{"title":"Autobiography","description":"","products":[{"product_id":"அக்னிச்-சிறகுகள்","title":"அக்னிச் சிறகுகள்","description":"\u003cp class=\"MsoNormal\"\u003e\u003cspan lang=\"EN-IN\"\u003eராமேஸ்வரத்தில் எளிய குடும்பத்தில் பிறந்த ஒருவர் தன் கனவுகளைத் தீவிரமாகப் பின்தொடர்ந்து வாழ்வில் பெற்ற வெற்றி ஒரு தனிநபரின் வெற்றி மட்டுமல்ல; இந்திய விண்வெளித் துறையின் வெற்றியுடனும் இந்தியப் பாதுகாப்புத் துறை தன்னிறைவு பெற்ற வெற்றியுடனும் இரண்டறக் கலந்தது அது.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp class=\"MsoNormal\"\u003e\u003cspan lang=\"EN-IN\"\u003eஆ.ப.ஜெ. அப்துல் கலாமின் இந்தத் தன்வரலாறு விண்வெளி ஆய்வு, செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்துதல், ஏவுகணைத் தொழில்நுட்பம் ஆகியவற்றில் இந்தியா தன்னிறைவு பெற்ற வரலாற்றை விறுவிறுப்பாகவும் எளிமையாக வும் கூறுகிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp class=\"MsoNormal\"\u003e\u003cspan lang=\"EN-IN\"\u003eஇந்தப் புதிய பதிப்பில் கூடுதலாக ஐந்து இயல்கள் உள்ளன. அவை\u003cspan\u003e \u003c\/span\u003e\u003c\/span\u003e\u003cspan\u003e‘\u003cspan lang=\"EN-IN\"\u003eஅக்னிச் சிறகுகள்\u003c\/span\u003e\u003c\/span\u003e\u003cspan\u003e’ \u003c\/span\u003e\u003cspan lang=\"EN-IN\"\u003eநூலின் முந்தைய பதிப்பு முடிவடைந்த தருணத்திலிருந்து டாக்டர் கலாம் மறைந்தது வரையிலான (1991-2015) காலகட்டத்தின் நிகழ்வுகளைச் சித்தரிக்கின்றன. கலாமுக்கு நெருங்கிய துணையாக இருந்த,\u003cspan\u003e \u003c\/span\u003e\u003c\/span\u003e\u003cspan\u003e‘\u003c\/span\u003e\u003cspan\u003eஅக்னிச்\u003c\/span\u003e\u003cspan lang=\"EN-IN\"\u003e சிறகுகள்\u003c\/span\u003e\u003cspan\u003e’ \u003c\/span\u003e\u003cspan lang=\"EN-IN\"\u003eநூலின் இணையாசிரியரான அருண் திவாரி தரும் பதிவுகள் இவை. தேசத்திற்கான கடமைகளில் உச்ச சாதனையைத் தொட்ட பிறகும் மகத்தான இந்தியாவுக்கான பெரும் கனவுகளுடன் வாழ்ந்து மேலும் பல சாதனைகளைப் புரிந்த நிகழ்வுகளை இந்தப் புதிய பக்கங்கள் உயிரோட்டத் துடன் விவரிக்கின்றன.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47603271565548,"sku":null,"price":231.25,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/747a6d2bc7c27660e74af7188a031224.jpg?v=1778058779"},{"product_id":"சே-குவேரா-கனல்-மணக்கும்-வாழ்க்கை","title":"சே குவேரா: கனல் மணக்கும் வாழ்க்கை","description":"\u003cp\u003e\u003cspan\u003eசு.பொ. அகத்தியலிங்கம் மூத்த ஊடகவியலாளர்,எழுத்தாளர். ‘சாதியம்: வேர்கள், விளைவுகள் சவால்கள்’, ‘விடுதலைத் தழும்புகள்’ உள்ளிட்ட16 நூல்களின் ஆசிரியர். தமிழக அரசு விருது உள்ளிட்ட பல விருதுகள் பெற்றவர். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தில் தலைமை பொறுப்பில் இருந்தவர். தீக்கதிர் பொறுப்பாசிரியராகவும், மார்க்க்சிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினராகவும் செயலாற்றியவர். \"ஏன் சேவுக்கு மட்டும் இப்படி மீண்டும் மீண்டும் பிறப்பெடுக்கும் பழக்கம் உள்ளது? அவன் எந்த அளவு கேவலப்படுத்தப்படுகிறானோ, சூழ்ச்சிகளில் சிக்கவைக்கப்படுகிறானோ, ஏமாற்றப்படுகிறானோ அந்த அளவு அவன் மீண்டும் வருகிறான். மற்றெவரையும் விட அவனுக்குப் பிறவிகள் அதிகம். நினைத்ததைச் சொல்வதாலா? அவன் சொன்னதைத்தான் செய்ததாலா? காலந்தோறும் போர்குணத்தின் குறியீடாக அவன் எழுகிறான் என்பதுதான். எட்வர்டோ காலினோ 'எழுதச்சலிக்காத நெருப்புவரிகள்' என்பதன் பொருளாய் இருப்பது சேகுவேராவின் வாழ்க்கை வரலாறுதான்’ என்று கூறும் நூலாசிரியர் சு.