{"title":"ஆர் என் ஜோ டி குரூஸ்","description":"","products":[{"product_id":"அசுதினாபுரம்","title":"அஸ்தினாபுரம்","description":"\u003cp class=\"MsoNormal\"\u003e\u003cspan lang=\"EN-IN\"\u003eகடலோர மக்களின் வாழ்வைப் பல்வேறு பரிணாமங்களுடனும் காலப்போக்கில் அவர்கள் அடைந்துவரும் மாற்றங்களுடனும் கலாபூர்வமாகப் பதிவுசெய்துவருபவர் ஜோ டி குருஸ்.\u003cspan\u003e \u003c\/span\u003e\u003c\/span\u003e\u003cspan\u003e‘\u003cspan lang=\"EN-IN\"\u003eஆழிசூழ் உலகு\u003c\/span\u003e\u003c\/span\u003e\u003cspan\u003e’\u003c\/span\u003e\u003cspan lang=\"EN-IN\"\u003e,\u003cspan\u003e \u003c\/span\u003e\u003c\/span\u003e\u003cspan\u003e‘\u003cspan lang=\"EN-IN\"\u003eகொற்கை\u003c\/span\u003e\u003c\/span\u003e\u003cspan\u003e’ \u003c\/span\u003e\u003cspan lang=\"EN-IN\"\u003eஆகிய நாவல்களைத் தொடர்ந்து அவர் எழுதிய மூன்றாவது நாவல்\u003cspan\u003e \u003c\/span\u003e\u003c\/span\u003e\u003cspan\u003e‘\u003cspan lang=\"EN-IN\"\u003eஅஸ்தினாபுரம்\u003c\/span\u003e\u003c\/span\u003e\u003cspan\u003e’\u003c\/span\u003e\u003cspan lang=\"EN-IN\"\u003e.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp class=\"MsoNormal\"\u003e\u003cspan lang=\"EN-IN\"\u003eகடலோரத்தில் பிறந்த ஒருவன் கப்பல் சரக்குப் போக்குவரத்துத் துறைக்குச் செல்வதையும் அந்தத் துறையில் பல்வேறு போராட்டங்களுக்கிடையில் உயர்ந்த நிலையை அடைவதையும் சொல்லும்\u003cspan\u003e \u003c\/span\u003e\u003c\/span\u003e\u003cspan\u003e‘\u003cspan lang=\"EN-IN\"\u003eஅஸ்தினாபுரம்\u003c\/span\u003e\u003c\/span\u003e\u003cspan\u003e’ \u003c\/span\u003e\u003cspan lang=\"EN-IN\"\u003eகப்பல் சரக்குப் போக்குவரத்துத் துறை சார்ந்த கதையாகவும் விரிகிறது. கள அனுபவமும் அபாரமான நிர்வாகத் திறனும் கொண்ட நாவலின் மையப்பாத்திரம் வழியே ஜோ டி குருஸ் பல்வேறு விஷயங்களை உணர்த்துகிறார். பல கேள்விகளை எழுப்புகிறார். கப்பல் போக்குவரத்துத் துறை செயல்படும் விதத்தைக் கதைப்போக்கினூடே மிக நுட்பமாகவும் துல்லியமாகவும் சொல்கிறார். கூடவே ஒரு தனிமனிதனின் வாழ்வை யும் அவன் வாழ்வு எவ்வாறு பிற மனிதர்களுடன் பிணைந்தும் அறுந்தும் மீண்டும் இணைந்தும் பயணிக்கிறது என்பதையும் காட்டுகிறார். மானுட இனத்தின் கீழ்மை சமூகத்தின் சகல அடுக்கு களிலும் பரவியிருக்கும் இன்றைய யதார்த்தத்தையும் நாவல் கவனப்படுத்துகிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47599424635116,"sku":null,"price":481.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/60e975d2e093a94562a8e4aaa3eb6506.jpg?v=1777977971"},{"product_id":"ஆழி-சூழ்-உலகு","title":"ஆழி சூழ் உலகு","description":"\u003cp\u003e\u003cspan\u003eபரதவர்கள் தமிழின் தொன்மையான குடியினர். செவ்விலக்கியங்களில் எண்ணற்ற குறிப்புகள் இருப்பினும் இவர்களைக் குறித்து நவீன இலக்கியத்தில் குறைவான ஆக்கங்களே காணப்படுகின்றன. அவையும் கரையினின்று கடலைப் பார்த்துத் திகைத்து நிற்பனவாகவே உள்ளன. இக்குறையினைத் தீர்க்கும் முகமாக ஆழிப் பெருங்கடலை, அதை