{"title":"Novels","description":"","products":[{"product_id":"பால்யகால-சகி","title":"பால்யகால சகி","description":"\u003cp\u003e\u003cspan\u003eபஷீர் ஐம்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு எழுதி வெளியிட்ட நாவல் ‘பால்யகால சகி’. இன்றுவரை வெவ்வேறு தலைமுறை வாசகர்களால் தொடர்ந்து வாசிக்கப்பட்டுவரும் மலையாளப் படைப்பும் இதுதான். தோல்வியடைந்த காதலின் கதை என்னும் எளிய தோற்றத்துக்குப் பின்னால் பஷீரின் சொந்த அனுபவங்களின் சாயலும் இஸ்லாமியப் பின்புலமும் உணர்ச்சிப் பெருக்கும் கொண்ட புனைகதை ‘பால்யகால சகி’. எழுத்தின் கூறுகளாக மட்டுமல்லாமல் வாழ்க்கையின் அம்சங்களாகத் திரண்டிருப்பது தான் நாவலை இலக்கிய முக்கியத்துவம் கொண்டதாகவும் தொடர்ந்து வாசிக்கக் கூடியதாகவும் ஆக்குகிறது. அதன் பின்னுள்ள படைப்பு மனம்தான் பஷீரை மலையாளப் படைப்பாளிகளில் ‘உம்மிணி வலிய ஓர் ஆளாக’ - இன்னும் பெரிய ஒருவராக - ஆக்குகிறது. ‘பால்யகால சகி’க்கு இன்று உருவாகியிருக்கும் செவ்வியல் தகுதியும் அதனால்தான். Basheer’s much acclaimed love story. Well translated.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47599418376428,"sku":null,"price":120.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/dff9daa17ca1f0e23cd3102a25fbcea2.jpg?v=1777977238"},{"product_id":"அசுதினாபுரம்","title":"அஸ்தினாபுரம்","description":"\u003cp class=\"MsoNormal\"\u003e\u003cspan lang=\"EN-IN\"\u003eகடலோர மக்களின் வாழ்வைப் பல்வேறு பரிணாமங்களுடனும் காலப்போக்கில் அவர்கள் அடைந்துவரும் மாற்றங்களுடனும் கலாபூர்வமாகப் பதிவுசெய்துவருபவர் ஜோ டி குருஸ்.\u003cspan\u003e \u003c\/span\u003e\u003c\/span\u003e\u003cspan\u003e‘\u003cspan lang=\"EN-IN\"\u003eஆழிசூழ் உலகு\u003c\/span\u003e\u003c\/span\u003e\u003cspan\u003e’\u003c\/span\u003e\u003cspan lang=\"EN-IN\"\u003e,\u003cspan\u003e \u003c\/span\u003e\u003c\/span\u003e\u003cspan\u003e‘\u003cspan lang=\"EN-IN\"\u003eகொற்கை\u003c\/span\u003e\u003c\/span\u003e\u003cspan\u003e’ \u003c\/span\u003e\u003cspan lang=\"EN-IN\"\u003eஆகிய நாவல்களைத் தொடர்ந்து அவர் எழுதிய மூன்றாவது நாவல்\u003cspan\u003e \u003c\/span\u003e\u003c\/span\u003e\u003cspan\u003e‘\u003cspan lang=\"EN-IN\"\u003eஅஸ்தினாபுரம்\u003c\/span\u003e\u003c\/span\u003e\u003cspan\u003e’\u003c\/span\u003e\u003cspan lang=\"EN-IN\"\u003e.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp class=\"MsoNormal\"\u003e\u003cspan lang=\"EN-IN\"\u003eகடலோரத்தில் பிறந்த ஒருவன் கப்பல் சரக்குப் போக்குவரத்துத் துறைக்குச் செல்வதையும் அந்தத் துறையில் பல்வேறு போராட்டங்களுக்கிடையில் உயர்ந்த நிலையை அடைவதையும் சொல்லும்\u003cspan\u003e \u003c\/span\u003e\u003c\/span\u003e\u003cspan\u003e‘\u003cspan lang=\"EN-IN\"\u003eஅஸ்தினாபுரம்\u003c\/span\u003e\u003c\/span\u003e\u003cspan\u003e’ \u003c\/span\u003e\u003cspan lang=\"EN-IN\"\u003eகப்பல் சரக்குப் போக்குவரத்துத் துறை சார்ந்த கதையாகவும் விரிகிறது. கள அனுபவமும் அபாரமான நிர்வாகத் திறனும் கொண்ட நாவலின் மையப்பாத்திரம் வழியே ஜோ டி குருஸ் பல்வேறு விஷயங்களை உணர்த்துகிறார். பல கேள்விகளை எழுப்புகிறார். கப்பல் போக்குவரத்துத் துறை செயல்படும் விதத்தைக் கதைப்போக்கினூடே மிக நுட்பமாகவும் துல்லியமாகவும் சொல்கிறார். கூடவே ஒரு தனிமனிதனின் வாழ்வை யும் அவன் வாழ்வு எவ்வாறு பிற மனிதர்களுடன் பிணைந்தும் அறுந்தும் மீண்டும் இணைந்தும் பயணிக்கிறது என்பதையும் காட்டுகிறார். மானுட இனத்தின் கீழ்மை சமூகத்தின் சகல அடுக்கு களிலும் பரவியிருக்கும் இன்றைய யதார்த்தத்தையும் நாவல் கவனப்படுத்துகிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47599424635116,"sku":null,"price":481.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/60e975d2e093a94562a8e4aaa3eb6506.jpg?v=1777977971"},{"product_id":"தண்ணீர்","title":"தண்ணீர்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஜமுனா, சாயா, டீச்சரம்மா . . . ‘தண்ணீர்’, சமுதாய அமைப்பினால் கைவிடப்பட்டுத் தனித்து வாழும் மூன்று பெண்களின் கதை. சினிமா கதாநாயகியாகும் கனவு பொய்த்துப் போனதன் நிராசையை மட்டுமல்ல, தன்னைச் சுற்றியுள்ள மனிதர்களால் ஒதுக்கப்படுவதன் வலியையும் சுமக்கும் ஜமுனா. இராணுவத்தில் பணிபுரியும் கணவனைப் பிரிந்து பெண்களுக் கான விடுதியில் தங்கி பலவிதமான நெருக்கடிகளுக்கிடையில் பிழைக்கும் ஜமுனாவின் தங்கை சாயா. சீக்காளிக் கணவனுக் கும் வன்மத்தின் மறுஉருவமான மாமியாருக்கும் இடையே நம்பிக்கையின்றி துறவியின் மனவுறுதியுடனும் விரக்தியுடனும் காலந்தள்ளும் டீச்சரம்மா. நகரத்தில் கடும் தண்ணீர்ப் பஞ்சம். மனித வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றான தண்ணீருக்குத் தட்டுப்பாடு வரும்போது மனித இயல்புகளும் உறவுகளும் மாற்றம்கொள்வதை இந்நாவல் துல்லியமாக விவரிக்கிறது. சாதாரண மக்களிடம் தவிப்பு, கோபம், தந்திரம், மிருகத் தனமான சுயநலம், இவற்றுடன் தாராள குணமும் மேன்மையும் தென்படுவதை நாம் உணரலாம். தினந்தோறும் தண்ணீரைத் தேடி அலைந்து சேகரித்து தேவைக் கேற்ப சேமித்து வைப்பதற்கான போராட்டம் எல்லோரையும் போல ஜமுனா, சாயா, டீச்சரம்மா ஆகியோரையும் அலைக் கழிக்கிறது. இவ்வலைக்கழிப்பு ஜமுனா, சாயாவிடம் வாழ்க்கைப் போராட்டத்தை எதிர்கொள்வதற்கான தெளிவையும் உறுதியையும் ஏற்படுத்துவதுதான் ‘தண்ணீர்’ நாவலின் முதன்மைச் சரடு. ‘தண்ணீர்’ நகர்ப்புறச் சமூகத்தின் இயல்பைப் பற்றிய மகத்தான படைப்பு.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47599439413484,"sku":null,"price":175.75,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/62da0d0ff39131d6c31640708750a743.jpg?v=1777978479"},{"product_id":"கரைந்த-நிழல்கள்","title":"கரைந்த நிழல்கள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஅசாதாரணமானது என்ற வார்த்தை 1970ல் முதன்முறையாகக் ‘கரைந்த நிழல்கள்’ நாவலைப் படிக்கும்போது தோன்றிற்று. தற்போது, இந்த இரண்டு மாதங்களுக்குள் ஒரு தடவை முழுதாகவும், ஏழெட்டு தடவை பகுதி பகுதியாகவும், நாவலின் நேர்த்தியில் ஈடுபட்டுத் திரும்பவும் ஒரு தடவை முதலிலிருந்து கடைசிவரை ஒரே மூச்சிலும் படிக்க நேர்ந்த பிறகு, ‘கரைந்த நிழல்கள்’ அசாதாரணமான சாதனைதான் என்பது நிச்சயமாகிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47599446491372,"sku":null,"price":203.5,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/f8180d4a38150fa39966dfd6a936a391.jpg?v=1777978928"},{"product_id":"திருடன்-மணியன்பிள்ளை","title":"திருடன் மணியன்பிள்ளை","description":"\u003cp\u003e\u003cspan\u003eசெய்யாத குற்றத்திற்காகச் சிறைத் தண்டனை அனுபவித்ததிலிருந்து இவரது குற்றவாசனை வெளிப்பட ஆரம்பிக்கிறது. திருட்டுகளில் ஈடுபடுகிறார். இதற்காக இவர் கையாள்கிற நுட்பங்கள் பிரமிக்க வைப்பவை; சாகசத் தன்மை கொண்டவை. போலீசில் பிடிபட்டதுமே உண்மைகளை ஒப்புக்கொண்டுவிடுகிற இவர், தன் மீதான வழக்குகளுக்கு வழக்கறிஞர்களை நியமித்துக்கொள்ளாமல் தானாகவே வாதாடுவார். இவரது குறுக்கு விசாரணைகள், போலீஸ் அதிகாரிகளும் நீதிபதிகளும் பயப்படுமளவுக்கு அமைந்திருக்கும். ஒருபுறம் மனிதத்தன்மை யற்றதாக இருக்கும் இவரது செயல்பாடுகளினுள் ஏழைகள் மீதான உள்ளார்ந்த பரிவும் இடைகலந்திருக்கும். திருவனந்தபுரத்திலிருந்து ஒரு முஸ்லிம் பெண்ணை வாழ்க்கைத் துணையாகச் சேர்த்துக்கொண்ட இவர் ஒரு கட்டத்தில் திருடிய பொருளுடன் குடும்பத்தோடு மைசூருக்குச் சென்று வீதியோரத்தில் பாயாசக் கடை தொடங்குகிறார். பிறகு யூசுஃப் பாட்சா எனும் பெயரில் அங்கே புகையிலை விவசாயத்தில் ஈடுபட்டு ஏழைப் பங்காளன் எனப் பெயர் பெறுகிறார். பிறகு மைசூரில் இவரது வளர்ச்சி கர்நாடக மாநில முதலமைச்சருடன் சேர்ந்து ஹெலிகாப்டரில் பறக்கும் அளவுக்கு முன்னேறுகிறது. மக்களவைத் தேர்தலில் ஒரு அரசியல் கட்சியின் வேட்பாளராகத் தேர்வு செய்யப்படுகிறார். மக்கள் செல்வாக்கு மிகுந்தவரும் சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்தவருமாக இருப்பதால் ‘மாண்புமிகு’கூட இவரது கைக்கெட்டும் தூரத்தில் வந்து நிற்கிறது. இந்நிலையில், இவர் மைசூரிலிருக்கும் தகவலைக் கேள்விப்பட்டு வந்த கேரளக் காவல் துறை இவரைக் கைது செய்கிறது. ஒரே இரவுக்குள் சம்பாதித்த அத்தனைச் செல்வங்களையும் இழந்துவிட்டு வெறுங்கையுடன் கேரளத்திற்குக் கொண்டுவரப்படுகிறார் மணியன்பிள்ளை.