பொ. அகத்தியலிங்கம் ‘புதிய வாசகர்களுக்கு சேகுவேராவை உரியமுறையில் அறிமுகம் செய்யும் பணிக்கு நான் தகுந்த நியாயம் வழங்கி இருக்கிறேன்’ என்றும் உறுதி கூறுகிறார்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47679031509228,"sku":null,"price":141.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/7cd0ad53958c02eedf8c6bea246b9e25.jpg?v=1779890470"},{"product_id":"பகத்சிங்-ஒரு-வீர-வரலாறு","title":"பகத்சிங் - ஒரு வீர வரலாறு","description":"\u003cp\u003e\u003cspan\u003eநாளை காலை மெழுகுவர்த்தி ஒளி மங்குவது போல் நானும் மறைந்து விடுவேன். ஆனால் நம்முடைய நம்பிக்கைகள் குறிக்கோள்கள் இந்த உலகத்தை பிரகாசிக்கச் செய்யும். மீண்டும் பிறப்போம். எண்ணற்ற இந்நாட்டு வீரர்களின் உருவில்...\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47679078760684,"sku":null,"price":94.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/85517cc052e39252eaf50595a62c0730.png?v=1779890736"},{"product_id":"சார்லி-சாப்ளின்","title":"சார்லி சாப்ளின்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஉலகின் மிகச் சிறந்த நகைச்சுவை நடிகரான சார்லி சாப்ளினுடைய வாழ்க்கை வரலாறு.தன் வாழ்க்கை அனுபவங்களை திரைபடங்களில் சித்தரித்து பார்வையாளர்களை ஒரே நேரத்தில் சிரிக்க,சிந்திக்க,அழவும் வைத்த சாப்ளின் கதை.திரைப்படத்தின் அனைத்து துறைகளிலும் மேதைமை பெற்றிருந்த சாப்ளின்,ஒடுக்குமுறை மற்றும் யுத்தத்திற்கு எதிரான அமைப்புகளுடன் சேர்ந்து செயல்பட்டார்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47685002690796,"sku":null,"price":84.6,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/e66815c53e3774945e6226b3cd089729.jpg?v=1780037410"},{"product_id":"அக்னிச்-சிறகுகள்-1","title":"அக்னிச் சிறகுகள்","description":"\u003cp\u003e\u003cstrong\u003e\u003cspan\u003eஅக்னிச் சிறகுகள்\u003c\/span\u003e\u003c\/strong\u003e\u003cspan\u003e என்பது இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர், விஞ்ஞானி டாக்டர் ஏ. பி. ஜே. அப்துல் கலாம் அவர்களின் உலகப் புகழ்பெற்ற தன்வரலாறு. எளிய குடும்பத்தில் பிறந்த ஒரு சிறுவன், விடாமுயற்சி, கல்வி, ஒழுக்கம் மற்றும் கனவுகளின் வலிமையால் இந்தியாவின் ஏவுகணைத் திட்டத்தின் முன்னோடியாகவும், நாட்டின் முதல் குடிமகனாகவும் உயர்ந்த வாழ்க்கைப் பயணத்தை இந்நூல் மனதை நெகிழச் சொல்லுகிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47718083723500,"sku":null,"price":235.0,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/AGNISIRAGUGAL.jpg?v=1780913088"},{"product_id":"மகா-அலெக்சாண்டர்","title":"மகா அலெக்சாண்டர்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஉலகத்தைத் தன் உள்ளங்கையில் குவித்த மாவீரனின் கதை