{"title":"பிரபஞ்சன்","description":"","products":[{"product_id":"மரி-என்கிற-ஆட்டுக்குட்டி","title":"மரி என்கிற ஆட்டுக்குட்டி","description":"\u003cp\u003eமரியை எனக்குத் தெரியும். அன்புக்கு ஏங்கிய ஆத்மா அவள். வசதியான குடும்பம். தெருவில் மூன்று கார்கள் நின்றன. நான்கு வேலைக்காரர்கள் இருந்தார்கள். வீட்டில், அம்மா இல்லை. அதாவது குழந்தையிடம் இல்லை. அப்பா, பணம் பண்ணிக் கொண்டிருந்தார். அம்மாவும் அப்பாவும் தன்னைப் புறக்கணிக்கிறார்கள் என்று மரி நினைத்தாள். அவள் உலகை வெறுக்கத் தொடங்கினாள்.\u003c\/p\u003e\n\u003cp\u003eகுழந்தைகள் பெற்றோர்களிடம், ஆசிரியர்களிடம், உலகத்திடம் அன்பை மட்டுமே எதிர்பார்க்கிறார்கள். அவர்களுக்குத் தெரிந்த ஒரே மொழி அதுதான். அது மட்டும்தான். அதைக்கூட கொடுக்க முடியாத அளவுக்கு மனிதர்கள் மரத்துப் போய்விட்டார்கள் என்பது நம் காலத்து அவலம்.\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47619666051308,"sku":null,"price":216.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/55349b4bbc65d6b8670fd1447c35a7d7.jpg?v=1778580371"},{"product_id":"குயிலம்மை","title":"குயிலம்மை","description":"\u003cp\u003e\u003cspan\u003eஉலகக் கதைகள், இலக்கியங்கள், கலைகள் அனைத்தும் அன்பையும் அன்பாகிய நன்மைகளையும் சொல்லவே உருவாக்கப்பட்டன. கம்பனும் காளிதாசனும் வால்மீகியும் வியாசனும், நம் காலத்து எழுத்தாளர்களும் இதைத்தான் எழுதினார்கள். 'பெயக் கண்டும் நஞ்சு உண்டு அமைவர்' என்று அன்புக்கும், அன்பு வாழ்க்கையான நாகரிக வாழ்க்கைக்கும் இலக்கணம் சொல்கிறார் வள்ளுவர். 'என் தாய் மொழி, நாளை அழியும் என்றால் நான் இன்றே இறப்பேன்' என்கிறார் ரசூல் கம்சதேவ. நான் மறைகிறேன், இந்தியா சுதந்திரம் பெறட்டும் என்றார் பகத்சிங். வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் மனம் வாடுகிறார் இராமலிங்கர். தன் பிள்ளைகள் படிக்க, ஓவர் டைம் செய்கிறார் ஒரு தொழிலாளி. தான் பட்டினி கிடந்து, குழந்தைக்குச் சோறு போடுகிறாள் தாய். அமுதமே கிடைத்தாலும் அதைத் தனியாக உண்ண மாட்டேன் என்கிறான் ஒரு சங்கப் புலவன்.  என்னால் முடிந்தது, இந்தக் கதைகளை எழுதியிருக்கிறேன். \u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47628179800300,"sku":null,"price":212.75,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/kuyilammai-10013152-1000x1000h.jpg?v=1778654081"},{"product_id":"தபால்காரர்-பெண்டாட்டி","title":"தபால்காரர் பெண்டாட்டி","description":"\u003cp\u003eதபால்காரர்கள் மேல் என்ன காரணத்தாலோ ஒரு வகையான ஈர்ப்பு சின்ன வயசிலிருந்தே எனக்கு ஏற்பட்டுவிட்டது. தபால்காரர்களை நான் தினமும் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. எங்கள் வீட்டுக்கு தினமும் தபால் வரும். \u003c\/p\u003e\n\u003cp\u003eஅப்படித்தான் பரிச்சயமானவர் அந்தத் தபால்காரர். சைக்கிளில் வருவார். நான் பத்திரிகைகளுக்கு பதின்மூன்று வயது தொடங்கி சின்னச் சின்னக் கவிதைகள் அனுப்பிவைப்பேன். அவை