{"title":"கோணங்கி","description":"","products":[{"product_id":"எர்ரி-அபிராத்து","title":"எர்ரி அபிராத்து","description":"\u003cp\u003e\u003cspan\u003eதுரட்டி ஏந்திய மேய்ப்பவரின் உள்ளங்கைகளில் ஒட்டி உருண்டு, வட்டச் சுவடியாய் உருமாறும் புதினம் இது. காகிதங்களில் கிறுக்கலாய்க் கோடவிழ்த்து வந்த சற்பாத்திரங்களைக் கரும்பிக் கரும்பி வெளியேற்றிவிட்டு, மெல்ல அசைந்து, மஞ்சள் முள்ளுகளால் குத்தி எழுதி வரும் இந்த முள்ளெலிகள், கதாருதுக்களைக் கீச்சுக் குரலிடும் உவர் தரவைக் கதைகளையும் வாசிப்பீரே... நீவீர் கோபியாது, உற்றுணருமாறு அத்தியந்தத் தாழ்மையாய்க் கோலியாத்தின் மணற்கண் சுமந்த துயர இமைப்புகளையும் ‘ஈரேழ் அபிராத்தின்’ பாசி அடைந்த சீதள ஓலைக் குருத்துகளில் கோணங்கி எழுதியுள்ளார். நீங்கள் இதை வாங்கி நாதகிருத்தியங்களோடு ஆராதித்து, பரோக் கலை உலக விருத்தாந்தங்களையும் காது வைத்துக் கேட்கவேண்டும். மணற்கண்ணின் பரிபாஷைகளில் இமை பிரித்து, லிபிகளைத் தைத்தவாறு, ஏடவிழ்த்து ரெப்பை மூடி, மொழி இருட்டில் மறையுருவாய்க் கதைத் திரட்டின் முதுநீர்ப் பாதைகளில் நீந்தி ‘எர்ரி அபிராத்து’ நவீனம் அடைவீரே... நோவாவின் இருட்டுப் படகில் அடிக்கடலின் சமவெளிக்குள் ஊடுருவிச் சென்று, இந்த ஒவ்வொரு புத்தக இரு வெளிகளை எர்ரித் துணிகளால் மடித்து, உலோக உப்புகள் தடவி நீரில் போட்டால், நூல் ரெட்டையாகிவிடும். ஈரேழ் அபிராத்தின் இந்த மடக்குகள் எல்லாம் வனமந்திரக் கதா நூதன வடிவம். வேறொருவர் வாசிப்பில் ஊனுடல் மொழியாய், எலும்புச் சட்டகமாய் வரிப்படும் சொல் ஓர் உயிரி. முதுநீரில் கரையாமல் அது நீந்தியபடி இருப்பதற்கு, வார்த்தைகளின் ஆவி சொல்ல ஆரம்பிக்கும் போதே எழுதும் உயிரி தோன்றி, இயங்கியலாகி அலைகிறது இந்தக் கதைகளின் விதிகளுக்குள்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47925702099180,"sku":null,"price":720.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/7001b392312be12b6e217556e6e60d56.jpg?v=1783755019"},{"product_id":"பாழி","title":"பாழி","description":"\u003cp\u003e\u003cspan\u003eஇந்த நாவலின் கதாபாகங்களில் ஏழு ஏடுகளாக உடல் பெற்றாள் பாழி. ஏழுமலை தாண்டி, இலந்தைக்கொடி ஒதுக்கி, ஒரு பூ பூத்ததும் முதலாம் புத்தகமானாள். ஆனைகட்டித் தெருவில் இரண்டாம் ரத்தாம்பரப் புத்தகத்தில் வெள்ளைப்பூவும் மஞ்சப்பூவும் ஏந்திய கணிகைகள் இருவரைக் கூட்டிவந்தாள். மூன்றாம் புத்தகத்தில் மூன்று பூ திறந்து ஏகலைவன் தாவிவரும் வில்திறம் அதிரும் கானகத்தில் வேடபுராண ஏடானாள். கருப்பு டியூலிப் பூவால் இருட் புத்தகம் திறந்தாள். வேறொரு திசையில் குருடர்களின் கண்ணேடு தடவினாள் பாழி. சிற்பவயல் ஏடும் சித்திரவயல் ஏடும் அருகரும் அபிதரும் ஆகி மயிற்பிஞ்சத்தால் தூற்றுத் தூற்று எறும்புகளின் கோடுகள் அழியாமல் கேட்டுச்சொல்ல வந்தாள் முதல் கதையை... ‘உலகம் விரிகிற ஒரு தானியம்’ என்றாள் முதல் ஸ்திரீயான தானியாள் எனப்பட்ட பச்சைநிறமானவள். இமைகள் மூடிய அகலமான அந்த தானியத்தைச் சுற்றிவந்த கல்பறவையை தானியாள் கேட்டாள், ‘யாருக்காக இனி இராஜ்ஜியத்தை அமைக்கப்போகிறார்கள்’ 'கண்ணீருக்காகவும், தானியமணிகளில் பிறக்கப்போகிற உன் குழந்தைகளுக்காகவும் பறவைகளுக்காகவும் சூதறியா மிருகங்களுக்காகவும் இலைகள் படரும் விருட்சங்களுக்குமாக உலகம் இனி வரும்.’