இது. வெற்றி, வெற்றியைத் தவிர வேறு ஒன்றையும் கண்டதில்லை அலெக்சாண்டர். அலெக்சாண்டருக்கு முன்னும் பின்னும் சரித்திரத்தில் எத்தனையோ வீரர்கள் தோன்றியிருக்கிறார்கள். பல வீர, தீர பராக்கிரமங்கள் புரிந்திருக்கிறார்கள். ஆனால், உலகின் மிகச் சிறந்த ராணுவ கமாண்டர் என்று ஒருவரைச் சொல்லச் சொன்னால் அலெக்சாண்டரின் பெயரை மட்டுமே உச்சரிக்கிறது சரித்திரம். ஏன்? அலெக்சாண்டருக்கு உதிரி உதிரியாகக் கனவுகள் காணத் தெரியாது. அவர் கண்டது ஒரே கனவு. கொண்டது ஒரே லட்சியம். உலகம். அது போதும். தான் கலந்துகொண்ட எந்தவொரு போரிலும் தோல்வியடைந்ததில்லை அலெக்சாண்டர். யாரிடமும் எதற்கும் பயந்து பின்வாங்கியதில்லை. காரணம், வாளைக் காட்டிலும் தன் புத்தியைக் கூர்மையாக வைத்திருந்தவர் அவர். தலைமைப் பண்புகள். திட்டமிடும் திறன். எதிரிகளை இனம் கண்டு வேரறுக்கும் பேராற்றல். சரியாகக் கனவு காணும் கலை. அந்தக் கனவை நினைவாக்க செயல்திட்டம் வகுக்கும் திறன். அலெக்சாண்டரிடம் இருந்து அள்ளிக்கொள்வதற்கு நிறைய பொக்கிஷங்கள் இருக்கின்றன. விறுவிறுவிறுவென்று குதிரைச் சவாரி மொழியில் அலெக்சாண்டரின் வாழ்க்கையை விவரித்திருக்கிறார் நூலாசிரியர் முத்துக்குமார். எடுத்தால், முடிக்காமல் வைக்கமாட்டீர்கள்!\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47729513496812,"sku":null,"price":122.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/6378906cac8449be4a9ebd71709b9a0b.jpg?v=1781169836"},{"product_id":"அப்துல்-கலாம்-கனவு-நாயகன்","title":"அப்துல் கலாம் கனவு நாயகன்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஒரு விஞ்ஞானியை தங்கள் ஆதர்சமாக இளைஞர்கள் வரிந்துகொள்ளும் கலாசாரம் வரலாற்றில் அபூர்வமாகத்தான் நடைபெறும். அதைவிட அபூர்வம், அரசியல் துறையில் இருந்து ஒருவரை இதயப்பூர்வமாகத் தேர்ந்தெடுப்பது. அந்த வகையில் அப்துல் கலாம் அதிசயங்களின் கலவை. அதிகாரத்தில் இல்லை. அரசாங்கப்பதவியும் கிடையாது. என்றாலும், அப்துல் கலாம் மீதான ஈர்ப்பு இன்றுவரை ஓர் அங்குலம்கூட குறையவில்லை. மாறாக, பல லட்சக்கணக்கான இளைஞர்களை மேலும் மேலும் ஈர்த்துக் கொண்டிருக்கிறார் அவர். ஒரேவரியில் அதற்கான காரணத்தைச் சொல்லிவிட முடியும். உச்சத்தில் இருக்கும் பல பிரபலங்களின் வாழ்க்கையைப் போன்றது அல்ல அவருடையது. நம்மில் ஒருவராக, நம்மைப் போன்ற ஒருவராக இருந்து, முட்டி மோதிப் போராடி உச்சத்தைத் தொட்டிருக்கிறார். நிலைத்தும் நின்றிருக்கிறார். பார்த்து பிரமித்துவிட்டு, ஒதுங்கிவிடப் போகக்கூடிய வாழ்க்கையை வாழவில்லை அவர். பரவசத்தையும் சிலிப்பையும் ஏற்படுத்தும், நம்மாலும் முடியும் என்னும் நம்பிக்கையை ஏற்படுத்தும், முயன்று பார்க்கத் தூண்டும் படிப்பினைகள் கொண்ட அபூர்வமான அத்தியாயங்கள் கொண்ட எளிமையான வாழ்க்கை அது. சர்ச்சைகள் இல்லாமல் இல்லை. அறிவியல் துறை அளவுக்கு அரசியலில் அவர் பங்களிப்பு இல்லை என்றொரு விமரிசனம் உண்டு. பொக்ரான், அப்சல் குரு, சோனியா காந்தி பதவி மறுப்பு, சுனாமி நிவாரணம் என்று அவர்மீது குறை கூற சில காரணங்கள் அடுக்கப்படுகின்றன. நாம் அறிந்த அப்துல் கலாமின் அறிந்திராத பக்கங்களை, நேர்த்தியாகவும் நேர்மையாகவும் இந்த வாழ்க்கை வரலாறில் பதிவு செய்திருக்கிறார், நூலாசிரியர் ச.