் எஸ்.எல்.வி.மூர்த்தி.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47697543856364,"sku":null,"price":260.38,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/POSITIONING.jpg?v=1780399050"},{"product_id":"அமேசான்-ஒரு-வெற்றிக்-கதை","title":"அமேசான் ஒரு வெற்றிக் கதை","description":"\u003cp\u003e\u003cspan\u003eஅமேசானின் வெற்றிக்கதை என்பது மாபெரும் வெற்றிகளை ஈட்டிவரும் ஒரு பெரும் நிறுவனத்தின் கதையா அல்லது அதைத் தோற்றுவித்த ஓர் அசாதாரணமான ஆளுமையின் கதையா? இரண்டுமேதான். அமேசான் என்பது ஆலமரம் என்றால் அதன் விதை, ஜெஃப் பெஸோஸ். எனவே இது ஒரு விதையின் கதை. எனவே, இது ஒரு மரத்தின் கதையும்கூட.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eஅமெரிக்காவில் ஒரு மூலையில் மிகச் சாதாரணமாக ஆரம்பிக்கப்பட்ட ஒரு ஸ்டார்ட் அப் கம்பெனி உலகம் முழுவதும் கிளைகளைப் பரப்பி பிரமிப்பூட்டும் வெற்றிகளைப் பெற்றது எப்படி? அமேசானைத் தோற்றுவித்த ஜெஃப் பெஸோஸ் உலகப் பணக்காரர்கள் வரிசையில் பில் கேட்ஸுக்கு அடுத்த இடத்தைப் பிடித்தது எப்படி?\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cbr\u003e\u003cspan\u003eஎதிர்காலத்தில் இணையம்தான் உலகை ஆளப்போகிறது என்பதை ஜெஃபால் எப்படி முன்கூட்டியே உணரமுடிந்தது? புத்தகங்களை ஆன்லைனில் விற்பதன்மூலம் லாபம் ஈட்டமுடியும் என்னும் நம்பிக்கையை அவர் எப்படிப் பெற்றார்? புத்தகங்களில் தொடங்கி உலகிலுள்ள அனைத்தையும் வாங்குவதற்கான பிரமிப்பூட்டும் இணையக் கடையாக அமேசானை அவர் வளர்த்தெடுத்தது எப்படி?\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cbr\u003e\u003cspan\u003eஅமேசான் தன் பணியாளர்களை நடத்தும் விதம் குறித்தும் ஜெஃப் தன் போட்டியாளர்களைச் சிதறடிக்கும் முறை குறித்தும் எழும் பல்வேறு குற்றச் சாட்டுகள் உண்மையா? வாழ்விலும் பணியிலும் ஜெஃப் பெஸோஸை நம்முடைய முன்னுதாரணமாகக் கொள்ளமுடியுமா? எனில் அவரிடமிருந்து நாம் என்னென்ன வெற்றிப் பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்?\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cbr\u003e\u003cspan\u003eஎஸ்.எல்.வி. மூர்த்தியின் இந்நூல் மிக சுவாரஸ்யமான முறையில் ஒரு வண்ணமயமான வாழ்வை நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47729457594604,"sku":null,"price":164.5,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/3412ee06c369c3107f660e60989760a0.jpg?v=1781169570"},{"product_id":"பண்டைய-நாகரிகங்கள்","title":"பண்டைய நாகரிகங்கள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eகலை, இலக்கியம், அறிவியல்,தொழில்நுட்பம், அரசியல், சமூக வாழ்க்கை என்று ஒவ்வொரு துறையிலும் மனிதகுலம் மாபெரும் பாய்ச்சல்களை நிகழ்த்தியிருப்பதை வரலாறு பதிவு செய்திருக்கிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47952016736492,"sku":null,"price":241.15,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/92f2ed0e5321750125e98e175f64cf84.jpg?v=1784201696"}],"url":"https:\/\/centaram.com\/collections\/s-l-v-moorthy.oembed","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}