{"title":"நாஞ்சில் நாடன்","description":"","products":[{"product_id":"வழுக்குப்-பாறை","title":"வழுக்குப் பாறை","description":"\u003cp\u003e\u003cspan\u003eகுவலயம் கண்கூச வீசியெறி வானப் பரப்பெங்கும் விண்மீனாய்ச் சுடரும் தமிழ்ச் சொற்கள் அவை ஊரான் முதலல்ல தம்பி, உன்மொழியின் வெள்ளாமை ஏழைக்கு இரங்குபவள் கலைமகள் மாத்திரமே சோத்துக்குச் செத்தாலும் சொல்லுக்குச் சாகாதே, தொன்மைத் தமிழ்க் குடியே\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47643403583724,"sku":null,"price":122.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/5f17f3ae38a04cbbab0dbe44e65bf81c.jpg?v=1779170018"},{"product_id":"நவம்","title":"நவம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47643409514732,"sku":null,"price":141.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/fb2b2d44088887b1a4bdf462cc0eab62.jpg?v=1779170717"},{"product_id":"எப்படிப்-பாடுவேனோ","title":"எப்படிப் பாடுவேனோ","description":"\u003cp\u003e\u003cspan\u003eஎனது கட்டுரை நூல்களின் வரிசையில் பத்தாவது இது. 'பையத் தின்றால் பனையும் தின்னலாம்' என்று நம் மூதாதையர்கள் அறியாமலா சொன்னார்கள்! பனை எனில் பனை மரம் என்று மட்டும் பொருள் அல்ல. ஒரு பேரளவு, என்றும் பொருள் தருவது. தொல் காப்பியம், எழுத்ததிகாரம், 169-வது நூற்பா. பனையில் எதிர்ப்பதம் தினை என்றும் அறிக. எனவே 2012-2013ல் எழுதிய கட்டுரைகளும், முன்னுரைகளுமாக இத்தொகுப்பு உங்கள் பார்வைக்கு வருகிறது. சம்பிரதாயமான முன்னுரைகளை நான் எழுதுவதில்லை. பிறிதொரு படைப்பாளியின் நூலை மையப்படுத்தும் கட்டுரையாகவே அது இருக்கும். இளைய படைப்பாளிகள் என்பதால் சிறப்புக்களை மட்டுமே சிலாகித்துப் போகிறேன். \u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47643434025196,"sku":null,"price":136.3,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/5c46b3153a29834e793d2550d7f0d0fb.jpg?v=1779170913"},{"product_id":"திகம்பரம்","title":"திகம்பரம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eகடக்கக் கடக்கக் கடல் என்பார் இசைக்கவி ரமணன். எழுத எழுத இடம் விட்டுக் கொண்டே இருந்தது கட்டுரை . எனக்கும் ஒரு சுவாரசியம் தட்ட ஆரம்பித்தது. கட்டுரையும் கதைபோல் தீவிரமான ஈர்ப்புடன் வாசிக்கப்படவேண்டும், அலுப்பூட்டக் கூடாது என்றெல்லாம் கனவுகளும் இருந்தன. அந்தக் கனவு மெய்ப்பட்டு வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. \u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47643441463532,"sku":null,"price":150.4,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/65c295b481dc7f773049631eb128b336.jpg?v=1779171181"},{"product_id":"கைம்மண்-அளவு","title":"கைம்மண் அளவு","description":"\u003cp\u003e\u003cspan\u003eகடவுள் என்பவர் யாருடைய கடவுள்? தங்கத்தேர் இழுப்பவர், மணி மண்டபங்கள் பணி செய்து கொடுப்பவர், தங்க அங்கியும் வைரமணி முடியும் அணிவிப்பவரின் கடவுளா? அல்லது நான்கு மணி நேரம் வரிசையில் நிற்பவரின் கடவுளா? அன்னதானம் வாங்கிப் பசியாறு பவரின் கடவுளா?