ந. கண்ணன்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47729755816172,"sku":null,"price":258.5,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/6affc3d1589e5d5913272831129d6213.jpg?v=1781171722"},{"product_id":"பாபாசாஹேப்-டாக்டர்-அம்பேத்கருடன்-என்-வாழ்க்கை","title":"பாபாசாஹேப்: டாக்டர் அம்பேத்கருடன் என் வாழ்க்கை","description":"\u003cp\u003e\u003cspan\u003e‘நான் மிகவும் பலவீனமானவன். மிகவும் கனிவானவன். எளிதில்\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eஉணர்ச்சிவசப்படக்கூடியவன். மக்கள் என்னைப் பற்றித் தவறான அபிப்ராயம் கொண்டிருக்கிறார்கள். நான் கல்நெஞ்சக்காரன்,\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eமுரட்டுத்தனமானவன், வெளிப்படையானவன், உணர்ச்சியற்றவன்,\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eவாதம்புரிபவன், முழுக்க மண்டைதானே தவிர இதயமே கிடையாது\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eஎன்றெல்லாம் அவர்கள் நினைக்கிறார்கள். எனக்குள் கனிவும்\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eமென்மையும் இருக்கின்றன. என்னை அவை பலவீனப்படுத்துகின்றன,\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eசரணடையவைக்கின்றன.’\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47759607529708,"sku":null,"price":657.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/BABA.jpg?v=1781765304"},{"product_id":"ஒரு-யோகியின்-சுயசரிதம்","title":"ஒரு யோகியின் சுயசரிதம்","description":"\u003cdiv class=\"row\"\u003e\n\u003cdiv class=\"col-md-12 col-md-12\"\u003e\n\u003cdiv class=\"tab-content\"\u003e\n\u003cdiv class=\"tab-pane active in\" id=\"desc_1\"\u003e30--ம் நூற்றாண்டின் மிகச் சிறந்த 100 ஆதங்க நூல்களில் ஒன்று எனப் பெயர் பெற்ற பரமஹம்ஸ் யோகானந்தரின் குறிப்பிடத்தக்க வாழ்க்கை சரித்திரம் உங்கனை. மகான்கள் மற்றும் போகியர், அறிவியல் மற்றும் அதிசயங்கள், மாரணம் மற்றும் உயிர்த்தெழுதலைப் பற்றிய உலகத்தின் மறக்க வொண்ணா ஆராய்ச்சிகளுக்கு அழைத்துச் செல்கின்றது. அவர். ஆன்ம-நிறைவை அளிக்கும் ஞானத்துடனும் அன்பை எழுப்பும் புத்திக் கூர்மையுடனும், வாழ்க்கை மற்றும் பிரபஞ் சத்தினுடைய மிக ஆழ்ந்த இரகசியங்களை விளக்குகிறார்.\u003cbr\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47763628490988,"sku":null,"price":162.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/PARAMA.jpg?v=1781861636"},{"product_id":"போப்-பிரான்சிஸ்-நம்பிக்கை-சுயசரிதை","title":"போப் பிரான்சிஸ் நம்பிக்கை: சுயசரிதை","description":"\u003cp\u003eஇந்த நூலில் கருணை, அன்பு, மன்னிப்பு, எளிமை, சமத்துவம் மற்றும் சமூக நீதியின் முக்கியத்துவத்தை போப் பிரான்சிஸ் தனது வாழ்க்கை அனுபவங்களின் வழியாக பகிர்ந்து கொள்கிறார். மத எல்லைகளைக் கடந்து, மனிதநேயம் மற்றும் பிறருக்கான சேவை என்பதே உண்மையான வாழ்க்கையின் அடிப்படை மதிப்புகள் என்பதை இந்த நூல் வலியுறுத்துகிறது.\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47763636158700,"sku":null,"price":539.0,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/POPEFRAN.jpg?v=1781862346"},{"product_id":"ஒரு-யோகியின்-சுயசரிதம்-1","title":"ஒரு யோகியின் சுயசரிதம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eபீட்டில்ஸ், ஸ்டீவ் ஜாப்ஸ், மற்றும் ரவி ஷங்கர் போன்றவர்களை ஊக்கமூட்டிய இந்த, ஒரு யோகியின் சுயசரிதம் மிகுந்த மகிழ்ச்சிக்குரிய ஆன்மீக வாசிப்பு. 