{"title":"நற்றிணை பதிப்பகம்","description":"","products":[{"product_id":"ஆதிக்க-சாதிகளுக்கு-மட்டுமே-அவர்-பெரியாரா","title":"ஆதிக்க சாதிகளுக்கு மட்டுமே அவர் பெரியாரா?","description":"\u003cp\u003e\u003cspan\u003eதீண்டாதாரின் முன்னேற்றந்தான் பிராமணரல்லாதார்களின் முன்னேற்றமாகும். தீண்டாதார்களின் துன்பந்தான் பிராமணரல்லாதாரின் துன்பமாகும் என்று சுயமரியாதை இயக்கம் தொடங்கியது (1925) முதல், இவ்வுலகில் இருந்து விடைபெறுவதற்கு ஒரு மாதம் முன்பு மதுரையில் ஆதிக்க சாதி மனோபாவத்தைக் கண்டித்துப் பேசியதற்காக கல்வீச்சுத் தாக்குதலுக்கு (1973 அக்டோபர் 20) ஆளானது வரை தந்தை பெரியார் பேசியது, எழுதியது, செயல்பட்டது அனைத்தும் எல்லாத் தமிழ் மக்களுக்குமே. அதை உணராமல், அவரைப் படிக்காமலேயே, “ஈ.வெ.ரா தலித் விரோதி, ஆதிக்க சாதிகளுக்கான பெரியார்” என நிறுவ முயற்சிக்கும் அபத்தக் களஞ்சியங்களுக்கான பதில்தான் இந்த நூல்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47619050078444,"sku":null,"price":376.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/PERE2.jpg?v=1782985104"},{"product_id":"மரி-என்கிற-ஆட்டுக்குட்டி","title":"மரி என்கிற ஆட்டுக்குட்டி","description":"\u003cp\u003eமரியை எனக்குத் தெரியும். அன்புக்கு ஏங்கிய ஆத்மா அவள். வசதியான குடும்பம். தெருவில் மூன்று கார்கள் நின்றன. நான்கு வேலைக்காரர்கள் இருந்தார்கள். வீட்டில், அம்மா இல்லை. அதாவது குழந்தையிடம் இல்லை. அப்பா, பணம் பண்ணிக் கொண்டிருந்தார். அம்மாவும் அப்பாவும் தன்னைப் புறக்கணிக்கிறார்கள் என்று மரி நினைத்தாள். அவள் உலகை வெறுக்கத் தொடங்கினாள்.\u003c\/p\u003e\n\u003cp\u003eகுழந்தைகள் பெற்றோர்களிடம், ஆசிரியர்களிடம், உலகத்திடம் அன்பை மட்டுமே எதிர்பார்க்கிறார்கள். அவர்களுக்குத் தெரிந்த ஒரே மொழி அதுதான். அது மட்டும்தான். அதைக்கூட கொடுக்க முடியாத அளவுக்கு மனிதர்கள் மரத்துப் போய்விட்டார்கள் என்பது நம் காலத்து அவலம்.\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47619666051308,"sku":null,"price":216.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/55349b4bbc65d6b8670fd1447c35a7d7.jpg?v=1778580371"},{"product_id":"ஆட்டுப்பால்-புட்டு","title":"ஆட்டுப்பால் புட்டு","description":"\u003cp\u003e\u003cspan\u003eஒரு பழுதடைந்த துப்பாக்கியை வைத்துக்கொண்டு என்னைக் கொல்லப் போவதாக மிரட்டுகிறாய். என்னைக் கொல்வதால் உனக்கு என்ன பயன்? அடுத்த நாள் உன் ராணுவத்துக்கு வெற்றி கிட்டிவிடுமா? போரை நிறுத்திவிடுவார்களா? என்னைப்போல எத்தனை போராளிகள் இருக்-கிறார்கள். அவர்கள் அத்தனை பேரையும் நீ தேடித்தேடிக் கொல்-வாயா? இந்த வயதுக்குள் நீ இதுவரை எத்தனைக் கொலைகள் செய்திருப்பாய். உன் எதிரிகள் எதற்காகப் போரிடுகிறார்கள் என்றாவது யோசித்துப் பார்த்திருக்கிறாயா? அவர்களுக்குக் குடும்பம் மேல் பற்றில்லையா? பெண்சாதி, பிள்ளைகள் வாழவேண்டும் என்று ஆசைப்படமாட்டார்களா? ஆனாலும் எதற்காக மரணத்தைக்கண்டு அஞ்சாமல் போர் புரிகிறார்கள். அவர்களுக்கு எங்கிருந்து அந்த வெறி வருகிறது? அடிமை களாக வாழ அவர்களுக்குப் பிடிக்கவில்லை. உலகத்தில் பிறந்த எந்த மிருகத்துக்கும் பறவைக்கும் சுதந்திரம் வேண்டியதாய் இருக்கிறது. ஒரு புழுவுக்குக்கூட சுதந்திரம் தேவை. அப்படியிருக்க மனிதன் சுதந்திரத்துக்குப் போராடுவதில் என்ன தப்பு இருக்கிறது. அதை யோசித்துப் பார்த்திருக்கிறாயா? - \u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47628172853484,"sku":null,"price":93.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/027c206815e3518304fdabd127fb8d2b.jpg?v=1778653620"},{"product_id":"குயிலம்மை","title":"குயிலம்மை","description":"\u003cp\u003e\u003cspan\u003eஉலகக் கதைகள், இலக்கியங்கள், கலைகள் அனைத்தும் அன்பையும் அன்பாகிய நன்மைகளையும் சொல்லவே உருவாக்கப்பட்டன. கம்பனும் காளிதாசனும் வால்மீகியும் வியாசனும், நம் காலத்து எழுத்தாளர்களும் இதைத்தான் எழுதினார்கள். 'பெயக் கண்டும் நஞ்சு உண்டு அமைவர்' என்று அன்புக்கும், அன்பு வாழ்க்கையான நாகரிக வாழ்க்கைக்கும் இலக்கணம் சொல்கிறார் வள்ளுவர். 'என் தாய் மொழி, நாளை அழியும் என்றால் நான் இன்றே இறப்பேன்' என்கிறார் ரசூல் கம்சதேவ. நான் மறைகிறேன், இந்தியா சுதந்திரம் பெறட்டும் என்றார் பகத்சிங். வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் மனம் வாடுகிறார் இராமலிங்கர். தன் பிள்ளைகள் படிக்க, ஓவர் டைம் செய்கிறார் ஒரு தொழிலாளி. தான் பட்டினி கிடந்து, குழந்தைக்குச் சோறு போடுகிறாள் தாய். அமுதமே கிடைத்தாலும் அதைத் தனியாக உண்ண மாட்டேன் என்கிறான் ஒரு சங்கப் புலவன்.  