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47599452225772,"sku":null,"price":693.75,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/THIRUDANMANIYANPILLAI.jpg?v=1777978660"},{"product_id":"பாத்துமாவின்-ஆடு","title":"பாத்துமாவின் ஆடு","description":"\u003cp\u003e\u003cspan\u003eவேடிக்கை கதையாகச் சொல்லப்பட்ட குடும்பப் புராணம் ‘பாத்துமாவின் ஆடு’. ஆனால் வைக்கம் முகம்மது பஷீர் எழுதியவற்றில் பல அடுக்குகளில் புரிந்துகொள்ளப்பட வேண்டிய நாவலும் இதுதான். அன்பின் பெயரால் மையப்பாத்திரத்தைச் சுரண்டும் உறவுகளின் வலை, பெண்களின் உலகத்துக்குள் நிலவும் பூசல்களின் சிக்கல், மனிதர்களுக்கும் விலங்குகளுக்குமான சார்புநிலை உறவு, வாழ்க்கைக்கும் இலக்கியத்துக்குமான பிணைப்பின் வலு, நகைச்சுவையின் மிளிரல் என எந்த அடுக்கிலிருந்தும் இதை அணுகலாம். பஷீரின் இலக்கியத்தில் மனிதர்களுக்கு மட்டுமல்ல பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் தாவரங்களுக்கும் இடமுண்டு. மனிதர்களுக்கு இயற்கையின் உயிர்தரிப்புக் குணத்தையும் ஜீவராசிகளுக்கு மனித சுபாவத்தையும் வழங்குகிறது பஷீரின் படைப்பாளுமை. தன்னை மையமாக வைத்து வீட்டுக்குள் ஓர் உலகை உருவாக்குகிறார். அது உம்மிணி வலிய வீடு அல்லது மிகவும் சின்னப் பிரபஞ்சம். இது பஷீர் மட்டுமே உருவாக்கக்கூடிய கதா பிரபஞ்சம்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47603138658540,"sku":null,"price":138.75,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/1a57140b241a82f97eb17349491d680e.jpg?v=1778055904"},{"product_id":"அசோகமித்திரன்-குறுநாவல்கள்","title":"அசோகமித்திரன் குறுநாவல்கள்","description":"\u003ch5\u003e\u003cb\u003eதாத்தாவிடம் ஒரு அன்பான சொல் பேசியது அவரைப் பார்த்ததேகூட கிடையாது. அவர் சொத்து மட்டும் வேண்டும்! இது என்ன சுரண்டல் எண்ணம்? இது என்ன ஒட்டுண்ணி வாழ்க்கை? காலம் காலமாக மனிதன் நீடித்து இருப்பதே இப்படிச் சுரண்டுவதற்கும் மாற்றான் முயற்சியின் பலன்கனைத் தான் பறித்துக்கொள்வதற்கும் தானா?..\u003c\/b\u003e\u003c\/h5\u003e\n\u003ch5\u003e\u003c\/h5\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47603179454700,"sku":null,"price":721.5,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/e888711031df8bac03aabbf0acbd529a.jpg?v=1778056698"},{"product_id":"கோபல்லபுரத்து-மக்கள்","title":"கோபல்லபுரத்து மக்கள்","description":"\u003cp class=\"MsoNormal\"\u003e\u003cspan\u003e-\u003c\/span\u003e\u003cspan\u003eகோபல்லபுரத்து மக்களின் எளிமையும் வெள்ளந்தி மனமும்தான் இந்த நாவலின் உயிரோட்டம். அந்தக் கிராமத்தின் ஆன்மாவைத் தன் எழுத்தால் கி.ரா. படம் பிடிக்கிறார்.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp class=\"MsoNormal\"\u003e\u003cspan lang=\"EN-IN\"\u003eமண் ஒன்றானாலும் மனங்கள் பிளவுபட்டிருக்கின்றன. இந்தப் பிளவை நாட்டில் நடக்கும் விடுதலைப் போரோடு இணைக்கிறார்; கோபல்லபுரத்தாரால் நேரடியாகப் போரில் ஈடுபட முடியவில்லை. ஆனாலும்  தலைவர்களின் நோக்கையும் போக்கையும் கண்டு விமர்சனம் செய்யும் அளவுக்கு அவர்களின் வாழ்க்கைக் கண்ணோட்டம் விரிவடைகிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp class=\"MsoNormal\"\u003e\u003cspan\u003e‘\u003c\/span\u003e\u003cspan lang=\"EN-IN\"\u003eகோபல்ல கிராமம்\u003c\/span\u003e\u003cspan\u003e’ \u003c\/span\u003e\u003cspan lang=\"EN-IN\"\u003eநாவலின் தொடர்ச்சியாக எழுதப்பட்ட இந்த நாவலில் சமகால வரலாற்றுச் சம்பவங்களின் பின்னணியில் சாதாரண மக்கள் நாயகர்களாக விளங்குவதைத் தனக்கே உரிய நடையில் சொல்கிறார் கி.ரா. ஒவ்வொரு வரியிலும் மண் வாசனை வீசும் இந்த நாவல் தமிழின் சிறந்த வட்டார வழக்கு நாவல்களில் ஒன்று என்னும் சிறப்பையும் பெற்றது.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp class=\"MsoNormal\"\u003e\u003cspan lang=\"EN-IN\"\u003e1991ஆம் ஆண்டு சாகித்திய அகாதெமி விருது பெற்ற நாவல் இது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47603197477100,"sku":null,"price":360.75,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/c155b4a32885ff73309c9d7811196819.jpg?v=1778057183"},{"product_id":"கிழவனும்-கடலும்","title":"கிழவனும் கடலும்","description":"\u003cp\u003e\u003cspan\u003eநோபல் பரிசு பெற்ற எர்னெஸ்ட் ஹெமிங்வேயின் ஆகப் புகழ்பெற்ற நாவல் இது. ஒரு மனிதனுக்கும் மீனுக்குமிடையே நடைபெறும் உயிர்ப்போராட்டத்தைக் காவியச் சுவையுடன் சித்திரிக்கிறது இந்நூல். அழகிய கோட்டோவியங்கள் இடம்பெற்றுள்ளன. பல மொழிகளில் திரைப்படங்கள் இந்நாவலைத் தழுவி எடுக்கப்பட்டள்ளன. ‘கிழவனும் கடலும்’ வெளிவந்து ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இன்றும் வாசிக்கும்போது இது ஒரு அற்புதமான கதை. ஒரு தளத்தில் மனிதனுக்கும் இயற்கைக்குமான போராட்டம், இன்னுமோர் தளத்தில் மானுடப் பண்பாடு, துணிச்சல், போர்க்குணம் பற்றியது. பிறிதொரு தளத்தில் அமெரிக்காவாழ்வின் மையமாகத் தனிமனிதன் – குழுவோ அமைப்போ அல்ல – இருந்த காலகட்டத்தின் கதை. வாழ்வுக்கான அவன் போராட்டத்தின் சித்திரம். சிக்கனமான சொற்பிரயோகம், தெறிக்கும் விவரணைகளில் தனிமனிதப் போராட்டத்தைக் கொண்டாடும் படைப்பு.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47603203473644,"sku":null,"price":87.88,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/b3e424da615a6b2ec36f2c0ed408b240.jpg?v=1778056634"},{"product_id":"மாதொருபாகன்","title":"மாதொருபாகன்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஇந்த நாவலைப் படிக்கத் தொடங்கியதும் முழுமூச்சாகப் படித்துவிட்டே கீழே வைக்க வேண்டும் என்னும் வகையில்தான் இருந்தது. அதுவும் நம் கவனம் முழுவதையும் ஈர்த்துக்கொள்ளும் வகையில் இருந்தது. இந்தக் கதையைப் படித்த பிறகு மனதில் தோன்றியது என்ன? குறைந்தபட்சம் எங்களைப் பொருத்தவரையில் தங்களுக்குள் அமைதியடைந்தவர்கள் என்றாலும் குழந்தை இல்லாதவர்கள் என்னும் தகுதியைச் சமூகம் தொடர்ந்து அவர்களுக்கு நினைவூட்டிக்கொண்டேயிருக்கும் ஒரு கணவன் மனைவியின் நெஞ்சை உருக்கும் கதை அது இந்த நாவலை முழுமையாக உள்வாங்க வேண்டுமெனில் மேலட்டையிலிருந்து பின்னட்டை வரை முழுமையாகப் படிப்பதன் மூலமே அது இயலும். இந்த நாவல் உங்களை உலுக்கியெடுக்கும்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47603214418156,"sku":null,"price":231.25,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/685bd9948806100538eae419aebb8c59.jpg?v=1778057443"},{"product_id":"கடல்புரத்தில்","title":"கடல்புரத்தில்","description":"\u003cp\u003e\u003cspan\u003eதுளியை நுணுக்கமாகச் சித்திரிப்பதன் வழியாக, வெளியை அதன் விரிவோடு எழுப்பிக்காட்ட முயல்வது எழுத்தின் ஆதாரமான நோக்கங்களில் ஒன்று. இச் சிறுநாவலில் அந்த ரசவாதம் குறைந்த பக்கங்களுக்குள்ளாகவே நிகழ்ந்தேறியிருப்பதைக் காணலாம். ஒரு எளிய மீனவக் குடும்பத்தைப் பற்றியதாகத் தொடங்கும் கதையானது, முடியும் தருவாயில் அக்குடும்பம் வசிக்கும் கிராமத்தை, அது அமைந்திருக்கும் அகண்ட கரையை, அதற்கப்பால் விழிக்கெட்டாத தூரத்திற்கு விரிந்துகிடக்கும் கடலைப் பற்றின கதையாகவும் பெருகிவிடுகிற மாயம் எவ்விதப் பிரயாசையுமின்றி இயல்பாகவே நிகழ்கிறது. இது கடல்புரத்தைக் குறித்த கதை மாத்திரமல்ல; கடலைப் பின்புலமாகக் கொண்டு இயற்கைக்கும் மனிதனுக்கும், பழமைக்கும் புதுமைக்கும், தந்தைக்கும் மகனுக்கும், ஆணுக்கும் பெண்ணுக்கும், அன்பிற்கும் பகைக்கும், உடலுக்கும் உள்ளத்திற்கும் இடையிலான சிக்கலான பிணைப்புகளை, அவற்றில் விழுந்துவிடுகிற முடிச்சுக்களை, அவற்றை அவிழ்க்க முயன்று தோற்ற அலைகழிகிற மனத்தின் பாடுகளை எனப் பலதையும் குறித்து ஆதூரத்துடன் பேசுகிறது. முதல்பதிப்பு வெளியாகி முப்பதுக்கும் அதிகமான வருடங்கள் கடந்துவிட்டபோதிலும், இன்றும் வாசகர் கவனத்தைத் தக்கவைத்துக் கொண்டிருப்பது இந்நாவலின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47603238502636,"sku":null,"price":157.25,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/2d7c466e084a7413517e5fe39dcd4d49.jpg?v=1778058177"},{"product_id":"பூக்குழி","title":"பூக்குழி","description":"\u003cp\u003e\u003cspan\u003eகொங்கு வட்டாரப் பின்புலத்தில் கதைகளை நிகழ்த்திக் காட்டும் பெருமாள்முருகன், ‘பூக்குழி' நாவலில் சாதிய முரண் குறித்த உரையாடலை முன்வைக்கிகிறார். இந்நாவலை அவர் சாதி மீறித் திருமணம் செய்து ‘பலி'யான தருமபுரி இளவரசனுக்குச் சமர்ப்பித்துள்ளார். இந்த நாவலைப் படிக்கும் யாருக்கும் தலித், தலித்தல்லாதோர் என்கிற பின்புலத்தில் கதை எழுதப்பட்டிருக்கலாம் என்று எண்ணவே வாய்ப்பிருக்கிறது. ஆனால் கதை சாதியின் முரண்களைப் புரிந்துகொள்வதற்கான முயற்சி பற்றியதாக உள்ளது. புராணங்கள், இதிகாசங்கள், மநு போன்ற புத்தகங்களிலிருந்து சாதி உருவாகி இருக்கிறதென்று சொல்லி, தங்களுக்கும் சாதிக்கும் எத்தகைய தொடர்பும் இல்லை என்று இடைநிலைச் சாதிகள் தங்களை நியாயப்படுத்திக்கொள்ள முனையக்கூடும். இந்நாவல் சாதிப் பிரச்சினைகளுக்கு ஆதிக்கச் சாதிகளும் பொறுப்பேற்க வேண்டும் என்கிறது. இடைநிலைச் சாதிகளின் சாதி மனோபாவத்தை இப்பிரதி வெளிச்சமிடுகிறது. சுய விமர்சனத்திலிருந்தே மாற்றங்கள் உருவாகும். அப்படியான விமர்சனத்தை இந்நாவல் வைக்கிறது. மௌனமாய் இருக்கும் குளத்தில் பெருமாள்முருகனால் எறியப்பட்ட கல்லுக்கு, சலனத்தை உண்டாக்கும் ஆற்றல் இருப்பதாகச் சொல்ல முடிகிறது.