1946இல் முதன் முதலாக வெளியிடப்பட்டதிலிருந்து உலகெங்கிலும் லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையை மாற்றி அமைத்து, வளப்படுத்தியுள்ளது. பரமஹம்ச யோகானந்தரின் வாழ்க்கைக் கதையை சொல்லும் ஒரு மூல உரையான இந்தப் புத்தகம், மறக்க முடியாத, தீவிரமான கற்பித்தல் போதனைகளுக்காக பெரிதும் மதிக்கப்படுகிறது. இந்த ஆன்மிக சுயசரிதை ‘இந்திய ஆன்மீகம் மற்றும் நம்ப முடியாத ஆன்மீக மாயங்களுக்கு’ உங்களை அழைத்துச் செல்லும் என்பதுடன் வாழ்க்கை மற்றும் இருப்பு ஆகியவை பற்றிய பணிவான இதமான உண்மைகளை எடுத்துரைக்கிறது. ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டிய அருமையான ஆன்மீகப் புத்தகம்...\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47764095434988,"sku":null,"price":234.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/ORUYOGIIN.jpg?v=1781868209"},{"product_id":"பேருவகை","title":"பேருவகை","description":"\u003cp\u003eகடந்த ஐம்பதாண்டுகளாகத் தமிழ் எழுத்துலகில் தீவிரமாக இயங்கி வரும் மாற்கு, நெடிய துறவற வாழ்வினைப் பேறாகப் பெற்றவர். தொடக்க காலம் முதல் இன்று வரையிலும் தலித் மக்கள், பெண்கள், உதிரித் தொழிலாளர்கள் என விளிம்பு நிலை மக்களின் உரிமைகளுக்காகப் பெரும் பங்காற்றி வருபவர்.\u003c\/p\u003e\n\u003cp\u003eசமூக வாழ்வின் பற்றுக்கோடாய் விளங்கும் மதங்களின் வலிமையை உணர்ந்தவரான மாற்கு, மதத்தைக் கடந்த மக்களுக்கான ஆன்மீகத்தைத் தேடும் தனது நீண்ட பயணத்தில் வெற்றி பெற்றுள்ளார் என்பதை அவரது இந்தத் தன்வரலாற்று நூல் உறுதி செய்துள்ளது. சாதியம், மேட்டிமை. பகட்டு, பெண் ஒடுக்குமுறை. ஆணவம் ஆகியவற்றிற்கு எதிராகத் தன் வாழ்நாள் நெடுகிலும் போராடி வந்த மாற்கு. தனது எளிய வாழ்வின் அனுபவங்களை இந்நூலில் வரைபடமாய் விரிக்கிறார்.\u003c\/p\u003e\n\u003cp\u003eஇயற்கையோடு இயைந்த ஆன்மீக வாழ்வே தனது பேருவகை என அறிவிக்கிறார்.\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47829028536556,"sku":null,"price":376.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/PERUVAGI.jpg?v=1782451841"},{"product_id":"வாழ்க்கை-மீதான-பேராவல்","title":"வாழ்க்கை மீதான பேராவல்","description":"\u003cp\u003e\u003cspan\u003eவான்கா வாழ்ந்தும் வரைந்தும் உண்டும் அருந்தியும் வாழ்ந்த ஒவ்வொரு நகரமும் கிராமமும் சிற்றுண்டிச் சாலைகளும் மதுபானக் கூடங்களும் அவன் நடந்த வயல்வெளிகளும் ஓக் மரக் காடுகளும் ஆலிவ் தோட்டங்களும் அவன் பார்த்த வானங்களும் ஆறுகளும் இப்படைப்புக்குள் நகர்ந்து செல்கின்றன.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47829727281388,"sku":null,"price":813.