{"title":"பெருமாள்முருகன்","description":"","products":[{"product_id":"மாதொருபாகன்","title":"மாதொருபாகன்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஇந்த நாவலைப் படிக்கத் தொடங்கியதும் முழுமூச்சாகப் படித்துவிட்டே கீழே வைக்க வேண்டும் என்னும் வகையில்தான் இருந்தது. அதுவும் நம் கவனம் முழுவதையும் ஈர்த்துக்கொள்ளும் வகையில் இருந்தது. இந்தக் கதையைப் படித்த பிறகு மனதில் தோன்றியது என்ன? குறைந்தபட்சம் எங்களைப் பொருத்தவரையில் தங்களுக்குள் அமைதியடைந்தவர்கள் என்றாலும் குழந்தை இல்லாதவர்கள் என்னும் தகுதியைச் சமூகம் தொடர்ந்து அவர்களுக்கு நினைவூட்டிக்கொண்டேயிருக்கும் ஒரு கணவன் மனைவியின் நெஞ்சை உருக்கும் கதை அது இந்த நாவலை முழுமையாக உள்வாங்க வேண்டுமெனில் மேலட்டையிலிருந்து பின்னட்டை வரை முழுமையாகப் படிப்பதன் மூலமே அது இயலும். இந்த நாவல் உங்களை உலுக்கியெடுக்கும்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47603214418156,"sku":null,"price":231.25,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/685bd9948806100538eae419aebb8c59.jpg?v=1778057443"},{"product_id":"பூக்குழி","title":"பூக்குழி","description":"\u003cp\u003e\u003cspan\u003eகொங்கு வட்டாரப் பின்புலத்தில் கதைகளை நிகழ்த்திக் காட்டும் பெருமாள்முருகன், ‘பூக்குழி' நாவலில் சாதிய முரண் குறித்த உரையாடலை முன்வைக்கிகிறார். இந்நாவலை அவர் சாதி மீறித் திருமணம் செய்து ‘பலி'யான தருமபுரி இளவரசனுக்குச் சமர்ப்பித்துள்ளார். இந்த நாவலைப் படிக்கும் யாருக்கும் தலித், தலித்தல்லாதோர் என்கிற பின்புலத்தில் கதை எழுதப்பட்டிருக்கலாம் என்று எண்ணவே வாய்ப்பிருக்கிறது. ஆனால் கதை சாதியின் முரண்களைப் புரிந்துகொள்வதற்கான முயற்சி பற்றியதாக உள்ளது. புராணங்கள், இதிகாசங்கள், மநு போன்ற புத்தகங்களிலிருந்து சாதி உருவாகி இருக்கிறதென்று சொல்லி, தங்களுக்கும் சாதிக்கும் எத்தகைய தொடர்பும் இல்லை என்று இடைநிலைச் சாதிகள் தங்களை நியாயப்படுத்திக்கொள்ள முனையக்கூடும். இந்நாவல் சாதிப் பிரச்சினைகளுக்கு ஆதிக்கச் சாதிகளும் பொறுப்பேற்க வேண்டும் என்கிறது. இடைநிலைச் சாதிகளின் சாதி மனோபாவத்தை இப்பிரதி வெளிச்சமிடுகிறது. சுய விமர்சனத்திலிருந்தே மாற்றங்கள் உருவாகும். அப்படியான விமர்சனத்தை இந்நாவல் வைக்கிறது. மௌனமாய் இருக்கும் குளத்தில் பெருமாள்முருகனால் எறியப்பட்ட கல்லுக்கு, சலனத்தை உண்டாக்கும் ஆற்றல் இருப்பதாகச் சொல்ல முடிகிறது.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003e                                                 \u003c\/span\u003e\u003cspan\u003e                                                                                                                                                     \u003c\/span\u003e\u003cspan lang=\"EN-IN\"\u003eசந்துரு மாயவன்\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47603256590572,"sku":null,"price":185.