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003e                                                 \u003c\/span\u003e\u003cspan\u003e                                                                                                                                                     \u003c\/span\u003e\u003cspan lang=\"EN-IN\"\u003eசந்துரு மாயவன்\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47603256590572,"sku":null,"price":185.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/5c89d1ef0d8190c47b3cc7eb1b523722.jpg?v=1778058570"},{"product_id":"ஆலவாயன்","title":"ஆலவாயன்","description":"\u003cp\u003e\u003cspan\u003e‘மாதொருபாகன்’ நாவலின் இரு வெவ்வேறு கோணங்களை விரித்து ‘அர்த்தநாரி’, ‘ஆலவாயன்’ ஆகிய நாவல்களாக உருவாக்கியுள்ளார் பெருமாள்முருகன். இவை ஒரு நாவலின் அடுத்தடுத்த பாகங்கள் அல்ல. தம்மளவில் முழுமை பெற்றுத் தனித்தியங்குபவை. இரண்டும் ஒரே புள்ளியில் தொடங்கினாலும் வெவ்வேறு திசைகளில் பயணம் செய்யும் சாத்தியப்பாடுகளைக் கொண்டுள்ளன. ஆண்களைச் சார்ந்தும் சாராமலும் உருக்கொள்ளும் பெண் உலகின் விரிவையும் அதற்குள் இயங்கும் மன உணர்வுகளையும் காணும் நோக்கு நாவல் ‘ஆலவாயன்.’ உறவுகள் சார்ந்த கேள்விகள் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஓயாமல் எழுவதையும் அதைக் கடக்க மனிதர்கள் படும் பாடுகளையும் காட்சிச் சித்திரமாக்கியுள்ளது இந்நாவல்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47603279790316,"sku":null,"price":231.25,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/44f2bf2c00aeb01a5142902d1fdf6435.jpg?v=1778059367"},{"product_id":"உன்-கதை-என்-கதை","title":"உன் கதை என் கதை","description":"\u003cp\u003e\u003cspan\u003eகவிஞர்கள் சில்வியா பிளாத்-டெட் ஹியூஸ் இணையரின் திருமண வாழ்வு நவீன இலக்கியத்தின் மிகவும் பேசப்பட்ட, சோகமயமான நிகழ்வுகளில் ஒன்று. இளம் வயதில் தற்கொலை செய்துகொண்டு இறந்துபோன சில்வியா பிளாத்தின் மீதான அனுதாபம் சில்வியா-டெட் ஹியூஸ் இணையரின் திருமண வாழ்வைப் பற்றிய பல புனைவுகளுக்கும் ஊகங்களுக்கும் இடமளித்தது. டச்சு எழுத்தாளரான கோனி பால்மன் புனைவுகள், ஊகங்கள், அவதூறுகள் ஆகியவற்றை விலக்கிவிட்டு, பல்வேறு ஆதாரங்களை ஆழமாக ஆராய்ந்து அவர்களது வாழ்வைப் புனைகதையாகப் படைத்துள்ளார். ஹியூஸின் பார்வையில் விரியும் இந்தக் கதை சில்வியாவைப் பற்றியும் இவர்களுக்கிடையே இருந்த உறவின் பல்வேறு பரிமாணங்களையும் சிடுக்குகளையும் புரிந்துகொள்ள உதவுகிறது. படைப்பூக்கத்தின் பரவசத்தையும் வேதனையையும் உணரச் செய்கிறது. எந்தக் குற்றச்சாட்டுக்கும் பதில் சொல்லாமல் இருந்த டெட் ஹியூஸின் குரலில் வெளிப்படும் இந்த நாவல் மிக நெருக்கமான ஒரு காதலின் வெளியில் தெரியாத சில பக்கங்களைக் காட்டுகிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47603351257324,"sku":null,"price":314.5,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/f9d3a9eec6a9cf03722761d08e225300.jpg?v=1778060431"},{"product_id":"புத்தம்-வீடு","title":"புத்தம் வீடு","description":"\u003cp\u003e\u003cspan\u003e‘புத்தம் வீடு’ - எளிய மொழியில் சொல்லப்பட்ட காதல் கதையாகத் தோற்றம்கொள்ளும் நாவல். லிஸியும் தங்கராஜும் இளம்பருவத்தில் கொண்ட ஈர்ப்பு காதலாக முதிர்ந்து திருமணத்தில் கனிய நீண்ட காலம் காத்திருக்கிறார்கள். தடைகளைக் கண்டு அஞ்சுகிறார்கள். இறுதியில் இணைகிறார்கள். முதல் சந்திப்புக்கும் முதல் நெருக்கத்துக்கும் இடையில் வருடங்கள் கடந்து போகின்றன. இடங்கள் மாறுகின்றன. மனிதர்கள் கடந்து போகிறார்கள். அவர்கள் உறவாடுகிறார்கள். காசுக்காகத் தகப்பனை ஏய்க்கிறார்கள். பகைகொண்டு சொந்தச் சகோதரனையே கொல்கிறார்கள். குலப்பெருமை பேசுகிறார்கள். புதிய தலைமுறையோடு பிணங்குகிறார்கள். காலத்துக்கேற்ப மாறுகிறார்கள். இது லிஸியின் கதை. மூன்று தலைமுறைகளை இணைக்கும் கண்ணி அவள். அவளை மையமாகக் கொண்டு விரியும் கிராம உறவுகளின் கதை. ஆர்ப்பாட்டமில்லாமல் வெளிப்படும் அவளுடைய சிநேகச் சரடின் மறுமுனையில்தான் அவளைத் தூற்றியவர்களும் விரும்பியவர்களும் இயங்குகிறார்கள். படைப்பு இயல்பால் தன்னை நிலைநிறுத்திக்கொண்ட இலக்கிய ஆக்கங்களில் ஒன்று ‘புத்தம் வீடு’. கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுக்கு முன்பு எழுதப்பட்டது. எனினும் இன்னும் வாசிப்பில் சுவை குன்றாமல் துலங்குகிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47603501138156,"sku":null,"price":203.5,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/08412adc1eca8ff4ebb694fd03d7ab10.jpg?v=1778061572"},{"product_id":"எங்க-உப்பப்பாவுக்கொரு-ஆனையிருந்தது","title":"எங்க உப்பப்பாவுக்கொரு ஆனையிருந்தது","description":"\u003cp\u003e\u003cspan\u003eஎங்க உப்பப்பாவுக்கொரு ஆனையிருந்தது’ நாவலில் ஒரு முஸ்லிம் குடும்பத்தின் அகக் காட்சிகளை முன்வைத்து அந்தச் சமூகத்தைப் பற்றிய ஓர் உருவகத்தை வைக்கம் முகம்மது பஷீர் உருவாக்குகிறார். இறந்த காலத்தின் நினைவுகளுடன் நிகழ்காலத்தை வாழப்பார்க்கிறது அந்தக் குடும்பம். வட்டனடிமைக் காக்காவுக்கு ஊர்ப் பிரமுகராக இருப்பதன் பெருமை. மனைவி குஞ்ஞுத்தாச்சும்மாவுக்கு அவள் அப்பா யானை வளர்த்த காலம் பற்றிய பெருமை. மகள் குஞ்ஞுபாத்தும்மாவுக்கு மணமகன் யானைமேல் வரும் கனவு. இந்தப் பழம் பெருமைகளெல்லாம் கால மாற்றத்தில் கலைந்துபோகின்றன. தாத்தாவின் யானை கொம்பானையல்ல, வெறும் குழியானைதான் என்று புதிய தலைமுறை கற்பிக்கிறது. மூவரும் புதிய உலகத்தின் விதிகளுக்கும் நடைமுறைகளுக்கும் இணங்க நேர்கிறது. அரைநூற்றாண்டு கடந்தும் வாசகர்கள் போற்றிப் பாராட்டி வாசிக்கும் புனைகதையின் புதிய தமிழாக்கம்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47603503694060,"sku":null,"price":138.75,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/dba95d58fa9f70f0cfde4d65328572ed.jpg?v=1778061973"},{"product_id":"தோட்டியின்-மகன்","title":"தோட்டியின் மகன்","description":"\u003cp\u003e\u003cspan\u003eநவீன மலையாளப் புனைவெழுத்தில் அனல் காற்றைப் படரச் செய்த ஆரம்பகாலப் படைப்புகளில் முக்கியமானது ‘தோட்டியின் மகன்.’ தகழி சிவசங்கரப் பிள்ளை 1947இல் எழுதிய நாவல். இலக்கியத்தில் மட்டுமல்ல; சமூகப் பார்வையிலும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. அதுவரை இலக்கியத்தில் யாரும் பார்க்காத களம்-சேரி; கேட்காத மொழி-பாமரக் கொச்சை; முகர அஞ்சிய வாடை-மலம்; வாழ்ந்திராத வாழ்வு - தோட்டிப் பிழைப்பு என்று பின்தள்ளப்பட்ட உலகைப் பொதுக் கவனத்துக்கு வைத்தது நாவல். சமூக அரங்கிலும் அரசியல் துறையிலும் அதன் மற்றொலிகள் எழுந்தன என்பது நாவலின் வெற்றி. விமர்சனங்கள் கூறப்பட்டாலும் இன்றும் தொடர்ந்து வாசிக்கப்பட்டுவரும் இந்த நாவலே மலையாளத்தில் தலித் வாழ்வை இலக்கியமாக்கியதில் முன்னோடிப் புனைவு.