என்னால் முடிந்தது, இந்தக் கதைகளை எழுதியிருக்கிறேன். \u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47628179800300,"sku":null,"price":212.75,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/kuyilammai-10013152-1000x1000h.jpg?v=1778654081"},{"product_id":"புறப்பாடு","title":"புறப்பாடு","description":"\u003cp\u003e\u003cspan\u003eஅனுபவங்களை காலவரிசைப்படி சொல்லமுடியாது. சொன்னால் அதில் இருப்பது புறவயமான காலம். கடிகாரக் காலம். அது அர்த்தமற்றது. அகவயமான காலத்தில் அனு பவங்கள் எப்படி சுருட்டி வைக்கப்பட்டிருக்கின்றன என்பதே முக்கியமானது. அதை வெளியே எடுக்க ஒரே வழி மிகவலுவான மையச் சரடு ஒன்றைத் தொட்டு இழுப்பதே. அது இழுத்துவரும் அனுபவங்களே அகக் காலத்தின் வரிசையை அமைத்து விடுகின்றன. நான் ஏதாவது ஒரு நினைவை கைபோன போக்கில் எழுத ஆரம்பிப்பேன். அந்த அனுபவத்தின் சாரமாக ஓடும் சரடு என ஒன்று தென்படும். அது எந்தெந்த விஷயங்களைக் கொண்டுவருகிறதோ அதை எழுதிச் செல்வேன். அதன் வழியாக அப்போது \u0026amp; அதாவது எழுதும் கணத்தில் \u0026amp; ஒரு மெய்மையை அடைந்ததும் முடிப்பேன்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47628181537004,"sku":null,"price":351.15,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/9f4cc6addcda2a4c97ad1876a2d5924a.jpg?v=1778654513"},{"product_id":"ஆட்கொல்லி","title":"ஆட்கொல்லி","description":"\u003cp\u003e\u003cspan\u003eஆட்கொல்லி என்கிற இந்த நாவல் தொடராக எழுதப்பட்டதுதான். பத்திரிகைக்காக அல்ல, ரேடியோவுக்காக. நண்பர் டி. என். விசுவநாதன் என்பவர் இதை மிகவும் அழகாக ரேடியோவில் வாராவாரம் வாசித்தார். எனக்கு மிகவும் பிடித்த நாவல் இது. என் கதாநாயகரின் பணம் ஈட்டும் சக்தி எனக்கு வரவில்லை என்றாலும் என் குண விசேஷங்களில் பாதியாவது அவர் காரணமாக வந்தவைதான். இளவயதில் அவர் வீட்டில் வளர்ந்தவன் நான்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47628190449900,"sku":null,"price":64.75,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/f607bbf7810004a7188fffab9239b06d.jpg?v=1778655236"},{"product_id":"அவன்-ஆனது","title":"அவன் ஆனது","description":"\u003cp\u003e\u003cspan\u003eஅவன் ஆனது' நாவல் தொடங்கப்பட்டது போலவே அழகாக முடிந்தும் இருக்கிறது. நாவலின் கடைசிப் பகுதியில் நாவல் முற்றிலும் மறைந்துவிடுகிறது. அங்கே நாவல் பாத்திரங்கள் ஒருவரும் இல்லை. சாவகாசமாக மழைதான் பெய்கிறது. அந்த மழையின் அசந்தர்ப்பத்தில் கூட ஓர் அர்த்தம் இருப்பதாகத் தோன்றுகிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47628191891692,"sku":null,"price":157.25,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/15a7d3b15e384909cbab346ce8236a64.jpg?v=1778655456"},{"product_id":"அமெரிக்க-உளவாளி","title":"அமெரிக்க உளவாளி","description":"\u003cp\u003e\u003cspan\u003eநவீனத் தமிழ் உரைநடைக்கு ஒரு புதிய பரிமாணத்தையும் வசீகரத்தையும் வீச்சையும் சேர்க்கும் எழுத்தில் ஆசிரியர் பல நிகழ்வுகளை இந்நூலில் விவரிக்கிறார். நிகழ் புலங்கள் இலங்கை, அமெரிக்கா, ஆப்பிரிக்கா, கனடா என மாறினாலும் கதை மாந்தர்களின் மனிதநேசமும் மகிழ்ச்சியும் துயரமும் தியாகமும் மாறாமல் ஒரு தமிழ் வாசகருக்கு முற்றிலும் பரிச்சயமில்லாத தருணங்களை வாசக மனத்தில் நீடித்து நிறுத்துகின்றன\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47628199100652,"sku":null,"price":259.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/5dae49ff8d386be7ee2e80d80a737ef7.jpg?v=1778655794"},{"product_id":"உண்மை-கலந்த-நாட்குறிப்புகள்","title":"உண்மை கலந்த நாட்குறிப்புகள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eதமிழில் சுயசரிதைத் தன்மை கொண்ட புனைவுகளில் தன்னிரக்கமும் படைப்பூக்கமற்ற வெற்றுத் தகவல்களும் பொது இயல்பாகிவிட்ட சூழலில் முத்துலிங்கத்தின் இந்த நாவல் அந்த வகை எழுத்திற்கு ஒரு புதிய உத்வேகத்தையும் அழகியலையும் வழங்குகிறது. முத்துலிங்கத்தின் கவனம் பெறும் ஒவ்வொரு அனுபவமும் உயிர்ச் சித்திரங்களாக விழித்தெழுகிறது. எந்த ஒரு சிறிய நிகழ்வையும் நினைவையும் ஒரு மர்மமான ரசவாதத்தால் வாழ்வின் தரிசனமாக மாற்றி விடும் அவர் நவீனத் தமிழ் எழுத்திற்கு ஒரு புதிய நீரோட்டத்தை வழங்குகிறார். இந்த நாவலின் சில பகுதிகள் தனி ஆக்கங்களாக வெளி வந்திருந்தபோதும் இந்த வடிவத்தில் அவை தமது உள்ளிணைப்புகளால் ஆழ்ந்த ஓர்மையை வெளிப்படுத்துகின்றன. அவரது புனைவின் நிழல் எதார்த்தத்தை மறைப்பதில்லை. மாறாக அவற்றை அதன் மந்தகதியிலிருந்து விடுவித்துப் பிரகாசமடைய வைக்கிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47628208308460,"sku":null,"price":333.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/unmaikalantha.jpg?v=1778656310"},{"product_id":"உச்சவழு","title":"உச்சவழு","description":"\u003cp\u003e\u003cspan\u003eன்ற இரண்டாண்டுகளில் ஜெயமோகன் எழுதிய புதிய சிறுகதைகளின் தொகுப்பு இது. இக்கதைகள் மானுட வாழ்க்கையின் வெவ்வேறு தருணங்களிலிருந்து ஒட்டுமொத்தமான கேள்விகளை நோக்கிச் செல்கின்றன. பெரும்பாலும் உருவகங்களையும் படிமங்களையும் பயன்படுத்திப் பேசுகின்றன. என் கதைகள் எவையும் அன்றாட வாழ்க்கையின் உணர்வுநிலைகளைச் சார்ந்தவை அல்ல. எளிய மெல்லுணர்வுகள் என் எவையும் இதுகாறும் என்னால் எழுதப்படவில்லை என்பதை திரும்பிப் பார்க்கையில் தெளிவுறக் காண்கிறேன். என் ஆக்கங்கள் எப்போதுமே ஒட்டுமொத்தமாக வாழ்க்கையை நோக்குபவை. சிறுகதைகள் அந்நோக்கை ஒரு கணத்தில் குவிக்க முயல்பவை. ஆன்மீகமான தத்தளிப்பும் தேடலும் கண்டடைதலும் மட்டுமே என் புனைவுகளின் உள்ளடக்கம். இவையும் அவ்வாறே என ஜெயமோகன் முன்னுரையில் குறிப்பிடுகிறார்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47628209946860,"sku":null,"price":185.