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/5c89d1ef0d8190c47b3cc7eb1b523722.jpg?v=1778058570"},{"product_id":"ஆலவாயன்","title":"ஆலவாயன்","description":"\u003cp\u003e\u003cspan\u003e‘மாதொருபாகன்’ நாவலின் இரு வெவ்வேறு கோணங்களை விரித்து ‘அர்த்தநாரி’, ‘ஆலவாயன்’ ஆகிய நாவல்களாக உருவாக்கியுள்ளார் பெருமாள்முருகன். இவை ஒரு நாவலின் அடுத்தடுத்த பாகங்கள் அல்ல. தம்மளவில் முழுமை பெற்றுத் தனித்தியங்குபவை. இரண்டும் ஒரே புள்ளியில் தொடங்கினாலும் வெவ்வேறு திசைகளில் பயணம் செய்யும் சாத்தியப்பாடுகளைக் கொண்டுள்ளன. ஆண்களைச் சார்ந்தும் சாராமலும் உருக்கொள்ளும் பெண் உலகின் விரிவையும் அதற்குள் இயங்கும் மன உணர்வுகளையும் காணும் நோக்கு நாவல் ‘ஆலவாயன்.’ உறவுகள் சார்ந்த கேள்விகள் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஓயாமல் எழுவதையும் அதைக் கடக்க மனிதர்கள் படும் பாடுகளையும் காட்சிச் சித்திரமாக்கியுள்ளது இந்நாவல்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47603279790316,"sku":null,"price":231.25,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/44f2bf2c00aeb01a5142902d1fdf6435.jpg?v=1778059367"},{"product_id":"சந்தைக்கடை","title":"சந்தைக்கடை","description":"\u003cp class=\"MsoNormal\"\u003e\u003cspan\u003e-\u003c\/span\u003e\u003cspan\u003eஅளவான உரையாடல் பகுதிகளையும் விரிவான விவரணைப் போக்கையும் தன் பலமாகக் கொண்டுள்ள கதைகள் இவை. எல்லாக் கதைகளிலும் விசாரணை தொனி மையமென இழையோடு கிறது. கதைசொல்லிகள் உணர்ச்சி யின் பிடியில் இருக்கும்போதும் தர்க்கத்துடன் சூழலை அணுகி விடை காண்பவர்களாக உள்ளனர். மரபின் பிடியிலிருந்து விலகச் சாதுர்யத்தைக் கைக்கொள்கின்றனர். ஏகமெனக் காட்சியாகி மலர்கின்ற இச்சிறுகதைகள், காலமாற்றத்தின் பல்வேறு அலகுகளைத் தன்னகத்தே கொண்டுள்ளன. \u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp class=\"MsoNormal\"\u003e\u003cspan lang=\"EN-IN\"\u003eபுதிய காலம் வழங்கியிருக்கும் பொருளாதார விடுதலைக்குப் பின்னும்கூடத் தனிமனிதனை விடாமல் பற்றியிழுக்கும் சமூகத் தளைகள் அறுபட்டு விழும் இடத்தில் பல கதைகள் முடிவதுபோல் தொடங்குகின்றன.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp class=\"MsoNormal\"\u003e\u003cspan lang=\"EN-IN\"\u003eஎளிய பொருள் பொதிந்த மொழியாட்சியின் மூலம் சிறுபுள்ளியிலிருந்து படரவிருக்கும் பெருவெடிப்பின் தருணங்களைத் தொட்டுவிட்டு அமைதியாய்க் கடந்து செல்கிறார் பெருமாள்முருகன்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47603700990188,"sku":null,"price":203.5,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/e3d02bb34ab441362b358c14bc0c80b0.jpg?v=1778063816"},{"product_id":"பூனாச்சி-அல்லது-ஒரு-வெள்ளாட்டின்-கதை","title":"பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை","description":"\u003cp\u003e\u003cspan\u003eதலைப்பு உணர்த்துவதுபோலவே இந்த நாவல் ஒரு வெள்ளாட்டின் வாழ்வைக் கூறுகிறது. ஆடுகளின் பிரச்சினைகளையும் சிக்கல்களையும் சொல்கிறது. ஆடுகளின் மேல் மனித குணங்களை ஏற்றும் ஆசிரியர் ஆடுகளின் வாழ்வினூடே மனித வாழ்வைப் பேசுவதாகவும் இந்த நாவலை வாசிக்கலாம். பெருமாள்முருகன் தான் வாழும் சமூகத்தையும் அதிலுள்ள மனிதர்களையும் மட்டுமின்றி ஆடுகளைப் பற்றியும் நன்கு அறிந்தவர் என்பதால் இதில் ஆடுகளின் வாழ்வும் மானுட இயல்புகளும் அற்புதமாகத் துலங்குகின்றன. ஆடுகளின் கதையாக வாசிக்கையில் சுவையாகவும் நுட்பமான கூறுகள் நிறைந்ததாகவும் விளங்கும் இந்த நாவல் குறியீட்டுத் தளத்தில் முற்றிலும் வேறொரு வடிவம் எடுத்து