* மிகவும் மலிவான கால் குப்பி மதுவின் விலை 98 ரூபாய் என்றால் அதில் நாற்பத்தைந்து ரூபாய் அரசாங்கத்துக்கு, முப்பது ரூபாய் தயாரிப்பாளன் ஆதாயம், மிச்சம் உற்பத்திச் செலவு. யாரிதில் இடைத்தரகர் கனவான்களே? தரகர்களால்amp;nbsp; தரகர்களுக்காக தரகர்களே நடத்தும் தரகாட்சி! அதன் மாற்றுப் பெயர்தான் மக்களாட்சி என்பது.* பண்டைய கோயில்களில் சிற்பங்களாக, ஓவியங்களாக வடித்தோ, தீட்டியோ வைத்திருப்பார்கள்...\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47643474690284,"sku":null,"price":282.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/de1582573b8290d1c590f0bd8c479e16.jpg?v=1779171919"},{"product_id":"விசும்பின்-துளி","title":"விசும்பின் துளி","description":"\u003cp\u003e\u003cspan\u003eஇலக்கியம், மொழி, மனித உறவுகள் என பல திசைகளிலும் பயணிக்கும் 40 கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். அனைத்துக் கட்டுரைகளிலும் வெளிப்படும் நூலாசிரியரின் தனித்துவமான பார்வை நம்மை வியக்க வைக்கிறது. படைப்பிலக்கியவாதியான நூலாசிரியரின் தமிழ் மொழியறிவைப் பறைசாற்றும் கட்டுரைகளும் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. பல நூல்களுக்கு நூலாசிரியர் எழுதிய முன்னுரைகளும் உள்ளன. படைப்புகளைப் பற்றியும், படைப்பாளிகளைப் பற்றியும் அவரின் கருத்துகளைத் தெரிந்து கொள்ள முடிகிறது. எழுத்தாளர் ஜெயமோகன், கி.ராஜநாராயணன் உள்ளிட்ட பல படைப்பாளிகளுடனான நூலாசிரியரின் தொடர்பு, அவர்களுடனான அனுபவங்களைச் சொல்லும் கட்டுரைகளும் இடம் பெற்றுள்ளன. \u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47643484913900,"sku":null,"price":206.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/b6e915f3a404e946f5fa856d26007235.jpg?v=1779172205"},{"product_id":"நேர்காணல்கள்","title":"நேர்காணல்கள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஇருபது ஆண்டுகளாகக் காணப்பட்ட செவ்விகளின் தொகை என்பதால், சில தகவல்கள் திரும்பத் திரும்ப வரும். சில பெயர்களும் மறுபடி மறுபடி வரும், கூடுமானவரை தவிர்த்தும் தேவை கருதி அனுமதித்தும் இருக்கிறேன்.சற்று யோசித்துப் பார்கையில், சில பொய்க் கூற்றுக்களுக்கு எதிர் வினையாற்ற, தப்பான புரிதல்களை செம்மைப்படுத்திக் கொள்ள, எனக்குள்ளும் பிறர்க்குள்ளும் இருக்கும் காழ்ப்புக் கிழங்கை அகழ்ந்து எடுக்க, இந்த நேர்காணல்கள் எனக்குப் பயன்பட்டிருக்கின்றன. \u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47643660157164,"sku":null,"price":206.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/2.jpg?v=1779173954"},{"product_id":"பிராந்து","title":"பிராந்து","description":"","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47643705868524,"sku":null,"price":141.