{"title":"லியோ டால்ஸ்டாய்","description":"","products":[{"product_id":"லியோ-டால்ஸ்டாய்-கதைகள்","title":"லியோ டால்ஸ்டாய் கதைகள்","description":"\u003cp\u003eடால்ஸ்டாய் கதைகள்\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eகவுண்ட் லியோ டால்ஸ்டாய் எழுதிய நூல்கள் அனைத்திலும் அவருடைய சிறு கதைகள்தான் பெருங் கவர்ச்சி உள்ளவை. இவைகளைப் போன்று கதை உலகில் இதுவரை வேறு கதைகள் தோன்றியதும் இல்லை, தோன்றப் போவதும் இல்லை\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eஉனக்குத் தீமையைச் செய்தவருக்கும் நன்மையே செய் என்றார் புத்தர். இவர்களின் கருத்துகளைத்தான் டால்ஸ்டாய் தன் கதைகளில் வலியுறுத்தி உள்ளார்.தான் கற்றறிந்த, கேட்டறிந்த வாழ்க்கை நெறிகளை தன் வாழ்க்கையில் பின்பற்ற முயன்றார் அவர். அவர் வாழ்க்கை முள்பாதையாகத்தானிருந்தது. ஆனாலும் அவர் அஹிம்சா நெறியைக் கடைப்பிடித்தார். டால்ஸ்டாய் மேலை நாட்டில் தோன்றிய மிகத் தெளிவான சிந்தனையாளர்களில் ஒருவர். ஒப்பற்ற நூலாசிரியர்களில் இவரும் ஒருவர் என்று இவரைப் பற்றி வர்ணிக்கிறார் காந்தியடிகள்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47697225416940,"sku":null,"price":187.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/LEOTALSTOY.jpg?v=1780382839"},{"product_id":"போரும்-வாழ்வும்-3-பாகங்கள்","title":"போரும் வாழ்வும் (3 பாகங்கள்)","description":"\u003cp\u003eலியோ டால்ஸ்டாயின் முக்கியமான  நாவல்கள் போரும் வாழ்வும்.\u003c\/p\u003e\n\u003cp\u003eபோரும் வாழ்வும் ரஷ்யாவின் ''இலியட், ஒடிசி'' என்றுபோற்றப்படுகிறது. இந்த மாபெறும் நாவல் வரலாற்று மனிதர்களை நம்முடன் உறவாட வைக்கின்றது.\u003c\/p\u003e\n\u003cp\u003eபோரும் வாழ்வும் படிக்கத் தொடங்கியபோது பின்னாட்களில் வெளிவந்த பெரு நாவல் முயற்சிகளுக்கு அது முன்னோடி என்றோ நூற்றைம்பது வருடங்களுக்கு முன்னர் எழுதப்பட்டது என்றோ எனக்குள் எதுவித எண்ணமும் உருவாகி இருக்கவில்லை. ஆங்கிலப் பிரதியில் சில அத்தியாயங்கள் படித்த பின்பு தமிழில் அந்நூலினை வாசிக்க வேண்டுமென்ற ஆவல் எழுந்தது. டி.எஸ்.சொக்கலிங்கம் அவர்களின் மொழிபெயர்ப்பு சில அத்தியாயங்களிலேயே வாசித்துக் கொண்டிருப்பது ஒரு மொழிபெயர்ப்பு நாவல் என்பதை மறக்கடித்துவிட்டது.\u003c\/p\u003e\n\u003cp\u003eபிரெஞ்சு கலாச்சாரம் வலுவாக ஊடுருவிய ரஷ்ய உயர்குடியை பகடி செய்தவாறே நெப்போலியனுக்கு எதிராக ரஷ்யா நடத்தப் போகும் போருக்கான ஆயத்தங்களுடனும் போரில் கலந்து கொள்ளக் கூடிய உயர் வகுப்பு இளைஞர்களுடனும் அவர்களின் குடும்பங்களுடனும் தொடங்குகிறது. பீயரும் பால்கோன்ஸ்கிகளும் ராஸ்டோவ்களும் குராகின்களும் டோலாகாவும் விருந்துகளின் வழியாகவும் உரையாடல்கள் வழியாகவும் அறிமுகமாகின்றனர். அவர்கள் குறித்த ஒரு சித்திரம் உருவான பின்பு போர் நோக்கி நகர்கிறது.