{"title":"Long Story","description":"","products":[{"product_id":"அந்தேரி-மேம்பாலத்தில்-ஒரு-சந்திப்பு","title":"அந்தேரி மேம்பாலத்தில் ஒரு சந்திப்பு","description":"\u003cp\u003e\u003cspan\u003eபல சிறிய பெரிய ஊர்களிலிருந்து நிதம் பல்லாயிரக்கணக்கான பேர்கள் வந்து குவியும் மகா நகரமான மும்பாயின் வாழ்க்கைப்போக்குடன் கலந்திருக்கும் பெண்-ஆண் உறவுச்சிக்கல்கள், மகிழ்ச்சி, குதூகலம், ஏமாற்றம், ஏக்கம், தீராத நாட்டம், சோகம், வக்கிரம், வன்முறை இவை எல்லாம் கலந்த அன்றாட வாழ்க்கை ஓட்டத்தை, துப்பறியும் பெண் ஒருத்தியின் தொழில்முறை அனுபவங்கள் மூலமாகக் கூறும் மூன்று நீண்ட கதைகள்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47632008970476,"sku":null,"price":94.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/358987b2db5c473a8f70281ff1cfab41.jpg?v=1778754026"},{"product_id":"box-கதைப்-புத்தகம்","title":"BOX கதைப் புத்தகம்","description":"\u003cp\u003e\u003cspan\u003e'கொரில்லா', ம்' நாவல்களைத் தொடர்ந்து வெளியாகும் ஷோபசக்தியின் மூன்றாவது நாவல். முள்ளிவாய்க்காலிற்குப் பின்னான வன்னிக் கிராமமொன்றின் கதைப் பிரதி. யுத்தத்தின் ஊடும் பாவுமான கதைகளைச் சித்திரிக்கும் உபவரலாறு.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47917435158764,"sku":null,"price":272.6,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/BOX.jpg?v=1783674682"},{"product_id":"நிரபராதிகளின்-காலம்","title":"நிரபராதிகளின் காலம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஒரு குற்றம் நடக்க வேண்டும் என்று ஒருவன் மனதால் விரும்பி, அவ்வாறான குற்றம் நிகழும்போது, அதில் நேரடியாக எந்தப் பங்கும் கொள்ளாத ஒருவன் குற்றவாளியா? இல்லையா? எவ்வாறு சாமானியர்கள் சர்வாதிகார ஆட்சியை எதிர்கொள்கிறார்கள், அந்தச் சர்வாதிகார ஆட்சியின் குற்றங்களுக்கும் அவர்களுக்கும் எவ்வாறான, தவிர்க்க முடியாத தொடர்புகள் ஏற்படுகின்றன, அவ்வாறான நிலையில் அவர்கள் எந்த அளவுக்குத் தாங்களாகவே முன்வந்து சர்வாதிகாரத்துடன் ஒத்துழைக்கிறார்கள் போன்ற பிரச்சினைகள் இந்நாடகத்தில் விவரிக்கப்படுகின்றன தற்கால ஜெர்மன் ஆசிரியர்களில் முக்கியமான ஒருவராகிய ஸீக்ஃப்ரீட் லென்ஸின் புகழ்பெற்ற நாடகம், ஜெர்மன் மொழியிலிருந்து நேரடியாக தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. இந்திய மொழிகள் ஒன்றில் லென்ஸின் படைப்பு வெளிவருவது இதுதான் முதல் தடவை.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47924899217644,"sku":null,"price":188.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/47249f7468df911762b2e8a0aef1f3c8.jpg?v=1783752408"},{"product_id":"எர்ரி-அபிராத்து","title":"எர்ரி அபிராத்து","description":"\u003cp\u003e\u003cspan\u003eதுரட்டி ஏந்திய மேய்ப்பவரின் உள்ளங்கைகளில் ஒட்டி உருண்டு, வட்டச் சுவடியாய் உருமாறும் புதினம் இது. காகிதங்களில் கிறுக்கலாய்க் கோடவிழ்த்து வந்த சற்பாத்திரங்களைக் கரும்பிக் கரும்பி வெளியேற்றிவிட்டு, மெல்ல அசைந்து, மஞ்சள் முள்ளுகளால் குத்தி எழுதி வரும் இந்த முள்ளெலிகள், கதாருதுக்களைக் கீச்சுக் குரலிடும் உவர் தரவைக் கதைகளையும் வாசிப்பீரே... நீவீர் கோபியாது, உற்றுணருமாறு அத்தியந்தத் தாழ்மையாய்க் கோலியாத்தின் மணற்கண் சுமந்த துயர இமைப்புகளையும் ‘ஈரேழ் அபிராத்தின்’ பாசி அடைந்த சீதள ஓலைக் குருத்துகளில் கோணங்கி எழுதியுள்ளார். நீங்கள் இதை வாங்கி நாதகிருத்தியங்களோடு ஆராதித்து, பரோக் கலை உலக விருத்தாந்தங்களையும் காது வைத்துக் கேட்கவேண்டும். மணற்கண்ணின் பரிபாஷைகளில் இமை பிரித்து, லிபிகளைத் தைத்தவாறு, ஏடவிழ்த்து ரெப்பை மூடி, மொழி இருட்டில் மறையுருவாய்க் கதைத் திரட்டின் முதுநீர்ப் பாதைகளில் நீந்தி ‘எர்ரி