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/VAALKAPERAVSL.jpg?v=1782457859"},{"product_id":"பெஞ்சமின்-பிராங்க்ளின்","title":"பெஞ்சமின் பிராங்க்ளின்","description":"\u003cp\u003e\u003cspan\u003eசோப்பும் மெழுகுவர்த்தியும் உற்பத்தி செய்யும் சாதாரண வியாபாரிக்கு மகனாகப் பிறந்தார் ஃபிராங்க்ளின். இளம் வயது வாழ்க்கை அவர் விருப்பப்பட்டதுபோல அமையவில்லை. ஆனாலும், தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத அம்புலிமாமா விக்கிரமாதித்தன் அவர். விஞ்ஞானி, அரசியல் மேதை, அரசுத் தூதுவர், ஒரு மாகாணத்தின் அதிபர்... என பல பதவிகளில் இருந்தாலும் ஒரு சாதாரண பிரிண்டர் என்று தன்னை அழைத்துக்கொண்ட எளிமையான மனிதர்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47830249963756,"sku":null,"price":441.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/BENJAMIN.jpg?v=1782463931"},{"product_id":"மூன்றாம்-பிறை-1","title":"மூன்றாம் பிறை","description":"\u003cp\u003e\u003cspan\u003eதான் பார்த்த காட்சிகள், சந்தித்த மனிதர்கள்,  நிகழ்வுகள் என எல்லாவற்றையும் சம்பவங்கள் என்று ஒதுக்கித் தள்ளாமல்  அவற்றின் மீதான சமூகப்பார்வையை மம்முட்டி இந்தப் புத்தகத்தில் பதிவு செய்கிறார் அதில் தத்துவார்ததமான  பரிமாணங்களை நாம் தரிசிக்க முடிகிறது. தமிழில் நேரடியாக எழுதப்பட்டதற்கான அனைத்து சாத்தியங்களையும் உள்ளடக்கிய இப்பிரதியை ஷைலஜா தன் மொழிபெயர்ப்பின் மூலம் உருவாக்கியிருக்கிறார். \u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47841979924716,"sku":null,"price":141.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/MOORAMPIRA.jpg?v=1782729046"},{"product_id":"வைக்கம்-முகம்மது-பஷீர்-எனும்-பேப்பூர்-சுல்தான்","title":"வைக்கம் முகம்மது பஷீர் எனும் பேப்பூர் சுல்தான்","description":"\u003cp\u003e\u003cspan\u003e'போடா, உன் பொண்டாட்டிக்கு வரதட்சணையா வந்ததாடா இந்த மலையாள மொழி? எனக்கு என்ன இஷ்டமோ அதைத்தான் எழுதுவேன். எனக்குத் தெரிஞ்ச எழுத்துக்களைதான் நான் எழுதுவேண்டா. உன்னோட ஏட்டு எலக்கணத்த நீயே வச்சுக்கடா-என்று தன் தம்பி (மலையாள மொழிப் புலவர்) யிடம் கோபிக்கும் பஷீரின் மூடி மறைக்கப்படாத வாழ்க்கை வரலாறு இந்நூல். அவருடைய கதைகளைப் போலவே எளிமையும் சுவாரசியமும் கொண்டிருப்பது இதன் சிறப்பு.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47874432663788,"sku":null,"price":188.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/VAIKAMMUHAMADH.jpg?v=1782985452"},{"product_id":"காலம்-வணங்கும்-கல்வி-வள்ளல்-காமராஜர்","title":"காலம் வணங்கும் கல்வி வள்ளல் காமராஜர்","description":"\u003cp\u003e\u003cspan\u003eதிட்டம் மக்கள் திட்டமாக இருக்க வேண்டும். அத்துடன் மக்கள் ஒத்துழைப்பு வேண்டும். மக்கள் ஒத்துழைப்பு இல்லாமல் எந்த திட்டமும் வெற்றி பெற முடியாது!\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47902576345324,"sku":null,"price":344.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/KALAMVANANGUMKAMARAJAR.jpg?v=1783499906"},{"product_id":"சத்திய-சோதனை","title":"சத்திய சோதனை","description":"\u003cp\u003e\u003cstrong\u003e\u003cspan\u003eசத்திய சோதனை\u003c\/span\u003e\u003c\/strong\u003e\u003cspan\u003e என்பது மகாத்மா காந்தியின் சுயசரிதையாகும். தனது வாழ்க்கைப் பயணத்தில் நிகழ்ந்த அனுபவங்கள், உண்மையைப் பின்பற்றிய விதம், அறநெறி, அகிம்சை, எளிமை மற்றும் சுயஒழுக்கம் ஆகியவற்றை நேர்மையாகப் பதிவு செய்துள்ள அரிய நூல் இது. வாழ்க்கைக்கு வழிகாட்டும் சிந்தனைகளையும், மனிதநேயப் பண்புகளையும் எடுத்துரைக்கும் இந்நூல், அனைத்து வயதினரும் படிக்க வேண்டிய சிறந்த வாழ்க்கை வரலாற்று நூலாகும்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47936546406636,"sku":null,"price":141.