வியக்கவைக்கிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47605597864172,"sku":null,"price":166.5,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/56f017eebeb02aaab85337e821f54aa5.jpg?v=1778134194"},{"product_id":"அர்த்தநாரி","title":"அர்த்தநாரி","description":"\u003cp\u003e\u003cspan\u003eமாதொருபாகன்’ நாவலின் இரு வெவ்வேறு கோணங்களை விரித்து ‘அர்த்தநாரி’, ‘ஆலவாயன்’ ஆகிய நாவல்களாக உருவாக்கியுள்ளார் பெருமாள்முருகன். இவை ஒரு நாவலின் அடுத்தடுத்த பாகங்கள் அல்ல. தம்மளவில் முழுமை பெற்றுத் தனித்தியங்குபவை. இரண்டும் ஒரே புள்ளியில் தொடங்கினாலும் வெவ்வேறு திசைகளில் பயணம் செய்யும் சாத்தியப்பாடுகளைக் கொண்டுள்ளன. பெண் மீது ஆண் கொள்ளும் உடைமை உணர்வின் காரணமாக ஏற்படும் உறவுச் சிக்கல்களைப் பேசுகிறது ‘அர்த்தநாரி.’ அதனால் உருவாகும் விழுமியங்களும் மனித மனங்களை அலைக்கழிக்கும் விதத்தை நாவல் பற்றிச் செல்கிறது\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47605716910316,"sku":null,"price":222.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/5c0f472dd54ac8ae0501fad2a13b6162.jpg?v=1778139960"},{"product_id":"போண்டு","title":"போண்டு","description":"\u003cp\u003e\u003cspan\u003eமனித வாழ்வில் வளர்ப்பு விலங்குகள் பெறும் இடத்தை மையமாகக் கொண்ட சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல். இவ்வகையில் தொடர்ந்து கதைகள் எழுதி வருகிறார் பெருமாள்முருகன். கடந்த ஆண்டு வந்த ‘வேல்!’ தொகுப்பைத் தொடர்ந்து இது வெளியாகிறது. நாய், பூனை ஆகியவற்றை வீட்டில் வைத்து வளர்க்கும் சூழலில் அவற்றின் மூலமாக வெளிப்படும் சாதி, பாலின வேறுபாடுகளையும் உடைமை உணர்வையும் இக்கதைகள் நுட்பமாகக் காட்டுகின்றன. பல கதைகள் சம்பவ வலுப் பெற்றவை. மனிதருக்கு விலங்குக் குணம் ஏறுகிறது; விலங்குகளுக்கு மனிதக் குணம் ஏறுகிறது. இந்தப் பரிமாற்றக் களங்களை இக்கதைகள் நம்பகத்தன்மையுடன் சித்திரித்துள்ளன. சுதந்திரமான சொல்முறையும் நிதானமான விவரணையும் கொண்டு நெஞ்சை நெகிழ்த்தும் மொழியில் எழுதப்பட்டுள்ள கதைகள் இவை. \u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47648912900332,"sku":null,"price":206.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/8019afc1a38195d540e7f75772cdf35b.jpg?v=1779275592"},{"product_id":"ஆளண்டாப்-பட்சி","title":"ஆளண்டாப் பட்சி","description":"\u003cp\u003e\u003cspan\u003eபெருமாள்முருகனின் ஆறாவது நாவல் இது. சக மனிதரோடு சேர்ந்து வாழ்வதுதான் இன்றைய காலத்தின் பெரும்சவால். மனித உறவுகள் எத்தருணத்திலும் முறுக்கிக் கொள்ளலாம்; பிணையவும் செய்யலாம். அதற்குப் பெரும்காரணங்கள் தேவையில்லை, அற்பமான ஒன்றே போதுமானது. கூட்டுக்குடும்பப் பிணைப்பிலிருந்து உறவுகளின் நிர்ப்பந்தத்தால் விடுபட்டுப் புலம்பெயர்ந்து வேற்றிடத்தில் நிலைகொள்ளும் உழவுக் குடும்பம் ஒன்றின் போராட்டமே இந்நாவல். மனிதர்களை அண்ட விடாத அதேசமயம் நல்லவர்களுக்கு உதவும் பண்பும் கொண்ட பிரம்மாண்டமான பறவையாகக் கொங்கு நாட்டுப்புறக் கதைகளில் வரும் ஆளண்டாப் பட்சியின் இயல்புகள் இந்நாவல் மாந்தர்கள் பலருக்கும் பொருந்திப் போகின்றன.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47651210166508,"sku":null,"price":282.