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47603505496300,"sku":null,"price":203.5,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/72897327f4b148295591b656f2a38f75.jpg?v=1778062187"},{"product_id":"மரப்பசு","title":"மரப்பசு","description":"\u003cp\u003e\u003cspan\u003eமரப்பசு எழுபதுகளின் தொடக்கத்தில் கணையாழி இதழில் வெளிவந்து 1975இல் நூல் வடிவம் பெற்றது. அன்று முதல் இன்று வரை நாற்பது ஆண்டுகளாக இலக்கிய உலகில் தொடர்ந்து விவாதிக்கப்பட்டும் வருகிறது - ஆதரவாகவும் எதிராகவும். தி. ஜானகராமன் நாவல்களில் மிக நவீனமான படைப்பு ‘மரப்பசு’. அவரது பிற நாவல்கள் கடந்தகாலத்தின் மறு உருவாக்கங்கள். ஆனால் நிகழ்காலத்தை நேர்முகமாக எதிரொளித்த படைப்பு ‘மரப்பசு’. பிற நாவல்கள் வாழ்வனுபவத்தின் மீதான படைப்புகள். அவற்றில் கருத்துக்கள் பின்புலமாகவே அமைந்தவை. மரப்பசு கருத்தை முன்னிறுத்தி வாழ்வை பாதித்த படைப்பு. இதில் அனுபவங்கள் கருத்துக்களை வலுப்படுத்துவதற்கான காரணிகளாகவே உருப்பெற்றிருப்பவை. உலகம் முழுவதும் பெண்ணியக் கருத்துகள் அலையடித்துக்கொண்டிருந்த தருணத்தில் அவற்றை தமிழில் விவாதித்த முதல் ஆக்கம் ‘மரப்பசு’. பூமியிலிருக்கும் சகல உயிர்களையும் அன்பின் கரங்களால் தழுவ விரும்பும் அம்மணி நவீன தமிழ் இலக்கியத்தில் மறக்க முடியாத பாத்திரங்களில் ஒன்று. அம்மணி மழைத் துளிபோல புதிதானவள். அதே சமயம் நதியைப் போல பழமையானவள். காற்றைப் போல் சுதந்திரமானவள். அதே சமயம் சிறகுகளின் பாதுகாப்பில் ஒடுங்க விரும்பியவள். உறவுகளைத் தேடி அலைந்தவள். அதே சமயம் தனிமையானவள். நாவலில் தன்னைப் பற்றி அம்மணி கூறும் சொற்களை மாற்றிச் சொன்னால் “மரப்பசுவாக இருந்தாலும் உயிருள்ள பசுவாக” இருக்கும் தனித்துவம் கொண்டவள்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47603506905324,"sku":null,"price":305.25,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/d0ce70365444f768a527d64990cf17e7.jpg?v=1778062382"},{"product_id":"காதுகள்","title":"காதுகள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஎம்.வி.வி. தன் வாழ்க்கையின் சுமார் 20 ஆண்டுகால அனுபவத்தைக் ‘காதுகள்’ என்ற பெயரில் எழுதினார். இந்த நாவலின் கதாநாயகன் மகாலிங்கத்தின் மத்திய வயதில் அவன் உள்ளிருந்தும் வெட்ட வெளியிலிருந்தும் பல ஓசைகளை, குரல்களை அவன் காதுகளுக்குள் கேட்க நேர்கிறது. கெட்ட வார்த்தைகள் கூட அவருக்குள் கேட்டன. அவர் உடல் ஒரு குருக்ஷேத்ரமாக வடிவமைக்கப்படுகிறது. இரண்டு அணியினர் போரிடுகிறார்கள். அவர் தெய்வத்தைச் சார்ந்து நிற்கிறார். நன்மைக்கும் தீமைக்குமான போரில், தெய்வம்கூடச் சுலபமாக ஜெயிக்க முடிவதில்லை. ஆனாலும் தன் குரு, அந்தக் கெட்டவைகளை வெற்றி கொள்வார் என்று நம்புகிறார் மகாலிங்கம். அந்த நம்பிக்கைதான் நாவலின் பக்கங்கள். இதை எம்.வி.வி. தன் வாழ்க்கை வரலாற்று நாவல் என்கிறார். விமர்சகர்கள் சிலர் இது மேஜிக்கல் ரியலிச நாவல் என்கிறார்கள். மனநல மருத்துவக் காரர்கள் இது ஒரு ஆடிட்ரி ஹாலுயூசினேஷன் சார்ந்த நாவல் என்கிறார்கள். தமிழ் நாவல் சரிதத்தில இது ஒரு முக்கியமான, வாசிக்கப் பட வேண்டிய நாவல் என்பது ஒரு நிச்சயமான உண்மை. பிரபஞ்சன்\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47603738902764,"sku":null,"price":185.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/3e05a73374b44b786ad12aeb6b5310ab.jpg?v=1778065465"},{"product_id":"பூனாச்சி-அல்லது-ஒரு-வெள்ளாட்டின்-கதை","title":"பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை","description":"\u003cp\u003e\u003cspan\u003eதலைப்பு உணர்த்துவதுபோலவே இந்த நாவல் ஒரு வெள்ளாட்டின் வாழ்வைக் கூறுகிறது. ஆடுகளின் பிரச்சினைகளையும் சிக்கல்களையும் சொல்கிறது. ஆடுகளின் மேல் மனித குணங்களை ஏற்றும் ஆசிரியர் ஆடுகளின் வாழ்வினூடே மனித வாழ்வைப் பேசுவதாகவும் இந்த நாவலை வாசிக்கலாம். பெருமாள்முருகன் தான் வாழும் சமூகத்தையும் அதிலுள்ள மனிதர்களையும் மட்டுமின்றி ஆடுகளைப் பற்றியும் நன்கு அறிந்தவர் என்பதால் இதில் ஆடுகளின் வாழ்வும் மானுட இயல்புகளும் அற்புதமாகத் துலங்குகின்றன. ஆடுகளின் கதையாக வாசிக்கையில் சுவையாகவும் நுட்பமான கூறுகள் நிறைந்ததாகவும் விளங்கும் இந்த நாவல் குறியீட்டுத் தளத்தில் முற்றிலும் வேறொரு வடிவம் எடுத்து வியக்கவைக்கிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47605597864172,"sku":null,"price":166.5,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/56f017eebeb02aaab85337e821f54aa5.jpg?v=1778134194"},{"product_id":"ஏறுவெயில்","title":"ஏறுவெயில்","description":"\u003cp class=\"MsoNormal\"\u003e\u003cspan\u003eநகரமயமாதலின் விளைவாகத் தன்னுடைய பூர்விக நிலத்தை விட்டுச் செல்லும் ஒரு கிராமத்துக் குடும்பத்தின் கதைதான் ‘ஏறுவெயில்'. இந்த இடப்பெயர்வினூடே நடக்கும் பொருளாதார, சமூக, உறவுச் சிக்கல்களை இந்த நாவல் தீவிரமாகக் கையாள்கிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp class=\"MsoNormal\"\u003e\u003cspan\u003eவெயில் தகிக்கும் பிரதேசத்தில் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்துவரும் ஒரு படைப்பாளி வெயில் தரும் உணர்வுடன் வாழ்க்கையை அணுகிப் பார்த்ததன் வெளிப்பாடு இந்த நாவல். இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து இயங்குவதற்கான உந்துதலாக அமைந்த நாவல் இது என்று பெருமாள்முருகன் குறிப்பிடுகிறார்.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp class=\"MsoNormal\"\u003e\u003cspan\u003eஇது இவருடைய முதல் நாவல். 1991இல் எழுதிய இந்த நாவல் வாசகர்களிடத்தின் தன் புதுமையையும் உயிர்ப்பையும் இன்றளவிலும் தக்கவைத்துக்கொண்டிருக்கிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47605600682220,"sku":null,"price":259.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/aab94a2b709f019353a1c0382215d7bd.jpg?v=1778134454"},{"product_id":"கோபல்ல-கிராமம்","title":"கோபல்ல கிராமம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஇயற்கையோடு இணைந்த வாழ்வுக்கான கூருணர்வை இழந்துகொண்டிருக்கிற இன்றைய காலகட்டத்தில் அந்தக் கூருணர்வை உட்சரடாகக் கொண்டுள்ளது. கி. ராஜநாராயணனின் ‘கோபல்ல கிராமம்’ நாவல். மனிதர்களின் கதைகளை எழுதும்போதும் அசையும் அசையாப் பொருட்கள், பறவைகள், விலங்குகள், பூச்சிகள் என இயற்கை சூழ் வாழ்வின் மொத்தத் தொகுப்பின் ஒரு பகுதியாகவே மனித வாழ்வு இந்த நாவலில் வெளிப்படுகிறது. கிராமமும் அந்த நிலப்பரப்பும் இழந்துகொண்டிருக்கிற உயிர்க்களையைப் பற்றியும் இந்நாவல் கவலைகொள்கிறது. ஒரு கிராமத்தின் நிலவியல் தோற்றத்துடன் அதன் விலங்குகள், பறவைகள், செடிகள், கொடிகள், மனிதர்கள் என ஒரு முழுமையான சித்திரத்தை முன்வைக்கும் கதையாடலை இந்நாவலுக்குள் சாத்தியப்படுத்துகிறார் கி.ரா. கிராம வாழ்வில் சாதியின் இருப்பையும் மனிதர்களின் இடத்தையும் கி.ரா. இயல்பாகக் கவனப்படுத்துகிறார். கோபல்லம் எனும் கிராமத்தின் இயல்பையும் அதில் இயக்கம் கொள்ளும் வாழ்வையும் இந்நாவல் முன்னிறுத்தினாலும் அதன் பார்வை உலகம் தழுவும் பார்வையாகவும் விரிவடைவது கி.ரா.வின் எழுத்து வன்மைக்குச் சான்றாக அமைகிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47605641150700,"sku":null,"price":231.25,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/8ca08c943a122b5706d00ada6f4ea05d.jpg?v=1778136770"},{"product_id":"அம்மா-வந்தாள்","title":"அம்மா வந்தாள்","description":"\u003cp\u003e\u003cspan\u003e‘அம்மா வந்தாளை’ மீறலின் புனிதப் பிரதியாகக் கொண்டாடலாம். சமூகம் நிறுவிக் காபந்து செய்து வரும் ஒழுக்க மரபைக் கேள்விக்குட்படுத்துகிறது நாவலின் கதை மையம். மனித உறவுகள் நியதி களுக்குக் கட்டுப்பட்டவை அல்ல. அவை உணர்ச்சிகளுக்கு வசப்படுபவை. இந்த இரண்டு கருத்தோட்டங்களின் ஈவாகவே மனித வாழ்க்கை இருக்கிறது; இருக்கும் என்பதை வலியுறுத்துகிறது கதை. இவ்விரு நிலைகளில் ஊசலாடுபவர் களாகவே முதன்மைப் பாத்திரங்கள் அமைகின்றன. இந்த ஊசலாட்டத்தை கலையாக்குகிறார் தி. ஜானகிராமன். ஆசாரங்களையும் விதிகளையும் மீறி மனிதர்களை நிர்ணயிப்பது அவர்களது உணர்வுகள்தாம் என்பதை இயல்பாகச் சொல்வதுதான் அவருடைய கலைநோக்கு. அந்த நோக்கம் உச்சமாக மிளிரும் படைப்புகளில் முதலிடம் வகிப்பது ‘அம்மா வந்தாள்’.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47605646688492,"sku":null,"price":212.75,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/5309ca1121f8706fea6f9c0e02d4da8a.jpg?v=1778137202"},{"product_id":"சில-நேரங்களில்-சில-மனிதர்கள்","title":"சில நேரங்களில் சில மனிதர்கள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eபெரும் அதிர்வுகளை ஏற்படுத்திய 'அக்கினிப் பிரவேசம்' சிறுகதையின் நீட்சியாக உருவான 'சில நேரங்களில் சில மனிதர்கள்' நாவல், ஒரே சம்பவத்தின் மாறுபட்ட சாத்தியக் கூறுகளைப் பற்றிய சிந்தனைக்கான வாசல்களைத் திறந்துவைக்கிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eஒரு சம்பவத்தின் விளைவு எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். நிஜ வாழ்வில் அதன் சாத்தியங்கள் எண்ணற்றவை; புனைவிலும் அப்படித்தான். பதின் பருவத்தில் வன்புணர்வுக்கு ஆளான ஒரு பெண் சமூகத்தின் பார்வையில் களங்கப்பட்டு நிற்கிறாள். ஆனால் அந்தக் களங்கத்தைக் கண்டு ஒடுங்கிவிடாமல் கம்பீரமாக எழுந்து நிற்கிறாள். தன் வாழ்க்கையைத் தானே தீர்மானிக்கும் துணிவுடன் செயலாற்றுகிறாள்.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eதமிழ்ப் புனைவுலகின் மறக்க முடியாத பாத்திரங்களில் ஒன்றாக இந்த நாவலின் நாயகி உருப்பெறுகிறாள். அந்தப் பாத்திரத்தின் முன்னிலையில் மற்றவர்கள் சிறுத்துப்போகாமல் தத்தமது அடையாளங்களுடன் காத்திரமாக வெளிப்படுகிறார்கள். இதன் மூலம் அவளோடு சம்பந்தப்பட்ட அனைவருக்குமான நியாயத்தை ஜெயகாந்தன் வழங்குகிறார்.