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/33ab7d201a1b5ba14c9ef0fb35f4e4f1.jpg?v=1778656599"},{"product_id":"பித்தப்பூ","title":"பித்தப்பூ","description":"\u003cp\u003e\u003cspan\u003eமனித மனத்தில் பைத்தியம் என்று ஒரு வியாதி ஏன் ஏற்படுகிறது. அது ஏற்படுகிற விதத்தை நாவலாகச் செய்ய முடியுமா என்று யோசித்து பித்தப்பூ என்ற நாவலை 1959இல் எழுத எண்ணினேன். மூன்று தரம் வெவ்வேறு கோணங்களிலிருந்து வெவ்வேறு வழிகளில் எழுதிப் பார்த்தேன். திருப்தி அளிப்பதாக இல்லை. இப்போது இருக்கிற வடிவம் நான்காவது. எல்லாச் சம்பவங்களும் கற்பனை, பாத்திரங்களும் பொய் என்று சொல்வது நாவல் மரபு. மாறாக இதில் வருகிற எல்லாக் கதாபாத்திரங்களும் சம்பவங்களும் எனக்குத் தெரிந்தவரையில் முழு உண்மை.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47628212699372,"sku":null,"price":64.75,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/bf8e2931751cd2fe724582d1c619272c.jpg?v=1778656877"},{"product_id":"வல்லிசை","title":"வல்லிசை","description":"\u003cp\u003e\u003cspan\u003eஉலுக்குகிறது பறை இசை. விடுதலைக் களிப்போடு துள்ளிக் குதித்து குருதியில் ஒலி மதுவாய் பரவுகிறது. பறை வழியவிடும் இசைமதுவின் போதையில் நான் ஆடுகிறேன். ஒரு கணம்தான். அந்தத் துள்ளிசையின் வசீகரச் சுழலிலிருந்து தப்பித்துக்கொள்ள முயல்கிறேன். எம் மூதாதையரின் பறையொழிப்புப் போராட்ட நினைவுகள் என்னைச் சூழ்கின்றன. இப்போது பறையிசை என்னை சினம்கொள்ளச் செய்து மூளையைத் தெறிக்கவிடுகிறது. பறை தோற்கருவிகளின் பொதுப்பெயர். ஆனால், அது சிலர் மட்டுமே இசைத்திடும் கருவியாக எப்படிச் சாதியோடு பிணைக்கப்பட்டது. இசையில் சுதி வேறுபாடு இருக்கலாம். சாதி வேறுபாடும் இருக்குமா ? பறையை சாதியோடு பிணைத்திருப்பது ஒரு சதி. இது அனைவரும் அறிந்தது. ஆனால், விளக்கங்களைச் சொல்லிக் கொண்டிருப்பதற்கு இது நேரமில்லை. என் கையில் திணிக்கப்பட்ட பறையை நட்ட நடுவெளியில் வீசியெறிகிறேன். அது சமமின்மையை உலுக்கும் வல்லிசையைக் காற்றில் பர்வச்செய்யும். நான் என்னிடமுள்ள தோற்கருவிகளை எரித்துக் குளிர்காயந்தபடி அதை உணர்ந்துகொண்டிருப்பேன்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47628219875564,"sku":null,"price":277.75,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/74ae7ba2e03fdb31244de8a4ac58a508.jpg?v=1778657142"},{"product_id":"கடைசி-வைஸ்ராயின்-மனைவி","title":"கடைசி வைஸ்ராயின் மனைவி","description":"\u003cp\u003e1947ஆம் வருடத்திய வசந்த காலம்.\u003c\/p\u003e\n\u003cp\u003eமௌண்ட் பேட்டன் பிரபுவும் அவரது மனைவி எட்வினாவும் புதுதில்லியில் வந்திறங்கினர். இந்தியாவில் உள்நாட்டுக் கலகம் வெடித்த காலம். எட்வினா தயக்கம் நிறைந்தவர். ஆனால் விதிகளை உடைக்கத் தயங்காதவர். அவருடையது அலைக்கழிப்புக்கு உள்ளான ஆன்மா. பேரழகி, பட்டாசு போன்றவர். வெளியில் தெரிந்தவை மட்டுமல்ல அவர். அவருடைய கவர்ச்சி ஒரு முகப்பு மட்டுமே. அதற்குப் பின்னால் இருந்தது செல்வாக்கும் அதிகாரமும் நிரம்பிய அதிபுத்திசாலியான பெண்மணி.\u003cbr\u003eஅவருடைய உண்மையான இயல்பைப் புரிந்து கொண்டவர் அவருடைய நண்பர் ஜவஹர். அவர்கள் இருவர் வாழ்வை மட்டுமல்ல, பல கோடி இந்தியர்களின் வாழ்வையும் புரட்டிப் போட்ட நிகழ்வுகளும் உறவுகளும் யாரும் ஊகித்திருக்க முடியாதவை.\u003c\/p\u003e\n\u003cp\u003eபிரிவினை காலத்தில் நிகழும், 'கடைசி வைஸ்ராயின் மனைவி’ என்னும் இந்நாவல் இரு நாடுகளின் பிறப்பை, காதலை, துயரத்தை, சோகத்தை, இரக்கமின்மையை, நம்பிக்கையின் வெற்றியைப் பேசும் இதயத்தை உருக்கும் கதை.\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47628225675500,"sku":null,"price":397.75,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/10dadddc2e4bdb143f2f3926025c85c1.jpg?v=1778657571"},{"product_id":"பச்சை-கனவு","title":"பச்சை கனவு","description":"\u003cdiv id=\"Description\" class=\"w3-container w3-border city\"\u003e\n\u003cdiv align=\"justify\"\u003eலா.ச.ராவை வாசிப்பது என்பதே ஒரு அனுபவம்.எழுத்து,வார்த்தை என்ற எல்லையைக் கடந்தது அந்த அனுபவம்!அந்த அனுபவம் தரும் இன்பம் என்பது அலாதியானது.அடர்த்தியும் இறுக்கமும் கொண்ட அவருடைய மொழியில் ததும்பும் கனிவும் ஈரமும் நம்மை வேறு ஒரு மனோநிலைக்குக் கொண்டு சென்றுவிடுகிறது.\u003cbr\u003e\u003cbr\u003eலா.ச.ராவை ஒருபோதும் அறிவினால் தொடமுடியாது.ஆனால்,உணர்வினால் எளிதில் அடைந்துவிட முடியும்.ஏனென்றால்,லா.ச.ராவின் கதைகளில் உண்மை ததும்புகிறது.உண்மையின் தீவிரம் விளங்காமலே அழகும் மெருகும் சேர்ந்த படைப்பாக நம் மனதில் அது ததும்புகிறது.