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/e14c4e2c6ddba7be340f293700675a87.jpg?v=1779343197"},{"product_id":"பாதி-மலையேறுன-பாதகரு","title":"பாதி மலையேறுன பாதகரு","description":"\u003cp class=\"MsoNormal\"\u003e\u003cspan\u003e-\u003c\/span\u003e\u003cspan\u003eபடைப்பு உருவான கதையை அறிந்துகொள்ள வாசகர்கள் பெரிதும் விரும்புகிறார்கள். படைப்பின் இரகசியத்தை அறிந்து கொள்வதில் அனைவருக்குமே ஆசை இருக்கிறது. படைப்பின் இரகசியம் தனக்கே தெரியாதபோது அதை எப்படிச் சொல்வது என்றே பெரும்பாலான படைப்பாளிகள் நினைக்கக்கூடும். என்றாலும் படைப்பு உருவாக்கம் பற்றிக் கேள்விகள் வரும்போது படைப்பாளிகள் அதற்கு விடையளிக்கத்தான் செய்கிறார்கள். அந்த விடைகளில் புதிய பார்வைகள் பிறக்கின்றன.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp class=\"MsoNormal\"\u003e\u003cspan lang=\"EN-IN\"\u003eசமகாலத் தமிழிலக்கியத்தின் மிக முக்கியமான படைப்பாளிகளில் ஒருவரான பெருமாள்முருகன் அத்தகைய கேள்விகளை எதிர்கொண்டதன் விளைவுதான் இந்த நூலில் உள்ள கட்டுரைகள்.\u003cspan\u003e \u003c\/span\u003e\u003c\/span\u003e\u003cspan\u003e“\u003cspan lang=\"EN-IN\"\u003eபுனைவில் காணும் வாழ்வு தரும் போதை போதுவதில்லை. அதை யதார்த்தத்தில் பொருத்திப் பார்த்தால் கொஞ்சம் நிறைவு ஏற்படும்போல\u003c\/span\u003e\u003c\/span\u003e\u003cspan\u003e” \u003c\/span\u003e\u003cspan lang=\"EN-IN\"\u003eஎன்று சொல்லும் பெருமாள்முருகனின் இந்தக் கட்டுரைகள் படைப்பின் இரகசிய வாசல்களைத் திறந்து காட்டுவதுடன் நிறைவான வாசிப்பனுபவத்தையும் அளிக்கின்றன.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47651688808684,"sku":null,"price":225.6,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/f501a2251f48cde2308d5e006cae79d1.jpg?v=1779348113"},{"product_id":"கெட்ட-வார்த்தை-பேசுவோம்-1","title":"கெட்ட வார்த்தை பேசுவோம்","description":"\u003cp class=\"MsoNormal\"\u003e\u003cspan\u003e-சமூக, பண்பாட்டு, மொழி, வரலாற்று ஆய்வுக்கு மனிதச் செயல்பாடுகளின் எந்தப் பகுதியும் விலக்காக இருக்க முடியாது. மனித வாசனை மூக்கை எட்டியதும் இரை கிட்டியதென மகிழும் தேவதைக் கதை அரக்கனைப் பற்றிப் பிரெஞ்சு வரலாற்றாசிரியர் மார்க் பிளாக் குறிப்பிடுவார். சமூகவியல் ஆய்வாளர்களும் அப்படித்தான் இருக்க வேண்டும். மனித வாழ்க்கை தொடர்புடைய எதுவாயினும் அது ஆய்வுத் தேட்டத்தைக் கிளர்த்த வேண்டும். கெட்ட வார்த்தைகளிலிருந்து வீசுவதோ மனிதத் துர்வாடை. ‘கெட்ட வார்த்தை பேசுவோம்' இதைக் கவனப்படுத்திக் கெட்ட வார்த்தைகள் பற்றிய ஆய்வுக்குக் கதவு திறந்திருக்கிறது. பெருமாள்முருகனை நினைத்துப் பெருமை கொள்ளப் பல காரணங்கள் உண்டு. இந்த நூலும் அதில் சேர்த்தி.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp class=\"MsoNormal\"\u003e\u003cspan\u003e                                                                                                ஆ. இரா. வேங்கடாசலபதி\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47711641698540,"sku":null,"price":141.