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eதனியொரு பெண்ணின் கதையைச் சொல்லவந்த ஜெயகாந்தன் அதன்வழி சமூகத்தின் மதிப்பீடுகளையும் தீவிரமாகக் கேள்விக்குட்படுத்துகிறார். கருத்தின் மூலம் அல்லாமல் வாழ்வின் அசைவுகளைக் கலாப்பூர்வமாகச் சித்தரிப்பதன் மூலம் இதைச் செய்கிறார். எழுதி 55 ஆண்டுகள் கழித்தும் வாசகர்களின் மகத்தான வரவேற்பைப் பெற்றுவரும் இந்த நாவல் நவீன இலக்கியத்தின் செவ்வியல் படைப்புகளுள் ஒன்றாக மிளிர்கிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47605713338604,"sku":null,"price":394.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/74e842865cddbcdd1501b27d00dcb049.jpg?v=1778139497"},{"product_id":"அர்த்தநாரி","title":"அர்த்தநாரி","description":"\u003cp\u003e\u003cspan\u003eமாதொருபாகன்’ நாவலின் இரு வெவ்வேறு கோணங்களை விரித்து ‘அர்த்தநாரி’, ‘ஆலவாயன்’ ஆகிய நாவல்களாக உருவாக்கியுள்ளார் பெருமாள்முருகன். இவை ஒரு நாவலின் அடுத்தடுத்த பாகங்கள் அல்ல. தம்மளவில் முழுமை பெற்றுத் தனித்தியங்குபவை. இரண்டும் ஒரே புள்ளியில் தொடங்கினாலும் வெவ்வேறு திசைகளில் பயணம் செய்யும் சாத்தியப்பாடுகளைக் கொண்டுள்ளன. பெண் மீது ஆண் கொள்ளும் உடைமை உணர்வின் காரணமாக ஏற்படும் உறவுச் சிக்கல்களைப் பேசுகிறது ‘அர்த்தநாரி.’ அதனால் உருவாகும் விழுமியங்களும் மனித மனங்களை அலைக்கழிக்கும் விதத்தை நாவல் பற்றிச் செல்கிறது\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47605716910316,"sku":null,"price":222.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/5c0f472dd54ac8ae0501fad2a13b6162.jpg?v=1778139960"},{"product_id":"ஒரு-புளியமரத்தின்-கதை","title":"ஒரு புளியமரத்தின் கதை","description":"\u003cp\u003e\u003cspan\u003e1966இல் முதல் பதிப்பு வெளிவந்த காலத்திலிருந்து தீவிர வாசகர்களின் கவனத்தில் இருந்துவரும் ‘ஒரு புளிய மரத்தின் கதை’ ஒரு நவீன செவ்வியல் புனைவாக நிலைபெற்றுவிட்டது. மலையாளத்திலும் இந்தியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ள இந் நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பை பெங்குயின் வெளியிட்டது. 2000த்தில் தமிழிலிருந்து நேரடியாக ஹீப்ருவில் மொழிபெயர்க்கப்பட்ட ‘ஒரு புளியமரத்தின் கதை’ குறுகிய காலத்தில் இரண்டு பதிப்புகள் கண்டதுடன் அம்மொழிக்குச் சென்றுள்ள முதல் இந்திய மொழி நூல் என்ற பெருமையையும் பெறுகிறது. ஒப்பீட்டிலக்கிய விமர்சகர் கே. எம். ஜார்ஜ் இந்நாவலை நோபல் பரிசுபெறத் தகுதியான தமிழ் நாவலாகக் குறிப்பிடுகிறார்.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003e\u003cspan\u003eசுந்தர ராமசாமி\u003c\/span\u003e\u003c\/strong\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eசுந்தர ராமசாமி (1931 - 2005) தமிழின் முன்னோடி எழுத்தாளர்களில் ஒருவரான சுந்தர ராமசாமி நாகர்கோவிலில் பிறந்தார். பள்ளியில் மலையாளமும் ஆங்கிலமும் சமஸ்கிருதமும் கற்றார். 1951இல் ‘தோட்டி யின் மக’னைத் தமிழில் மொழிபெயர்த்ததே முதல் இலக்கியப் பணி. 1951இல் புதுமைப்பித்தன் நினைவு மலரை வெளியிட்டார். இவரது முதல் கதையான ‘முதலும் முடிவும்’ அதில் இடம் பெற்றது. மூன்று நாவல்களும் பல கட்டுரைகளும் சுமார் 60 சிறுகதைகளும், பசுவய்யா என்ற பெயரில் கவிதைகளும் எழுதினார். 1988இல் காலச்சுவடு இதழை நிறுவினார். சுந்தர ராமசாமிக்கு டொரொன்டோ (கனடா) பல்கலைக்கழகம் வாழ்நாள் இலக்கியச் சாதனைக்கான ‘இயல்’ விருதை (2001) வழங்கியது. வாழ்நாள் இலக்கியப் பணிக்காகக் ‘கதா சூடாமணி’ விருதையும் (2003) பெற்றார். சுந்தர ராமசாமி 14.10.2005 அன்று அமெரிக்காவில் காலமானார்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47605719662828,"sku":null,"price":231.25,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/d95d80264730f50c637c085be34dbd46.jpg?v=1778140352"},{"product_id":"நாளை-மற்றுமொரு-நாளே","title":"நாளை மற்றுமொரு நாளே","description":"\u003cp\u003e\u003cspan\u003eதன்னை ஏமாற்றியவனே தனக்குத் தந்திரத்தைக் கற்றுக்கொடுக்கும் குரு என்று ஏற்றுக்கொள்ளும் சாமானியர்களின் அடையாளங்களை, அவர்களின் மனப்போக்குகளை ‘நாளை மற்றொரு நாளே...' நாவலில் பதிவுசெய்திருக்கிறார் ஜி. நாகராஜன்.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003e கந்தனின் ஒருநாள் பொழுதுதான் இந்த நாவல். கிளைக்கதைகளையும் துணைக் கதாபாத்திரங்களையும் கொண்டு விரியும் கந்தனின் ஒருநாள் பொழுதின் வழியாக, தமிழ்ச் சமூகத்தின் அடியாழத்தில் மறைந்திருக்கும் சல்லித்தனத்தை, கயமையை, சுரண்டலை, இச்சையை அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது இந்த நாவல்.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003e புறக்கணிக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட சாமானியர்களின் உலகை அதன் அசல்தன்மையுடன் ஜி. நாகராஜன் காட்டுகிறார்.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eதமிழில் சிறந்த படைப்புகளில் ஒன்றான ‘நாளை மற்றொரு நாளே...' ரவி பேலட்டின் கோட்டோவியங்களுடன் புதிய பொலிவுடன் வெளியாகிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47605964538092,"sku":null,"price":180.5,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/NAALAIMACHORUNAALE.jpg?v=1778143205"},{"product_id":"மோக-முள்","title":"மோக முள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eபல இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்ட ‘தேவதாஸ்’ திரைப்படமாகவும் பல மொழிகளில் வந்திருக்கிறது. தமிழில் இப்போது புவனா நடராஜனின் புதிய மொழிபெயர்ப்பில்.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003e\u003cspan\u003eதி. ஜானகிராமன்\u003c\/span\u003e\u003c\/strong\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eதி. ஜானகிராமன் (1921 - 1982) தி. ஜானகிராமன் தஞ்சை மாவட்டம் மன்னார்குடியை அடுத்த தேவங்குடியில் பிறந்தவர். பத்து வருடங்கள் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றியவர். பின்பு அகில இந்திய வானொலியில் பணியாற்றி ஓய்வுபெற்றார். கர்நாடக இசை அறிவும் வடமொழிப் புலமையும் பெற்றிருந்தவர். 1943இல் எழுதத் தொடங்கிய தி. ஜானகிராமன் ‘மோகமுள்’, ‘அம்மா வந்தாள்’, ‘மரப்பசு’ உள்ளிட்ட ஒன்பது நாவல்கள், நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், மூன்று நாடகங்கள், பயண நூல்கள் ஆகியவற்றை எழுதியிருக்கிறார். சிட்டியுடன் இணைந்து இவர் எழுதிய ‘நடந்தாய் வாழி காவேரி’ பயண இலக்கிய வகையில் முக்கியமான நூலாகக் கருதப்படுகிறது. ‘மோகமுள்’, ‘நாலு வேலி நிலம்’ ஆகிய படைப்புகள் திரைப்படமாக்கப்பட்டுள்ளன. ‘மோகமுள்’, ‘மரப்பசு’, ‘அம்மா வந்தாள்’ ஆகிய நாவல்களும் பல சிறுகதைகளும் இந்திய, ஐரோப்பிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. 1979இல் ‘சக்தி வைத்தியம்’ சிறுகதைத் தொகுப்பிற்கு சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது. பதிப்பாசிரியர்: சுகுமாரன் (பி.1957) கோவையில் பிறந்தவர். அச்சிதழ், தொலைக்காட்சி, நூல் வெளியீட்டுத் துறைகளில் பணியாற்றியவர். கவிஞர், கட்டுரையாளர், மொழிபெயர்ப்பாளர். இலக்கிய இதழ்களிலும் இணையத்திலும் தொடர்ந்து எழுதிவருகிறார். திருவனந்தபுரத்தில் வசிக்கிறார்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47606003597548,"sku":null,"price":730.75,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/6acf6adadf28f0e63f7a5f40f27e5457.jpg?v=1778145235"},{"product_id":"ஒரு-மனிதன்-ஒரு-வீடு-ஒரு-உலகம்","title":"ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eதனது நாவல்களில் தனக்கு மிகவும் பிடித்தமானது என்று ஜெயகாந்தனாலும் அவரது நாவல்களில் ஆகச் சிறப்பானது என்று இலக்கிய விமர்சகர்களாலும் குறிப்பிடப்படுவது ‘ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்.’ எந்த ஊர், பெற்றோர் யார், என்ன இனம், என்ன சாதி என்று எதுவும் தெரியாத, அது பற்றிக் கவலையும் கொள்ளாத ஒரு உலகப் பொது மனிதனைக் கதாபாத்திரமாக்கி, அவன் எதிர்கொள்ளும் அனுபவங்களின் மூலம் இந்த வாழ்க்கையின் போக்கு குறித்த புரிதலை உணர்த்த முனையும் நாவல் இது.