{"title":"பா.அ. ஜெயகரன்","description":"","products":[{"product_id":"அவனைக்-கண்டீர்களா","title":"அவனைக் கண்டீர்களா?","description":"\u003cp\u003e\u003cspan\u003eபா.அ. ஜயகரனின் மூன்றாவது கதைத் தொகுதி இது. அரசுகளாலும் அமைப்புகளாலும் கைவிடப்பட்ட, துண்டாடப்பட்ட, தூக்கி எறியப்பட்ட மனிதர்களின் கதைகள் இவை. இந்தக் கதையின் மனிதர்களை ஆசிரியர் இரத்தமும் சதையுமாக ஆழமான இணக்கத்தோடு வரைந்து காட்டுகிறார்.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eஇலட்சியத்துக்காகப் பலிகடாவாக்கப்பட்ட சாட்சிகளை இக்கதைகளில் வாசிக்கலாம். அந்தச் சாட்சிகள் தரும் குற்றவுணர்வு அரசுகள், அமைப்புகள் மேலான விமர்சனமாக விரிவதை இத்தொகுப்பின் சாரமாகக் கொள்ளலாம்.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eகாட்சிகளையும் மனித மனங்களையும் துல்லியமான நறுக்குத் தெறித்தாற்போன்ற விவரணைகளோடு எழுதிக் காட்டும் ஆசிரியர் மனிதர்களின் இதத்தையும் இக்கதைகளில் துலக்கிக் காட்டுகிறார்.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eபுலம்பெயர்ந்த சூழலில் சமகாலக் கதைகளை எழுதிவரும் முக்கியமான படைப்பாளிகளில் ஒருவராக பா.அ. ஜயகரனை இத்தொகுதி அடையாளம் காட்டும்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47717916246252,"sku":null,"price":253.8,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/AVANAIKANDERGALA.jpg?v=1780910796"}],"url":"https:\/\/centaram.com\/collections\/p-a-jayakaran.oembed","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}