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/724a9bac9d59624f692ca88f93c75f93.jpg?v=1780726348"},{"product_id":"கூளமாதாரி-1","title":"கூளமாதாரி","description":"\u003cp\u003e\u003cspan\u003eபண்ணையில் வேலை செய்யும் தலித் சிறுவர்களின் வாழ்வை அவர்களின் பார்வையின் வழியாகவே சித்தரிக்கும் நாவல் 'கூளமாதாரி'. பதின்பருவத்தை நெருங்கும் அந்தச் சிறுவர்களின் அக, புற உலகை இந்த நாவல் உயிர்த்துடிப்புடன் விவரிக்கிறது.\u003cbr\u003eவறுமையின் பிடியில் இருக்கும் அவர்கள் அதிகாரம், சுயநலம், தீண்டாமை முதலியவற்றால் பாதிக்கப்படும் விதத்தைக் காட்டும் இந்த நாவல், அந்தச் சிறுவர்களின் அன்பு, காதல், காமம் ஆகியவற்றையும் நெருக்கமாக அணுகிப் பார்க்கிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003e \u003cbr\u003eசிறுவர்களின் வாழ்க்கையோடு அவர்கள் வாழும் நிலமும் அதன் பல்வேறு பருவங்களும் காட்சிப்படுத்தப்படுகின்றன. இயற்கையும் நாவலின் பாத்திரங்களில் ஒன்றாக உள்ளது. மனிதருக்கும் ஆடுகளுக்குமான உறவுவையும் இந்த நாவல் பேசுகிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003e\u003cbr\u003eசிறுவர்களின் வாழ்வையும் அதைப் பாதிக்கும் காரணிகளையும் சமூக அரசியல் யதார்த்தங்களின் பின்னணியோடு இந்த நாவல் அணுகுகிறது. விளிம்பு நிலைப்பட்ட வாழ்வின் பதிவு 25 ஆண்டுகள் கடந்த பின்பு புதிய அர்த்தங்களுடன் துலங்குகிறது. காலத்தின் போக்கில் வலுக்கூடிய இந்த நாவல் செவ்வியல் தன்மை பெற்று ஒளிர்கிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47711684264172,"sku":null,"price":258.5,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/8c4ccd4218dd11e389d9bf4c8fb40611.jpg?v=1780728943"},{"product_id":"நிழல்முற்றம்","title":"நிழல்முற்றம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eகளம் சார்ந்த கதைகள் தமிழுக்குப் புதிதல்ல. திரைப்படங்களைக் காண்பதற்கான ஒரே \u003c\/span\u003e\u003cspan\u003eவழிமுறையாகத் திரையரங்கங்கள் இருந்த காலத்துத் திரையரங்க வளாகம் ஒன்றைச் \u003c\/span\u003e\u003cspan\u003eசுற்றி எழுப்பப்பட்டுள்ள ‘நிழல் முற்றம்; என்னும் நாவலின் களம் தமிழ்ப் புனைவுலகிற்குப் \u003c\/span\u003e\u003cspan\u003eபுதியது. எழுதி 25 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் மங்காமல் ஒளிவீசும் புதுமை இது. \u003c\/span\u003e\u003cspan\u003eசிறு நகரம் ஒன்றின் திரையரங்க வளாகத்தில் புழங்கும் மனிதர்களும் அங்கு நிகழும் \u003c\/span\u003e\u003cspan\u003eவாழ்வின் சலனங்களும் ஒரு காலகட்டத்தையும் குறிப்பிட்ட இடத்தையும் சார்ந்த தமிழ் \u003c\/span\u003e\u003cspan\u003eவாழ்க்கையின் குறுவடிவமாகவே தோற்றம் கொள்கின்றனர். \u003c\/span\u003e\u003cspan\u003eமாய நிழல்கள் அசையும் திரையைச் சுற்றிலும் இயங்கும் யதார்த்த வாழ்வு ஓராயிரம் \u003c\/span\u003e\u003cspan\u003eதிரைப்படங்களுக்கான கருக்களைச் சுமந்திருப்பதை இந்தச் சிறு நாவல் காட்டுகிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003e\u003cspan\u003eபெருமாள்முருகன்\u003c\/span\u003e\u003c\/strong\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47718141034732,"sku":null,"price":117.5,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/0f4d17d0cc8a90979e65d1e97d8aa77c.jpg?v=1780916442"}],"url":"https:\/\/centaram.com\/collections\/perumalmurugan.oembed","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}