\u003c\/div\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e\n\u003c\/div\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47628237668588,"sku":null,"price":277.15,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/4ec00ef52fd83565ed1f5bd12cae690e.jpg?v=1778658287"},{"product_id":"நிழல்கள்","title":"நிழல்கள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eநகுலனின் கலைஊற்று மிக வளமானது எனும் நம்பிக்கையை இந்நாவல் எனக்கு ஏற்படுத்தியிருக்கிறது. இதன் மூலம் தமிழின் இலக்கியத்தரமான நாவலாசிரியர்களின் வரிசையில் இடம் பிடித்துக்கொள்ளும் இவ்வாசிரியர், எதிர்காலத்தில் நாம் எண்ணிப் பெருமைப்படத்தகுந்த சிருஷ்டிகளைப் படைத்துவிட்டார் என்றால், நான் ஆச்சரியம் அடையமாட்டேன். என் நம்பிக்கை பலித்துவிட்டதை எண்ணித் திருப்திப்படுவதே அப்பொழுது என்னுடைய காரியமாக இருக்கும் -சுந்தர ராமசாமி\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47628270928108,"sku":null,"price":56.4,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/b3d22702864dc1b7b8a0f85d756a3daf.jpg?v=1778660956"},{"product_id":"இந்தியா-1948","title":"இந்தியா 1948","description":"\u003ch4\u003e\u003cb\u003eஇந்தியா 1948 - அசோகமித்திரன்:\u003c\/b\u003e\u003c\/h4\u003e\n\u003ch5\u003eநான் அமெரிக்காவில் இருந்தபோது அவளைச் சந்தித்தது எண்ணி ஆறு முறைதான். அதற்க்குள் எங்கள் உறவிலும் இருவர் குடும்பச் சூழ்நிலையிலும் எவ்வளவு மாற்றங்கள் ஏற்ப்படுத்தியது ! அவள் தரப்பில் அவள் அம்மா தெறியாது ஒரு காரியம் செய்யமாட்டாள், அவள் அமேரிக்கா சென்று படித்தது கூட அவளுடைய அம்மா தந்த ஊக்கத்தால்தான். நான் என் அம்மாவிடம் எப்படி நடந்துகொள்கிறேன் ? மேலோட்டமான விஷயங்கள் தவிர அந்தரங்கம் எதைத் தெரியப்படுத்தியிருக்கிறேன், யோசனை கேட்டிருக்கிறேன் ?\u003c\/h5\u003e\n\u003ch5\u003eஅவளுக்கும் தந்தை அற்பாயுவில் போய்விட்டார், மிகவும் சிக்கலான கூட்டுக் குடும்பம், இப்போது ஒரு வழியாக குடும்பத்தினர் பிரிந்து, சுதந்திரமாகச் செயைல்பட முடிகிறது. என் தகப்பனார் என் சிறு வயதிலேயே இறந்துபோய்விடாமல் இருந்தால் என் வாழ்க்கை பாலக்காடும் அதைச் சுற்றியுள்ள இடங்களில் கைக்கும் வாய்க்கும் எட்டாதபடி அமைந்திருக்கும்.\u003c\/h5\u003e\n\u003ch5\u003eஎனக்கு என் மாமாவைப் பார்க்க வேண்டும் என்றிருந்தது. என் அந்தரங்கத்தை அவரிடம் சொல்லலாம். அவர் என் மாமனாராக இருந்தால்கூட ஒரு குருவாக எனக்கு வழிகாட்டுவார்.\u003c\/h5\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47632052486380,"sku":null,"price":112.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/1948.jpg?v=1778754590"},{"product_id":"ஒரு-நாள்","title":"ஒரு நாள்","description":"\u003cp\u003eஆரம்ப முதலே என் நாவல்களில் பலருக்கும் பிடித்த நாவலாக 'ஒருநாள்' அமைந்ததை என்னால் உணர முடிந்தது. சாத்தனூர் என்ற கிராமமும் அதன் மக்களும் என்னைத் தாக்கிப் பாதித்த வேகத்தில் எழுதிய நாவல். பல சுவாரசியமான மனிதர்களை நானே நேரில் கண்டு தெரிந்துகொள்ள ஆசைப்பட்டு விரிவாக உருவாக்கினேன். இந்த நாவலை எழுதுவதில் எனக்கு ஒரு வேகம் இருந்தது. வேகம் கெட வேண்டும் என்கிற நினைப்புள்ள எனக்குக்கூட இந்த வேகம் பிடித்ததாக இருந்தது. நிரந்தரமான ஓர் உண்மையின் கூறுகள் இந்த நாவலில் வருகிற வாழ்க்கை வழிகளிலும், கதாபாத்திரங்களிலும் அடங்கிக் கிடப்பதாக நான் எண்ணுகிறேன். வாசகர்களில் இந்த தலைமுறையைச் சேர்ந்த சிலரும் அப்படியே எண்ணுவார்கள் என்று நம்புகிறேன்.\u003c\/p\u003e\n\u003cp\u003e- க. நா. சு.\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47632097083628,"sku":null,"price":178.6,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/7f72eaa27f95e207786adefb3fdcfa2c.jpg?v=1778754893"},{"product_id":"காலம்","title":"காலம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஅறுபதுகளின் இறுதியிலிருந்து ஒரு மூன்றாண்டுகள் ஒரு அட்வகேட்டிடம் வக்கீல் குமாஸ்தாவாகப் பணிபுரிந்தபோது நீதித் துறையுடன் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. பல்வேறுவிதமான மனிதர்கள், வழக்குக் கட்டுகள், நீதிமன்ற வளாகங்கள், கட்சிக்-காரர்கள் என அந்த மூன்று ஆண்டுகள் கழிந்தன. ஒவ்வொரு கட்சிக்காரரிடமும் ஒரு கதை இருந்தது. அவற்றையெல்லாம் எழுத இந்த ஆயுள் போதாது. இந்த நாவலுக்கு கருப்புக் கோட்டு என்ற தலைப்பை வைக்கத்தான் முதலில் உத்தேசித்திருந்தேன். ஆனால், வேறு சில காரணங்களுக்காக காலம் என்ற தலைப்பைத் தேர்ந்தெடுக்கும்படி ஆயிற்று. - வண்ணநிலவன்\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47632105603308,"sku":null,"price":112.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/270d9235588be83361e1c8df8f6bcf86.jpg?v=1778755244"},{"product_id":"தபால்காரர்-பெண்டாட்டி","title":"தபால்காரர் பெண்டாட்டி","description":"\u003cp\u003eதபால்காரர்கள் மேல் என்ன காரணத்தாலோ ஒரு வகையான ஈர்ப்பு சின்ன வயசிலிருந்தே எனக்கு ஏற்பட்டுவிட்டது. தபால்காரர்களை நான் தினமும் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. எங்கள் வீட்டுக்கு தினமும் தபால் வரும். \u003c\/p\u003e\n\u003cp\u003eஅப்படித்தான் பரிச்சயமானவர் அந்தத் தபால்காரர். சைக்கிளில் வருவார். நான் பத்திரிகைகளுக்கு பதின்மூன்று வயது தொடங்கி சின்னச் சின்னக் கவிதைகள் அனுப்பிவைப்பேன். அவை திரும்பி வரும். அல்லது பிரசுரிக்க இயலாமைக்கு வருந்துவதாக ஆசிரியர் எழுதி இருப்பார். \u003c\/p\u003e\n\u003cp\u003eஆனால் விரைவில், என் கதை, கவிதை, கட்டுரைகள் பிரசுர மாயின. அவர், என் பக்கத்திலிருந்து, நான் பத்திரிகையைப் பிரித்து, பிரசுரமாகி இருக்கும் என் படைப்பை நானும் படித்து, அவரிடமும் காட்டும் வரை, அவர் என் எதிரிலேயே நின்றிருப்- பார். வாய் திறந்து பாராட்டமாட்டார். ஆனால், அவர் மகிழ்ச்சி யாக உணர்கிறார் என்பதை நான் அறியும்படி இருக்கும்.