{"title":"என். ஸ்ரீராம்","description":"","products":[{"product_id":"என்-ஸ்ரீராம்-தேர்ந்தெடுத்த-சிறுகதைகள்","title":"என்.ஸ்ரீராம் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eகிராமத்து வெளிசார்ந்த வாழ்க்கையைப் பதிவாக்கியுள்ள என். ஸ்ரீராமின் கதைகள், இனவரைவியல் தன்மையுடன் மண்ணுக்கு நெருக்கமானவை. இவரின் கதைகள், எளிய மனிதர்கள் அன்றாடம் எதிர்கொள்கிற பிரச்சினைகள் ஏன், இப்படி எல்லாவற்றையும் சிதைக்கின்றன என்ற கேள்வியை வாசிப்பின் வழியாக எழுப்புகின்றன. மதிப்பீடுகள் சிதலமாகியுள்ள கிராமத்துச் சூழலில், மனித இருப்புக் குறித்துக் கதைக்கிற ஸ்ரீராம், பெரும்பாலான புனைகதைகளில் முக்கியமான திருப்பங்களைப் பற்றி விளக்கிடாமல் மௌனம் சாதிக்கிறார். எழுத்துபோலவே மௌனமும் வலிமையானது என்றநிலையில் வாசகன் பிரதிக்குள் தொடர்ந்து பயணிக்கவேண்டியுள்ளது. மரபான கதைசொல்லலில் இருந்து விலகிநின்று சித்திரிக்கிற இத்தகைய சம்பவங்கள்தான் இவரின் தனித்துவம்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47676029567212,"sku":null,"price":141.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/jpg_916ab7d9-f149-4b2c-b3c0-f02d4f440334.jpg?v=1779865907"},{"product_id":"அத்திமரச்-சாலை","title":"அத்திமரச் சாலை","description":"\u003cp\u003eமனிதர்களின் வாழ்வில் பின்னிப் பிணைந்திருக்கும் உறவுகள், நினைவுகள், பிரிவுகள் மற்றும் மன உணர்வுகளை இயல்பான மொழிநடையில் பதிவு செய்யும் படைப்பு. எளிய மனிதர்களின் வாழ்க்கை அனுபவங்களின் வழியாக அன்பு, தனிமை, ஏக்கம் மற்றும் நம்பிக்கை போன்ற உணர்வுகளை ஆழமாகப் பேசுகிறது. வாசகரின் மனதில் நீண்ட நேரம் நிலைத்திருக்கும் உணர்வுபூர்வமான நூல்.\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47676410757356,"sku":null,"price":122.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/3c540d99d3671b1d41ac8e9bf18bb29a.jpg?v=1779874508"},{"product_id":"கெண்டைமீன்-குளம்","title":"கெண்டைமீன் குளம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eவெளித்திண்ணையில் படுத்திருந்த இவன் திடுக்கிற்றுக் கண் விழித்தான். பாதி வாசலுக்கு மேல் நிலா வெளிச்சத்தைத் திண்ணையின் எறப்பு நிழல் மறைத்திருந்தது. நேரத்தைச் சரியாக அனுமானிக்க முடிய வில்லை. சிறிதுநேரம் புறவெளியின் சப்தங்களை உற்றுக்கேட்டான். எங்கும் சேவல் கூவக்காணோம். நூறு ரூபாய் போட்டு ஒரு கடிகாரம் வாங்கமுடியாத தன் பிழைப்பின் மீது கோபம் எழுந்தது. முழங்காலுக்குக் கீழே அவிழ்ந்து கிடந்த வாயில்வேஷ்டியைச் சுருட்டிப் பிடித்துக்கொண்டே எழுந்து நின்றான்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47676411445484,"sku":null,"price":169.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/520f8d64a0b0343dc3e59f26c7657b2c.jpg?v=1779874659"},{"product_id":"இரவோடி","title":"இரவோடி","description":"\u003cp\u003e\u003cspan\u003eதமிழ் கதை மரபில் என். ஸ்ரீராமின் இடம் தனித்தன்மைமிக்கது. கிராமிய வாழ்வை களமாகக் கொண்ட அவரது கதைகள் மண்ணையும் அதன் மனிதர்களையுமே பேசுகின்றன. அவை வெறுங்கதைகளாக அல்லாமல் பருவகாலம். பொழுதுகள், தாவரங்கள். பூக்கள், உயிர்கள். சத்தங்கள். வாசனைகள் ஆகியன நிறைந்த அனுபவங்களாகவே அமைகின்றன. இயற்கையை சொல்லாது வாழ்வும் இல்லை. எழுத்தும் இல்லை என்ற சங்க மரபைச் சேர்ந்தவை அவரது கதைகள் என்றாலும் நவீன கதைக்கான நுட்பங்களையும் உட்கூறுகளையும் கொண்டிருக்கின்றன. அழிந்துவரும் கிராம வாழ்வியலை அடுத்த தலைமுறைக்கு நினைவூட்டவும் எடுத்துச்சொல்லவும் உதவும் பண்பாட்டு ஆவணங்களே என். ஸ்ரீராமின் கதைகள். தற்போது இரவோடி என்கிற தனித்துவமான நாவலை படைத்திருக்கும் என். ஸ்ரீராமுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துகள். - எழுத்தாளர் எம். கோபாலகிருஷ்ணன்\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47723751080172,"sku":null,"price":658.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/9057fe6e170549b3786794abb7d2cdc7.jpg?v=1781081827"}],"url":"https:\/\/centaram.com\/collections\/n-sriram.oembed","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}