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/c56e2f97b9fd13d3c134e5f5753553a3.jpg?v=1779174713"},{"product_id":"தலைகீழ்-விகிதங்கள்","title":"தலைகீழ் விகிதங்கள்","description":"\u003cp class=\"MsoNormal\"\u003e\u003cspan lang=\"EN-IN\"\u003e1970களில் வேலையில்லாத் திண்டாட்டம் பெரும் பிரச்சினையாக இருந்தது. இந்திய இளைஞர்களை வாட்டி வதைத்த இந்த நெருக்கடி அவர்கள் வாழ்விலும் நம்பிக்கைகளிலும் விழுமியங்களிலும் பெரும் தாக்கத்தைச் செலுத்தியிருந்தது. இளைஞர்களிடையே போராட்டக் குணமும் அரசியல் விழிப்புணர்வும் அதிகம் இருந்த அந்தக் காலகட்டத்தின் போராட்டமயமான வாழ்வைச் சொல்லும் கதைதான் நாஞ்சில் நாடனின்\u003cspan\u003e \u003c\/span\u003e\u003c\/span\u003e\u003cspan\u003e‘\u003cspan lang=\"EN-IN\"\u003eதலைகீழ் விகிதங்கள்' நாவல்.\u003c\/span\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp class=\"MsoNormal\"\u003e\u003cspan lang=\"EN-IN\"\u003eஅன்றைய தலைமுறையினரின் அகப்போராட்டங்களை நாஞ்சில் நாடன் சித்தரித்துள்ள விதம், இன்றைய தலைமுறையினரின் அகப்போராட்டங்களை அக்கறையுடன் அணுக உதவுகிறது. காலம் மாறியும் சூழல்கள் மாறியும் வாழ்வின் சில விகிதங்கள் மாறுவதே இல்லை என்பதை உணர்த்தும் இந்த நாவல் வெளியாகிக் கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு ஆன பிறகும் தன்னுடைய புத்துணர்வைத் தக்கவைத்துக்கொண்டிருப்பதே இதன் வெற்றி.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47648904773868,"sku":null,"price":366.6,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/e87d31595901fd4c640b8bc6f59cc9ba.jpg?v=1779275221"},{"product_id":"நாஞ்சில்-நாட்டு-உணவு","title":"நாஞ்சில் நாட்டு உணவு","description":"\u003cdiv class=\"row d-flex justify-content-center\"\u003e\n\u003cdiv class=\"col-lg-9 col-12\"\u003e\n\u003cdiv class=\"product__info__detailed\"\u003e\n\u003cdiv class=\"tab__container\"\u003e\n\u003cdiv class=\"pro__tab_label tab-pane fade show active\" id=\"nav-about\" role=\"tabpanel\"\u003e\n\u003cdiv class=\"description__attribute\"\u003e\n\u003cp class=\"MsoNormal\"\u003e\u003cspan\u003e-உயிர் வாழ்வதற்காக மட்டும் உணவு என்பதை நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளர்கள் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். உணவுப் பழக்கம் வட்டாரம், பண்பாடு, விழா, சடங்கு, வழிபாடு, விரதம் எனப் பண்பாட்டுக் கூறுகளைச் சார்ந்தது. பழமையான பண்பாடும் வரலாறும் கொண்ட நாஞ்சில் நாட்டு உணவுப் பழக்கங்களை நாஞ்சில் நாடன் முதல் முறையாகத் தொகுத்திருக்கிறார். இது நீண்டகாலச் சேகரிப்பு. ஒரு படைப்பாளி இதுபோன்ற முயற்சிகளை மேற்கொள்வது சவாலான விஷயம். இது சமையல் புத்தகம் அல்ல. ஆனால் சமையல் பக்குவத்தையும் சொல்கிறது. உணவின் மூலம் தாக்கம் செலுத்தும் பண்பாட்டுச் சிதறல்கள் இதில் உள்ளன. பானம், சோறு, பலகாரம், குழம்பு, பாயசம், மாமிச உணவு என வகுத்துக்கொண்டு, அவற்றின் பண்பாட்டு விஷயங்களைப் படைப்பாளிக்குரிய மொழிநடையில் சொல்கிறார். தமிழில் இந்த வகையில் இதுதான் முதல் ஆக்கம்.