திரும்பி வரும். அல்லது பிரசுரிக்க இயலாமைக்கு வருந்துவதாக ஆசிரியர் எழுதி இருப்பார். \u003c\/p\u003e\n\u003cp\u003eஆனால் விரைவில், என் கதை, கவிதை, கட்டுரைகள் பிரசுர மாயின. அவர், என் பக்கத்திலிருந்து, நான் பத்திரிகையைப் பிரித்து, பிரசுரமாகி இருக்கும் என் படைப்பை நானும் படித்து, அவரிடமும் காட்டும் வரை, அவர் என் எதிரிலேயே நின்றிருப்- பார். வாய் திறந்து பாராட்டமாட்டார். ஆனால், அவர் மகிழ்ச்சி யாக உணர்கிறார் என்பதை நான் அறியும்படி இருக்கும்.\u003c\/p\u003e\n\u003cp\u003e- பிரபஞ்சன்\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47632280846572,"sku":null,"price":220.9,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/faa2879cb651ea9090ccd81f58029914.png?v=1778757656"},{"product_id":"சித்தன்-போக்கு","title":"சித்தன் போக்கு","description":"\u003cp\u003e\u003cspan\u003eபிரபஞ்சனைப் பொருத்தவரை, மனிதர்கள் மகத்தானவர்கள். அவர்களுக்கான சூழல் வாய்க்கும்போது எல்லோருமே நற்பண்புகளைக் கொண்டவராகவே விளங்குவர். அப்படியான சூழலை அமைத்துத் தருவது முக்கியம். பிரபஞ்சன் அத்தகைய சூழல்களை அமைத்துத் தருகிறார். அவற்றில் மனிதப் பண்புகள் வெளிப்படுவதை ஆசையோடு நம்முன் வைக்கிறார். படைப்பாளன் உலகின் மீதுள்ள பிரியத்தை, நம்பிக்கையை இப்படித்தானே வெளிப்படுத்த முடியும். பிரபஞ்சனின் இருபது கதைகளைத் தேர்ந்தெடுத்து வெளிவரும் இத்தொகுப்புக்காக அவரின் நூற்றுக்கும் மேற்பட்ட கதைகளை ஒருசேர வாசித்தேன். அந்த அனுபவம் மானாவாரி வேளாண்மை செழித்திருக்கும் பரந்த நிலங்களுக்குள் விடிகாலை வேளையில் காலோயச் சுற்றிவந்ததைப் போலிருந்தது. ஈரம் என் கால்களில் ஏறி உடம்பு முழுவதற்கும் பரவிற்று. ஈரம் என்பது அன்பு, கருணை, நம்பிக்கை, தியாகம், உதவி, பற்று உள்ளிட்ட நல்லியல்புகள் அனைத்துக்கும் பொருந்தும். செழித்த கதிர்களில் விருப்பத்திற்கு உட்பட்டும் விதவிதமானவற்றை ருசித்துப் பார்க்கும் வேட்கையினாலும் நேர்த்தியின் ஈர்ப்பாலும் சிலவற்றைத் தேர்வு செய்து பசியாறும் சிட்டுக்குருவியாகச் செயல்பட்டிருக்கிறேன்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47648918864108,"sku":null,"price":263.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/5795bc83656e3ce2c951507fdebb6267.jpg?v=1779276066"},{"product_id":"நாளைக்கு-வரும்-கிளிகள்","title":"நாளைக்கு வரும் கிளிகள்","description":"\u003cp\u003e\u003cstrong data-start=\"216\" data-end=\"242\"\u003eநாளைக்கு வரும் கிளிகள்\u003c\/strong\u003e என்பது எழுத்தாளர் \u003cstrong data-start=\"261\" data-end=\"274\"\u003eபிரபஞ்சன்\u003c\/strong\u003e அவர்களின் ஆழமான மனிதநேயப் பார்வையையும் சமூக அக்கறையையும் வெளிப்படுத்தும் சிறுகதைத் தொகுப்பாகும். மனிதர்களின் அன்றாட வாழ்க்கையில் நிகழும் சின்னச் சின்ன சம்பவங்கள், உறவுகளின் அருமை, நம்பிக்கை, அன்பு மற்றும் வாழ்க்கைப் போராட்டங்களை உணர்வுபூர்வமாகச் சித்தரிக்கும் படைப்பாக இந்நூல் திகழ்கிறது.