\u003c\/p\u003e\n\u003cp\u003eஇரண்டு படைப்பிரிவுகளாக பிரிந்து நின்று சண்டையிடும் வகைப் போர்களையே உருவகப் படுத்தியிருந்த மனதிற்கு டால்ஸ்டாய் அறிமுகம் செய்யும் போர்க்களம் அதிர்ச்சி தரவே செய்கிறது. தளபதியின் கட்டுப்பாட்டில் அனைத்தும் இருப்பதாக நம்பும் ஆண்ட்ரூ யுத்தம் செல்லும் போக்கிற்கு ஏற்றவாறு பாக்ரேஷன் அளிக்கும் உத்தரவுகளை கண்டு ஆச்சரியம் கொள்வதும் இளமைத் துடிப்பில் முன்னேறி காயம்படும் நிக்கலஸ் ஒற்றை பீரங்கிப் படையுடன் எதிர்த்து நிற்கும் டூஷின் வீரத்துடன் சண்டையிட்டு போரின் அன்றைய நாள் முடியும் போது தாங்கள் கைப்பற்றிய பதக்கங்களுடனும் உடுப்புகளுடனும் பதவி உயர்வுக்காக கெஞ்சும் வீரர்கள் என போர் குறித்த ஒவ்வொரு பிம்பத்தையும் சிதறடிக்கிறது முதற் போர்களம்.\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47785180725484,"sku":null,"price":2585.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/PORUMVAALVUM.jpg?v=1782383497"},{"product_id":"அன்னா-கரீனினா","title":"அன்னா கரீனினா","description":"\u003cp\u003e\u003cspan\u003eஅன்னா கரீனினா அதன் எல்லா அம்சங்களிலும் பரிபூரணமான ஒரு பெரும் படைப்பு. நாவலின் மைய வினா என்பது காதலுக்கும் குடும்பம் என்ற அமைப்புக்கும் இடையேயான உறவென்ன என்பதுதான். காதல் இல்லாத திருமணத்தை கடமைக்காகச் சுமக்க வேண்டுமா? காதலுக்காக ஒருவன் அல்லது ஒருத்தி உறவுகளை இழக்க முடியுமா? அப்படி இழக்குமளவுக்குத் தகுதி கொண்டதுதானா காதல்? உண்மையான தீவிரமான நேசம் என்பது ஒழுக்கக் கேடு என்று எதிர்மறையாக மதிப்பிடப்படுவது சரியா? காதலும் காமமும் எங்கே முயங்குகின்றன, எங்கே பிரிகின்றன? இவ்வாறு அந்த மையக்கேள்வியை தல்ஸ்தோய் விரித்துக்கொண்டே செல்கிறார்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47830057386220,"sku":null,"price":940.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/ANNA2.jpg?v=1782459746"},{"product_id":"லேவ்-தல்ஸ்தோய்-சிறுகதைகளும்-குறுநாவல்களும்","title":"லேவ் தல்ஸ்தோய் சிறுகதைகளும் குறுநாவல்களும்","description":"\u003cp\u003e\u003cspan\u003eதல்ஸ்தோய் மரணமடைவதற்க்குப் பத்து வருடங்களுக்கு முன்பு அந்தோன் செக்காவ் பின்வருமாறு எழுதினார். \"...தல்ஸ்தோய் மரணமடைந்துவிட்டால் என்னுடைய வாழ்க்கையில் மாபெரும் சூன்யம் ஏற்பட்டுவிடும்... அவர் இல்லையென்றால் நம்முடைய இலக்கியம் மேய்ப்பவன் இல்லாத ஆட்டுக்கிடையாகிவிடும்\"\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47830314746092,"sku":null,"price":376.