{"title":"பூமணி","description":"","products":[{"product_id":"வெக்கை","title":"வெக்கை","description":"\u003cp\u003eதூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியருகே ஆண்டிபட்டி என்னும் சிற்றூரில் பிறந்தவர் தமிழ்ச் சிறுகதைகளுக்கும் நாவல்களுக்கும் சொந்த முகம் கொடுத்தவர்கள் என்று சிலரை வரிசைப்படுத்தினால் அதில் இவருக்கும் இடமுண்டு மொழிவளம் நிறைந்த இவரது புனைவுகளில் மண்மீதான ரசனையும் பிரியமும் அமுங்கி அடித்தட்டு மக்களின் குரல்கள் ஓங்கியொலிப்பதைக் கேட்கலாம்.\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eசாகித்ய அகாடமி விருது உட்பட பல விருதுகளைப் பெற்றவர். இவரது நூல்கள் ஆங்கிலம். இந்தி வங்காளம், பிரெஞ்சு ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eகூட்டுறவுத் துறையில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். தற்போது கோவி ல்பட்டியில் வசித்து வருகிறார்.\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eதேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகத்துக்காக தீப்பெட்டித் தொழிலில் குழந்தை உழைப்பை மையமாகக் கொண்டு 'கருவேலம் பூக்கள்' என்ற திரைப்படத்தை எழுதி இயக்கியுள்ளார். அது தமிழக அரசு விருது பெற்றது\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47676309864684,"sku":null,"price":188.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/aa20b7082bcec6468756d1058598bb5a.jpg?v=1779872918"},{"product_id":"கிழிசல்","title":"கிழிசல்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஎழுபதுகளில் எழுதத் தொடங்கிய பூமணி தமிழ் இயல்புவாத எழுத்துக்களின் முன்னோடிகளில் ஒருவர். நிதானமான எழுத்துமுறை இவருடையது. நிறைய எழுதாவிடினும் நிறைவாக எழுதியவர். இவருடைய கதைகளின் நிலம் - கரிசல்; காலம் - கோடை; பொழுது - நண்பகல் எனக் கொள்வோமாயின், அம்மண்ணிலும், மக்களின் மனதிலும் ஆற்றிக்கொள்ளவே முடியாதபடி உறைந்திருக்கும் வெக்கையைப் பகிர்ந்துகொள்கின்றன இக்கதைகள். அவர் எழுதிய மொத்தக் கதைகளினின்றும் அவற்றின் வகைமையையும் வன்மையையும் காட்டும் விதமாகத் தெரிவுசெய்யப்பட்ட இருபத்தியொரு சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு இது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47711663784172,"sku":null,"price":169.2,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/516f288e770b05481edabbf75b14f86b.jpg?v=1780727808"},{"product_id":"வெக்கை-1","title":"வெக்கை","description":"\u003cp\u003e\u003cspan\u003eசாதாரணமானதொரு பழி தீர்க்கும் கதையாக முதல் வாசிப்புக்குத் தென்படும் ‘வெக்கை’ ஒரு இலக்கியப் படைப்பு என்னும் ரீதியில் நுட்பமான பல பரிமாணங்களைக் கொண்டது. ஏற்றத்தாழ்வும் சுரண்டலும் நிரம்பிய ஓர் அமைப்பின் முரண்களைப் பற்றியும் அவற்றைத் தீர்மானிக்கும் சமூகப் பொருளாதாரக் காரணிகளைப் பற்றியும் ஆராயும் முனைப்புக் கொண்ட ஒரு நாவல் என்று சொல்வது இந்த நாவலைப் பற்றிய ஒரு எளிய புரிதலாகவே இருக்க முடியும். பூமணி எழுப்பும் கேள்விகள் இவற்றைக் காட்டிலும் முக்கியமானவை. ஒரு கலைஞன் என்ற முறையில் பூமணி பழியின் அரசியலையும் அறத்தையும் கேள்விக்குள்ளாக்குகிறார். இவ்வுலகின் மீதான, தான் வாழும் நிலத்தின் மீதான ஆச்சரியங்களிலிருந்தும் குழந்தைமையின் பேதமையிலிருந்தும் விடுபட முடியாத ஒரு பதினைந்து வயதுச் சிறுவனின் மனம் பழியின் கொழகொழப்பான திரவத்தால் நிரப்பப்படும் பயங்கரம் எளிய, மிருதுவான சொற்களால் கலைப்படுத்தப்பட்டிருக்கிறது. வெற்றி, தோல்வி பற்றிய புழக்கத்திலிருக்கும் சொற்களைத் தன் தணிந்த குரலால் மறுக்கும் ஒரு கலைஞன் அவற்றின் விளைவுகளைக் குறித்துத் தன் வாசகனோடு நிகழ்த்தும் மிகத் துக்ககரமான உரையாடல் எனவும் இந்நாவலைச் சொல்லலாம்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47718119112940,"sku":null,"price":150.4,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/9f3ae93577eef199273bf3feaf055673.png?v=1780915831"},{"product_id":"வரப்புகள்","title":"வரப்புகள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eதமிழ்ச் சிறுகதைகளுக்கும் நாவல்களுக்கும் சொந்த முகம் கொடுத்தவர்கள் என்று சிலரை வரிசைப்படுத்தினால் அதில் பூமணிக்கும் இடமுண்டு. மொழிவளம் நிறைந்த இவரது புனைவுகளில் மண்மீதான ரசனையும் பிரியமும் அமுங்கி அடித்தட்டு மக்களின் குரல்கள் ஓங்கியோலிப்பதைக் கேட்கலாம். கரிசல் மக்களின் வாழ்க்கையை நுட்பமாக தனது படைப்புகளில் பதிவு செய்தவர் எழுத்தாளர் பூமணி. யதார்த்த வாழ்வின் நெருக்கடிகளை இயல்பான மொழியில் பேசுபவை இவருடைய எழுத்துக்கள்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47951543566572,"sku":null,"price":150.4,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/VARAPPUGFAL.jpg?v=1784183750"}],"url":"https:\/\/centaram.com\/collections\/poomani.oembed","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}