\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47676025176300,"sku":null,"price":206.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/e73c44bdbb37928d8ab4af2838a91413.jpg?v=1779865302"},{"product_id":"ஒரு-மனுஷி","title":"ஒரு மனுஷி","description":"\u003cp\u003eபெண்ணின் வாழ்க்கை, அவளது உணர்வுகள், ஆசைகள், போராட்டங்கள் மற்றும் சமூகக் கட்டுப்பாடுகளை ஆழமாகப் பதிவு செய்யும் படைப்பு. ஆணாதிக்கச் சூழலில் தனக்கான அடையாளத்தையும் சுதந்திரத்தையும் தேடும் ஒரு பெண்ணின் மனநிலையைப் பிரபஞ்சன் தனது இயல்பான மொழிநடையில் சித்தரிக்கிறார். பெண்களின் வாழ்வியல் சிக்கல்களையும் மனித உறவுகளின் நுட்பங்களையும் உணர்வுபூர்வமாக எடுத்துரைக்கும் நூல்.\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47676185739500,"sku":null,"price":206.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/fd042a26cbafbb2266a01fe3e762aa84.jpg?v=1779870119"},{"product_id":"சனிக்கிழமை-ஜீவிகள்","title":"சனிக்கிழமை ஜீவிகள்","description":"\u003cp\u003e\u003cstrong data-start=\"208\" data-end=\"230\"\u003eசனிக்கிழமை ஜீவிகள்\u003c\/strong\u003e என்பது எழுத்தாளர் \u003cstrong data-start=\"249\" data-end=\"262\"\u003eபிரபஞ்சன்\u003c\/strong\u003e அவர்களின் மனிதநேயம் நிறைந்த சிறுகதைகளின் தொகுப்பாகும். அன்றாட வாழ்க்கையில் நாம் சந்திக்கும் சாதாரண மனிதர்களின் உணர்வுகள், உறவுகள், சமூக முரண்பாடுகள் மற்றும் வாழ்க்கைப் போராட்டங்களை யதார்த்தமான பார்வையுடன் சித்தரிக்கும் படைப்பாக இந்நூல் அமைந்துள்ளது.\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47676189311212,"sku":null,"price":206.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/4a6787bd8f24835a12d55b33d004706a.jpg?v=1779870296"},{"product_id":"மகாநதி","title":"மகாநதி","description":"\u003cp\u003eவாழ்க்கையை ஓர் ஆழமான, இடையறாது ஓடும் மகாநதியாக விவரிக்கிறது இந்நாவல்.\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eஓடும் நதி ஞானம் உபதேசித்ததுண்டா? உண்டு. அந்தச் சித்தியைப் பெற்றவர் இருவர். ஒருவன் சித்தார்த்தன். அடுத்தவன் நான்.\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eவாழ்க்கை. ஒரு மோகினிபோல என்னுடன் கூடிப் புணர்ந்த காலம் ஒன்று இருந்தது. பொற்காலம் யாருக்குத்தான் இல்லை? மோகினி, இரவும் பகலும் சேர்ந்து உடைக்கும் முட்டையில் தோன்றுபவள். அவள் வருகையை யானைக்கு மணி போல், மல்லிகை மணம் கட்டியம் கூறும். புலன்கள், ராட்சஸ நகங்களாய்க் கூர்மை அடைந்து பிரகாசிக்கும். பொன்னைக் கரைத்து வானத்தில் தெளித்தாற்போல மஞ்சள் களிகொள்ளும் பூமி. அவள் பவானி. இரண்டு கண்களால் பார்ப்பவர்க்குக் காளி. மூன்றாம் கண்ணுடையோர்க்கு அவள் சௌந்தர்ய லஹரி, தசைக் கிளர்ச்சி இராது. யோகம் பூர்ணம் அடையும் விசித்திரச் சம்யோகம் அவளுடையது. அது ஒரு வெறி; வெறியின் தழல். தழலிற நுனிச் சாட்டை பிரக்ஞை மொட்டவிழும் போதே, மொட்டு கனியாகும் அனுபவம் இது.