எழுதப்பட்டு ஏறத்தாழ முப்பத்தைந்தாண்டுகளைக் கடந்த பின்னரும் இன்றைய சூழலுக்கும் பொருந்துவதான வாசிப்பனுபவத்தைத் தருவதன் மூலம் இந்த நாவல் ஒரு கலைப்படைப்பாக நிமிர்ந்து நிற்கிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003e\u003cspan\u003eஜெயகாந்தன்\u003c\/span\u003e\u003c\/strong\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eஜெயகாந்தன் (1934 - 2015) த. ஜெயகாந்தன் தென்னார்க்காடு மாவட்டம் மஞ்சக்குப்பத்தில் 1934இல் பிறந்தார். தொடக்கப் பள்ளிக் கல்வியைக்கூட முடிக்காத இவர், சுயமாகக் கற்று 1950 முதல் சிறுகதைகள் எழுதத் தொடங்கினார். சிறுகதைகள், குறுநாவல்கள், நாவல்கள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், திரைக்கதை வசனங்கள், நேர்காணல்கள் என எழுபத்தைந்துக்கும் மேற்பட்ட நூல்கள் வெளிவந்துள்ளன. கவிதைகளும் எழுதியுள்ளார். சிறுகதைகள், கட்டுரைகளின் முழுத் தொகுப்புகளும் வெளிவந்துள்ளன. இவரது சிறுகதைகள், நாவல்கள் பல்வேறு இந்திய மொழிகளிலும் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. நாளிதழ், இலக்கிய இதழ்களின் ஆசிரியராகவும் இருந்துள்ளார். சில திரைப்படங்களையும் இயக்கியுள்ளார். ஞானபீட விருது, சாகித்ய அகாதெமி விருது, ராஜராஜன் விருது பெற்றுள்ளார். இவர் இயக்கிய ‘உன்னைப் போல் ஒருவன்’ திரைப்படம் குடியரசுத் தலைவர் விருது (1964) பெற்றது. ஏப்ரல் 8, 2015 அன்று சென்னையில் காலமானார்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47606026010860,"sku":null,"price":347.75,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/57b2b1d96b1155a76c1843b1367c8315.jpg?v=1778146194"},{"product_id":"கருக்கு","title":"கருக்கு","description":"\u003cp\u003e\u003cspan\u003eசெவ்வியல் பண்புகளைக் கொண்ட ‘கருக்கு’ செவ்வியல் பதிப்பாக ஒவ்வொரு தசாப்தத்திலும் வெளிவர வேண்டும் என்றே நான் கருதுகிறேன். காரணம் நாம் சரித்திரத்தை வெகு வேகமாக மறப்பவர்கள். குறிப்பிட்டுச் சொன்னால் தலித்துகளின் வாழ்க்கைச் சரித்திரங்களையும், பெண்கள் வாழ்க்கைப் போராட்டங்களையும் மறப்பது நமக்கு எளிதாக இருக்கிறது. அப்படி எளிதாக்கிக்கொள்வது நமக்கு வசதியாக இருக்கிறது. மனத்தைக் குத்துபவைகளை அவை இல்லாதவை போல பாவனை செய்துகொண்டு இருப்பவர்களின் நிம்மதியான தூக்கத்தைக் கெடுக்க, அவர்களை முட்டி முட்டித் தொல்லை தர, அவர்களின் தடித்துப்போன தோல்களைக் கீறிவிட ‘கருக்கு’ தேவைப்படுகிறது. உருவகமாகவும் புத்தகமாகவும்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47606042329324,"sku":null,"price":138.75,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/ee3cd43e8b15283aebde3fbcab8fa163.jpg?v=1778146798"},{"product_id":"நளபாகம்","title":"நளபாகம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eதி. ஜானகிராமன் ‘கணையாழி’ இதழில் தொடராக எழுதி, அவரது மறைவுக்குப் பின்னர் நூல் வடிவம் பெற்ற நாவல் ‘நளபாகம்.’ அவரது நாவல்களில் மையப்பொருளை அவ்வளவு வெளிப்படையாக உணர்த்தாத நாவலும் இதுவே. இந்தப் பூடகமே நாவலை இன்றும் சுவாரசியமான வாசிப்புக்கு உரியதாக நிலைநிறுத்துகிறது. சுவீகாரப் பிள்ளைகள் வாயிலாகவே தொடரும் தனது குடும்ப பாரம்பரியத்தை ரத்த உறவு மூலம் வலுப்படுத்த ரங்கமணி மேற்கொள்ளும் அபாயகரமான செயலே நாவலின் மையம். மகன் துரை மூலம் மகப்பேறு வாய்க்காத மருமகள் பங்கஜத்துக்குத் துணையாக காமேச்வரனை அழைத்துவந்து வீட்டில் தங்கவைக்கிறாள். அம்பாள் உபாசகனான அவனது வருகைக்குப் பின் மருமகள் கருத்தரிக்கிறாள். அந்த அற்புதம் நிகழ்ந்தது காமேச்வரனின் பூஜையாலா? அவனது இருப்பு தம்பதியரிடையே கூட்டிய அன்னியோன்னியத்தாலா? இந்த மர்மத்தைத் தனக்கு ஆகிவந்த பின்புலத்தில், அறியவந்த மனிதர்களின் சாயலில் வசீகர மொழியில் சொல்கிறார் தி.ஜா. பச்சாதாபம், காமம், ஆன்மீகம் ஆகிய மூன்றின் கலவையான வண்ணத்தில் மிளிர்கிறது இந்தப் படைப்பு. Thi.Janakiraman wrote this novel as a series on the magazine ‘Kanaiyazhi’. It was published as a book posthumously. Poet Sukumaran the editor Thi.Janakiraman’s collected short stories says Thi.ja was never tired of celebrating humanity in his works. Humans are the central themes of his works, bound in their situations and filled with emotions. It’s an unique novel among his other novels. The theme is abstract and the abstractness makes it more intriguing for the reader. The novel is about an dangerous attempt by Rangamani, who is determined to continue her family heritage by a blood related scion instead of adopted children. Tricks, Prayers, Intimacy all are entwined in a story told in the enchanting writing style of Thi.Ja. The novel speaks of pity, lust and spirituality all in an intimate language.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003e\u003cspan\u003eதி. ஜானகிராமன்\u003c\/span\u003e\u003c\/strong\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47606253945068,"sku":null,"price":360.75,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/3da41d07f223b39eb5d31daebb8a48b2.jpg?v=1778147945"},{"product_id":"ஒற்றன்","title":"ஒற்றன்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஅமெரிக்காவிலுள்ள அயோவர் பல்கலைக்கழகத்தின் அழைப்பின் பேரில் சர்வதேச எழுத்தாளர் சந்திப்புக்குச் சென்ற அசோகமித்திரன், அங்கு தனக்கு ஏற்பட்ட அனுபவங்களைப் புனைகதையுருவில் முன்வைக்கிறார். நிகழ்வுகளுடனும் அனுபவங்களுடனும் ஒன்றிப்போகாமல் மானசீகமாக விலகி நின்று பதிவு செய்யும் அசோகமித்திரனின் கலைப் பார்வை, தேர்ந்த காமிராக் கலைஞனின் நுணுக்கத்தோடு காட்சிகளைச் சித்திரிக்கவும் தவறுவதில்லை. பயணக்கட்டுரையும் புனைகதையும் சந்திக்கும் புள்ளியில் சஞ்சரிக்கும் இந்நாவலின் பிரதி நெடுகிலும் இழையோடும் அங்கதம் வாசிப்பில் சுவை கூட்டுகிறது. தமிழின் தனித்துவம் மிக்க கலைஞர்களில் ஒருவரான அசோகமித்திரனின் அலாதியான படைப்பாக்கங்களில் ஒன்று ‘ஒற்றன்’. நாவல் வடிவம் சார்ந்த பரிசோதனையில் முன்னோடி முயற்சிகளில் ஒன்றான ‘ஒற்றன்’ முதன் முறையாக அதன் முழுமையான வடிவில் வெளிவருகிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47606310764780,"sku":null,"price":231.25,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/d44d4ad32cad4ead621d8ef692f50a62.jpg?v=1778149876"},{"product_id":"ஆட்கொல்லி","title":"ஆட்கொல்லி","description":"\u003cp\u003e\u003cspan\u003eஆட்கொல்லி என்கிற இந்த நாவல் தொடராக எழுதப்பட்டதுதான். பத்திரிகைக்காக அல்ல, ரேடியோவுக்காக. நண்பர் டி. என். விசுவநாதன் என்பவர் இதை மிகவும் அழகாக ரேடியோவில் வாராவாரம் வாசித்தார். எனக்கு மிகவும் பிடித்த நாவல் இது. என் கதாநாயகரின் பணம் ஈட்டும் சக்தி எனக்கு வரவில்லை என்றாலும் என் குண விசேஷங்களில் பாதியாவது அவர் காரணமாக வந்தவைதான். இளவயதில் அவர் வீட்டில் வளர்ந்தவன் நான்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47628190449900,"sku":null,"price":64.75,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/f607bbf7810004a7188fffab9239b06d.jpg?v=1778655236"},{"product_id":"அவன்-ஆனது","title":"அவன் ஆனது","description":"\u003cp\u003e\u003cspan\u003eஅவன் ஆனது' நாவல் தொடங்கப்பட்டது போலவே அழகாக முடிந்தும் இருக்கிறது. நாவலின் கடைசிப் பகுதியில் நாவல் முற்றிலும் மறைந்துவிடுகிறது. அங்கே நாவல் பாத்திரங்கள் ஒருவரும் இல்லை. சாவகாசமாக மழைதான் பெய்கிறது. அந்த மழையின் அசந்தர்ப்பத்தில் கூட ஓர் அர்த்தம் இருப்பதாகத் தோன்றுகிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47628191891692,"sku":null,"price":157.25,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/15a7d3b15e384909cbab346ce8236a64.jpg?v=1778655456"},{"product_id":"உண்மை-கலந்த-நாட்குறிப்புகள்","title":"உண்மை கலந்த நாட்குறிப்புகள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eதமிழில் சுயசரிதைத் தன்மை கொண்ட புனைவுகளில் தன்னிரக்கமும் படைப்பூக்கமற்ற வெற்றுத் தகவல்களும் பொது இயல்பாகிவிட்ட சூழலில் முத்துலிங்கத்தின் இந்த நாவல் அந்த வகை எழுத்திற்கு ஒரு புதிய உத்வேகத்தையும் அழகியலையும் வழங்குகிறது. முத்துலிங்கத்தின் கவனம் பெறும் ஒவ்வொரு அனுபவமும் உயிர்ச் சித்திரங்களாக விழித்தெழுகிறது. எந்த ஒரு சிறிய நிகழ்வையும் நினைவையும் ஒரு மர்மமான ரசவாதத்தால் வாழ்வின் தரிசனமாக மாற்றி விடும் அவர் நவீனத் தமிழ் எழுத்திற்கு ஒரு புதிய நீரோட்டத்தை வழங்குகிறார். இந்த நாவலின் சில பகுதிகள் தனி ஆக்கங்களாக வெளி வந்திருந்தபோதும் இந்த வடிவத்தில் அவை தமது உள்ளிணைப்புகளால் ஆழ்ந்த ஓர்மையை வெளிப்படுத்துகின்றன. அவரது புனைவின் நிழல் எதார்த்தத்தை மறைப்பதில்லை. மாறாக அவற்றை அதன் மந்தகதியிலிருந்து விடுவித்துப் பிரகாசமடைய வைக்கிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47628208308460,"sku":null,"price":333.