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/a0456d83859b8f14964df244d22febbd.jpg?v=1783935433"},{"product_id":"என்-கதை-1","title":"என் கதை","description":"\u003cp\u003e\u003cstrong class=\"Yjhzub\" data-sfc-root=\"ep\" data-sfc-cb=\"\" data-copy-service-computed-style='font-family: \"Google Sans\", Arial, sans-serif; font-size: 16px; font-weight: 700; margin: 0px; text-decoration: none; border-bottom: 0px rgb(10, 10, 10);'\u003e\u003cspan class=\"T286Pc\" data-sfc-cp=\"\" data-sfc-root=\"ep\" data-sfc-cb=\"\" data-copy-service-computed-style='font-family: \"Google Sans\", Arial, sans-serif; font-size: 16px; font-weight: 700; margin: 0px; text-decoration: none; border-bottom: 0px rgb(10, 10, 10);'\u003e\u003cspan data-sfc-cp=\"\" data-sfc-root=\"ep\" data-sfc-cb=\"\" data-copy-service-computed-style='font-family: \"Google Sans\", Arial, sans-serif; font-size: 16px; font-weight: 700; margin: 0px; text-decoration: none; border-bottom: 0px rgb(10, 10, 10);'\u003e\u003cspan data-sfc-cp=\"\" data-sfc-root=\"c\" data-sfc-cb=\"\" data-copy-service-computed-style='font-family: \"Google Sans\", Arial, sans-serif; font-size: 16px; font-weight: 700; margin: 0px; text-decoration: none; border-bottom: 0px rgb(10, 10, 10);'\u003e\u003cspan class=\"\" data-sfc-cp=\"\" data-sfc-root=\"c\" data-sfc-cb=\"\" data-ved=\"2ahUKEwiulsXGytGVAxUyd2wGHb8HFWYQ0fERegoIAggACAAIAxAB\" data-copy-service-computed-style='font-family: \"Google Sans\", Arial, sans-serif; font-size: 16px; font-weight: 700; margin: 0px; text-decoration: none; border-bottom: 0px rgb(10, 10, 10);'\u003eஎன் கதை\u003c!--TgQPHd||[]--\u003e\u003c!--TgQPHd||[false,\u0026quot;\u0026quot;,false]--\u003e\u003c\/span\u003e\u003c!--TgQPHd||[]--\u003e\u003c\/span\u003e\u003c!--TgQPHd||[]--\u003e\u003c\/span\u003e'\u003c!--TgQPHd||[]--\u003e\u003c\/span\u003e\u003c!--TgQPHd||[]--\u003e\u003c\/strong\u003e (En Kadhai) என்பது கவிஞர் \u003cstrong class=\"Yjhzub\" data-sfc-root=\"ep\" data-sfc-cb=\"\" data-copy-service-computed-style='font-family: \"Google Sans\", Arial, sans-serif; font-size: 16px; font-weight: 700; margin: 0px; text-decoration: none; border-bottom: 0px rgb(10, 10, 10);'\u003eநாமக்கல் வெ. இராமலிங்கம் பிள்ளை\u003c!--TgQPHd||[]--\u003e\u003c\/strong\u003e எழுதிய புகழ்பெற்ற தன்வரலாற்று நூலாகும். இந்நூல் \u003cstrong class=\"Yjhzub\" data-sfc-root=\"ep\" data-sfc-cb=\"\" data-copy-service-computed-style='font-family: \"Google Sans\", Arial, sans-serif; font-size: 16px; font-weight: 700; margin: 0px; text-decoration: none; border-bottom: 0px rgb(10, 10, 10);'\u003eஅருணா பப்ளிகேஷன்ஸ் (Aruna Publications)\u003c!