அபிராத்து’ நவீனம் அடைவீரே... நோவாவின் இருட்டுப் படகில் அடிக்கடலின் சமவெளிக்குள் ஊடுருவிச் சென்று, இந்த ஒவ்வொரு புத்தக இரு வெளிகளை எர்ரித் துணிகளால் மடித்து, உலோக உப்புகள் தடவி நீரில் போட்டால், நூல் ரெட்டையாகிவிடும். ஈரேழ் அபிராத்தின் இந்த மடக்குகள் எல்லாம் வனமந்திரக் கதா நூதன வடிவம். வேறொருவர் வாசிப்பில் ஊனுடல் மொழியாய், எலும்புச் சட்டகமாய் வரிப்படும் சொல் ஓர் உயிரி. முதுநீரில் கரையாமல் அது நீந்தியபடி இருப்பதற்கு, வார்த்தைகளின் ஆவி சொல்ல ஆரம்பிக்கும் போதே எழுதும் உயிரி தோன்றி, இயங்கியலாகி அலைகிறது இந்தக் கதைகளின் விதிகளுக்குள்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47925702099180,"sku":null,"price":720.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/7001b392312be12b6e217556e6e60d56.jpg?v=1783755019"},{"product_id":"தெய்வநல்லூர்-கதைகள்","title":"தெய்வநல்லூர் கதைகள்","description":"\u003cp\u003eபால்யத்தின் வண்ணங்கள் நிறையாத வாழ்வு இல்லாதவரே இல்லை என்றுதான் நமக்கு பலமுறை சொல்லப்பட்டிருக்கிறது. பால்யத்தின் நினைவேக்கங்களை எழுத்தில் கொணரும்போதெல்லாம் இழந்துவிட்ட பொன்னுலகையே அதிகமும் கண்டிருக்கிறோம் நம் நவீன இலக்கியங்களில். பால்யத்தின் வானவில் வாழ்க்கையை எவரால் மறக்கமுடியும்? ஒளிர்ந்தும், பூத்தும் கிடக்கும் வானவில்லின் நிறங்களெல்லாம் கருமையிலிருந்து உருவானவையே. எல்லா நிறங்களையும் கலந்தால் கிடைப்பதும் கருமையே. துளி கருப்பின் கலப்பின்றி வானவில்லின் எந்த நிறம் அமைந்துவிடும்? \u003c\/p\u003e\n\u003cp\u003eவானவில்லின் வண்ணங்களிலிருந்து கருமையைப் பிரித்து நோக்கும் பார்வை மாற்றம் நம்மில் வராமல் போவதில்லை. அப்படி பார்வை மாறும் தருணம்தான் இப்படைப்பில் பேசப்படுகிறது. துளி தயிர் கலக்காமல் பால் உறைவதில்லை. உறையாத பால் திரிந்து போகிறது. துளி தயிர் பாலில் கலப்பது காலத்தின் கையில் இருக்கிறதா? விதியின் கையில் இருக்கிறதா?\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47944724513004,"sku":null,"price":446.5,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/6d6c695aafb0693db44c6d25eefc6274.webp?v=1784026426"},{"product_id":"திரைக்கதை-எழுதலாம்-வாங்க","title":"திரைக்கதை எழுதலாம் வாங்க","description":"\u003cp\u003e\u003cspan\u003eசிட் ஃபீல்டின் திரைக்கதை விதிகளை ஆராய்ந்து அவர் எழுதியிருக்கும் இந்தப் புத்தகம் எப்போதோ வந்த தமிழ்ப் படங்களில் துவங்கி புதிய தமிழ்ப் படங்கள் வரை\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eபல்வேறு களங்களில் அமைந்த திரைக்கதைகளை விரிவாக அலசுகிறது. கடினமான மொழியில் இல்லாமல் படிப்பவர்களுக்கு எளிதில் புரியும்படி அமைந்த இந்தப் புத்தகம், திரைக்கதை ஆர்வலர்களுக்கு அவசியம் பயன்படவேண்டும் என்ற நோக்கோடு எழுதப்பட்டிருக்கிறது. தினகரன் வெள்ளி\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eமலரில் ஒரு வருடத்துக்கும் மேலாக வெளிவந்து, பரவலான வரவேற்பைப் பெற்ற தொடர் இது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47944728281324,"sku":null,"price":319.6,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/132fb3853705d5afc335492223c4f42d.webp?v=1784026718"},{"product_id":"கடலில்-எறிந்தவை","title":"கடலில் எறிந்தவை","description":"\u003cp\u003e\u003cspan\u003e…அவ்வளவு பதற்றம் நிலவும் நாடு என்பது முதல் பார்வைக்குக் கொஞ்சம்கூடத் தெரியாது. தூதரக அதிகாரி ஒருவருடன் காலைச்சிற்றுண்டியோடு பேசிக்கொண் டிருக்கையில், அவர் சொன்னாராம்: இந்த அமைதியின்மையின் பின்புலம், ஆட்சி அதிகாரத்துக்கான போட்டி அல்ல. உள்நாட்டு நிலவரத்தைக் குழப்பி மீன் பிடிக்க நினைக்கும் வல்லரசுக்கு யார் அதிக நெருக்கமாக இருந்து கனிமவளத்தைச் சுரண்டித் தருவது என்பதையொட் டிய தகராறு மட்டுமே. இல்லையே, உலக ஊடகங்கள் தரும் செய்திகள், ஒரே மதத்தின் இரு பிரிவுகளுக் கிடையில் பிரச்சினை என்றல்லவா சொல்கின்றன? மனிதக் குழுக்களுக்கிடையிலான விரோதங்களில் கடவுள் எங்கே வந்தார்? பார்க் கப்போனால், இந்தமாதிரி உள்நாட்டு யுத்தங்களில், பாவம், அவர்தான் முதல் பலி ஆவார்... அதிகாரி சிரித்தாராம்…. -’அடையாளம்’ கதையிலிருந்து.