\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47925825732844,"sku":null,"price":453.25,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/e4648335f1430e2a409e06e5d0965051.jpg?v=1783758062"},{"product_id":"நீர்வளரி","title":"நீர்வளரி","description":"\u003cp\u003e\u003cspan\u003eமால்பரோவில் இருந்து வெளியேறினாலும் பினாங்குக் காட்டுக்குத்தான் கொண்டுபோவார்கள். சாப்பிடச் சொன்னாள் கடிமிளை. ;பழையதாகிவிட்டது இவற்றை என்னால் உண்ண முடியாது என்றான். சிறையில் இருப்பவர் சினமடையவோ நடுங்கவோ கூடாது. நான் விரும்புவது காற்றை. இந்த ஜன்னலில் நல்ல காற்று வரும். இந்த மால்பரோ ஜன்னலில் எல்லா ஒலிகளுக்குள்ளும் பட்சிகளின் சிறு இதயம் இருக்கிறது. எல்லா உயிர்நிலைகளுக்குள்ளும் காத்திருக்கும் மரணம். இதுவே என்னை விடுதலைக்கு அழைத்து செல்லும். நான் கற்பாறையாக;இருக்கிறேன். பற்பல வடிவங்களாக இக்கல் வடிவடைந்து இருக்கிறது. சொற்களும் மனமும் திணைகளில் பொதிந்திருக்கிறது. ஆனால், அங்கு என்னால் போக முடியாது யதார்த்த வாதமும் கவித்துவமும் கூடிவரும் கோணங்கியின் புதிய சொல்மொழியில் புதிய நாவல் நீர்வளரியிலிருந்து.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47925831696620,"sku":null,"price":594.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/c3cf77fe24a5395099cd2493cfce9ce5.jpg?v=1783758230"},{"product_id":"த","title":"த","description":"\u003cp\u003eசொல்கதை, நிகழ்கதை, படிமக்தை, வரலாற்றுக் கதை , கதையில் மூழ்கும் கோணங்கியின் அதிகதைகளாலான நாவல்- ஆயிரம் பக்கங்களில், நேர்த்திமிகு அச்சில்.\u003c\/p\u003e\n\u003cp\u003eத நாவலைத் திறக்கிறீர்கள். பென்சில் கோடுகளால் புனைவு உடலை வரைந்து அதன் குறுக்குவெட்டுப் பாதைகளில் பயணிக்கிறீர்கள். நிச்சலனமான வாசிப்புக்குத் தயாராகிறீர்கள். எழுதுதல்தான் நாவல். மொழிக்கு வெளியில் த நாவல் இல்லை. எனவேதான் த நாவலின் மொழிப்பரப்பில் இன்றைய நவீன வாசகனாக நாவலின் பதினாறு காற்றுகளை சுவாசிக்கிறீர்கள். உங்களுக்கு இப்போது தெரிந்துவிடும் பிரதியும் ஒரு புனைவுதான் என்று. புனைவின் மூலகங்களை கனவுகளாகவும் அடைந்துள்ளது த நாவல். எதிர் நாவலுக்கான காகிதங்களும் அடித்துத் திருத்திய கச்சாவான குறிப்புகளும் வாசகனின் புனைவுக்கான பிறை வடிவ நுழைவு வாயில்களாக உள்ளன.