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cdiv id=\":qm\" class=\"hq gt\"\u003e\u003c\/div\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47652381327596,"sku":null,"price":554.6,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/716edb1c00e158dbe9921b18c833dcd6.jpg?v=1779359724"},{"product_id":"சாலப்பரிந்து","title":"சாலப்பரிந்து","description":"\u003cp\u003e\u003cspan\u003eநாஞ்சில் நாடனின் கதை என்பது கண்ணால் கண்ட காட்சியையோ காதால் கேட்ட செய்தியையோ மனதால் விரித்துகொண்ட கற்பனையையோ மாத்திரம் நம்பி எழுதப்பட்ட புனைவு அல்ல. மாறாக அவருடைய கதைகளின் சாராம்சத்தில் உள்ளுறைந்திருப்பது தொன்மையான ஒரு நிலமும், அதன் மொழியும் அவற்றின் தொகை விரிவான பண்பாட்டு செழுமையும் ஆகும். பின்னைப் புதுமையை தாவிப் பற்றும் நாட்டத்தால் உயிர்ப்பான மரபினின்றும் தன் வேர்களை துண்டித்துக் கொண்டு விடாத தன்மையால், காருண்யத்தை நீதியுணர்வை விழுமியங்களை வற்புறுத்தும் வகைமையால் தனித்து நிற்பவை இவரது கதைகள். நாஞ்சிலின் நாற்பது வருடத்துக்கு மேலான எழுத்து வாழ்வின் தடத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் இத்தொகுப்பில் அவருடைய ஆகச் சிறந்த கதைகள் இடம்பெற்றுள்ளன.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47655094092012,"sku":null,"price":282.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/04f0d46ac35f11e3c5bcbe81b3e9fbe9.jpg?v=1779439996"},{"product_id":"பாடுக-பாட்டே","title":"பாடுக பாட்டே","description":"\u003cp\u003e\u003cspan\u003eபண்டு நம்மிடம் கவிதை எனும் சொல் இல்லை. பாடல், பாட்டு அல்லது செய்யுள் தான். இயற்கையை, வீரத்தை, கொடையை, அழகை, அறத்தை, நீதியை, வறுமையை, துன்பத்தை எல்லாம் பழம்புலவர் பாட்டாக பாடி வைத்தனர். பாடுக பாட்டே எனுமிந்தத் தொடரின் பொருள் சிறப்புகளை பாட்டாக பாடுவாயாக என்பது. சிலநூறு ஆண்டுகளுக்கு முன்பு, தமிழில் சாத்தியமான சில பாடல்களின் சிறப்புகளை கண்டு பாடியிருக்கிறார் நூலாசிரியர்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47946871472364,"sku":null,"price":141.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/PAADUGAPAATE.jpg?v=1784104360"},{"product_id":"தீதும்-நன்றும்","title":"தீதும் நன்றும்","description":"\u003cp\u003e\u003cstrong\u003e\u003cspan\u003eதீதும் நன்றும்\"\u003c\/span\u003e\u003c\/strong\u003e\u003cspan\u003e என்பது சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் \u003c\/span\u003e\u003cstrong\u003e\u003cspan\u003eநாஞ்சில் நாடன்\u003c\/span\u003e\u003c\/strong\u003e\u003cspan\u003e அவர்கள் \u003c\/span\u003e\u003cem\u003e\u003cspan\u003eஆனந்த விகடன்\u003c\/span\u003e\u003c\/em\u003e\u003cspan\u003e இதழில் தொடர்ந்து எழுதிய சிந்தனைத் தூண்டும் கட்டுரைகளின் தொகுப்பாகும். சமூக, அரசியல், கல்வி, பண்பாடு, சுற்றுச்சூழல், மனிதநேயம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை ஆழ்ந்த பார்வையுடனும், நகைச்சுவை கலந்த நையாண்டி நடையுடனும் அலசும் இந்த நூல், வாசகர்களை சிந்திக்க வைக்கும் அரிய படைப்பாக விளங்குகிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47946942611692,"sku":null,"price":235.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/THETHUM.jpg?v=1784105562"}],"url":"https:\/\/centaram.com\/collections\/nanjil-nadan.oembed","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}