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47944784642284,"sku":null,"price":244.4,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/a54599150c62b8e9d909498e9b239b82.png?v=1784032730"},{"product_id":"ரிதம்","title":"ரிதம்","description":"\u003cp\u003eஒரு நல்ல சினிமாவிற்கான அடையாளம் எதுவெனில், அந்தத் திரைப்படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும்போது அந்தப் படத்தின் இயக்குநரோ, ஒளிப்பதிவாளரோ பார்வையாளனின் நினைவிற்கு வரவே கூடாது; படம் பார்த்து முடித்த பிறகே அவர்களை நினைத்துப் பார்க்க வேண்டும். அந்த அளவிற்கு படத்துடன் பார்வையாளன் ஒன்றிவிட வேண்டும்” என்று சொல்வார்கள். அதற்கு உதாரணமான திரைப்படங்களாகத்தான் திரு.வஸந்த்தின் திரைப்படங்களை ஆழ்ந்து ரசிக்கிறேன்.\u003c\/p\u003e\n\u003cp\u003eஅதே சமயம் ‘சினிமா ஒரு காட்சி ஊடகம்’ என்பதை அழுத்தமாகக் கடைப்பிடிப்பவர் திரு. வஸந்த். அவரது அழகான ரசனை உணர்வு அவரது எல்லா படங்களிலும் வெளிப்படும்.\u003cbr\u003eதமது திரை உலக வெற்றிகளால் அவர் எப்போதும் கர்வம் கொள்வதில்லை... இயக்குனர் வஸந்த் என்றாலே சிரித்த முகமும், எளிமையும், வெள்ளந்தியான குணாதிசயமும்தான் எல்லோரது நினைவிற்கு வரும்.\u003c\/p\u003e\n\u003cp\u003e- இயக்குநர் மகேந்திரன்\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47946100146412,"sku":null,"price":244.4,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/572c85dfac6c12dc93ce9e4df8eda314.jpg?v=1784089352"},{"product_id":"ஆஸ்டின்-இல்லம்","title":"ஆஸ்டின் இல்லம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eகூட்டுக் குடும்பம். தலைவர் போல \"ஆஸ்டின் பெரியப்பா\". பொறுப்பாகக் குடும்பத்தையும் வியாபாரத்தையும் கவனித்துக்கொள்ளும் முகுந்தன், ஒரு புதிரான நோய்க்கு ஆளாகும் அவன் மகன் சிறுவன் நந்து, பொறுப்பில்லாமல் குடிகாரனாகத் திரியும் சிவா, அமெரிக்கா போகத்துடிக்கிற நிகில், அவனைக் காதலிக்கும் முறைப்பெண் நித்யா... சிறிய குறுநாவலில் ஏராளமான பாத்திரங்கள். ஆனால் கொஞ்சம்கூட அலுப்புத் தட்டாத கதை ஓட்டம். அதுதான் சுஜாதா.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47951541108972,"sku":null,"price":112.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/2214666aae83ffb85a310f7e5db3f712.jpg?v=1784183066"},{"product_id":"வாய்மையே-சில-சமயம்-வெல்லும்","title":"வாய்மையே சில சமயம் வெல்லும்","description":"\u003cp\u003e\u003cspan\u003eவாய்மையே சில சமயம் வெல்லும்’ முதலில் ஆனந்த விகடனில் தொடர்கதையாக வெளிவந்தது. பின்னர் தொலைக்காட்சித் தொடராக வெளி வந்தபோது இதற்குச் சில சங்கங்கள் எதிர்ப்புத் தெரிவித்தன. இன்றைய மாறுபட்ட சூழ்நிலையில் இந்த எதிர்ப்புகள் வலுவிழந்துவிட்ட நிலையில் கதையின் அடிப்படையில் உள்ள மனித நேயமும் சமூக யதார்த்தங்களும் மாறவில்லை .\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003e– சுஜாதா\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47952040198380,"sku":null,"price":216.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/74575f340448b03ab25846439b1f87a3.webp?v=1784202004"}],"url":"https:\/\/centaram.com\/collections\/long-story.oembed","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}