\u003c\/p\u003e\n\u003cp\u003e- பிரபஞ்சன்\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47632280846572,"sku":null,"price":220.9,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/faa2879cb651ea9090ccd81f58029914.png?v=1778757656"},{"product_id":"சில-இயக்குநர்கள்-சில-திரைப்படங்கள்","title":"சில இயக்குநர்கள் சில திரைப்படங்கள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஇலக்கியத்தையும், சினிமாவையும் இக்கட்டுரைகள் முழுமையாகப் பிரதிபலித்து விட்டன என்றெல்லாம் நான் மார்தட்டிக்கொள்ள விரும்பவில்லை. இரு துறைகளுமே கடல் போன்றது. என்னால் இயன்றவரை, என் அறிவுக்கு எட்டிய வரை தொட்டுக் காட்டியிருக்கிறேன் என்று வேண்டுமானால் சொல்லலாம். இத்துறைகள் குறித்து எழுதுவதற்கு நிறைய இருக்கின்றன. சந்தர்ப்பம் வாய்த்தால் எழுதவும் ஆசை. -வண்ணநிலவன்\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47634200625388,"sku":null,"price":84.6,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/c4cb3469f3089ea4bcce5f16c4282871.jpg?v=1778834667"},{"product_id":"பின்நகர்ந்த-காலம்","title":"பின்நகர்ந்த காலம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஇன்று ஒரு மகத்தான படைப்பாளியாக நம்மிடையே வாழ்ந்துவரும் வண்ணநிலவனின் இளமைக்காலப் பதிவு இந்நூல்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47638766387436,"sku":null,"price":263.2,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/b3b0716689f98a323e0b943e799fcb12.jpg?v=1779088431"},{"product_id":"தாமஸ்-வந்தார்","title":"தாமஸ் வந்தார்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஏசுவை ஒரு மனிதனாகக் காணப் பல கலைஞர்கள்\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eமுயன்று, நாவல்கள் எழுதியிருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஒரு நூறு நாவல்களையேனும் நானும்\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eபடித்திருக்கிறேன். அவையெல்லாம் என் மனதில் ஒதுங்கியிருந்து கொண்டு இந்த நாவலை உருவாக்க உதவின.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eஇந்நாவலை எழுதுவதில் எனக்கு ஒரு பூரணத்துவமும் அமைதியும் ஏற்பட்டது.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eஇன்னொரு விஷயம். மனிதகுலத்தில் என்றுமே\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eஅதிசயங்களை நம்புவது வழக்கத்திலிருந்து வந்திருக்கிறது. பகுத்தறிவு, அறிவியல் என்று\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eஎத்தனை சாதித்தாலும், அதிசயங்கள் தொடருகின்றன. அவற்றின் அளவில் ஏசு, புத்தர், சங்கராச்சாரியர், இன்று ஸாயி பாபா என்று தொடருகின்றன.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47698959499500,"sku":null,"price":188.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/6062c1b01e91f020dad0f88a16c43da3.jpg?v=1780463241"},{"product_id":"இவர்-தமிழர்-இல்லை-என்றால்-எவர்-தமிழர்","title":"இவர் தமிழர் இல்லை என்றால் எவர் தமிழர் ( PART 1 \u0026 2)","description":"\u003cp\u003e\u003cspan\u003eஅவர் ஆரியம் விலக்கிய தமிழையே விரும்பினார்! அவர் முன்வைத்த சமூகநீதித் தத்துவம் என்பது தமிழர்கள் அதிகாரம் பெற்று உன்னதமான இடத்தை அடைவதையே நோக்கமாகக் கொண்டது!. \u0026gt;\u0026gt;அவர் கேட்ட தமிழ்நாடு என்பது தன்னிறைவு பெற்ற முழுமையான தமிழ்த் தேசமே! ஆனால் இன்று அவர் சிலரால் துரோகியாக அடையாளம் காட்டப்படுகிறார். யாருக்கும் எவருக்கும் துரோகம் செய்து வாழ வேண்டிய வாழ்க்கை முறை அவருக்கு இல்லை. \u0026gt;\u0026gt;அவரை விமாசிப்பவர்களுக்கு வேண்டுமானால் அத்தகைய சூழல் இருக்கலாம்! அவர் குறித்த அறியாமையால் சில தமிழ்ப்போலிகள் தமிழ்க்களத்தை நாசம் செய்து வருகிறார்கள். அந்த அவதூறுகளுக்கான பதிலே இது! அவர் வாழ்ந்த காலத்து குடிஅரசு, விடுதலை இதழ்களின் நேரடி பதில்கள் இவை! 75 ஆண்டுகாலம் வெளியான பல்லாயிரக்கணக்கான பக்கங்களில் இருந்து இந்தப் பதிலுரை தயாரிக்கப்பட்டுள்ளது! \u0026gt;\u0026gt;அவர் குறித்த வரலாறு மட்டுமல்ல. அவரைச் சுற்றிலும் 100 ஆண்டுகால அரசியல் இலக்கியக் களங்களின் வரலாறு! அவரோடு சேர்த்து தமிழறிஞர் அனைவரையும் நீங்கள் அறியலாம்! \u0026gt;\u0026gt;சிறியர் கிளப்பிய அவதூறுகளின் மூலமாக உண்மைப் பெரியாரை உணர்த்துகிறது இந்த நூல்!\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47729101340908,"sku":null,"price":1692.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/EVARTAMILAR.jpg?v=1783077019"},{"product_id":"நவீனன்-டைரி","title":"நவீனன் டைரி","description":"\u003cp\u003e\u003cspan\u003eநகுலனின் ’நவீனன் டைரி’ 1976ல் முதற்பதிப்பாக வெளிவந்தது. பின்னர் இது ’நகுலனின் நாவல்கள்’ என்ற தொகுப்பிலும் இடம் பெற்றது. இப்போது தனியாக இரண்டாம் பதிப்பாக வெளிவருகிறது யாருக்கு என் எழுத்துப் பிடிக்கவில்லை என்பதும் எனக்கும் தெரியும். ஒரு சிலருக்கு உடனடியாகவும் காலந்தாழ்த்தியும் பிடிக்கிறது என்பதும் எனக்குத் தெரியும். ஆனால் ஆச்சரியம் என்னவென்றால் எனக்கு என் எழுத்தைப் பற்றிப் பூரண திருப்தியில்லை. நான் இனிச் சொல்லப்போவது உனக்கு ஆச்சரியமாக இருக்கலாம். என்னைவிட நன்றாக எழுதுகிறவர்கள் இருக்கிறார்கள். நான் அவர்களை படித்திருக்கிறேன். ஆனால் ஒரு கட்டத்திற்குப் பிறகு எனக்கு அவர்கள் எழுத்துக்களிலும் பூரண திருப்தி ஏற்படுகிறதேயில்லை. சொல்லப் போனால் தமிழிலேயே மிகச் சிறந்த எழுத்தாளராகக் கருதப்படும் நல்ல சிவன் பிள்ளையின் எழுத்தில்கூட... அவருடைய எழுத்தைப் பற்றி என்னவெல்லாமோ சொல்கிறார்கள்.