\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eமுன்னுரையில் பிரபஞ்சன்\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47684817682668,"sku":null,"price":225.6,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/069b3faba5f5fef7be62cad931e204cf.jpg?v=1780029635"},{"product_id":"பெண்","title":"பெண்","description":"\u003cp\u003e\u003cspan\u003eபெண் விடுதலை குறித்து, நான் என் கவலைப்படுகிறேன். என் விடுதலை பற்றி கவலைப்படுவதால், பெண் விடுதலை பற்றியும் கவலைப் படுகிறேன். பெண் விடுதலை இன்றி, ஆண் விடுதலை இல்லை. இங்கு ஆண் ஒவ்வொருவனும் இரண்டு வகைகளில் அடிமைப்பட்டிருக்கிறான். சமூக அடிமைத்தனம், பொருளாதார அடிமைத்தனம் என்பவைகளே அவைகள். இங்கு பெண் ஒவ்வொருத்தியும் சமூக அடிமைத்தனம், பொருளாதார அடிமைத்தனம் கூடுதலாக ஆண் அடிமைத்தனம் என்கிற மூன்று அடிமைச் சக்திகளுக்கு அடிமைப்பட்டுள்ளாள்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47684934140140,"sku":null,"price":206.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/2ce14db48fc32a4376dba5970797a972.jpg?v=1780031882"},{"product_id":"தாழப்பறக்காத-பரத்தையர்-கொடி","title":"தாழப்பறக்காத பரத்தையர் கொடி","description":"\u003cp\u003eநாம் சமூகம், மனிதர்கள் சுயமரியாதையோடும், மனிதத் தனத்தோடும் வாழத் தக்கதாக இருக்கிறதா என்றால் இல்லை. சகமனிதன் பற்றிய புரிதல், பரிவு, அன்பு அனைத்தும் குறைந்து வருவதுகூட இல்லை. முரண்பட்டு வருவதுகூட இல்லை. பகைக்கும்-நிலைக்கும் செலுத்தப்பட்டிருக்கிறார்கள் என்பது எனக்கு மிகவும் கவலை தருகிறது.சமூகம் என்கிற திரள் உணர்வு குறைந்து விட்டது. அந்தந்த காலத்தில் என்னைப் பெரிதும் பாதித்த விஷயங்களின் எதிர்வினையே இக்கட்டுரைகள். இப்போது திரும்பிப் படிக்கையில் எனக்கு மிகவும் திருப்தியாகவே இருக்கிறது. எழுத்துக்களில் மட்டுமல்ல. எல்லாத் தொழிலுக்கும் அடிப்படைப் பண்பாக இருப்பது ‘அறம்’. என் அளவில் இக் கட்டுரைகள் என் அறம்.\u003c\/p\u003e\n\u003cp\u003e- பிரபஞ்சன்\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47684939743468,"sku":null,"price":169.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/5fe76353319f287360812064a5eb2d56.png?v=1780034631"},{"product_id":"மானுடம்-வெல்லும்","title":"மானுடம் வெல்லும்","description":"\u003cp\u003eபுதுச்சேரிவிடுதலைப் பெற்று, பிரஞ்சுக் கொடி கீழே இறக்கப்பட்டுஇந்தியத் தேசியக் கொடி மேலேறிய அந்தக்கணத்தில், அந்த நிகழ்வில் நாள்பார்வையாளனாக இருந்தேன். அப்பாவுடன், அவர் வெகுகாலம் வைத்திருந்தபிரஞ்சு சைக்கிளில் ஏறிக்கொண்டு நாலும் போனேன். நாள் ஒன்பது வயதுசிறுவன். என்னைச் சுற்றி நின்ற பல பெரியவர்கள் கண்ணீரைநான் பார்த்தேன். என் அப்பாவின் கண்களிலும், கண்ணீரின் அர்த்தம் அப்போது எனக்கு விளங்கவில்லை. ஏதோ ஒரு பிறந்தநாளின்போது அப்பா, எனக்குப் பிறந்த நாள் பரிசாக