\u003c\/p\u003e\n\u003cp\u003eஒவ்வொரு பிறையும் வட்டமான ஏரியில் வீழ்ந்ததும் பக்கத்தை திருப்புகிறீர்கள். அசைவற்ற நீர் மைய அலைகளில் வாசிப்பு தொடர்கிறது. த நாவலின் பக்கங்களுக்கு வெளிப்புறம் உள்ளே புரளும் காகித அடுக்கில் பார்வைத்தளம் உள்ளது. நாவலின் மையம் எப்போதும் த-க்களின் நூலாக உட்பரப்பினுள் மீன்கள் நீரேற்றத்தில் தவழ்ந்து உள்படர்கின்றன. உலகின் நீராகவும் நாவலின் அலையடுக்கில் கடந்து ஏறும் மீனாகிறீர்கள்.\u003c\/p\u003e\n\u003cp\u003eஅடிப்படையற்ற இருப்பில் விடுதியின் விளக்கொளியில் நாவல்களாக மாறும் நாவலாக எழுதப்பட்ட கோடுகளில் நுழைந்து வரும் கதாபாத்திரங்கள் பிரதான இடத்துக்கு வருகிறார்கள். இவர்கள்தான் நிராகரிக்கப்பட்ட கதாப்பாத்திரங்கள். தனுஷ்கோடி ஓவியத்திலிருந்து விரல்களை எடுக்கமுடியாது என்னால். முதலில் அபூர்வமானதாகவும் பிறகு உப்பு விடுதியின் தனிமையாகவும் உப்புக்காற்று நூலகத்தில் இசை மாறு உண்டாவதை கானல் வரிகளில் காண்கிறீர்கள். நாவல் இயற்றும் மூத்தமொழியின் பாய்மரத்தில் வாசித்தவாறு கமாரா வாசிகளைச் சந்திக்கிறீர்கள்.\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47925902311660,"sku":null,"price":684.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/67bc0e351e5362700382a06285a52a92.jpg?v=1783760156"},{"product_id":"பிதிரா","title":"பிதிரா","description":"\u003cp\u003e\u003cspan\u003eசொற்களில் தங்கியிராத கோணங்கியின் அதிகதை நாவல் பிதிராவின் நத்தைவடிவம் சுருள்வடிவங்களால் உருவாகியிருந்தன. மோனமாய் திறக்கும் சிருஷ்டிகணம். மலரும் பழக்கத்தை உடலாகக் கொண்ட குற்றவாளிகள் பூவின் கவலை கொள்ளக்கூடும். குளிரால் மரங்களுடன் மௌனமாய் இருக்கிறார்கள் பிதிராவாசிகள். இந்த இரவின் குளிரில் வீடற்றவர்களின் வெளியில் மெல்ல நிலவு தூங்கிக் கொள்கிறது. புனைவுகள் நடமாடும் சோக இழை. கோகின் கலைந்த வெள்ளையுடல் காலனியக் கோரத்துடன் கடலில் கிடந்தது. நிலவு மயங்கினால் உயிர்பெறக்கூடிய பிதிராவின் சாமகால தறிகள் ஊர் உருவத்தை வேறொன்றாக நெய்து காட்டும். ஓசையில் நகர்ந்து கொண்டே இருக்கும் சுண்ணாம்பு ஊரின் நீர்ச்சுனை அடியில் உவர்மகள் இலந்த்ரா விரல் வைத்துத் துயில்கிறாள் மண்குடத்துடன். பாறையின் நிழலில் குளிர்ந்த எறும்பு மண் புற்றில் மேலே, கீழே ஓடும் பிதிராவின் கால்களின் ஒளிர்வு. பிதிரா ஒரு கதாபீடிகை. ஆலமரத்தடியில் பிதிரா வாசித்தால் ஒவ்வொரு பிரதியில் ஒளிந்திருக்கும் குணங்களைப் பொறுத்து நிழல்கள் மாறுபடும். அவரவர் சிற்பிக்க உளிகளால் குடைந்து செதுக்கி செதுக்கி இருட்டும் வெளிச்சமும் பாய்ச்சி இப்பிரதியில் புதைந்து கிடக்கும் பிதிராவை திறப்பதற்குமுன் கல்வாசல் வழி நுழைவதற்குள், வேறு சிலர் வேறுபடும் உருவத்தில் திறந்துவிடப் போகிறார்கள். வாசனை தரும் ஒளி வீசியது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47925951889644,"sku":null,"price":404.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/2ff82c69f3caf317078d0d2379c10d2a.png?v=1783761355"}],"url":"https:\/\/centaram.com\/collections\/konangi.oembed","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}