{"title":"ப. சிங்காரம்","description":"","products":[{"product_id":"புயலிலே-ஒரு-தோணி","title":"புயலிலே ஒரு தோணி","description":"\u003cp\u003e\u003cspan\u003eப. சிங்காரத்தின் ‘புயலிலே ஒரு தோணி’ நாவல் நவீன தமிழ் இலக்கிய வரலாற்றில் இரண்டு நிலையில் ன்னோடித்தன்மைகள் கொண்டது. ஓர் இலக்கிய ஆளுமையாக ஒருபோதும் தன்னை காட்டிக்கொண்டிராத ஒருவர் எழுதிய முன் உதாரணம் இல்லாத படைப்பு இந்த நாவல். வெளிவந்து பல ஆண்டுகள் வாசகர் கவனத்திற்கு வராமல் இருந்தும் இன்று தமிழ் செவ்வியல் படைப்புகளில் ஒன்றாக கருதப்படுகிறது. காரணம் அதன் படைப்பு வலு. ஒரு படைப்பு தனது கலைத் திட்பத்தின் மூலமே தன்னை முன்னிறுத்திக்கொள்ளும் என்பதற்கு இது எடுத்துக்காட்டு. இது இலக்கியம் சார்ந்த முக்கியத்துவம். வரலாற்று அடிப்படையிலும் ‘புயலிலே ஒரு தோணி’ தனி இடத்தைப் பெறுகிறது. இரண்டாம் உலகப் போரின் பின்னணியையும் போர்க்கள அனுபவங்களையும் துல்லியமாகவும் நம்பகமாகவும் சித்தரித்த நாவல் இது மட்டுமே. புதிய களத்தையும் காணாத காலத்தையும் அறியாத மனிதர்களையும் தமிழ் வாசகனுக்கு நெருக்கமாக்கியதில் அபார வெற்றி பெற்ற படைப்பு ‘புயலிலே ஒரு தோணி’. ஹார்வர்டு பல்கலைக்கழக வரலாற்றுத் துறை பேராசிரியர், வங்கக் கடற்கரைக் குடியேற்றங்களை ஆராய்ந்து வரும் சுனில் அம்ரித்தின் முன்னுரையுடன் கூடிய பதிப்பு இது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47652405281004,"sku":null,"price":329.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/531bd6b13ab8b2d2a51d33466ea403fe.jpg?v=1779360649"},{"product_id":"கடலுக்கு-அப்பால்","title":"கடலுக்கு அப்பால்","description":"\u003cp\u003e\u003cspan\u003eநவீன தமிழ்ப் புனைகதைகளில் கவனம் பெறாமல் போய்க் கைக்குத் திரும்பிய பொக்கிஷம் ப. சிங்காரத்தின் ‘கடலுக்கு அப்பால்’. முதல் நாவலாக எழுதப்பட்டும் இரண்டாம் நாவலாகக் கருதப்பட்டும் அவலமும் இதற்கு நேர்ந்திருக்கிறது. கைப் பிரதியாக நீண்டகாலம் கிடப்பில் இருந்த இந்நாவல் 1959ஆம் ஆண்டு ‘கலைமகள்’ நாவல் போட்டியில் பரிசு பெற்றதோடு இலக்கிய உலகின் பார்வைக்கு வந்தது. எனினும் குறுகிய வட்டத்துக்குள்ளேயே முடங்கியது. புதிய வாசிப்பு ஆர்வத்தின் விளைவாக பரவலான கவனிப்புக்கும் ஏற்புக்கும் இன்று இலக்காகியிருக்கிறது. காலம் கனிந்து திருப்பியளித்த கொடை இந்தச் செம்படைப்பு. கடல் கடந்த களத்தில் நிகழ்ந்த வாழ்வை வலுவுடனும் தெளிவுடனும் சித்தரிக்கும் ‘கடலுக்கு அப்பால்’ நாவலைத் தமிழில் புலம்பெயர் புனைவெழுத்தின் முன்மாதிரிகளில் ஒன்றாகச் சொல்லலாம்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47655159267564,"sku":null,"price":211.5,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/2e959b2eafadcddec1dbf8cac7f25651.jpg?v=1779441518"},{"product_id":"கடலுக்கு-அப்பால்-1","title":"கடலுக்கு அப்பால்","description":"\u003cp\u003eகடலுக்கு அப்பால் கதை 1956ல் எழுதி முடிக்கப்பட்டது. அது முதல் இதைப் படித்துப் பார்த்த பிரசுரகர்த்தர்கள், பத்திரிகை ஆசிரியர்கள், கதை எழுத்தாளர்கள் பலப்பலர். ஆயினும் நாராயணசாமி ஐயர் நாவல் போட்டியில் பரிசு பெறும்வரை இதற்கு அச்சேறும் வாய்ப்புக் கிட்டவில்லை.\u003c\/p\u003e\n\u003cp\u003eகுறிப்பிட்டதொரு காலவரையறையை மனத்திற்கொண்டு அவசர அவசரமாக எழுதியதாலும், பிற்பாடு தேவையெனக் கருதிய திருத்தங்களைச் செய்வதற்குப் போதிய அளவில் தொடர்ச்சியாக ஓய்வு கிடைக்காததாலும் விரும்பும் அளவுக்கு நிறைவாய்க் கதை அமையவில்லை என்று இப்போது என் மனத்தில் படுகிறது. இது இயல்பே.\u003c\/p\u003e\n\u003cp\u003eஇரண்டாவது உலப்போர்க் காலத்தில் நிகழ்வதாக உள்ள கற்பனைப் படைப்பு கடலுக்கு அப்பால் கதை என்பதை வாசகர்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்...\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47830256320748,"sku":null,"price":141.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/KADALUKUAPPAL.jpg?v=1782464377"},{"product_id":"புயலிலே-ஒரு-தோணி-1","title":"புயலிலே ஒரு தோணி","description":"\u003cp\u003e\u003cspan\u003eபுலம் பெயர்ந்த மனிதர்களின் வாழ்வியல் பதிவாக ’புயலிலே ஒரு தோனி’ புதினத்தைக் கூறலாம். இதில் வரும் நாயகன் பாண்டியன் தனி மனிதன் அல்ல. புலம் பெயர்ந்த நிலத்தில் தங்களுக்கான வாழ்க்கையைத் தேடும் ஒவ்வொருவரின் மனசாட்சியாகவும் விளங்குகிறான். பிறந்த இடத்தில் தொலைத்த தங்களின் வாழ்க்கையை அந்நிய நிலத்தில் மீட்டெடுக்கப் போராடும் மனிதர்களை இதில் பார்க்க முடியும். வாழ்க்கைப் போராட்டத்தில் தங்களின் மரணம் குறித்த அக்கறையின்மையை நம்மால் உணர முடியும். அவர்களின் அன்றாட வாழ்க்கை ஒரு சாகசம் போலத் தெரியும். நிச்சயமற்ற வாழ்க்கையில் நிச்சமுள்ள ஒரு விஷயத்தைத் தேடிச் செல்லும் புலம்பெயர்ந்தவர்களின் வாழ்க்கையை இந்த நாவல் நம் கண்முன்னால் கொண்டு வருகிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47900691431660,"sku":null,"price":188.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/531bd6b13ab8b2d2a51d33466ea403fe_2e05f96b-0f4e-4400-946c-6c75ee842aca.jpg?v=1783421363"}],"url":"https:\/\/centaram.com\/collections\/pa-singaram.oembed","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}