ஆனந்தரங்கரின்டயரிக்குறிப்புகள், புத்தகங்களைப் பரிசாகத் தந்தார். முதல் வாசிப்பில் அவை எனக்குப் புரியவில்லை. பிறகு, என் வாசிப்பு வளர்ந்தது. உலக இலக்கியங்கள், விடுதலை இயக்கங்கள், அவை பற்றிய வரலாற்றுநூல்கள் என்று என் படிப்பு வளர்ச்சியுற்றபோது. எனக்கு என் மண்ணின் வரலாற்றின்மேல்கவனம் குவிந்தது. புதுச்சேரி வரலாறு, தமிழக வரலாறு. மராட்டிய வரலாறு, டில்லி சுல்தானிய வரலாறு, பிரான்ஸ் தேச வரலாறு என்றுபல வரலாறுகள் கற்ற பிறகே. நான்எழுதத் தொடங்கினேன்.\u003c\/p\u003e\n\u003cp\u003eமுன்னுரையிலிருந்து...\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47684949803244,"sku":null,"price":376.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/d4675309bbd0131d5ed158a26cbee7f7.jpg?v=1780035852"},{"product_id":"மானுடம்-வெல்லும்-1","title":"மானுடம் வெல்லும்","description":"\u003cp\u003e\u003cspan\u003eமானுடம் வெல்லும் எனும் இந்நாவல் தமிழ் நாவல் வரலாற்றில் பல வகைகளில் தொடக்க-மாகவும் முதலாகவும் வைத்து எண்ணும் சிறப்பம்-சங்களைக் கொண்டது. பிரெஞ்ச் ஆதிக்கத்தின் கீழ் சுமார் முந்நூறு ஆண்டுகள் இருந்த இன்றைய புதுச்சேரி மாநிலத்தின் மற்றும் தென்னார்க்காடு மாவட்டத்தின் தமிழ் வாழ்க்கையையும் பிரெஞ்சுக்-காரர்கள் மூலம் தமிழர் கற்றுக்-கொண்ட பிரெஞ்ச்-தமிழ் வாழ்க்கையையும் கலை நேர்த்தியுடன் படைத்தளிக்கிறது இந்நாவல். அக்காலத்திய பிரெஞ்ச்-- -தமிழர் மொழி, வாழ்க்கை, பண்பாடு முதலான பல வகைகளிலும் கவனம் கொண்டு எழுதப்பட்டது இந்நாவல்\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47926387867884,"sku":null,"price":329.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/d4675309bbd0131d5ed158a26cbee7f7_3624294d-8619-4b3b-9bda-15611a28fef4.jpg?v=1783763764"},{"product_id":"ருசி","title":"ருசி","description":"\u003cp\u003eபெண்ணைப் பற்றி எழுதுவது என்பது என்னைப் பற்றி எழுதுவது என்றே உணர்கிறேன். என் அம்மா, மனைவி, சகோதரிகள், தோழிகள் என்று எத்தனை பெண்களின் அன்பிலும் அருளிலும் நான் வாழ்கிறேன். எனக்கு அறிவும் ஞானமும் தந்ததில் அவர்களின் பங்கு மிகப் பெரிதல்லவா? அவர்களின் சந்தோஷத்தை நான் பெற்றதாகத் துய்க்கிற நான், அவர்களின் துன்பத்தையும் பங்கு கொள்கிறவனாக இருப்பது தானே மனிதாம்சம். எழுதுவதுதான் என்னால் முடிந்தது. அப்படித்தான் நான் பங்கு கொள்கிறேன்.\u003c\/p\u003e\n\u003cp\u003e- பிரபஞ்சன்\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47926699196652,"sku":null,"price":235.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/d10e9974d0259f277fb22480498dbb8d.jpg?v=1783764451"},{"product_id":"மகாநதி-1","title":"மகாநதி","description":"\u003cp\u003e\u003cspan\u003eவாழ்க்கை எனும் மகாநதி, பொங்கிப் பிரவகித்து, மூர்க்கமும் மூர்த்தன்யமும் பொருந்த, திகிலேற்றுகிற மோகினிக் கவர்ச்சியுடன் நடந்து செல்லும் பேரழகை நீங்கள் என்றேனும், ஓர் கணமேனும் தரிசித்ததுண்டா? நான் அதை