-நகுலன்\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47926084305132,"sku":null,"price":225.6,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/e0bf0688c0b4cff0fd9e37f894e1a05b.jpg?v=1783762836"},{"product_id":"மானுடம்-வெல்லும்-1","title":"மானுடம் வெல்லும்","description":"\u003cp\u003e\u003cspan\u003eமானுடம் வெல்லும் எனும் இந்நாவல் தமிழ் நாவல் வரலாற்றில் பல வகைகளில் தொடக்க-மாகவும் முதலாகவும் வைத்து எண்ணும் சிறப்பம்-சங்களைக் கொண்டது. பிரெஞ்ச் ஆதிக்கத்தின் கீழ் சுமார் முந்நூறு ஆண்டுகள் இருந்த இன்றைய புதுச்சேரி மாநிலத்தின் மற்றும் தென்னார்க்காடு மாவட்டத்தின் தமிழ் வாழ்க்கையையும் பிரெஞ்சுக்-காரர்கள் மூலம் தமிழர் கற்றுக்-கொண்ட பிரெஞ்ச்-தமிழ் வாழ்க்கையையும் கலை நேர்த்தியுடன் படைத்தளிக்கிறது இந்நாவல். அக்காலத்திய பிரெஞ்ச்-- -தமிழர் மொழி, வாழ்க்கை, பண்பாடு முதலான பல வகைகளிலும் கவனம் கொண்டு எழுதப்பட்டது இந்நாவல்\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47926387867884,"sku":null,"price":329.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/d4675309bbd0131d5ed158a26cbee7f7_3624294d-8619-4b3b-9bda-15611a28fef4.jpg?v=1783763764"},{"product_id":"சூதாடி","title":"சூதாடி","description":"\u003cp\u003e\u003cspan\u003eஇந்த நாவல் சூதாட்டம் தவறு என்ற ஒழுக்க போதனையோ அளிக்கும் நாவல் அல்ல.முக்கியமாக ஒரு சூதாடியின் மனம் எப்படி தர்க்கம் புரியும் என்பதே நாவலின் மையம்.அது அடுத்த முறை வெற்றி பெற்றுவிடுவேன் என்று தர்க்கம் புரியும். அந்த தர்க்கமே அவனை தொடர்ந்து சூதாட வைத்து சூதாடியாகவே இருக்க வைக்கும்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47926447210732,"sku":null,"price":235.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/soodhadi-10022370-550x550h.jpg?v=1783763966"},{"product_id":"நாய்கள்","title":"நாய்கள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஒரு மனிதனை நாய் என்று குறிப்பிட்டால் அதை நாம் ஏன் ஒரு சம்பிரதாய வசைமொழியாக கொள்ள வேண்டும் என்று எனக்குத் தோன்றிற்று! நாய் என்பதை ஒரு தத்துவக்குறியீடாக அமைத்துக்கொண்டு அதைத் தொடர்ந்து விசாரணை செய்வதே இந்த நாவலின் ஒரு முக்கிய நோக்கம்\\ நான் சந்தித்த மனிதர்கள், நான் படித்த புத்தகங்கள், நான் பெற்ற அனுபவங்கள் இவைகள்தான் என் படைப்புக்கு உதவும் ஆதாரத் தகவல்கள். ஆனால், எனது எந்த நாவலும் இந்தத் தகவல்களின் நகல்கள்; (கலையே நகல் என்பதையும் இங்கு ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்) அல்ல. அவைகளை அப்படிக் கருதினால் நான் அதற்கு ஜவாப்தாரியில்லை.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47926578217196,"sku":null,"price":112.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/8171382b91b01b7502181f37315c5fba.jpg?v=1783764262"},{"product_id":"ருசி","title":"ருசி","description":"\u003cp\u003eபெண்ணைப் பற்றி எழுதுவது என்பது என்னைப் பற்றி எழுதுவது என்றே உணர்கிறேன். என் அம்மா, மனைவி, சகோதரிகள், தோழிகள் என்று எத்தனை பெண்களின் அன்பிலும் அருளிலும் நான் வாழ்கிறேன். எனக்கு அறிவும் ஞானமும் தந்ததில் அவர்களின் பங்கு மிகப் பெரிதல்லவா? அவர்களின் சந்தோஷத்தை நான் பெற்றதாகத் துய்க்கிற நான், அவர்களின் துன்பத்தையும் பங்கு கொள்கிறவனாக இருப்பது தானே மனிதாம்சம். எழுதுவதுதான் என்னால் முடிந்தது. அப்படித்தான் நான் பங்கு கொள்கிறேன்.\u003c\/p\u003e\n\u003cp\u003e- பிரபஞ்சன்\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47926699196652,"sku":null,"price":235.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/d10e9974d0259f277fb22480498dbb8d.jpg?v=1783764451"},{"product_id":"நாகம்மாள்","title":"நாகம்மாள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eநாகம்மாள் என்னும் பாத்திரத்தை மையமாகக் கொண்ட இந்த நாவல், பெண்ணைச் சுயசிந்தனையும் செயல்பாடும் உடையவளாகப் படைத்த விதத்தில் முதன்மைத் தன்மை வாய்ந்தது. தமிழின் தொடக்க நாவல்கள் பெரும்பாலும் பெண்களையும் அவர்கள் பிரச்சினைகளையும் பற்றியவையே. ஆனால் அவற்றில் வரும் பெண்களுக்குச் சுயமுகம் எதுவுமில்லை. ஆண்கள் பரிதாபப்பட்டு வழங்கும் அடையாளங்களைத் தரித்தவர்களாகவே அவர்கள் உள்ளனர். நாகம்மாளை அந்த வரிசையில் சேர்க்க முடியாது. தன் சுதந்திரத்திற்காகவும் எதிர்காலத்திற்காகவும் தன் சக்திக்கு உட்பட்டுக் கலகத்தைத் தோற்றுவிக்கும் இயல்புடையவளாக நாகம்மாள் விளங்குகிறாள் -பெருமாள்முருகன்\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47926738190572,"sku":null,"price":141.