நம்பிப் பிழைக்கும் மனிதர்களை, அவர்களின் அல்லாட்டமான வாழ்க்கைப்பாடுகளை, குல நம்பிக்கைகளை, வரலாற்றுத் தொன்மங்களை அதன் கரிக்கும் உப்புச் சுவையோடு சொற்களில் எழுப்பிக் காட்டியிருக்கும் பெரும் புனைவே இந்நாவல். ஒரு சிறிய மீனவ கிராமத்தின் அரை நூற்றாண்டுக்கும் அதிகமான வரலாற்றை, பலநூறு முகங்களின் வழியாக, மூன்று தலைமுறைகளின் வளர்சிதை மாற்றங்களுடன் விரித்துக் கூறும் இந்நாவலின் ஆதாரமான விசையாகக் காலமும் மரணமும் பின்னின்று இயங்குகிறது. எப்படிப் பார்த்தாலும் வாழ்வின் இறுதியாக எஞ்சப் போகும் கழிவிரக்கத்தினின்றும் மனிதன் தப்பிப்பிழைக்க வழி அன்பும் தியாகமும்தான் என்பதே இதன் உள்ளுறையாகத் திரள்கிறது. ஓயாத அலைகள் ஒன்றுகூடி நிறையும் கடல்போல, இச்சைகளால் அலைக்கழியும் தனி மனிதர்களைச் சித்திரிப்பதன் வழியாக வாழ்வெனும் பெரும் நாடகத்தை உருவகித்துக் காட்டிய வகையில் தமிழின் சாதனைகளில் ஒன்றாக இந்நாவல் அமைகிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47651587227884,"sku":null,"price":775.5,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/fed3a2610c75dae1ffd59a334574614e.jpg?v=1779346276"},{"product_id":"நீலப்-பொருளாதாரம்","title":"நீலப் பொருளாதாரம்","description":"\u003cp class=\"MsoNormal\"\u003e\u003cspan\u003e-\u003c\/span\u003e\u003cspan\u003eகடல்சார் வாழ்வை உயிரோட்டமாய்த் தன் படைப்புகளில் தந்திருக்கும் ஜோ டி குருஸ் கடலோரப் பொருளாதாரம் குறித்து எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். துறைமுகங்களின் உள்கட்டமைப்பு, சரக்குப் போக்குவரத்து, மீன்வளப் பாதுகாப்பு ஆகியவை குறித்த முக்கியமான சிந்தனைகளையும் யோசனைகளையும் முன்வைக்கிறார் ஜோ டி குருஸ். கரைக் கப்பலோட்டம் குறித்தும் விரிவாக விவாதிக்கிறார். இலங்கையுடனான மீனவர் பிரச்சினை, கச்சத்தீவு ஆகியவற்றுக்கான தீர்வுகளையும் முன்வைக்கிறார்.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp class=\"MsoNormal\"\u003e\u003cspan lang=\"EN-IN\"\u003eகடல் சார்ந்த செயல்பாடுகளின் மூலம் இந்தியப் பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்தி, இந்தியக் கடல்வழி வாணிபத்தைச் சர்வதேச அளவில் திறம்பட நடத்துவதற்கான சாத்தியமான யோசனைகள் இந்த நூலில் உள்ளன.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp class=\"MsoNormal\"\u003e\u003cspan lang=\"EN-IN\"\u003eகடல் பகுதியை நம் நாட்டின் கருவூலமாகக் காணும் ஜோ டி குருஸ், அதற்கு ஏற்பட்டுள்ள ஆபத்துகளைப் பற்றியும் எச்சரிக்கிறார்.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp class=\"MsoNormal\"\u003e\u003cspan lang=\"EN-IN\"\u003eகடலையும் கடல் சார்ந்த பொருளாதாரத்தையும் புரிந்து கொள்வதற்கு இந்த நூல் மிகச் சிறந்த பங்காற்றுகிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47651798417644,"sku":null,"price":272.6,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/381b4da0921bc347c7da4a4d598a8119.jpg?v=1779350517"}],"url":"https:\/\/centaram.com\/collections\/r-n-joe-d-cruz.oembed","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}