அனுபவித்திருக்கிறேன். குலைநடுங்க, மேனிபுளகம் உற, அச்சத்தால் உலர்ந்து, சந்தோஷத்தால் கிளர்ந்து, பெருவிருப்போடு உயிர் தோய்ந்து நான் அனுபவித்திருக்கிறேன். இடையறாது ஓடிக்கொண்டிருக்கும் மகாநதி, ஒரு கணம் சட்டென்று உறைந்து நின்று, பின்னர் பெருக்கெடுத்தால் எப்படி இருக்கும்? அதி அற்புத அனுபவம் அது! அந்த அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ளவே இந்த நாவல். - பிரபஞ்சன்\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47926872670444,"sku":null,"price":225.6,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/a6cd3b93d55e6874dadfc547c54ecb44.jpg?v=1783764845"},{"product_id":"தபால்காரர்-பெண்டாட்டி-1","title":"தபால்காரர் பெண்டாட்டி","description":"\u003cp\u003eதபால்காரர்கள் மேல் என்ன காரணத்தாலோ ஒரு வகையான ஈர்ப்பு சின்ன வயசிலிருந்தே எனக்கு ஏற்பட்டுவிட்டது. தபால்காரர்களை நான் தினமும் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. எங்கள் வீட்டுக்கு தினமும் தபால் வரும்.\u003c\/p\u003e\n\u003cp\u003eஅப்படித்தான் பரிச்சயமானவர் அந்தத் தபால்காரர். சைக்கிளில் வருவார். நான் பத்திரிகைகளுக்கு பதின்மூன்று வயது தொடங்கி சின்னச் சின்னக் கவிதைகள் அனுப்பிவைப்பேன். அவை திரும்பி வரும். அல்லது பிரசுரிக்க இயலாமைக்கு வருந்துவதாக ஆசிரியர் எழுதி இருப்பார்.\u003c\/p\u003e\n\u003cp\u003eஆனால் விரைவில், என் கதை, கவிதை, கட்டுரைகள் பிரசுர மாயின. அவர், என் பக்கத்திலிருந்து, நான் பத்திரிகையைப் பிரித்து, பிரசுரமாகி இருக்கும் என் படைப்பை நானும் படித்து, அவரிடமும் காட்டும் வரை, அவர் என் எதிரிலேயே நின்றிருப்- பார். வாய் திறந்து பாராட்டமாட்டார். ஆனால், அவர் மகிழ்ச்சி யாக உணர்கிறார் என்பதை நான் அறியும்படி இருக்கும்.\u003c\/p\u003e\n\u003cp\u003e- பிரபஞ்சன்\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47926954033388,"sku":null,"price":235.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/2ebf74d0041a0e9e5419cd607d9cdcdd.jpg?v=1783765507"},{"product_id":"ஒரு-ஊரில்-ரெண்டு-மனிதர்கள்","title":"ஒரு ஊரில் ரெண்டு மனிதர்கள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஎனக்கு மிகவும் பிடித்த தொகுதி, ஒரு ஊரில் ரெண்டு மனிதர்கள். இது என் எழுத்து வாழ்க்கையில் முதல் முதலாக 1982ஆம் ஆண்டு வெளியாகி, தமிழ் வாசகர் மனதில் எனக் கொரு அறையை ஏற்படுத்திய தொகுதி என்பது ஒரு காரணம். இரண்டாவது, தமிழ்நாடு அரசால் 1982ஆம் ஆண்டுக்கான சிறந்த சிறுகதைத் தொகுதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது... இந்தத் தொகுதியில் இருக்கும் பிரும்மம் கதையை அந்த ஆண்டின் சிறந்த கதையாக இலக்கியச் சிந்தனைக்காகத் தேர்ந்தெடுத்தவர் எழுத்தாளர் கரிச்சான் குஞ்சு. இந்தக் கதை வெளிவந்தது கணையாழியில், தி. ஜானகிராமன் ஆசிரியராக இருந்தபோது. என்னை அவர் பாராட்டினார். மேலும் அவருடன் பெல்ஸ் சாலையிலிருந்து, ரத்னா கபே வரை நடந்து வந்து காப்பி சாப்பிட்டுச் செலவிட்டுக் களித்த ஒரு நீண்ட மாலை