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/unmaikalantha.jpg?v=1778656310"},{"product_id":"பித்தப்பூ","title":"பித்தப்பூ","description":"\u003cp\u003e\u003cspan\u003eமனித மனத்தில் பைத்தியம் என்று ஒரு வியாதி ஏன் ஏற்படுகிறது. அது ஏற்படுகிற விதத்தை நாவலாகச் செய்ய முடியுமா என்று யோசித்து பித்தப்பூ என்ற நாவலை 1959இல் எழுத எண்ணினேன். மூன்று தரம் வெவ்வேறு கோணங்களிலிருந்து வெவ்வேறு வழிகளில் எழுதிப் பார்த்தேன். திருப்தி அளிப்பதாக இல்லை. இப்போது இருக்கிற வடிவம் நான்காவது. எல்லாச் சம்பவங்களும் கற்பனை, பாத்திரங்களும் பொய் என்று சொல்வது நாவல் மரபு. மாறாக இதில் வருகிற எல்லாக் கதாபாத்திரங்களும் சம்பவங்களும் எனக்குத் தெரிந்தவரையில் முழு உண்மை.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47628212699372,"sku":null,"price":64.75,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/bf8e2931751cd2fe724582d1c619272c.jpg?v=1778656877"},{"product_id":"வல்லிசை","title":"வல்லிசை","description":"\u003cp\u003e\u003cspan\u003eஉலுக்குகிறது பறை இசை. விடுதலைக் களிப்போடு துள்ளிக் குதித்து குருதியில் ஒலி மதுவாய் பரவுகிறது. பறை வழியவிடும் இசைமதுவின் போதையில் நான் ஆடுகிறேன். ஒரு கணம்தான். அந்தத் துள்ளிசையின் வசீகரச் சுழலிலிருந்து தப்பித்துக்கொள்ள முயல்கிறேன். எம் மூதாதையரின் பறையொழிப்புப் போராட்ட நினைவுகள் என்னைச் சூழ்கின்றன. இப்போது பறையிசை என்னை சினம்கொள்ளச் செய்து மூளையைத் தெறிக்கவிடுகிறது. பறை தோற்கருவிகளின் பொதுப்பெயர். ஆனால், அது சிலர் மட்டுமே இசைத்திடும் கருவியாக எப்படிச் சாதியோடு பிணைக்கப்பட்டது. இசையில் சுதி வேறுபாடு இருக்கலாம். சாதி வேறுபாடும் இருக்குமா ? பறையை சாதியோடு பிணைத்திருப்பது ஒரு சதி. இது அனைவரும் அறிந்தது. ஆனால், விளக்கங்களைச் சொல்லிக் கொண்டிருப்பதற்கு இது நேரமில்லை. என் கையில் திணிக்கப்பட்ட பறையை நட்ட நடுவெளியில் வீசியெறிகிறேன். அது சமமின்மையை உலுக்கும் வல்லிசையைக் காற்றில் பர்வச்செய்யும். நான் என்னிடமுள்ள தோற்கருவிகளை எரித்துக் குளிர்காயந்தபடி அதை உணர்ந்துகொண்டிருப்பேன்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47628219875564,"sku":null,"price":277.75,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/74ae7ba2e03fdb31244de8a4ac58a508.jpg?v=1778657142"},{"product_id":"கடைசி-வைஸ்ராயின்-மனைவி","title":"கடைசி வைஸ்ராயின் மனைவி","description":"\u003cp\u003e1947ஆம் வருடத்திய வசந்த காலம்.\u003c\/p\u003e\n\u003cp\u003eமௌண்ட் பேட்டன் பிரபுவும் அவரது மனைவி எட்வினாவும் புதுதில்லியில் வந்திறங்கினர். இந்தியாவில் உள்நாட்டுக் கலகம் வெடித்த காலம். எட்வினா தயக்கம் நிறைந்தவர். ஆனால் விதிகளை உடைக்கத் தயங்காதவர். அவருடையது அலைக்கழிப்புக்கு உள்ளான ஆன்மா. பேரழகி, பட்டாசு போன்றவர். வெளியில் தெரிந்தவை மட்டுமல்ல அவர். அவருடைய கவர்ச்சி ஒரு முகப்பு மட்டுமே. அதற்குப் பின்னால் இருந்தது செல்வாக்கும் அதிகாரமும் நிரம்பிய அதிபுத்திசாலியான பெண்மணி.\u003cbr\u003eஅவருடைய உண்மையான இயல்பைப் புரிந்து கொண்டவர் அவருடைய நண்பர் ஜவஹர். அவர்கள் இருவர் வாழ்வை மட்டுமல்ல, பல கோடி இந்தியர்களின் வாழ்வையும் புரட்டிப் போட்ட நிகழ்வுகளும் உறவுகளும் யாரும் ஊகித்திருக்க முடியாதவை.\u003c\/p\u003e\n\u003cp\u003eபிரிவினை காலத்தில் நிகழும், 'கடைசி வைஸ்ராயின் மனைவி’ என்னும் இந்நாவல் இரு நாடுகளின் பிறப்பை, காதலை, துயரத்தை, சோகத்தை, இரக்கமின்மையை, நம்பிக்கையின் வெற்றியைப் பேசும் இதயத்தை உருக்கும் கதை.\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47628225675500,"sku":null,"price":397.75,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/10dadddc2e4bdb143f2f3926025c85c1.jpg?v=1778657571"},{"product_id":"நிழல்கள்","title":"நிழல்கள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eநகுலனின் கலைஊற்று மிக வளமானது எனும் நம்பிக்கையை இந்நாவல் எனக்கு ஏற்படுத்தியிருக்கிறது. இதன் மூலம் தமிழின் இலக்கியத்தரமான நாவலாசிரியர்களின் வரிசையில் இடம் பிடித்துக்கொள்ளும் இவ்வாசிரியர், எதிர்காலத்தில் நாம் எண்ணிப் பெருமைப்படத்தகுந்த சிருஷ்டிகளைப் படைத்துவிட்டார் என்றால், நான் ஆச்சரியம் அடையமாட்டேன். என் நம்பிக்கை பலித்துவிட்டதை எண்ணித் திருப்திப்படுவதே அப்பொழுது என்னுடைய காரியமாக இருக்கும் -சுந்தர ராமசாமி\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47628270928108,"sku":null,"price":56.4,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/b3d22702864dc1b7b8a0f85d756a3daf.jpg?v=1778660956"},{"product_id":"உஷ்ணராசி","title":"உஷ்ணராசி","description":"\u003cp\u003e\u003cspan\u003eஇரக்கமற்ற எதேச்சதிகாரத்தால் நசுக்கப்பட்ட, அதீத துணிச்சல்மிக்க எழுச்சியின் இதிகாசம், நிகழ்காலத்திலும் எதிரொலிக்கிறது. நுட்பமான புரிதலுடன் உணர்வுபூர்வமாக எழுதப்பட்டிருக்கிறது. நிச்சயம் வாசித்தேயாக வேண்டிய நூல். - அடூர் கோபாலகிருஷ்ணன். ஒடுக்கப்பட்ட பெண்களின் பிரதிநிதித்துவத்தோடு கேரளத்தில் மூண்டெழுந்த் போராட்ட நாட்களை விவருக்கும் நாவல். ஒரு தேசத்தின் உயிர்ப்பின் கதை. இரத்தம் கொதிக்கும் தாள்களின் இதிகாசம்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47628301238508,"sku":null,"price":705.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/f72fae3703b271222c81ff4140776248.jpg?v=1778663628"},{"product_id":"சஹிதா","title":"சஹிதா","description":"\u003cdiv id=\"Description\" class=\"w3-container w3-border city\"\u003e\n\u003cdiv\u003eஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\u003c\/div\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e\n\u003c\/div\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47628348588268,"sku":null,"price":282.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/f21e7f5eb5f2b9c373f4c54941a12a80.jpg?v=1778664916"},{"product_id":"கதை-கேட்கும்-சுவர்கள்","title":"கதை கேட்கும் சுவர்கள்","description":"\u003cp\u003eவாழ்வு தெளிந்த நீரோடையாய்ப் போய்க் கொண்டிருப்பதில் என்ன சுவாரசியம் இருக்கிறது?அது தன் கோர நாக்குகளை நீட்டி நம்மை, சில நேரங்களில் நம் மொத்த வாழ்வையும் பலி கேட்கிறது. தலைகீழாய்ப் புரட்டிப்போட்டு ஒன்றுமே தெரியாதது மாதிரி நின்று வேடிக்கையும் பார்க்கிறது.\u003c\/p\u003e\n\u003cp\u003eஉமா ப்ரேமன் என்கிற இம்மனுஷியை இது தன் சகல அகங்காரத்தோடும் ஆக்ரோஷத்தோடும் அழைக்கழித்தது.\u003c\/p\u003e\n\u003cp\u003eஇதன் காயங்கள் எதுவுமே தனதில்லையென, நேற்றிரவு பெய்த மழையில் புத்தம்புதியதாய்ப் பூத்து நிற்கிறாள். அதனால் மட்டுமே அவள் வாழ்வு புத்தகமாகிறது.\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47628474810604,"sku":null,"price":376.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/0330d848c8bc3a4c5e53cf1bb88f79d0.jpg?v=1778668112"},{"product_id":"இந்தியா-1948","title":"இந்தியா 1948","description":"\u003ch4\u003e\u003cb\u003eஇந்தியா 1948 - அசோகமித்திரன்:\u003c\/b\u003e\u003c\/h4\u003e\n\u003ch5\u003eநான் அமெரிக்காவில் இருந்தபோது அவளைச் சந்தித்தது எண்ணி ஆறு முறைதான். அதற்க்குள் எங்கள் உறவிலும் இருவர் குடும்பச் சூழ்நிலையிலும் எவ்வளவு மாற்றங்கள் ஏற்ப்படுத்தியது ! அவள் தரப்பில் அவள் அம்மா தெறியாது ஒரு காரியம் செய்யமாட்டாள், அவள் அமேரிக்கா சென்று படித்தது கூட அவளுடைய அம்மா தந்த ஊக்கத்தால்தான். நான் என் அம்மாவிடம் எப்படி நடந்துகொள்கிறேன் ? மேலோட்டமான விஷயங்கள் தவிர அந்தரங்கம் எதைத் தெரியப்படுத்தியிருக்கிறேன், யோசனை கேட்டிருக்கிறேன் ?\u003c\/h5\u003e\n\u003ch5\u003eஅவளுக்கும் தந்தை அற்பாயுவில் போய்விட்டார், மிகவும் சிக்கலான கூட்டுக் குடும்பம், இப்போது ஒரு வழியாக குடும்பத்தினர் பிரிந்து, சுதந்திரமாகச் செயைல்பட முடிகிறது. என் தகப்பனார் என் சிறு வயதிலேயே இறந்துபோய்விடாமல் இருந்தால் என் வாழ்க்கை பாலக்காடும் அதைச் சுற்றியுள்ள இடங்களில் கைக்கும் வாய்க்கும் எட்டாதபடி அமைந்திருக்கும்.\u003c\/h5\u003e\n\u003ch5\u003eஎனக்கு என் மாமாவைப் பார்க்க வேண்டும் என்றிருந்தது. என் அந்தரங்கத்தை அவரிடம் சொல்லலாம். அவர் என் மாமனாராக இருந்தால்கூட ஒரு குருவாக எனக்கு வழிகாட்டுவார்.\u003c\/h5\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47632052486380,"sku":null,"price":112.