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/5afce114c13ccf99f07031d09fbf086c.jpg?v=1783764717"},{"product_id":"மகாநதி-1","title":"மகாநதி","description":"\u003cp\u003e\u003cspan\u003eவாழ்க்கை எனும் மகாநதி, பொங்கிப் பிரவகித்து, மூர்க்கமும் மூர்த்தன்யமும் பொருந்த, திகிலேற்றுகிற மோகினிக் கவர்ச்சியுடன் நடந்து செல்லும் பேரழகை நீங்கள் என்றேனும், ஓர் கணமேனும் தரிசித்ததுண்டா? நான் அதை அனுபவித்திருக்கிறேன். குலைநடுங்க, மேனிபுளகம் உற, அச்சத்தால் உலர்ந்து, சந்தோஷத்தால் கிளர்ந்து, பெருவிருப்போடு உயிர் தோய்ந்து நான் அனுபவித்திருக்கிறேன். இடையறாது ஓடிக்கொண்டிருக்கும் மகாநதி, ஒரு கணம் சட்டென்று உறைந்து நின்று, பின்னர் பெருக்கெடுத்தால் எப்படி இருக்கும்? அதி அற்புத அனுபவம் அது! அந்த அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ளவே இந்த நாவல். - பிரபஞ்சன்\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47926872670444,"sku":null,"price":225.6,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/a6cd3b93d55e6874dadfc547c54ecb44.jpg?v=1783764845"},{"product_id":"நீர்வழிப்-படூஉம்","title":"நீர்வழிப் படூஉம்","description":"\u003cp\u003e\u003cstrong\u003e\u003cspan\u003eநீர்வழிப் படூஉம்\u003c\/span\u003e\u003c\/strong\u003e\u003cspan\u003e – \u003c\/span\u003e\u003cstrong\u003e\u003cspan\u003eதேவிபாரதி\u003c\/span\u003e\u003c\/strong\u003e\u003cspan\u003e எழுதிய இந்நாவல், மனித வாழ்வின் சிக்கல்கள், உறவுகளின் நுட்பங்கள் மற்றும் சமூக மாற்றங்களின் தாக்கத்தை ஆழமாகப் பதிவு செய்கிறது. உணர்வுபூர்வமான கதையோட்டம், செறிவான மொழிநடை மற்றும் சிந்திக்க வைக்கும் நிகழ்வுகளால் வாசகர்களை ஈர்க்கும் இந்நூல், சமகாலத் தமிழ் இலக்கியத்தில் குறிப்பிடத்தக்க படைப்பாகத் திகழ்கிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47926906978540,"sku":null,"price":235.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/ddbc3621984acd518c1f4b8927f942b2.jpg?v=1783765123"},{"product_id":"தபால்காரர்-பெண்டாட்டி-1","title":"தபால்காரர் பெண்டாட்டி","description":"\u003cp\u003eதபால்காரர்கள் மேல் என்ன காரணத்தாலோ ஒரு வகையான ஈர்ப்பு சின்ன வயசிலிருந்தே எனக்கு ஏற்பட்டுவிட்டது. தபால்காரர்களை நான் தினமும் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. எங்கள் வீட்டுக்கு தினமும் தபால் வரும்.\u003c\/p\u003e\n\u003cp\u003eஅப்படித்தான் பரிச்சயமானவர் அந்தத் தபால்காரர். சைக்கிளில் வருவார். நான் பத்திரிகைகளுக்கு பதின்மூன்று வயது தொடங்கி சின்னச் சின்னக் கவிதைகள் அனுப்பிவைப்பேன். அவை திரும்பி வரும். அல்லது பிரசுரிக்க இயலாமைக்கு வருந்துவதாக ஆசிரியர் எழுதி இருப்பார்.\u003c\/p\u003e\n\u003cp\u003eஆனால் விரைவில், என் கதை, கவிதை, கட்டுரைகள் பிரசுர மாயின. அவர், என் பக்கத்திலிருந்து, நான் பத்திரிகையைப் பிரித்து, பிரசுரமாகி இருக்கும் என் படைப்பை நானும் படித்து, அவரிடமும் காட்டும் வரை, அவர் என் எதிரிலேயே நின்றிருப்- பார். வாய் திறந்து பாராட்டமாட்டார். ஆனால், அவர் மகிழ்ச்சி யாக உணர்கிறார் என்பதை நான் அறியும்படி இருக்கும்.\u003c\/p\u003e\n\u003cp\u003e- பிரபஞ்சன்\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47926954033388,"sku":null,"price":235.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/2ebf74d0041a0e9e5419cd607d9cdcdd.jpg?v=1783765507"},{"product_id":"ஒரு-ஊரில்-ரெண்டு-மனிதர்கள்","title":"ஒரு ஊரில் ரெண்டு மனிதர்கள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஎனக்கு மிகவும் பிடித்த தொகுதி, ஒரு ஊரில் ரெண்டு மனிதர்கள். இது என் எழுத்து வாழ்க்கையில் முதல் முதலாக 1982ஆம் ஆண்டு வெளியாகி, தமிழ் வாசகர் மனதில் எனக் கொரு அறையை ஏற்படுத்திய தொகுதி என்பது ஒரு காரணம். இரண்டாவது, தமிழ்நாடு அரசால் 1982ஆம் ஆண்டுக்கான சிறந்த சிறுகதைத் தொகுதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது... இந்தத் தொகுதியில் இருக்கும் பிரும்மம் கதையை அந்த ஆண்டின் சிறந்த கதையாக இலக்கியச் சிந்தனைக்காகத் தேர்ந்தெடுத்தவர் எழுத்தாளர் கரிச்சான் குஞ்சு. இந்தக் கதை வெளிவந்தது கணையாழியில், தி. ஜானகிராமன் ஆசிரியராக இருந்தபோது. என்னை அவர் பாராட்டினார். மேலும் அவருடன் பெல்ஸ் சாலையிலிருந்து, ரத்னா கபே வரை நடந்து வந்து காப்பி சாப்பிட்டுச் செலவிட்டுக் களித்த ஒரு நீண்ட மாலை வேளையையும் பிரும்மம் எனக்குத் தந்தது. - பிரபஞ்சன்\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47926970515692,"sku":null,"price":150.4,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/5071d4470b3270a975cb496e222d03e0.jpg?v=1783765585"},{"product_id":"ஒரு-நாள்-1","title":"ஒரு நாள்","description":"\u003cp\u003e\u003ci\u003e\u003cspan dir=\"auto\"\u003eஒரு நாள் என்பது\u003cspan\u003e \u003c\/span\u003e\u003c\/span\u003e\u003c\/i\u003e\u003cspan dir=\"auto\"\u003e\u003c\/span\u003e\u003ca href=\"https:\/\/tamil.wiki\/wiki\/Ka.Na._Subramaniam\" title=\"கா.நா. சுப்ரமணியம்\"\u003e\u003cspan dir=\"auto\"\u003eகா.