வேளையையும் பிரும்மம் எனக்குத் தந்தது. - பிரபஞ்சன்\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47926970515692,"sku":null,"price":150.4,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/5071d4470b3270a975cb496e222d03e0.jpg?v=1783765585"},{"product_id":"பிரபஞ்சன்-சிறுகதைகள்-முழுத்-தொகுப்பு-1-and-2","title":"பிரபஞ்சன் சிறுகதைகள் முழுத் தொகுப்பு (1 and 2)","description":"\u003cp\u003e\u003cstrong\u003e\u003cspan\u003eபிரபஞ்சன் சிறுகதைகள் – முழுத் தொகுப்பு\u003c\/span\u003e\u003c\/strong\u003e\u003cspan\u003e என்பது எழுத்தாளர் \u003c\/span\u003e\u003cstrong\u003e\u003cspan\u003eபிரபஞ்சன்\u003c\/span\u003e\u003c\/strong\u003e\u003cspan\u003e எழுதிய சிறந்த சிறுகதைகளை ஒருங்கிணைக்கும் முழுமையான தொகுப்பாகும். மனித உணர்வுகள், சமூக வாழ்வு, உறவுகள், அரசியல், வரலாறு மற்றும் அன்றாட வாழ்க்கையின் பல்வேறு பரிமாணங்களை ஆழமான பார்வையுடனும் எளிமையான மொழிநடையுடனும் பதிவு செய்கிறது. தமிழ் சிறுகதை இலக்கியத்தை விரும்பும் ஒவ்வொரு வாசகரும் அவசியம் படிக்க வேண்டிய அரிய தொகுப்பாக இந்நூல் விளங்குகிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47927188586732,"sku":null,"price":1410.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/bd47503809da6efa76cb8963e5324bb1.jpg?v=1783767373"},{"product_id":"அப்பாவின்-வேஷ்டி","title":"அப்பாவின் வேஷ்டி","description":"\u003cp\u003e\u003cem data-start=\"148\" data-end=\"166\"\u003eஅப்பாவின் வேஷ்டி\u003c\/em\u003e என்பது எழுத்தாளர் \u003cstrong data-start=\"185\" data-end=\"198\"\u003eபிரபஞ்சன்\u003c\/strong\u003e எழுதிய மனதை நெகிழ்விக்கும் சிறுகதைத் தொகுப்பாகும். குடும்ப உறவுகள், குறிப்பாக தந்தை–மகன் மற்றும் தந்தை–மகள் பாசம், மனிதநேயம், வாழ்க்கையின் எளிய தருணங்கள், சமூகத்தின் பல்வேறு முகங்கள் ஆகியவற்றை யதார்த்தமாகவும் உணர்வுபூர்வமாகவும் பதிவு செய்கிறது.\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47951520497900,"sku":null,"price":206.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/APPAVIN.jpg?v=1784178485"},{"product_id":"குயிலம்மை-1","title":"குயிலம்மை","description":"\u003cp\u003e\u003cstrong data-start=\"148\" data-end=\"161\"\u003eகுயிலம்மை\u003c\/strong\u003e என்பது சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் \u003cstrong data-start=\"208\" data-end=\"221\"\u003eபிரபஞ்சன்\u003c\/strong\u003e எழுதிய சிறந்த சிறுகதைத் தொகுப்பாகும். மனித வாழ்வின் ஆழமான உணர்வுகள், அன்பு, தியாகம், சமூகப் பொறுப்பு, மனிதநேயம் மற்றும் வாழ்க்கையின் பல்வேறு பரிமாணங்களை எளிமையான மொழிநடையிலும் ஆழமான சிந்தனையுடனும் பதிவு செய்யும் படைப்பாக இந்நூல் விளங்குகிறது.\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47951521153260,"sku":null,"price":206.