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/leothastho.jpg?v=1782467414"},{"product_id":"இரண்டு-கிழவர்கள்-மற்றும்-பிற-படைப்புகள்","title":"இரண்டு கிழவர்கள் மற்றும் பிற படைப்புகள்","description":"\u003cp\u003eஇரண்டு கிழவர்கள் ஒரு எளிய சந்திப்பு, ஆனால் மனித வாழ்வின் ஆழமான உண்மைகளைத் தொட்ட ஒரு சிறுகதை. நம்பிக்கை, வாழ்க்கையின் பொருன், ஆன்மிகம் மற்றும் மரணத்தின் மர்மம் குறித்து விமர்சனமில்லாத உரையாடல். லியோ டால்ஸ்டாய் எழுதிய இந்தக் கதை மனதைச் சிந்திக்க வைக்கும் ஒரு காலத்துக் கடக்கும் படைப்பு.\u003c\/p\u003e\n\u003cp\u003eஅன்பே வாழ்க்கையின் ஒரே அர்த்தம்.\u003c\/p\u003e\n\u003cp\u003e- லியோ டால்ஸ்டாய்\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47869809426668,"sku":null,"price":235.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/ERANDUKILAVAR.jpg?v=1782889695"},{"product_id":"இரண்டு-பேர்","title":"இரண்டு பேர்","description":"\u003cp\u003e\u003cspan\u003eடால்ஸ்டாயை வாசிக்கையில் என்ன நேர்கிறது. முதலில் அது ஒரு ரஷ்ய நாவல் என்ற அந்நியத்தன்மை விலகிப்போய் மிக நெருக்கமாக வாழ்வை அது விவரிக்கிறது. அத்தோடு நாவலின் மையமாக ஒரு கதாபாத்திரம் இருப்பதில்லை. நாவல் வாழ்வின் எண்ணிக்கையற்ற கிளைவேர்களுடன் இணைந்தே விரிவடைகிறது. அத்தோடு நாவலின் வழியாக சமகாலமும் வாழ்வின் சுகதுக்கங்களும் அபத்தங்களும் விவரிக்கபடுகின்றன. விமர்சிக்கபடுகின்றன. அதே நேரம் ரஷ்யவாழ்வின் தனித்துவங்களும் அதன் கலாச்சார நுண்மையும் நம்மால் உணர முடிகிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47869967958252,"sku":null,"price":112.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/ERANDUPER.jpg?v=1782895940"},{"product_id":"புத்துயிர்ப்பு","title":"புத்துயிர்ப்பு","description":"\u003cp\u003e\u003cspan\u003eஇது டால்ஸ்டாயின் பத்தாண்டு காலக் கடின உழைப்பு மூலம் 1899-ல் ருஷ்ய மொழியில் வெளிவந்த நாவல். பின்னர் படிப்படியாக உலக மொழிகள் பலவற்றிலும் மொழிபெயர்க்கப்பட்டது. முதல்முறையாக 1979-ல் தமிழில் மொழிபெயர்க்கப் பட்டு மாஸ்கோ பதிப்பகம் வெளியிட்டது. டால்ஸ்டாயின் மற்ற நாவல்களுக்கும் புத்துயிர்ப்பு நாவலுக்கும் இடையே பெரிய வேறுபாடு உண்டு. இது ஒரு உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில், பல ஆண்டுகள் (1889-1899) உழைப்பைச் செலுத்தி, பாடுபட்டு பல்வேறு தேடல்களுக்கும் தயக்கங்களுக்கும் பரிசீலனைக்கும் பின் எழுதப்பட்ட நாவல். \u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47926999285996,"sku":null,"price":498.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/PUTHUERPPU.jpg?v=1783765871"}],"url":"https:\/\/centaram.com\/collections\/leo-tolstoy.oembed","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}