--TgQPHd||[]--\u003e\u003c\/strong\u003e மூலம் வெளியிடப்பட்டுள்ளது.\u003cspan\u003e \u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47942521651436,"sku":null,"price":282.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/enkathai.jpg?v=1784012074"},{"product_id":"மொழி","title":"மொழி","description":"\u003cp\u003e\u003cspan\u003eஎன் வாழ்வில் பாதியை ஒரு பேரரசனாகவும், மீதியை பிச்சைக்காரனாகவும் வாழ்ந்திருக்கிறேன். எப்படிப் பார்த்தாலும் கடந்த காலம் ஒரு துன்பக்கேணிதான். எதிர்காலமோ அச்சத்தையும் பீதியையும் மட்டுமே தரக் கூடியது. ஆதலினால், எப்போதும் இந்தக் கணத்திலேயே வாழும் வகையைக் கற்றுக் கொண்டேன். ஆனால் மொழி என்ற இந்த நூல் என் சுயசரிதம். இதை செப்பனிடும் பொருட்டு, கடந்த காலத்தின் சாளரத்தைத் திறக்க வேண்டியதாயிற்று. பெரும் கொண்டாட்டத்தையும், சொல்லவொண்ணா வாதையையும் ஒருங்கே அனுபவம் கொண்டேன். இந்த இடத்தில் பாப்லோ நெரூதாவின் Ode to the Present என்ற கவிதை ஞாபகம் வருகிறது. அதன் முக்கியமான பகுதி இது:\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":48056818041068,"sku":null,"price":423.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/b8dc1bac40da376e10e0cc92157af80c.jpg?v=1785564057"},{"product_id":"நமனை-அஞ்சோம்","title":"நமனை அஞ்சோம்","description":"\u003cp\u003eதமிழின் ஆதி கவிகளான சித்தர்கள் பிண்டத்தை (human body) அண்டத்திலும் (cosmos) அண்டத்தைப் பிண்டத்திலும் கண்டவர்கள். இந்தப் பேரண்டத்தையே தானாகவும் (self) தன்னையே பேரண்டமாகவும் காணும் நிலை அது. அப்படிக் கண்ட கவிஞன் இந்தப் பேரண்டத்தின் முன்னே நின்றபடி அதனோடு உரையாடிக் கொண்டிருக்கிறான். நட்சத்திரக் கூட்டங்களை நீண்ட நேரம் பார்த்துக் கொண்டிருக்கும் போது – ஆழ்கடலில் ஒரு கட்டுமரத்தில் சென்று கொண்டிருக்கும் போது – கண்களை மூடி வனத்தின் இசையைக் கேட்டுக் கொண்டிருக்கும் போது அல்லது ஒரு மெத்ரோ ரயிலில் பயணித்துக் கொண்டிருக்கும் போது எப்போது வேண்டுமானாலும் அந்த உரையாடல் நிகழலாம்.\u003c\/p\u003e\n\u003cp\u003eஅந்த உரையாடல் மனித சமூகத்தின் கலாச்சார, வரலாற்று ஞாபகங்களைத் தன் சுவாசமாகக் கொண்டிருக்கும் மொழி என்ற தளத்தில் நிகழ்வதால் கவிஞனுக்கும் மற்ற மனிதனுக்குமான உறவு ஏற்படுகிறது. இருந்தாலும் கவிஞன், தான் கையாளும் மொழியைப் படிமங்களாகிய அணுத்துகள்களாக மாற்றி விடுவதால் அந்த ரஸவாதம் (alchemy) அறியாத மனிதன் கவிஞனிடமிருந்து விலகிப் போகிறான்.\u003c\/p\u003e\n\u003cp\u003eஅப்படியின்றி கவிஞனின் உரையாடலைக் கேட்க நேரும் மனிதன் பாக்கியவான். அவன் கவிஞனைப் போலவே அண்டத்திலொரு பிண்டமாகத் தன்னை உணரத் துவங்குகிறான். அப்படி உணர்பவனால் ஆஷ்விட்ஸ்களை உருவாக்க முடியாது. அவன் இந்தப் பிரபஞ்சத்தின் ஒவ்வொரு துகளோடும் தன்னையே காண்பான்.\u003cbr\u003e\u003cbr\u003eநூலிலிருந்து...\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":48056820400364,"sku":null,"price":338.4,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/032485eed439f24d3d7502f975a37fd3.jpg?v=1785564311"}],"url":"https:\/\/centaram.com\/collections\/poetry.oembed","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}