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/b6ab190f84b7a9fa62aa607137d857aa.jpg?v=1784178773"},{"product_id":"சித்தன்-போக்கு-1","title":"சித்தன் போக்கு","description":"\u003cp\u003e\u003cstrong data-start=\"158\" data-end=\"176\"\u003eசித்தன் போக்கு\u003c\/strong\u003e என்பது எழுத்தாளர் \u003cstrong data-start=\"195\" data-end=\"208\"\u003eபிரபஞ்சன்\u003c\/strong\u003e எழுதிய தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பாகும். மனித வாழ்க்கையின் நுணுக்கமான உணர்வுகள், அன்பு, கருணை, தியாகம், நம்பிக்கை மற்றும் சமூகத்தின் பல்வேறு பரிமாணங்களை யதார்த்தமாகவும் கலைநயத்துடனும் வெளிப்படுத்தும் சிறந்த இலக்கியப் படைப்பாக இந்நூல் விளங்குகிறது.\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47951534850284,"sku":null,"price":206.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/SITHANPOKKU.jpg?v=1784182117"},{"product_id":"நேற்று-மனிதர்கள்","title":"நேற்று மனிதர்கள்","description":"\u003cp\u003e\u003cstrong data-start=\"204\" data-end=\"224\"\u003eநேற்று மனிதர்கள்\u003c\/strong\u003e என்பது எழுத்தாளர் \u003cstrong data-start=\"243\" data-end=\"256\"\u003eபிரபஞ்சன்\u003c\/strong\u003e அவர்களின் மனிதநேயமும் சமூகப் பார்வையும் நிறைந்த சிறுகதைத் தொகுப்பாகும். வாழ்க்கையின் பல்வேறு சமூக, பொருளாதார மற்றும் உளவியல் நெருக்கடிகளுக்கு மத்தியில் வாழும் சாதாரண மனிதர்களின் உணர்வுகள், போராட்டங்கள் மற்றும் நம்பிக்கைகளை ஆழமாகச் சித்தரிக்கும் சிறந்த படைப்பாக இந்நூல் விளங்குகிறது.\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47951562277100,"sku":null,"price":206.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/NETTUMANI.jpg?v=1784185592"},{"product_id":"குமாரசாமியின்-பகல்-பொழுது","title":"குமாரசாமியின் பகல் பொழுது","description":"\u003cp\u003e\u003cspan\u003eபிரபஞ்சனின் சிறுகதைகள் காட்டும் யதார்த்தம் மிகவும் நுண்மையானது. சமூக, பொருளாதார, உளவியல் நெருக்கடிகளுக்கு உள்ளான மனிதர்களின் துயரங்களைப் பேசும் இக்கதைகள் அன்பால் மட்டுமே மனிதர்கள் மீட்சி பெற முடியும் என்பதை வலியுறுத்துகின்றன. பிரபஞ்சன் கதைகளில் வரும் பெண்கள் அபூர்வமானவர்கள். வேதனைகளைத் தாண்டி வாழ்க்கையைக் காத்திரமாக எதிர்கொள்ளும் தைரியம் கொண்டவர்கள். அன்பின் பொருட்டு அவலங்களை சகித்துக் கொண்டு வாழ்பவர்கள். அந்த வகையில் அவரை தி.ஜானகிராமனின் வாரிசு என்றே கூறுவேன். மொழிநுட்பத்திலும், கச்சிதமான வடிவத்திலும் தேர்ந்த சிற்பம் போல கலைநேர்த்தி பெற்றுள்ளன பிரபஞ்சனின் சிறுகதைகள்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47951576432876,"sku":null,"price":206.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/KUMARA.jpg?v=1784186385"}],"url":"https:\/\/centaram.com\/collections\/prapanchan.oembed","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}