நா. சுப்பிரமணியம்\u003c\/span\u003e\u003c\/a\u003e\u003cspan dir=\"auto\"\u003e\u003cspan\u003e \u003c\/span\u003eஎழுதிய ஒரு புதினம்\u003cspan\u003e \u003c\/span\u003e. இரண்டாம் உலகப் போரில் போரிட்ட படைவீரரான மேஜர் மூர்த்தி,\u003cspan\u003e \u003c\/span\u003e\u003c\/span\u003e\u003ci\u003e\u003cspan dir=\"auto\"\u003eசாத்தனூர் சர்வமணிய அக்ரஹாரத்திற்கு வந்து,\u003cspan\u003e \u003c\/span\u003e\u003c\/span\u003e\u003c\/i\u003e\u003cspan dir=\"auto\"\u003e\u003c\/span\u003e\u003ci\u003e\u003cspan dir=\"auto\"\u003eஅங்குள்ள\u003c\/span\u003e\u003c\/i\u003e\u003cspan dir=\"auto\"\u003e\u003cspan\u003e \u003c\/span\u003eபாரம்பரியமான மற்றும் நிலையான வாழ்க்கையைக் கண்டு\u003cspan\u003e \u003c\/span\u003e, அங்கேயே தங்கிவிட முடிவு செய்கிறார். இந்த புதினம் ஒரே நாளில் நடக்கும் நிகழ்வுகளைக் கொண்டிருப்பதால், அக்காலத்தில் தமிழ் இலக்கியத்தில் இது புதியதாகவும் தனித்துவமானதாகவும் கருதப்பட்டது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47927024222444,"sku":null,"price":178.6,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/7f72eaa27f95e207786adefb3fdcfa2c_83be7310-c959-48a5-8826-a80fcc5ae378.jpg?v=1783765971"},{"product_id":"மதகுரு","title":"மதகுரு","description":"\u003cp\u003e1931-இல் கல்கத்தாவில், இம்பீரியல் லைப்ரரியில். என்னுடைய பத்தொன்பதாவது வயதில். நான் முதன்முதலாக இந்த மதகுரு நாவலைப் படித்தேன். அன்றுமுதல் இன்றுவரை இந்த இருபத்தைந்து வருஷங்களில் நான் இதை, ஆதிமுதல் அந்தம்வரை. ஐம்பது தடவைகளாவது படித்திருப்பேன். இப்போது மொழிபெயர்க்க உட்காரும்போதுகூட நாலு பக்கம் மொழிபெயர்த்தால் தொடர்ந்து நாற்பது பக்கம் படித்துவிட்டுத்தான் அடுத்த நாலுபக்கம் மொழி பெயர்ப்பது என்று ஏற்பட்டுவிட்டது.\u003c\/p\u003e\n\u003cp\u003eபடிக்கும்தோறும், படிக்கும்தோறும் இந்த நாவலில் என் ஈடுபாடு அதிகரிக்கிறது. ஒவ்வொரு தடவையும் புதிது புதிதாக நான் பல உணர்ச்சி அனுபவங்களைப் பெறுகிறேன். முந்திய தடவை கவனிக்காத பல புதுப்புது அர்த்தங்கள் ஒவ்வொரு தடவை வாசிக்கும் போதும் எனக்குத் தோன்றுகின்றன. செல்மா லாகர்லெவ் என்கிற ஸ்வீடிஷ் ஆசிரியையிடம் எனக்கு ஒவ்வொரு தடவையும் மதகுரு நாவலைப் படித்து முடிக்கும்போது பயமும் பக்தியும் அதிகரிக்கிறது. உலக இலக்கியத்தின் முதல் வரிசையில் நிற்கக் கூடியவை என்று நினைக்கத்தக்க நூல்களில் மதகுரு நாவலும் ஒன்று என்பதை ஒவ்வொரு தடவையும் நான் ஊர்ஜிதப்படுத்திக் கொள்கிறேன்.\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47927097557228,"sku":null,"price":470.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/e9995c4f9f0da81a406dbdbb92b811ca.jpg?v=1783766452"},{"product_id":"மூன்று-ஆண்டுகள்","title":"மூன்று ஆண்டுகள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eமூன்று ஆண்டுகள்\" கதை பூர்ணத்துவம் அடையாத காதலை வருணிக்கிறது. மாபெரும் ருஷ்ய எழுத்தாளரான அந்தோன் சேகவ் 1895ஆம் ஆண்டில் இந்தக் கதையை எழுதினார். இது அவருடைய மிகச் சிறந்த படைப்புகளில் ஒன்றாகும்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47927127769324,"sku":null,"price":141.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/176bc3109cb3936dd2d797f41c846042.jpg?v=1783766507"},{"product_id":"பிரபஞ்சன்-சிறுகதைகள்-முழுத்-தொகுப்பு-1-and-2","title":"பிரபஞ்சன் சிறுகதைகள் முழுத் தொகுப்பு (1 and 2)","description":"\u003cp\u003e\u003cstrong\u003e\u003cspan\u003eபிரபஞ்சன் சிறுகதைகள் – முழுத் தொகுப்பு\u003c\/span\u003e\u003c\/strong\u003e\u003cspan\u003e என்பது எழுத்தாளர் \u003c\/span\u003e\u003cstrong\u003e\u003cspan\u003eபிரபஞ்சன்\u003c\/span\u003e\u003c\/strong\u003e\u003cspan\u003e எழுதிய சிறந்த சிறுகதைகளை ஒருங்கிணைக்கும் முழுமையான தொகுப்பாகும். மனித உணர்வுகள், சமூக வாழ்வு, உறவுகள், அரசியல், வரலாறு மற்றும் அன்றாட வாழ்க்கையின் பல்வேறு பரிமாணங்களை ஆழமான பார்வையுடனும் எளிமையான மொழிநடையுடனும் பதிவு செய்கிறது. தமிழ் சிறுகதை இலக்கியத்தை விரும்பும் ஒவ்வொரு வாசகரும் அவசியம் படிக்க வேண்டிய அரிய தொகுப்பாக இந்நூல் விளங்குகிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47927188586732,"sku":null,"price":1410.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/bd47503809da6efa76cb8963e5324bb1.jpg?v=1783767373"},{"product_id":"பொன்னியின்-செல்வன்","title":"பொன்னியின் செல்வன்","description":"\u003cp\u003e\u003cspan\u003eபேராசிரியர் அமரர் கல்கி பற்றியோ, அவரின் எழுத்தாற்றல் பற்றியோ தமிழ்கூறும் நல்லுலகுக்கு புதிதாகச் சொல்வதற்கு எதுவுமில்லை. அவருடைய படைப்பின் மகிமை அத்தகையது. அவரின் சரித்திரக் காப்பியங்களான பார்த்திபன் கனவு, சிவகாமியின் சபதம், பொன்னியின் செல்வன் போன்றவை காலத்தால் அழியாத காவியங்களாக போற்றப்படுபவை. இன்னும் எத்தனை நூறாண்டு காலத்துக்குப் பிறகு அவற்றை எடுத்துப் படித்தாலும், அமரர் கல்கியின் மயக்கும் நடையும், எளிமையும் இனிமையும் நிரம்பிய தமிழும், கதையின் வசீகரப் போக்கும் ஓர் இனிய சுழலுக்குள் நம்மை இழுத்துப் போவதை உணரலாம். சரித்திரத்தையும் கற்பனையையும் மிகத் திறமையாகக் குழைத்து அமரர் கல்கி படைத்திருக்கும் புதினமான ‘பொன்னியின் செல்வன்’, தமிழ் வாசகர்களுக்குக் கிடைத்த ஓர் இலக்கிய வரம் என்றே சொல்லலாம். \u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47934408524012,"sku":null,"price":1128.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/PONIYIN12345.jpg?v=1783916687"}],"url":"https:\/\/centaram.com\/collections\/natrinai-pathippagam.oembed?page=2","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}