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/1948.jpg?v=1778754590"},{"product_id":"ஒரு-நாள்","title":"ஒரு நாள்","description":"\u003cp\u003eஆரம்ப முதலே என் நாவல்களில் பலருக்கும் பிடித்த நாவலாக 'ஒருநாள்' அமைந்ததை என்னால் உணர முடிந்தது. சாத்தனூர் என்ற கிராமமும் அதன் மக்களும் என்னைத் தாக்கிப் பாதித்த வேகத்தில் எழுதிய நாவல். பல சுவாரசியமான மனிதர்களை நானே நேரில் கண்டு தெரிந்துகொள்ள ஆசைப்பட்டு விரிவாக உருவாக்கினேன். இந்த நாவலை எழுதுவதில் எனக்கு ஒரு வேகம் இருந்தது. வேகம் கெட வேண்டும் என்கிற நினைப்புள்ள எனக்குக்கூட இந்த வேகம் பிடித்ததாக இருந்தது. நிரந்தரமான ஓர் உண்மையின் கூறுகள் இந்த நாவலில் வருகிற வாழ்க்கை வழிகளிலும், கதாபாத்திரங்களிலும் அடங்கிக் கிடப்பதாக நான் எண்ணுகிறேன். வாசகர்களில் இந்த தலைமுறையைச் சேர்ந்த சிலரும் அப்படியே எண்ணுவார்கள் என்று நம்புகிறேன்.\u003c\/p\u003e\n\u003cp\u003e- க. நா. சு.\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47632097083628,"sku":null,"price":178.6,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/7f72eaa27f95e207786adefb3fdcfa2c.jpg?v=1778754893"},{"product_id":"காலம்","title":"காலம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஅறுபதுகளின் இறுதியிலிருந்து ஒரு மூன்றாண்டுகள் ஒரு அட்வகேட்டிடம் வக்கீல் குமாஸ்தாவாகப் பணிபுரிந்தபோது நீதித் துறையுடன் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. பல்வேறுவிதமான மனிதர்கள், வழக்குக் கட்டுகள், நீதிமன்ற வளாகங்கள், கட்சிக்-காரர்கள் என அந்த மூன்று ஆண்டுகள் கழிந்தன. ஒவ்வொரு கட்சிக்காரரிடமும் ஒரு கதை இருந்தது. அவற்றையெல்லாம் எழுத இந்த ஆயுள் போதாது. இந்த நாவலுக்கு கருப்புக் கோட்டு என்ற தலைப்பை வைக்கத்தான் முதலில் உத்தேசித்திருந்தேன். ஆனால், வேறு சில காரணங்களுக்காக காலம் என்ற தலைப்பைத் தேர்ந்தெடுக்கும்படி ஆயிற்று. - வண்ணநிலவன்\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47632105603308,"sku":null,"price":112.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/270d9235588be83361e1c8df8f6bcf86.jpg?v=1778755244"},{"product_id":"தபால்காரர்-பெண்டாட்டி","title":"தபால்காரர் பெண்டாட்டி","description":"\u003cp\u003eதபால்காரர்கள் மேல் என்ன காரணத்தாலோ ஒரு வகையான ஈர்ப்பு சின்ன வயசிலிருந்தே எனக்கு ஏற்பட்டுவிட்டது. தபால்காரர்களை நான் தினமும் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. எங்கள் வீட்டுக்கு தினமும் தபால் வரும். \u003c\/p\u003e\n\u003cp\u003eஅப்படித்தான் பரிச்சயமானவர் அந்தத் தபால்காரர். சைக்கிளில் வருவார். நான் பத்திரிகைகளுக்கு பதின்மூன்று வயது தொடங்கி சின்னச் சின்னக் கவிதைகள் அனுப்பிவைப்பேன். அவை திரும்பி வரும். அல்லது பிரசுரிக்க இயலாமைக்கு வருந்துவதாக ஆசிரியர் எழுதி இருப்பார். \u003c\/p\u003e\n\u003cp\u003eஆனால் விரைவில், என் கதை, கவிதை, கட்டுரைகள் பிரசுர மாயின. அவர், என் பக்கத்திலிருந்து, நான் பத்திரிகையைப் பிரித்து, பிரசுரமாகி இருக்கும் என் படைப்பை நானும் படித்து, அவரிடமும் காட்டும் வரை, அவர் என் எதிரிலேயே நின்றிருப்- பார். வாய் திறந்து பாராட்டமாட்டார். ஆனால், அவர் மகிழ்ச்சி யாக உணர்கிறார் என்பதை நான் அறியும்படி இருக்கும்.\u003c\/p\u003e\n\u003cp\u003e- பிரபஞ்சன்\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47632280846572,"sku":null,"price":220.9,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/faa2879cb651ea9090ccd81f58029914.png?v=1778757656"},{"product_id":"மெர்சோ-மறுவிசாரணை","title":"மெர்சோ: மறுவிசாரணை","description":"\u003cp\u003e\u003cspan\u003eஆல்பெர் காம்யு எழுதிய ‘அந்நியன்’ நாவலின்தொடர்ச்சியாகவும், அதன் மறுபக்கமாகவும், எதிரொலியாகவும்அமைந்திருக்கும் ‘மெர்சோ: மறுவிசாரணை’,‘அந்நியன்’ நாவலைப் படித்த ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய படைப்பு.அல்ஜீரிய எழுத்தாளர் காமெல் தாவுதுடைய எழுத்தின்துணிச்சலும், சவாலும், இவரிடம் காணப்படும் பிரஞ்சு மொழிஆளுமையும் பிரான்ஸில் இவருக்குப் பல இலக்கியவிருதுகளைப் பெற்றுத்தந்திருக்கின்றன; இந்த நாவல் பலமொழிகளில் மொழிபெயர்க்கப்படவும் இவை காரணமாகஇருந்திருக்கின்றன.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47634184077548,"sku":null,"price":183.3,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/7c6fa77a3c911142b060c6108dd8518e.jpg?v=1778832909"},{"product_id":"ஆறாவது-பெண்","title":"ஆறாவது பெண்","description":"\u003cdiv class=\"o9v6fnle cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q\"\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003eஇங்கும் ஒரு மாமனும் மாமியும் இருக்கிறார்கள் . தாழ்வாரத்திலுள் பெண்பிள்ளைகளுக்கு அவர்களும் ஒவ்வொரு வகை பூக்களின் பெயர்களைச் சூட்டியுள்ளார்கள் . கண்ணும் காதும் விளங்காதவர்கள் ; கை கால்கள் துவண்டு போனவர்கள் , தேவையான அளவுக்கு புத்தி உறைக்காதவர்கள் . ஏதோவொரு அநாதை விடுதியிலிருந்து குதிரை வண்டியில் விடியற்காலையில் வந்து சேர்பவர்கள் . அவர்களுக்கிடையில் அமர்ந்திருக்கும்போது எல்லா உறுப்புகளும் தேவைக்கு அதிகமாகவே இருக்கிறதே என்னும் இறுமாப்பு எண்ணம் எனக்கு ஒருபோதும் தோன்றுவதில்லை அக்கூட்டத்தில் அவர்களைவிடவும் நாள் குறையுள்ளவளாகத்தான் இருக்கிறேன் .\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv class=\"o9v6fnle cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q\"\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003eஇன்னொரு விஷயத்தை மட்டும் சொல்லி நிறுத்திவிடுகிறேன் . உங்கள் காதம்பரி தோற்றதில்லை ஒருபோதும் தோற்கவும் மாட்டேன் . இங்கிருந்து கிடைக்கும் அறிமுகங்களையும் அங்கிருந்து கிடைத்த சில நல்ல பழக்கங்களையும் வைத்து நான் ஒரு பூக்கடையை எப்போதாவது தொடங்குவேன் வேறொரு ஊரில் வேறொரு தோதில் . அது அனந்தராமன் வம்சத்து பூக்கடையாக இருக்காது . காதம்பரியின் பூக்கடை காதம்பரியினுடையதாக மட்டுமே அது இருக்கும் . வம்சங்களின் கட்டுப்பாடுகள் இல்லாமல் காதம்பரி இழக்க வேண்டியது ஒன்றுமில்லையே ‘\u003c\/div\u003e\n\u003c\/div\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47634257150188,"sku":null,"price":188.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/6a2411bee02413338ec06595bf65c475.jpg?v=1778837681"},{"product_id":"எண்ணமும்-எழுத்தும்","title":"எண்ணமும் எழுத்தும்","description":"\u003cp\u003e\u003cspan\u003eவண்ணநிலவனின் நேர்காணல்கள். பல்வேறு பத்திரிகைகளில் வெளியான பத்திகள், கட்டுரைகள், தமிழின் மூத்த எழுத்தாளர்களைய் பற்றிய எண்ணப் பதிவுகள் உள்ளடங்கிய தொகுப்பு நூல், மென்மையும் பூடகமும் நிறைந்த புனைவெழுத்திற்கு நேரெதிராக, உரத்த குரல் இவரின் அபுனைவுகளில் வெளிப்படுகிறது. ஒளிவுமறைவின்றி. தன் கருத்துகளைப் போட்டுடைக்கிறார். லயம் கூடிவரும் நல்ல எழுத்துகளை அனுபவிக்கும் ஒரு தேர்ந்த வாசகராகவும் இருப்பதால், நிர்தாட்சண்யமான இலக்கியப் பார்வைகளை அவரால் முன்வைக்க முடிகிறது.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eதமிழின் அபூர்வ எழுத்துக் கலைஞரான வண்ணநிலவனின் ஆளுமையைப் புரிந்துகொள்ள. பின்தொடர வழிகொடுக்கும் கட்டுரைகள் இத்தொகுப்பில் உள்ளன.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47634268061932,"sku":null,"price":188.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/4c0cb0cf318125850cedc0d3ed58a781.jpg?v=1778838058"},{"product_id":"வடகரை","title":"வடகரை","description":"\u003cp\u003e\u003cspan\u003eஇந்த நாவலில் அறுநூறு வருட வாழ்க்கை ஒரு குடும்பத்தின் நிகழ்வுகலாகச் சொல்லப்படுகிறது. பெண் தெய்வங்கள் தங்களை அழித்துக் கொண்டு மற்றவைகளைக் காப்பதாக பல வழக்குக் கதைகள் இருந்தாலும் இந்நாவலில் வருகிற நொண்டி மீனாட்சி என்கிறபெண் தனி ஒருவளாக தன் தங்கையையும் அவளது வம்சத்தையும் நிலைநிறுத்தப் பலபோராட்டங்களை மேற்கொள்கிறாள். அவளது கதையை மிக அருமையாகச் சொல்லி இருக்கிறார் நன்பர் ராஜேந்திரன். நான் இதை நாவலாகவே பார்க்கிறேன். அப்படி தான்பார்க்க முடியும். ஒருவர் பார்வையிலான சுயசரிதை அல்லது ஒற்றை வாழ்க்கை, பலவகையிலும் அவர் வாழுகிற சமூகமும் சார்ந்ததே. - கலாப்ரியா\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47634323407084,"sku":null,"price":376.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/b82d3cca9fda4a56fcec2d60a6686e6c.jpg?v=1778838908"}],"url":"https:\/\/centaram.com\/collections\/novels.oembed?page=19","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}